Advertisement

பௌர்ணமி வர்ணம் – 9

தீபிதான் கோவை செல்வதாகத்தான் இருந்தது வர்ணாவின் பிறந்தநாளுக்கு. ஆனால் கிஷோர் வருவதால்…. இங்கேயே சென்னையிலேயே கொண்டாட முடிவு செய்தனர் அனைவரும்.

வர்ணாவின் மூன்றாவது வயது தொடக்கம்…. அதிகாலையிலேயே  கோவிலுக்கு சென்று வந்திருந்தனர். தீபியின் வீடு அமைதியாக இருந்தது.

இப்போது  எல்லோரும் ஹாலில் அமர்ந்திருப்பதால் கதிரேசன், கிஷோரிடம் சொல்லுவது போல் தொடங்கினார்… புவனன் பற்றிய பேச்சை. அங்குதான் தீபி இருந்தாள். சுந்தரியம்மா… உள்ளேதான் இருந்தார். வர்ணா முன்புறம் உள்ள தோட்டத்தில்… அங்கு வேலை செய்யும் சுசியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.

கதிரேசன் புவனன் பற்றிய விவரங்கள் சொல்லி முடித்தவுடன், கிஷோர் உடனே பொறுக்க முடியாதவனாக… நிறைய கேள்விகள், “எப்படி சரி வரும்… சித்தப்பா, அவ்வளோ கோவம் வருது அந்த மனுஷனுக்கு…. முன் பின் தெரியாத எங்களிடம் அப்படி பேசுறார்..

நாளைக்கு ஏதோ சண்டைன்னா…. தீபியை ஏதாவது சொல்லிட்ட எப்படி பொறுப்பது…. கொஞ்சம் கூட பொறுமையே கிடையாது சித்தப்பா… அவருக்கு.” என பொரிந்தவன் வெளியே தோட்டத்திற்கு வந்துவிட்டான்.

அமைதியாக தலையை குனிந்தபடியே இருந்தாள் தீபி. நிமிர்ந்து கூட யாரையும் பார்க்கவில்லை… கோவிலுக்கு செல்லும் போது கூட, புடவை அணியாமல்… சாதாரண லாங் டாப்பும் ஒரு லேக்கின்சும் அணிந்திருந்தாள்.

கதிரேசனும் அமைதியாகவே இருந்தார்… சமாதானம் சொல்லவில்லை அவர். வலிக்காமல் வாழ்க்கையை யாராலும் வாழ்ந்துவிட முடியாது… எனவே என்ன சொல்லுவது எப்படி சொன்னாலும்… இதில் முடிவெடுக்க வேண்டியது தீபி மட்டுமே… என எண்ணியபடி அவளை யோசிக்க விட்டு இவர் பூஜை அறை சென்றுவிட்டார்.  

கிஷோர்… தோட்டத்தில் பாட்டு சத்தம் கேட்டது… மெல்லிய குரலில்… சுசி தான் பாடிக் கொண்டிருந்தார்… கூடவே வர்ணாவின் குரலும் மழலையாய்… சீனி ம்மித்தாய்ய்….

தீனா… பொம்ம்மை….

“திங்க உனக்கு சீனி மிட்டாய் வாங்கி தரட்டுமா….

சிலுக்கு சட்டை சீனா பொம்மை.. பலூன் வேணும்மா…

கண்ணாமூச்சி ஆட்டம் உனக்கு… சொல்லி தரட்டுமா…

இப்போ கலகலன்னு சிரிச்சிகிட்டு

என்னை பாராம்மா…

வர்ணாவும்…  “சின்ன ப்பாபா… எங்க செல்ல பாப்பா…

சொன்ன பேச்சை கேட்டாதான் நல்ல பாப்பா…

சின்ன பாப்பா… எங்க செல்ல பாப்பா

கோவம் தீர்ந்து அப்பா உன்னை கூப்பிடுவாங்க…

நீ கொஞ்சி கொஞ்சி பேசிடத்தான் கேட்டிடுவாங்க…

கோழி மிதித்து குஞ்சி முடம் ஆகிவிடாது…” என ஏதோ பாடல் நீண்டு கொண்டே செல்ல…. அந்த பாட்டு முடியவும்.. திரும்பவும் வர்ணா… சுசிக்கா… ஒன் மோர்த் தைம்ம்… பாதுக்கா…. என குதித்துக் கொண்டிருந்தாள்.

கிஷோர் அமைதியாக வர்ணாவையே பார்த்திருந்தான். இமைக்க கூட மறந்தவனாக… திரும்பவும் ஒரு…. சிறிய குரலில் அதே ‘சின்ன பாப்பா..’ என கேட்டது.

ஒரு ஆரஞ்சு வண்ண பிராக்குடம்… அந்த இளம் வெயிலில் பட்டு குட்டி வைர தொங்கட்டான் மின்ன… நெற்றியில் அர்ச்சகர் வைத்த திருநீருடன் குதித்துக் கொண்டிருந்த வர்ணாவை ஹாலில்லிருந்தே பார்த்தவாறே அமர்ந்திருந்தாள் தீபி…

கிஷோரும் நேரே உள்ளே சென்றவன் தீபியின் அருகே அமர்ந்து கொண்டான்… தீபிக்கு பார்வை மட்டும் அங்கிருக்க…. தன் சித்தப்பா சொன்ன செய்திதான் காதில் ஒலித்தது.

‘ஆக இதுவரை தருண் என அப்பா சொன்னார். இப்போது புவன் என சித்தப்பா சொல்கிறார். இன்னொரு முறை முதலில் இருந்து தொடங்க வேண்டும்… ம்… முடியுமா என்னால்…

வர்ணாவிடம் தெரியும் கௌதமின் சாயலை எப்படி காணாமல் இருக்க முடியும்…. புதிதாக எப்படி இன்னொருமுறை வாழ்வது. எல்லோரும் என்னிடம் காட்டும் பரிதாப முகத்தை… என்ன செய்து மாற்றுவது….

ஒரு வேலை புவனுக்கு தன்னை பற்றி தெரிந்திருக்கிறது. அதனால்தான் நேற்று புவன் தங்களிடம் அப்படி கேட்டானோ…. வேறு யாரிடம் என்றாலும் குழந்தையை கொடுப்பாயா?’ என கேட்டாரோ…. எனக்குதான் புரியவில்லையா… அவருக்கு எல்லாம் தெரிந்திருக்குமோ….

பாவம் அவனிற்கு நான் எப்படி பொருத்தமாவேன்… என்னை பற்றியே சிந்திக்கிறேனோ…. ஐயோ!’ தலை சுற்றியது… தீபிக்கு கண்மூடி சாய்ந்து கொண்டாள் அந்த சோபாவில்… ஏனோ கெளதமின் முகத்தை நினைவு படுத்திக் கொள்ள தொடங்க…. இது வரவில்லை அதற்கு பதில் வர்ணாவின் முகம்தான் வந்தது.

இப்போதுதான் அருகில் வந்து கிஷோர் அமர… உணர்ந்தால் தீபி.. கண்களை திறக்கவில்லை… மெதுவாக சொன்னான் “ஏன் தீபி… புவனன் மாதிரி ஒரு அப்பா… வனிக்கு கண்டிப்பா… வேணும்டா….

உன்னவிட அவரு நல்லா பாத்துக்குவாரு…. எனக்கு வனியோட அவர நினைக்கும் போது… ஸேப். ஆனா உன்னோடு அவர நினைக்கும் போது… ஒட்டவே இல்ல டி…. ஆனா குடும்பமா நின்னா நீ அழாக இருப்படி” என்றான். ஏனோ தன் அக்காவின் சந்தோஷத்தையும் துக்கத்தையும் கூடவே நின்று பார்த்ததால்… அவளை வற்புறுத்த தோன்றவில்லை கிஷோருக்கு. எனவே சொல்லியவன் மேலே சென்றான்.

அவளிற்கு ‘என்ன சொன்னான் இவன்’ என யோசிக்கும் முன்…. வர்ணாவின் குரல் கேட்டது…. “ஹே…. தருண் சித்தப்பா….. ஹ… ஹ….” என ஆர்பாட்டமாக ஒலித்தது தன் மகளின் குரல். இப்போது தீபியின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

தொடர்ந்து தருணின் குரல் “செல்ல குட்டி…. ஹாப்பி பர்த்டே டா… தங்கம்” என்று அவளை தூக்கி சுற்றினான். அதை தொடர்ந்து உள்ளே ஆட்கள் வரும் சத்தம். இவள் நிமிர்ந்து அமர்ந்தாள்.

கெளதமின் அம்மா… இவளின் மாமியார் வள்ளியம்மாள். தருணின் அம்மா அப்பா, தருண் என பத்து பேர் கொண்ட பெரிய படையே உள்ளே நுழைந்தது. “வாங்க அத்த மாமா, பெரியப்பா… ” என எல்லோரையும்  வரவேற்று எழுந்து உள்ளே சென்றாள், ஏனோ தருணின் கையில் வர்ணாவை பார்க்கவே பிடிக்கவில்லை அவளிற்கு.

வீடு இப்போது திருவிழா கோலம் கொண்டது. கதிரேசன் வந்தார். சுந்தரி வந்து குடிக்க கொடுத்தார். எதற்கு இத்தனை சொந்தம் வருகை என புரியாமல் எல்லோரையும் வரவேற்று உள்ளே சென்றார் அவர்.

காலை உணவு தொடங்கியது… பூரியும் இடியாப்பமும் செய்தனர் எப்போதும் போல்  இ\ப்போது அவசரத்துக்கு பொங்கல் கொஞ்சம் செய்ய சொன்னார்… கந்தனை, சுந்தரி. எனவே உள்ளே அடுப்படியில் பரபரவென வேலை நடக்க…   

வெளியே பெண்கள் மட்டும் வர்ணாவுடன் பேச்சு… ஆண்கள் அமைதியாக இருந்தனர். கதிரேசன் எந்த விதத்திலும் அவர்களை நெருங்கவில்லை. கமலநாதன் வேறு வரவில்லை எனவே இத்தனை கூட்டத்தை பார்ததும் ஏதும் பேசாமல் அமைதியாகவே இருந்தார்.   

உணவு உண்ண அழைத்தார் சுந்தரி…. அங்கு பரிமாறியபடியே தீபி நின்றிருந்தாள்… அதிகமாக பேச்சு எழவில்லை அமைதியாகவே உண்டனர். உண்டு முடித்து.. ஆளுக்கொரு கிண்ணத்தில் அசோகா அல்வாவுடன் ஹால் நோக்கி பேசிக் கொண்டே கிளம்பினர் அவர்கள்.     

சுந்தரி “லட்சுமி சாப்பிட்டு போ…. நேரமாச்சு “ என்றார் பரபரப்பாக

தீபி “ம்ம்மா… இப்போ எதுவும் வேண்டாம்…. கொஞ்ச நேரம் ப்ளீஸ்….” என்றவாறு நகர போனவளை… கையில் ஒரு ஸ்வீட் கப்பை தந்தார் சுந்தாரி. சிரித்தபடியே வாங்கி வாயில் போட்டு மென்று கொண்டே அங்கு எட்டி பார்க்க… குழந்தை இப்போது தனது மாமியாரின் கையில் இருந்தது.

இப்போதுதான் தீபியால் மூச்சே விட முடிந்தது. மீதி இருந்த ஸ்வீட்டையும் வாயில் போட்டுக் கொண்டே சத்தமில்லாமல் மேலே சென்றுவிட்டாள்.

வள்ளியம்மை அப்படி இப்படி என உள்ளே வந்து பேசிக் கொண்டிருந்தார்… சுந்தரியுடன். மற்றவர்கள் எல்லோரும் ஏதோ உறங்க பேப்பர் படிக்க தருண் டிவி என ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்க….

உள்ளே வள்ளி “ஏன் அண்ணி எங்க புள்ளைய இப்படியே வைச்சிருப்பீங்களா… “ என ஆரம்பித்து பொறுமையாக தருணுக்கு கொடுங்களேன்…. எல்லாம் ஒன்னுக்குள்ள ஒண்ணுதானே…. எங்களுக்கு பொறுக்கல… பேத்தியும் வளந்துகிட்டே வருது…” என ஒவ்வென்றாக சொல்ல… என்ன சொல்லுவார் சுந்தரி

சுந்தரி “அண்ணி… எதா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்… இப்போ வர்ணா பிறந்தநாள மட்டும் பார்ப்போமே…. ஈவனிங் வேற அவரு வந்திருவாரு…. நீங்க எதுவும் தப்பா நினைக்காதீங்க…” என சொல்லி. “கந்தா… இந்தா…. ஜூஸ் போட்டியா… போ வந்தவங்கள கவனி…” என அவனை ஒரு சத்தம் போட.. யாரும் அதன்பிறகு அங்கு இல்லை.  

மதிய உணவு முடிந்து சிறிது நேரம் வர்ணாவை அழைத்து சென்று உறங்க வைத்தாள் தீபி. கிஷோர் கீழே இறங்கி வரவேயில்லை.

மாலை வேலையும் வந்தது…. தோட்டத்திலேயே அழகாக லைடிங், டேபிள் சேர்.. சின்ன மேடை போல் போட்டு… அழகாக… ரெட் வெல்வெட் கேக்… வர்ணாவிற்காக காத்திருந்தது…

கெளதம் வீட்டில் வாங்கி வந்திருந்த அந்த ரெட் கலர் புல் ப்ராக் அணிந்து, தன் மாமனின் கை பிடித்து நடந்து வந்து கொண்டிருந்தாள் வர்ணா… முகமெங்கும் புன்னகை… வர்ணாவிற்கு…

சின்ன அளவிலான விழாதான்…. தன் சொந்தங்கள் மட்டும் வைத்து வெளி மனிதர்கள் யாரும் அழைக்காமல் செய்திருந்தார் கதிரேசன். எப்போது அப்படிதான் பழக்கம்… வர்ணாவிற்கு மட்டுமாக… இந்த கொண்டாட்டம்.

சுந்தரியின் அண்ணா… அக்கா… தீபியின் மாமனார் வீடு, தீபியின் பிரிண்ட்ஸ் இவ்வளவுதான் எப்போதும்… இந்த முறைதான் தருணின் வீடு வந்திருந்தனர்.

நடேசன் வந்துவிட்டார் மாலை நான்கு மணிக்கே… ஆனால் இன்னும் போனில் பேசிக்கொண்டே இருந்தார் விழா தொடங்கியதும் கூட… தன்னை எதிர்பார்க்க வேண்டாம் என ‘நடக்கடும் நடக்கட்டும்’ என கைகாட்டியபடி போனில் பிஸியாக இருக்க.

கதிரேசன் தன் அண்ணனை பார்த்து ஒரு முறைப்பு முறைக்கவும் திரும்பி நின்று பேச தொடங்கினார் நடேசன்… ஆனால் வைக்கவில்லை… அந்த பக்கம் கமலநாதன் லைனில்… எனவே தவிர்க்கவே முடியாது நடேசனால்.

சொந்தங்கள் எல்லாம் கைதட்ட… தன் மாமனின் கைபிடித்து கேக் கட் செய்தாள் வர்ணா…. முதலில் தன் மாமனுக்கே ஊட்டினாள். அவளின் வள்ளி பாட்டி கூட “தருண் சித்தப்பாக்கு கொடுடா..” என ஏதோ சொல்ல… யாருக்கும் கொடுக்கவில்லை..

தன் அம்மா உற்பட யாருக்கும் ஊட்டவில்லை… தன் மாமனின் தோள் சாய்ந்து கொண்டாள். ஏனோ சற்று பயமோ என்னவோ… சிறிது நேரம் கிஷோரிடமேதான் இருந்தாள்…. பின்தான் விளையாட சென்றாள்.

சிற்றுண்டி வழங்கினர் பணியாளர்கள்… ஏதேதோ பேச்சு சென்றது. இப்போதுதான் நடேசன் அதில் கலந்து கொள்ள தொடங்கினார்.

அப்போதுதான் கார்த்தியாயினி பாட்டியும் ஈஷ்வரும் உள்ளே வந்தனர். கதிரேசன் மிகவும் சந்தோஷமாக வரவேற்றார். தன் அண்ணனிடம் “நம்ம ராஜதுரை பெரியப்பா பொண்ணு ண்ணா,” என கார்த்தியாயினி பாட்டியை காட்டி சொன்னார். “இது அவங்க பேரன் புவனேஷ்வரன் நான் சொன்னேனே” என்றார் கடைசி வார்த்தையில் அழுத்தம் கூட்டி.

நடேசனும் “வாங்க… அக்கா… எனக்கே சொல்லிதறான் சொந்தத்தை….” என தன் தம்பியை பார்த்து சிரிப்புடன் சொன்னார் நடேசன். கூடவே “வாங்க தம்பி…” என புவனனையும் வரவேற்க மறக்கவில்லை அவர். பாட்டியுடன் பழைய கதைகள் பேச தொடங்கினார் நடேசன்.

அங்கேதான் சுந்தரியும் இருந்ததால் சுந்தரி இயல்பாய் பேச்சை தொடங்கினார் “எங்க அண்ணி இந்த சின்ன பிள்ளை இருக்கறதால எங்கயும் வெளியேவே வர முடியர்தில்ல… எங்க பார்க்கவே முடியர்தில்லை… அதான்…. வீட்டில் எல்லோரும் நல்லா இருக்காங்களா…” என ஆரம்பித்து பேச்சு சென்றது.

எனவே அனைவரிடமும் சிரித்தபடியே நின்றான் ஈஸ்வர்.  கிஷோர் வந்து “வாங்க புவனேஷ்” என்றான். லேசாக சிரித்தபடியே அவனுடனேயே நடந்தான் புவன்.

அப்போதுதான் பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த வர்ணா கண்ணில் படவும் அங்கு சென்றது அவன் கால்கள். வினோ இப்போது உள்ளே வரவும் புவனனிடம் விடை பெற்று சென்றான் கிஷோர்.

வர்ணா ‘அங்கு ஆளாளுக்கு… அழகாக கலர் கலராக கேப் அணிந்து கொண்டு… இவளை விட பெரிய பிள்ளைகள் எல்லாம்… விளையாட இவளும் அவர்களுடன் வாய் பார்த்தபடி அவர்கள் சொல்லுவது புரியவில்லை என்றாலும் ஓடி ஓடி விளையாடிக் கொண்டிருந்தாள் “வர்ணாம்மா…” என்றான் அவ்வளவு ரசனையாக சொன்னான் குழந்தையின் பெயரை.

வர்ணாவும் யார் அழைத்தது என பார்க்க… கொஞ்சம் தள்ளி நின்றிருந்தான் புவனன். வர்ணா தேடினாள்… மெல்லிய குரலில் “ஹாப்பி பர்த்டே… கண்ணம்மா..” என்றவன் அவல் முன் வந்து நிற்க… அவனை பார்த்ததும்ம் தாவி வந்து கட்டிக் கொண்டாள் வர்ணா…. வந்த அவளை அப்படியே தூக்கி போட்டு பிடிக்க….. துளி பயம் இல்லாமல் சிரித்தாள் வர்ணா…

மெல்லிய குரலில் இருவரும் ஏதோ பேச “கிப்ட் எங்க ப்புவன்…” என வர்ணா கேட்பது கிஷோர் காதில் விழுந்தது. கிஷோர் அங்குதான் நின்றிருந்தான் சற்று தள்ளி நின்று வினோவுடன் பேசிக் கொண்டிருந்தான் இவர்களை நோட்டமிட்டபடி.

புவன் “உனக்கு இல்லாததா டா… தோ பார்” என  பாட்டியிடம் கூட்டி சென்றான் அவர் கையிலிருந்து சின்ன பர்ஸ் ஒன்றை வாங்கினான்… கண்களால் யாரையோ தேட… வர்ணா அவனின் கன்னத்தை திருப்பி “காத்துங்க…” என்றாள்.

புவன் சத்தம்மில்லாமல் “எங்க … உங்க அம்மா…” என்றான்.

வர்ணா “அவ பேரு தீப்பலச்சுமி…” என அவன் முகத்தை பாராமல் அவன் கையை பார்த்து சொல்லி… இப்போது வர்ணாவும் தேட தீபியை காணவில்லை.    

“புவன் உங்க மாமாட்ட கேளு” என இறக்கி விட்டான்.

கிஷோரிடம் சென்று கேட்க கிஷோரும் தேடினான் அவளை காணவில்லை போன் செய்து இங்கு வர சொல்ல…. ஐந்து நிமிடம் சென்று வந்தாள் தீபி. அது வரை புவனன் மடியில் வர்ணா அமர்ந்திருக்க… அவன் பாட்டியுடன் அமர்ந்து கதிரேசனுடன் பேசிக் கொண்டிருந்தான்.

கிஷோரிடம் வந்து “என்னடா…” என்றாள். அவன் “போ உன் பொண்ணு கூப்பிட்டா…” என வர்ணா இருந்த இடத்தை காண்பிக்க, இப்போதுதான் புவன் வந்ததே தெரிந்தது தீபிக்கு…

புவனன் மடியில் வர்ணாவை பார்த்ததும் சுவாசம் தப்பியது அவளுக்கு… எல்லாம் தெரிந்த பிறகு அவனை வர்ணாவுடன் பார்த்ததும் பட படவென இதயம் அடிக்க தொடங்கியது… கைகள் வேர்க்க தொடங்கியது.

கிஷோர் “போ…” என்றான். ஈஷ்வரின் அருகில் வந்தவள் “வாங்க புவன்… எப்படி இருக்கீங்க” என முயன்று இயல்பான குரலில் கேட்க… இவனும் அலட்டிக் கொள்ளாமல்… பக்கத்தில் இருந்த ஒரு சேர்ரை, உட்கார்ந்த படியே எட்டி எடுத்தான்… அவளிடம் போட்டான் “உட்கார்” என்றான்.

பாட்டியும் கதிரேசனும் பார்த்துக் கொண்டிருந்தனர். தீபிக்கு இப்போது பயமெல்லாம் போக… “என்ன சொல்லுங்க புவன் “ என்றாள் முகம் கடு கடுவென இருந்தது.

புவன் “உட்கார்..” என அவளை நிமிர்ந்து பார்த்து குரலில் அழுத்தம்.. கூடவே அதே அழுத்தமான ஒரு பார்வையுடன் சொன்னான்.. ஏனோ மறுக்க முடியவில்லை தீபியால் அவள் அமரவும்.

தன் கையிலிருந்த பர்ஸை பிரித்தான்… அதிலிருந்து அழகான வெள்ளி கொலுசு… நிறைய சலங்கை வைத்து… அத எடுக்கும் போதே சத்தம் செய்தது.

வர்ணா “ஐய்!…. “ என பார்த்தவுடன் கைதட்ட… புவன் “போட்டுகிரியா” என்றான். வர்ணா எல்லா பாக்கமும் தலையாட்ட குழந்தையின் கால்களை எடுத்து தீபியின் மடிமீது வைத்தான்… தீபியிடமே கொலுசை கொடுத்தான் “போடு .. தீபா” என்றான்….

வர்ணா ஏற்கனவே தங்க கொலுசு போட்டிருந்தாள். எனவே அதனை நீக்கிவிட்டு இதை போடலாம் என அதனை கழற்ற… பாட்டி இப்போது “புதுசு போட்டு விட்டு, அதை கழட்டும்மா..” என்றார்.

தீபி இப்போதுதான் யார் இவரென பார்க்க… புவன் “என்னோட பாட்டி…. “ என்றான். வர்ணா வேறு காலை ஆட்டிக் கொண்டே இருக்க… தீபியும் பரபரவென செய்து முடித்தாள்.

கிஷோரின் பார்வை முழுவதும் அங்கிருக்க அவனுடன் பேசிக் கொண்டிருந்த வினோவும் இதனை பார்த்தான்.

வினோ கிஷோரிடம் “யாருடா அது… தீபிகிட்ட…. இப்படி பிஹேவ் பண்றான், யாரு.. இரு வரேன்… தீ…” என அவளை தன்னருகே அழைக்கும் எண்ணத்துடன் கூப்பிட.

வினோவை தடுத்தான் கிஷோர் “இருங்க பாஸ்…. சொல்றேன்” என்றான். இப்போது புவன் வர்ணாவை கீழே விட… வர்ணா குதிக்க தொடங்கினாள்… அந்த சதங்கை வைத்த கொலுசு அவள் நடைக்கு தாளம் போடா… குஷியானால் வர்ணா…. நேரே தன் பாட்டியை தேடி ஓடினாள்.

தீபியும் சிரித்துக் கொண்டே எழ…. புவன் “இரு…. தீபா” என்றான் அவள் உடனே அமர்ந்தாள். கதிரேசனிடம் திரும்பிய புவன் “அங்கிள் உங்க பொண்ணுகிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.

தீபியிடமிருந்து பதில் வந்தது “இப்போ வேண்டாம் புவன்…. இன்னொரு நாள் பேசலாம்… இப்போ கெஸ்ட் நிறைய பேர் இருக்காங்க” என்றாள்.

புவன் “ம்கூம்…. நாளைக்கு பார்க்கலாம்… ரைட்… “ என்றான். பின் கதிரேசனிடம் “ஓகே அங்கிள் நாங்க கிளம்பறேன்…” என்க…

கதிரேசன் “இருப்பா… அவசர படாத… அக்கா(பாட்டி) இன்னும் என் அண்ணனா பார்க்கல…. இரு…” என்றவர் “தீபி… இவங்களுக்கு சாப்பிட ஏதாவது கொடும்மா” என்றார். ஆனால் கதிரேசன் எங்கும் நகரவில்லை அவர்களுடனேயே இருந்தார்.

 

    

       

 

  

Advertisement