Advertisement

மழை-15

 

கல்லூரி வளாகம் என்றும் போல் இன்றும் கலகலப்பை அள்ளிதெளித்து கொண்டிருந்தது, அதில்மூன்று முகங்கள் மட்டும் புன்னகை இழந்து வாடியது. உமாவின் பாராமுகம் தீபியயும் வர்ஷியையும் வதைத்ததை போல் சிறிதும் குறையாமல் உமாவையும் வதைத்தது. தோழிகளின் நிலை புரிந்து துயர் துடைக்க மற்ற தோழிகளான அனிதாவும் கவிதாவும்  விழைந்தனர் , ஆனால் என்ன செய்வதென்று புரியவில்லை .

அனிதா, தீபி வர்ஷியிடம்  “என்னப்பா உங்களை இப்டி பார்க்கவே முடியலை , உங்க கலகலப்பு எங்க போச்சு, போரிங் போப்பா”.. என்றாள்..

 

அதுக்கு அவளை முறைத்த தீபி, ” அனி, நானே காண்டுல இருக்கேன் என்ன கொலைவெறி ஆக்காத போய்டு ” என்று  விரட்டினாள்.

 

‘விடுப்பா சும்மா உங்க மூட சரி பண்ண சொன்னேன் , கஷ்டமா இருக்க எதுனா செய்லாம்னா ,என்ன செய்றதுன்னு தெரியலை,”   

 

அதுக்கு தீபி கவியையும், அனியையும் ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்தாள்.

 

“தீபி எதுக்குடி அவங்களை அப்படி பாக்கற, ஒருவேளை எங்க அண்ணானு

ஞாபகம் வந்துருச்சோ ,”  என்று வரு அவளை கலாய்த்தாள்,

 

அவளையும் ஒரு முறை முறைத்த தீபி,

 

“இந்த ரணகளத்துலயும் உனக்கு குதூகலம் தேவைப்படுது, ஹ்ம்ம் “என்றாள்..

 

அதைக்கேட்டு தோழிகள் மூவரும் கலகலத்துச் சிரிக்க,

 

அதை கண்டு தீபியும் சிரித்து கொண்டே அனிதாவிடம் கேட்டாள்  “எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா அனி,”..

 

“சொல்லு தீபி எனிதிங் பார் யூ, ஐயம் ஆல்வேஸ் அட் யுவர் சர்வீஸ் ”  என்று இடை வரை வளைந்து குனிந்து வணங்கினாள்…

 

அவளது செயலில் மறுபடியும் அனைவரும் சிரித்துவிட்டனர்…

 

சிரித்துக்கொண்டே தீபி, அனியிடம்,

 

“நீயும்,கவியும்  உமாவை நம்ம எப்பவும் போற ஐஸ்கிரீம் பார்லர்க்கு கூட்டிட்டு வர்றீங்களா ,எப்படியாவது நாங்க உமா சமாதானப்படித்திருவோம், என்ன சொல்றீங்க “..

 

“நல்ல ஐடியா தீபி,நானும் கவியும் உமாவை  கூட்டிட்டு வரோம்,நீங்களும் கரெக்ட் டைம்க்கு வந்துடுங்க ” என்றாள்..

 

தோழிகள் குதுகலத்துடன் மாலை சந்திப்பை உறுதி செய்து கொண்டு கலைந்தனர்.

 

மாலை இரு அணிகளாக தோழிகள் ஐஸ்கிரீம் கடைக்கு சென்றனர்..

வரவேமாட்டேன் என்ற பிடிவாதம் பிடித்த உமாவை,கெஞ்சி கொஞ்சிக் கூட்டி வருவதற்குள்,கவியும்,அனியும் ,காஞ்ச ரொட்டி  ஆகி விட்டனர் ..

 

அனிதா ,கவிதா ,உமாவை முன்னே போக விட்டு ,தீ்பியும் வர்ஷியும் சிறு இடைவெளி விட்டு பின்னால் வந்துகொண்டிருந்தனர்.  

       

 

முன்னே சென்ற மூவரும் அரட்டை அடித்துக்கொண்டு ரோட்டை கடக்க முயன்றபோது திடீரென்று குவாலிஸ் ஒன்று மின்னல் வேகத்தில் மூவருக்கும் அருகில் வந்து நின்றது, கண்ணிமைக்கும் நேரத்தில் அதில் இருந்து இறங்கிய இருவர், மூவரின் முகத்திலும் ஏதோ ஸ்பிரே செய்ய அப்படியே மயங்கி சரிந்தனர் , என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளும் முன் மூவரையும் அந்த இருவர் வண்டியில் அள்ளிப் போட்டுக்கொள்ள , இவை அனைத்தையும் பார்த்த தீ்பியும்,வர்ஷியும் அலற அவர்களை கவனித்த கடத்தல்காரர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் இவர்கள் இருவரையும் நெருங்க சுதாரித்த வர்ஷி ,தீபியை அருகில் இருந்த புதரில் தள்ளி தானும் ஓட முனையும் நேரம் வரு அவர்கள் கைப்பிடியில் சிக்கிக் கொண்டு குவாலிஸில் ஏற்றப்பட்டாள்..

 

       

கடத்தல்காரர்களில் ஒருவன் தீ்பியை நெருங்கும் நேரம் காரை ஓட்டிக்கொண்டிருந்தவன் தங்களை பக்கமாக ஒரு கார் வருவதாக   எல்லோரையும் எச்சரிக்கை செய்ய.. தீபியை அப்படியே விட்டு விட்டு வேகம் எடுத்து தப்பிச் சென்றனர்.

 

கடத்தல்காரர்களின் குவாலிசை நெருங்கிய காரில் இருந்து நந்து குதித்து இறங்கி நிலை குலைந்து கிடந்த தீபியை  அடைந்தான் . குவாலிஸ் கண்ணை விட்டு மறைந்து விட்டது இனி அவர்களை தொடர்வதில் உபயோகம் இல்லை என்று உணர்ந்து தேவ் காரில் இருந்து இறங்கி தீபியை நோக்கி நகர்ந்தான்..

 

நந்து,  தேவ் இருவரையும் பார்த்த தீபிக்கு சிறிது ஆறுதலாய் உணர்ந்தாள், ஆனால் விரைவில் சுயத்திற்கு திரும்பியவள் தனது தோழிகளை எண்ணி அழுகையில்

வெடித்தாள், அவளை தேற்றி மூவரும் காரில் ஏறி நிரஞ்சனை காண விரைந்ததனர்,………

 

நடந்ததை அறிந்து நிரஞ்சனிற்கு ஒரு நொடி உலகமே தலை கீழாக சுற்றுவது போல் இருந்தது, தீபியை ஒரு முறை இறுக்கி அனைத்தவன்,விரைவில் தன்னிலை உணர்ந்து செயல்பட முனைந்தான்.

 

புயல் வேகத்தில் அனைவரும் கிளம்பி சத்யனின் வீட்டை நோக்கி பறந்தனர், வரும் வழியிலேயே அருணுக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டதால் இவர்கள் வரும் முன்னரே அருணும் சத்யனின் வீட்டை அடைந்திருந்தான்.

 

யார் யாரை தேற்றுவது என்று தடுமாறியது சிறிது நேரமே, விரைவில் என்ன செய்வதென்று ஆலோசிக்க ஆரம்பித்தனர்.

 

அழுது அழுது கரைந்து கொண்டிருந்த தீபியால் அது ஒரு பச்சை நிற குவாலிஸ் என்பதையும், வந்தவர்களில் இருவர் கீழிறங்கி மின்னல் வேகத்தில் செயல் பட்டத்தையும் அவர்கள் முகங்களை துணி கொண்டு கட்டி மறைத்திருந்தனர், என்பதையும்  தாண்டி ஒன்றும் கூற முடியவில்லை.

 

நந்து மட்டும் பயன்படுகிறதோ இல்லையோ எதற்கும் இருக்கட்டும் என்று தன் மொபைலில் அந்த வண்டியின் பின் சென்ற போது எடுத்திருந்த வீடியோவை  காண்பித்தான், அதிலிருந்து வண்டி எண் தெளிவாக தெரிந்தது, இருந்தும் அது அவர்களின் நம்பிக்கையை ஈர்க்க வில்லை, இது போல வேளையில் ஈடுபடுபவர்கள் எப்பொழுதும் வண்டி எண்ணை மாற்றி விடுவர் என்று அனைவரும் அறிந்தது தானே.   

 

நந்துவின் மொபைல் மூலம் கிடைத்த வண்டி எண் வைத்து ட்ரேஸ் செய்ய யாரும் ஆர்வம் காண்பிக்காத வேளையில் சத்யன் மட்டும் கிடைத்த சிறு துருப்பை இழக்க மனமின்றி எதற்கும் அந்த வழியையும் செயல்படுத்த அலுவலகம் விரைந்தான்  …..

 

கெட்டதில் ஒரு நல்லது போல,நந்து மூலம் கிடைத்த வண்டி எண்ணை அலுவலகம் வந்ததும் சத்யன் ட்ரேஸ் செய்ய சொல்லி இருந்தான்.. அடுத்த ஒரு மணி நேரத்தில்  வண்டி எண் சரியானது என்றும் அது ஒரு லோக்கல் தாதாவினுடையது என்று சத்யனுக்கு தகவல்தெரிய வர, இன்னும் விரைந்து செயல் பட ஆரம்பித்தனர், சத்யன் அந்த வண்டி எங்கு உள்ளது , எங்கு செல்கிறது போன்ற விவரங்களை உடனடியாக சேகரிக்கும் படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டான்.

 

அருண் , நிரஞ்சன், நந்து ,தேவ் இன்னும் பல காவல் அதிகாரிகளும், காவலர்களும் எட்டுத்திக்கிலும் சல்லடையிட்டு தேடிக்கொண்டிருந்தனர்.    

 

இடைப்பட்ட நேரத்தில் தனது பெண்கள் கடத்தப்பட்ட விவரம் அறிந்து அவர்களின் பெற்றோரும் குடும்பத்தினரும் சத்யனின் அலுவலகத்தின் முன் கூடி விட்டனர்.

 

  அவர்கள் எல்லோருக்கும் ஆறுதலும் நம்பிக்கை தரும் வார்த்தைகளும் அளித்து அவர்களை அனுப்பி வைத்து தனது அறைக்குள் நுழைந்த சத்யனால் அதற்கு மேல் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் ,…

 

“வரு எங்கடி இருக்க “??

 

“நீ என்ன சுத்தி சுத்தி வந்த போது உண்ண தவிர்த்ததுக்கு இப்ப என்ன தவிக்க விடரியாடி”..

 

“முடியல வரு நான் உன் அளவு திடமானவன் இல்லடி ,வந்துருடி”…

 

“எத்தனை பெரிய பதவில இருந்தாலும், எத்தனை பேருக்கு என் உதவி தேவை பட்டாலும் என் தேவை நீதாண்டி ,என்னை உன்னை தவிர யாராலும் பாத்துக்க முடியாதுடி வந்துருடி,”  என வாய் விட்டே புலம்பினான்.

 

இத்தனை நாள் தன் அலுவல்களில் ஒன்றாக செயல்படுத்திய கடத்தல் விஷயத்தை திடமாகவும் , ஸ்திரமாகவும் செயல்படடுத்திய சத்யனால் இன்று இந்த உயிர் சுடும் வலிக்கு கலங்காமல் இருக்க முடியவில்லை.

 

“கடத்திச் சென்றது அவனது உயிரை அல்லவா”  சத்யன் காதலனாக வேதனையில் துடித்து ,கதறியது சிறிது நேரம் தான், அதில் இருந்து வெளி வந்தவன்,ஒரு ஆட்சியாளாராய், பெண்கள் கடத்தல் வழக்கின் சிறப்பு அதிகாரியாய், அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்திக்க  ஆரம்பித்தான்..

 

கடத்தி சென்ற அயோக்கியர்கள் இதுவே வழைமை என்பதால் எந்த பரபரப்பும் இன்றி பெண்களை பேரம் பேசிக்கொண்டிருந்தனர், எப்போழுதும் இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் அவர்கள் கடத்திய பெண்களை கை மாற்றி விடுபவர்கள், இம்முறை பேரம் சரியாக படியாததால், காத்திருக்க முடிவு செய்து நால்வரையும் அம்பத்தூர் கடந்து ஒரு இடத்தில் அடைத்து வைத்திருந்தனர்…

 

பல மணி நேரத்திற்கு பிறகு லேசா மயக்கம் தெளிந்த கவிதா கண்விழித்து பார்க்க , சுற்றியும் ஒரே இருட்டு , தான் எங்கே இருக்கிறோம், தனக்கு என்ன ஆனது இது புரிய சற்று நேரம் ஆனது கவிதாவுக்கு , புரிந்ததும் கலங்கி துடித்தாள் என்ன செய்றது எப்படி தப்பிக்கிறது ,தப்பிச்சிருவோமா, என்ன செய்ய போறாங்க,என்று யோசித்தப்படி கண்களை சுழல விட..

 

அவளுக்கு எதிர் புறமாக வர்ஷியும்,அனிதாவும், பக்கத்தில் உமாவும் மயக்கத்தில் இருந்தனர்.. தீபிய காணும் அப்போ அவ தப்பிச்சிட்டா போல என் கொஞ்சம் ஆசுவாசப்பட்டாள்…

 

இவங்க யாரு,எதற்காக  எங்களை கடத்தினார்கள் என்ற கேள்வி மறுபடியும் எழுந்து , அழுகை வந்தது, அழுதால் அந்த சத்தத்திற்கு யாராவது வந்துருவங்களோன்ற எண்ணம் வந்த நொடி அவள் அழுகை துடைத்தெடுத்தது போல நின்றது…

 

என்ன செய்யலாம் என்று யோசித்தவளுக்கு சற்றென்று அவள் குர்த்தி பாக்கெட்டில் உள்ள மொபைல் நினைவு வந்தது, சிறிய அளவிலான, கணம் மிகக்குறைந்த மொபைல், கல்லூரியில் சைலண்ட் மோடில் இருந்தது என்பதால் அது யாருடைய கவனத்தையும் ஈற்காமல் தப்பி அதனிடத்திலேயே இருந்தது . கடவுளுக்கு நன்றி கூறி துணைக்கு அழைத்துக்கொண்டு தீபியின் எண்ணை அழைத்தாள்……

Advertisement