Advertisement

பௌர்ணமி வர்ணம் – 7

இந்த இருவரின் தனிமையை கலைக்கவே கடையின் உள்ளிருந்து அக்கா தம்பி இருவரும் வந்தனர்…. கிஷோர் “என்ன ரொம்ப ரகளை செய்துட்டாளா” என்றான்.

அவர்கள் வருவதற்குள்…. சாக்லெட் சாப்பிட்ட சுவடே… வர்ணாவிடம் இல்லை, அவளின் கைகளை வாஷ் செய்து வாய் கொப்பளிக்க வைத்து அழைத்து வந்திருந்தான் புவனன்.

இப்போது கிஷோர் கேட்ட கேள்விக்கு புவனனும் வர்ணாவும் ‘இல்லை’ எனும் விதமாக ஒரே மாதிரி தலையாட்ட… கிஷோரும் தீபியும் அதிசையமாக பார்த்திருந்தனர்.

கிஷோர் “என்ன மந்திரம் போட்டிங்க எங்க பொண்ணுக்கு…. இப்படி ஒட்டிக்கிட்டா உங்க கிட்ட” என கேட்டே விட்டான்.

டேபிள் மீது அமர்ந்திருந்த வர்ணாவை பார்த்தவாறே “எனக்கும் அதான் தெரியலையே….” என்று ஒரு பெருமூச்சு விட்டவன்.

“சொல்லுங்க என்ன சாப்பிடுங்க ரெண்டு பேரும்” என்றான்.

கிஷோர் “அதெல்லாம் விடுங்க, உங்க பத்தி சொல்லவே இல்லை” என்றான்.

தீபியும் புவனனைதான் பார்த்திருந்தாள், எங்காவது… சிறு வயது புவன் அவனிடம் தெரிகிறானா என…. ஏன்னெனில் இப்போது முற்றிலும் மாறி தெரிகிற இவனை தீபிக்கு பழக்கம் இல்லையே… அதனால் அவனின் பதிலுக்காக அவனையே பார்த்த்திருந்தாள்.

இப்போது புவனன் பரபரப்பானான் தன் தலையை கைகளால் கோதிக் கொண்டு, வேண்டுமென்றே தான் அணைந்திருந்த டி- ஷர்ட்டின் கை பகுதியை ஏற்றி விட்டுக் கொண்டு…. கிஷோரையும் தீபியையும் பார்த்து “ரெடி.. என்ன தெரியனும் என்ன பத்தி..” என்றான் குரலில் ஏனோ ஒரு ரப் வந்திருந்தது. முகத்தில் இத்தனை நேரமிருந்த கனிவு காணாமல் போயிருந்தது.

அவனின் இந்த செய்கையில் திரு திருவென விழித்த இருவரும். கொஞ்சம் அன்ஈசியாக கூட இருந்தது இருவருக்கும்.

தீபிதான் சாமாளிக்கும் விதமாக, “எனக்கு தெரியும், நீங்க எங்க சீனியர்ன்னு, இப்போ… கல்யாணம் ஆகிடுச்சா, வொர்க் செய்றீங்களா…. எங்க இருக்கீங்க…. அதான்… வேற ஒண்ணுமில்ல” என்றாள்.

புவனின் கோவம் இப்போதுதான் சற்று இறங்கியது…’ ஓ… இவர்களுக்கு என்னை பற்றி சொல்லவில்லை போல’ என நினைத்தான். ‘அப்போ யாருன்னே தெரியாத, என்னை நம்பி எப்படி குழந்தையை கொடுத்தனர் இருவரும்…. அப்போ யார பார்த்தாலும் இப்படிதான் கேர் லெஸ்சாக இருப்பாளோ….’ என மில்டரிமேன் இப்போது வர்ணாவின் உடைமைபட்டவனாக சிந்திக்க தொடங்கினான்.

தீபியின் கேள்வியை எல்லாம் பின் தள்ளி “அப்போ யாருன்னு நினைச்சி குழந்தையை கொடுத்தீங்க….” என விசாரணையாக கேட்டான்.

கிஷோர் “என்ன பாஸ்…. எங்க அக்காக்குதான் உங்கள தெரியுதே….” என்றான்.

புவனன் தன் நெற்றியை இரு விரல்களால் தேய்த்த வண்ணம் அவனை எரிப்பது போல் ஒரு பார்வை பார்த்தான்…. அதில் ‘இவ்வளோ முட்டாளா நீ’ என்ற அர்த்தம் இருந்து.

தீபிக்கு இப்போதுதான் நிம்மதி ‘அப்பா… அதே சிடுமூன்ஞ்சிதான் இவன்’ என சிரிப்பு வந்தது. ஆனாலும் அமைதியாக இருந்தாள்.

இப்போது தீபியிடம் பார்வையை திருப்பியவன் “நான் இங்க சென்னையில்தான் இருக்கேன், ஒரு பத்து வருஷம் மில்டரில சர்வீஸ் பண்ணேன்…. இன்னும் கல்யாணம் ஆகல…” என்றான் ஏனோ கடமையாகவே சொன்னான் எல்லாவற்றையும்.

கிஷோர் “தீபி லெட்ஸ் கோ… கெட்டிங் லேட்” என்றான் அவனால் அமர முடியவில்லை. இவனின் இந்த கடு கடுப்பை பார்த்து. இப்போது புவனன் அவர்களை பார்த்து விட்டு குழந்தையிடம் திரும்பினான்.

புவன் “உங்க பேர் என்னடா” என்றான் கனிந்த குரலில்… ஒரு நிமிடத்திற்கு முன்பு… ஒரு அடிப்படை நாகரிகத்திற்காக கூட தங்களை மதிக்காதவன் இப்போது குழந்தையிடம் கனிவது வியப்பாக இருந்தது தீபிக்கு பார்த்தபடியே இருந்தாள்.

வர்ணாவும் “வண்ணமாயினி….” என்றது. புரியவில்லை புவனனுக்கு…. சிரித்தபடியே தீபியிடம் திரும்பி “என்ன சொல்றா” என்றான்.

தீபி “வர்ணமாலினி தான் அவ பேரு, அததான் இப்படி சொல்றா” என்றாள்.  

திரும்பவும் வர்ணாவிடம் திரும்பியவன் “சூப்பரா இருக்கு டா பேரு…. உன்ன மாதிரியே… யாரு வெச்சா” என்றான் அவளிடம் பேச்சை வளர்க்கும் எண்ணத்துடன்… கிஷோர் கிளம்பலாம் என்று சொன்னதால்

வர்ணா “ம்மா மா….” என்றது… உடனே தன் மாமாவை பார்த்து தன் கண்ணனை சுருக்கி அழாகாக சிரித்து “ம்மா…மா… “ என தன்னிரு கைகளை தன் மாமாவை நோக்கி நீட்டினாள்… தூக்கு எனும் விதமாக…

அத்தனை பொறாமை புவனின் கண்களில்…. ஏனோ இப்போது எதிரியாகவே தெரிந்தான் கிஷோர்…. எனவே வர்ணாவை பார்த்து “ம்மா…” என ஏதோ சொல்ல வந்தவன் “நான் சாக்கி கொடுத்தேன், நீ ஒண்ணுமே கொடுக்கல” என்றான் அவளின் கவனத்தை திருப்புவதாக.

தீபி “அங்கிள்ளுக்கு… கிஸ் கொடுத்துட்டு வா…. போலாம்… பாட்டி திட்டுவாங்கல்ல… குவிக்… குவிக்…” என்றாள் தானும் எழுந்தவாறு. தன தம்பியின் முகமே சரியில்லை என புரிந்து.

புவனன் யோசிக்க கூட இல்லை “யாரு அங்கிள்…. “ என தீபியை எரிப்பது போல் பார்த்தவன், குழந்தையிடம் “அம்மு…. என் பேரு…. புவனேஷ்வர்…. நீ சொல்லு“ என்றான் பொறுமையாக நாளை மறுநாள்…. மூன்றாவது வயது தொடங்க போகும் குழந்தையிடம் பேசுகிறோம் என புரியாமல்

வர்ணாக்கு பொறுமையே இல்லை தன் மாமாவையே பார்ப்பது.. புவனனை பார்ப்பது என மாறி மாறி பார்த்தாள். இவன் சொல்லு என திரும்பவும் “புவனேஷ்வர்….” என்றான் அத்தனையும் மில்டரி பழக்கம்.

பாவம் அதுவும் “பூவன்னேச்ச்சு……….”என ஏதோ சொல்ல….. விடவில்லை புவனேஷ்வரன்…. “அம்மா மாறி பு….வ…ன்… சொல்லுங்க…” என்றானே பார்க்கலாம் தீபிக்கு இத்தனை நேரம் இல்லாத பதட்டம் வந்தது.

வர்ணாவும் “ப்பூ..வன்…” என அழகாக அழுத்தி சொல்ல…. அப்பா  அத்தனை பிரகாசம் அவன் முகத்தில்….”ஹை பைவ் டா… கண்ணம்மா…” என அவளின் பிஞ்சு கைகளில் லேசாக தட்டி அவளை குளிர்வித்தான்…. குழந்தையும் அழகாக ஹை பைவ் தந்து கைதட்டி சிரித்தது….. புவனன் பெருமிதமாக திரும்பி தீபியை பார்த்தான்.

என்ன நடக்கிறது என கிஷோரும் பார்த்தான்…. தீபிக்கு ஏதோ உறுத்த தொடங்கவும் “சரி, கிளம்பறோம் புவனேஷ்வர்..” என்றாள். அதெல்லாம் தெரியவில்லை அவன் கண்களுக்கு….

புவன் வர்ணாவை தூக்கியவண்ணம் “அம்மு… உன் புவன்க்கு… ஒரு கிஸ் கொடுடா….” என்றான்… அது அழகாக… புவனனின் வலிமையான கன்னங்களை தனது பால் பற்களால் கடித்து வைத்தது….

அழகாக சிரித்து அதனை வாங்கிக் கொண்ட புவனன், அந்த தேன்சிட்டின் கன்னத்தை திருப்பி முத்தம் வைக்க… அவனின் ஷார்ப்பான மீசை குறு குருப்பை தர…. கிளுக்கி சிரித்தாள் வர்ணா…. அத்தனை ரம்மியமாய் இருந்தது அதன் ஒலி புவனனுக்கு

ஒரு வழியாக புவனனிடமிருந்து வர்ணாவை பிடுங்கிதான் சென்றனர் இருவரும். அழகாக கதை பேசி செல்லும் தனது மான் குட்டியைத்தான் பார்த்திருந்தான் புவனனும். கிஷோர் அவனிடம் விடைபெற கூட இல்லை கிளம்பிவிட்டான்.     

                 %%%%%%%%%%%%%%%%%%%%%

புவனன் இது வரை பெரிதாக பெண்களை பார்த்தது கூட கிடையாது. இத்தனைக்கும் அவன் அப்பாவின் தொழில் முறையில் எல்லா சொந்தகளும் கூடவே இருப்பதால்… நிறைய அத்தை பிள்ளைகள்  உண்டுதான்….

ராம்க்கு அப்படிதான் பெண் அமைந்தது. மேலும் மிகவும் அடம் செய்து கட்டிக் கொண்டான் பூரணியை. ஆனால் அதற்கு நேர்மாறாக நிற்கிறான் ஈஸ்வர்.

அவன் வேளையில் உள்ள போதே… திருமணம் செய்து அனுப்பலாம் என அவனின் தாய் ஆனந்தி சொல்ல…. ஏனோ அது முடியாமல் போனது. இப்போது பார்க்கும் நேரம்…. எங்கோ தன் மாமியார்…. ஒரு வரனை கொண்டு வந்து…. நிறுத்தியிருக்கிறார் எனதான் ஆனந்திக்கு கோவம்.

ஆனால் இது எல்லாவற்றிற்கும் முற்றிலும் வேறாய்…. புவனன் இப்போது ஒரு குழந்தைக்காக திருமணத்திற்கு தயாராக நிற்பான் என பாட்டி உற்பட யாருமே எதிர்பார்க்கவில்லை.

நேற்று இரவு… மாலிலிருந்து வரவே மணி பனிரெண்டு. அந்த நேரத்தை கூட பாராமல்… பாட்டியின் அறைக்கு சென்றான் புவனன் “பாட்டி…. பாட்டி….. கார்த்திம்மா…. “ என்றான் பாசமாய்.

இந்த இரண்டு மணி நேரமாக…. தலை சுற்றிதான் நிற்கிறான்… என்ன காதலியை பார்த்த காதலனாக இல்லை…. குழந்தையை பார்த்த தகப்பனாக. இப்போதுதான் எழுந்து அமர்ந்தார் பாட்டி இவனின் அழைப்பில்.

எழுந்து உட்கார்ந்து மூக்கு கண்ணாடியை போட்டுக் கொண்டு நிமிர்ந்த பாட்டியிடம், புவனன் “எப்போ கல்யாணம் செய்து வைப்ப” என்றான்.

பாட்டி “யார” என்றார் பொறுமையாக. தொடர்ந்து….”அர்த்த ராத்திரியில்… கல்யாணமாம்…”  என்றார். காலையில் இருந்து எதுவுமே சொல்லாமல் போனவன் இப்போது தூங்கிய தன்னை எழுப்பி கேட்கவும்…. கொஞ்சம் கோவம்….

புவனன் “என்ன விளையாடுறியா…. காலையில் போய் பொண்ணு பார்த்துட்டு வர சொல்ற…. ராத்திரி வந்து யார கல்யாணம் செய்து வைக்கணும்னு கேட்கற….” என்றான்.

பாட்டி “அப்பா… நியாபகம் வந்திடுச்சா… யாரு பொண்ணு பார்த்துட்டு வர சொன்னா…. வந்து நீ ஏதாவது பதில் சொன்னியா” என்றார் அதிகாரமாக.

புவனன் “அப்ப… வெறும் பொண்ண மட்டும்தான் காட்னாங்க…. அதுவும் ஏதோ தீவிரவாதியை காட்டற மாதிரி தூரத்திலிருந்து காட்னாங்க…. இப்போதானே…. பொண்ணோட சேர்த்து மான் குட்டியையும் பார்த்தேன் “ என்றான்.

பாட்டிக்கு ‘பக்’ என்றானது…. “யாரு.. குழந்தையா…” என்றார் சந்தேகமாக. ‘இவன் பெண்ணை பார்த்து சரி என்று சொல்லவில்லை…. குழந்தையையும் பார்த்து வந்திருக்கிறான். இது எப்படி சரி வரும்’ என அவன் பார்த்துக் கொண்டே நினைத்திருந்தார் போலும் அசையாமல் அமர்ந்திருந்தார்.

தன் இணையை பிடித்து அவளுக்காக அந்த குழந்தையை ஏற்பது என்றால் சரி. இவன் அந்த குழந்தைக்காக…. அவள் தாயை திருமணம் செய்வது என்பதை எந்த வகையில் சேர்ப்பது என தலையெல்லாம் நரைத்து… புவனனின் மனதை படித்த… அந்த அனுபவம் வாய்ந்த பாட்டிக்கு புரியவேயில்லை.

தன்னை அசையாது பார்த்திருந்த பாட்டியின் முன்பு கையை அசைத்தான் பேரன் “என்ன…. பாட்டி சத்தமே இல்ல…. ஃப்ரைடே, வர்ணாக்கு பிறந்தநாள்… நாம வரோம்ன்னு அந்த அங்கிள் கிட்ட சொல்லிடு….” என்றான்.

பாட்டி “டேய் அந்த பொண்ணுகிட்ட பேசினியா…. என்ன சொன்னா…” என்றார்.

புவனனுக்கு என்ன பதில் சொல்லுவதேன்னு தெரியவில்லை… நேற்று பேசினார்கள்தான் ஆனால், இப்படி ஒரு விஷயம் தன்னை சுற்றி நடப்பதே அவளிற்கு தெரியவில்லையே…. அப்படிதான் தோன்றியது புவனனுக்கு.

எனவே இப்போது புவனன் திரும்ப பாட்டியை கேட்டான் “நீங்க அந்த பொண்ணு கிட்ட, நான் யாருன்னு சொல்ல போல” என்றான்.

பாட்டி “நீ வேண்டான்னு சொல்லிட்டா என்ன செய்யறதுன்னு சொல்லல” என்றார்.

புவனன் “ம்….. அவளுக்கு என்னை தெரிஞ்சிருக்கு, ஸ்கூல் டேஸ்ல பார்த்திருக்கா போல, சொன்னா…. எனக்கொண்ணும் அவள தெரியல…. என்ன செய்ய…. ஒரு மாதிரி தலையாட்டி வைச்சிருக்கேன்…” என்றான் மிகவும் வருந்திய குரலில்.

பாட்டிக்கு கண்ணை கட்டியது…. என்ன சொல்லுவது என தெரியவில்லை அவற்கு. இதற்கு மேற்கொண்டு எப்படி பேசுவது பேரனிடம் எனவும் புரியவில்லை அவர்க்கு.

“சரிப்பா…. நாளைக்கு போலாம்… அங்க…. இப்போ நான் தூங்கலாமா” என்றார் சிரித்தவாறே. ‘இவன் வேற நடு ராத்திரி…. எழுப்பி…. என்னென்னமோ சொல்றான், நாளைக்கு முதல் வேலை…. கதிரேசனிடம் பேசணும்….’ என தனக்குதானே நினைத்துக் கொண்டு இருந்தார்.

புவனனுக்கு இப்போதுதான் புரிந்தது…. பாட்டியை டிஸ்டிராப் செய்தது…. ஒரு வழியாக “சாரி சாரி கார்த்திம்மா…. சாரி….” என சொல்லியபடி பாட்டி அறையிலிருந்து வெளியே சென்றான்.

அறைக்கு வந்தவனுக்கு நிம்மதியான உறக்கம்…. யாரும் எதுவும் தன்னை நெருங்க விடவில்லை புவனன்.

வீட்டுக்கு சென்ற தீபிக்குதான் பல சந்தேகம், உள்ளுக்குள் சற்று உதறல்… பொதுவாக வர்ணா…. எல்லோரிடமும் ஓட்டுவாள்தான்… இந்த மூன்று வயதில் அவளின் தொடர்புகள் சற்று அதிகம்தான்.

தீபியின் வீட்டில் முதல் பேத்தி… மேலும் தந்தையை இழந்த குழந்தை எனவே…. தீபியின் மாமனாரின் வீட்டில் இவள் இரண்டாது பேத்தி… அங்கும் இவள் செல்லம். கிஷோரை பற்றி கேட்கவே வேண்டாம்…. இது வரையில்…. வர்ணாவின் தாய் ஸ்தானம் அவனிற்கே….

பிறந்தவுடன் கையில் வாங்கியது முதற்கொண்டு…. அவளை தீபியை விட பாதுகாத்தவன் அவனே…. ஆறு மாதம் வரை மட்டுமே தீபி வர்ணாவுடன் இருந்தாள்….அதன் பின் சென்னை வாசம்தான் தீபி… எப்போவாது வந்து போவாள் கோவை. மற்றபடி வர்ணாவிற்கு எல்லாம் மாமாவும், பாட்டி சுந்தரியும்தான்.

தீபியின் ப்ரண்ட்ஸ் கூட்டம்…. எப்போதும் வீடியோ காலில் அழைப்பர். யாரோ ஒருவர் தினமும் வர்ணாவுடன் பேசுவர். அதுவும் சீமா…. வர்ணாவின் பெட்…. கிஷோரிடம் வேலையாகவில்லை வர்ணாவிற்கு என்றால்… அடுத்து சீமாவிடம், ரெக்கமண்டேஷனுக்கு போய்விடுவாள் அந்த தேன்சிட்டு. வர்ணாவின் மேலிடம் அது.  

ஆக வர்ணாவிற்கு அம்மா அப்பா என்ற கட்டமைப்பை தவிர எல்லாம்… எல்லாம்… நிறையவே இருந்தது. எல்லாம் கிஷோரின் கண் பார்வையிலேயே நடக்கும்… வர்ணாவின் முடிவுகள் அனைத்தும் கிஷோரிடம்தான் இதுவரை.

லண்டனில் படித்துக் கொண்டிருந்தாலும்….  தினமும் வீடியோ காலில், அவள் தன்னை தேடும் நேரம் வந்து நிற்பான் கிஷோர்… சலிப்போ, காரணமோ சொல்லமாட்டான்.

எனவே புவனனிடம் வர்ணா ஓட்டியதில் பெரிதாக யோசிக்க நினைக்கவில்லை தீபி. ஆனால், எப்படி…. உடனே குழந்தையை அவனால் ஈர்க்க முடிந்தது என்பதுதான் சிந்தனை இப்போது தீபியிடம்.

ஆனால், கிஷோர்க்கும் வேறு தெரிந்தது… புதிதாக. தீபியின் நண்பன் வினோவிடம் ஒட்டும் வர்ணா, நந்தனிடம் பேச கூட மாட்டாள். தயக்கம் இருக்கும் வர்ணாவிற்கு. ஆனால் எப்படி புவனனிடம் சென்றாள் என அவனிற்கு எண்ணம்.       

புவன் வேறு சிலசமயம் நன்றாக பேசுகிறான்… பலசமயம் அப்படியே ரியாக்ட் செய்கிறான்… ஆனால் வர்ணாவிடம் மட்டும் அப்படி ஒரு கனிவு…. ஏன் இது. அதுவும் அவனாக கடினப்பட்டு மாறுவதில்லை, அது இயல்பாக வருகிறது எப்படி அது. யார்கிட்ட வேணும்னா… வர்ணாவை கொடுப்பியான்னு கேட்கிறான்….. எப்படி… எப்படி…. என யோசனை.

தீபியின் எத்தனை நண்பர்கள்… வர்ணாவிடம் பேசியிருக்கிறார்கள்…. ஏன் இந்த ஒட்டுதல் வர்ணாவிடம்…. புவனனுக்கு மட்டும்.

ஒரு வேலை தீபியை முன்பே…. ம்…. இல்லையே… அப்படியும் தீபியின் முகம் இல்லையே…. என எந்த நுனியும் புவனனை பற்றி தெரியவில்லை கிஷோருக்கு இதுவரை.

       

 

      

Advertisement