மழை-13
காலை ஒன்பது மணிக்கு உமாவின் வீடு பரபரப்பாக இருந்தது.. இன்னும் ஒரு மணி நேரத்தில் அவளை பெண் பார்க்க வருகிறார்கள் ..
காலையில் கண் விழித்து சிறிது நேரத்திலே வழக்கத்து மாறா பரபரப்பாக இருப்பதாக தோன்றியது உமாவுக்கு ..எப்பவும் காலை ஏழு மணி வரை இழுத்து போர்த்தித் தூங்கும் தங்கை,இன்று அன்னைக்கு உதவி செய்வதைக் கண்டு அவளுக்கு மயக்கமே வந்துவிட்டது.
உமா வீட்டில் அவள்,அவளது தங்கை ராதா பதினோராம் வகுப்பு மாணவி அம்மா வசந்தி இல்லத்தரசி, அப்பா ஜானகிராமன் சிறிய அளவில் டிபார்ட்மென்டல் ஸ்டோர் நடத்துகிறார்..
உமாவின் தந்தையும்,தாயும் பூரண சுதந்திரம் குடுத்து, பிள்ளைகள் இயல்பு மாறாமல்,அதே சமயம் பண்பாடு, ஒழுக்கம், மரியாதை எல்லாம் சொல்லி குடுத்து வளர்க்கின்றனர்.. உமாவும் அவள் தங்கையும் பெற்றோர் சொல்லுக்கு மறு சொல் பேசாதவர்கள்..அவர்களும் பெண்களின் விருப்பம் அறிந்து நடப்பவர்கள்..
பல குடும்பங்களில் பிள்ளைகளக்கு அதிக செல்லம்,சுதந்திரம் இல்லையென்றால் அதீத கட்டுப்பாடு இவை இரண்டும் பிள்ளைகள் தடம் மாற மூலக்காரணமாக அமைகிறது..
சிறு வயதிலிருந்து குழந்தைகளுக்கு மரியாதையான பேச்சுக்கள்,பழக்கங்கள் சொல்லி வளர்த்தால் தடம் மாற வாய்ப்புகள் குறைவு..
அம்மா இன்னிக்கி ஏதாவது விசேஷமா இல்லை யாரவது வராங்களா?
“என் எருமை , அச்சூ இல்லை அருமை தங்கை வேற நேரமே துயில் எழுந்து உனக்கு உதவி செய்யறா”,
உடனே அவள் தங்கை உமாவை முறைத்தாள்,
என்கிட்ட மட்டும் சொல்லவில்லை முகம் தூக்கினாள்..
உமாவின் பேச்சை சிரித்த அவளது அன்னை,
” நீ கேட்டதுக்கு அப்பா உனக்கு பதில் சொல்லுவார், அப்பறம் அப்பா உன்கிட்ட ஏதோ பேசணுமா, உனக்காக காத்துட்டு இருக்காரு” என்று அவள் கையில் இரு காபி கோப்பை குடுத்து அப்பாவும் நீயும் பேசிக்கிட்டே குடிங்க என்றார்..
அப்பா அப்படி என்ன பேசப் போகிறார் என்று சிந்தனையுடன் ஹாலுக்கு சென்றாள்,.
ஹால்சோபாவில் அவள் அப்பா செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்தார்..
அப்பா!!! என்று உமா அழைக்கவும்,செய்தித்தமடித்து வைத்துவிட்டு, தன் மகளை குட் மார்னிங் டா! என்று கூறி புன்னகை புரிந்தார்..
குட் மார்னிங் அப்பா,இந்தாங்க காபி என்று கோப்பையை நீட்டினாள் ..அதைங்கி கொண்டவர் இப்படி உட்க்காருமா என்றார், சரிப்பா என்று அவர் அருகில் அமர்ந்தாள்..
நான்சொல்றதை கவனமா கேளுமா..
“அப்பா எப்பவும் உன் விருப்பத்துக்கு தான் செய்வேன்யென்ற நம்பிக்கை உனக்கு இருக்குதாம்மா?”
எதுக்கு அப்பா இப்படியெல்லாம் கேட்க்கிறார் என்று மனதினுள் நினைத்தாலும் வெளியில் வாய் தன் போக்கில் நம்புறேன்ப்பா என்ற வார்த்தையை உதிர்த்தது …
இன்னிக்கி உன்ன பொண்ணு பார்க்க வரங்கம்மா..
என்றதும் அவள் மனம் அதிர்ந்தது, அருணின் முகம் ஒரு நொடி மின்னி மறைந்தது ..
அவங்க நேத்து தான் என்கிட்ட பேசினாங்க ,கொஞ்சம் பெரிய இடம் , அவங்க நேத்து பேசினப்ப ஒரு வகைலக்கு நமக்கு தூரத்து சொந்தமென்னு தெரிஞ்சது ..
உனக்கு பிடிச்சிருந்தா மட்டும் தான் மேற்கொண்டு பேசுவோம் சரியா என்றவுடன் தான் அவள் முகம் தெளிவடைந்தது …
அதற்குள் அங்கு வந்த அவள் அன்னை அவளது முகத்தி்ன கண்டாரோ,உமா தலையை தடவி ஒன்னும் குழப்பிக்காதே, உனக்கு சம்மதம் இருந்தா தான் இந்த சம்மந்தம் சரியா, இப்போ குழப்பிக்காமப் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு என்றார்…
உமாவுக்கும் தனிமை தேவைப்பட்டதால் தன் அறைக்கு சென்று படுக்கையில் விழுந்தாள்… “அவளின் மனம் முழுவதும் அருணின் எண்ணங்களே”..
அருணின் மீது தனக்கு இருப்பது ஈர்ப்பா இல்லை காதலா?,
பார்த்த இரண்டு நாளில் காதல் வருமா?.
” வினாடிகளில் வந்துவிடுவது காதல் “..
தன் வாழ்க்கை துணை இவன் / இவள் என்பதை உணர வினாடி போதும்,என்பது உமாவிற்கு தெரியவில்லை..
ஏன் என்னை பொண்ணு பார்க்க வருகிறார்கள் என்றதும்..
” ஏன் அருண் முகம் மனதில் தோன்றியது?”
நான் அவரை காதலிக்கிறேனா?
ஒரு வார்த்தை பேசாம அந்த ஆந்தை கண்ணை வைச்சு பார்த்தே என்ன புலம்பவைச்சுட்டானே..அவனும் என்ன லவ் பண்றானா??
ஒன்னும் புரியலை ஒரே குழப்பமா இருக்கு..
“ஏன்டா என்ன கொல்ற?”
உன்ன பாக்கற வரை மனசி எந்த வித சலனமும் இல்லாமல் தான் இருந்தேன் பக்கி ..
“அடேய் நீ கண்ணுல சிக்கு உன்ன கைமா பண்ணிடறேன் “..
“பொண்ணுபார்க்க வரட்டும் மாப்பிள்ளைப் பிடிக்கலைனு சொல்லிடலாம்” என முடிவெடுத்தபின் தான் உமாவால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது..
“அருண் என்னை காதலிக்கறானா இல்லையா எனத்தெரியாமல் வீட்டில் சொல்ல முடியாது”..
வரப்போற பையனை என்ன காரணம் சொல்லி வேண்டாமென்று சொல்வது எனக் யோசித்துக்கொண்டிருந்தாள்!!!
சத்யாவின் வீட்டில் வெளிய செல்ல தயாராகிக்கொண்டிருப்பவனுக்கு வர்ஷியின் நினைவுகள்!!!
அதுவும் அவள் காட்டும் காதலில் எப்பவும் போல் தலைக்குப்புற விழுந்தான் சத்யா !!!
நேற்று ரஞ்சன் சத்யாவை புனிதமில்லா தீர்த்ததுடன் இருக்குற மாடுத்த புகைப்படத்தை வர்ஷிக்கு அனுப்பிய ரஞ்சியை முறைத்துவிட்டு வர்ஷிக்கு பல முறைக்கால் செய்தும் அவள் எடுக்கவில்லை என்றதும் டென்ஷன் ஏறியது சத்யாவிற்கு, அவன் டென்ஷனை குறைக்க வர்ஷியே அவனுக்கு கால் செய்தாள்..
கால்லை அட்டன்ட் செய்தவன், இந்தர் என்று அவன் வருவின் குரலை கேட்ட நொடி பேச ஆரம்பித்துவிட்டான்..
” வருமா என்னாச்சுடா? ஏன் கால் அட்டென்ட் செய்யலை சொல்லுடா? நீ போன் எடுக்கலைனதும் நான் ரொம்ப டென்ஷனன் ஆகிட்டேன் “..
சத்யாவுக்கு இப்படியெல்லாம் கூட உருகும் குரலில் பேசத்தெரியுமான்னு, உமா கூட கனவுல டூயட் பாடிக்கொண்டிருந்த அருணும் சத்யாவும் “ஆ” என்று பார்த்தனர்..
“வர்ஷி ரஞ்சன் உனக்கனுப்பின்ன போடோசைப் பார்த்தாயா?”
“இந்தர் ஏன் இவ்வளவு டென்ஷன் , எனக்கு எந்த நேரத்திலும் நிதானம் இழக்காத இந்தர தான் பிடிக்கும்
எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் நீங்க நிதானம் இழக்கக் கூடாது ,”
அவனுக்கு தன்னாலே பெரிய கஷ்டம் வரப்போவதை அறியாமல் அவனுக்கு அட்வைஸ் கொண்டிருந்தாள்..
“சரி வருமா நீ சொன்னபடிக் கேட்கறேண்டா”
என்று கொஞ்சுபவனை கண்டு மற்ற இருவருக்கும் நெஞ்சு வலி வராத குறைதான்..
“இன்னிக்கி எங்க டிபார்ட்மெண்ட்க்கு ஹாஃப் டே தான் கிளாஸ், நீங்க கால் பண்ணினப்போ கறுப்பி கூட வந்ததால மொபைல சைலண்ட்ல போட்டுயிருந்தேன், சாப்பிட்டு இப்போ தான் செல்ல எடுத்தேன்,உங்க மிஸ்ட் காலும், என் அண்ணன் அனுப்பின போட்டோவும் இருந்தது…”
நீங்க எங்க இருக்கீங்க இப்போ?
எதுக்கு கேட்கறா,ஒரு வேளை ரஞ்சன் போட்டோவை நம்பிட்டாளா என மனதில் ஒரு நொடியில் ஆயிரம் சந்தேகம் வந்தாலும் ,
அவளிடம் ,”நாங்க எப்பவும் இருக்கற ஹோட்டல் ரூமில் தான் இருக்கோம், இன்னிக்கி நான் மதியம் லீவு” என்று கூறினான்..
“மொபைல ஸ்பீக்கர்ல் போடுங்க இந்தர்”
ஹ்ம்ம் சரிடா..
“ரஞ்சணண்ணா”!! என்று மிகவும் பாசமாக அழைத்தாள்.
அவள் அழைப்பே ரஞ்சன்குள் திகிலை உண்டு பண்ணியது ..
வெளிய “சொல்லும்மா”என்றான்..
“அண்ணா தீபி இன்னிக்கி உங்கே மேல ரொம்ப பாசமா இருக்கேன்னு என்கிட்ட சொன்னா, நீங்க எனக்கு அனுப்பின இந்தர் போடோசையும்,அண்ணா என்னமா அழகா போட்டோஸ் எடுத்து எனக்கு அனுப்பிருக்காரு பாருன்னு அவளுக்கு அனுப்பவா அண்ணா…”
“ஏன்மா?ஏன்? ஏன்?”
” தெரியாம உனக்கு அண்ணாவும்,இவனுக்கு போய் நண்பனாவும் பிறந்தேன்பாரு,என்ன சொல்லணும், உங்க ரெண்டு பேருக்கும் ஜெட் ஸ்பீட்ல கெமிஸ்ட்ரி மட்டும் ஆல் சப்ஜெக்ட் ஒர்கவுட் ஆகும்!!! நான் அவுட் ஆப் போர்ஷன் ,என்ன விட்டுங்க ,நீங்களாச்சு உங்க லவ் ஆச்சு ஆள விடுங்கடா” …
அவன் பேச்சை கேட்டு மற்ற மூவரும் சிரிக்க, நம்ப ஏ.சி.பி செம கடுப்ஸ் …
“இந்தர்”!!! சொல்லு வருமா..
“நீ குடிச்சியா!!! இல்லையானு எனக்கு தெரிய வேண்டாம் “…
“எப்படியிருந்தாலு என்னோட இந்தர்”..
“நான் உன்னை உனக்காக தான் காதலிக்கறேன்”..
தன் இணை எப்படியிருந்தாலும் அவர்கள் இயல்போடு ஏற்றுக்கொள்வது தான் உண்மையான காதல்!!!
“இப்போ நீங்க குடிச்சியிருந்தாலும், இது உங்க இயல்பு இல்லைனு எனக்கு தெரியும்..அதுனால நான் என்ன நினைக்கறேன்னு யோசிக்காம உங்க வேலைய நிம்மதியா பாருப்பா”..
“உங்க வருமா எப்பவும் இந்தர நம்புவா என்கிற நம்பிக்கையை எப்போதும் வைங்க”..
அவள் பேசப்பேச தன் மேல் இவ்வளவு நம்பிக்கையும்!!! காதலா!!! என்று எப்பவும் போல் இப்பவும் வியந்தான் !!!..
“இந்தர் அம்மா கூப்பிடறாங்க ..நான் அப்புறம் பேசறேன்பை”…
“லவ் யூ சத்தி” !!!
” இச் இச் இச் “
“பை அண்ணாஸ் “என்று செல்லை அனைத்துவிட்டாள்…
ரஞ்சனும் அருணும் வர்ஷி காதல் கிடைக்க சத்யா தவம் செய்துருக்க வேண்டும் என்று எண்ணினர்..
கடிக்கரத்தின் ஓசையில் நிகழுவுக்கு வந்தவன்..
இன்று வர்ஷியை வெளிய அழைத்து போக வேண்டும் என்று எண்ணிக்கொண்டு, அறையில் இருந்து வெளி வந்தான்..
உமாவீட்டில் அவளின் அம்மா வர்ஷிக்கு அழைத்து பெண்ண பார்க்கும் விஷயத்தை கூறி அவளை வரச்சொல்ல,அவளும் வருவதாக ஒப்புக்கொண்டாள்…
மணி பத்தை நெருங்க வாசலில் கார் சத்தம் கேட்டதும், தன் அறை ஜன்னனலில் இருந்து எட்டிப்பார்த்தவள் அதில் இருந்து இறங்கியவனைப் பார்த்து உறைந்து நின்றாள்!!!
மழை வரும் …