Advertisement

அத்தியாயம் 9 :

        வாழ்வு என்பதும் ஒரு விதத்தில் கலவை சாதம் போல தான்…மகிழ்ச்சி, சோகம்,கோவம் ,ஆற்றாமை , என்று பலவித கலவை பொருட்கள் இருக்கும்…

          சிலர் முழுவதையும் முழு மனதாக ஏற்றுக்கொள்கின்றனர்…சிலர் தங்களுக்கு பிடிக்காத கலவை பொருள் வரும் போது சாப்பாட்டையே வேண்டாம் என்று விட்டு செல்கின்றனர்…அதே போல தான் வெண்ணிலாவும் தனக்கு பிடிக்காதது நடக்கும் போது தன்  வாழ்வை விட்டு செல்ல முடிவெடுத்தாள்…

           சுருதி,சுதாகர்,வெண்ணிலா,கதிர் நால்வரும் மிகவும் சந்தோசமாக ஆதித்யா தொலைக்காட்சியில் வடிவேல் நகைச்சுவை பார்த்து விழுந்து புரண்டு சிரித்துக்கொண்டிருந்தனர் ….ஆனால் இவர்களுக்கு சற்றும் சம்மந்தமில்லாமல் அர்ஜுன் அந்த அறையின் ஓரத்தில் உட்கார்ந்து தீவிரமாக எழுதிக்கொண்டிருந்தான்…இடையிடையில் கொலைவெறியுடன் கூடிய ஒரு பார்வை வேறு இவர்களை நோக்கி வீசிக்கொண்டிருந்தான்…

           அதை கவனிக்க வேண்டியவர்களோ கண்டுகொள்ளாமல் சிரிப்பதில் மும்மரமாக இருந்தனர்…

           அர்ஜுன்”உங்களுக்குலாம் மனசாட்சியே இல்லையா…இங்கே ஒருத்தன் போட்டிக்கு ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருக்கானே…அவனுக்கு ஹெல்ப் பண்ணுவோம்…அது கூட வேணாம்…என்னை டிஸ்டர்ப் பண்ணம்மாவாச்சும் இருக்கணும்னு உங்களுக்குலாம் தோணவே இல்லையா…வெண்ணிலா மா நீ கூட இவங்க கூட சேர்ந்துட்டு இப்டி அழிச்சாட்டியம் பண்றியே மா…”

        வெண்ணிலா”நான் என்ன அண்ணா உங்களுக்கு ஹெல்ப் பண்ணமுடியும்…சிறுகதை போட்டிக்கு நீங்க தயார் ஆகிட்டுஇருக்கீங்க…எங்களுக்கு எல்லாம் முடிஞ்சுருச்சு இப்ப உங்க டர்ன் அண்ணா…சும்மா நாங்க சிரிக்குறோம்னு காண்டு ஆகாம ஒழுங்கா உக்காந்து சுருதி மிஸ் சொன்ன தலைப்புக்கு கதை எழுதுறதை பாருங்க அண்ணா…”

    கதிர்&சுதா”கிளிக்கு ரெக்கை முளைச்சுருச்சு…பறந்து போயிருச்சு…என்னடா அர்ஜுன்…”என்று அர்ஜுனை வாரிக்கொண்டிருந்தனர்…

 வெண்ணிலா”மன்னிச்சுண்ணா…டேய் சும்மா இருக்க முடியாதா…அஜூ அண்ணா நாளைக்கு ஒழுங்கா பண்ணா தான் நம்ம ஸ்கூல் ஜெயிக்க முடியும்…அதுனால அடங்குங்க டா…”

          அனைத்தையும் பார்த்து கொண்டிருந்த சுருதி சிரித்து விட்டு தொலைக்காட்சியை அணைத்து விட்டு அர்ஜூன்க்கு ஹைபை கொடுத்தாள்…

     சுதா”சுருதி உன்னை நம்பவே முடியாது துரோகி…”

   சுருதி”டேய் எனக்கு இந்த போட்டியில ஜெயிக்கிறது ரொம்ப முக்கியம்…அதே விட அர்ஜூன்க்கு ரொம்ப ரொம்ப முக்கியம்…அதனால இன்னைக்கு  ஒரு நாள் மட்டும் அவனை வெறுப்பேத்தாம இருங்க டா…செல்ல குட்டி யு கேர்ரி ஆன்…அர்ஜுன்…”

    அனைவரும் அர்ஜுனை மட்டும் தனியாக விட்டுவிட்டு மாடிக்கு சென்றனர்…சிறிது மணித்துளியில் திரும்பி வந்த வெண்ணிலா”அண்ணா மா இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான்…நாளைக்கு போட்டியில நல்ல பண்ணிட்டிங்கனு வச்சுக்கோங்க…உங்கள கிண்டல் பண்ணி சிரிச்சவங்களாம் இனிமே மதிப்பாங்க அண்ணா…நம்ம ப்ரின்சிபாலையும் சேர்த்து தான்…”

     அர்ஜுன் அவள் சொன்னது அனைத்தையும் சிரிப்புடன் கேட்டு கொண்டிருந்தான்…

 “சரிடா மா…நீ போ…அண்ணா பார்த்துகிறேன்….”

  வெண்ணிலா எப்படி இருந்த பெண் எப்படி மாறிவிட்டாள்…எப்பொழுதும் யார்கூடயும் பேசாமல் அமைதியாக இருப்பவள்…அவனுக்கு தெரிந்து அவளுக்கு தோழிகள் கூட இருந்தாக ஞாபகம் இல்லை மூன்று மாதத்திற்கு முன் வரை…ஆனால் இப்பொழுது பள்ளியில் பாதிக்கும் மேல் இவளது நண்பர்கள் தான்…அதுவும் இப்பொழுது இந்த சுதாகர் கதிருடன் சேர்ந்துகொண்டு இவள் செய்யும் அழிச்சாட்டியங்கள் கொஞ்சமா நஞ்சமா…என்று தன் மனதுக்குள்ளே நினைத்து கொண்டான்…

      தான் மட்டும் எப்படி இருந்தோமாம்…யாருடனும் பேசாமல் யாரையும் மதிக்காமல் இருந்தோம்…

இப்பொழுது அப்டியா…வெண்ணிலாவின் மாற்றத்துக்கு காரணமான நிகழ்வு அவனுக்கு ஞாபகம் வந்தது…

மூன்று மாதத்திற்கு முன்…

     வேகமாக சென்ற சுருதி சிறிய ஜன்னல் வழியாக பார்த்தது…வெண்ணிலா தன் இடக்கையை நீட்டி அதில் அருகில் ஒரு பிளேடை வைத்திருந்ததும் அவளுக்கு முன் ஒரு கைபேசியும் தான்…

       நிலைமையின் தீவிரம் புரியவே அவளுக்கு சில நொடிகள் தேவைப்பட்டது…வெண்ணிலா வெண்ணிலா என்று எவ்வளவு கத்தியும் வெண்ணிலா கண்டுகொண்டதாக தெரியவில்லை…

சுற்றி முற்றி பார்த்த சுருதியின் பார்வை வட்டத்தில் சிக்கியது அருகில் கிடந்த ஒரு செங்கல் தான்…அதை இரண்டாக உடைத்து ஜன்னலின் வழியே வெண்ணிலாவை நோக்கி வீசினாள்…குறி தப்பி அவளின் முன் இருந்த கைபேசியில் பட்டு கைபேசி கீழே விழுந்து சிதறியது…

       அதன் பிறகே வெண்ணிலா சற்று பயமடைந்து  சுற்றும் முற்றும் பார்த்தாள்…ஜன்னலின் வழியே சுருதி கதவை திறக்குமாறு ஆணையிட்டாள்…

       அழுகை மற்றும் பயம் கலந்த கலவையுடன் கதவை திறந்த வெண்ணிலா முன்னாடி இருந்த சுருதியை இறுக அணைத்து அழுக ஆரம்பித்திருந்தாள்…பயத்தில் அவளது உடல் மழையில் நனைந்த கோழி குஞ்சை போல் நடுங்கி கொண்டிருந்தது…

      இது  அழுக விட்டு வேடிக்கை  பார்க்கும் நேரமில்லை என்றுணர்ந்த சுருதி அணைப்பிலிருந்து  வலுக்கட்டாயமாக அவளை பிரித்தெடுத்து வெண்ணிலாவின் இடது கையை பார்த்தாள்…பார்த்தவள் அதிர்ந்தாள்…

        அதில் ஆங்கில எழுத்துக்களான “MO “என்று பிளேடால் கிரிச்சு எழுதப்பட்டிருந்தது…அதில் இருந்து ரத்தம் சிறு சிறு துளிகளாக கீழே விழுந்துக்கொண்டிருந்தது…

       “ஏய்…வெண்ணிலா என்ன இது…ஏன் இப்டி பண்ற சொல்லு மா…ஏதாவது பிரச்சனையா…மொத அந்த போன்ல யாரு கூட பேசிட்டு இருந்த…”என்று கேட்டாள் சுருதி…

     வெண்ணிலாவோ அவளுக்கு பதில் சொல்லாமல் உடல் குலுங்க வாயை முடி  அழுதுகொண்டிருந்தாள்…

        இதை பார்த்த சுருதிக்கும் கண்கள் கலங்க ஆரம்பித்திருந்தது…இது மாதிரி எல்லாம் அவள் வாழ்வில் இது வரை பார்த்ததே  இல்லை…ஒரே பெண் என்பதால் பெற்றோர்கள் கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொண்டனர்…சொல்ல போனால் அவளை இது வரை எந்த தீமைகளும் நெருங்கவில்லை…

ஆனால் இவ்வளவு சிறுவயதில் இவளுக்கு என்ன பிரச்னை இருக்கும் என்று தான் சுருதி யோசித்து கொண்டிருந்தாள்… விதவிதமாக கேட்ட சுருதிக்கு  வெண்ணிலா பதில் சொல்வதாக தெரியவில்லை… அதற்குள் அவள் கையில் வழிந்த ரத்தத்தை ஈர துணி கொண்டு துடைத்து வெண்ணிலாவின் வீட்டிலிருந்த முதல் உதவி பெட்டியை எடுத்து மருந்து போட்டு…ரத்தம் நிற்பதற்காக கட்டு போட்டிருந்தாள்…

       இவளிடம் அன்பாக கேட்டால் வேலைக்காது என்று நினைத்த சுருதி அழுதுக்கொண்டிருந்த வெண்ணிலாவின் கன்னத்தில் ஓங்கி அடித்திருந்தாள்…

  அடித்த பின்பு தான் அழுகையை நிப்பாட்டிய வெண்ணிலா சுருதியை பார்த்தாள்…

     “ நானும் ரொம்ப நேரமா கேட்டுட்டு இருக்கேன்  பதில் சொல்லாம அழுதுட்டே இருக்க…யாருகூட பேசிட்டு இருந்த போன்ல…ஏன் கைல இப்டி கிழிச்சு வைச்சுருக்க…இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு நா வந்து இருந்தா உன் உயிருக்கே ஆபத்தாயிருக்கும்…ஏன் இப்டிலாம் பண்ணிட்டு இருக்க சொல்லு…”

      “momo”

      “ஏய் என்ன சொன்ன திருப்பி சொல்லு…”

       “ஆமாம் miss…மோமோ தான்…எனக்கு என்ன பண்றதுனே தெரில…சாகுறது மட்டும் தான் ஒரே வழி…அது தான் லாஸ்ட் டாஸ்க் ம் கூட..இல்லாட்டி அது என்னை சும்மா விடாது மிஸ்…எனக்கு பயமா இருக்கு…ஐயோ எங்க அம்மா அப்பாவே கொலை போனபோது மிஸ்…அதுக்குள்ள நான் சாகனும்…ஐயோ போன் எங்கே…அது இநேரத்துக்கு எவ்ளோ போன் பண்ணிருக்கோ…நா அதே ஏமாத்திட்டேன்னு நெனைச்சு என் அம்மா அப்பாவே எதுவும் பண்றதுக்குள்ள அதுட்ட நான் பேசணும்…”என்று கூறிக்கொண்டே சுருதியை விலக்கிவிட்டு போன் உடைந்து கிடந்த இடத்துக்கு சென்று உடைந்த பாகங்களை எல்லாம் எடுத்து ஒன்று சேர்த்து போனை ஆன் பண்ணினாள்…ஆனால் அதுவோ ஆன் ஆகவில்லை…தலையில் அடித்துக்கொண்டு மீண்டும் அழுக ஆரம்பித்திருந்தாள்…

        சுருதிக்கு வெண்ணிலா கூறியதனைத்தும் சிறிது புரிந்த மாதிரியும் சிறிது புரியாத மாதிரியும் இருந்தது…பைத்தியக்காரி போல் அழுகும் வெண்ணிலவை பார்த்த சுருதி தன் மொபைல் இருந்து வெண்ணிலாவின் பெற்றோர்க்கு தொடர்பு கொண்டு உடனே வரும் படியாக கூறினாள்…

     அடுத்ததாக கதிரின் பிரச்சனையின் போது அவர்களுக்கு உதவி செய்த கே கே யின் நண்பரான அந்த காவல் துறை  அதிகாரிக்கு அழைத்து பிரச்சனையை கூறி இங்கு வர சொல்லிருந்தாள்…

பின்பு கேகே விருக்கும் தொடர்பு கொண்டு இங்கே வருமாறு கூறினாள்…

      அழுதுக்கொண்டிருந்த வெண்ணிலாவின் அருகே அமர்ந்தாள்…

   “கவலை படாதே வெண்ணிலா…அம்மா அப்பாக்கு ஒன்னும் ஆகாது…நான் பார்த்துகிறேன்…என்னை நம்பு…எனக்கு தெரிஞ்ச போலீஸ் காரங்கட்ட சொல்லிட்டேன் அவர் பார்த்துக்குவார்…நீ எதுக்கும் பயப்படாத…என்ன நடந்துச்சுனு மட்டும் அவர்ட்ட சொல்லு…”

   “நிஜமா எங்க அம்மா அப்பாக்கு ஒன்னும் ஆகாதுல மிஸ்…எனக்கும் சாக பிடிக்கல மிஸ் ரொம்ப பயமா இருக்கு மிஸ்…நான் நிறைய நாள் வாழனும் மிஸ்….ஸ்விம்மிங்க்ல நிறைய சாதிக்கணும் மிஸ்…ஐயோ முடியாதே அந்த மோமோ என்னை கொலைபண்ணிருமே…”என்று ஏதோஎதோ சொல்லி வெண்ணிலா அழுதாள்…

    அவள் கூறுவதை கேட்ட சுருதியும் கண்களில் நீர் வழிய வெண்ணிலவை அணைத்து கொண்டாள்…

     திறந்து கிடந்த வீட்டுக்குள் நுழைந்த கே கே விருக்கு முதலில் கண்ணில் பட்டது பயத்தில் அழுத வெண்ணிலாவும் அவளை அணைத்து கொண்டு அழுதுகொண்டிருந்த சுருதியும் தான்…அவனுக்கும் கண்கள் கலங்கும் போல் இருந்தது…சமாளித்து கொண்ட கே கே விருக்கு சுருதியை நினைத்து தான் கோவம் வந்தது …சிறு பெண்ணிற்கு தைரியம் அளிக்காமல் அவளும் கூட சேர்ந்து அழுதுகொண்டிருக்கிறாளே…

  “சுருதி “என்ற அழைப்பில் திரும்பிய இருவரும் அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு திரும்பி பார்த்தனர்…

   கே கே யை பார்த்த சுருதி”அழுகாத வெண்ணிலா எல்லாத்தையும் நம்ம சார் பார்த்துக்குவார்…”என்று கூறிவிட்டு அவளை அருகில் இருந்தா சோபாவில் அமர வைத்து விட்டு கே கே விடம் வந்தாள்…

     “உனக்கு அறிவில்லையா சுருதி…அந்த பொன்னே பாவம் பயத்துல அழுதுட்டு இருக்கு…அதுக்கு தைரியம் சொல்லாம நீயும் சேர்ந்து அழுதுட்டு இருக்க…” என்று கே கே திட்டிக்கொண்டிருக்கும் போதே அங்கே காவல் துறை அதிகாரி மற்றும் அவருடன் சைபர் கிரைம் காவல்துறை அதிகாரியும் வந்தனர்…

    இருவரும் கே கே விடம் பேசி விட்டு வெண்ணிலாவிடம் விசாரிக்க சென்றனர்…

   “சொல்லு மா…என்ன பிரச்னை…எப்ப உனக்கு மோமோ மெசேஜ் வந்துச்சு…”

    வெண்ணிலா அழுதுகொண்டே சுருதியின் கையை பிடித்து கொண்டே தேம்பலுடன் சொல்ல ஆரம்பித்தாள்….

       “ஒரு மாசத்துக்கு முன்னாடி மோமோ நம்பர்ல இருந்து எனக்கு மெசேஜ் வந்துச்சு…”

        “நீ ஏன் உங்க அம்மா அப்பாட்ட சொல்லல இதே…அறிவில்லை உனக்கு…இருந்தாலும் இந்த ஜெனெரேஷன் பசங்களுக்கு தைரியம் சாஸ்தி தான்…எத்தனை நியூஸ் பாக்குறீங்க அதுல எல்லாம் இது தானே சொல்லிட்டு இருக்காங்க…சொல்லறவன் எல்லாம் கேனை பயலுக நீங்க அறிவாளிங்க என்ன…இந்த பொண்ணோட அம்மா அப்பா எங்கே கார்த்தி…”

     “வந்துட்டு இருக்காங்களாம் டா…”

      “இப்டி பிள்ளைங்க என்ன பண்றங்கனு கூட கவனிக்க முடியாட்டி என்ன பெத்தவங்க…இந்த பொண்ணுக்கு எல்லாம் எதுக்கு போன் இந்த வயசுல…நீ சொல்லு  ஏன் உங்க அம்மா அப்பாட்ட சொல்லல…”

         “இ இ இ….இல்லை சார்…அது மோமோ நம்பர்னு நினைக்கல சார்…இதுக்குன்னு தனியா ஒரு ஆப் இருக்கு சார் talked  out அப்டினு அதே நம்ம மொபைலில்  இன்ஸ்டால் பண்ணா மோமோ நம்பர் மாறியே நம்ம மெசேஜ் பண்ணா வரும்…அப்டி தான் ஏதோ என் பிரெண்ட்ஸ் விளையாடுறாங்களோனு நினைச்சேன் சார்…அதான்…அப்புறம் தான் தெரிஞ்சது அது மோமோனு…”

          “அது குடுத்த டாஸ்க் எல்லாம் ஈஸியா தான் இருந்துச்சு…அதான் நா பிளே பண்ணலாம்னு நினைச்சேன்…”

            “மொத டாஸ்க் என்ன…”

             “என் போட்டோ சென்ட் பண்ணனும்…அதுக்கு என்னை பத்தி எல்லாமே தெரிஞ்சுருக்கு…என் நேம் அப்பா அம்மா என்ன பன்றாங்க அப்டினு எல்லாமே…அதோட டாஸ்க் எல்லாம் ரிஸ்க் வர ஆரம்பிச்ச உடனே நா விலக்கணும்னு நினைச்சேன்…ஆனா அது என்னை விடல…என் டீடெயில்ஸ் எல்லாம் சோசியல் மீடியால அனுப்பிருவேன்னு….அம்மா அப்பாவை கொன்னுருவேன்னு இப்டி…ஸ்விம்மிங் பூல் ல 50  எண்ணுறது வரைக்கும் மூச்சை பிடிச்சுட்டு தண்ணிக்குள்ள இருக்கணும்னு…அப்புறம் ரோட்ல நேர வர லாரில மோதுற மாறி நேரா போயிட்டு அப்டியே வளைச்சுரனும்…மிட் நைட் ல பேய் படம் பாக்கணும் அப்டினு நிறைய….லாஸ்ட் டாஸ்க் அது வீடியோ கால்ல இருக்கும் போது பிளேடு வைச்சு கைல மோமோ னு எழுதணும்னு… “

         வெண்ணிலா பேசி கொண்டிருக்கும் போதே அவளது பெற்றோர் வந்திருந்தனர்…

   கே கே அனைத்தையும் அவர்களிடம் கூறியிருந்தான்…

       வெண்ணிலாவின் அம்மா அழுதுகொண்டிருந்தார்…அவளின் கையை பார்த்தவுடன் இன்னும் நெஞ்சில் அடித்து கொண்டே இன்னும் அழுதார்…

       “நீ நல்லா இருக்கணும்னு தானே இப்டி நாங்க ரெண்டு பெரும் மாடு  மாறி உழைக்குறோம்…நீ பெரிய ஸ்கூல்ல படிக்கணும்னு தானே நா வேலைக்கு போறேன்…ஒரு வாரமா முகமே சரி இல்லையேன்னு எத்தனை தடவை என்னாச்சு பாப்பா என்னாச்சு பாப்பானு கேட்ருப்பேன்…ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே டா…நீ இல்லாத இந்த உலகத்துல நாங்க யாருக்காக டா வாழ போறோம்…இப்டி பண்ணிட்டியே…”என்று கதறி அழுதார் வெண்ணிலாவின் அம்மா….

    விசாரித்து முடித்த காவல்துறையினர் கே கே விடம் பேசினர்…

     ”கார்த்தி இவங்க வந்து கம்பளைண்ட் குடுக்கணும் அப்ப தான் அடுத்த கட்ட நடவடிக்கைளாம் பாக்க முடியும்…எப்படியும் ஈவினிங் குள்ள மீடியாகு தெரிஞ்சுரும்…ஸ்கூல் நேம் வரதுல உனக்கு ஒன்னும் ப்ரோப்லேம் இல்லைல…”

    “அதுலாம்  இல்லை டா…நீ அதுக்கானது எல்லாம் பாரு டா…”சரி என்று கே கே விடம் விடை பெற்றவர் வெண்ணிலாவின் பெற்றோர்டிடம் பேசினர்…

    “அழுக்காதீங்க…ஒண்ணும் பயப்பட தேவை இல்லை…நீங்க இப்ப எங்ககூட வந்து போலீஸ் கம்பளைண்ட் மட்டும் குடுத்துட்டு போங்க…நாங்க எல்லாத்தையும் பார்த்துக்குறோம்…அப்புறம் அந்த மொபைல எடுத்துட்டு போறோம்… மீடியால இருந்து வருவாங்க நாங்க எல்லாத்தையும் சொல்ல்லிருவோம்…நீங்களும் கொஞ்சம் ஒத்துழைப்பு தரணும்…”

      “பொம்பளை பிள்ளை சார்…மீடியாலம் வேணாமே சார்…”என்று பயத்துடன் கூறினார் வெண்ணிலாவின் அப்பா…

       “இப்ப உங்க பொண்ணு 12th ல மாநிலத்துலயே முதல் இடம் வாங்கிருந்தா சந்தோசமா மீடியால பேட்டி குடுக்குறீங்கள…அதே மாறி இதையும் எடுத்துக்கோங்க…உங்க பொண்ணு சொல்றதே பார்த்து தான் பல பசங்க இப்டி மாட்டிட்டு இருந்தாங்கன்னா காவல்துறை காப்பாத்தும்னு நம்பிக்கை வந்து எங்ககிட்ட வருவாங்க…”என்று கூறிவிட்டு அவர்களையும் கையோடு அழைத்துக்கொண்டு சென்றனர்…

  இப்டி பல பிரச்சனையிலிருந்து வெளியே வந்த வெண்ணிலா தனக்கு உதவி செய்த சுருதியிடம் ஒன்றினாள்…சுருதியின் அறிவுரைகள் மூலம் அதில் இருந்து வெளியே வந்த வெண்ணிலா அனைவருடனும் பழக ஆரம்பித்தாள்…அப்டி தான் அர்ஜுனையும் தான் அண்ணனாக ஏற்று கொண்டாள்…

என்று அனைத்தையும் தனக்குள் அர்ஜுன் நினைத்து பார்த்தான்…

      இவன் இப்டி நினைத்து முடிக்கவும் வெளியே சென்ற அனைவரும் உள் நுழையவும் சரியாக இருந்தது…

    சுருதி”சரி போதும் அர்ஜுன்…வீட்டுக்கு போ…நாளைக்கு ஸ்கூல்ல மீட் பண்ணலாம்…கதிர் வெண்ணிலா நீங்களும் தான்…”என்று அனைவரையும் அனுப்பிவைத்தாள்…

                     ***************

 தன் முன்னே அடித்துக்கொண்டிருந்த கைபேசியை எந்த சலனமும் இல்லாமல் வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருந்தான் கே கே…

   அதில் கார்த்திகா என்று பெயர் ஒளிருந்து கொண்டிருந்தது….

     இதோடு பத்து தடவைக்கும் மேல் அவள் கூப்பிட்டிருந்தாள்…எடுக்க வேண்டியவனோ கைபேசியை எடுக்காமல் வெறித்து நோக்கியவரே இருக்கிறான்…

     கார்த்திகா கல்லூரியில் இவனின் ஜூனியர் …தற்பொழுது இப்பள்ளியின் டிரஸ்டி…இப்பள்ளியில் சேர்ந்த இத்தனை வருடங்களில் அவளை காணும் வாய்ப்பு இது வரை அமையாமல் பார்த்துக்கொண்டான்…ஆனால் இப்போட்டியில் சந்திக்க வேண்டியதாகி விட்டது…

   மீண்டும் கைபேசி சிணுங்கியது…எடுக்காமல் இவள் தன்னை விடமாட்டாள் என்று உணர்ந்து கைபேசியில் அவளுக்கு செவி மடுத்தான்…

    “ஹலோ…சொல்லுங்க மேம்…”

     எதிர் முனையில் அமைதி…பேசவே இல்லை…

     “ஹலோ மேம்…ஹலோ …ஹலோ…ப்ச்…கார்த்திகா…”

      “ம்ம்..இப்ப சொல்லுங்க கார்த்திக்…”கல்லூரியில் அனைவர்க்கும் கார்த்திக் என்றே அழைப்பார்கள்…

      “நீ தான் சொல்லணும்…”

      “நான் எதுக்கு உங்களுக்கு கால் பண்ணேன்னு தெரியாது இல்லையா…”

       “தெரியாதுனால தான் கேக்குறேன்…”

        “தெரியாட்டி விடுங்க…பை “என்று இணைப்பை துண்டித்து இருந்தாள்…

    அவன் கையில் இருந்த கைபேசியிடம் தான் அவன் கோவத்தை காட்ட முடிந்தது…தூக்கி வீசியிருந்தான்….

 

         

        

 

 

 

             

            

          

Advertisement