Advertisement

SITN 2:

அத்தியாம் 2 :

 

சுருதி பியூனுடன் எட்டாம்  வகுப்பு அ பிரிவு வகுப்பறையை நெருங்கியிருந்த வேளையில் அவ்வகுப்பறைக்கு வெளியே சுதாகர் ஒரு ஆசிரியையிடம் திட்டுவாங்கிக்கொண்டிருந்தான்…..

உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் இந்த மாறி கேள்விலாம் கேட்ககூடாதுனு…உன்னால தினமும் அரைமணி நேரம் பீரியட் வேஸ்ட் ஆகுறது தான் மிச்சம்…இப்ப அதுக்கு பதில் தெரிஞ்சு நீ என்ன பண்ண போற..இந்த வயசுல எது தெரிஞ்சுக்கணுமோ அது தெரிஞ்சுக்கிட்டா போதுமானது..தேவையில்லாதலாம் தெரிஞ்சுக்க வேணாம்…நாளைக்கு உங்க அம்மாவே கூட்டிட்டு வந்து என்னை பாரு…”என்று திட்டிக்கொண்டிருந்த வேளையில் அவர்களை நெருங்கிருந்தனர் சுருதியும் பியூனும்….

சுருதி”excuseme  மேடம்…சாரி டு இன்டெர்ர்ப்ட் யு…ஏதாவது பிரச்னையா மேடம்…” என்று கேட்டாள்…

40 வயது மதிக்கத்தக்க வயதில் இருந்த ஆசிரியை இவளை ஒருமாதிரி பார்த்துவிட்டு பியூனை கேள்வியாக நோக்கினார்…

பியூன்”இவங்க தான் மேடம்  புதுசா வந்துஇருக்குற போட்டிக்கான ட்ரைனிங் டீச்சர்..”

ஆசிரியை”ஓ..நீங்க தான் அவங்களா…ஆல் தி பெஸ்ட்..அப்பறம் இது என் கிளாஸ்ல நடந்த பிரச்சனை…நீங்க தலையிட வேண்டாம்..உங்களுக்கு குடுத்த வேலையை மட்டும் பாருங்க…”இளகாரத்துடன் கூறிவிட்டு விறுவிறுவென்று சென்று விட்டார்…

இப்ப நம்ம என்ன கேட்டுடோம்னு இந்த அம்மா இப்டி சொல்லிட்டு போறாங்க..இன்னைக்கு நேரமே சரி இல்ல எல்லார்டையும் திட்டு வாங்குறோம்..மோத அந்த பிரின்சிபால் இப்ப இந்த அம்மா..”என்று மனதிற்குள் புலம்பி கொண்டிருந்தாள்…

பியூன் “டீச்சர் பாப்பா நீங்க ஒன்னும்  விசனப்படாதிங்க அவங்க தான் இது வரைக்கும் போட்டிக்கு இன்ச்சார்ஜ் அ இருந்தாங்க அதான்…அவங்க இடத்துக்கு நீங்க வந்துட்டிங்கனு கோவப்படுறாங்க…”

ஒஹ்…பரவாயில்லை அண்ணா…நீங்க போங்க நான் பார்த்துகிறேன் அண்ணா..”

சரி என்று கூறிவிட்டு பியூன் சென்றுவிட்டார்…சுதாகரை திருப்பி பார்த்தாள்..அவன் இன்னும் வகுப்பறையினுள் செல்லாமல் தீவிர யோசனையில் இருந்தான்…அவன் மண்டையில் நறுக்கென்று கொட்டினாள்…

ஆஆ…சுருதி ஏன் கொட்டுன வலிக்குது…”

ஓய் மரியாதையா மிஸ்ன்னு கூப்டு..ஆமாம் நீ அப்டி என்ன கேள்விக்கேட்ட…அவங்க அப்படி திட்டிட்டு போறாங்க..”

அதுவா சுருதி ச்சை மிஸ்..இப்ப நியூஸ்ல ஹாட் டாபிக்கா போயிட்டு இருக்குல்ல இரண்டு ஆண்கள் கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்லி கோர்ட்ல கேஸ் போட்டுஇருக்காங்களா …அது சரியா தப்பா?…ஏன் நம்ம நாட்டுல allowed இல்ல..வெளிநாட்டுல மட்டும் ஏத்துக்குறாங்கனு கேட்டேன்..அதுக்கு தான் அந்த மிஸ் திட்டிட்டு போறாங்க..நீ தான் எந்த டவுட் இருந்தாலும் மிஸ்ட்ட கேக்கணும் நீயா எதுவும் புரிஞ்சுக்க கூடாதுனு சொல்லி இருக்க அதான் கேட்டேன்..”என்று நீண்ட விளக்கம் குடுத்தான் சுதாகர்…

சுதாகர் வயதுக்குமீறிய உயரமும்..திராவிட நிறமும் மெலிதான தேகமும் கொண்டவன்….கேள்வியின் நாயகன்…எதற்கெடுத்தாலும் கேள்விகள் கேட்பவன்..இது  ஏன் இப்படி இருக்கிறது….இது ஏன் அப்படி இருக்க கூடாதுனு..இந்த காரணத்தினாலே பலரால் வெறுக்கபடுபவன்….நம்மை பொறுத்த வரை குழந்தைகள் ரிமோட் கண்ட்ரோலாக இருக்க வேண்டுமே   தவிர….தன்னிச்சையாக அல்ல….

சுருதி சிரித்துவிட்டு”நான் சொல்றேன் டா..”என்று கூறஆரம்பித்தாள்..

இதை ஒருபால் திருமணம் என்று குறிப்பிடுவார்கள்…வரலாற்றில் முதல் ஓரின சேர்க்கையினராக     கி.மு. 2400 ல் வாழ்ந்த கும்ஹோத் மற்றும் நியான்ஹக்னம் இருந்தனர்…முதன்முதலாக 2001 ல் நெதர்லாந்தில் ஒருபால் திருமணத்தை ஒப்புக்கொள்ளும் சட்டம் கொண்டுவரப்பட்டது…2016 ன் நிலைப்படிஅர்கெந்தினா..பெல்ஜியம்,பிரேசில்,கனடா,கொலம்பியா,டென்மார்க்,பிரான்ஸ்,ஐசுலாந்து,அயர்லாந்து,லக்ஸம்பர்க்,மெக்ஸிகோ, நெதர்லாந்து,நியூசிலாந்து,நார்வெ,போர்த்துக்கல்,தென்னாப்பிரிக்கா, எசுப்பானியா,சுவீடன்,ஐக்கிய ராச்சியம்,ஐக்கிய அமெரிக்கநாடு,உருகுவே ஆகிய நாடுகளில் ஒருபால் திருமணம் சட்டப்பூர்வமாக ஏற்று கொள்ளப்பட்டது..ஆப்ரிக்க நாடுகளில் தென் ஆப்பிரிக்காவும் ,ஆசியாவில் இசுரேலில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது..பலநாடுகள் இத்திருமணத்துக்கு தடைவிதித்துள்ளன.சில நாடுகளில் இத்திருமணத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் மரணதண்டனை விதித்துள்ளன..இந்தியாவில் டிசம்பர் 11 2013 ல் உச்ச நீதிமன்றம் இதை தண்டனைக்குரியதாக அறிவித்துள்ளது..இந்திய கலாச்சாரத்தின்படி இது தவறானதாக பார்க்கப்படுகிறது..இதுவும் ஒரு நாள் மாறலாம்..மாறமாயும் போகலாம்..இப்ப உன் டவுட் முடிஞ்சுச்சா வா உள்ளே போகலாம்..ரொம்ப நேரமாயிருச்சு..”

அவ்ளோ தானே இதை சொல்றதுக்கா அவங்க என்னை வெளிய நிக்க விட்டாங்க..சுருதி வா அந்த மிஸ் கூட போய் சண்டை போடலாம்..”

சுதா டார்லி…சண்டைலாம் நமக்கு ஒத்து வராது…வா கிளாஸ்க்கு போவோம்….அதான்,உனக்கு நான் சொல்லிட்டேன்ல..”

இருந்தாலும் என்னை வெளிய நிக்க வச்சது ஓவர்…சரி நீ சொல்றனாலே விடுறேன்..இல்லாட்டி அவ்ளோ தான் பார்த்துக்கோ…”

ஹா ஹா ஹா…வா வா..வடை சுட்டது போதும்..எங்கே உன் வாலே காணோம்..”

அவன் உள்ளே தான் இருக்கான்..வா உள்ளே போலாம்.”

இருவரும் வகுப்பறையினுள் சென்று விட்டனர்…

இவ்வளவு நேரம் நடந்ததே நான்கு கண்கள் கூர்மையாவும் ஆச்சரியத்துடனும் நோக்கி கொண்டிருந்தன…

உள்ளே சென்ற சுருதியை அனைத்து மாணவர்களும் ஆராய்ச்சியாகவும் ஆர்வமாகவும் பார்த்துக்கொண்டு தங்களுக்குள்ளேயே பேசிகொண்டிருந்தனர்.சுதாகர் தன் இடத்தில அமர்ந்தான்..

சுருதி”ஆல் ஆப் யு ஸ்டுடென்ட்ஸ் …நான் சுருதி..உங்களுக்கு புதுசா வந்துஇருக்குற ஆங்கில ஆசிரியை மற்றும் வரபோற போட்டிக்கான இன்ச்சார்ஜ்ம் நான் தான்.”என்று கூறியவுடன் அனைத்து மாணவர்களும் வேகமாக எழுந்து நின்று

கூட்ட்ட் மோர்னிங்க்க்க் டீச்செர்ர்ர்ர்ர்ர்ர்..”என்று காலை வணக்கம் கூறினர்…

குட் மோர்னிங் ஸ்டுடென்ட்ஸ்…எல்லாரும் உக்காருங்க…என்னை பத்தி மோத அறிமுகம் படுத்திக்கிறேன்..என் சொந்த ஊர் நீலகிரி…இப்ப மதுரைல தான் இருக்கேன்…பி.எ., பி.எட்., முடிச்சுட்டு ஒரு வருஷம் எங்க ஊருல இருக்க பள்ளியில வேலை பார்த்தேன்..இப்ப இங்கே வந்திருக்கேன்..இப்ப எல்லாரும் உங்களை பத்தி அறிமுகப்படுத்திக்கோங்க..உங்களுக்கு தெரிஞ்ச ஸ்போர்ட்ஸ் லைக் ஸ்விம்மிங் வாலிபால் கிரிக்கெட் இது மாதிரி சொல்லுங்க..”

சுதாகர்,கதிரவன் உட்பட அனைத்து மாணவர்களும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர்…பெண்களில் இருவருக்கு மட்டுமே நீச்சல் தெரியும் என்றும் இதற்கு முன் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டதாகவும் கூறினர்…அடுத்த வகுப்பிற்கான மணி அடித்து விட்டது..”தாங்க் யுயு யு யு  டீச்செர்ர்ர்ர்ர் “என்ற மாணவர்களின் குரல்களுடன் விடைபெற்று வெளியே வந்தாள்…

அறிமுகம் நடந்து கொண்டிருந்த போது பியூன் இடையில் வந்து அவளுக்கான நேர அட்டவணையே கொடுத்து விட்டு சென்றிந்தார்..அடுத்த வகுப்பு பத்தாம் வகுப்பு இ பிரிவு…

அவ்வகுப்பறையே நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் “இந்த வெண்ணிலா ஏன் ஸ்விம்மிங் தெரியும்னு சொல்லல…அவ ஸ்டேட் லெவல் போட்டியிலும் ரெண்டு வருசத்துக்கு முன்னாடி கலந்துக்கிட்டாலே..ஏன் சொல்லல..என்னவா இருக்கும்..”என்று யோசித்தவாறு  சென்றாள்…

வெண்ணிலா சுருதியின் அத்தை வீட்டிற்க்கு அருகில் இருக்கும் பெண்..அவளின் பெற்றோர் உடன் சுருதிக்கு நன்று பழக்கம்…அதான் மூலம் தெரியும்..

அங்கேயும் முதல் வகுப்பில் நடந்ததை போன்று ஆராய்ச்சி பார்வைகளுக்கு பிறகு அவள் ஆசிரியை என்று அறிந்தவுடன் குடுத்த மரியாதையை பெற்றுக்கொண்டு அமர்ந்தாள்…

அப்போது அந்த வகுப்பின் கடைசி வரிசையில் காலையில் ஒருவனின் மண்டையை உடைத்த அர்ஜுன் தனியாக அமர்ந்து இருப்பதை பார்த்தாள்...

அர்ஜுன் வயதுக்கேற்ற உயரமும்,சிவந்த நிறமும் அளவான தேகமும் கொண்டு பார்பதுக்கு அழகாக இருந்தான்…அவன் கண்களில் ஒரு கோவம் தெரிந்தது…

இவன் அவன்ல…இவன் மட்டும் ஏன் தனியா உக்காந்து இருக்கான்..பசங்க கூட சேர்ந்து உட்காரலாம்ல..சரி சேர்ந்து உட்கார சொல்லுவோம்..”

லாஸ்ட் ரோ...உன் பேர் அர்ஜுன் தானே..ஏன் தனியா உக்காந்து இருக்க..செகண்ட் ரௌல அந்த பொண்ணுகிட்ட இடம் இருக்கு பாரு..அங்கே வந்து உட்காரு..”

அவ்வகுப்பறையில் இருபாலரும் கலந்து தான் அமர்ந்து இருந்தனர்..அதனால் தான் சுருதி அப்படி கூறியது..

அர்ஜுன் சுருதி கூறிய இடத்தை பார்த்தான்..சுருதியும் பார்த்தாள்..அங்கு இருந்த மாணவி பயத்துடன் ஒதுங்கி தான் பொருட்களை பைக்குள் வைப்பது தெரிந்தது..

இவ ஏன் இப்டி பயப்படுறா…என்ன ஆச்சு…”என்று நினைத்தாள்..

அர்ஜுன் அவன் பையை எடுத்துகொண்டு சுருதியை நோக்கி வந்து கொண்டிருந்தான்..

இவன் ஏன் இங்கே வர்றன்..நாம அங்கே தானே உட்கார சொன்னோம்..”

என்னாலே அங்கலாம் உட்கார முடியாது…இப்ப இந்த கிளசஸ்லயே உட்கார பிடிக்கலை..நான் போறேன்..பிரின்ஸிபால்ட்டா கம்பிளைன்ட் பண்ணனும்னா பண்ணிக்கோங்க..”அவளை நெருங்கி சென்று ஐ டோன்ட் கேர் என்று கூறிவிட்டு அவள் அமரச்சொன்ன இடத்தில் உள்ள மாணவியின் முகத்தை பார்த்துவிட்டு இவளையும் பார்த்துவிட்டு வெளியே சென்று விட்டான்..

சுருதிக்கு நடப்பது ஒன்றும் விளங்கவில்லை…அவன் பார்த்து சென்ற மாணவியை இப்பொழுது அவளும் பார்த்தாள் அவள் முகத்தில் ஒரு ஆசுவாசம் தெரிந்தது…சுருதிக்கு அர்ஜுன் எதுவோ குறிப்பால் உணர்த்துவது போல தோன்றியது…

சுருதி தன்னை இயல்பு நிலைக்கு கொண்டுவந்து மாணவர்களை அறிமுகப்படுத்தி கொள்ளச்சொன்னாள்..

இவ்வாறு மாலை பள்ளி முடியும் வரை 5 வகுப்பறைக்கு சென்றாள்..இத்தனை வகுப்பறையில் மொத்தம் 6 மாணவிகளுக்கு மட்டுமே நீச்சல் தெரிந்து இருந்தது..அதில் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டவர்கள் 3  மட்டுமே…

இதெல்லாம் யோசித்துகொன்டே சுருதி பிரின்சிபால் கே.கே அறைக்கு சென்றாள்..அனுமதி கேட்டு விட்டு உள்ளே சென்று கதவை  சரியாக அடைத்துவிட்டு அமர்ந்தாள்...

கே.கே”வாங்க மிஸ் சுருதி ..கிளாஸ்லாம் எப்படி இருந்தது..எல்லாம் ஓகே தானே..”

சுருதி”எல்லாம் நல்லா இருந்தது சார்..”

கே.கே”ஓகே மிஸ் சுருதி..நீங்க கிரமார் போர்சன் மட்டும் எடுத்தா போதும்..மீதி இருக்குறது எல்லாம் முதல்ல யார்யார் எடுத்தாங்களோ அவங்களே பார்த்துப்பாங்க..அப்புறம் ஒரு நாளைக்கு உங்களுக்கு ரெண்டு கிளாஸ் மட்டும் தான் இருக்கும் …”

சுருதி”சார்..நா சொன்னதுக்கு கூட நீங்க தானே எல்லாம் கிளாஸ்ஸயும் பார்த்துக்க சொன்னிங்க..”

கே கே”எஸ்..நான் தான் சொன்னேன்..இப்ப நான் தான் வேணாம்னு சொல்றேன்..உங்க கேப்பபிளிட்டி எவ்ளோனு பார்க்க தா சொன்னேன்..வெல்..நான் நினைச்சத விட மோசம் இல்ல..அப்புறம் நான் சொன்னதே மட்டும் செய்ய தான் நீங்க புரிஞ்சதா..நீங்க போலாம்..”என்று கூறிவிட்டு போன் செய்து யாருக்கோ பேச ஆரம்பித்து விட்டான்..

சுருதியும் வேறு வழியில்லாமல் அமைதியாக வெளியே வந்துவிட்டாள்..வெளியே சுதாகர் ஒருபுறமும் அர்ஜுன் அவன் தாத்தாவுடன் மறுபுறமும் உட்கார்ந்து இருந்தனர்…சுருதி அவர்களை தாண்டி மைதானத்தில் வந்து நின்றாள்…சிறிது நேரத்தில் சுதாகர் வந்தான்..

ஏன் டா என்ன ஆச்சு…ஏன் பிரின்சிபால் ரூம்க்கு வெளியே நின்னுட்டு இருந்தே..அந்த மிஸ் போய் சொல்லி குடுத்துட்டாங்களா..இதுக்கலாமா டா சொல்லுவாங்க..நா அத்தைட்ட  பேசுறேன் டா..”

மண்டைவெட்டு..பொறுமையா பேசு..என்ன ஆச்சுனே தெரியாம நீ பாட்டுக்கு பேசிட்டு இருப்ப..பிரின்சிபால் அதுக்கு தான் கூப்டாரு..இனிமே இந்த மாறி கேள்விலாம் கேக்ககூடாது..அப்படி கேக்கனும்னா அவங்க ஸ்டாப் ரூம்ல இருக்கும் போது கேக்கணும்..நாளைக்கு அம்மாவை கூப்டு வர வேணாம்னு சொன்னாரு..”

ஓஹ்..சரி சரி…ஆமாம் கதிர் எங்கே..காலைல இருந்தே ஒருமாறி இருந்தான்..தனியா போயிருவான..உன்கூட வரமாட்டானா..”

இப்ப தானே பொறுமையா பேசுனு சொன்னேன்..அவன் என் கூட தான் வருவான்..அவன் பெற்றோர்க்குள்ள சண்டை அதான்…சோ,கதிரோட அப்பா அவங்க அம்மா வீட்டுக்கும் கதிரோட அம்மா அவங்க அம்மா வீட்டுக்கும் போய்ட்டாங்க..அதனாலே அவங்க அப்பா வந்து அவனே கூட்டிட்டு போய்ட்டாரு..பாவம் சுருதி அவன்……இவங்களுக்கு இதான் வேலை ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை சண்டை போட்டு கோவிச்சுக்கிட்டு போறது..ச்சை சுருதி நீதான் இதல்லாம் சரி பண்ணனும்..”என்று சிரியஸாக கூறிக்கொண்டிருந்தான் சுதாகர் …

என்னது நானா..நமக்கு ஏண்டா அடுத்த வீட்டு பிரச்னைலாம்…வாயால வடை சுட்டோமானு இல்லாம இது எதுக்கு நமக்கு…வா அத்தை தேட போறாங்க..”

 

டிபிக்கல் சுருதி….நாம் தினசரி வாழ்வில் சந்திக்கும் பெண்களை போல் அடுத்தவர் வம்புக்கு செல்லாமல்…கோவம் வந்தால் வெளியே காமிக்காமல் தனக்குள்ளயே புலம்பி கொண்டு..அதிகார வர்க்கத்திடம் குனிந்து …..வாழும் சாதாரண பெண்….

 

Advertisement