வண்ணம்-9
“இசையாய்.. விரிந்தாய்… நிறமாய்.. நிறைந்தாய்…
மணமாய்.. நுழைந்தாய்……… சுவையாய் கரைந்தாய்……
உன்னுள்ளே.. செல்ல…. செல்ல……
இன்னும்… உன்னை… பிடிகையிலே….
இவ்வாறே… நான்… வாழ்ந்தால்… போதாதா….
என்.. நெஞ்சின்….. மேடை இங்கே உன்னை ஆட…….. அழைக்கையிலே……
கால்கள் வேண்டாம்……… காதல் போதாதா……..
நான் மாட்டிக் கொண்டேன்…. உன்னில் மாட்டிக் கொண்டேன்….
கோவிலுக்குள்… தெய்வம் போல…. உன்னில் மாட்டிக் கொண்டேன்… ”
மதுவிற்கு ஏர்போர்ட்டிலேயே ஒன்றும் புரியவில்லை…. ஷியாம் நல்லவன் தானே…. என்ற எண்ணம் தான் இப்போது….
தனியாக தான் அமர்ந்திருந்தாள் ஷியாமின் புறம் திரும்பவில்லை, தன்னை ஏன் அவன் கண்டுக் கொள்ளவில்லை என்று தோன்றிய போதும், மாமாவை பார்த்து, பயத்தில் இருப்பான்…… என தான், தன்னை சமாதானம் செய்துக் கொண்டாள்.
ஷியாமிர்க்கு ஏர்போர்டில் இருக்கும் வரை ஒரு பதட்டமே…. யோசிக்க முடியவில்லை…..
அந்த என்குயிரி ரூமிலிருந்து வெளியே வந்து, தன் அண்ணனுக்கு போன் செய்து அது வேறு கட்டாகவும், இன்னும் ஒரு பதட்டம்…. இந்த மதுவால் தான் எல்லாம்… என நினைத்தான்….
ஷியாமிற்கு “நான் செய்வது தவறு தானோ என… அப்போது தான் ஒரு எண்ணம் வந்தது…….. அந்த நிமிடத்திலிருந்து….. மதுவை அவனால் நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை.
நான் முதலில் போன் செய்த போது, பேச… பேச… போனனை கட் செய்தார்… பின்பு அவராகவே… போன் செய்து வர சொல்லுகிறார்…. அதுவும் குரலில் மாற்றம் வேறு….
இங்கு மதுவை, அவளின் மாமா, பார்வையால் கூட நெருங்க விடுவதில்லை…. மதுவும், கரண்டை கடத்தும் தாமிரம் போல இயல்பாக அன்னைத்தையும் அவனின் கண்ணசைவில் செய்கிறாள்….
என்ன தான் சொந்தம் என்றாலும்….. இவன்…. ஒரு மாதிரி…. எங்களுக்குள் பிரச்சனையாக இருபானோ……..” என இதற்கு மேல் அவனால் யோசிக்க முடியவில்லை..
ருத்ரனுக்கு….. ஒரு மௌன நிலை …. எதை பற்றியும் அவன் யோசிக்கவில்லை, ஒரு ஓரமாக நின்று மதுவை பார்த்துக் கொண்டிருந்தான்…
மது தன்னால் குடிக்க முடியாமல்…. காபியை குடித்துக் கொண்டிருந்தாள்… பின்… ஷியாமை பார்ப்பது…. கண்ணில் நீர் சேர்ப்பது…. என ஒவ்வொரு அங்குலமாக, அவளை உள்வாங்கி கொண்டிருந்தான்.
ஷியாம் மதுவின் வீட்டிற்கு வந்து இறங்கிய போதும் கூட அவன் பெரிதாக தன் தவறை உணரவில்லை. அவனிற்கு தாங்கள் செய்த தவறு இன்னும் புரியவில்லை.
ஆனால், கிரியை பார்த்தான்…. கிடு…. கிடு….வென அவன் இறங்கி வருவதும், மதுவை பார்த்தவுடன் கையை ஓங்கிக் கொண்டு செல்வதும் பார்த்தவன்….
தன் போல் ஒரு அடி பின் வைக்க…. ருத்ரன் ஏதோ கூற என… அப்போது தான் ஷியாமை….. வராதராஜன், உள்ளே… அவர்களின் வீட்டில்… வரவேற்பரைக்கு முன்பாக உள்ள அலுவலக அறைக்கு கூட்டிச் சென்றனர்.
அங்கு ஷியாமின் அண்ணன் சுரேந்தரும் இருக்கவும்…. ஷியாம் திரும்பவும் கோவம் கொள்ள… அப்போது தான் வாயை திறக்க….. போக….
சரியாக அந்த நேரம்…. அய்யனாருக்கு….. ஷார்ட்ஸ், டி-ஷர்ட் போட்டது போல… கொஞ்சம் குறைவான மீசையோடு…. ஷியாமின் கழுத்தை தன் இரு கைகளாலும், பற்றி…. “என்ன டா கேம்… விளையாடினிங்க…. எங்க புள்ளைய வைச்சு…..” என கிரி… மதுவின் மேல் உள்ள கோவத்தையும் சேர்த்து இவனிடம் காண்பிக்க.
ஷியாமின் அண்ணன் சுரேந்தரும், வரதராஜனும் தான் அவனை விளக்கினர்…
ஷியாமிர்க்கு…. இப்போது வெறியே வந்தது…. “நாங்கள் பெண் கேட்டோம், நீங்கள் தான் தரவில்லை…….” என்றான். தங்களை நிருபித்துக் கொள்ளும் வேகத்துடன்.
மதுவின் வீட்டினர் அனைவரும் இது என்ன புதிதாக என பார்க்க….
அப்போது, லதா தான் ஆண்கள் அனைவருக்கும் காபி எடுத்து வந்தாள்…. இது அனைவரையும் ஆசுவாசப்படுத்த தேவைப்பட்டது.
சுரேந்தர் மறுத்தார், ஆனால் சௌந்தர் விடவில்லை…. “சாப்பிடுங்கள்… நிறைய பேசி தீர்க்கணும்…..” என்றார் கட்டளையாக.
கிரி தான்…. ஏதோ சொல்லிக் கொண்டே வெளியே வந்து நின்று கொண்டான். அங்கு உள் பார்க்க…. ருத்ரன் கிழே…… ஓய்ந்த நிலையில் படுத்திருக்க…. பார்த்தவனால் தாங்க முடியவில்லை…
லதா காபி கொடுத்து வெளியே வரவும்…. கிரி “ அம்மா அவன பாரும்மா… முதல்ல…. போ ம்மா…” எனக.
லதாவும் “என்னடா … பண்ண சொல்ற …. அவன் எது கேட்டாலும் பேசுவதில்லை….. என்ன பண்ணறதுன்னு…. தெரியால…..” கண்ணீருடன் சொல்லி சென்று விட்டார்.
கிரி கேட்டுக் கொண்டு ஆபீஸ் ரூமிற்குள் சென்றுவிட்டான்.
அங்கு ஷியாம் தலையில் கைவைத்து அமர்ந்திருந்தான்…. தன் அண்ணன் செய்த, விவரம் இப்போது தான் தெரிந்தது….
வரதன் தான் “தம்பி…. அவன் யாரிடமும் பெண் கேட்கவில்லை…. “ என்றார் முகத்தில் இருந்த கனிவு வார்த்தைகளில் இல்லாமல்.
ஷியாம் தன் அண்ணன் முகம் பார்க்க, அவர் தலையை குனிந்துக் கொண்டார். ஷியாம் “அய்யோ… தோற்று போனேனா…. நான்….. தோற்றே போனேனா…. மதுவின் முகத்தை நான் எப்படி பார்ப்பேன்…..” என எண்ணினான்.
சுரேந்தர் என்ன பரம்பரை வில்லனா….. எல்லாவற்றையும் யோசித்து செய்ய…… ஏதோ நமக்குன்னு ஒரு வாய்ப்பு வருகிறது…… அதை பயன்படுத்திக் கொள்ள நினைத்தார்…… அவ்வளவே…..
நினைக்கும் போது ஈசியாக தெரிந்த செயல்….. நடைமுறையில் அவர்களை காட்டிக் கொடுத்து விட்டது.
இப்போது ஷியாமின் நிலை…. மதுவை இழந்து…, அவளின் நம்பிக்கையையும் இழந்து, மரியாதை இழந்து…..
இப்போதுதான், தான் செய்த செயலின் அளவு ஷியாமிற்கு தெரிய “ச்ச….” என் நிலை என்ன….(சுரேந்தர்) அவரின் நிலை என்ன….. நாங்கள் தவறிவிட்டோம்” என உணர்ந்தனர்….
சுரேந்தர் தன் தவறை உணர்ந்து….. கைகூப்பினார்…..”மன்னிச்சிடுங்க…. ஏதோ தவறு செய்துவிட்டேன்…. இதை மனதில் வைத்துக் கொள்ளக் கூடாது.
இதற்கும் என் தம்பிக்கும் சம்பந்தம் இல்லை……… எதையும் பேசும் தருணம் இதுவல்ல….. அதனால், எங்களை மன்னித்து விடுங்கள்….” என ஒருவாராக கோர்வையாக பேசி முடித்து.
நாங்கள் கிளம்புகிறோம் என்னும் விதமாக எழ….
கிரி… வரதராஜனை உக்கிரமாக பார்க்க…. இரு…. என கைகாட்டி…. அமைதி படுத்தியவர்… தன் அண்ணன் முகம் பார்த்தார்.
சௌந்தர் “இல்ல ப்பா…. அது…… இனிமேல் நமக்குள் எதுவும் பேச்சு வார்த்தை வேண்டாம்….” என ஆரம்பித்து…. என பெண்ணிற்கு என்ன செய்ய வேண்டும் என எங்களுக்கு தெரியும்….
உன் தம்பிக்கு வேறு இடம் பார்த்துக்கொள்….. இதை… வெளியில் சொல்ல வேண்டாம்…. “ என தன் அமைதியான குரலில்….. கட்டளையாக சொல்ல……. வரதன் வேறு நடுவில்….. உங்கள் வீட்டிலும்…. பெண்கள் இருக்கிறார்கள்…. என கோடு காட்டி…. மிரட்டலாக சொல்ல…..
ஷியாம் ஒரு முடிவோடு எழுந்து….. “என்னால் எந்த பிரச்சைனையும் ஸ்ரீக்கு வராது……. என்றவன்…… சௌந்தரிடம் சென்றவன் “என்ன மன்னிச்சிடுங்க…. நான் தான் தப்பு பண்ணிட்டேன்………” என்று தன் அண்ணனை ஒரு வெறுத்து பார்வை பார்த்து…… “ஸ்ரீ கிட்டயும் சாரி சொன்னேன்னு…. சொல்லிடுங்க……….” என்றவன் i மிஸ் யு ஸ்ரீ….. மிஸ் யு…. என புலம்பிக் கொண்டே….. வாசல் நோக்கி நகர்ந்துவிட்டான்.
கிரிக்கு “அப்பாடா…..” என்றானது…. வரதணுக்கும் சௌந்தருக்கும் அந்த நிலையே…… சுரேந்தர் தான்…. ஏதும் சொல்லாமல் ஷியாமின் பின் சென்றார்.
வரதன் தான் எழுதி வாங்கி விடலாம் என கூற…. வேண்டாம்…… என்றுவிட்டார்.. சௌந்தர். இது நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது, இதில் எழுதி வாங்கி….. அவர்களை மேலும் தூண்டிவிட வேண்டாம்….” என்றார்.
உள்ளே வந்தால், ருத்ரன் அப்படியே இருந்தான்… விடியல் வந்துவிட்டது….ஹாலில்…. விளக்குகள் அன்னைகப்பட்டு வெளிச்சம் வந்திருந்தது….
லதா சௌந்தரிடம், ருத்ரனிடம் பேசுமாறு சொல்ல…. சௌந்தரும் கீழே அமர்ந்து அவனின் தலை கோதி “டேய்… ருத்ரா…. என்ன டா… இது…. எந்திரி… காப்பிய குடி……” என தழுதழுத்த குரலில் சொல்ல…
நிமிரவே இல்லை அவன்….. வரதனும் “ருத்ரா…. ஏதோ சின்ன புள்ள… விடுப்பா…. நீ தான்ப்பா எல்லாம்…….” என ஏதோ சொல்ல வர…..
ருத்ரனின் காலின் அருகே…. கிரி அமர்ந்திருக்கவும்…. அவனை காலால் தட்டி…… “டேய்… அவர சும்மா இருக்க சொல்லுடா…..” என்றான். அவனிற்கு அவரின் மேல் கோவம்… கிரி தான் போனில் எல்லா விவரமும் சொல்லியிருந்தான்.
கிரி வரதனை பார்க்க…. அவர் அமைதியாக அமர்ந்தார். கிரி தான்… “மாமா… இந்த முதலில் ஏதாவது சாப்பிடு…. இந்த……” எனக.
கொஞ்சம் அசைந்தான்…. எழுந்து அமர்ந்தவன் “அவ என்ன பண்றா…. கூட யார் இருக்கா…. என்ன… ஏதாவது சாப்பிட கொடுத்தியா…” என தன் அக்காவை பார்த்துக் கேட்டக……
லதாவிற்கு….. கண்ணில் நீருடன் “நீ சாப்பிடுடா… முதல்ல…. “ என்று அதட்டலாக சொன்னவர்…….. ஒரு பௌலில் வைத்திருந்த இட்லியை தந்தார்.
ருத்ரன் அதை சாப்பிட்டு விட்டு, தன் மாமா சௌந்தர் மடியில் தலை வைத்து படுத்தக் கொண்டான்…. சௌந்தர்… தான்… இப்போது சௌந்தர்க்கு தான் ருத்ரன் முகம் பார்க்க முடியவில்லை…….. கண் கலங்கக்… அவனை பார்த்தார்.
ஏதோ அக்காவின் கணவர் என்ற சொந்தம் மட்டுமா… அவர்களுடையது…. அல்லவே… கொஞ்சம் இலகுவாக சொல்வதென்றால்…. கிரிக்கும் ருத்ரனுக்கும் இடையே இருப்பது போல்…. கண்மூடி தனமானது…. அதனாலோ என்னமோ… தன் பெண்ணையே அவனிற்கு தந்தார்…
லதா தந்த இட்லியை வாங்கிக் கொண்டு வரதன் மதுவின் ரூம் உள் சென்றார்…. அங்கு அவளின் சித்தி மடியில்….. தனது நீண்ட கூந்தலை விரித்து ஒரு நைட் டிரஸ்சில் படுத்திருந்தாள் மது…
அவளின் சித்தப்பா தோள் தொடவும் யார் என நிமிர்ந்து பார்க்க…. அவள் சித்தப்பாவை பார்க்கவும்……. இதுவரை சித்தியை தவிர யாரும் தன் அருகில் வரவில்லை என நினைத்தவள்……. வரதனை பார்க்கவும்.
“சித்தப்பா… என்ன மன்னிச்சுடுங்க……..” என… “நான் தப்பு பண்ணிட்டேன்…. நான் நல்ல பொண்ணு இல்ல …. நான் உங்க கிட்ட சொல்லி இருக்கணும்……. என்ன ஏன் சித்தப்பா உள்ள விட்டிங்க……… என்ன நீங்க அடிங்க சித்தப்பா….” என கடைசியில் ஒரு ஆவேசத்தில் கத்தி….. அவரின் தோளில் சாய…. அவரின் கணங்களில் கண்ணீர்….
அவர் மட்டும் அல்ல, அங்க ஹாலில் அமர்ந்திருந்த அனைவரும் அவள் கதறுவதை கேட்டு… அமைதியாக கண் மூடி அமர்ந்திருந்தனர்.
ருத்ரனால் அவளின் கதறலை கேட்க முடியாமல், எழுந்து மாடிக்கு சென்றுவிட்டான்.
அதன்பின் தான் மதுவை பார்க்க எல்லோரும் சென்றனர்…. கிரி மதுவை பார்க்கவே இல்லை. அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு மது ஓய்ந்து போய் இருந்தாள்.
அதன் பின் வேலையாட்கள் வர வர…. வீடு அன்றாடும் பணிகளை செய்தது ….
ருத்ரன் குளித்து ஊருக்கு கிளம்பினான். மதுவை பார்க்கவில்லை…. இவர்களின் நிச்சையமும் பிறகு என பெரியவர்களால் தள்ளிப் போடப் பட்டது.
அதன் பின் ருத்ரன் கோவை வரவே இல்லை. மதுவை பார்க்கவே இல்லை. ஆனால்….. மதுவிற்கு தேவையான எல்லாம் அவன் தான் செய்தான்.
மதுவை அனைவரும் தேற்றினர், ஆனால் சுரேந்தரனின் கள்ளத்தனத்தை யாரும் அவளிடம் கூறவில்லை. ஷியாம் சொல்லியதை சௌந்தர் சொன்னார் அவ்வளவே…. அது அவன் உன்னை மறந்து விட்டான் என்னும் விதமாக தான் இருந்தது.
மதுவிற்கு இதுவும் ஒரு வகையில் அவளை பாதித்தது. ஏன் ஷியாம் அப்படி சொன்னான் என்று மதுவிற்கு புரியவில்லை. எல்லாவற்றிலும் தோற்ற உணர்வு.
ஆனால், மது அப்போது எதையும் நினைக்கும் நிலையி இல்லை…. அவளிற்கு, அவளின் குற்ற உணர்ச்சியே அவளை கொன்றது… ஆனால் நாட்கள் செல்ல செல்ல….. ஷியாமின் எண்ணம் அவளை பாதிக்க தொடங்கியது. ஆனால் அதில் ஒரு முன்னேற்றமாக…. அந்த நினைவை அவள் ஒதுக்கவும் கற்றுக் கொண்டாள்.
ஒரு மாதம் கழித்து காலேஜ் செல்ல தொடங்கினால்…. மது வெளியே செல்லவே தயங்கினாள், ஆனால், விடவில்லை ருத்ரன், அவளை காலேஜ் சேர்க்கும் வரை கிரியை படுத்தி எடுத்து விட்டான்.
ஆம், இப்போது தான் மதுவிடம் பேசுகிறான்….கிரி, அதுவும் ருத்ரன், சொல்லி, சொல்லி…. சுபாவிற்கு தான் இன்னும் கோவம் குறையவில்லை…. அரவிந்தும் சொல்லி பார்த்துவிட்டான்… கேட்பதாக இல்லை.
ருத்ரனையும் சுபாவையும் தவிர அனைவரும் மதுவுடன் சகஜமாக இருந்தனர்….. மதுவால் தான் யாரிடமும், எதனிடமும் ஒன்ற முடியவில்லை. எல்லோரிடமும் ஒரு ஒதுக்கம் அவளுக்கு.
காலேஜ் சென்று வந்தாள்…. மதுவிற்கு ருத்ரனிடம் பேசாதது பெரிய தவறாக அவள் மனதை அறிக்க தொடங்கி இருந்தது…. அனைவரிடமும் மன்னிப்பு கேட்ட மதுவால் ருத்ரனிடம் அந்த செய்யலை செய்ய முடியவில்லை….. அவனிடம் பேசும் தகுதி கூட தனக்கு இல்லை என அவள் நினைக்க…….
ருத்ரனோ தான் பேசினால் அவள் குற்ற உணர்ச்சி அதிகமாகும்…. அதனால்… சிறிது காலம் செல்லட்டும்…….. பழையபடி மாறட்டும்……… என இவன்….. நினைத்திருக்க…
ஆனால், பேச்சில்லா மௌனம்…… சில விரிசல்களை இவர்களிடம் விதைத்து விட்டது.
இப்போது சௌந்தர் தான் வைத்தியநாதனிடம் மது ருத்ரன் கல்யாண விஷயம் பேசினார்.
ஆயிற்று…. இரு முழு வருடங்கள்…. இப்போது தான் ருத்ரன்… சரி… நாள் பாருங்கள்…. ஆனால்…. என தன் ரூல்லையும் சொல்லிவிட்டான். அப்போதும் மதுவிடம் ருத்ரன் பேசவில்லை. பழய ருத்ரனாக எல்லாவற்றிலும்.
மது ஒரே அழுகை…. நான் மாமாவிற்கு வேண்டாம்…. என….. இதை சுபா மூலமாக தெரிந்து கொண்டவன்….. கோபம் கொண்டான்…..
முன்பு எனக்கு நீ வேண்டாம் என்றவள்…… இப்போது உனக்கு நான் வேண்டாம் என்கிறாள்…….. எனவும்…….. தன் மாமாவிடம் உடனே திருமணம் வைக்க வேண்டும் என்றான்.