Tamil Novel
வண்ணம்-7
“முன்னம்…. முன்னூறு ஆண்டுகள்…..
ஒன்றாய்… நாம் வாழ்ந்த ஞபாகம்…
ஏங்கி நான் பெற்ற… என் வரம்…
அய்யோ……. இப்போது யாரிடம் ….
உன்னை பாராது…. முத்தம் தாராது….
இனி …. தூங்காது என் கண்களே….”
வைத்தியநாதன் மதுவை பெண் கேட்கவும்… முதலில் யோசித்த சௌந்தர், பிறகு திருமணத்தையே எவ்வளவு விரைவாக முடிக்கின்றோமோ… அவ்வளவு நல்லது என்ற முடிவிற்கு வந்தார்.
அவளின் தந்தை அன்று இரவே மதுவிடம் பேசினார் இல்லை, கூறினார், அறிவித்தார்…. ருத்ரனுக்கு, அவளை நிச்சயம் செய்ய போவதாக சொன்னார்.
மது நினைத்திருந்தாள் திருமணம் என்றால், தன் அக்காவிடம் அவளின் விருப்பம் கேட்டு செய்தது போல், தனக்கும் விருப்பம் கேட்டு செய்வார்கள் என்று…..
ஆனால், சௌந்தர் தன் மகளிடம் விருப்பம் கேட்டவே இல்லை….. இது மதுவிற்கு ஏமாற்றமே….. தன் அப்பாவிடம்…. இப்படி ஒரு நடவடிக்கையை அவள் எதிபார்க்கவில்லை… அதனால் வாயே திறக்க வில்லை… அவள்….
பின்பு வரதராஜன் தான் “என்னடா… ஏதாவது சொல்லு “ என்றார்…. ஒன்றுமே தெரியாதவர் போல்…. ஆனால் அவர்க்கும் அதே மௌனம்…. தான்.
ஒரு வகையில் இது அவரை கோவப் படுத்தியது …. இது வேண்டும்… அல்லது வேண்டாம்… என்று ஏதேனும் ஒன்று சொன்னால், அவர் ஏதேனும் செய்யக் கூடும்…
மதுவிற்கோ, ஷியாமின் வீட்டு நிலை தெரியாமல் ஏதும் சொல்ல முடியவில்லை…. அத்தோடு, இத்தனை அன்பானவர்களிடம் தான் இன்னொருவனை விரும்புகிறேன் என்று சொல்லவும் முடியவில்லை…. காதலிப்பவர்கள் கடக்க வேண்டிய கடலில் ஒரு கடல்… இது….
முன்பு வீட்டில் மதுவை பற்றி எது பேசினாலும் ருத்ரனில் தான் முடிப்பார்கள், ஆனால் இப்போதோ குடும்பத்தில் மளிகை சமான் வாங்குவது பற்றி பேசினாலும் இறுதியில் மதுவின் திருமணத்தில் தான் முடித்தனர்.
எங்கு காணினும் சக்தியடா…. மாதிரி எந்த பேச்செடுத்தாலும் மது…. மது… திருமணம் தான்…
மதுவிற்கு எரிச்சலாக வந்தது….. என்னிடம் விருப்பம் கூட கேட்க வில்லை…. என்று, இப்போது தான் மாமா வீட்டில் இருந்து பெண் கேட்டு இருக்கிறார்கள்….
ஆனால், இவர்கள் என்னவென்றால், இப்போதே திருமணத்தை முடிப்பது போல் அல்லவா…. பேசுகிறார்கள்….என்றானது மதுவிற்கு.
ஜெயலக்ஷ்மி பாட்டி வேறு உடல் நலம் முடியாமல் இருக்கவும் அதையும் ஒரு காரணமாக சேர்த்துக் கொண்டனர்….
சமஸ்டர் முடிந்த அன்று அவளின் தந்தை பேசினரே தவிர அதன் பின் வீட்டில் இவளிடம் விருப்பம் கேட்கும் எண்ணம் யாருக்கும் இல்லை போலும்…. யாரும் எதுவும் பேசவே இல்லை..
ருத்ரனுடன் நிச்சையம் என்று உன்னிடம் சொல்லி ஆகி விட்டது, அதோடு எங்கள் வேலை முடிந்தது…. என்பது போல்… அவர்கள் வேலையை அவர்கள் செய்துக் கொண்டிருந்தார்கள்… நாட்கள் சென்றது….
“மது வா…. டைலர் கடைக்கு சென்று வருவோம்….” என்றார். அவள் சித்தி,
சுபா போன் செய்து “மது உனக்கு…. எனக்கு மேக்-அப் செய்த இடத்திலேயே உனக்கும் புக் செய்கிறேன்” என்றாள்…
லதா “இந்த நகை எல்லாம் உன்னோடதுடா…. வேறு புதுசா வேணுமா…. இல்ல, இல்ல… ருத்ரனிடம் கேட்டு செய்யலாம்… அவன் வேறு இது பழய மாடல், இது இவளுக்கு பெருசா இருக்கு…. என ஆயிரம் குறை சொல்லவான் பெண்கள் போல….அதனால் அவன் வந்ததும் வாங்கலாம்…. “ என்று தானே கேள்வி கேட்டு… தானே பதில் சொல்லிக் கொண்டு சென்றார்.
இதிலிருந்து நாம் மீள முடியாதோ… என்ற எண்ணமும் வந்தது…. மதுவிற்கு…. மது காலேஜ் சமஸ்டர் முடிந்து வீட்டில் இருந்தாள், எப்போதடா, காலேஜ் செல்வோம் என்றானது… அவளுக்கு, இந்த பேச்சுக்களை எல்லாம் கேட்ட முடியவில்லை… அவளுக்கு.
அன்று தான் காலேஜ் சென்று வந்தாள்… உறக்கம் வரவில்லை மதுவிற்கு, அதனால் மொட்டை மாடியில், கொஞ்ச நேரம் இங்கும் அங்கும் நடந்துக் கொண்டிருந்தாள்….
அப்போது கிரி, போன் பேசிக் கொண்டே படி ஏறி வந்தான்…
“ம்… சரி மாமா…. “
……….
“இல்ல… மாமா … அப்படி இல்ல…“
…………..
“நான் பேச….. மாமா இங்க தான் இருக்கா… இரு தரேன்…. நீயே …. கேட்டு கொள்….” என போனை மதுவிடம் கொடுத்தான் கிரி
மது “இந்த மாமா தான் …..” என்று
கைகள் நடுங்கியது, “ம்ம்ம்….” என்ற எழுத்து வாயிலிருந்து வந்ததே தவிர வார்த்தை வரவில்லை… திடீர் என கிரி வந்து போனை கொடுக்கவும் மதுவிற்கு கை நடுங்கியது…. அதுவும் மாமா என்றதும்…. போனை வாங்கி காதில் வைத்தாள்….
ருத்ரனுக்கு ஒரு பரவசம் வந்தது, மது என்றதும்…. அவனின் மனம் மென்மையானது…. எத்தனை நாள் ஆகிற்று இவளுடன் பேசி…. என்ற எண்ணமே அவனுள் புது ரத்தம் பாய்ந்தது அது குரலிலும், தெரிந்தது… ஒரு மாதிரி கர கரத்த குரலில் நேசமும் ஆசையும் சேர்ந்து குரலில் போட்டி போட “மது…” என்றான்.
மது தன் நிலையிலேயே இல்லை…………….
சத்தமே இல்லை எனவும் திரும்பவும்…. ருத்ரன் உரிமையும் தயக்கமும் குரலில் போட்டி போட “ஹலோ…. மது…. ம்.னு … சொல்லு டி …. நீ லைன்னில் இருக்க தெரியுது…. ம்….னுவாது சொல்லு டி…..“ என்றான், பின்பு ஒரு பெரு மூச்சு ஒன்று இழுத்து விட்டு…
“என்னக்கு… என்னமோ… உன்கிட்ட நிறைய பேசணும்னு தோணுது… நீ…. வாயே திறக்க மாட்டேங்கிற…..” தன் தலையை தன் விரல்களால் அழுந்த கோதிக் கொண்டான்…. “ம்…. ஓகே….சரி…. நான் சொல்லறத மட்டும் கேளு….. நான்… எனக்கு…. உன்ன உடனே பார்க்கணும் போல இருக்கு டி…. whats up கால் பண்ணவா…..” என்றவன் வேறு என்ன உளரி இருப்பானோ… போனை மது…. தவறவிட்டால்….
அவளின் உடல் எல்லாம் வேர்வையில் நனைந்தது…. கைகளில் பிசு… பிசுப்பு…. சுவாசம் தப்பியது…. முச்சு வரவில்லை…. அப்படியே அந்த சுவரில் சாய்ந்து அமர்ந்து…. என்ன செய்வது என தெரியாமல் வானத்தை வெறித்தாள்,
மேலே இருள் சூழ்ந்த வானம்…. அங்கங்கே சாம்பல் நிற மேகங்கள்….. இங்கே நாங்களும் இருகின்றோம் என காட்டிய நட்க்ஷத்திரம்…. அதோ அந்த மூலையில் மெல்லிய மிக மெல்லிய கோடாய், நிலா… அதில் ஷியாமின் முகம்…. இவளின் கண்கள் மூடியது… இப்படி தானே…. என்னுள் ஷியாம் வந்தான்… மெல்லிய… மிக மெல்லிய உணர்வாய்… வந்தவன் இன்று பௌர்ணமியாய் நிறைந்து இருக்கின்றான் என்னில் ….” என்றவளின் சிந்தனையை, கிரியின் குரல் கலைத்தது.
கிரி அவள் கீழே தவற விட்ட போனை எடுத்து ஒன்று சேர்த்து ஆன் செய்து பார்க்க… வொர்க் ஆனது… அப்பாடா… என அவன் நிமிர்ந்து பார்க்க… மது வானத்தை வெறித்துக் கொண்டிருந்தாள், இரு தரம் மது மது என அழைக்க… கிரியை பார்க்கவே இல்லை…
அவளின் கையை தொட்டு எழுப்பியது போல் தூக்க… அவளின் கைகள் வேர்த்து இருந்தது “மது… ஏன்டா.. என்ன ஆச்சு…. பயந்துட்டியா… ஒன்னும் ஆகல டா… போனுக்கு… நீ கூலா … இருடா….” என்றவன்.
கிரி “மாமா எதாவது சொன்னாங்களா… அதான் பயமா…அதெல்லாம்… சரியாகிடும் டா… ருத்ரன் எல்லாத்தையும் சரி பன்னுவாங்க்க் டா…..” என அவன் சொல்ல சொல்ல
மது அவன் தோளில் சாய்ந்து “ண்ணா…. இப்போ எனக்கு ….. இந்த , இந்த கல்யாணம் வேண்டாம்…. ண்ணா….” என்றாள். பயப்பட இல்லை, ஆனால் தயக்கமாக சொல்லிக் கொண்டிருந்தாள். கிரியிடம் மட்டுமே…
கிரி கல்யாணம் என்றதும் பயம் என நினைத்து…. என்னென்னமோ சமாதானங்கள் சொன்னான். கிரி அனுசரனையானவன்…. கொஞ்சம் நெளிவு சுழிவுகள் கற்றவன்…….
ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் “இப்படியும் செய்து பாரேன் என வேறு ஒரு புதிய யோசனை சொல்பவன்…. ஆனால், அவனுக்கும் தெரியவில்லை தங்கை இப்படி ஒரு சிக்கலில் இருக்கிறாள் என….
ருத்ரனுக்கு கிரியின் போன் சுவிட்ச் ஆப்… என்று வரவும்…. சிரிப்பு தான் வந்தது….”ருத்ரா …. நீ …. பாவம் டா…. “ என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவன்…. அவளை பற்றி நினைத்துக் கொண்டே உறங்கினான்….
ஷியாம் இந்த வாரம் விடுமுறையில் வந்தான்…. தன் அண்ணனை கேட்டுக் கொண்டிருந்தான் “ண்ணா…. என்ன பேசிட்டிய, நாம் சென்று எப்போது மதுவை பார்ப்பது….” என இவன் ஒரு முடிவுடன் கேட்டக…
சுரேந்தார் ஷியாமிடம் ஏதேதோ கூறி அவர்கள் நமக்கு பெண் தர சம்மதிக்கவில்லை… என்றார்,
சுரேந்தர் தன் தம்பியை தனக்கு தக்க போல் மாற்றினார், தங்களது தந்தையின் இறப்பிற்கு காரணமானவர்கள் அவர்கள் தான் என கூறினார்.
முதலில் ஷியாம் நம்பவில்லை, பின் தங்களுக்கு சாதகமான நிகழ்வுகளை கூறினார், இப்போது ஷியாமின் மனதில் குழப்பம்.
இப்போது அண்ணனா…. இல்லை காதலிய… என்ற நிலை ஷியாமிர்க்கு, சில நேரங்களில் சில ஆண்கள் சொல் பேச்சு கேட்டு விடுவார்கள்.
இப்போது……. தனது வழிமுறைகளை தெளிவாக கூறினார்…. ஆம், ஷியாமை பொறுத்தவரை அப்படியே….
ஷியாமும் சரியா தவறா இதனை சிந்திக்கும் நிலையில் இல்லை… அதுவும் மதுவை காலேஜில் பார்த்த பிறகு….. அண்ணன் சொல் வேதமானது….
அன்று காலையே ஷியாம் காலேஜ் வாசலில் மதுவிற்காக நின்றான்…. மது வந்தாள்… அவளை பார்த்தவன்… தான் என்ன சொன்னாலும் இவள் கேட்ப்பாள் என்று தான் நினைத்தான்…. அவ்வளவு காதல் மதுவின் கண்களில், “இப்படியே… என்னுடன் வந்துவிடு டா…” என்றான், இதை சொல்லும்போது அவன் கண்களில் காதல் இல்லை.
மது என்னவென்று கேட்க தன் அண்ணன் கூறியதை சொன்னவன், அதாவது மதுவின் வீட்டில் பெண் தரமாட்டேன்” என்று கூறியதாக சொன்னதை மட்டும் சொன்னான், பின்பு “நான் கூப்பிடும் போது, நீ வரவேண்டும்…” என்று அங்கிருந்து நகர்ந்தான்.
ஷியாமிர்க்கு இப்போது வந்தவள் என்றே தோன்றினாள் மது… தோன்ற வைத்தார் சுரேந்தார்…. உறவுகள் இப்படியும் சில நேரம் தன் கடமையை செய்கிறது…
ஒரு பெண் என்ற நிலையிலிருந்து கூட யோசிக்க வில்லை, அத்தோடு மதுவை தாங்கள் கைவிட போவது இல்லையே…. தாங்கள் வாழ்க்கை தானே கொடுக்க போகிறோம்…. என்றும் ஷியாமை தேற்றி இருந்தார்
ஷியாமிற்கு லாப…. நட்டம்… சொல்லி தந்தார்.
மதுவிற்கு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என தெரியவில்லை…. இப்பொது இவள் தன் வீட்டினரை சந்தேகித்தாள்…. அப்படியானால்… தன்னுடைய விஷயம்… தெரிந்ததும் தான் இந்த அவசர ஏற்பாடு என்ற எண்ணம் வந்தது….
குடும்ப பகை என்றால் முதலில் பலியாவது பெண்கள் தான், அன்று முதல் இன்று வரை……
கடைசியில் சுரேன்தரே வென்றார்… ஷியாமுடன் மது சென்றாள்…. காலேஜ் சென்றவள்.. அங்கு மாலை… ஷியாமுடன் ப்ளைட்டில் டெல்லி சென்றாள்.
பின் மாலை பொழுதில் டெல்லியில் இறங்கி ஏர்போர்டிலிருந்து வெளியே வந்து கால் டாக்சிகாக வெயிட் செய்திருந்தனர்….
அப்போது டோமசஸ்டிக் ப்ளைட்டிற்காக ருத்ரன் அங்க வர…. கண்டான் மதுவை…. யாரோ ஒருவரின் கையை…. இருக்க பிடித்த படி……. அவனுடன் உரசிய படி….. எங்கோ பார்த்துக் கொண்டு நின்றாள்.
மதுவின் எதிரே வந்து நின்றான்…. மதுவிற்கு அய்யோ…. திக்..திக்… போனில் பேசும்போதே வியர்வையில் குளித்தவள்…. கண், காது, வாய் மூக்கு……….. என எதுவும் வேலை செய்யவில்லை. நான் பிறவி ஊமை, பிறவி குருடு என்ற நிலையில் நின்றாள்….. இப்போது, அனிச்சை செயலாய் ஷியாமின் கைகளில் இருந்து தனது கைகளை பிரித்தாள்.
ருத்ரனின் கருவிழிகள் மதுவை தவிர இங்கும் அங்கும் நகரக் கூட இல்லை…. ஏன் அவள் பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என பார்க்க கூட அவன் விழிகளை நகர்த்த வில்லை……..
தன் கோவத்தை எல்லாம்…. இல்லை தன் உரிமையை எல்லாம் தன் கண் வழியே அவளுள் கடத்தினான்….
அவ்வளவு உரிமையான பார்வை… நீ எனக்கு மட்டும் தான் என்னும் விதமாக கூர்மையாக தான் அவளை பார்த்தான்…
ஆனால் அவள் எதிர்பாராத விதமாக ஷியாமின் கன்னத்தில் ஒரு அரை வைத்தான்…. ஷியாம் நிலை தடுமாறி ருத்ரன் வைத்த அரையில் இருந்து மீண்டு, திரும்பி அவனின் சட்டையை பிடித்தான்…
இப்பொழுது தான் ருத்ரன் மதுவிடம் கண்களால் சொல் என்பது போல் சிறிதாக கண் அசைத்தான், மதுவும் அவன் கண்ணசைவில் காரியம் செய்தாள்….
ஷியாமிடம் “என்னோட மாமா ….” என்றாள் சன்னக் குரலில்.
ஷியாம் கைகளை விலக்கிக்கொள்ள, இப்போது திரும்பவும் அடி விழுந்தது, ஆனால் மது கன்னத்தில்……..
ருத்ரன் “என்ன சொன்ன…………, நான் யாருடி உன்னக்கு….. “ என கேட்க மிரட்டினான்.
மதுவும் தன்னை சுற்றி பார்த்து விட்டு கூட்டம் வேறு சேர்ந்து விட்டது…. ருத்ரனை நிமிர்ந்து பார்த்து, கிழே குனிந்து “என்னை கல்யாணம் பண்ண போறவர்….” என்றாள், யாருக்கும் கேட்காத குரலில்.
பாவம் ஷியாமின் நிலை, மதுவின் நேற்றைய நிலையில் இன்று ஷியாம்…. தன்னை சுற்றி நடப்பது தெரியாத நிலையில்….
ஷியாமிற்கு என்ன…. ஏது…. என புரியவில்லை… அதற்குள், போலிஸ் வந்தது… அதனால், அந்த குழப்பத்தை கண்ணில் காட்டாது, புது தெம்புடன்…. என்னுடன் அவளே வந்தவள்… இவனால் என்ன செய்ய முடியும்…. என நின்றான்.
ருத்ரனுக்கு காரணமே தேவை இல்லை…. மதுவை காப்பதற்கு…. அவன் எப்போதும் போல் நிமிர்ந்தே நின்றான்.
இருவரும் சரி சமமாக நிற்க….. என்ன என்று விசாரிக்க…. ஆரம்பித்தது.
சுறேந்தார், ஊரில் தனது வேலையை சரியாக செய்ய ஆரம்பித்தார்…