Advertisement

அத்தியாயம் 1

 

        

             இதமான காலை வேளையில் மதுரையின் புறநகர் பகுதியில் உள்ள ஜெயராம் மேல்நிலை பள்ளி பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது…பள்ளி பருவம் மிகவும் இனிமையானது….அதை சமயத்தில் சிறிது சோர்வானதும் கூட…அதற்கு ஏற்றார் போல மாணவர்களும் உற்சாகமாகவும்,சோர்வாகவும் பள்ளியின் உள்சென்று கொண்டு இருந்தார்கள்…அவர்களுடன் நம் கதையின் மைந்தர்களான சுருதி சுதாகர் மற்றும்  கதிரவனும் சென்றுகொண்டிருந்தார்கள்…

 

            “சுதா கதிர் நீங்க ரெண்டு பெரும் உங்க வகுப்புக்கு போங்க…நான் போய் உங்க பிரின்சிபால் பார்த்து பேசிட்டு வரேன்…”

            “சுருதி எங்க kk சார் ரொம்ப நல்லவர் தெரியுமா…பசங்கள கூட திட்டவே மாட்டார்…கோவம்னா எந்த கடைல விற்குதுனு கேட்பார்னா பார்த்துக்கோ….”

            “ஏன் டா நிஜமாவா…ஆனால் நீங்க சொல்ற விதமே சரிலேயே…சரி விடு நான் போய் பார்த்துட்டு வரேன்… “என்று கூறி விட்டு ஆபீஸ் ரூமை நோக்கி சென்றாள்….

             பின்னிருந்து சுதாகரும் கதிரும் “ஜெய் மண்டை வெட்டு மாணிக்கம்”  என்று கத்துவது கேட்டது….

            ஆபீஸ் ரூமின் முன் நின்று கொண்டு”என்னடா இது உள்ள போறதுக்கு முன்னாடியே மனசு பக்குபக்குனு அடிச்சுக்குது..சரி விடு சுருதி….எவ்வளவோ பார்த்துட்டோம்..இதை பாக்க மாட்டோமா…ஜெய் மண்டை வெட்டு மாணிக்கம்….”என்று தன்னையே தேற்றிக்கொண்டு அறை கதவை தட்டினாள்…

            “எஸ் கம் இன் “என்று ஒரு குரல் கேட்டது…கதவை திறந்து கொண்டு சுருதி உள் சென்றாள்…

 

            அங்கு முப்பதுகளின் பிற்பாதியில் ..ஆறடி உயரத்தில் சிக்கென்ற உடல்வாகுடன் அம்சமாக ஒருவர் நின்று கொண்டு இருந்தார்…

           “அவரை பார்த்தவுடன் பேக்ரௌண்டில் “ஏய் தில் ஹை முஷ்கில்..”பட தீம் மியூசிக் தன்னை சுற்றி ஒலிப்பது போல சுருதிக்கு ஒரு  பிரமை…

            திடிரென்று அவள் மனசாட்சி ஆஜராகி “இது மட்டும் சுதாகர்கு தெரியணும் ட்ரீம்ல கூட உனக்கு ஹிந்தி ம்யூசிக்கா…நீ ஒரு anti தமிழன்னு ஒட்டியே கொன்றுவான்…”

              சட்டென்று சிரித்து விட்டாள்….அதன் பிறகு தான் புரிந்தது ADHM  (ஏய் தில் ஹை முஷ்கில்) அவளையே முறைத்து கொண்டு இருப்பது…

                “என்ன நின்னுகிட்டேயே கனவா…என்ன வேணும் உங்களுக்கு சொல்லுங்க…இல்லாட்டி கிளம்புங்க…டோன்ட் வேஸ்ட் மை டைம்…”

               “சாரி சார்..நான் சுருதி  ஸ்ரீனிவாசன் சார் அனுப்புனாங்க…”

               “ஓ அதுஎல்லாம் இருக்கட்டும்…உங்க வாட்ச் ஸ்ட்ராப் சரியாய் மாட்டலை…கதவை ஒழுங்கா கிளோஸ் பண்ணாம வந்துட்டீங்க…அப்புறம் உங்க வலது கை ஓரத்துல மண்ணோ  எதுவோ ஒட்டி இருக்கு…ரெஸ்ட் ரூம் இந்த சைடு இருக்கு போய் வாஷ் பண்ணிட்டு வாங்க..பேசுவோம்..”

 

                “சாரி…நீங்க என்ன சொன்னிங்கனு புரியல…”

                “நீங்க கேட்டது எல்லாம் சரி தான்..ஐ ஹவ் எ லிட்டில் பிட் ஆப் OCD ..ப்ளீஸ் டூ இட்..இல்லாட்டி உங்க கூட சரியாய் கம்யூனிகேட் பண்ண முடியாது…”

வேறு வழியிலாமல் அவன் சொன்னதை எல்லாம் முனகலுடன் செய்து விட்டு வந்து அமர்ந்தாள்….

                “இப்ப சொல்லுங்க சுருதி…”

                 “OCD னா என்ன சார்…”

                  “ஆர் யு ஜோக்கிங்….OCD னா என்னனு தெரியாத…ரெடிகுளோஸ்…இது கூட தெரியாதவங்காள தான் காம்பெடிஷன்க்கு பிள்ளைகளை ட்ரைன் பண்ண அனுப்பி வைச்சு இருக்காரா…உனக்கு எப்படி அவரை தெரியும்..”

                 “நூலகத்துக்கு போகும் போது அங்கிள் அங்கே பழக்கம் சார்…”

                  “நீ நீலகிரி தானே...நீ எப்படி இங்கே இருக்குற நூலகத்துக்கு வர முடியும்…”

                  “இங்கே எங்க அத்தை வீடு இருக்கு சார்..இங்கே அடிக்கடி வருவேன்..அப்டி பழக்கம் சார்..”

                  “சரி நீங்க போய் வெளியே வெயிட் பண்ணுங்க..நா மனஜ்மென்ட்ல பேசிட்டு உங்களை கூப்பிடறேன்”

              அவள் வெளியே சென்றவுடன் ஸ்ரீனிவாசன்க்கு அழைப்பு விடுத்தான்…”ஹலோ..ஸ்ரீனிவாசன்..ரொம்ப சின்ன பொண்ண இருக்கு..எப்படி இந்த பொண்ணு ட்ரைன் பண்ண முடியும்…gk  சுத்தமா இல்லை..எனக்கு என்னமோ இது சரியாய் வருமுன்னு தோணல…”என்று பொரிந்து தள்ளிவிட்டான்…அந்த பக்கம் என்ன கூறினார்களோ அமைதியாகி விட்டான்..”சரி…அந்த பெண்னே வேலைக்கு சேர்த்து கொளகிறேன்..நன்றி ஸ்ரீனிவாசன்.. “

             

              நன்றி கூறி விட்டு வெளியே வந்து அமர்ந்து இருந்தாள்..சிறிது நேரத்தில் அந்த இடம் பரபரப்பாக மாறியது..15 வயது மதிக்கத்தக்க மாணவன் அடிபட்டு ரத்தத்துடன் அழுதபடி வந்தான்…அவனுடன் ஒரு ஆசிரியரும் அதே வயதொத்த இன்னொரு மாணவனும் வந்தார்கள்…

           இன்னொருவன் தான் அவனை காயப்படுத்திருக்க வேண்டும்…ஆனால் அவன் முகத்தில் சிறிது பயமோ,பதற்றமோ எதுவுமே இல்லை..மாறாக என்னவென்று அறிந்திரா முடியா ஒரு பாவனை இருந்தது…

             வேகமாக உள்ளிருந்து வந்த ADHM அடிபட்டு இருந்த மாணவனை முதலுதவி செய்ய சொல்லி ஆசிரியருடன் அனுப்பி விட்டு அருகில் நின்ற காயப்படுத்திய மாணவனை நோக்கி சென்றான்…

             “அர்ஜுன் இதான் உனக்கு லாஸ்ட் வார்னிங்..இனிமே உன்மேல ஏதாவது கம்பளைண்ட் வந்தா உன்னை பள்ளியை விட்டு அனுப்பிருவேன்…உங்க தாத்தா முகத்துக்காக தான் இதல்லாம் பொறுத்துட்டு இருக்கேன்…இல்லாட்டி வேற மாறி ஆயிரும் பார்த்துக்கோ…நாளைக்கு வரும் போது உங்க தாத்தாவை கூப்டுட்டு வரணும்..கெட் லாஸ்ட்…idiot”

               அர்ஜுன் ஒன்றுமே கூறாமல் சென்று விட்டான்…

                “அப்பனே மாறி தானே பிள்ளை இருக்கும்…ச்சை…ரெடிகுளோஸ்…”என்று புலம்பி விட்டு திரும்பி பார்த்த போது தான் சுருதி தன்னையே பார்த்தவாறு நிற்பது தெரிந்தது…”உள்ள வாங்க சுருதி..”என்று கூறிவிட்டு சென்றான்..

        சுருதிக்கு ADHM அர்ஜுனை பார்த்து அப்டி கூறியது சிறிது நெருடலாக பட்டது…பாவம் என்று நினைத்துக்கொண்டாள்…

         ஏக் மினிட்..ஏக் மினிட்…இந்த ஆள் பேர் என்ன…nama வேற லூசு மாறி ADHM னு நினைச்சுட்டு  தெரியுறோம்…முதல் உள்ள போய் அந்த ஆள் பேரே நோட் பண்றோம்…என்று நினைத்து கொண்டு உள் சென்று அமர்ந்தாள்…

           பெயர் பலகையில் அவன் பெயர் பார்த்தாள்”கார்த்திகேயன் M.A .,M பில்.,”

    ஓ சோ kk …

            சுருதி உங்கள எதுக்கு இங்க அப்பாய்ண்ட் பண்ணி இருக்கோம்னா ..இன்னும் நான்கு மாதத்துல இங்க ஒரு காம்பெடிஷன் நடக்க போது…..ஜெயராம் டிரஸ்ட் கீழ் தமிழ்நாட்டில் இயக்கும் அனைத்து பள்ளிகளும் இணைந்து 13  முதல் 16  வயதிலான மாணவர்களுக்கான போட்டி ஆகும்…ஒவ்வொரு பள்ளியிலிருந்து 4  மாணவர்கள் தேர்தெடுக்கப்பட்டு போட்டியில் கலந்து கொள்வர்..அந்த பொறுப்பு உங்களுடையது …4 பேரை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்…அதற்காக உங்களை 8 முதல் 10 வகுப்பிற்க்கான ஆங்கில ஆசிரியர்களாக உங்களே நியமிக்கின்றேன்..இன்றில் இருந்து நீங்க ஜொய்ண்ட் பண்ணிக்கோங்க…பிரஸ்ட் கிளாஸ் உங்களுக்கு 8 ம் வகுப்பு அ பிரிவு…”

 

       “சார்…பட் எப்படி 8 டு 10 வரை கிளாஸ் எடுக்க முடியும்…நிறைய கிளாஸ் இருக்குமே சார்…”

        “முடியாத ஆனால் உங்களை பத்தி ஸ்ரீனிவாசன் சார் ஆஹா ஒஹோஒனு சொன்னாரே…சும்மா சொல்லி இருப்பாரோ…”

        “நான் எடுக்கிறேன் சார்…8 A எப்படி போனும் சார்…”

         “குட்…பியூன் உங்களை கூப்டு போவாரு..போங்க..ஆல் தி பெஸ்ட்..”

தங்க யு சார் “என்று விடைபெற்று வெளியே வந்தாள்…

 

        “ஆள் அம்சமா இருக்காரேன்னு பார்த்த ரொம்ப ஓவர் அ பன்றான்…சேவிங்பண்ண கொரங்கு…ஒழுங்கா பேச தெரியாத மொத..வா போ னு சொல்றான் கொஞ்ச நேரத்துலயே வாங்க போங்க சொல்றான்…முடியல..OCD னா என்னனு கேட்டது ஒரு குத்தமா முருகா..அதுக்கு போய் இந்த திட்டு திட்டுறான்..ஆனால் லாஸ்ட் வரை OCD னா என்னனே சொல்லலையே..சரி விடு சுருதி அது ஏதாவது போலீஸ் குரூப்பா இருக்கும்..ஐயோ  மொத நாளே இப்டி புலம்ப வைச்சுட்டானே…”என்று புலம்பி கொன்டே பியூனுடன் 8 A வகுப்பிற்கு சென்றாள்..”

    

 

சுதாகர் வகுப்பிற்கு வெளியே நின்று கொண்டு இருந்தான்…அவன் அருகில் ஒரு ஆசிரியர் பயங்கர கோபத்துடன் அவனை ஏதோ திட்டி கொண்டியிருந்தார்…

 “ரைட்டு பயப்பிள்ளை ஏதோ கிருத்துவமான கேள்வி யே கேட்டு விட்டான் போலயே….”

 

Advertisement