Advertisement

அத்தியாயம் -10

     தன் வாழ்நாளில் இப்படி ஒரு குழப்பத்தில் அவன் இருந்தது இல்லை இது தான் முதல் முறை.  அண்ணனால் ஏற்பட்ட முதல் குழப்பம் ! தம்பியால் ஏற்பட்ட முதல் தோல்வி ! என்று இருவரும் தத்தளித்து கொண்டு இருந்தன.

     தோழியின் முகத்தை இமைகொட்டாது பார்த்து கொண்டு இருந்தவளை அங்கு இருந்து அழைத்து சென்று விட்டான். கேசவனிடம் மற்ற போர்மாளிட்டிசை பார்க்க சொல்லி கிளம்பிவிட்டான்… அவனுக்கு இப்பொழுது தனியாக இருந்து சிந்திக்க வேண்டும்…. வேறு ஏதோ ஒன்று இந்த இரண்டு கேஸ்க்கும் பொதுவான விஷயம் இருப்பதாக விஜய் மனதில் உறுத்தி கொண்டே இருந்தது.

      வண்டியில் அமர்ந்தவள் கதவின் ஓரம் தலை சாயிந்து சாலையை வெறித்து பார்த்துகொண்டு இருந்தாள். அவள் வீட்டு அருகில் காரை நிறுத்தியவன் “கார்த்தி” தோள் தொட்டு அவளை களைத்தான்.

      கண்களை அசைத்து அவனை வெறித்து பார்த்தவளின் துயரம் அவனால் காண முடியவில்லை… ‘வேண்டாம் விஜய் இப்பொழுது நீ சிந்திக்க வேண்டும்… இவளின் துயரம் உன்னை பலவினபடுத்தும்…. ஸ்டே ஸ்டெடி மேன்’ தனக்குள்ளே திடபடுத்தி கொண்டான்.

      எந்தவித உணர்ச்சியும் இல்லாது இறங்க முயன்றவளை காண மனம் பொறுக்காது “ஏய் கார்த்தி பி ரிலாக்ஸ்” அவனின் வாய்மொழி  கேட்டதும் மனம் கரைந்தவள் முகத்தை மூடி கதறினாள். அவளின் தலையை தன் தோளில் சாய்த்துகொண்டவன் விழிமூடி அமர்ந்து இருந்தான். சிறது நேரம் கழித்து இயல்பு நிலைக்கு திரும்பியவள் அவனின் முகம் பார்த்து “ஏன் டிசிபி சார் இப்படி நடந்தது? என் ப்ரண்ட் தற்கொலை செய்துகொள்ளும் அளவு கோளை இல்லை… எனக்கு தெரிந்து அவளுக்கு எந்த வித ப்ரோப்ளமும் இல்லை. பின் ஏன்?” அழுகையில் உதடு துடிக்க அமைதியாக இருந்தாள்.

        அவளின் முகத்தை தன் கைக்குள் தாங்கியவன் விரல் கொண்டு அவள் கண்ணீர் துடைத்தான். “இங்கு பார் கார்த்தி உனக்கு தெரியாமல் உன் தோழிக்கு ஏதாவது ப்ரோப்ளம் இருந்து இருக்கலாம்… உன்னிடம் சொல்லாமல் அவள் மறைத்து இருக்கலாம்”.

         விஜயின் வார்த்தையை கேட்டதும் கோபத்தில் மூக்கு விடைக்க அவனின் காலரை பிடித்து இழுத்தவள் “உங்களுக்கு நான் சொல்வது புரியவில்லையா விஜய்?…. அவள் என் உயிர் தோழி என்னிடம் சொல்லாமல் அவளிடம் எந்த விஷயமும் இருக்காது. உங்கள் போலீஸ் வழக்கம் போல் இந்த கேஸையும் விசாரிக்காமல் மூடி மறைத்து விடுவீர்கள்… இதற்கு கை நீட்டி சம்பளம்……”

       “ஏய்!!!! ஸ்டாப் இட் இடியட்” ஸ்டியரிங்கிள் ஓங்கி பலமாக கையை மடக்கி குத்தியவன் கொதி நிலையில் இருந்தான்.

     விஜயின் கோபத்தை கண்டவள் தன் கோபம் மறந்து பயத்தில் அரண்டு போய் இருந்தாள்.. பயத்தில் முகம் வெளுக்க அவன் சட்டை காலரில் இருந்து கையை எடுக்க போனாள்.

       அவளின் கையை எடுக்க விடாது அழுத்தி பிடித்து இருந்தான். அவனின் முகத்திற்கும், கைக்கும் கண்கள் நர்த்தனமாட விழித்து கொண்டு இருந்தவளை தன் மார்பில் சாய்த்து “கோபத்தில் வார்த்தையை சிதற விடாதே…. எப்பொழுதும் நான் ஒரே மாதிரி இருக்க மாட்டேன். உன் வலி எனக்கு புரிகிறது இதற்கு கண்டிப்பாக ஒரு முற்றிபுள்ளி வைப்பேன்… ஐ ப்ராமிஸ் யு” என்றவன் சிறிது நேரம் எதுவும் பேசாது அமர்ந்து இருந்தான்.

      கார்த்திகா இன்னும் பயத்தில் இருந்து வெளிவரவில்லை. அவனின் ‘ஏய்’ என்ற வார்த்தை மட்டுமே காதில் கேட்டுகொண்டே இருந்த பிரமையில் இருந்தாள். அவளின் பயம் அறிந்தவன் அவளை இறுக்கி அணைத்து உச்சியில் தன் முதல் முத்திரையை பதித்து “வீட்டுக்கு போ… சீக்கிரம் உன்னை பார்க்க வருவேன்” என்று வழியனுப்பினான்.

        விஜயின் செய்கை எதுவும் பெண்ணவள் மனதில் பதியவில்லை… மனம் முழுவதும் பயம், குழப்பம் மட்டுமே நிறைந்து இருந்தது. காரை விட்டு இறங்கியவள் கதவை அடிக்க போகும் தருணத்தில் அவனின் “ஏய் பம்ளிமோஸ்” என்ற அழைப்பை கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்.

      குரலில் குறும்பு கூத்தாட “ஒன்ஸ் அகைன் ஐ வான்ட் ஹியர் மை நேம் ப்ரம் யுவர் லிப்ஸ்” புருவம் உயர்த்தி கோரிக்கை வைத்தான் அந்த காவலன்.

        அவனின் அதிரடி மாற்றம் கண்டு வியந்து போய் நின்றுவிட்டாள் அந்த தேவதை. ‘நான் எப்பொழுது அவன் பெயர் சொன்னேன்’ கண்களில் கேள்வியோடும், லேசாக முகம் சிவிக்க  அவனை கண்டாள்… அவள் இருந்த கோபத்தில் எதுவும் கருத்தில் பதிய வில்லை.

        ஆனால், அவன் காவலனாயிற்றே?! சுற்றியுள்ள அனைத்தும் அவன் கருத்தில் பதிந்து கொண்டே இருக்கும்.  அவளின் முகம் சிவப்பும் அந்த ரட்சகனின் கண்களில் இருந்து தப்பவில்லை “நல்லவேளை பம்ளிமோஸ் நீ தள்ளி நிக்கிறாய்… இல்லையென்றால்?” என்றவன் நகர்ந்து வரவும் பட்டென கதவை அடைத்துவிட்டு நான்கடி தள்ளி நின்றாள்.

         அவளின் செய்கை கண்டு நகைத்தவன் “இன்னும் எத்தனை நாள் இந்த விலகல் என்று பார்ப்போம்…?” என்றவன் வழக்கம் போல் ஒரு சளியூட்டுடன் கிளம்பி விட்டான்.

          அங்கு இருந்து கிளம்பியவன் நேராக தன் வீட்டிற்கு வந்து நின்றான். வீட்டிற்குள் வந்தவனை பிடித்து இருக்கையில் அமரவைத்தார் அவனின் அன்னை. “ஏன் மா இந்த பயம்?…. எதை நினைத்து இப்படி இருக்கிறீர்கள்?” அன்னையின் முகம் கண்டு அவரின் காலடியில் அமர்ந்து விட்டான்.

        “எனக்கு யாரை நினைத்து டா கவலை இருக்கும்? எல்லாம் உங்கள் இருவரை பற்றிதான்… உன் அண்ணன் கொஞ்சம் நேரம் முன்னாடி கோபத்தில் வெளியே கிளம்பிவிட்டான். அவன் காரியதரசியிடம் வெளிநாடு செல்வதாக சொல்லி செய்தி அனுப்பி இருக்கிறான். அதை கூட என்னிடம் நேரடியாக சொல்ல உன் அண்ணாவிற்கு தோன்றவில்லை?” வருத்தத்தில் அழுது கொண்டு இருந்தார்.

       “அம்மா அவனின் செய்கை உங்களுக்கு புதிதான ஒன்றா என்ன? ராகவ் எப்பொழுதும் இப்படிதான்….. அவன் தொழிலில்  ஏதாவது லாஸ் இருந்து இருக்கும்” என்று ஒருவழியாக சமாதானம் படுத்தி வைத்து ப்ரணவிடம் சிறது நேரம் இருந்து விட்டு நேராக தன் அறைக்கு வந்து கதவை அடைத்தான்.

       தன் உடையை கலைத்தவன் ஒரு பூத்துவாளையுடன் குளியல் அறைக்கு சென்று ஷவரின் முன் கண்கள் மூடி, கைகள் கட்டி யோசித்து கொண்டு இருந்தான். ‘ஏதோ ஒற்றுமை … ஒற்றுமை… ஒற்றுமை….. ஒற்றுமை….’ என்றவனின் புத்தியில் கார்த்திகாவின் ‘அவள் சின்ன வயதில் இருந்து எனக்கு தோழி… இந்த ஆசிரமத்தில் வளர்ந்தவள்’ என்ற வார்த்தை உதித்து பட்டென கண்கள் திறந்து ஷவரில் இருந்து விலகி நின்றான்.

       அந்த ‘பிரியா, அந்த சிறைகைதி மற்றும் இப்பொழுது அவன் கட்டுபாட்டில் இருக்கும் கிருஷ்ணன், பெருமாள்’ அனைவரும் அநாதைகள்… ஆசிரமத்தில் வளர்ந்தவர்கள். ஒரளவுக்கு இப்பொழுது ஓவ்வொரு வினாவிற்கும் விடை கிடைக்க அவசரமாக கிளம்பி ஐஜியை பார்க்க கிளம்பி விட்டான்…

தேவதை வருவாள்……      

 

Advertisement