சத்யாவின் கையில் ஈ.சி.ஆர் சாலையில் கார் பறந்துகொண்டிருந்தது,அவன்பேசவில்லை,அவளும்பேசவில்லை..அவர்களுக்கு ஏற்றவாறு காரில் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது…
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள்
இதழில்மௌனங்கள்
மனதில் ஓசைகள்
இதழில்மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்
வர்ஷி கண் மூடி பாடலை ரசித்தாள் கு வந்தாள்..சத்யாவோவர்ஷியை ரசித்தான் ..காதலன் அவதாரம் எடுக்க போறானோ?
இளமைச்சுமையை மனம் தாங்கிக்கொள்ளுமோ
குழம்பும்அலையை கடல் மூடிக்கொள்ளுமோ
குளிக்கும் ஓர் கிளி, கொதிக்கும் நீர் துளி
குளிக்கும் ஓர் கிளி, கொதிக்கும் நீர் துளி
ஊதலான மார்கழி
ஈரமான ராத்திரி ..
நீயும் வந்து ஆதரி
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
—
இவளின் மனதில் இன்னும் இரவின்மீதமோ
கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ
பாதை தேடியே, பாதம் போகுமோ
பாதை தேடியே, பாதம் போகுமோ
காதலென்னநேசமோ
கனவு கண்டு கூசுமோ
தனிமையோடுபேசுமோ
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள்
இதழில்மௌனங்கள்
மனதில் ஓசைகள்
இதழில்மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்…
இவர்கள் மனதில் உள்ள கேள்வி பாடலில்ஒலித்ததா? பாடல் முடியவும்சத்யா ஒரு ஸ்டார்ஹோட்டலில் முன்னே காரை நிறுத்தவும் சரி ஆக இருந்தது.. வேலட்பார்க்கிங்கில் காரை குடுத்துவிட்டு இருவரும் இறங்கி உள்ளே சென்றனர்..
ஏற்கனவே சத்யாமுன்பதிவுசெய்துயிருந்தமேஜையில் சென்று அமர்ந்தனர்.. ///ஐயா செம ஏற்பாடு தான் செஞ்சுருக்காரு///
ஹோட்டலில் உள் இதமான மெல்லிசை கசிந்துகொண்டிருந்தது ..ஒவ்வொரு மேஜையின் நடுவே பூஞ்சாடியில் சிகப்பு வண்ண ரோஜா பூங்கொத்து வைத்துருந்தது, இருவரும் எதிர் எதிர் இருக்கையில் அமர்ந்தார்கள் .. ஹோட்டலின்மங்கலான வெளிச்சமும், இதமாக நாசியில் நுழையும் நறுமனமும், எதிரில் மனம் கவர்ந்தவனும் , வர்ஷியின்மென் உணர்வுகளை தட்டி எழுப்பியது..
ஓர கண்ணால் சத்யாவை பார்த்தாள், அவன் மெனு கார்டில்முழுகி விட்டான் போல்,நோகாமல் தலையில் அடித்துக்கொண்டாள் வர்ஷி, என்ன ஒரு ஏகாந்தமான சூழ்நிலை பேசாமஉக்காந்துருக்கு , ஜடம்,உம்மணாமூஞ்சி ,ஸ்ட்ரிர்ட்ஆபிசர்,உராங்குட்டான் ,ஏண்டி வர்ஷி காலேஜ்ல எத்தனை சீனியர்ஸ் உன் பின்னாடி சுத்தினாங்கஅவங்களல்லாம்விட்டுட்டுஇவன போய் லவ்பண்ணினே, எல்லாம் என் நேரம் என்று அவனை ஒரு லுக் விட்டாள், கல்லூரியில்பார்மல் உடையில் இருந்தவன்,இப்பொழுதுமெரூன் வண்ண டி-ஷர்ட் ,கருப்பு நிற பேண்டில்இருந்தான்..ஆளுஅழகா தான் இருக்கான், அதான் காலேஜ்ல எல்லாம் அப்படி சைட்அடிச்சாளுக, இவன யாரு இவளோஅழகா இருக்க சொன்னது காதல் கொண்ட மனம் சிணுங்கியது \\\அந்த மனம் தானஇப்போ அவனை கழுவி ஊத்தியது, என்ன காதலோகன்றாவியோ/// எப்போ டிரஸ் மாத்திருப்பான்?\\\இது இப்போ ரொம்ப முக்கியமா///…
இன்னும் என்ன என்னதிட்டிருப்பாளோபேரர் ஆர்டர் எடுக்க வந்து சத்யாவை காப்பாற்றினான்..சத்யா தனக்கு வேண்டிய உணவுவகைகளை ஆர்டர் செய்து விட்டு வர்ஷியை ஆர்டர் செய்ய சொன்னான்.. அவளும் ஆர்டர் செய்த பின் இருபது நிமிடங்களுக்கு பிறகு கொண்டுவர சொன்னான்..
வர்ஷா உன் கூட கொஞ்சம் பேசணும் ..
நீ படிக்கற பொண்ணு \\\நா மட்டும் டான்ஸ் ஆடறபொண்ணுன்னா சொன்னேன்///..உன் கவனம் படிப்புல தான் இருக்கணும்,///அது இல்லாம தான் யூனிவர்சிட்டிரேங்க்வாங்கறேனாலூசே///..
நீதான் உன் தம்பிக்குஉதாரணமாஇருக்கணும் \\\சேட்டை செய்யறுதுலியா///…
நீ என் பின்னாடி சுத்தமா, வீட்டுக்கு வந்து தொந்தரவு செய்யாமஇருந்தா,\\\சொன்ன அவனுக்கு தெரியவில்லை தன் வீட்டுக்கு அவள் வரமாட்டானாள்னுஎங்கபோறோம் என்று///
உன் படிப்பு முடிஞ்சதும் நான் உங்கவீட்ல வந்து பேசி உன்னை கல்யாணம் செஞ்சுக்கறேன் என்று அதையும் முகத்தை இருக்கமாவே வைத்து சொல்லி முடித்தான்..
///சொல்றத கொஞ்சம் சந்தோசமாசிரிச்சிட்டு தான் சொன்ன என்ன முசுடு/// என்று மனதில் திட்டி நீங்க சொன்னதுக்கு நான் சம்மதிக்கறேன்இந்தர் என்று அவளும் உள்ளே குத்தாட்டம் போட்டு வெளியே முகத்தை இருக்கமாவே வைத்து கொண்டு சொன்னாள்..
அவள் முகத்தியேபார்த்துக்கொண்டிருந்தவனுக்குசிரித்திக்கொண்டே சம்மதம் சொன்னா என்ன என்று தோன்றியது ..இப்படி தான அவளுக்கும் இருக்கும் நீ மூஞ்சியஉம்முனுவைச்சிபேசறப்போ,
இப்பபோ அனுபவி ராசா..
அவர்கள் ஆர்டர் செய்த உணவுவகைகள் வந்ததும் சாப்பிட ஆரம்பித்தார்கள்..சாப்பிடும்போது நடுவில் சத்யாவிற்கு போன் வர அதை அவன் அட்டென்ட் செய்த கேப்பில், அவன் தட்டில் உள்ள அவன் சாப்பிட்ட உணவை தன் தட்டில் மாற்றி கொண்டாள் திருடி வர்ஷினி..அப்பொழுது அங்கே வந்த சத்யாவின் அப்பா இருவரையும் பார்த்து தன் மகன் அவளை காதலிப்பதாக எண்ணி இரண்டு டேபிள் தள்ளி அமர்ந்திருந்த தன் மனைவியை நோக்கி சென்றார்..
லட்சுமி என்று ஆரம்பித்து தான் பார்த்ததை சொன்னவர், மனைவியும் அழைத்து கொண்டு சத்யாவை நோக்கி சென்றார்..அவர்கள் தன்னை நோக்கி வருவதை தற்செயலாக கவனித்தசத்யா அங்கு இருந்த பணியாளரை அழைத்து இரு இருக்கைகள் போட சொல்லி இவன் வர்ஷி அருகே சென்று அமர்ந்துவிட்டான்..தன்னைகேள்வியாகநோக்கியவளிடம்இப்போஇங்க எது நடந்தாலும் நீ பேச கூடாது என்றான்..
அவனின் பெற்றோர் எதிர் இருக்கையில் வந்த சத்யாஎன்றழைத்தனர்..அவர்களை பார்த்த்வன், வர்ஷி சாப்பிடு என்றுவிட்டுதானும் சாப்பிட ஆரம்பித்தான்..நாங்கள்இன்னிக்கிமார்னிங் தான் ட்ரிப்முடிஞ்சுவந்தோம்..நாங்கள்ரெஸ்ட்எடுத்துட்டு வந்த நீ கிளம்பி போயிருந்த , நைட்உங்கிட்டபேசுலாம்னுநினைச்சோம் அதுக்குள்ளே இங்க பார்த்தது நல்லதா போச்சு, நாங்க உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் என்றதும் வர்ஷி இருக்கையை விட்டு எழப்போனாள், அவள் எழுவதைஉணர்ந்தசத்யா, அவள் கையை பிடித்து தடுத்து ,வர்ஷி நீ இங்க தான் இருக்கணும், உன்முன்னாடிபேசறதை பேசலாம் தனியா பேசணும்னா அது முடியாது என சொல்லு ..
யாரோ ஒரு பொண்ணுக்கு குடுக்கும் முக்கியத்துவம் பெத்தவங்களுக்கு இல்லையா என்ற ஈகோ..அவர்களதுஸ்டேட்டஸ் பார்க்கும் குணம் எல்லாம் சேர்ந்து வீட்டில் வைத்து பேச வேண்டிய விஷயத்தை இங்கயே பேச தூண்டியது..
நீ இங்கயே வந்தது எங்க ரெண்டு பேருக்கு ரொம்ப சந்தோசம்.. நாங்க உனக்கு மேரேஜ்பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கோம் ,கலெக்டர் மாப்பிள்ளைன்னுஅவங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.. பெரிய மல்டிமில்லினர்,உன்னடிவியில் பார்த்து அவங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்குக்காம்..உன்ன பற்றி விசாரிச்சிச்சு நீ எங்கபையன்னுதெரிஞ்சதும் வந்து சம்மந்தம் பேசினார்.. இதை வர்ஷியை பார்த்து கொண்டே கூறினார்..அதைசத்யாவும் கவனித்தான்.
நீ எப்போ அந்த பொண்ணமீட்பண்ற சொல்லு..
நிதானமாக அவர்களை ஏறிட்டசத்யேந்திர் எனக்கு பொண்ணு பார்க்க நீங்க யாரு என்று கேட்டான்
நாங்கஉன்னபெத்தவங்க.. அது கூட உங்களுக்கு ஞாபகம் இருக்கா என்று நக்கலாக வினவினான்…
என்ன பொறுத்த வரை நீங்க நான் இந்த உலகுக்குவரக்காரணமா இருந்ததை தவிர வேறஒன்னும்உங்கள பத்தி நெனைக்கறது இல்லை. இந்த சொத்து எல்லாம் உனக்காக தானசம்பாதிக்கறோம்யாருக்காகஇவளோஓடறோம்.நீபிசினெஸ்ஸ்பாக்கணும்எங்கஆசை,ஆனாஐ.ஏ.எஸ்படிச்ச.எங்க கூட நீ பேசறதை நிறுத்தி பல வருஷம் ஆச்சு, அதுக்கும் நாங்க எதுவும் சொல்லல..உன் சந்தோஷத்துக்கு நாங்க எல்லாம் செஞ்சோம்ஆனா நீ எங்களை யாருனுகேட்கற..
இவளோ பணம் வைச்சு என்ன பண்ண அது வந்து எனக்கு சாப்பாடு ஊட்டுமாஇல்ல தாலாட்டு பாடுமா? இல்ல என்ன ஸ்கூல்ல கொண்டு விடுமா.. நா செய்யறகுறும்பாரசிக்குமா,நான்நல்லாபடிச்சா என்ன கொஞ்சுமா சேட்டை செஞ்சா என்ன திட்டுமா, நல்லது கேட்டது சொல்லி குடுத்து என்ன வளர்க்குமா எதுவும் செய்யாது..இதலாம் செய்ய வேண்டியவங்கசெய்யலை..தாத்தா, பாட்டி அத்தை குடும்பம் இருந்ததுனால நான் ஸ்பொய்லெட்சைல்டாஆகலை..
நான் உங்கபணத்துலபடிக்கலை..என் தாத்தாவோட தான் படிச்சேன்,என்கிட்ட இருந்து எதையும் எதிர்ப்பாகாதீங்க.. யுபோத்நத்திங்டுமீ .தாத்தா கிட்ட சொல்லியும் என்ன சம்மதிக்க வைக்க முடியாது..
இவளோ பேச்சு வார்த்தை நடந்தும் கூட அங்கே யாரும் குரல் உயர்த்தி பேசவில்லை..சத்யா உரிமை உள்ள இடத்தில் தான் உணர்வுகளை வெளிபடுத்தமுடியுமென்றவெற்றுப்பார்வை பார்த்தும் உணரிச்சியற்ற குரலில் பேசியும்பெற்றவர்களை அரள வைத்தான்..அவனைபெற்றவர்களோநாகரிகம் கருதி அமைதியாக பேசினர்..
என்னை எனக்காக மட்டும் லவ்பண்ற தேவதை இதோ என் பக்கத்துல தான் இருக்கா..இந்த ஜென்மத்துலஇவ தான் என் பொண்டாட்டி.
வா வர்ஷி என்று ஏறக்குறைய அவளை தரதரவென்று இழுத்து சென்றான் .
காரில் ஏறிய பிறகு மறுபடியும் மௌனம் சூழ்ந்தது.. வர்ஷி கண் மூடி அவன் தன்னை அவன் மனைவி என்று சொன்னதை நினைத்து மகிழும்போது , ஒரு கரம் அவள் இடையைவளைத்தது ..கண் திறந்து பார்த்தால் அவளது இந்தர் அவளை பார்த்து மயக்கும் புன்னகை சிந்தினான்..
அவளை அருகில் இழுத்து நெற்றியில் ஆரம்பித்து கண்,காது,மூக்கு,கன்னங்கள் என்று சுவைத்து வந்த இதழ்கள், அதன் இணையை அவளிடம் வந்ததும் அதனிடம் சரணடைய,இந்தரிடம் இருந்த வந்த ஆண்மையின்வாசத்திலையும் முதல் ஆணின் நெருக்கத்திலையும் வர்ஷி கிறங்கி ,மயங்கி ,உருகி கரைய.. சத்யா அவள் இதழின்சுவையில் மயங்கி மீண்டும் மீண்டும் அதை சுவைக்க , அவன் கைகள் அவளது சேலை மறைக்காதவெற்றிடையில் படர , இதழைபிரிக்காமல் அவளிடம் ஆழமாக புதைந்தான்.. நீண்ட நெடிய முத்தத்தில் அவள் உயிரும் அவன் உயிரும்ஒன்றாகியது..என்ன நான் ஜடம்னுநினைத்தயா,என்று சொல்லி மீண்டும் முத்தயுத்தத்தைதுடங்கியபொழுது,வர்ஷி வீடு வந்துருச்சு என்ற இந்தர் குரலில் விழிப்புக்கு வந்தவள் முகம் நாணத்தில்குங்குங்குமாகசிவந்துஇருந்தது..சுற்றுப்புறம் உணர்தவள் தான் கண்டது கனவு என்று உணர்ந்து சத்யாவை பார்த்தாள்..
என்ன கனவா? உன் வீடு இருக்கும் தெருவிற்குவந்தாச்சு இறங்கி பத்திரமாபோ..நான்சொன்னதுயெல்லாம் ஞாபகம் இருக்கட்டும் என்றான்..அவன்பேசியதில்கடுப்பானவள், நீ என் புருஷன்னுநல்லா ஞாபகம் இருக்கு, ஒரு பொண்ணு கிட்ட கல்யாணத்துக்கு எப்படி சம்மதம் சொல்லணும் கூட தெரியலை..மூஞ்சியஉர்னுஉறங்ககுட்டான் மாறி வைச்சிக்கிட்டு சொன்ன, சந்தோசமாசிரிச்சிகி்டுசொன்னா உன் கற்பு போய்டுமோ ஜடம் உணர்ச்சி இல்லாத ஜடம் .. உன் கூட என்ன குடும்பம் நடத்த போறேனோ? உன்ன காதலிக்க போறேன்னுதெரிஞ்சிருந்தா சைக்காலஜி படிச்சிருப்பேன்..ஒழுங்கா என் படிப்பு முடிஞ்சிடும்சொன்னா மாறி வந்து பொண்ணு கேளு என்று சொல்லி விட்டு காரில் இருந்தது இறங்கி சென்றுவிட்டாள்..
இந்த ஜென்மத்துலநீதாண்டி என் பெண்டாட்டி நீயே நினைத்தாலும் இனி அதை மாற்ற முடியாது என்று மனதில் நினைத்து நிம்மதியாக தன் வீடு நோக்கி காரில் பறந்தான்..
அவனுக்கு தெரியவில்லை இனி வரும் நாட்களில் வர்ஷியால் தன் நிம்மதி பறிபோகப்போவதை !!!