Advertisement

அத்தியாயம் 8 :

 

              “நேற்று போல் இன்று இல்லை

      இன்று போல் நாளை இல்லை”

இப்போ இந்த பாட்டு எதுக்குன்னு தானே யோசிக்குறீங்க…சொல்றேன்…

      நேற்று இருந்த நீச்சல் போட்டிக்கான ஆர்பரிப்பு இன்று சுத்தமாக இல்லை……பள்ளிக்கு விடுமுறை விட்டிருப்பார்கள் போல... மிகவும் அமைதியாக இருந்ததுபோட்டியில் கலந்துக்கொள்ளும் மாணவர்களும் ஆசிரியர்கள் மேற்படி பள்ளி தாளாளர்,பொறுப்பாளர் இப்படி இவர்கள் மட்டுமே இருந்தனர்…

      ஒவ்வொரு பக்கமும் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களும் அவர்களை தயார்படுத்தும் ஆசிரியர்களும் கூடி நின்று போட்டியில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தனர்…

         சுருதி,சுதாகர்,வெண்ணிலா,அர்ஜுன்,கதிர் இவர்களும் கூடிநின்று பேசி கொண்டிருந்தனர்…

        “டேய் நல்லா பண்ணுங்க டா…இதுல உங்க ஒற்றுமை தான் டா முக்கியம்…எல்லாரும் பேசி ஒரு முடிவு எடுத்து பண்ணனும்…ரொம்ப நேரம் ஆக்காதிங்க…அரை மணி நேரம் தான் டைம்…அதுக்குள்ள நீங்க கீயை     கண்டுபிடிக்கணும்…இல்லாட்டி அவ்ளோ தான்…புரிஞ்சதா…பதட்டப்பட்டு சொதப்பிராதிங்க…மொத்தமா போச்சு…”என்று சுருதி தன் மாணவர்களுக்கு கூறிக்கொண்டிருந்தாள்…

          “Treasure Hunt”வெளிநாடுகளில் பிரபலமாக அதிகளவில் பள்ளிகளில் மாணவர்களின் புத்திகூர்மையை  சோதிப்பதற்காக நடத்தப்படும் விளையாட்டு ஆகும்…புதையல் வேட்டை தொடர்ச்சியான துப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் மறைக்கப்பட்ட பொருளை கண்டுபிடிப்பதற்கான  விளையாட்டாகும்…ஏனோ இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் அதிகமாக பிரபலமாகவில்லை…இன்று அந்த போட்டி தான் நடக்கவிருக்கிறது…

     சுருதி&கோவை நெருங்கிய கேகே “ஆல் தி பெஸ்ட் கைஸ்…நல்லா விளையாடுங்க…”என்று கூறினான்…

       “கண்டிப்பா சார்…”என்று அனைவரும் கோரஸாக கூறினர்…

      அதற்குள் போட்டிக்கான அறிவிப்பை வாசிக்க பள்ளியின் டிரஸ்டி மைக்கை நெருங்கிருந்தார்…

       டிரஸ்டி பார்க்க மிகவும் அழகாக இருந்தார்…முப்பதுகளின் முற்பகுதியில் இருப்பார் போல…ஆனால் பார்க்க மிகவும் இளமையாக இருந்தார்…அழகுடன் பதவிக்கான கம்பிரமும் இணைந்து அவரை பார்க்க அட்டை படத்தில் பார்க்கும் சரஸ்வதியை ஞாபகப்படுத்தினார்…(சத்தியமா எனக்கு இல்லைங்க…நம்ம சுருதிக்கு தான்…)

         “ஹாய் கைஸ்…எல்லாரும் உங்க டேபிள்ஸ்க்கு வாங்க…”அனைவரும் வருவதற்கு சிறிது இடைவேளை  விட்டு பேச்சை ஆரம்பித்தார்…

“அங்கே உங்க எல்லாருக்கும் முன்னாடி ஒரு துருப்பு சிட்டு ஐ மீன் ஒரு க்ளூ இருக்கும்…அது தான் ஸ்டார்டிங் க்ளூ அதை வச்சு அடுத்து அடுத்த க்ளூ கண்டுபிடிங்க…மூணாவது இடத்துல உங்களுக்கான கீ இருக்கும்…அது தான் நாளைக்கான போட்டியோட தலைப்பு…இதே நீங்க அரைமணி நேரத்துல கண்டுபிடிக்கணும்…அரை மணி நேரத்துக்குள்ள உங்களால கண்டுபிடிக்க முடியாட்டி நீங்க போட்டில இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவீர்கள்…ஆல் தி பேஸ்ட் கைஸ்…”என்று பேச்சை முடித்து தன் இடத்தில அமர்ந்தார்…

       அவர் பேசும் போது அவரது பார்வை அடிக்கடி கேகே யை தொட்டு தொட்டு மீண்டதோ…இதை கேகே கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை…ஆனால்  நமது சுருதி கண்டுகொண்டாள்…

       “என்ன டா இது…இந்தம்மா அடிக்கடி நம்ம பிரின்சிபாலை லுக்கு விடுது…அது தெரிஞ்சும் தெரியாத மாதிரி நம்ம கேகே இருக்காரு…சம்திங் பிஷி...கண்டுபிடிக்குறோம்…”என்று மனதில் நினைத்துக்கொண்டாள்…

     பள்ளி மணி அடிக்க போட்டி இனிதே ஆரம்பமானது…ஒவ்வொரு பள்ளி குழுவும் தங்களுக்கு முன்னிருந்த துப்பு சீட்டை எடுத்தனர்…

       சுதா,கதிர்,அஜூ,வெண்ணிலாவும் தங்களது க்ளூவை எடுத்தனர்…வெண்ணிலா அதில் இருந்ததை வாசிக்க முயன்றாள்…

       சுதாகர்”ஒய்…வைட்மூன் வேகமா வாசி…என்ன இவ்வளவு நேரமாக்குற…இல்லாட்டி எங்கடையாச்சும் குடுக்கலாம்ல…”

      வெண்ணிலா பேப்பரை சுதாகரிடம் குடுத்தாள்…பார்த்தவன் பேய் முழி முழித்தான்…

    அதை தூரத்தில் இருந்து பார்த்த சுருதியும்  கே கே யும் அதிகமாக பதட்டப்பட்டனர்…சுருதி விட்டால் அவர்கள் நால்வரையும் மொத்தி எடுத்திருப்பாள்…ஏனென்றால் டைம் ஆரம்பித்து 5 நிமிடம் ஆகியிருந்தது…இவர்களை தவிர அனைத்து குழுவினரும் அந்த இடத்தை விட்டு நகர்ந்து அவர்கள் க்ளூவை கண்டுபிடிக்க சென்றிருந்தனர்…

     சுதாகரிடம் இருந்து சீட்டை பிடிங்கி பார்த்த அர்ஜுன் மற்றும் கதிரும் கூட அதிர்ந்தனர்…

         

    “டேய்…என்னடா இது நமக்கு வந்த சோதனை”என்று கூறிக்கொண்டே சீட்டை அங்கிட்டும் இங்குட்டும் திருப்பி படிக்க முயற்சித்து கொண்டிருந்தனர்…

கதிர்”வெயிட்…வெயிட்…கண்ணாடி இங்கே எங்க இருக்கு டா…”   

       சுதா “டேய் இப்ப அவசியம் நீ கண்ணாடி பார்க்கணுமா…பொண்ணா பாக்க போற பன்னி…”

     கதிர்”டேய்…முட்டாள் இது மிரர் வியூ லெட்டர் டா…கண்ணாடில பார்த்த கரெக்டா தெரியும் டா…”

    சுதா&அஜூ&நிலா”செம டா பயலே…லவ் யூ டா…”என்று கோரஸாக கூறினர்…சுதாகர் ஒரு படி மேலே சென்று கதிரின் கன்னத்தில் இச் வைச்சிருந்தான்….

   சுருதி”இப்ப இது ரொம்ப முக்கியம்…இன்னும் நின்னு பேசிட்டு இருக்காங்க…இதுல முத்தம் வேற  கேடு…”கே கே விடம் எப்பொழுதும் போல புலம்பி கொண்டிருந்தாள்…

      வெண்ணிலா”நம்ம கான்டீன்ல இருக்கு டா…”

நால்வரும் கேன்டீனை நோக்கி ஓடினர்…

7 நிமிடம் :

      சுதாகர் “வைட்மூன் பிடிச்சுக்கோ நாங்க படிக்குறோம்.

   “ஆகாய நீலம் மேலே…ஆகாய நீலம் கீழேஅடுத்த துப்பை அடைய ஆழம் வரை மூழ்க வேண்டும்…”

 சுதாகர் சொல்ல சொல்ல கதிரை குனிய வைத்து அவன் முதுகில் பேப்பரை வைத்து அர்ஜுன் எழுதிக்கொண்டிருந்தான்…

   சுதா”என்ன டா அது ஆகாய நீலம் மேலே கீழே நடுவிலைனு…முழுகனும்…முக்கணும்னு…”

    கதிர்”அட ச்சீ…கொஞ்ச நேரம் அமைதியா இரு…யோசிப்போம்…”

      வெண்ணிலா”நீங்க இப்டி யோசிச்சுட்டே இருங்க…டைம் முடிஞ்சு நம்ம தோக்க போறோம்… நா நேத்து உயிரை குடுத்து முழுகி செத்துரமா போட்டில ஜெயிச்சதாலம் வேஸ்ட் போலயே…”

     அஜூ”ஜீனியஸ் டா செல்லம் நிலா நீ…ஸ்விம்மிங் பூல் தான்…ப்ளூ கலர்…ஆழத்துல முழுகனும்…வாங்க பக்கீஸ்…”என்று கூறிக்கொண்டே ஓட ஆரம்பித்திருந்தான் அர்ஜுன்..

நால்வரும் ஓடி நீச்சல் குளத்தை அடைந்தனர்…

10 நிமிடம்:

   முதலாவதாக ஓடிய அர்ஜுன் அங்கே முழித்துக்கொண்டிருந்தான்…மூவரும் அவனை நெருங்கினர்…

  அஜூ “எனக்கு நீச்சல் தெரியாதே…கதிர் சுதா உங்களுக்கு தெரியுமா…”இல்லை என்று தலைஆட்டிகொண்டே இருவரும் வெண்ணிலாவை பார்த்தனர்…

      “டேய்…டேய்…வேணாம்டா…ட்ரேஸ்லாம் நனச்சுரும்டா…அஜூ அண்ணா சொல்லுங்கண்ணா …”என்று கூறிக்கொண்டே அர்ஜுனின் பின் ஒளிந்தாள்…

  அர்ஜுன் தன் பின் கையே விட்டு சுருதியை தன் முன்னால் இழுத்து நிப்பாட்டினான்…பிறகு மூவரும் இணைந்து சுருதியை நீச்சல் குளத்திற்குள் தள்ளி விட்டனர்…

   உள்ளே மூழ்கிய சுருதி மேலெழும்பி அவர்கள் மூவரையும் காதில் கேட்க முடியா ஒரு ஆங்கில கெட்டவார்த்தை சொல்லி திட்டினாள்…

     மூவரும் ஏதோ ஆகசிறந்த பாராட்டை பெற்றதுபோல் சிரித்துக்கொண்டே”செல்லம் கோவிச்சுக்காம கண்டுபிடி டைம் போகுது…”

     மீண்டும் உள்ளே மூழ்கிய சுருதி ஒரு நிமிடத்திற்கு பின் வெளியே வந்தாள் கையில் அடுத்த துருப்பு சீட்டுடன்…

        அதற்குள் சுதாகர் எங்கோ ஓடி சென்று அவளுக்கு துண்டு எடுத்து வந்திருந்தான்…அதை அவள் மேல் போர்த்திவிட்டான்…

         அடுத்த க்ளூவை வாசிக்க ஆரம்பித்தனர்…

 

          “என்னை பார்த்தாலே

              உன் நாட்டை சொல்வர்

     நாள் முழுக்க அசைந்தாலும்

               களைப்பில்லை…

     பொழுது சாயும் வேளையில்

               ஓய்வு பெறுவேன்…”

     என்று வாசித்தான் கதிர்….

    கதிர்”நம்ம நாடுனு எப்படி பார்த்தவுடனே சொல்ல முடியும்…”

      வெண்ணிலா”இட்லி தோசை…நம்ம நாட்டுல மட்டும் தானே கிடைக்கும்…”

       அஜூ”செல்லம் கொஞ்சநேரம் அமைதியா இரு…”

        சுதா”டேய்…நம்ம தல தோனி அவரே பார்த்த உடனே சொல்லிருவாங்க டா இந்தியன்னு…நான் கேள்விபட்டுருக்கேன் டா தல செம சின்சியர்னு…சாந்தரம் ஆனா தான் ப்ராக்டிஸ் முடிச்சு போவாராம்….”

   வெண்ணிலா”அதுக்கு நானே தேவல…தோனியே தேடி வடநாட்டுக்கு போக போறியாடா…பக்கி…”

       சுதா”அடஆமாம்ல…வேறநம்ம மோடி அலையா இருக்குமோ…அவரை பாக்கணும்னா பாரின்க்கில போனும்… “

        அஜூ “ஹா ஹா  ஆமா டா…”

  கதிர் “பேசாம சமாதான கொடி காட்டி நம்மால முடியலைன்னு சுருதி கால்ல விழுந்துருவோமா”

சுதா”டேய் கொடி டா…கொடி…நம்ம கொடி காட்டுன நம்ம நாடுனு கண்டுபிடிச்சுறலாம்…காலைல ப்ரேயர்ல ஏத்தி ஈவினிங் இறக்கிருவாங்க…வாவ்…ஐ காட் இட்…”

15 நிமிடம்:

       நால்வரும் கொடி கம்பத்தை நெருங்கிய வேளையில் அங்கு ஏற்கனவே சுருதி நின்றிருந்தாள்…

     “டேய் பக்கிகளா…எவ்ளோ நேரம் டா…எல்லாரும் மூணாவது க்ளூ போய்ட்டாங்க இன்னும் நீங்க இப்டி அலைஞ்சுட்டு இருக்கீங்க…15 மினிட்ஸ் ஆச்சு டா…வேகமா…”என்று கூறிவிட்டு ஓடி மறைந்துவிட்டாள்…

     கொடி கம்பத்தின் ஓரத்தில் கிடந்த க்ளூவை எடுத்தனர்…

      “கடைசி படி…கடைசி புதிர்…

      வேதியியலில் உங்களின் பலத்தை பார்ப்போம்…”

      சுதாகர்”வாவ்…இவ்வளவு ஈசியா கூட க்ளூ குடுக்க தெரியுமா இவங்களுக்கு ….கெமிஸ்ட்ரி லேப் டா…”

    கெமிஸ்ட்ரி லேபை நுழைந்த நால்வரும் ஆளுக்கு ஒரு புறம் அடுத்த துருப்பு சீட்டை தேடி அலைந்தனர்…அவ்வளவு பெரிய பள்ளியின் ஆய்வு கூடம் என்ன சிறியதாகவா இருக்கும்…

      அஜூ”டேய் எடுத்துட்டேன் டா..ஓடி வாங்க…”என்று கத்தினான்…

20 நிமிடம்

       “ஞானத்தின் நுழைவுவாயில்…

        புத்தக குவியல்…

        அதில் புதினத்தின் தோற்றம்…

        அதுவே உனது திறவுகோல்…”

    சுதா”மறுபடியும் புரியாத மாறி குடுக்க ஆரம்பிச்சுட்டாங்க…ஞானப்பால்…யானை பால்னு ..நசநசன்னு…போங்க டா டேய் …”

             “சுதா கொஞ்ச நேரம் அமைதியா இரு…புத்தக குவியல்…எங்கே…”

        “நம்ம ஸ்கூல்ல எதுவும் பழைய பேப்பர் போடுற கடை இருக்குதா என்ன கதிர்…”

      கதிர்”டேய் லூசு…அங்கே மட்டுமா புத்தகம்  நிறைய இருக்கும்…லைப்ரரிலயும் இருக்கும் டா…”

         அஜூ”எஸ் கரெக்ட் டா…லைப்ரரி தான்…”

நால்வரும் லைப்ரரி வந்தடைந்தனர்….

23 நிமிடம்:

         நால்வரும் நூலகத்தின் ஒவ்வொரு பகுதியில் தேடி கொண்டிருந்தனர்….

வெண்ணிலா”அஜூ அண்ணா…இதுல தேடி கண்டுபிடிக்கறதுக்குள்ள நான் கிழவியே ஆயிருவேன்…ஒழுங்கா க்ளூ பாருங்க அண்ணா…”

    கதிர்”ஆமா..அதான் கரெக்ட்…” வேகமாக நால்வரும் கூடினர்…

   “ஞானத்தின் நுழைவுவாயில்…

      புத்தக குவியல்…

   அதில் புதினத்தின் தோற்றம்…

        அதுவே உனது திறவுகோல்

     சுதாகர்”புதினம் மின்ஸ் நாவல் தானே…அதோட தோற்றம்னா என்ன…”

      அஜூ”ஆமாம் டா…எனக்கு தெரிஞ்சு நாவல்னா அது பொன்னியின் செல்வனும் சிவகாமி சபதமும் தான்…பட் இது எங்கயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கு…டக்குனு வர மாட்டு டா…”

  சுதாகர்”ஆமா…ஏதோ பிரதாப் கூட முதலியார்னும் அவங்க ஏதோ சத்திரம் அப்டி இப்டி வரும்ல….”

     கதிர்”டேய் நாயே அது பிரதாப முதலியார் சரித்திரம்…போன வாரம் கூட படிச்சோமே…அதுக்குள்ளயும் மறந்துட்ட…”அவன் புதிருக்கான விடையை கூறியது கூட அறியாமல் சுதாகரை திட்டிக்கொண்டிருந்தான்…

    அஜூ”டேய் கதிர்…லவ் யூ டா செல்லக்குட்டி…போய் தமிழ் ராக்ல பாருங்கடா…”என்று கூறியவாறு இந்த முறை அர்ஜுன் கதிரின் கன்னத்தில் முத்தம் வைக்க வந்து கதிர் லேசாக திரும்பியதால் அவனின் இதழில் வைத்திருந்தான்….

        “ச்சை ச்சை…கருமம் என்னடா பண்ணிதொலைஞ்ச எருமை மாடே …நான் அப்டி பட்டவன்லாம் கிடையாது டா…”

     “டேய் லூசு…நீ ஏன் டா திரும்புன பக்கி…வாயே மொத பினாயில் ஊத்தி கழுவனும்…”

      சுதாகர் “உங்க ரொமான்ஸ்லாம் அப்புறம் வைச்சுக்கிறலாம்…மொத புக்கே தேடுங்க…”

      வெண்ணிலா”ஐ காட் இட்…எடுத்துட்டேன்…”என்று கத்தி கொண்டே அவர்களை நெருங்கினாள்…

       புத்தகத்தின் நடுப்பகுதியில் சாவி இருந்தது…நான்கு பெரும் கட்டிக்கொண்டு ஆனந்த கூத்தாடினர்…

     கதிர் “கைஸ் போதும் வாங்க…அங்கே போனும் பெல் அடிக்குறது குள்ள…இல்லாட்டி அவுட் ஆயிருவோம்..”

28 நிமிடங்கள்

   “ரெண்டு மூணு குரூப் வந்துட்டாங்களே இன்னும் இவங்கள காணோம்…வேகமா வந்து தொலையுறானுகளா…இன்னும் 2  மினிட்ஸ் தான் இருக்கு…”

     “கூல் சுருதி…வந்துருவாங்க…பதட்டப்படாதே…”என்று அவள் கைகளை பிடித்து ஆறுதல் சொல்லி கொண்டிருந்தான்…

  “அவனுக மட்டும் இதுல ஜெயிக்காம போகட்டும் செத்தானுக ராஸ்கல்ஸ்…தலைகீழா கட்டி தொங்க விட்டு அடிப்பேன்…இங்கேயே லேட் ஆகிட்டானுக…அதான் லேட் ஆகுது…”

   “சுருதி…கூல் டா…வந்துருவாங்க…ஏய் அங்கே பாரு சுதாகர் ஓடி வாரான்…”

சுதாகர் சிறிது தொலைவில் ஓடி வருவது தெரிந்தது…சுருதி பார்த்து கொண்டிருக்கும்போதே அருகில் நெருங்கி வந்திருந்தான்…வேகமாக சென்று டிரஸ்டியிடம் சாவியை ஒப்படைத்திருந்தான்…

    பின்னாலயே கதிர் வெண்ணிலா அர்ஜுன் வந்தனர்…பின்பு நால்வரும் இணைந்து சுருதியை நெருங்கி அணைத்திருந்தனர்…ஒரே கத்தல் தான்…

       சுருதிக்கு கண்கள் கூட கலங்கி விட்டிருந்தது…எல்லாரையும் வகை தொகை இல்லாமல் அடிக்க ஆரம்பித்திருந்தாள்…

     “ராஸ்கல்ஸ் கொஞ்ச நேரத்துல எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்து இருக்கும்…வேகமா வர மாட்டிங்களா…”என்று அவள் கூறிக்கொண்டிருக்கும் போதே போட்டி முடிவுக்கான மணி அடித்திருந்தது…அந்த சத்தத்தை கேட்டவுடன் அடி இன்னும் பலமாக விழுந்தது நால்வருக்கும்…

      இறுதியில் கே கே வந்து அதட்டிய அதட்டலில் தான் அடியை நிறுத்தினாள் சுருதி…

      இதை ஒரு ஜோடி விழிகள் ஏக்கத்துடன் பார்த்திருந்தன…அந்த ஏக்க விழிகளை ஒரு ஜோடி கண்கள் கண்டும் கொண்டன…தனக்குள்ளே ஒரு முடிவும் எடுத்து கொண்டன….

     

  

Advertisement