Advertisement

பௌர்ணமி வர்ணம் – 8

விடிவெள்ளி தெரிந்ததும் தோன்றும் அந்த ஆரஞ்சு நிறம் வானம்…. அந்த சூரிய காதலனுக்கு மட்டும் சொந்தம் போல…. வானம் ‘ப்பா…’ என மூச்சு முட்டி…. செல்ல கோவம் கொண்டு…  பகலவனை வெளியிடும்… அற்புத தருணமது…. இந்த உலகுக்கு மட்டுமல்ல… வான காதலியிடமும் கதிரவன் முரடன்தான் போல…. அந்த ஆரஞ்சு வண்ணம்தான் சொல்கிறது….

அதனை ரசித்தபடியே மொட்ட மாடியில்…. தம்பில்ஸ் எடுத்துக் கொண்டிருந்தான் ஈஷ்வர். அவனின் அப்பா ராமலிங்கம் வாக்கிங் சென்றுள்ளார்…. பாட்டி சற்று லேட்டாகதான் எழுவார் எப்போதும். ஆனந்தி, குளித்துக் கொண்டிருந்தார்.

ஒரு அரைமணி நேரத்தில் எல்லோரும் ஹாலில் இருந்தனர்… புவனன் டைன்னிங் ரூமில்… அவனின் அப்பா ஹாலில் கையில் காபி கப்புடன்… ஆனந்தி கிட்செனில்…. புவனனை லேசாக திட்டிக் கொண்டிருந்தார். “நேரங்காலத்துல வீடு வரது இல்ல…. அவனுக்குன்னு ஒருத்தி வந்துட்டா பரவாயில்ல…. எப்போ நேரம் வருமோ…” என முனக…

புவனன் “அதெல்லாம் வந்திடுச்சி…. நீ ம்ன்னு சொல்ல வேண்டியதுதான் பாக்கி” என்றான்… அங்கிருந்தே…

ஆனந்தி “இது எப்போ… பாட்டியும் பேரனும் எங்கிட்ட எதுவுமே சொல்றது இல்ல…. என்ன கல்யாணம் ஏதாவது ஆகிடுச்சா சொல்லுடா..” என்றார் ஹய் பீபியுடன் குரல் வேறு கலங்கி தெரிந்தது.

புவனன் இப்போதுதான் யோக செய்து வந்ததால்… அவனின் எல்லா உணர்வுகளும் கட்டுக்குள் இருந்தது போலும்… “ம்ம்மா… நான் கல்யாணம் செய்துக்கனும்னு நினைச்சினா… சரின்னு சொல்லு… இல்லையா, எனக்கு இந்த வாழ்க்கை பழகிடுச்சு… அப்படியே குன்னூர் பக்கம் போறேன்… சும்மா… எல்லோரும் படுத்திருங்க…” என்றான் காலையிலேயே சுள்ளென அடித்தது வெண்மை…

இப்படி சொல்லிக் கொண்டே ஹாலுக்கு செல்ல அவன் பின்னாடியே வந்தார் ஆனந்தி, அங்கு அமர்ந்திருந்த தன் கணவரிடம் “என்னங்க… உங்க பையன் என்னென்னமோ சொல்றான்… நீங்க என்னன்னு கேளுங்க….” என்றார் அவரின் குரலில் அப்படி ஒரு ஆதங்கம்…

ஏனோ ஆனந்திக்கு மட்டும் தீராத ஆதங்கம் எப்போதும் இருக்கும் ஈஸ்வர் விஷயத்தில். அவனின் எந்த செயலுக்கும் தாயாய் அவர் முன்னின்றதே இல்லை.

அவனின் எல்லா செயல்களுக்கும் பின்னால் தனது மாமியார் மட்டுமே… அவனை மில்டரிக்கு அனுப்பியதையே அவரால் இன்னும் தாங்கிக்கொள்ள முடியவில்லை, ஆனாலும் நல்லதுக்குதான் என மனதை தேற்றிக் கொண்டிருந்தவர்க்கு…. இப்போது தன் மாமியாருடன் சேர்ந்து மகனும் களமிறங்கவும் பொறுக்க முடியவில்லை.

எங்கே அந்த பெண்னையே கட்டி வந்துவிடுவானோ என பயம் அவர்களுக்கு…. ஏதோ நேற்று அதில் விருப்பம் இல்லாதது போல் இருந்ததால் ஆனந்தி சற்று மகிழ்ந்திருக்க, இப்போது இவன் திரும்பவும் இப்படி ஆரம்பிக்கவும்… சர்வமும் கலங்கினார் ஆனந்தி.

ஆனந்தியின் படபடப்பை பார்த்து ராமலிங்கம் “விடு ஆனந்தி நாம என்ன பண்ண முடியும்… அவனவன் தலையில என்ன எழுதிருக்கோ… நீ அமைதியா இரு” என்றார் அதட்டலான குரலில் ஈஸ்வரை நொறுங்க ஒரு பார்வை பார்த்தபடி.

புவனன் “என்ன ப்பா… எல்லோரும் ஏன் ப்பா…” என்றான் ஆற்றாமையாய்.

ஆனந்தி “ஆமாம் டா…. நாட்டுக்கு நல்லது செய்யறேன்னு போன… இப்போ சம்மந்தமே இல்லாமா… ஏனோ இன்னொரு பிரச்சையில நீயா போய் தலைய கொடுக்கற… இப்படியே ஊருக்கே நல்லதுன்னு பார்த்தா… எங்களுக்கு மகனா… நாங்க சொல்றத எப்போ கேட்ப” என்றார்.  

“ஏம்மா.. இப்படி… என்ன பிரச்சினை…. ஏற்கனவே குழந்தையிருக்குன்னா… “ என்றான் ஒரு மாதிரி விசாரணையான குரலில் தன் அன்னையிடம்.

ஆனந்தி “ஆமாம் டா…. இது நமக்கு தேவையா…. “என புலம்ப தொடங்கினார். ராமலிங்கம் கைகாட்டி ஆனந்தியின் பேச்சை நிறுத்தினார். அவரே தொடர்ந்து பேச தொடங்கினார்.

“இங்கபார் ஈஸ்வர்…. இது சாதாரண விஷயம் இல்ல…. அந்த பொண்ணோட மாமனாரு பெரிய இடம்…. இதுல நிறைய சிக்கல் வரும் டா…. இதெல்லாம் நமக்கெதுக்குன்னு கேட்கறா உங்கம்மா…” என்றார் பொறுமையாக தன் மகனிற்கு புரியவைக்கும் நோக்குடன்.

என்ன சிக்கல் வந்து விடும் புவனனிற்கு புரியவே இல்லை… அப்படி என்ன பெரிதாக வந்து விட போகிறது, நான் நல்லதுதானே செய்ய நினைக்கிறேன். இதில் யாருக்கும் கெடுத்தல் இல்லையே… என அப்படியே அமர்ந்த படி சிந்தனையில் இருக்க… பாட்டி குளித்து முடித்து பூஜை அறை சென்றார்.

தன் அம்மாவை பார்த்த உடன் ராமலிங்கம் எழுந்து கடைக்கு கிளம்ப சென்றார். எப்போதும் ஊருக்கு உபகாரம் செய்பவர் தன் அன்னை. இப்போது தன் சொந்தத்தில் ஒரு பெண் கையில் குழந்தையுடன் நிற்பதையா பார்த்துக் கொண்டு சும்மா இருப்பார்.

மேலும் அவரின் இந்த உபகார குணத்தை இத்ததனை வருடங்களால் தன்னால் கூட மாற்ற முடியவில்லை. இப்போது பேரனுக்கு பார்த்திருக்கும் பெண் விஷயத்திலா தான் சொல்லுவது நடக்க போகிறது என அவருக்கு தோன்றியது. எனவே பேசி ஒன்றுமாகபோவதில்லை என கிளம்பிவிட்டார்.

புவனன் இடத்தை விட்டு அசையவில்லை. ஆனந்திக்கு, இது பழக்கம்தான் எப்போதும் தன் இரண்டாவது மகன் விஷயத்தில்… மேலும் உள் வேலைக்கு ஆட்கள் வந்திருப்பதால்… தன் வேலையை பார்க்க சென்றார்.

பாட்டி பூஜை முடித்து வந்து அமரவும் ஆனந்தி காபி கொண்டு வந்து கொடுத்தார். தன் மகனை பார்க்காது உள்ளே சென்றுவிட்டார். அவனின் குழப்பம் திரும்பவும் ஏதும் பேச விடவில்லை பாட்டியிடம்.

அமைதியாகவே அமர்ந்திருந்தான். பாட்டிக்கு புரிந்தது. இவனின் நிலை. எனவே காலையிலேயே கதிரேசனுக்கு அழைத்தார்.

நேற்று புவனன், ‘திருமணத்திற்கு சம்மதம்’ என சொன்னவற்றை எல்லாம் சொன்னார். ‘நீங்க உங்க பொண்ணுகிட்ட பேசுங்க, சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சிடலாம்’ என்றார்.

போன் பேசி முடிததும்… புவனை பார்த்து… “இங்க பாரு ஈஷ்வர்… என்னோட ஒண்ணுவிட்ட தம்பிதான் கதிரேசன்.. நம்ம சொந்தத்தில் ஒரு பொண்ணு இருக்கு… உனது கொள்கைக்கு பொருத்தமா இருப்பான்னு பார்க்கிறேன்….தீபி ரொம்ப நல்ல பொண்ணுப்பா….. ” என்றவர்   கதிரேசன் சொல்லிய தீபியின் பழைய நிலையை புவனனுக்கு சொல்ல தொடங்கினார்.

புவனன் “பாட்டி அது எனக்கு தேவையே இல்லை…” என்றான்.

பாட்டி “அதெப்படி… கண்டிப்பா உனக்கு தெரியனும்… எனக்கு பொண்ணு மட்டும்தான் கண்ணுக்கு தெரியுது.

பெற்றவங்க…. எவ்வளவு கஷ்ட்டப்பட்டு பெண்ணை வளர்த்து ஆளாக்கி கல்யாணம் செய்து கொடுக்கறாங்க…

ஆனா, இப்படி பாதி வாழ்க்கையோட தனி மரமா நின்னா… எப்படிப்பா… அதுவும் அந்த பொண்ண நிம்மதியா கூட இருக்க விடுறதில்ல…” என்றவர் தீபியின் நிழலான நிஜங்களை சொல்ல தொடங்கினார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெரிய தொழில்பதிபர்களில் கமலநாதனின்   குடும்பமும் ஒன்று. அந்த சுற்று வட்டாரத்தில் மிகவும் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்கள், கோழி பண்ணை என இன்னும் பல தொழில்கள் அவர்களுக்குண்டு.

கமலநாதன்… எப்போதும் மனதில் ஒரு கணக்கிடுதளுடன் தான் இருப்பார். இவரிடம் பேசினால் என்ன லாபம் வரும்…. இவர்களிடம் பொறுத்து போனால் என்ன கிடைக்கும் என கணக்கிடுதல்தான் எப்போதும்.

அவரின் மூன்று மகன்கள் கூட அவரின் கணக்கீடுதான்… ஆசைக்கு ஒரே மகள். கடவுள் அவருக்கு மட்டும்… எப்படி சகுனிக்கு சூதாட்டத்தில் கேட்டதெல்லாம் கொடுத்தாரோ அப்படிதான் இவருக்கும் இதுவரை செய்தார்… செய்கிறார்… செய்து கொண்டிருக்கிறார் இன்னும்ம் செய்வாரோ தெரியவில்லை.

நடேசன் சண்முகசுந்தரியின் தவ புதல்விதான் தீபலட்சுமி அவளின் தம்பி கிஷோர். இப்போது நடேசன் MP. தம்பி இப்போது லண்டனில் படித்துக் கொண்டிருக்கிறான்.

கோவைதான் நடேசனின் சொந்த ஊர். எப்போதும் குடும்பத்தை விட.. கட்சிதான். அவரின் தந்தை கட்சியில் இருந்து சரியாக பிரகாசிக்காமல் போனவர். அதனால் இவரின் எல்லாம் கட்சிதான். அப்போது மாவட்ட நிர்வாகியாக இருந்தார்.

எங்கோ ஒரு விழாவிற்கு சென்றிருந்த போது… தீபியின் தந்தை நடேசனை சந்தித்தார் அந்த நாமக்கல் தொழிலதிபர் கமலநாதன். அந்த விழாவில் இருவரின் பரஸ்பரம் அறிமுகம் நடந்தது. பிறகு…. இருவரிடமும் நட்பு வளர்ந்தது.

ஆக இருவரும் வளர்ந்து கொண்டிருந்த நிலை தங்களுக்குள்… தாங்களே பற்றி…. பின்னி பினைந்து ஒரு சேர வளர்ந்தனர்.  

இந்த காலகட்டத்தில் நடசனின் கட்சி மத்தியில் ஆட்சியில் இல்லை. மாநிலத்திலும் அவ்வாறே. எனவே, கட்சியில் எப்போதும் போல் குழப்பம். தங்களின் நிலையை கூட காப்பாற்றிக் கொள்ள முடியாத சூழல்…. அப்போதுதான் தன் பக்கம் பலம் சேர்க்க துணையை தேடிக் கொண்டிருந்தார் நடேசன்.

கமல்நாதனுக்கும் அரசியலில் ஆர்வம் இருந்ததால்… கட்சியின் முக்கிய நபர்களுக்கு இவரை அறிமுகபடுத்தி வைத்தார் நடேசன். அதனால் கமலநாதனுக்கு சில பல சிக்கல்கள் தீர்ந்தது. எனவே தாரளமாக பண உதவி செய்தார் நடேசனுக்கு.

நடேசனுக்கு இப்போது கட்சியில் மதிப்பு கூடியது. இந்த எலெக்க்ஷனில் சீட்டு கிடைத்தது. இரண்டாவது முறையாக MLA ஆகினார். இப்படி கொஞ்ச கொஞ்சமாக வளர்ந்தார்.

அதன்பிறகு நடேசனின் MP ஆசையை, கட்சி தானாகவே அவருக்கு செய்தது. ஆக வளர்ச்சிதான் நடேசனுக்கு. எனவே இவர்கள் இருவரின் நட்பும் தங்கு தடையின்றி வளர்ந்தது.

எனவே தான் வளர்வதற்கு கமலநாதன் செய்த உதவியை மறக்கவில்லை இவர். எப்போதும் நன்றியுடனேயே இருந்தார். ஆனால் கமலநாதன் அவரை எப்போதும் ‘அந்த நன்றிகடன்’ என்ற கணக்கிலேயே வைத்திருந்தார் அல்லது பயன்படுத்திக் கொண்டார் …. அல்லது பயன்படுத்துகிறார்… இப்படிதான் கதிரேசனின் எண்ணம் இப்போது வரை.

வருடங்கள் சென்றது… இந்த இருவரும் அத்தோடு நிற்க விரும்பாமல் ஒருவருக்கொருவர் உறவாகும் எண்ணம் வந்தது. இருவர் வீட்டிலும் பிள்ளைகள் சரியாக இருக்க…. கமலநாதன்தான் முதலில் கேட்டார் “என் மகனுக்கு உன் மகளை திருமணம் செய்து கொடு“ என.

நடேசனுக்கு தலை கால் புரியாத சந்தோஷம். அவர் கேட்டதே போதும் என சம்மதம் சொன்னார். அப்போதுதான் தீபி BSe ப்பேஷன் டெக்னாலஜி முடித்து இருந்தாள்.

நடேசனின் மனைவி சண்முகசுந்தரிக்குதான் எங்கோ நெருடிக் கொண்டே இருந்தது. “ஜாதகம், பாக்கலாங்க… “ என்றார். அதையும் பார்த்தனர். பத்துக்கு ஏழு பொருத்தம் இருந்தது.

நடேசனுக்கு, நன்றிக்கடனா, நட்பா, இல்லை ‘நான் மாறவில்லை அப்படியே இருக்கிறேன் பார்’ என காட்டும் பெருந்தன்னையா இதில் ஏதோ ஒன்று… அவரை கேள்வியே கேட்காமல், தன் பெண்ணின் விருப்பத்தை கூட கேட்காமல் திருமணத்திற்கு சம்மதம் சொல்ல வைத்தது. அவர்களின் எண்ண படியே எல்லாம் நடந்தது.

தடபுடலாக நடந்தது திருமணம்… அப்போது இவர்களின் கட்சிதான், மாநிலத்திலும் ஆட்சி. எனவே அப்போதைய முதல்வர் வந்தார் திருமணத்திற்கு.

புதுமண தம்பதியர் பத்து நாட்கள் தாய்லாந்து சென்று வந்தனர் தேன்நிலவுக்கு… கையில் சிக்கிய வானவில்லாக வாழ்க்கை அவர்களின் விருப்பத்திற்கு வளைந்தது.

இதெல்லாம் வெறும் இருபதே நாட்கள்தான். அன்று திருச்செங்கோட்டில் உள்ள கல்லூரியை பார்த்து வருகிறேன் என சென்ற… புது மாப்பிள்ளை  கெளதம். இரவு உயிரற்று திரும்பி வந்தான்.

இளம் மணப்பெண்ணாய் தீபி கதறி தீர்த்தாள். யாராலும் கண் கொண்டு பார்க்க முடியவில்லை. யாரும் அவள் அருகில் செல்லவே இல்லை. அப்படி ஒரு கதறல்… அனைவரும் பயந்து போயினர்.

என்ன சொல்லி தேற்ற முடியும் அவளை. இரு வீட்டாரும் நிலை குலைந்து போயினர். தீபியின் தம்பி கிஷோர்தான் அவள் அருகிலேயே நின்றான்.     

இறுதியாக தன் கணவனின் உயிரில்லா உதட்டில் கடைசி முத்தம் வைத்து இறுதியாத்திரைக்கு அனுப்பி வைத்தாள் தீபி. இதுதான் கடவுள் துரும்பில் கூட இல்லாத நேரம்.

அப்போ கூட அவளின் நட்புகள் அவள் கூடவே அந்த வீட்டில் பத்து நாட்கள் இருந்தது, எந்த சங்கடம்மும் இல்லாமல் எதை பற்றியும் கவலை படாமல், அவளை அப்படியே தாங்கி கோவை சேர்த்த பின்பே ஓய்ந்தனர்.

நடேசனுக்கு… ஒரு வலி இருக்கத்தான் செய்தது. ஆனால் அலட்டிக் கொள்ளவில்லை அவர். இப்போதான் எத்தனயோ மாற்றம் வருகிறதே பார்த்துக் கொள்ளலாம் என எண்ணினார்.

ஆனால் இப்போது வரை தெளிவாக… தருண் என தனது பங்காளியின் மகனை இன்னமும் சென்னைக்கே அனுப்பி… தீபியை கண்காணிக்கிறார் கமலநாதன்.

மேலும் பேத்தி வர்ணா… அவள் அவரின் இரண்டாவது மகனின் வாரிசு. இவள் ஒருவளே பேத்தி… எனவே அவளிர்காகவே அமைதியாக இருக்கிறார் எபோதும் போல் மனதில் கணக்கிடுதலுடன்.

இதெல்லாம் தீபிக்கு ஒரு வெறுமையைதான் தருகிறது. எப்போதும் எங்கும் ஒரு கவனம், யாரோ தன்னை கண்கானிப்பதாய் ஒரு தோற்றம். எப்போதும் ஏதோ ஒரு நெருக்கடியான மனநிலையில் அவளிற்கு பையித்தியம் பிடிக்காததே அதிசையம்தான்.  

சிலசமயம் தன் அப்பாவும் தருணை திருமணம் செய் என சொல்லுவது. அதை தொடர்ந்து நண்பர்களும் திருமணத்தை பற்றி பேசுவது என தீபி எப்போதும் சொல்லுவது போல்… சந்தோஷமாதானே இருக்கேன்! என சொல்லுவது போல்தான் அவளிற்கு தோன்றும்.

உடைந்து விடுபவள் இல்லைதான் ஆனால்…. இன்னும்ம் எத்தனை வருடங்கள், காலங்கள் இதெல்லாம்… என தோன்ற தொடங்கிவிட்டது தீபிக்கு.

 

  

 

  

     

Advertisement