Advertisement

அத்தியாயம் 12

          இந்த வருடத்திற்கான வெற்றி பெற்ற பள்ளியாக மதுரை ஜெயராம் பள்ளி அறிவிக்கப்பட்டது…வெற்றிபெற்றதுக்கான சன்மானம் 25000  ஆகும்…அது போட்டியில் பங்குபெற்ற மாணவர்கள் மற்றும் பொறுப்பெடுத்த ஆசிரியர் அவர்களுக்கு தரப்படும்…

       கே கே மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தான்…இறுதியில் வெற்றிபெற்றாகி விட்டது…இதற்கு அனைத்துக்கும் காரணம் சுருதி தான்…அவள் தேர்தெடுத்த யாரையும் நான் வேண்டாம் என்றேன்..ஆனால் அவர்களால் தான் இந்த வெற்றி இன்று சாத்தியமாகியது…எனவே அனைத்து கிரெடிட்டையும் சுருதி அண்ட் கோ வுக்கே கொடுத்துவிட்டான்…மேடையில் பேசும் போதும் இதையே சொல்லி இருந்தான்…

       சுருதி,சுதாகர்,அர்ஜுன்,வெண்ணிலா,கதிர் இவர்களின் மகிழ்ச்சியையும் சொல்லி தான் ஆகவேண்டுமா…ஆடி தீர்த்துவிட்டார்கள்…இந்த ஆட்டத்தை கூட கே கே அமைதியாக பார்த்திருந்தான்….

     கே கே அருகில் சென்ற சுருதி”நாங்க சொன்ன மாறி நாங்க ஜெயிச்சுட்டோம்…சோ அதுனால நீங்க எங்களுக்கு பார்ட்டி வைக்கணும் “என்று அவனை பாடாய்படுத்தி மாலையில் ஒரு புகழ் பெற்ற ரெஸ்ட்ராண்ட்டில் வைக்குமாறு சம்மதம் வாங்கிருந்தாள்….

    மாலையில் கேகே,சுருதி,சுதாகர்,அர்ஜுன்,கதிர் என்று அனைவரும் அந்த ரெஸ்ட்ராண்ட்டில் கூடி இருக்க விதவிதமான உணவுகள் டேபிளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது…

     சுதாகர்”சுருதி எவ்வளவு டிஷ் இருக்குனு பாரு…நா கூட நம்ம பிரின்சிபால் கஞ்சபிசுனரினு நினைச்சேன்…பரவாஇல்லை இவ்வளவு வாங்கி தந்திருக்கார்ல…தெரிஞ்சு இருந்தா நான்லாம் நேத்துல இருந்து பட்டினியா கிடந்துருப்பேன்…”

கவனிக்க வேண்டிய சுருதியோ கவனிக்காமல் யாரோ வருவதற்காக காத்திருப்பவர் போல் வெளியே ஒரு பார்வை கடிகாரத்தை ஒரு பார்வை என்று பார்த்து கொண்டிருந்தாள்…

   கதிர்”சுதா..அதான் நான் மதியானதுல இருந்து பட்டினியா கிடக்கேன் டா…செம விருந்து…”

        “அர்ஜுன் சுருதி அக்கா போன் எடுத்து குடு…இதல்லாம் போட்டோ எடுப்போம்…”

 என்று அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே கேகே தன் மொபைலை எடுத்து கதிரிடம் குடுத்தான்…

      கதிர் வாங்காமல் திருட்டு முழி முழித்துக்கொண்டிருந்தான்…நம்ம அமைதியா தானே பேசினோம் எப்படி கேட்டுச்சு

      சுதாகரோ நம்ம பேசுவதும் கேட்டு இருக்குமோ என்று முழித்தான்…

       கே கே “வாங்க எல்லாரும் ஒரு பிக் எடுப்போம்…கம் ஆன் கைஸ்…கிரேசி போஸ் குடுங்க…”

     ஏன்டா அப்டி சொன்னோம் என்று கேகே நினைக்கும் அளவிற்கு செம காமெடியான போஸ் எல்லாம் குடுக்க ஆரம்பித்திருந்தனர் சுதா,வெண்ணிலா …

      சிக்கனை கடிப்பது போலவும்…காலி தட்டை சுதாகர் பிடித்து கொண்டு பாவமான முகத்துடன் பார்ப்பது போலவும் வெண்ணிலா தன் தட்டில் அனைத்தையும் வைத்து கொண்டு அவனுக்கு சிறிய துண்டை போனால்போகிறது என்று போடுவது போலவும் இன்னும் பல கோமாளி தனங்களுடன் போஸ் கொடுத்தனர்…சுருதி இதில் எதிலும் பங்குபெறாமல் வாசலிலே பார்த்து கொண்டிருந்தாள்…சிறிது நேரத்தில் காண்டான கே கே அவர்களிடமே மொபைல் குடுத்து விட்டான்…

  கே கே “சுருதி வேற யாராவது வரணுமா…ஏன் வெளியே வெளியே பாக்குற…ஆர் யு ஓகே…”

            “இல்லை இல்லை யாரும் வரல…சும்மா தான்…”என்று அவள் கூறிக்கொண்டிருக்கும் போதே கருப்பு நிற சாரியில் மிக மிக அழகாக அவளின் அடையாளமான கன்னகுழி புன்னைகையுடன் உள்நுழைத்தாள் கார்த்திகா…

     சில நொடியாயினும் கார்த்திகாவை இமைக்க மறந்து பார்த்தான் கே கே…உடனே இயல்பு நிலைக்கு திரும்பிய கேகே சுருதியை முறைத்தான்…

        “ஹி ஹி ஹி…சாரி சார்… உங்ககிட்ட சொல்லல…ஒரு ஹாப்பி நியூஸ் சொல்ல தான் கூப்பிட்டேன்…”

          “ஹாப்பி நியூஸ் சொல்லற அளவுக்கு நீங்க கிளோஸ் ஆகிட்டீங்களா மேடம்…”என்று அவன் முடிப்பதற்குள் அவர்களை நெருங்கிய கார்த்திகா

            “ஆமா கார்த்தி நாங்க ரொம்ப கிளோஸ் தான்…எங்க ரெண்டு பேருக்கும் கிளோஸ் ஆன ஒருத்தருக்கு நாங்க ரெண்டு பேருமே கிளோஸ்ன்றதுனால நாங்களும் கிளோஸ் கார்த்திக்….சரி நீ பேசுறதே விடு…சுருதி ஏதோ ஹாப்பி நியூஸ்ன்னு சொன்னாலே அதே கேப்போம் சொல்லு சுருதி…”

            “நெஸ்ட் வீக் எனக்கு நிச்சியதார்தம்…நீங்க ரெண்டு பெரும் கண்டிப்பா வரணும்….”

             அர்ஜுன்”அப்ப நாங்க வர வேண்டாமா…”என்று சிறிது கோபத்துடன் கேட்டான்…

        “டேய் இதே உங்களுக்கு நான் சொல்லனுமா…வராட்டி கொன்றுவேன்…நீங்க வருவீங்கன்னு எனக்கு தெரியும்…உங்க மாம்ஸ்அ பாக்க நீங்க வருவீங்கன்னு தெரியும் டா…”

    கே கே “சுருதி மாப்பிளை யாரு…என்ன பன்றாங்க…”

   சுதாகர் “மாப்பிளை எங்க அண்ணன் தான்…அதாவது சுருதியோட அத்தை பையன்…ஜெயகுமார்…லெக்ச்சரர்… “

        “ஆமா …நொண்டி குமார்…இந்த கல்யாணம் நடக்குமா இல்லையானு வேற தெரில…நான் வேற இவங்க எல்லாத்தையும் கூப்டுட்டு இருக்கேன்…என்னமோ ஆண்டவன் விட்ட வழி…”சுருதி மைண்ட் வாய்ஸ்…

    ஹி ஹி ஹி என்று அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தாள்…

கே கே வும் கார்த்திகாவும் மாறி மாறி வாழ்த்துக்கள் சொன்னதை ஏற்றுக்கொண்டாள்…அனைவரும் உணவருந்த ஆரம்பித்தனர்…

     சாப்பிட்டு முடித்தவுடன் சுருதி அண்ட் கோ கிளம்பினர் பொடி நடையாக…ஏனெனில் அவர்கள் வீடு நடக்கும் தூரத்தில் தான் இருந்தது…

    

         அவர்கள் சென்றவுடன் அங்கு தனித்து இருந்தது கேகே மற்றும் கார்த்திகா…

     “அப்புறம் கார்த்திக்…”

      “அப்புறம் என்ன அப்புறம் சாப்பிட்டு வேகமா எந்திரி வீட்டுக்கு போலாம்…”

   “வேகமா போய் என்ன பண்ண போறீங்க கார்த்திக்…உங்க வீட்டுல யாரு உங்களுக்கு காத்துட்டு இருக்க போறாங்க…அப்டியே உங்களுக்கு ஒரு ஆள் காத்துட்டு இருக்குராங்கன அது நான் தான் மேன்…ஆனால் நா கூட உங்க பக்கத்துல தான் இருக்கேன்…”

     “எனக்காக யாரு காத்துட்டு இருக்குறதையும் நா விரும்பல கார்த்திகா…”

    “ஆனால் நா உங்கள மட்டும் தானே விரும்புறேன்…”

    “நம்ம விரும்புற எல்லாமே நமக்கு கிடைக்கும்னு அவசியம் இல்லை…”

    “ஓஹ்…அப்டி சொல்றிங்க சரி…இனிமே நீங்க என்ன சொன்னாலும் நா விடுறதா இல்லை மேன்…சோ இந்த பேச்சை விடுங்க…”

உனக்கே உன் வாழ்கை மேல் அக்கறை இல்லாத போது எனக்கு என்ன என்று ஒரு தோள்குலுக்கலுடன் அமைதியாகி விட்டான்…

    இருவரும் சாப்பிட்டு முடித்து வெளியே வந்தபோது கார்த்திகாவிற்கு நேராக நான்கு இளைஞர்கள் வந்து கொண்டிருந்தனர்…நால்வரும் தங்கள் நினைவில் இல்லை என்பது அவர்கள் அங்கிட்டும் இங்கிட்டும் ஆடி கொண்டு வருவதில் தெரிந்தது…ஆனால் கார்த்திகாவோ கொலுசில் சிக்கிய சேலையை விடுவிப்பதற்க்காக கீழே குனிந்து அதை சரிசெய்த படியே வந்தாள்…

      அவர்களில் ஒருவன் அவளை இடிக்க வேண்டிய நொடியில் அவள் கையை பிடித்து தன் அருகே இழுத்திருந்தான் கே கே…இழுத்த பின்பே அவனை நிமிர்ந்து பார்த்த கார்த்திகா அவனை நிமிர்ந்து பார்த்து என்னவென்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்டாள்…

    அதில் ஒரு நிமிடம் மூச்சு விட மறந்த கே கே மீண்டும் இயல்பு  நிலைக்கு திரும்பி”நேரா பார்த்து நடந்து வரணும்…கீழே குனிச்சு பாத்துட்டே வந்தா…ஒருத்தன் உன்னை இடிக்க வந்தான் அதான்…”

     “ஓஹ்…அதான் யாரோ இடிக்கிறதுக்கு நாமளே இடிச்சுரலாம்னு நீங்க இடிச்சுகிட்டங்களா கார்த்திக்…”

 உன்கிட்டலாம் மனுஷன் பேச முடியுமா என்று ஒரு லுக்கை விட்டு அவன் காரை நோக்கி சென்றான்…

       இவர்கள் இருவரின் காதல் வாழ்க்கைக்கு காலம்  தான் பதில் சொல்ல வேண்டும்…கண்டிப்பாக இருவரும் இணைவர் என்ற நம்பிக்கையுடன் நாம் விடை பெறுவோம்…

      ******************

விடிந்தும் விடியாத அதிகாலை வேளையில் சுருதியும் சுதாகரும் மாடியில் திண்டின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு சூரிய உதயத்தை பார்த்தவாறு டி குடித்து கொண்டிருந்தனர்…

சுதாகர்”சுருதி இன்னைக்கு தான் லாஸ்ட் என்ன…நீ உங்க வீட்டுக்கு போயிருவ என்ன மண்டை வெட்டு…”

        “ஆமா டா…நீ ஜாலியா தான் இருப்ப…நா என்ன பண்ண போறேன்னு தெரில…அந்த சுமார் மூஞ்சி குமார் கூட என் வாழ்கை என்ன ஆக போதோ…”

         “விடு சுருதி…”

         “ஆமாம் டா…எங்க அப்பா கைல கால்ல விழுந்தாச்சும் இந்த கல்யாணத்தை நிப்பாட்டனும் டா…”

        “உங்க அப்பா நிப்பாட்டுவாருனு நீ நம்புற…”

         “நடக்காது தான்…நம்பிக்கை தான் வாழ்கை…இல்லாட்டி அவன் கூட குப்பை கொட்ட வேண்டியது தான்…”

       “அதான் சரி…லூசு மாறி பண்ணாம கல்யாணத்துக்கு ஜாலியா ரெடி ஆகு…”

        “ஹா ஹா…ஆமாம் டா என்னை கட்டிக்க அவனுக்கே இல்லாத வருத்தம் நமக்கு எதுக்கு…”

சிறிது நேரம் இருவரும் அமைதியாக அந்த இளஞ்சிவப்பு நிற வானை பார்த்தவாறு இருந்தனர்…

       “ஏன் சுருதி இந்த உலகத்திலே கஷ்டமான வேலை எது…”

        “நம்ம மனசுக்கு பிடிச்சு செய்யுற எல்லா வேலையும் ஈசி தான்…நமக்கு பிடிக்காம செய்யுற எந்த சின்ன வேலையுமே கஷ்டமான வேலை தான்…”என்று பல பேர் கூறும் பதிலை அவளும் கூறினாள்…

        “இல்லை சுருதி…இந்த உலகத்திலே கஷ்டமான வேலை எது தெரியுமா ஒரு மனுஷனோட கழிவை இன்னொரு மனுஷன் அள்ளுறது தான் சுருதி…உலகத்துல எங்கேயுமே இப்டி இல்லை…நம்ம நாட்டே தவிர…இங்கே இருக்க ஒவ்வொரு மனுஷனும் இந்த வேலையே செய்யணும்…அப்ப தான் சுத்தம் செய்யறவங்களோட கஷ்டம் தெரியும்…அதுக்கான மாற்று ஏற்பாடும் பண்ணுவாங்க…நானும் ஒரு நாள் அந்த வேலை பாப்பேன் சுருதி…”

எப்பொழுதும் போல அவனின் சிந்தனையை நினைத்து மனதில் மெச்சி கொண்டாள்…

     இருவரும் ஏதோ ஏதோ பேசியவாறு நேரத்தை கடத்தினர்…

       காலை 10 மணி போல சுருதி சுதாகர் வெண்ணிலா கதிர் அர்ஜுன் அனைவரும் மதுரை ரயில் நிலையத்திற்கு வந்திருந்தனர்…சுருதியை வழியனுப்ப…

     சுருதி ஏற வேண்டிய ரயில் வந்தவுடன் அனைவருடனும் பிரியா விடை பெற்று ஏறினாள்…

 

 அனைவரும் கையசைக்க வண்டி கிளம்பியது,…

நாமளும் அவர்களுடன் கையசைத்து விடைபெறுவோமாக….

        

Advertisement