மிதமான வேகத்தில் காரை செலுத்திக்கொண்டிருந்தான் சத்யா .. கார் எங்கும் வர்ஷியின் சுகந்த நறுமணம் வீசியது,அவளது வாசத்தை ஆழ்ந்து நுகர்ந்து ஒரு மோனநிலையில் சத்யா லயித்திருந்தான்..
அவன் இதழில் வசீகர புன்னகை பூத்திருந்தது..
இந்த நொடி சத்யாவின் எண்ணமயாவிலும் வர்ஷியே வியாபித்து இருந்தாள்… நான் எப்படி அவளிடம் திருமண பேச்சு எடுத்தேன்.. என் பெற்றோரிடம் இந்த ஜென்மத்தில் வர்ஷி தான் என் மனைவி என்று சொன்னது வீம்புக்காகவா இல்லை அவள் மேல் உள்ள அன்பாலா??
///எங்களுக்கும் அதே சந்தேகம் தான்///
வர்ஷி எதுக்குடி என் மேல இவளோ காதல கொட்டற, நான் எப்பவும் உன்கிட்ட கோவமா தான் இருந்திருக்கேன்..சாதாரணமா கூட பேசினது இல்லையடா என்று மனதினுள் புலம்பி தள்ளினான்..
யார் மனதில் என்ன இருக்குமென்று யாரறிவர்..சத்யா வெளிய விரைப்பு வீரசாமியிருந்தாலும் , அவன் மனதினுள் தன்னிடம் மட்டும் அன்பை பங்கு போடாமல் செலுத்த ஆள் இல்லை என்று ஏங்குபவன் ..
அவன் அத்தை அவனை வளர்த்திருந்தாலும் அவர் பாசத்தை பங்கு போட அவருக்கு குடும்பம் இருந்தது..
பாட்டி போன பிறகு தாத்தாவிடம் ஓட்டுதல் அதிகம் என்றாலும் அதில் ஒரு விலகல் தன்மை இருக்கும்..இப்பொழுது வர்ஷி அன்பு செலுத்தும்போது அவனால் அதை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை..
அவனுக்கு வர்ஷி வேண்டும்..அவளது அன்பு பாசம் நேசம் தனக்கே தனக்கு மட்டும் வேண்டும்..
அவள்காதல் மழையில் தான் நனைய வேண்டும் என்ற உணர்வு அவனுள் சமீபகாலமாக எழுவதை அவனால் தடுக்க முடியவில்லை என்பதை விட தடுக்க நினைக்கவில்லை..
அவள் பிறந்த உடன் பிங்க் வண்ணத்தில் குட்டி கை கால்களுடன்,தலை கொள்ளா முடியுடனும், சிப்பி உதடுகளுமா இருந்த வர்ஷியை கையில் ஏந்தியது முதல், இன்று அவளிடம் கல்யாணத்துக்கு சொன்ன நொடி வரை ஒவ்வொன்றாக நினைத்தான்..
வர்ஷியை பற்றி நினைக்க நினைக்க அவன் ஆண்மை சிலிர்த்தது ..உடல் சூடேறியது ..
காரை ஆள் இல்லாத சாலையில் ஓரமாக நிறுத்திவிட்டான்..எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் அவளை பற்றி மட்டும் சிந்தனை செய்தான்..வர்ஷி படுத்துறடி, ஐயோ சாரீல என்ன அழகு கொல்றடி..அவனது ஒவ்வொரு அணுவும் வர்ஷி வேண்டுமென்று துடித்தது…
உன்னை அப்படியே நெஞ்சுக்குள் பொத்திவைச்ச என் உடல் சூடைஉனக்கு குடுக்கணும் ..உன் உதடை பிச்சி எடுக்கணும்!!!
என்னை விழுங்கற உன் கண்ண நான் முழுங்கணும்..உன்னை பாகம் பாகமா கடிச்சி திங்கணும் , உன்னை அப்படியே சுருட்டி முழுசா விழுங்கிடணும் !!!
நீ எனக்கே எனக்கு மட்டும் தாண்டி!!!
“காதல் என்று ஒன்றை அறியாமல்,காதல் உணர்வு அவனுள் பொங்கி பிரவாகம் எடுப்பதையும் தடுக்காமல் காதலின் வேகத்தில் ஆதிவாசியா மாறிவிட்டான் கலெக்டர் சத்யேந்தர்..”
அவன் மனதுக்கு ஏற்றவாறு காரில்
ஒரு காதல் வந்துச்சோ…
ஒரு காதல் வந்துச்சோ…
ஒரு காதல் வந்துச்சோ.
ஒரு காதல் வந்துச்சோ…
என்னை நானே மெல்ல கொஞ்சி கொள்ளவே…
முத்தம் தந்து இரு கன்னம் கிள்ளவே…
அச்சோ அச்சோ என்று ரொம்ப தோணுதே,
அச்சோ அச்சோ என்ன ஆசை தோணுதே …
எண்ணத்தில் சடுகுடுகுடுவென,
நெஞ்சத்தில் படபடபடவென,
ஆசை வந்து கொட்டிச்சோ..
பாடல் ஒலித்தது பாடலை ரசித்துக்கொண்டே வீடை நோக்கி காரை செலுத்தியவன் மனம் முழுவதும் மலர்ந்து மணம் வீசியது வர்ஷியின் வாசம் மட்டுமே…
இதமான மனநிலையில் வீடு வந்தான் , போர்டிகோவில் காரை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் வந்தவன், தாத்தா சோபாவில் அமர்ந்திருப்பதை பார்த்து அவரிடம் சென்று அமர்ந்தான்..
“என்னப்பா கல்லூரி விழா நல்ல படியா முடிஞ்சிதா”,என்று கேட்டவர் பேரன் முகத்தை கூர்ந்து பார்த்தார்..அதில் எப்போதும் இருக்கும் இறுக்கம் தளர்ந்து, ஒரு வித இளக்கம் வந்துருந்தது…
“நல்லபடியா முடிஞ்சிது தாத்தா” என்று அவன் கூறிக்கொண்டிருக்கும்போதே கங்காமா இருவருக்கும் காபி குடுத்து விட்டு சென்றார்…
தாத்தா நான் உங்க கூட கொஞ்சம் பேசணும் ..
சொல்லுப்பா இப்போ நான் பிரீ தான்..
“தாத்தா நான் வர்ஷியிடம் அவளை கல்யாணம் செஞ்சுக்க சம்மதம் சொல்லிவிட்டேன்” என்று ஆரம்பித்து இன்று அவன் பெற்றோர்களிடம் நடந்த பேச்சு வார்த்தை அதில் அவருக்கு தெரியவேண்டியதை மட்டும் கூறி முடித்தான்…
பேரனை இறுக்கி தழுவி “ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா,நீங்க இரண்டு பேரும் ஒத்துமையா மகிழ்ச்சியா நீண்ட காலம் வாழணும்”என்று ஆசி கூறியவரின் பாதம் பணிந்தான் சத்யா..
“நீ ஒன்னும் கவலை படாத கார்த்திக் லஷ்மி கிட்ட நான் பேசிக்கறேன்”..நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன்..நீ ரெஸ்ட் எடு.
“சரி தாத்தா” என்று கூறி அறைக்கு வந்தவன் உடை கூட மாற்றாமல் கட்டிலில் விழுந்து வர்ஷி பற்றி கனவுகளில் மூழ்கினான்..
வர்ஷி அம்மா அம்மா என்று கத்திகொண்டே வீட்டிற்குள் வந்தாள்..
அம்மாக்கு என்ன வைச்சுருக்க?
“ஹாப்பி நியூஸ் வைச்சுருக்கேன் நீ ஏதாவது ஒரு ஸ்வீட் செய்.. “
“நீ ரொம்ப ஹாப்பியா இருந்த ஒன்னு உன் விருப்ப படி சொந்த தொழில் துடங்கனும் இல்லை சத்யா உன்ன கல்யாணம் பண்ண சம்மதிக்ககிணும், தொழில் துடங்க இன்னும் நாள் இருக்கு..அப்டினா சத்யா ஓகே சொல்லிட்டானா”என்று கேட்டு தான் அவளுக்கு அன்னை என்று நிரூபித்தார் வள்ளிமயில்..
“ஆமாம் அம்மா என் இந்தர் என்னை கல்யாணம் செய்ய சம்மதம் சொல்லிட்டார்..மீ சோ ஹாப்பி மம்மி” என்று அம்மா கன்னத்தில் இச்சு குடுத்து அவள் அறைக்குள் சென்றுவிட்டாள்.. வர்ஷியின் அப்பாவும் தம்பியும் செய்தி கேட்டு வர்ஷிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்…
வர்ஷிக்கு அவள் சொந்தமாக தொழில் துடங்கி வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்பது லட்சியம் !!!
அவளது தோழர்கள் நந்துக்கும் தேவுக்கும் பரம்பரை தொழில்கள் உள்ளதால்,தோழிகள் மூவரும் சேர்ந்து தொழில் துவங்க திட்டம் ..இவர்களது லட்சியம் நினறைவேறுமா பார்க்கலாம் ?..
இரவு தன் அறையில் சத்யா மொபைலை வெறித்துக்கொண்டிருந்தான்..வர்ஷியிடம் இருந்து மெசேஜ் வரவில்லை..
“என்ன ஆச்சு என் வருக்கு” ///பார்ரா கலெக்டர் செல்ல பெயர் வைக்கற அளவு முன்னேறிட்டாங்க///
இன்னிக்கி கல்லூரியில் வேலை என் கூட வெளிய வந்தது செல்லம் டையர்ட் ஆகி இருப்பா, நாளைக்கு மெசேஜ் பண்ணுவா இப்போ நாமும் தூங்குவோம் என்று படுத்துவிட்டான்..
சூரியன் தன் கதிர்வீச்சை ஆரம்பிக்க, பறவைகளின் கீச் கீச் ஒலியும், வெளியில் பால் மற்றும் பேப்பர் போடும் ஆட்களின் சைக்கிள் மணிஓசையுடன் மறுநாள் பொழுது அழகாக விடிந்தது.. விடியில்
யாருக்கு என்ன வைத்துருக்கறது என்று அறிபவர் யாரோ?
எல்லோரும் புது நாளை நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையையுடன் தான் துடங்குகிறோம்…அனைவருக்கும் நினைத்தது நடப்பதில்லை..பலருக்கு மகிழ்ச்சையான நாள், சிலருக்கு துன்பமான நாளாக மாறிவிடுகிறது…எது நடந்தாலும் இன்னொரு புதுநாளை நாம் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவதில் தான் வாழ்க்கை சுவாரசியமாக செல்கிறது ..
இந்தநாள் சத்யம் இன்பமா? துன்பமா? இரண்டும் கலந்ததா?