Advertisement

அத்தியாயம் 4

 

             சூரியன் தன் பொற்கரங்களால் அனைத்து ஜீவராசிகளையும் இருள் என்ற போர்வையிலிருந்து எழுப்பிக்கொண்டிருந்த காலைவேளையில் சுருதி மட்டும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்….

                அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கும் ஆப்பு வைக்கும் விதமாக வாசற்கதவு படபடவென்று தட்டப்பட்டது….

                  பதறியடித்து எழுந்திரித்த சுருதி மணியை பார்த்தாள்…மணி 7 .30 ஆகியிருந்தது .தூக்கம் கலைந்த எரிச்சலுடன் “ஞாயிற்று கிழமை கூட நிம்மதியா தூங்க விடமாட்டாங்களே…”என்று புலம்பிக்கொண்டே வாசற்கதவை திறந்தாள்…

                   அவள் அத்தையும்,மாமாவும் வெளியே பதற்றத்துடன் நின்று கொண்டிருந்தனர்…அவர்கள் முகத்தை வைத்தே  எதுவோ சரியில்லையென்று புரிந்துக்கொண்டாள்…

                      “என்னாச்சு அத்தை…ஏன் பதட்டமா இருக்கீங்க…”

                       “சுருதி…சுதாகர் மொத மாறி ரூம் கதவை பூட்டிக்கிட்டு வெளிய வரமாற்றான்…நாங்க கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்தோம்….அவன் என்னனும் கேட்கலை…வெளியவும் வரலை…”

                        “என்ன அத்தை சொல்றிங்க…நல்லா தானே இருந்தான்..நீங்க எதுவும் அடிச்சீங்களா இல்லை திட்டினீங்களா…”என்று அவள் கேட்கும்பொழுதே சுதாகரின் அப்பா இவளின் கண்களை சந்திக்காமல் தலை குனிந்தார்…

                        “பின்ன என்ன சுருதி நாங்க பண்றது…நேத்திலிருந்து பங்ஷன் வேணாம்…அவளே வேற ஸ்கூல்க்கு சேர்த்து விடுங்கனு ஒரே டார்ச்சர்…  “என்று சுதாகரின் அம்மா கூறிக்கொண்டிருக்கும் போதே சுருதி படியில் இறங்க ஆரம்பித்திருந்தாள்…

          இரண்டு நாட்களுக்கு முன் நடந்தவையனைத்தும் அவள் மூளை நினைவுமீட்பு செய்ய ஆரம்பித்திருந்தது….

                இரண்டு நாட்களுக்கு முன்…

      பதற்றத்துடன் வீட்டினுள் நுழைந்த இருவரும் முதலில் கண்டது வரவேற்பறை முழுவதும் நிரம்பிருந்த தங்களது சொந்தங்களையும் பக்கத்து வீட்டு பெண்களையும் தான்….

       அடுத்ததாக அந்த அறையின் ஓரத்தில் அமைதியாக அமர்ந்து இருந்த சுதாகரின் தங்கை சுவேதா…அவள் தாவணியுடுத்தி இருந்தாள்…அவளுக்கு முன் உலக்கையும்,ஓரத்தில் தட்டும் செம்பும் வைக்கப்பட்டிருந்தது…அவள் முகத்தில் சிறிது அசூயையும் வெட்கமும் கலந்து காணப்பட்டது…

           இருவரும் ஒருவரையொருவர் திரும்பி பார்த்துக்கொண்டனர்…

           மீனாட்சி பாண்டியன் தம்பதியின் முதல் மகன் சுதாகர்..இரண்டாவது பெண் சுவேதா..சுவேதா மற்றும் சுதாகர் இடையில் ஒருவருடம் மூன்று மாதம் இடைவேளை தான்…சுவேதாவும் ஜெயராம் பள்ளியில் தான் ஏழாம் வகுப்பு படிக்கிறாள் ….

          சுருதியையும்,சுதாகரையும் கவனித்த சுருதியின் சித்தி மற்றும் சுதாகரின் இரண்டாவது தாய்மாமனின் மனைவியான அனுசியா”அடியே சுருதி இப்ப தான் வரியா…இங்க பாருடி உன் அத்தை மகள் நமக்கு செலவு வைக்க உக்கார்துட்டா டி” என்று சிரிப்புடன் கூறினார்…

          சுதாகரின் பெரியம்மா”என்ன மதினி…தாய்மாமன்லாம் நல்லா இருக்கப்பவே வாங்கிட்டா தானே உண்டு..எம்வீட்டு பிள்ளை சமைஞ்சு உட்கார்ந்து இருக்க நேரம் அம்மான்களும் அம்மான் பொண்டாட்டிகளும் நல்லா இருக்கீக…எனக்கு தான் இரண்டும் ஆண்குட்டியா போச்சு…உங்களுக்கு செலவுயில்லாம போயிருச்சு..ஒத்த பிள்ள தானே இருக்கா…நல்லா செய்யுங்க…இதுக்கு அப்றம் வாங்க என்ன இருக்கு…”என்று சிரித்துக்கொன்டே வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் பேசினார்…

                            “என்ன அத்தாச்சி இப்டி சொல்லிப்புட்டீக…உங்களுக்கு நாங்க கொண்டு வந்து இறக்காத சீரா அத்தாச்சி…இரண்டு பையன்களுக்கு நாலு தடவை காதுகுத்து வைச்சீங்களே..ஆத்தா செத்தா சீரு போச்சு..அப்பன் செத்தா தானும் போச்சுன்னு சொல்லி நீலி கண்ணீர் வடிச்சு உங்க ஆயி அப்பன் செத்ததுக்கு அண்டா குண்டாலாம் வாங்கிட்டு போனீங்களே…அதுலாம் மறந்து போயிருச்சா அத்தாச்சி..இதை மட்டும் சுருதி ஆத்தா கேட்ருக்கணும் உன்னை கேக்கா கேள்வி கேட்டு கேப்பையே நட்டுவிற்றுக்கும்…அவங்க தான் நீலகிரில இருந்து வரணுமே…மொத்தமா விசேஷத்துக்கு வந்துக்கிறேன்னு சொல்லிட்டாக..”என்று சென்று கொண்டிருந்த உரையாடலில் கவனமில்லாமல் சுதாகரின் கவனம் முழுவதும் தன் தங்கையின் மீதே இருந்தது…

         அறிவியல் வகுப்பில் நேற்று ஆசிரியர் சொல்லிகுடுத்தது தனது தங்கைக்கு ஏற்பட்டிருக்கிறது என்று புரிந்துகொண்டான்…

       சுவேதாவின் அருகில் சென்று அவளின் கையை எடுத்து தன் இருகைகளிலும் பொத்திக்கொண்டான்…சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் சிறிது கரகரத்த குரலுடன்  “எருமை..இதெல்லாம் சகஜம் தான்…உன்னை மாறி எல்லா பொண்ணுகளுக்கும் நடக்குறது தான்…இதை நினைச்சு நீ பயப்படக்கூடாது …உன் உடலில் இருக்க இறந்த  செல்கள் எல்லாம் வெளியேறுது..இனிமேயும் நீ எப்பயும் போலவே இருக்கலாம்..”என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டான்…

      இதை கவனித்த சுருதியும் மீனாட்சியும் அர்த்தமாக சிரித்து கொண்டனர்..

         நிமிடத்தில் அனைத்தையும் நினைத்து  முடித்த சுருதி..சுதாகரின் அறையின் கதவை தட்டினாள்….

                                 “டேய் மண்டைவெட்டு நான் சுருதி வந்து இருக்கேன் டா…கதவை திற…ஓவரா பண்ணாதே…என் செல்லகுட்டில…கதவை திற…”

        கதவை திறந்த சுதாகர் அவளை உள்ளே இழுத்துக்கொண்டு மீண்டும் கதவை பூட்டினான்…அறை முழுவதும் இருள் சூழ்ந்துஇருந்தது…சுவிட்ச் போர்டை தேடி..மின்விளக்கு ஸ்விட்சை அழுத்தினாள் ….சுதாகர் கலங்கி சிவந்து இருந்த கண்களுடன் நின்று இருந்தான்…

          “என்னாச்சு சுதா...ஏன் இப்டி பிஹேவ் பண்ற”

          “இவங்க யாருக்கும் என்னை பிடிக்கலை சுருதி…நான் என்ன சொல்ல வரேனே புரிஞ்சுக்க மாட்றாங்க…இவங்களா ஒன்னு புரிஞ்சிகிட்டு என்னை அடிக்குறாங்க…”

            “அப்டிலாம் ஒன்னும் இல்ல சுதா…என்ன நடந்துச்சுனு மொத புரியுற மாதிரி சொல்லு…”

            “எல்லாரும் சேர்ந்து ஒரு வாரத்துக்கு அப்புறம் சுவேதாக்கு சடங்கு பெரிசா வைக்கணும்னு பேசிக்கிட்டாங்களா…அம்மாவும் அப்பாவும் அதுக்கு சரினு சொல்லிட்டாங்க…நேத்துப்போய் பத்திரிக்கைலாம் அடிச்சுட்டு வந்துட்டாங்க…”

              “சரி…அதுக்கு என்ன இப்ப…”

               “இல்ல சுருதி…சுவேதா ரொம்ப அக்வேர்டா பீல் பண்ணுவா…அவளால எப்படி சொல்ல முடியும்..பொண்ணுங்க பெரிய பொண்ணு ஆகுறதல்லாம் சாதாரண விஷயம் தானே..இதுக்கு போய் ஏன் இப்டிலாம் விசேஷம் வைக்கணும்…அவளே பாவம் ரொம்ப சின்ன பொண்ணு..அவளுக்கு  போய் சேலைலாம் கட்டி விட்டுட்டு…எல்லார் முன்னாடியும் நிக்க வைச்சுட்டு நல்லா இருக்காது…அதான் விசேஷம்லா வேணாம்னு சொன்னேன்…அப்புறம் அவளை ஏதாவது நல்லா கேர்ள்ஸ் ஸ்கூலா பார்த்து சேர்த்து விடுங்க…நம்ம ஸ்கூல் வேணாம்னு சொன்னேன்…அதுக்கு போய் எங்க அப்பா அடிக்குறாரு…”

               சுருதி இதை இவனிடம் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்பே எதிர்பார்த்தாள்…

                “சுதா முதல் ரொம்ப எக்ஸ்ட்ரீம்மா யோசிக்கிறதை நிறுத்து…இந்த மாதிரி விழாக்கள் ஒன்னும் யாரும் லூசு தனமா பின்பற்றலை…அந்த பொண்ணுக்கு தனக்குள்ள நடக்குற மாற்றம் எல்லாம் புதுசாவும் அதே சமயம் பயமாவும் இருக்கும்..அட் தி சேம் டைம் அவளுக்கு சத்தான உணவுகளும் தேவை..இப்ப இவ சாப்பிடறது தான் அவள் உடம்புக்கு தேவையான சத்தை கடைசி வரைக்கும் குடுக்கும்..அதனால தான் அந்த பெண்னே முப்பது நாளும் வீட்டுல இருக்க வைச்சு சத்தான ஆகாரங்கள் குடுத்து எந்த வேலையும் பாக்கவிடாம பத்திரமா பாத்துக்கிறாங்க…அவ தன்ட்ட ஏற்பட்டு இருக்க மாற்றத்தை நினைச்சு பயப்பட கூடாதுனு தான் இப்டி ஒரு விசேஷம் வைச்சு சொந்தங்கள் எல்லாரும் வந்து பேசி சிரிச்சு,நீ பயப்படுற மாறிலாம் இது பெரிய விஷயம் கிடையாது..இது நீ சந்தோசபட வேண்டிய தருணம்னு அவளை உணரவைக்குறாங்க…அத்தை,மாமா,சித்தி சித்தப்பா நாங்க எல்லாரும் உனக்கு துணையா இருக்கோம்னு ஒரு மாறல் சப்போர்ட் அவளுக்கு குடுக்குறாங்க…புரியுதா..அப்றம் எந்த பொண்ணும் இந்த விசேஷத்தை விரும்பாம இல்ல..இதுல மட்டும் தான் அவ சென்டர் ஆப் தி அட்ட்ரக்ஷன் அ இருப்பா…கல்யாணம்னு வந்தா கூட மாப்பிளை தான் பெரிசா தெரிவான்…பொண்ணுங்க இல்ல..பொண்ணுங்க கொஞ்சம் அக்வேர்டா பீல் பண்ணாலும் அவங்களுக்கு பிடிச்சு தான் இருக்கும்.. “

              சுதாகர் “சரி..ஆனா சுவேதாவை வேற ஸ்கூல்ல தான் சேர்த்து விடணும்..உலகம்லாம் எவ்ளோ கெட்டு கிடக்கு..நா போன வருஷமே வேற ஸ்கூல்ல சேர்த்து விட சொன்னேன்..இவங்க தான் கேக்கலை..கேர்ள்ஸ் ஸ்கூல்னா தான் பாதுகாப்பா இருக்கும்…நீயாச்சும் என்னை புரிஞ்சுக்கோ சுருதி..”

               “சுவேதா படிச்சு முடிச்சுட்டு வீட்டுலயே இருப்பாளா..”

                “இல்ல..அவளுக்கு பிடிச்ச வேலைக்கு போவா…”

                “அங்கேயும் ஆம்பிளையே இல்லாத கம்பெனிய தான் தேடிட்டு இருப்பியா…பெண்களுக்கு பிரச்சனைல இருந்து வெளிய வரது எப்படினு சொல்லி குடுக்கணுமே தவிர கைக்குள வைச்சு பாதுகாக்க கூடாது…பெண்களுக்கு மீன் பிடிக்குறது எப்படினு கத்துக்குடுங்க…மீன் பிடிச்சுட்டு வந்து தராதீங்க…என்னைக்கும் நீயே எல்லா இடத்துலயும் அவளே பாதுகாத்துட்டு இருக்க முடியாது…அவளுக்கு தனியா இந்த உலகத்தை எதிர்கொள்ள கற்றுகுடு சுதா…இதுக்குமேல உனக்கு புரியும்னு நினைக்குறேன்..உன்னை கதிர் கூப்பிட்டான் என்னனு போய் கேளு..”என்று கூறி அவனை அனுப்பிவிட்டாள்…

     ரூமை விட்டு வெளியே வந்த சுருதி …மீனாட்சி பாண்டியனிடம் “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…உள்ளே வாங்க”என்றழைத்தாள்…  

                சுதாகர் எப்பொழுதுமே இப்படி தான்…அவனிடம் எப்பொழுதுமே ஒரு தேடல் இருக்கும்…கேள்விகள் கேட்டுக்கொன்டே இருப்பான்…பல குழந்தைகள் கேட்க தயங்குகிற..யோசிக்காத கேள்விகளை கேட்பான்…அதனாலேயே பதில் கூற முடியா,பதில் தெரியாத நேரங்களில் அவனின் வாயை அடைக்க அடித்தனர்…இதனால் அவன் தனக்குள்ளேயே முடங்கி போனான்…அவனை உயிர்ப்பாய் வைத்துஇருந்தது இக்கேள்விகள் தான்…அவனின் விடைதெரியா பல கேள்விகளுக்கு விடையாய் வந்தவள் தான் சுருதி..இருவருக்கும் இடையான பிணைப்பு தாய் சேய் போன்றது…

            சுருதி”அத்தை…நான் ஏற்கனவே சொல்லிருக்கேன்…அவன் ஏதாவது வேணாம்னு சொன்னானா அதை ஏன்னு கேளுங்க..நீங்களா ஏதும் புரிஞ்சுகிட்டு அவனை அடிக்காதிங்க…இப்டி அடிச்சு அடிச்சு தான் முன்னாடி அவன் தன்னையே தனிமை படுத்திக்க ஆரம்பிச்சான்…அதுல இருந்து அவனை வெளிய கொண்டு வர பட்ட கஷ்டம் நமக்கு தான் தெரியும்…திரும்பி மொத இருந்தா…நம்ம பாக்குற உலகம் வேற..அவுங்க பாக்குற உலகம் வேற…அவர்களுக்கான தேடலும்,பயங்களும் அதிகம் அத்தை…நாம வெறுமனே பாக்குற கயிறு கூட அவங்களுக்கு பெரிய பாம்பாகவும்,மந்திர கயிறாகவும் தெரியும்….நல்லதும் கெட்டதும் கலந்து மொத்தமா கொட்டி கிடக்குற இந்த இணையஉலகத்துல அவனா எதையும் புரிஞ்சுக்காம நம்மட்ட வந்து கேள்வி கேக்குறானேன்னு நம்ம பெருமைபடனும் அத்தை..சுதாகர் ஒரு நாள் என்கிட்ட ஒரு நாள் கேட்டான்” ஏன் சுருதி..நான் ஏன் எங்க அம்மா அப்பாவுக்கு மகனா பிறக்கனும்..நீ ஏன் எனக்கு மாமா பொண்ணா இருக்க..இந்த உலகத்துல எத்தனையோ இடம் இருக்கும் போது நம்ம ஏன் இங்க இருக்கோம்… எத்தனையோ கோடி பேர் இருக்கும் போது குறிப்பிட்டவங்க மட்டும் நமக்கு அறிமுகம் ஏன் ஆகணும். எத்தனையோ கோடி பேர் இருக்கும் போது குறிப்பிட்டவங்க கிட்ட மட்டும் பழகுறோம்…இதெல்லாம் எப்படி நடக்குது..இதுக்கெல்லாம் எது மூலம்…இந்த உலகமே இப்டி தான் இருக்கனும் னு ஏன் ஒரு ப்ரோடோகால் ல இயங்கணும்…பேசுறதுக்கு எத்தனையோ கோடி விஷயம் இருக்கும் போது இப்ப இதை ஏன் நான் உன்கிட்ட கேக்கணும்.. “அப்டினு கேட்டான்…நிஜமா எனக்கு இதுக்கு பதில் தெரியலை..ஒரு நாள் அவன் கண்டுபிடிப்பான்….எனக்கு நம்பிக்கை இருக்கு..இனிமேல் அவனை அடிக்காதிங்க..என்னை விட உங்களுக்கு தான் அவன் முக்கியம்னு எனக்கு தெரியும்..இருந்தாலும் பத்திரமா பார்த்துக்கோங்க…சின்ன சின்ன விஷயங்களுக்காக உயிருப்புள்ளவர்களை நடைப்பிணமாக மாற்றாதீர்கள்…”என்று கூறிவிட்டு மேலே சென்றாள்…விட்ட தூக்கத்தை தொடர்வதற்காக….

              மேலே வந்து மணியே பார்த்தாள்..மணி 8 .20  ஆகிருந்தது…தலைவலிப்பது போல் இருந்தது…

                “நாம பேசின பேச்சுக்கு கீழே போய் காபி கேட்டா…விஷம் தான் கலந்து தரும் அத்தை…சோ ஒழுங்கா கடைக்கு போய் நாமளே பால்பாக்கெட் வாங்கிட்டு வருவோம்…”

                 அவள் இருந்த அறையினிலே சமைப்பதற்கான  அனைத்து வசதிகளும் இருந்தது…கீழே இறங்கி கடையே நோக்கி சென்றுகொண்டிருந்தாள்…

                  அப்பகுதி பணக்காரர்கள் மட்டுமே வசிக்கும் மதுரையின் புறநகர் பகுதியாகும்..மதுரையின் எந்தவிதமான ஆரவாரமுமின்றி அமைதியாக இயற்க்கை எழிலுடன் இருக்கும் பகுதி…அதனால் அங்கு தான் மதுரையின் அனைத்து பெரிய தலைகளும் வாக்கிங் ஜாக்கிங் செய்ய வருவது…

                      சுருதி சென்றுகொண்டிருந்த போது சில்லென்ற தென்றல் காற்று அவள் முகத்தில் மோத அவளை சுற்றி ஏய் தில் ஹே முஷ்கில் பிஜிஎம் கேட்பது போன்ற பிரமை…

                   “என்னடா இது இந்த பிஜிஎம் இப்ப கேட்குது…கே கே இங்க எங்கயோ தான் இருக்காரு போலயே…”என்று நினைத்து கொண்டு அவள் சுற்றும் முற்றும் பார்த்த வேளையில் சிறிது தூரத்திற்கு அப்பால் கே கே ஜாக்கிங் செய்ததால் ஏற்பட்ட வேர்வையில் நனைந்த டிஷர்ட் மற்றும் ட்ராக்சூட்டுடன் தன்னையே பார்த்துக்கொண்டு நிற்பது தெரிந்தது…

                    “பார்த்து சிரிப்போமா…இல்லை பாக்காத மாறியே போயிருவோமா…”யோசிச்சுக்கொண்டிருந்த வேளையில் கூர்பார்வையுடன் அவளை நெருங்கியிருந்தான்…

                   ஏற்றி போடப்பட்ட கொண்டையுடன்,வைட் கலர் டாப்பும்,ரெட் கலர் மிடியுடன் பார்ப்பதற்கு மிகவும் சிறிய பெண்ணாய் இருந்தாள்…”இவ சாறிலேயே சின்ன பொண்ணா தான் இருப்பா…இதுல ரொம்ப குட்டி பொண்ணா இருக்கா..” என்று நினைத்துக்கொண்டான்…

                 அவளை நெருங்கி “ஹாய்”என்றான்..

                அவள் தன்னை எட்டாவது அதிசயத்தை பார்ப்பது போல் ஆ வென்று பார்ப்பது அவனுக்கு சிரிப்பு வந்தது…

                  சிறியதாய் உதட்டை சுளித்து சிரித்து அவளின் முன் கையை ஆட்டி”இப்பயும் கனவு காண ஆரம்பிச்சுட்டியா…அப்டி என்ன தான் யோசிப்ப..”என்று கேட்டான்..

              சுயநினைவுக்கு வந்த சுருதி கொரில்லா சிரிக்குமே அப்டி ஒரு கேவலமான சிரிப்பை உதிர்த்துவிட்டு”இல்ல நீங்க சிரிக்குறிங்க சார்..”என்றாள்…

                 “ஏன் நான் சிரிக்க மாட்டேனா…எனக்கு நல்லா சிரிக்க தெரியும்…நீ இப்ப எங்கே போயிட்டு இருக்க..”என்று சிரிப்புடன்  கேட்டான்…

                “தயவு செஞ்சு சிரிக்காதே டா…அப்றம் ADHM பிஜிஎம் விட்டுட்டு உசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீயும் சுழிகையிலைனு அந்த பாட்டு தான் போடவேண்டி வரும்…”என்று லேசாக முணுமுணுத்தாள்…

                 “ஒன்னு இல்ல சார்..பால்பாக்கெட் வாங்க போறேன் சார்…நீங்க என்ன ஜாக்கிங்கா சார்..”

                  “ஆமாம் சுருதி…நீ மட்டும் தனியாவா இருக்க…”

                   “இல்லை சார்..அத்தை வீட்டுல தான் இருக்கேன் சார்…”திடீரென்று அவளுக்கு நேற்று பார்த்த சீரியலின் ஞாபகம் வந்தது…கேட்போமா..வேணாமா..கேட்டா திட்டுவாரா..என்று தனக்குள் பட்டிமன்றம் நடத்தி கொண்டிருந்தாள்…

                “என்ன சுருதி என்கிட்டே ஏதாவது கேக்கணுமா…கேளு சுருதி…”

                 “கேட்டா திட்டமாட்டிங்களே சார்…”

                 “ம்ம்…இல்லை…கேளு..”

                  “நீங்க நாகினி 3 சீரியல் பாப்பிங்களா சார்…”

                   “சாரி…சரியாய் கேட்கல..திருப்பி சொல்லு..”

                  “இல்லை...நாகினி 3 சீரியல் பாப்பிங்களானு கேட்டேன்…அதுல வர ஹீரோயின் மீனாக்கும் உங்கள மாதிரி OCD  தான் சார்…அதெப்படி சார் இந்த வியாதி பாம்புக்கு கூட வருமா சார்..”

                 அவன் முறைத்த மொறைப்பிலும் ஓங்கிய கரத்திலே தெரிந்தது..பொது இடம் என்று கூட பார்க்காமல் தன்னை அறைய போகிறான் என்று…

                “முருகா..என்னை காப்பாத்து..”என்று முனங்கி கொண்டிருந்தவளை பார்த்தவனுக்கு என்ன தோன்றியாதோ சிரிப்புடன் அவளின் தலையில் தட்டிவிட்டு “நீ அடங்கவே மாட்டியா சுருதி..கடைக்கு கிளம்பு…”என்று அவளை அனுப்பிவிட்டு வீட்டிற்கு கிளம்பினான்…

               மரியாதை பன்மைலாம் சொல்லாமல் கொள்ளாமல் தூரதேசம் சென்று விட்டது போல….

                  மாலை வேளையில் சுருதியும் சுதாகரும் கடைதெருவிற்கு சென்று கொண்டிருந்தனர்….

               “எங்கடா கதிரே காணோம்….”என்று சுருதி வினவினாள்…

                சுதாகர்”அவங்க அப்பத்தா வீட்டுக்கு போய்ட்டானாம்…முதலாம் அங்கே போணும்னாலே முக்காலே அழுவான்…இப்ப என்னனா அங்க தான் அதிகமா போறான்..அங்குட்டு எதுவும் புதுசா ப்ரெண்ட் கிடைச்சு இருப்பாங்க அதான்..போயிருப்பான்…”

              சுருதி “அப்ப சரி டா…”என்று பேசிக்கொன்டே கடைத்தெருவே நோக்கி சென்றார்கள்….

 

               

                            

                 

Advertisement