மழை-14
காரில் இருந்தவனை பார்த்த உமாவின் விழிகள் அதிர்ந்து உறைந்தது !!!
அங்கு வேறு யாரும் இல்லை, நம்ப கரஸ் தான்..
இவள் ஏன் இப்படி நிற்கிறாள்? என்று வெளிய எட்டி பார்த்த வர்ஷி, அங்கு அருணை கண்டதும்
உமா,ஆனந்த அதிர்ச்சியில் இருப்பது புரிய ,
அவள் தோள் தொட்டு திருப்பிய வர்ஷி,
“என்ன ஆச்சு உமா, ஏன் இப்படி பூதத்த பார்த்த மாறி நிக்கற!!!”
///அண்ணா உங்கள பூதம்னு சொன்னதுக்கு சாரி வர்ஷா மைண்ட் வாய்ஸ்///
“ஒன்னும்இல்லை வர்ஷி,வெளிய கார் சவுண்ட் கேட்டதுன்னு பார்த்தேன், ஒன்னும் இல்லை” என்றவள் வார்த்தைகள் தடுமாறி சமாளிக்க.
“சரி நீ முதல பதட்டப்படமா இரு, உனக்கு பிடித்தால் தான் எதுவும் நடக்கும் சரியா?” என்றவள்..
அவளுக்கு தனிமை குடுத்து முகம் கழுவ சென்று விட்டாள்..
வர்ஷி முகம் கழுவ எடுத்துக்கொண்ட பத்து நிமிடங்களில் உமாவின் மனதில் ஓராயிரம் வினாக்கள்…அதற்கு விடை யாரறிவர்!!!
பிரதான கேள்வி வந்துருப்பது அருண் தானா? இல்லையா?
தனக்குத்தான் யாரை பார்த்தாலும் அவர் மாறியே தோன்றுகிறதா?.
தோற்ற பிழையோ?
முழித்தாள்…
\\\காதல் நோய் முத்திப் போச்சு போல////
உமா மனதினுள் பட்டிமன்றம் நடத்தும் போதே வர்ஷி வர, அவளைக் கண்டு தன் அலைப்புறுதல் நிறுத்தி வர்ஷியிடம் குழப்பம் தீர பேசத் துவங்கும் முன்,
உமாவின் தாய் மற்றும் தீபி வர அமைதி காத்தாள்…
“ஹே!!தீபி வா,உனக்கும் அம்மா போன் செஞ்சு சொன்னார்களா?”..
“யாரு கூட வந்த?” ,”என்ன பார்க்க தான் வந்தியா இல்லை வேற எதுவும் வேலையா இந்தப் பக்கம் வந்தியா?”என்ற உமாவின் கேள்விக்கு,
“ஒவ்வொரு கேள்வியா கேளு”, என்ற தீபி,
“அம்மா எனக்கு போன் பண்ணினார்கள்”,
“அப்புறம் என் அப்பா அண்ணன் கூட வந்துருக்கேன்” என்றாள்…
“நீங்க பேசிட்டு இருங்க,நான் வந்துருக்கவங்கள கவனிக்கறேன், நான் சொல்லும் போது உமாவை கூட்டிட்டு ஹாலுக்கு வாங்க “என்று சென்றுவிட்டார் உமாவின் அன்னை..
“என்ன அப்பா,அண்ணா கூட வந்துருக்கியா.. ஏதவாதுமுக்கியமான விஷயமா”?
“ஆமாம் அண்ணாக்கு பொண்ணு பார்க்க வந்துருக்கோம்”…
” உன் அண்ணாக்கு பெண் பார்க்க இங்க எதுக்கு வரணும் “?
“இங்க தான என் அண்ணா விரும்பற பொண்ணு இருக்கா,அதான்”…
“இங்கேயா யாரு பொண்ணுன்னு” உமா யோசிக்கும்போதே…
“அக்காஸ்,உங்க மூணுப்பேரையும் அம்மா வரச்சொன்னாங்க என ராதா வந்து சொல்ல, உமா இன்னும் மயக்கத்திலேயே வைக்கப்பட்டாள்…
நால்வரும் ஹாலிற்கு வர, அங்கியிருப்பவனை பார்த்து உமாவை அதிர்ச்சி, ஆச்சரியம்,மகிழ்ச்சி என்ற அத்தனை உணர்வுகளும், ஒரே நேரத்தில் ஒன்றுச்சேர தாக்கியது, உணர்வுகளின் தாக்கத்தால் தள்ளாடி நின்றவளின் நிலையை உணர்ந்த வர்ஷி, அவள் கையை இருக்க பற்றி அவளை சமன் செய்தாள்…
உணர்வுகள் சமனானதும் மெல்ல வந்திருந்தவர்களைப் பார்வை வந்திருந்தவர்களை தொட்டுச் சென்றது..
உமாவைப் பார்த்த அருணின் தந்தை,
அருண் உமாவிடம் தனிமையில் பேச ஆசை படுவதாக சொல்ல, உமாவோ அவன் மேல் இருந்த கொலைவெறியில் ..
“இல்ல மாமா… எங்களுக்கு இன்னும் எவ்வளவோ காலம் இருக்கு. அப்போ பேசிக்கிறோம். அது மட்டும் இல்லாமல் திருமணம் வரை கூட பேச வேணாமே” என்றும் பெரியவர்கள் முன்னிலையில் சொல்லி விட
அருணால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அருணின் தந்தை உமாவிடம், “அம்மாடி உமா உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தானே. உனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லையே?” என்று அவளின் சம்மதத்தை தெரிந்து கொள்ள கேட்க உமாவும்
” எனக்கு முழு சம்மதம் மாமா” என்று கூறி, நாணத்தால் முகம் கவிழ ..
அனைவரும் ஹாப்பி..
“அப்போ நாங்க கிளம்பறோம் சம்மந்தி, பொண்ணு படிப்பு முடிஞ்சதும் நிச்சயமும் , கல்யாணமும் வைச்சுக்கலாம், வரேன் மருமகளே,” என்று அருணின் தந்தை வாசலுக்கு செல்ல,வர்ஷியும்,தீபியும் உமாவை நோக்கி வந்தனர்….
அதை கவனித்த உமா, ” நீங்களும் என் கூட பேச வேண்டாம், உங்க கூட பேச பழைய மாறி பேச எனக்கு கொஞ்சம் டயம் வேணும், இப்போ கிளம்புங்க பை …”
உமாவின் பேச்சில் வருத்தம் ஏற்பட்டாலும் தங்கள் மேலயும் தவறியிருப்பதால், உமாவிடம் வெறும் தலையசைப்பை மட்டும் கொடுத்து கிளம்பிவிட்டனர் ..
அருணும் அவனது அப்பாவும் ஒரே காரில் கிளம்பிவிட, மற்ற ரெண்டு ஜோடியும் தங்களுக்கு வர போகும் இணையுடன் கிளம்பி விட, அதை பார்த்த அருணின் கண்களில் அப்பட்டமான பொறாமையின் சாயல் தெரிய, மற்ற இரு நண்பர்களுக்கும் அவனது பொறாமை அப்படி ஒரு சிரிப்பை வரவழைத்தது ..
நிரஞ்சன் கார் ஓட்டும்பொழுது அடக்கமாட்டாமல் சத்தமாக சிரித்த்துவிட , அவன் எதை நினைத்து சிரிக்கிறான் என்றுணர்ந்த தீபியோ,
” பாவம் என் அண்ணா!!! அவன் நிலைமையை நெனைச்சா உனக்கு சிரிப்பா இருக்கா,, உமா அண்ணண் கூட கல்யாணம் வரை பேசமாட்டேனு சொன்னா மாதிரி , நானும் என் அண்ணா மேரேஜ் முடியற வரை உன்கூட பேச மாட்டேன் சொல்லிருக்கணும் , அப்படி சொல்லாம உன்கூட கொஞ்சிட்டு இருக்கேன் பாரு என்ன சொல்லணும்” என்று அவன் நெஞ்சில் சரமாரியா குத்த துவங்க , அவள் கொஞ்சிகிட்டு என்றாரம்பிக்கும்போதே காரை அந்த கடற்கரைச் சாலையின் ஓரமாக நிறுத்துவிட்டான் ..
“என்னது நீ என்ன கொஞ்சரியா” என்று அவள் கையை பிடிக்க..
“பின்ன இல்லயா?” என்று அவள் கையை பிடித்த கோபத்தில் அவன் கன்னத்தில் கடிக்க ,
“அடியே, ராட்சசி,பிசாசு அரைகிலோ சதை போச்சுடி மாமிசபட்சி” என்று வலிப்பதுப் போல் முகத்தை வைக்க,
நல்லா வலிக்கட்டும், என் அண்ணன் பாவம் , அவனை கிண்டலா செய்யற” என்று முதலிலிருந்து ஆரம்பிக்க,
” இது வேலைக்கு ஆகாதுடா நிரஞ்சா”, என்று மனதுக்குள் கூறிக்கொண்டவன் பேசும் அவள் வாய்க்கு தண்டனை வழங்க ஆரம்பித்துவிட்டான், முதலில் திமிறியவள் அவன் நினைத்ததை நிறைவேற்றாமல் விடமாட்டான் என்பதால் அவன் போக்கிற்கே விட்டுவிட்டாள்!!!
உமாவின் கோவத்தில், நிரஞ்சன் மேல் அவள் கொண்டுள்ள கோவம் தீபிக்கு மறந்துவிட்டது….
இங்கு…
சந்தியா பொழுதில்…
சத்யா சாலையோரமாக காரை நிறுத்த, அவனை கேள்வியாக நோக்கிய வர்ஷியிடம், அவள் கையை பிடித்துக்கொண்டு ,
“ரொம்ப நன்றிடா , அன்னிக்கி அது நிரு விளையாட்டுக்காக அனுப்பின போட்டோ தான், ஆனா,அதனால தான் எனக்கு உன் அன்பு ஆழம் தெரிஞ்சிது , நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி, அதான் இப்படி ஒரு மனைவி கிடைச்சிருக்கா” நெகிழ
அவன் பேசிய மற்ற வார்த்தைகளை, “மனைவி” என்ற வார்த்தையில் மறந்த வர்ஷி..
“என்னது மனைவியா?” என்று அவள் சங்குவிழி விரிக்க ..
“எதுக்கு இப்போ இந்த கண்ணில் கடைவிரிக்கிற”?..ம்ம்ம்
வரு மேடம், காதல் சாரல் சரசத்துடன் அவனை “சத்தி”, அவளது பிரத்தேக அழைப்பு அவனை மேலும் நெகிழச் செய்ய…
“நீ மட்டும் லவ் பண்ணதும் புருஷன்னு சொல்லலாம், அதே நான் பொண்டாட்டின்னு சொன்னா மட்டும் இப்படி முழிச்சி பாக்கற, என்ன செஞ்ச நீ நம்புவடி ஹாங்” சொல்லிக்கொண்டே அவளை இழுத்து அனைத்து, நெற்றியில் முத்தமிட,
ஐந்துவருடங்கள், கணவனாக நினைத்தவனின் முதல் முத்தம்…வர்ஷி அதை கண்மூடி ஏற்று மரியாதை செய்ய..
வர்ஷியின் மூடிய விழிகளும், கிறங்கிய முகமும் மேலும் அழைப்பு கொடுக்க பயமின்றி பாய்ந்து விட்டான் அந்த கள்வன்..வர்ஷியின் முகம் முழுவதும் முத்த மழைப் பொழிந்து, அவளின் விழியில் அடுத்து தன் உதட்டுமுத்திரையை பதித்து, அவள் மூச்சுக்காற்றை தான் உள்வாங்கும் அளவு நெருக்கம் கூட்டி அவளது இதழ்களில் தன் இதழ்களை பதித்தான்..ஆணாய் தன் ஆசைகளை அதில் வைத்தான்..
எத்தனை நேரம் அப்படியே இருந்தார்களோ, முதலில் நடப்புக்கு வந்தவள் வரு தான்.
மெல்ல அவன் அணைப்பில் இருந்து விடுபட முயல, அவள் அசைவினால் உணர்வுக்கு வந்த அவனும், அவன் பிடியை தளர்த்தி, அவள் சிவந்த முகத்தை பார்த்து கண்ணடித்து குறும்பாய் ரசிக்க..
அதில் வெட்கம் கொண்டவள் …முகத்தை மறைக்க அவன் மார்பினிலே சாய்ந்தாள், அவனும் வாய்க்கொள்ளா புன்னகையுடன் அவளை ஆதுரமாய் அணைத்துக்கொண்டான்
இதில் ஆண்டாண்டு காலம் கொண்ட நேசம் மட்டுமே இருந்தது…
கள்வனும் அவனே,காவலனும் அவனே!!
ஒரு வாரத்திற்கு பின் ..
நிரஞ்சன் வீட்டு வாசலில் , கார் நிற்கும் முன்னே அதிலிருந்து இறங்கி உள்ளே ஓடி வீடே அதிரும்படி “நிரு” வென்று கத்தினாள் தீபி..
அவளது குரல் கேட்டு ஏன் இப்படி கத்துகிறாள்? என்று அலுவலகஅறையிலிருந்து வெளி வந்தவன் அவளின் கோலம் கண்டு அதிர்ந்துவிட்டான்!!!
அவனைகண்டதும் அவனிடம் ஓடி அவன் மார்பினில் சாய்ந்து அழத்துவங்க, அவனுக்கு எதுவும் புரியவில்லை,சிறிது நேரம் அழவிட்டவன்,அவள் பின்னாடியே வந்த தேவ் மற்றும் நந்து முகமும் வெகுவாக கலங்கிருப்பதை கண்டு, விஷயம் எதுவோ பெருசு என்றுநினைத்தவன் , மெதுவாக தீபியிடம் ,
“தீபிமா என்னாச்சு, ஏன்டா இப்படி வந்துருக்க , முதல இந்த தண்ணிய குடி , அப்புறம் என்னனு சொல்லு, சொன்னா தான எனக்கு தெரியும் சொல்லுமா”என்று கேட்க
அவன் குரலில் மெல்ல உணர்வுக்கு வந்தவள்,தான் இப்பொழுது கலங்காமல் இருந்தால் தான் வேலை நடக்கும் என்ன உணர்ந்தவள் , அவன் கையில் இருந்து நீரை வாங்கி அருந்தி தன்னை
சமன் படுத்திக்கொண்டவள்,
“அங்க உமா,வர்ஷி,கவிதா,அனிதாவை கடத்தித்டாங்க”…
என்று நடந்ததை சொல்லத்துவங்கினாள்…