Advertisement

அத்தியாம் 3

 

    மனித இனங்கள் எறும்புகளாக மாறி சுறுசுறுப்பாக இயங்கிகொண்டிருந்த காலைவேளையில் சுருதியும்,சுதாகரும் சுகுட்டியில் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தனர்…

      சுதாகர்”ஏன் சுருதி இவ்வளவு வேகமா போற..கொஞ்சம் மெதுவா தான் போயேன்..” என்று நக்கலாக கேட்டான்…ஏனென்றால் சுருதி அவ்வளவு மெதுவாக உருட்டிக்கொண்டிருந்தாள்…

       சுருதி”ஆமாண்டா இன்னும் கொஞ்சம் வேகத்தை குறைக்கும்…என் ஹேர்ஸ்டைலெல்லாம் கலைஞ்சு முடி பறக்குற மாறி இல்ல..”என்று ரியர் வியூ கண்ணாடியை பார்த்துக்கொன்டே கூறினாள்…

        சுதாகர்”அடிப்பாவி…உன்கிட்ட இருக்க அந்த மானங்கெட்ட மனசாட்சியை கேட்டுச்சொல்லு..நீ பண்றதெல்லாம் நியாமானு நீ போறதே 20 ல தான்…இப்பயே சைக்கிள்ல போறவன்லாம் ஓவெர்டேக் பண்ணிட்டு போறான்..இதுல இன்னும் குறைச்சின நடந்துபோறவன் கூட ஓவெர்டேக் பண்ணிருவான்..இன்னைக்குனு பார்த்த அந்த ஹெல்மட் உடையனும் ஆண்டவரே…”

         சுருதி”நீயெண்டா அவரே டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்க..அவரே பாவம் பிக்பாஸ் ஷோஆல ரொம்ப டிஸ்டர்ப் ஆகுறாரு…”

       சுதாகர்”இந்த மொக்கைக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல..என் செல்லக்குட்டி கதிர் மட்டும் இருந்து இருந்த உன்கூடலாம் வர வேண்டிய பரிதாபநிலை எனக்கு வந்திருக்குமா… “

        இருவரும் இப்படி வழக்காடி சென்றுகொண்டிருந்த வேளையில் சாலையின் திருப்பத்தில் ஒரு சிறிய கூட்டம் நின்று கொண்டிருந்தது..கூட்டத்திலிருந்து கொஞ்சம் தள்ளி சாப்பாட்டு கூடை ஒன்று சிதறி கிடந்தது…இருவரும் இறங்கி சென்று அக்கூட்டத்தில் நுழைந்து பார்த்த போது வெண்ணிலாவின் மிதிவண்டி ஒரு லாரியின் மீது மோதி கீழே விழுந்து கிடந்தது…அருகில் வெண்ணிலா அழுதுகொண்டிருந்தாள்…

           சுருதி”ஏய் வெண்ணிலா என்ன ஆச்சு..உனக்கு ஒன்னும் இல்லையே…ஏன் ஐயா பார்த்துவரமாட்டிங்களா இப்டி தான் வரதா..இந்த பொண்ணுக்கு மட்டும் ஏதாச்சும் ஆயிருந்தா என்ன பண்றது..”என்று வெண்ணிலாவிடம் ஆரம்பித்து லாரி டிரைவரிடம் முடித்தாள்…

         லாரிடிரைவர்”ஏன்மே நீ வேற காலங்காத்தாலே வந்து என் ஜீவனே வாங்குறீங்க..நானும் ஹார்ன் அடிச்சுட்டே வந்தேன்மே இந்த பொண்ணு தான் கண்டுக்காம நேர வந்து மோதுது..எந்த சாமி புண்ணியமோ நா சடன் பிரேக் போட்டனாலே பொழைச்சுகிச்சு இல்லாட்டி என்னமே ஆறது…பார்த்து கூட்டிட்டு போமே இந்த வயசுல அப்டி என்ன கனவு கண்டுட்டு வருதுங்குளோ..”என்று திட்டிவிட்டு வண்டியே எடுத்தார்…

          அதன்பிறகு வெண்ணிலாவின் மிதிவண்டியும் மற்ற பொருள்களையும் எடுத்துக்கொண்டு அருகில் பூட்டிருந்த ஒரு கடையின் முன் அமர வைத்து தண்ணீர் குடிக்க வைத்தனர்..

           சுருதி”பார்த்து வர கூடாதா மா…எங்கயாச்சும் அடிபட்டு இருக்கா..நல்ல பாரு மா..”

           வெண்ணிலா”இல்ல மிஸ்..அடிபடலை லைட்டா கைல தான் சிராய்ச்சிருக்கு..”

            சுதாகர்”இவள் சைக்கிள்க்கு ஒன்னும் ஆகலை…நான் இதை எடுத்துக்கிட்டு ஸ்கூலுக்கு போறேன்..நீ இவளை கூட்டிட்டு போய் வீட்டுல விட்டுட்டு அவங்க அம்மாட்ட சொல்லிட்டு வரியா… “

         சுருதி”சரிடா சுதா…நீ போ..நான் விட்டுட்டு வரேன்..”

          சுதாகர் அவள் சைக்கிள்ளை எடுத்துக்கொண்டு கிளம்பினான்…சுருதி வெண்ணிலாவை வண்டியில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டாள்..

           வெண்ணிலாவின் வீட்டின் முன் இறக்கிவிட்டாள்…

        சுருதி”உங்கம்மா நம்பர் சொல்லு வெண்ணிலா..நான் வர சொல்றேன்..”

      வெண்ணிலா”இல்லை மிஸ் வேண்டாம்..நான் இருந்துக்குவேன்..அம்மா அவ்ளோ தூரத்தில் இருந்து வரணும்..எனக்கு தான் ஒண்ணுமில்லயே மிஸ் “

          வெண்ணிலா தமிழருக்குரிய மாநிறமும் ஒடிசலான தேகமும் அளவான உயரமும் கொண்டவள்…அவளுடைய மூக்குத்தியும் நீண்ட சடையுமே அவளின் அடையாளம்…அவளுக்கு முன் பிறந்த இரண்டு குழந்தைகள் இறந்து போனதால் இவள் பிறந்தவுடனே மூக்குத்தி குத்தி தவிட்டுக்கு குடுத்து வாங்கப்பட்டவள்…

           சுருதி”நீ மட்டும் எப்படி தனியா இருந்துக்குவ..எங்க அத்தை வீட்ல போய் இரு…நான் அத்தைட்ட சொல்லிட்டு போறேன்..”

           வெண்ணிலா”ஐயோ வேணாம் மிஸ்..நான் இருந்துக்குவேன்..நீங்க போங்க ப்ளீஸ்…”என்று சிறிது பயத்துடன் கூறினாள்..

            சுருதி”அஸ் யுவர் விஷ்…பார்த்து இருந்துக்கோ…நான் போய்ட்டு வரேன்..”என்று விடைபெற்று அவளின் சுகுட்டியை எடுத்துக்கொண்டு பள்ளியை வந்தடைந்தாள்…சுகுட்டியை அதன் இருப்பிடத்தில் தறித்து விட்டு பிரின்சிபால் அறையே நோக்கி சென்றாள்…

              அனுமதி கேட்டு உள்ளே நுழைத்தாள்..அங்கு கே.கே யும் நேற்று பார்த்த அந்த ஆசிரியரும் இருந்தனர்…

            கே.கே. “நீங்க போலாம் ஜெயா மேடம்..” அவனிடம் நன்றி கூறிவிட்டு அவளை பார்த்து சிறிதாக சிரித்துவிட்டு வெளியே சென்றார்…

        “இந்தம்மா ஏன் நம்மலே பார்த்து சிரிச்சுட்டு போறாங்க..நேத்துதான் மொறைச்சுட்டு போனாங்க..ஒருவேளை நக்கலா சிரிச்சுயிருப்பாங்களோ…ச்சீ ச்சீ இல்ல..வாஞ்சையா தான் இருந்துச்சு..”அவள் தனக்குள் பேசிக்கொண்டிருந்த வேளையில் கே.கே. அவளை மூன்று முறை பெயரை சொல்லி அழைத்து இருந்தான்…

           கே.கே “மிஸ் சுருதி…நீங்க வந்ததே லேட்..இதுல கனவு வேற காண ஆரம்பிச்சுட்டீங்களா…மணி 10.30 ஆச்சு…இதான் நீங்க ஸ்கூலுக்கு வர நேரமா..”

         சுருதி”இல்ல சார்..வர்ற வழில நம்ம ஸ்கூல்ல 8 A வகுப்புல படிக்குற வெண்ணிலான்ற பொண்ணுக்கு ஒரு சின்ன விபத்து சார்..அதான் அவளே வீட்டுல விட்டுட்டு வந்தேன் சார்…”

        கே.கே”அந்த பொண்ணுக்கு ஒன்னும் இல்லைல..இப்ப ஓகே தானே..”

         சுருதி”பெரிய அடிலாம் ஒன்னும் படலை சார்..கைல தான் லேசா சிராய்ச்சிருக்கு…”

        கே.கே”அப்ப சரி நீங்க வர லேட்டாகும்ன்றதே நீங்க எனக்கு கால் பண்ணி இன்போர்ம் பண்ணிருக்கலாம்..இனிமேல் சொல்லிருங்க..இப்ப நீங்க போலாம்.”என்று அவளை அனுப்பி வைத்தான்..

வெளியே வந்த சுருதி”இந்தாளு யாருடா நம்மளை பேசவே விடாம அவனா பேசிட்டு நம்மலே வெளியே தள்ளி விட்டுறான்..”என்று புலம்பிக்கொன்டே வந்த வேளையில் மைதானத்தில் தனியாக அர்ஜுன் அமர்ந்து இருப்பது தெரிந்தது….

       “இவன் ஏன் கிளாஸ் நேரத்துல தனியா உக்காந்து இருக்கான்..என்னனு போய்க் கேட்போமா …கேட்போம்…என்ன பண்ணிர போறான்..”

       அர்ஜுனை பின்னிருந்து நெருங்கி சென்ற வேளையில் அவன் தமிழில் எதையோ படித்துக்கொண்டிருப்பது தெரிந்தது…அது அவனுக்கு புரியவில்லையோ மனனம் செய்ய முடியவில்லையோ..அவன் மண்டையில் அவனே கொட்டி கொண்டிருந்தான்..

       சுருதி”அர்ஜுன் இங்க என்ன பண்ணிட்டு இருக்க..கிளாஸ்க்கு போகாம..”

        அர்ஜுன்”பார்த்தா எப்படி தெரியுது…படிச்சுட்டு இருக்கேன்…கிளாஸ்ல இருக்க பிடிக்கல அதான்…”

         “இவன் எல்லார்டையும் இப்டி தான்   பேசுவானா...இல்ல நம்ம டம்மிபீஸ்னு தெரிஞ்சுக்கிட்டு இப்டி பேசுறானா…”என்று யோசித்துக்கொண்டியிருந்தாள்….

        அர்ஜுன்”ரொம்ப யோசிக்காதிங்க…நான் எல்லார்டையும் இப்டி தான் பேசுவேன்..நீங்க உங்க வேலையே பாருங்க..”

    சுருதி அசட்டு சிரிப்பை ஒன்றை உதிர்த்துவிட்டு”என்னமோ படிச்சிட்டு இருந்தியே..அது உனக்கு புரியலைனு நினைக்குறேன்..கொடு..எனக்கு தெரியுதான்னு பாக்குறேன்..”

       அர்ஜுன்”நான் தமிழ்ல ஐங்குறுநூறு படிக்குறேன்…நீங்க ஆங்கிலச் டீச்சர் உங்களுக்கு எப்படி புரியும் வேணாம்…”

       சுருதி”அப்டியா..புத்தகத்தே குடு..தெரிஞ்சா சொல்லித்தரேன்..இல்லாட்டி உன்கிட்டயே குடுத்துற போறேன்..இதுனால என்ன ஆகபோது..”

        அர்ஜுன்”சரி ஐங்குறுநூறுல ஐந்திணை இருக்குல்ல அதுல ஒவ்வொரு திணையும் எழுதின ஆசிரியர் யாருனு படிக்குறேன்..குழப்பிகிட்டே இருக்கு.. “

             அர்ஜுனிடமிருந்து புத்தகத்தை வாங்கி பார்த்தாள்…

 

மருதம்       – ஓரம்போகியார்

நெய்தல்     -அம்மூவனார்

குறிஞ்சி     – கபிலர்

பாலை        -ஓதலாந்தையார்

முல்லை     -பேயனார்

 

சுருதி “இதுதானா செம ஈஸி..முதல்ல ஐந்திணையை வரிசையா எழுதிக்கணும் குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை னு  அப்புறம் நான் இப்ப சொல்ல போற ஸ்லோகத்தையே மனப்பாடமா வச்சிக்கோ அவ்ளோ தான்..”

    “ப்பை எடுத்து பேய் ஓரம்மா வைச்சுச்சு அதை மூன்று பேர் ஓதச்சுட்டாங்க அவ்ளோதான்…

 

 குறிஞ்சி   -கபிலர்

 முல்லை   -பேயனார்

 மருதம்     -ஓரம்போகியார்

 நெய்தல்   -அம்மூவனார்

 பாலை      -ஓதலாந்தையார் …   அவ்ளோ தான்”

    அர்ஜுன்”வாவ்..சூப்பருங்க..தாங்க யூ..”என்று சிரிப்புடன் கூறினான்…

    சுருதி”இப்ப நாம ரெண்டு பெரும் பிரெண்ட்ஸ் ஓகே..”

   அர்ஜுன் முகத்திலிருந்த சிரிப்பு துணிக்கொண்டு துடைத்தது போல் மாயம் ஆனது..அர்ஜுன்”நான் பொண்ணுங்க கூடலாம் பிரெண்ட்ஸ்ஷிப் வைச்சுக்குறது இல்ல..”என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்…

 

      சுருதி ஜெயராம் பள்ளியில் சேர்ந்து இன்றுடன் ஒரு வாரம் முடிந்து விட்டது…இந்த ஒரு வாரத்தில் கதிர் குடும்பத்தில் இருந்த பிரச்சினை முடிந்து அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தனர்..சுருதியும் கே.கே. விடம் விதவிதமாக அர்ச்சனை வாங்கிவிட்டிருந்தாள்…அன்று நடந்த உரையாடலுக்கு பின் அர்ஜுன் பள்ளியில் அவளை பார்க்கின்ற நேரத்தில் விஷ் பண்ண பழகி இருந்தான்…எல்லாம் நன்றாக சென்று கொண்டு இருப்பது போல் இருந்தது..

             மாலை மங்கும் வேளையில் சுருதி சுதாகர் கதிர் மூவரும் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்…

     கதிர்”மூஞ்சை பாரேன்..செய்றதையெல்லாம் செஞ்சுட்டு நய்யா பைசாக்கு பிரயோஜனம் இல்லாதவன் மாதிரி…அப்டி தவ்விக்கிட்டு நல்லது செஞ்சு புண்ணியம் தேடணும்னா உன் நோட்டை கொடுத்துஇருக்கணும் டா..”

          “உன் மூக்கு வழியா கைய விட்டு உன் மூளைய வெளிய எடுத்து அதுல கொஞ்சமாச்சு யோசிக்கிற திறமை இருக்கானு பாக்கணும் டா..”

          “உன்னைலாம் தனி ஊசல் மாதிரி கட்டி தொங்கவிட்டு உன்னை ஆட்டிவிட்டு நீ போய்ட்டு வர வேகத்தை வைச்சு கணக்கீடு எழுதணும் டா..”

               “ஜன்னல் இல்லாத ரூம்ல பூட்டி வச்சு அதுல நைட்ரஸ் ஆக்சைடு விட்டு உன்னை சிரிக்க வைச்சே சாகடிக்கணும் டா…”

   “எனக்கு வர்ற கோவத்துக்கு உன் காதுல பெண்டிரைவ் மாட்டி உன் கண்ணுல படம் பாப்பேன் டா…”

     “எவ்ளோ திட்டுறேன் பதில் பேசுறானா பாருங்க சுருதி அக்கா…இனிமே உன்னை திட்டணும்னா கூகிள்ல சர்ச் பண்ணி தான் திட்டனும்..அக்கா உங்க போன்ஆ குடுங்க…” என்று விதவிதமாக சுதாகரை திட்டிக்கொண்டிருந்தான்…

        கதிர் மாநிறத்தில் வயதுக்கேற்ற உயரத்தில் கொஞ்சம் கம்மியாக ..ஒடிசலான தேகத்துடன் கள்ளமில்லா சிரிப்புடன் பார்த்தவுடனே நீ ரொம்ப நல்லவன் டா என்று சொல்லும் அளவிற்கு இருப்பான்…ஆனால் தற்போது சிறிது கோவத்தில் இருந்தான்…

       சுருதி”ஹா ஹா ஹா…கதிர் ஏன்டா இப்டி திட்டுற என்ன ஆச்சு…சுதாகர் பாவம் டா…”

        அதற்கேற்றாற் போல தான் சுதாகரும் பாவமாக இருந்தான்…

       கதிர்”அதுவா அக்கா..அதொரு சோகக்கதை கா..மேல பாருங்க..”

        சுருதி”மேலயா…எதுக்குடா..”

        கதிர்”கொசுவர்த்தி சுருள் சுத்தி பிளாஷ்பேக் போனும் கா..அதுக்கு மேல தான் பாக்கணும் கா..”

          இரண்டு நாட்களுக்கு முன் அறிவியல் வகுப்பில் …..

 

      சுதாகர்”டேய் கதிர் உன்னோட சயின்ஸ் அசைன்மென்ட் எழுதுனதை தா..சங்கர் கேக்குறான் டா பார்த்து எழுதிட்டு தர்றானாம்..பாவம் டா யாரும்  தரமாட்றாங்களாம்…”

      கதிர்”டேய் அரைலூசு அசைன்மென்ட் அவங்களா எழுதணும் டா ..யாரையும் பார்த்து இல்ல டா முட்டாள்..”

      சுதாகர்”அது எங்களுக்கு தெரியாதா…பாவம்டா அவனுக்கு சொல்லித்தர யாரும் இல்லையாம் டா..அவங்க அம்மா அப்பா படிக்காதவங்கள…”

        கதிர்”டேய் இவன் என்னைக்கு டா அசைன்மெண்ட்லாம் வைச்சுருக்கான்..இவன்லாம் எழுத மாட்டான் டா..கொடுத்தாலும் திருப்பி கொண்டு வருவானோ இல்லையோ நான் தரமாட்டேன் பா…அவ்வளவு அக்கறை இருந்தா உன்னதயே கொடுக்க வேண்டி தானே பி ..”

          சுதாகர்”அவனும் நானும் s  ல ஆரம்பிக்குற பேர்னாலே அடுத்தடுத்து வருவோம் டா..ஜெயா மிஸ் கண்டு பிடிச்சுருவாங்க..நீ k இவன் s உங்களுக்கு இடையே 15  பேராச்சும் இருப்பாங்கடா”

          கதிர்”இல்லை சுதா எனக்கு சரியாய் படலை..வேணாம் டா”

           சுதாகர்”ப்ளீஸ் எனக்காக டா..”என்று அவனை கெஞ்சி கொஞ்சி நோட்டை கதிரிடமிருந்து வாங்கி சங்கரிடம் கொடுத்தான்…

    இன்று காலை அறிவியல் வகுப்பில்…..

 

    ஆசிரியர்”நான் கொடுத்த அசைன்மென்ட் முடிச்ச எல்லாரும் வைங்க முடிக்காதவங்க எந்திருங்க…”என்று கூறினார்…

       கதிர்”டேய்..எங்கே டா என் நோட்டை அவன் கொடுத்துருவனு சொல்லி வாங்கி குடுத்தியே..அவனையும் காணோம் என் நோட்டையும் காணோம்..ஐயோ இப்ப சங்கர் ட்ட தான் என்அசைன்மென்ட்  நோட் இருக்குனு சொன்ன…பார்த்து எழுத குடுத்து இருக்கியான்னு சொல்லி பிரின்சிபால் ட்ட அனுப்புவாங்களே டா..”

      சுதாகர்”சாரி டா…என்ன ஆச்சுன்னு தெரில..அவனே காணோமே…”என்று கூறிக்கொண்டிருந்தான்…

        ஆசிரியர்”சுதாகர் கதிர் என்ன ரெண்டு பெரும் பேசிட்டு இருக்கீங்க..அசைன்மென்ட் வைச்சுட்டீங்களா..”.

      சுதாகர் கதிர்”இல்லை மிஸ் வைக்கலை..வீட்டுல மறந்து வைச்சுட்டேன்..”என்று கதிர் சுதாகரை முறைத்து கொண்டும், சுதாகர் கதிரை இறைஞ்சல் பார்வை பார்த்து கொண்டும் கூறினர்…

      கதிர்”நீ போய் வைக்க வேண்டிதானே ஏன் நடிக்குற..”என்று முணுமுணுத்தான்…

      ஆசிரியை”ரெண்டு பெரும் ஒண்ணா தான் மறந்து வைச்சுட்டு வருவீங்களா..பொய் வாயே திறந்தாலே பொய் ..ரெண்டு பேருக்கும் 5  மார்க் கிடையாது…உங்க அசைன்மென்ட்ட 10  தடவை எழுதிட்டு வரீங்க..உட்காருங்க..”

 

     கதிர்”பிளாஷ் பேக் முடிஞ்சுருச்சு..கீழ  குனிங்க..அப்பத்துல இருந்து இந்த நாய் அமைதியா இருக்கு..நான் இப்டி லூசு மாறி திட்டிட்டு கிடக்கேன்…”

     சுருதி”நீ ஹெல்ப் பண்ண நினைச்சது தப்பு இல்ல..அதை பண்ண விதம் தான் தப்பு..நீங்க எழுதுனப்ப அவனையும் கூப்பிட்டு நாம வீட்டுல உட்கார வைச்சு அவனுக்கும் சொல்லி குடுத்து எழுத வைச்சு இருக்கனும்…நீயும் இப்டி குற்றஉணர்ச்சில அசைன்மென்ட் வைக்காம பனிஷ்மென்ட் வாங்கியிருக்க தேவையில்ல…”

         அதற்குள் கதிரின் வீடு வந்திருந்தது …”சரி ரொம்ப சோகமா இருக்க மாறி நடிக்காதே..ரெண்டு நாள் லீவு தானே எழுதிருவோம் டா..”என்று கூறிவிட்டு கதிர் வீட்டிற்கு சென்று விட்டான்…

         சுதாகர்”எவ்ளோ நேரம் சோகமா இருக்க மாறி நடிக்குறது…சுருதி நிஜமாவே என் நோட்டை வீட்டுல மறந்து வைச்சுட்டு வந்துட்டேன்..அதான் வைக்கலை..”

         சுருதி”இது மட்டும் அவனுக்கு தெரியணும்…அவன் தியரிட்டிகள் ளா திட்டுனது எல்லாம் ப்ராக்டிகலா செஞ்சுருவான் டா..”

         கதிரின் வீட்டிலிருந்து மூன்று வீடு தள்ளி இருந்தா அவர்களின் வீட்டை அடைந்தனர்…

          சுருதி”என்ன சுதா உங்கப்பா வண்டி நிக்குது…அதுக்குள்ளயுமா வந்துட்டாரு…நிறைய செருப்பு வேற வெளிய கிடக்கேடா..”

          சுதாகர்”ஆமாம் சுருதி…என் தங்கச்சிக்கு வேற உடம்பு சரி இல்லனு ஸ்கூலுக்கு போகாம வீட்டுல இருந்தாலே..அவளுக்கு எதுவுமோ சுருதி ” என்று பதட்டத்துடன் கேட்டான்

         சுருதி”லூசு..அப்டிலாம் இருக்காது..வா உள்ளே போய் பாக்கலாம்..”என்று இருவரும் உள்ளே நுழைந்தனர்….

    

உள்ளே நுழைந்த இருவரும் பிரீஸ் ஆகி நின்று விட்டனர்…    

 

Advertisement