Advertisement

அத்தியாயம் 10 :

புத்தம் புது காலை..

பொன்னிற வேளை..

என் வாழ்விலே..

தினந்தோறும் தோன்றும்

           பள்ளிக்கு அருகில் இருந்த பெட்டிக்கடையில் ஒலித்துக்கொண்டிருந்த பாடலை  கேட்டவாறே பள்ளியினுள் நுழைத்தாள் சுருதி…எப்பொழுதும் இருக்கும் எந்த ஆரவாரமும் இன்றி பள்ளி மிகவும் அமைதியாக இருந்தது…சுத்தம் செய்யும் பணியாளர்கள் மட்டுமே வந்து சுத்தம் செய்து கொண்டிருந்தனர்…

        வண்டியை பார்க்கிங் ஏரியாவில்

நிறுத்திவிட்டு தன் மணிக்கட்டை திருப்பி மணியை பார்த்தாள் மணி 8 தான் ஆகிருந்தது…இன்றைய போட்டிகள் 10 மணிக்கு தான்…அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் சரியாக இருக்கின்றதா என்று பார்க்க தான் முதல் ஆளாக பள்ளிக்கு வந்திருந்தாள்…

        இவ்வாறு யோசித்தவாரே  பிரின்சிபால் அறையை அடைந்த சுருதி கதவை தட்டாமலே உள்ளே சென்றிருந்தாள்…

            கதவு திறக்கப்பட்ட சத்தத்தில் உள்ளே இருந்த கேகே மற்றும் பள்ளியின் டிரஸ்டியான கார்த்திகா இருவரும் திரும்பி பார்த்தனர்…ஏதோ காரசாரமான விவாதம் நடந்திருக்கும் போல இருவர் முகத்திலும் அப்பட்டமாக கோவம் தெரிந்தது…

            அறையின் உள் நுழைத்த சுருதிக்கோ பேச்சே வரவில்லை…கே கே அறையில் கார்த்திகா இருப்பார் என்று அவள்  நினைத்துக்கூட பார்க்கவில்லை…

          வெண்ணிற புடவையில் …லேயர் கட் வெட்டப்பட்ட கூந்தல் காற்றிலாட அதை ஒதுக்கி விட்டவாறே திரும்பிய கார்த்திகாவின் அழகில் சுருதி சொக்கி தான் போனாள்…

 “என்ன பொண்ணு டா…இவ்ளோ அழகா இருக்காங்க…நா மட்டும் பையனா பிறந்து இருந்தா கண்டிப்பா தூக்கிருப்பேன்…ம்ம்ம்…”என்று நீண்ட பெருமூச்சு விட்டாள்…

      அந்த நீண்ட பெருமூச்சை முடிக்க கூடவில்லை…எப்போதும் போல கேகே திட்ட ஆரம்பித்து இருந்தான்…

        “சுருதி…பெர்மிசன் கேட்டு வரணும்னு தெரியாதா…நீங்கல்லாம் என்ன டீச்சர்…”என்றான் கோவத்துடன்…

        “சாரி சார்…சாரி மேம்…”

       “பரவாஇல்லை சுருதி…வாங்க உக்காருங்க…”என்று அன்றலர்ந்த மலர் போல் புன்னகை முகத்துடன் கூறினாள் கார்த்திகா…

        சுருதி கேகே வின் முகத்தை பார்த்தாள்…அதில் உன் வேலையே மட்டும் பார் என்ற செய்தி இருந்தது…அதை புரிந்துகொண்டு “இல்லை மேம்…கொஞ்சம் வேலை இருக்கு…போட்டிக்கு எல்லாம் சரியாய் இருக்கானு பாக்கணும்…அதுக்கு தான் நா சீக்கிரமாவே வந்தேன்..நா போய் என் வேலைய பாக்குறேன்…தாங் யூ மேம்…”என்று கூறிவிட்டு மீண்டும் கேகே வின் முகத்தை பார்த்துவிட்டு வெளியேறினாள்…

    “என்ன கார்த்திக்…உங்களோட ஒரு பார்வையில எல்லாத்தையும் புரிஞ்சுகிட்டு வெளிய போறாங்க…செம கோச்சிங் போல…அதான் என்னை வேண்டாம்னு சொல்றிங்களோ…”

     “கார்த்திகா மைண்ட் யுவர் டங்க்…அவள் ஒரு டீச்சர் அவ்வளவு தான்…அதுவும் இன்னும் டூ டேஸ்ல இங்கே இருந்து போயிருவா…சின்ன பொண்ணு…அவளை போய்…”

        “ஓஹ்…அப்றோம் ஏன் நேத்து அவங்க கைய பிடிச்சு ஆறுதல் சொல்லிட்டு இருந்திங்க கார்த்திக்…எப்போ இருந்து நீங்க இங்கே வேலை பாக்குற டீச்சர் கை பிடிச்சுலாம் ஆறுதல் சொல்ல ஆரம்பிச்சீங்க…இந்த கார்த்திக் எனக்கு ரொம்ப புதுசா இருக்கே…”

     “நீயே சொல்ற அது ஆறுதல்ன்னு…அப்புறம் எப்படி இப்டி பேசுற…”

      “அப்டினா சரி…என் வழில யாரும் வராம இருந்தா சரி தான்…ஷி இஸ் சம்திங் டிபரென்ட்…அவட்ட ஏதோ இருக்கு…ரொம்ப அட்ராக்ட்டிவ்வா இருக்கா…குட்டியா அழகா…”என்று நிறுத்திவிட்டு கூர்மையாக அவனை பார்த்தாள்…அந்த உணர்வுகளை வெளியிடாத முகத்திலும் சிறிது ரசிப்பு தன்மையோ…

      “புரிஞ்சா சரி…உன் வழில யாரும் இடையில் வரமாட்டாங்க…ஏன்னா நீ போற வழியே தப்பு கார்த்திகா…இன்னைக்கும் என்னைக்கும் நீ என் வாழ்க்கைல வர முடியாது…”

        “அதான் ஏன்னு கேக்குறேன்…உங்களுக்காக மட்டும் தான் இத்தனை வருஷம் கல்யாணம் பண்ணிக்காம இருக்கேன்…அதான் உங்க சோ கால்டு லவர் இப்ப இல்லைல உங்க லைப்ல…”

  நீ என்னமோ பேசிக்கொள் என்று கே கே அந்த அறையை விட்டு வெளியே சென்றிருந்தான்…

         கல்லூரியில் கே கே வின் ஜூனியர் தான் கார்த்திகா…கார்த்திகா தன் வாழ்க்கையில் கேகே வை காதலனாக  கொண்டு வர நினைத்த போது அவன் வாழ்க்கையில் எப்போதோ ஷாலினி காதலியாகிருந்தாள்….

கார்த்திகா தனக்குள் பூத்த காதலை தனக்குள்ளே வைத்திருக்க வேண்டுமென்று தான் நினைத்தாள்…ஆனால் அதன் பாரம் தாங்காமல் அவன் தனக்கு சாதகமான பதிலை சொல்ல மாட்டான் என்று தெரிந்தும் அவனிடம் கூறினாள்…அவன் ஏற்கவில்லை…விலகி சென்றாள்…

ஒரு நல்ல நாளில் கேகே மற்றும் ஷாலினியின் திருமண வைபவம் நடந்தது…சிறிது காலத்திலே அவர்கள் பிரிந்தும் விட்டார்கள்…அதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிந்ததோ இல்லையோ கார்த்திகாவினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை…எப்படியும் அவர்கள் இருவரும் இணைவார்கள் என்று நினைத்திருந்தாள்…ஆனால் அது மட்டும் நடக்கவே இல்லை…

ஷாலினி 6 வருடங்களுக்கு முன் அவள் கூட பணிபுரிந்தவரை மணந்திருந்தாள்…கே கே வின் வாழ்வில் வேறு பெண்கள் வரலாம் என்றே இதனை நாட்கள் அவனை நெருங்காமல் இருந்தாள்…ஆனால் இவனோ இன்னும் தேவுடா காத்துகொண்டு இருக்கிறான்…அதனால் தான் மீண்டும் அவள் வாழ்க்கையில் கேகே வை இணைக்க நினைத்து கார்த்திகா இங்கு வந்திருக்கிறாள்…

 அந்த அறையை விட்டு வெளியேறிய கேகே சுருதி இருக்கும் இடத்தை அடைத்து அன்றைய போட்டிக்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்திருந்தான்…

    சிறிது நேரத்தில் போட்டி நடைபெறும் இடத்தை அடைந்த கார்த்திகா கேகே தன் பார்வை வட்டத்தில் விழும் தூரத்தில் அமர்ந்துகொண்டு தன் வேலையை பார்க்க ஆரம்பித்திருந்தாள்…அதான் மக்களே கே கே வை சைட் அடிக்குறது…

      இதையெல்லாம் கேகே கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை…தன் வேலையை பார்த்துக்கொண்டிருந்தான்…ஆனால் சுருதி கார்த்திகா அந்த இடத்தில் வந்து அமர்ந்திலிருந்து கேகே செல்லும் இடத்துக்கெல்லாம் அவளின் பார்வையும் திரும்பியதை கவனித்து கொண்டு தானிருந்தாள்…

       “கேகே சார்கும்…இந்த அம்மாக்கும் பல கனெக்சன் இருக்கும் போலயே…கண்டு பிடிக்குறோம்…”என்று அவள் மைண்ட் வாய்ஸ்ல் பேசிக்கொண்டிருக்கும்போதே எப்போதும் போல கேகே அவளை ரெண்டு தடவைக்கும் மேல் அழைத்திருந்தான்…

       அப்பொழுது தான் அதை கவனித்த சுருதி அசட்டு சிரிப்புடனே”சாரி சார்…சொல்லுங்க சார்…”

        “எப்ப பார்த்தாலும் கனவு காண போயிரு…மணி 9 ஆச்சு…இன்னும் அர்ஜுனை காணாமேன்னு கேட்டேன் …”

       “இப்ப வந்துருவாங்க சார்…நாலு பேரும் சேந்து வராத சொன்னாங்க சார்…”என்று மௌத் வாய்ஸ்லும்…

        “நான் கனவா காணுறேன்…பாவி உனக்காக தானே அந்த கார்த்திகாவே வாட்ச் பண்ணிட்டு இருக்கேன்…நீயும் எதையும் கண்டுக்காத…உன் வாழ்க்கையில விளக்கேத்த பாக்குறவங்களையும் திட்டு…”என்று மைண்ட் வாய்ஸ்லும் கூறியிருந்தாள்…

       “ஓ…அப்ப சரி…நல்லா பன்னுவான்ல…எதுவும் சொதப்பிற மாட்டன்ல…இது தான் லாஸ்ட் போட்டி…தமிழ் சிறுகதை…”

       “கண்டிப்பா நல்லா பண்ணுவான் சார்…நம்பிக்கை வைங்க சார்…”மௌத் வாய்ஸ்

       “நீ இப்டி இதையே நினைச்சுட்டு இரு…நீயெல்லாம் என்ன டிசைனோ…அவ்வளவு அழகான பொண்ணு ஒன்னு உன்னையே பார்த்துட்டு இருக்கு…நீ கண்டுக்க கூட மாட்டுற…நான் மட்டும் ஆம்பளையா இருந்து இப்டி ஒரு சூப்பர் பிகர் அதும் ரிச் பிகர் என்னை லுக் விட்டு இருந்துச்சுன்னா அஞ்சே நிமிசத்துல ப்ரொபோஸ் பண்ணி 5 நாள்ல கல்யாணமே பண்ணிருப்பேன்…நீ வேஸ்ட்…”மைண்ட் வாய்ஸ்

      “என்னமோ சொல்ற…உன்னை நம்பி தான் இருக்கேன்…”என்று பேசிக்கொண்டிருக்கும் போதே வெண்ணிலா,கதிர்,சுதா,அர்ஜுன் அவர்களை நெருங்கிருந்தனர்…

             “குட் மோர்னிங் சார்…குட் மோர்னிங் மிஸ்…”என்று நால்வரும் கோரஸாக கூறினர்…

   கே கே   “குட் மோர்னிங்…குட் மோர்னிங்…அர்ஜுன் ரெடியா இருக்கியா…ஆல் தி பெஸ்ட்…நல்லா பண்ணு…”

    அர்ஜுன்”தாங் யூ சார்…கண்டிப்பா நல்லா பண்ணுவேன் சார்…”

       கே கே “நல்லா பண்ண சரி தான்…ஓகே கைஸ் எல்லாரும் வர ஆரம்பிச்சுட்டாங்க…நா போறேன்…ஆல் தி பெஸ்ட் அர்ஜுன்…”என்று கூறிவிட்டு மத்த பிரின்சிபால் எல்லாரும் அமர்ந்திருக்கும் இடத்தில் போய் அமர்ந்தான்…

     அந்த இடம் சிறிது நேரத்தில் பரபரப்பானது…போட்டி ஆரம்பிக்கப்படவிருந்தது…

       சுருதி&கோ தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போய் அமர்ந்தனர்…

       ஐந்து நபர்கள் கையில் அழகிய வேலைப்பாடமைந்த பெட்டிகளை கொண்டு வந்து கார்த்திகாவின் முன்னால் இருந்த மேஜையில் வைத்தனர்…அவர்களுக்கு நன்றி கூறி அனுப்பிவைத்த கார்த்திகா மைக்கில் பேச ஆரம்பித்தாள்….

        “குட் மோர்னிங் ஸ்டுடென்ட்ஸ்…இன்னைக்கு தான் லாஸ்ட் போட்டி இல்லை…இன்றைக்கான போட்டி என்னனு உங்களுக்கே தெரியும் இருந்தாலும்  சொல்ல வேண்டியது என் கடமை இல்லையா…நாம் என்ன தான் ஆங்கில வழி கல்வி முறை பள்ளியாக இருந்தாலும் தமிழ் நம் அனைவரது தாய்மொழி இல்லையா…அதில் என் பள்ளி மாணவர்கள் சாதிக்க வேண்டும் அதற்காக தான் இந்த போட்டியை நான் இந்த வருடத்தில் கொண்டுவந்தேன்…தமிழில் சிறுகதை எழுத வேண்டும்…இப்ப என் முன்னாடி இருக்க ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு தலைப்பு இருக்கும்…அந்த தலைப்புக்கு தான் நீங்க சிறுகதை எழுதணும்…அதுவும் உங்களுக்கான தலைப்பு நீங்க தேர்ந்தெடுத்தது தான்…எப்படின்னா நேத்து நீங்க treasure hunt ல கண்டுபிடிச்ச சாவியை வைச்சு தான் இங்க இருக்க பெட்டியை திறக்க முடியும்…சோ நீங்க தேர்ந்தெடுத்தது தானே…அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் இதில் வெற்றியாளரை தேர்ந்தெடுக்க போவது நானோ உங்க ஆசிரியர்களோ இல்லை…தமிழகத்தின் சிறந்த சிறுகதை எழுத்தாளரான சாகித்ய அகாதமி விருதுபெற்ற வண்ணதாசன் அவர்களே ஆவார்…10  மணிக்கு ஆரம்பிக்கும் இப்போட்டி 12 மணிக்கு முடிவுறும்…வெற்றி பெற்றவர் பற்றிய அறிவிப்பு மற்றும் பரிசு நாளை வழங்கப்படும்… “

     “நீலகிரி பள்ளி சார்பாக போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர் இங்கே வாங்க…”என்று இவ்வாறு இப்போட்டியில் பங்குபெறும் 4 பள்ளியின் பெயர் சொல்லி அழைத்து பெட்டியை திறந்து அவர்களுக்கான தலைப்பை குடுத்தாள்…

    இறுதியாக”மதுரை பள்ளி மாணவர் வாங்க…”என்ற அழைப்பிற்கு மற்றவர்களின் ஆல் தி பெஸ்ட்ஐ வாங்கி கொண்டு கார்த்திகா இருக்கும் இடத்தை அடைந்தான் அர்ஜுன்…

        அவன் வந்தவுடன் பெட்டியை திறந்து அவனுக்கான தலைப்பை எடுத்து வாசித்தாள்…

        “ஸ்பரிசம் இல்லா தீண்டல் நீ…”

 சுதாகர்”என்னடா வைட் மூன் நம்மளுக்கு மட்டும் இப்டி ஒரு தலைப்பு…ரொமான்டிக்கா…”

    வெண்ணிலா”அதானே டா…மத்தவங்களுக்கு எல்லாம் கருகிய ரோஜாக்கள்…சில இறகுகள்…அப்டினு நல்ல தலைப்பை குடுத்துட்டு நம்மளுக்கு மட்டும் இப்டி குடுத்துட்டானுக…”

        கதிருக்கு…சுருதிக்கு…கே கேவிருக்கு என்று அனைவர்க்கும் அதே கேள்வி தான் மனதினில்…

         கதிர்”என்ன சுருதி அக்கா இப்டி ஆயிருச்சு…அர்ஜுன் எழுதிருவானா…”

       சுருதி மையமான ஒரு சிரிப்புடன் “நல்லா எழுதுவான்…எனக்கு நம்பிக்கை இருக்கு டா…”

      அப்டி இப்டி என்று அனைத்து பேச்சுகளுடன் மணி 12 ஆகியது…போட்டியில் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவரும் தங்களின் கதையை குடுத்து விட்டு அவர்கள் இருந்த அறையை விட்டு தங்களின் குழுவை நோக்கி வந்தனர்…

       அர்ஜுனை நெருங்கிய சுருதி &கோ”எப்படி டா எழுதுன…”என்று விசாரித்தனர்…

          “தெரியலை டா…”என்று அவனும் மையமாக சிரித்து வைத்தான்…

         மூவரும் அவனை வினோதமாக பார்த்தனர்…வெண்ணிலா தான் கேட்டாள்…

       “இது என்ன அண்ணா பதில்…நல்லா எழுதி இருக்கேனு சொல்லு…இல்லாட்டி நல்லா எழுதலைனு சொல்லு…அதே விட்டுட்டு தெரியலைனு சொல்லற…”அதற்கும் சிரித்து தான் வைத்தான்…

        “சரி விடுங்க டா..அவனே எழுதி சோர்வா இருப்பான் அவனை போயிடு நைநை னு கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க…வாங்க வீட்டுக்கு போயிடு வருவோம்…உங்க பிரின்சிபால் நம்மளை பிடிச்சுகிட்டார்னா வெளியே விட மாட்டார்…வாங்க அதுக்குள்ளயும் எஸ் ஆயிருவோம்…”என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் கார்த்திகாவின் பி ஏ சுருதியை நெருங்கிருந்தான்…

      “ex cuse me  மேம்…உங்கள கார்த்திகா மேம் மீட் பண்ணனும்னு நினைக்குறாங்க…பக்கத்துல இருக்க ரெஸ்ட்ரானட்கு வர சொன்னாங்க மேம்…”

       “இப்பயேவா…”

 “ஆமாம் மேம்…”

  “ஓஹ்…சரி…நீங்க போங்க…நா வரேன்…”

  “இல்லை மேம்…உங்களையும் கையோட கூட்டிட்டு வர சொன்னாங்க …”

   “ஓஹ்…சரி ஒரு டூ மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க…”

என்ற சுருதி அர்ஜுன்,சுதா,கதிர்,வெண்ணிலாவை அவர்களின் வகுப்பறைக்கு செல்லுமாறு கூறி விட்டு அவருடன் அந்த ரெஸ்ட்ராண்ட்க்கு சென்றாள்…

     அங்கு ஏற்கனவே வந்திருப்பார் போல…கார்த்திகா நான்கு பேர் அமர கூடிய ஒரு டேபிளில் அமர்ந்து இருந்தாள்…

      சுருதியை மட்டும் உள்ளே போகுமாறு கூறிய பிஏ அவர் வெளியவே நின்று கொண்டார்…

      சுருதியை பார்த்ததன் அடையாளமாக இவளை பார்த்து சிரித்துக்கொண்டே கையை ஆட்டினாள் கார்த்திகா…

       சுருதியும்   சிரித்துக்கொண்டே கார்த்திகாவுக்கு  எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள் ….

        “வாங்க சுருதி…என்ன சாப்பிடுறிங்க… ஜூஸ் காபி…”

          “காபி சொல்லுங்க  மேம்…”ஆர்டர் எடுத்துக்கொண்டு சர்வர் சென்றார்…

            “சும்மா நீ வா போனே கூப்பிடுங்க  மேம்…வாங்க போங்க எல்லாம் வேணாம் “என்று அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே அவள் கைபேசி தன் இருப்பை நினைவு படுத்தியது…

            “சைக்கிள் ல இருக்குறது பெடலு …

         எனக்காக படைச்சானே மெடலு…

         உலகம் புரா இருக்குறதப்பா கடலு…

         என் பாட்டுக்கு நீங்களும் வாசிங்கடா பிடலு…”

என்று தலைவன் ஷின் சான் பாடல் ரிங்க்டோன் ஆக அலறியது…

      கார்த்திகாவின் நமட்டு சிரிப்பை பெற்றுக்கொண்டு”சாரி மேம்..பேசுகிறேன்…”அவளின் அனுமதியை பெற்றுக்கொண்டு பேச ஆரம்பித்தாள்…

     “ஹலோ…என்ன அத்தை…இப்ப கால் பண்ணிருக்க…நா ஸ்கூல் இருக்கேன்…உனக்கு உளுந்துலாம் வாங்கி தர வர முடியாது…”

      “இரு டி…என்னை பேசவிடாம நீயே பேசிகிட்டு…உனைலாம் வைச்சுக்கிட்டு எப்படி என் மகன் காலம்தள்ள போறானோ…”

      சுதாகர் எதுக்கு நம்மள வைச்சு காலம் தள்ளனும் இந்த அத்தைக்கு வேற வேலையே இல்லை என்று நினைத்து கொண்டே தண்ணியை எடுத்து குடித்துக்கொண்டே பேசினாள்….

        “இப்ப எதுக்கு போன் பண்ணேன்னு நீ சொல்லவே இல்லையே அத்தை…”

          “உனக்கு என்ன கலர்ல புடவை வேணும்…சீக்கிரமா சொல்லு டி…இவங்க எல்லாரும் ஒரு பட்டுரோஸ் கலர் சேலையே எடுத்து வச்சுருக்காங்க…நா தான் சண்டை போட்டு இந்த கலர் சேலைலாம் எடுத்தா அவ நிச்சயத்தார்த்தமே வேணாம்னு சொல்லிருவானு சொல்லி உனக்கு போன் பண்ணிருக்கேன்..சொல்லு டி…”

          “அந்த ரோஸ் கலர் லாம் எனக்கு வேணாம் ஆமா..அப்புறம் போங்க டா உங்க கல்யாணமும் நீங்களும்னு போயிட்டே இருப்பேன்..”சொன்னது அப்புறம் தான் உணர்ந்தாள் இவர்கள் தன் திருமணத்தை பற்றி பேசிக்கொண்டிருகிறார்கள் என்று…

       “எத்தை…யாருக்கு கல்யாணம்…”

        “அடியே…கூறுகெட்ட குப்பாயி…உனக்கு தான் டி…இவ்வளவு நேரம் கதையா கேட்ட…”

      “என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல…”

      “உன்கிட்ட எதுக்கு டி சொல்லணும்…இப்ப என்ன சொல்லுற அந்த பட்டுரோஸ் கலர் சேலையே எடுக்க சொல்லவா…”

       “இல்லை …இல்லை …வேண்டாம்…ஆலிவ் க்ரீன் கலர் சேலை எடுக்க சொல்லு அத்தை…”

         “சரி டி வைக்குறேன்…”என்று வைத்துவிட்டார்…

      பின்பு தான் நம் சுருதிக்கு ஒரு கேள்வி ஞாபகம் வருகிறது…ஆமா மாப்பிளை யாரு???

 இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்த கார்த்திகாவுக்கு அப்பொழுது தான் மிக மிக சந்தோசமாக இருந்தது…

  கார்த்திக் எதுவும் இல்லை என்று கூறினாலும் இவளின் மேல் அவனுக்கு சின்ன பீலிங் போல தான் தெரிந்தது…சுருதிக்கும் அவனின் மேல் ஒரு கிரஸ் இருக்கும் என்று நினைத்தாள்…

       காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் கூட்டிட்டு போனானாம் அந்த கதையாக தன் கதை போய்விடுமோ என்று நினைத்து தான் சுருதியை இங்கே அழைத்து பேச விருப்பினாள்… சுருதிக்கு திருமணம் என்றதும் சுருதிடம் பெரிய அதிர்ச்சி ஒன்றும் இல்லை…திருமணத்துக்கு புடவை நிறம் கூட கூறினாளே…சோ அவளுக்கு கேகே யின் மேல் எந்த விருப்பமும் இல்லை …என்றே அவள் மிக சந்தோசமாக உணர்ந்தாள்…

      “வாழ்த்துக்கள் சுருதி…”

       “ஹி ஹி ஹி…தாங் யூ மேம்…”சுருதிக்கு மிகவும் குழப்பமாக இருந்தது…யார் தன் வருங்கால கணவன் என்பது…

         சர்வர் கொண்டுவந்த காபியை இருவருமே குடித்து விட்டு எதுவுமே பேசாமலே விடைபெற்றனர்…

        சுருதி குழப்பத்தில் இருந்ததால் கார்த்திகா தன்னை எதுக்கு அழைத்தாள் என்று கேக்க மறந்திருந்தாள்…

  

    

           

Advertisement