மழை-12
அன்று கல்லூரிக்கு சீக்கிரம் வந்த தீபி அவர்கள் குழு எப்பவும் அமரும் மரத்தடியில் அமர்ந்திருதாள்.. அவளுக்கு தெரியும் வர்ஷி இன்று எப்படியும் சீக்கிரம் வருவாள் என்று, அதனால் அவளுக்காக காத்துக்கொண்டிருந்தாள்..
சிறிது நேரத்தில் தன் கறுப்பியில் வந்த வர்ஷி , சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு யாரும் இல்லை என்பதை உறுதி செய்துக்கொண்டு ,தீபியை பார்த்து அண்ணி!!! என்று கூவினாள் அதற்கு தீபி அவளை முறைத்தாள்…
அண்ணி தான சொன்னேன் அதுக்கு ஏன் உன்கிட்ட ஐ லவ் யூ சொன்ன மாறி முறைக்கற…நீயும் ஆள் பாக்க அம்சமா தான் இருக்க,இருந்தாலும் எங்க அண்ணாக்கு போட்டிக்கு நான் வரமாட்டேன் என்று கண் அடித்தாள்..
உன் அண்ணாக்கு போட்டியா நீ வர மாட்ட, ஆனா யாரவது போட்டியா வந்தா தான் உன் அண்ணனுக்கு என் அருமை தெரியும்..
ஏன் அண்ணி என்ன ஆச்சு? அண்ணா கூட சண்டையா..
அப்டியேஉன் அண்ணா கூட சண்டை போட்டுட்டாலும் , உன் அண்ணா வேற பொண்ண பார்த்து கல்யாணம் செஞ்சுக்கப்போறாராம், என்று நிரஞ்சன் குடுத்த அலப்பரையெல்லாம் ஒன்னு விடாம சொல்லி, உன் அண்ணனோட தேஞ்சி,நசுங்கி சட்டி மாறி இருக்கற மூஞ்சிக்கு நானே அதிகம்
///வ்வ்வ் நிரஞ்சன் மமூஞ்சி அப்படியா இருக்கு ஓவர்///…
இதுல இவருக்கு இன்னொரு பொண்ணு கேக்குது , உன் அண்ணா என்ன தவிர யாரையும் பார்க்க மாட்டாறு, அது ஒரு டம்மி பீஸ்..
இதுல ஓவர் அலப்பறை, இதை போன்ல கேக்கும் போது எனககு சிரிப்பு தான் வந்தது.. எப்படியோ சிரிப்பை கண்ட்ரோல் செஞ்சு உன் அண்ணா கிட்ட கோவமா இருக்குற மாறி சீன் போட்டிருக்கேன், என் கதையை விடு,
நீ சொல்லு என் அண்ணா என்ன சொன்னார்? உன் முகம் வேற மின்னுது என்னனு செப்புமா, செப்பு என்று கையை ஆட்டி கண்ணை உருட்டி சொன்ன பாவனையில் வர்ஷி சிரித்து விட்டாள்..
ஏற்கனவே மினுமினுத்க்கொண்டிருந்த வர்ஷி முகம் இப்ப ஜொலித்தது….
வர்ஷி முகத்தை பார்த்துக்கொண்டிருந்த தீபி இவள் எவ்வளவு அழகு என்று எண்ணிணாள்..
என்னடி என்னையே பாக்கற , நீ மட்டும் பையனா இருந்து இருந்தா உன்னை நானே கல்யாணம் செஞ்சுப்பேன்.. சொல்லு அண்ணா என்ன சொன்னாரு..
ஹம்ம்ம் சொன்னாரு உங்க அண்ணா என்று ஆரம்பித்து , அவளிடம் சொல்ல வேண்டியதை மட்டும் சொன்னாள்..
வர்ஷி சத்யா பற்றி பேசும்போது அவள் முகத்தில் வர்ணஜாலமும் வந்தது..
அதை ரசித்தபடி இருந்த தீபி, அவள் பேசி முடித்தவுடன் தன் அண்ணணுக்குள் இப்படி ஒரு காதல் கள்வனா என்று வியந்தாள்..
இருவரும அவர்கள் மனம் கவர்ந்த கள்வர்களின் காதல் பிரதாபங்களை பேசி விட்டு ,
அருண்,உமா பற்றி பேச ஆரம்பித்தனர்…
வர்ஷி அருணுக்கும் உமாக்கும் சீக்கிரம் கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்யணும்,ரெண்டு பேரும் கண்ணாலே பேசிக்கறாங்க , ஆனா வாய திறந்து சொல்லுவாங்களா தெரியல, அருண் முன்னாடியே அப்பாகிட்ட விஷயத்த பேச வேண்டி தான், நீ என்ன சொல்றடா..
நீசொல்றதும் கரெக்ட் தான் எதுக்கும் கலெக்டர் சார் கிட்டயும், ஏ.சி.பி கிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுட்டு வீட்ல பேசு , அப்போ தான் அருண் அண்ணா மனசுல என்ன இருக்குனு தெரியும்..
நீ சொல்றதும் கரெக்ட் தான் பார்ப்போம் என்று பேசிக்கொண்டிருந்தவர்கள், தங்கள் நண்பர்க்ள் வந்ததும் அவர்களுடன் வகுப்புக்கு சென்றனர்..
காலையில் ஆபீஸிற்கு வந்த சத்யா தன் வேலை எல்லாம் முடித்துவிட்டு, மதியம் லீவு போட்டு அருணுக்கும்,நிரஞ்சனுக்கும் அழைத்து அவர்களையும் லீவு போட சொல்லி உணவுவேளையில் ஒரு ஸ்டார் ஹோட்டலின் பெயர் சொல்லி அங்கு வர சொன்னான்..
அவர்கள் எப்பவும் மனசு விட்ட பேச,தங்கும் ஹோட்டல் அது..
நேரமாகவே ஹோட்டலுக்கு வந்த சத்யா, ஏற்கனவே முன் பதிவு செய்த அறைக்கு சென்று ரெப்பிரேஷ் செய்து படுக்கையில் விழுந்ததும், வர்ஷியின் நினைவுகள் அவனை சூறாவளி காற்றை போல் அவனை சுழற்றி அடித்தது..
அவனின் வரு, அவனுள் பற்றி எரியும் நெருப்பை, அவளது காதல் என்னும் மழை கொண்டு அணைக்க வந்தவள்.. அவன் மேல் எல்லையில்லா காதல் கொண்டவள் வர்ஷி..அவளின் காதலின் ஆழத்தை உணர்ந்தவன் முகத்தில் தீவிரம் வந்தது…
வருமா யூ ஆர் மை கேர்ள் !!!
உன்னை யாருக்காகவும் எதுக்காகவும் ,எதுக்காகவும் , ஏன் நீயே கேட்டா கூட உன்ன விட்டுக்கொடுக்கமாட்டேன் என்று காதலின் வேகம் தாளாமல் மனதினுள் புலம்பினான் …
அதற்குள் இன்டெர்காம் ஒலிக்க மனதின் எண்ணங்களை விட்டு வெளி வந்து, எடுத்து பேசி வேண்டிய உணவுவகைகளை சொல்லி வைத்ததும் அங்கு வந்து சேர்ந்தனர் “ரஞ்சியும்,அருணும்”..
மூவரும் பொதுவாக பேசிக்கொண்டிருக்கும்போது ,அவர்களுக்காக உணவு வகைகளை வந்து விட்டது, மூவரும் சாப்பிட ஆரம்பித்தார்கள்..என்ன சார் என்ன விஷயம் எங்களுக்கு விருந்து தூள் பிறக்குது என சத்யாவை பார்த்து கேட்டான் அருண் ..
ஆம் விருந்தில் பறக்க தான் செய்தது சிக்கன்லாலிபப், பிஷ்,மட்டன் பிரியாணி,எறாதொக்கு, சிக்கன் கிரேவி, பட்டர் நான்,வெஜிடபிள் புலாவ் , தம் ஆலு, பிளஸ் உயர்ரக புனிதமில்லா தீர்த்தங்களும்….
சத்யா சுத்த சைவம் ..
அருண் சுத்த அசைவம் ..
ரஞ்சிக்கு சாப்பாடு கிடைச்சா ஓகே என்கிற ரகம்
வர்ஷி, உமா இருவரும் சைவம் ..தீபி எல்லா சாப்பாடும் வெளுத்து வாங்கும் ரகம்..
சத்யா வெறும் கோக் கையில் வைத்து…கம்பனுத்து…
அவர்கள் தீர்த்தம் அருந்திவிட்டும் ஸ்டெடி யா இருக்க..
இவன் தன் காதலியின்… தியாகங்களை புனிதத்தை சொல்லி சொல்லி மயங்க…
அவர்கள் இருவருக்கும் முடியல…
சைவக்காரன்.. அசைவக்காரர்களை விட…நாக்கை சுழற்றி ருசி சொல்ல….காதல் நோய் முத்திய ஒரு நாடறிந்த நல்ல கலெக்டர் இப்படி மறை சுத்தமா கழன்று கிடப்பது பார்த்து…
அருணுக்கு…. உமா வை….
பார்க்கணும் பார்க்கணும் இப்பவே இப்பவே….ன்னு அவசரமாய் 108 இல் காதல் வர….
உள்ள போன ஹாட் சத்யாவின் பும்பலால் கூல் ஆனது….
தீபியை நினைச்சட்டு கொடுத்து….ரகசிய போலீஸ் ரஞ்சனுக்கு எண் 100 ல் லவ் கால் போனது….
“காலையில என்னை மாட்டி விட்டல…இருடா சத்தி…ன்னு”…
ரஞ்சி…”ராஜ் கிரண் கறி தின்ற ஸ்டைலில் மலை மாறி குவிச்சி வச்சி்துண்டுகள்…தீர்த்தக்கிண்ணங்கள்
பேசிக் கொண்டிருந்த சத்யா பக்கம் வைத்து விட்டு..பிளாஷ் இல்லாமல் போட்டோ எடுத்து….
அதை வர்ஷிக்கு அனுப்பிவிட்டுட்டான் அந்த உத்தம நண்பன்”..
சத்தி…மாட்டினடா நீ…அப்டியே சத்யாக்கும் வாட்ஸ்அப்.
\\\.அட பாவி்களா உட்கார்ந்து … வாட்ஸ்அப் எல்லாம் டெக்னாலஜி படுத்தும் பாடு\\\ ..
ஏதாவது முக்கியமான விஷயமாக இருக நினைத்த சத்யா காணொளியை கண்டு காண்டாகி கடுப்பைடைந்தான், அவனது முகத்தயையே பார்த்துக்கொண்டிருந்த ரஞ்சிக்கு சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவிட்டான் ..
“மாப்பிளை இதுக்கே காண்டானா எப்புடி ?
நான் இதை என் தங்கைக்கு அனுப்பியாச்சு”..
“நீ உன் பாசமலருக்கு ஒலிவடிவம் தான் ஓட்டின, நான் ஒளி வடிவம் மச்சி எது எபெக்ட் அதிகமா இருக்கும் மச்சி… ஹ்ம்ம் சொல்லு மச்சி …சொல்லு” என்று சிரித்தான்..
“அடப்பாவி வருக்கு அனுப்பிட்டியா, இரு டா உனக்கு வைக்கறேன் டைம் பாம் “என்று மனதினுள் கருவிக்கொண்டவன், வெளிய அமைதியான முகத்துடன் வர்ஷிக்கு கால் செய்தான் ..
ரஞ்சியோ என்னடா இவன் முகத்துல ஒரு உணர்வுயும் காணும் என்று இல்லாத மூளையை பயன்படுத்தி யோசித்தான் ..சத்யா வரு கால் அட்டென்ட் செய்யலைனு டென்ஷன் ஆக ஆரம்பித்தான்..
சத்யா ரஞ்சி யோசனையிலிருக்க அருண் தனக்கும் இந்த உலகத்துக்கும் சம்மந்தம் இல்லாததுபோல் கையில் தீர்த்துடன் உமா கூட கொஞ்சிக்கொண்டிருந்தான் கனவில் ..
கல்லூரியிலிருந்து அன்று முன் மதியமே வீடு திரும்பிய வர்ஷி, அம்மாவுடன் சிறிதுநேரம் அரட்டை அடித்து,உணவருந்திவிட்டு தன் அறைக்கு வந்து ரெப்பிரேஷ் செய்தவள் ..
சிறுது நேரம் கழித்து வண்டியில் வந்ததால் சைலண்ட் மோடில் வைத்திருந்த அலைப்பேசியை எடுத்து பார்த்தால் சத்யாவிடமிருந்து ஏகப்பட்ட அழைப்புக்கள்.. என் இவ்ளோ கால் பண்ணிருக்கார், ஏதாவது அவசரமாக இருக்கோமோ,ஒரு வேளை வாட்ஸ்அப்பில் ஏதாவது மெசேஜ் வந்துருக்கான செக் செய்ய,
ரஞ்சி அனுப்பின வீடியோ பார்த்ததும் விழிகள் நிலை குத்தி நிக்க, கைகள் தானாக சத்யாவுக்கு அழைத்தது..
வர்ஷி அந்த விடியோவ நம்புவாளா?? இல்லையா??