Advertisement

பௌர்ணமி வர்ணம் – 6

சென்னையின் மத்தியில் உள்ள அந்த மாலில் இரவு எட்டு மணி என்பதால் கல்லூரி ஆண்கள் பெண்கள் கூட்டம் சற்று குறைய தொடங்கியது. அதற்கு நேர்மாறாக பாமிலிஸ் மற்றும் வொர்கிங் பிப்புல்ஸ் கூட்டம் வர தொடங்கியது.

முதல் மாடியில் உள்ள புட் கோர்ட்டில்…. அங்கொன்றும் இங்கொன்றுமாகதான் ஆட்கள் இருந்தனர். புவனன் தனது நண்பர்கள் இருவருடன் அங்கு அமர்ந்திருந்தான். இப்போதுதான் நண்பர்களின்  உரையாடலில் கவனம் வைக்க தொடங்கினான்.

இதுவரையில் மனம் முழுவதும் பாட்டியிடமும், காலையில் பார்த்து வந்த அந்த சின்ன…. தாயிடமும்தான். ஒரு வழியாக நண்பர்கள்… திருமணம் பற்றி பேச்சு எழுப்பவும்…. இப்போதுதான் நினைவு வந்தவனாக… அவர்கள் பேச்சுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

புவனன் “ச்சு….. அது பண்ணனனும்டா….. “ என்றான் சோர்ந்த குரலில்.

ஆதவன் அவனின் நண்பன் “ஏன் டா…. இப்படி இழுக்கற…. நல்ல ப்பிர்ஸ்க்கா சொல்லு” என்றான் கேலியாய்.

புவனன் “எங்க…. செட்டாகாது போலருக்கு… பார்க்கலாம்” என்றான். ஏனோ அவனிற்கு ஆரம்பிக்கும் போது  கண்ணை கட்டியது….

அப்படியே சொல்லிக் கொண்டே புட் கோர்ட்டிலிருந்து வெளியே வந்து அங்குள்ள கைப்பிடி கம்பியின் மேல் சாய்ந்து, புவனனின் சலிப்பை போக்கும் வண்ணம் திரும்பவும் பேச தொடங்கினர். அப்போதுதான் கார்த்திக் கேட்டான் “என்ன டா, ஒரு ட்ரிப் பளன் பண்ணலாமா” என்றான்.

அப்படியே பிடித்துக் கொண்டான் ஆதவன் “ஆமாம்…  எங்கடா…. தனியா வெளியே போய் ரொம்ப நாளாச்சு…. எங்கயாவது போலாம் டா…” என புது டூருக்கு அடுத்த பேச்சு செல்ல…. புவனின் கவனம் முழுவதும் அவர்களிடமிருந்து மீண்டும் தப்பியது.

அப்போது புட் கோர்ட் உள்ளிருந்து, புவனனின் நேர் எதிரே பதினைந்தடி தூரத்தில்…. தனது வெயிட்டை விட அதிக எடையுடன் க்ரே கலர்ரில் ஒரு ஷூ அணிந்து… ஒரு ஜீன்ஸ் ட்ராயர்…. ப்ரயிட் எல்லோ டாப் அணிந்து…. அவளின் டயானா கட் ஹேர்ரில் ரெட் கலர்…. பவ் வைத்து….. கண் மண் தெரியாமல்…. சிரித்துக் கொண்டே…  தன் பின்னால் திரும்பி திரும்பி பார்த்தவாறு இரண்டடி…. உயரத்தில், .மான் குட்டியா…. பூ செண்டா…. மஞ்சள் மேகமா…. வர்ணா நிலவா என தெரியாமல் ஓடி வந்துக் கொண்டிருந்தாள் வர்ணா.

அந்த மலர்செண்டு வரும் வேகத்தில்… நடுவில் இருந்த சேரின் ஓரத்தில் அவளின் கால் படும்… அப்போது இடறி இந்த கைபிடியில் இருக்கும் இடைவெளியில் விழும் என கணித்தவன் ….

அந்த மான் குட்டியின் பத்தடி, இவனிற்கு இரண்டடியாக தெரிய நடுவில் வந்து நின்றான்… ஓடி வந்த வேகத்தில் தேன்னருவியாய்…. இவன் முழங்கால் மீது வீழ…. சிரித்துக் கொண்டே நிமிர்ந்து… பார்த்தாள் வர்ணா….

தன்னை துரத்தி வந்த மாமன் தன் முன் நிற்பது போல் தோன்ற….. “ஹேய் ம்மா…மா…’ என அவன் முழங்காலை இன்னும் இறுக்கமாக கட்டிக் கொள்ள,

தன்னை பார்த்து பூவாய் சிரித்த முதல் குழந்தை என நினைத்து நின்றிருந்தான் புவனன் அவளை தூக்கவே இல்லை… ஆனால் குழந்தையின் முன் தோற்காதவன் வீரனே இல்லைதானே…. எனவே அந்த ஒருரிரு நொடிகள் கூட பொருக்க முடியாதவன்… அப்படியே அந்த தேனருவியை தன்னிரு கைகளில் தூக்க…. இப்போதுதான் புவனின் முகத்தை அருகில் பார்த்தாள் வர்ணா….

இப்போதும் இருக்கத்தான் பிடித்திருந்தான் புவனன்…. அந்த குழந்தையை…  ஏதோ ஜென்ம ஜென்மமாய் கிடைக்காத பொக்கிஷம்….. இப்போதுதான் கிடைத்தது போல் இருக்கிதான் பிடித்தான் அவன் இயல்பும் கூட அதுதானே….

ஆனால், இது தன் மாமன் அல்ல என அடையாளம் கண்டுகொண்ட  வர்ணாவின் அந்த சிரித்த முகம், சற்று தன் நிலையிழந்ததே தவிர….. அழுகவில்லை…. அவனின் கழுத்தில் உள்ள செயினை தனது ஆட்காட்டி விரலில் பிடித்துக் கொண்டே…. “ம்மா..மா… வேன்..ன்னும்” என்றாள் அவனை தனது மணி விழியால் ஆராய்ந்த வண்ணம்.

அந்த சில வினாடிக்குள் தனது நிலையிழந்தான் புவனன்… அவனிற்கு என்ன நடக்கிறது என உணரும் அவனால்…. ரியாக்ட் செய்ய முடியவில்லை….

இந்த நிலையில் அவளின் மாமா கிஷோர்… “வனிம்மா ஸ்டாப்….” என்றவாறே வந்தவன்…. அவளை யாரோ தூக்கி வைத்திருப்பதை பார்த்து சிரித்துக் கொண்டே அருகில் வந்தான்.

இயல்பாய் அவனிடம் தாவினாள் குழந்தை. அவளை வாங்கிய கிஷோர் “தேங்க்ஸ் பாஸ்…. “ என்றவாறே திரும்பி நடந்தான்.

ஆனால் புவனனால்…. ஈசியாக வெளிவர முடியவில்லை… அவனுடன் நின்றிருந்த நண்பர்கள் கூட அந்த குழத்தைக்கு ‘டாட்டா’ காட்டி வழியனுப்ப புவனன், அந்த வர்ண நிலவையே பார்த்திருந்தான்.

சற்று நேரம் சென்று ஒரு நிலைக்கு வந்தவன் தன் நண்பர்களிடம் “அந்த குழந்தைக்கு என்ன வயதிருக்கும்…” என்றான்.

இவர்கள் இருவரும்… “இரண்டு இல்ல மூனு இருக்கும், ஏன்” என்றனர். புவனனுக்கு…. நினைவெல்லாம் இங்கில்லை ‘இப்படிதானே இருக்கும், அந்த பெண்ணின் குழந்தையும்’ என எண்ணம்தான் வந்தது.

எது எப்படியிருந்தால் என்ன…. ஒரு சிறு குழந்தையுடன் தாய், அது மில்டரி ஆபீசர் குழந்தையாக இருந்தாள் என்ன… MP மகளின் பேத்தியாக இருந்தாள் என்ன…. வலி எல்லோருக்கும் ஒன்றுதானே…

நான் எங்கும் இதில் தோற்கவில்லையே… நான் இதைத்தானே நினைத்தேன்… ஒரு நல்ல செயல்தானே நினைத்தேன்…. பின் எதற்கு தயங்கினேன்…. என அவனுள் முட்டல் மோதல்.

அதனால்தான் பாட்டி தனக்காக இந்த பெண்ணை பார்த்திருக்கிறார் என்றேண்ணியவன்…அமைதியாக இப்போது காலையில் பார்த்தவளின் முகத்தை தனது நினைவடுக்களில் தேட தொடங்கினான்…

ஆனால் அவ்வளவு எளிதில் அவள் முகம் தென்படவில்லை அவனிடம்… அவனே சரியாக பார்க்காத முகத்தை எப்படி நினைவு கொண்டு வர முடியும் அவனால்.

குழந்தையை வருடி செல்லும் காற்று கூட… நமக்கு அன்பை போதிக்குமோ…. எனவே அப்படியே நின்றான் புவனன். அவனின் பாட்டி சொன்ன முடிவில் நிலையாக. அதன் பலனாக அவனின் இதழ்கடையில் அரும்பாக புன்னகையும் மின்ன தொடங்கியது.

நண்பர்களை மறந்து அந்த குட்டி, மான் குட்டியை தேடி போனான் புவனன்… அங்கே புட் கோர்ட்டில், அவனின் கண்கள் அங்குல அங்குலமாக தேட…. எங்கும் காணவில்லை.

ஏனோ அந்த குழந்தையை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என எண்ணம் புவனுக்கு… விளையாட்டு போக்கி… இத்தனை நாள் தன்னை வளர்த்த பாட்டியை பற்றி, தனக்கே சொல்லித்தந்த அந்த… பிள்ளையை தேடி கால்களும் நகர தொடங்கின. அந்த மாலின் எல்லா இடமும் தேடினான்..

இறுதியாக மூன்றாவது மாடியில் ஒரு பேபி  ஷாப்பில், தன்னிடமிருந்து பிள்ளையை வாங்கி சென்ற அந்த நபர், புவனன் கண்ணில் பட….  பக்கத்தில் இருந்த ஒரு கடையில் சாக்லெட்ஸ்கள் வாங்கியவன் கிஷோர் நோக்கி முன்னேறினான்.

கிஷோர் முன் சென்று நின்றவன்  “ஹாய்… எ… எங்க உங்க பேபி….” என்றான்.

கிஷோருக்கு சட்டென புரியவில்லை, அதுவும் தன் பேபி என சொல்லவும் கொஞ்சம் தடுமாறி புரிந்தவன்…  “ஒ, வனியா, என் அக்கா பொண்ணுதாங்க, இருங்க…” என்றவன் எங்காவது கண்ணில் தென்படுகிறார்களா…. என பார்க்க….. எங்கும் காணம்.

கிஷோர் “தோ வரேன்..”  என்று புவனனிடம் சொல்லி, தன் அக்காவிடம் சென்று…. பிள்ளையை வாங்கி வர சென்றான்.

ஆனால், முற்றிலும் வேறாய் கிஷோருடன் அந்த குட்டி பூ செண்டை சுமந்த படி….  காலையில் காண்ணாடி வழியே பார்த்த பெண் வரவும்…. அவன் உதடுகள் அவன் பேச்சை கேட்டகாமல் சிரித்தன, கண்களும் அவன் பேச்சை கேட்காமல் ஒளிர்ந்தது. குப்பென முகம் வியர்த்தது.

அவன் சத்தியமாக இதை எதிர்பார்க்கவில்லை. கண் வழியே அவளின் பிம்பம் மனதில் இறங்க தொடங்கியது…  இது காதல், நேசம் அல்ல… ஆனால் சொல்ல முடியவில்லை…

இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்பதை போல…. அருகில் வந்த வர்ணாவின் தாய்… அவனிடம் “புவன்….. எண்ணை தெரிகிறதா….” என்றாளே பார்க்கலாம்… ஊசியிலை காட்டில் கண்ணை கட்டி…., திசை தெரிய கூடாது என்பதற்காக மொத்தமாக சுற்றியும் விட்டது போல் நின்றிருந்தான் ஈஸ்வர்.    

சத்தியமாக அவனிற்கு அவளை தெரியவில்லை… மேலும் அவனிற்கு, ‘காலை, தான் வந்து போனதை கதிரேசன் சொல்லியிருப்பாரோ’ என்ற எண்ணம்தான்… மற்றபடி தன்னை ஒரு பெண் ‘புவன்’ என பெயர் சொல்லி அழைப்பதெல்லாம்…. ‘விக்ராந்த் போர் கப்பலை இவனிடம் கொடுத்து… இனி நீதான் கேப்டன்…’ என சொல்லுவது போல் அவன் கனவில் கூட நினைத்து பார்க்காத விஷயம்.  

திரு திருவென விழித்தானா, அசந்து நின்றானா, ப்பா நம்மையும் ஒரு பொண்ணுக்கு தெரியுதுடா… என பூரித்தானா… அவனிற்குதான் தெரியும்…. ஈஸ்வர் உறைந்து நின்ற நிமிடங்கள் அவை.

கிஷோர் “ஹேய்… உனக்கு இவர தெரியுமா…” என கேட்க்கவும்தான் கண்ணை சிமிட்டினான் புவனன்.

இப்போது காலையில் பார்த்ததற்கு எதிர்பதமாக இருந்தாள் அவள், அழகான சாக்லெட்  வண்ண லாங் ஸ்கர்ட்…. வைட் கலரில் அதே கலர் செக்குடு டாப்… அதே ப்ரவுன் நிற கூலர் வேறு அவளின் தலையை அலங்கரிக்க… ஒப்பனையே இல்லாமால்… பார்ப்பதற்கே வழு வழுவென இருந்தாள் தீபி.

அவளை நான் ஏன் இப்படி பார்க்கிறேன்…. என தன்னை தானே திட்டிக் கொண்டு… கண்ணை அவள் மீதிருந்து பிரித்தேடுத்தான் புவனன்.

தன்னை நோக்கி முதல் முறையாக… தன் பெயரை சொல்லி ஆசையாக கூப்பிட்ட, ஒரு பெண்ணிடம் ‘உன்னை தெரியவில்லை’ என எப்படி  சொல்லுவது, என திணறியவனாக… வர்ணாவை நோக்கி தன்னிரு கைகளை நீட்டினான்… அவளை தூக்கும் எண்ணத்துடன்.

கிஷோருக்கு பதில் சொல்லாமல்…. தன் மகளிடம் ‘வா’ என்பதாய் கைநீட்டவும் அவனை நோக்கி தாவும் தன் மகளை ஆசையாக பார்த்திருந்தாள் தீபி.

அவன் கைகளில் அழகாக அமர்ந்து கொண்டாள் வர்ணா… அவனின் அந்த ஓம் டாலரை மீண்டும்… தனது ஒரு விரல் கொண்டு இழுப்பதும் விடுவதுமாக விளையாட தொடங்கினாள்.. ஏதோ பழகியவர்களிடம் ஓட்டும் ஒட்டுதலுடன்.

இப்போது புவனன் வார்த்தைகள் வராத நிலையில் வர்ணாவையே விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

இப்போதும் தீபி, கேள்வி கேட்ட கிஷோரிடம் ஏதும் சொல்லாமல் “என்னை தெரியுதா…. புவன்” என்றாள் மீண்டும்.

மீண்டும் ஒரு முறை பல் டாக்கரிடம் வந்தவன் போல் தர்ம சங்கடமாக பல்லைக் காட்டி “எங்கையோ பார்த்திருக்கேன்… எங்கன்னுதான் தெரியலை” என்றான்.

அழகாக சிரித்தாள் தீபி…”அப்படியா….” என்றவாறு. “ நாங்க… உங்களுக்கு பிடிக்காத டீம்…. அதான் மான்போர்ட் ஸ்கூல் ஸ்டுடென்ஸ்” என்றாள்.

இப்போதுதான் அவன் ஓரளவு இயல்புக்கு திரும்பினான்… ஒரு முறை மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு பழைய ஈஸ்வராக “ம்…. நல்லா நியாபகம் இருக்கு” என்றான். இன்னும் அந்த நினைவு மனதில் இருப்பது போல…. ஆனால் அதெல்லாம் அவனின் முளை அடுக்குகளில் எங்கும் இருப்பதாக தெரியவில்லை. இருந்தும், அவளிடம் தடுமாற கூடாது என அப்படி கூறினான்.

புவனன் இப்போது “பர்சேஸ் முடிஞ்சிதா…. வெளிய் பேசலாமா… இங்க கூட்டம்…” என தயங்கினான்.

கிஷோர்…. “யா யா… ஷுர், தீபி உனக்கு முடிஞ்சிதா…. போலாமா” என்றான்.

அதுவரை கூட அங்கு நிற்கவில்லை புவனன்… ஏதோ இப்போதே வர்ணா தனக்குத்தான் சொந்தம் என்பது போல…. அவளை தூக்கிக் கொண்டே அந்த கடையிலிருந்து வெளியே வந்திருந்தான்.

ஏதும் நினைவு இல்லை இப்போது தேவையும் இல்லை…. என்னை தெரிகிறதா என கேட்ட அந்த பெண்ணின் முகத்தை விட… ஏனோ பார்த்தவுடன் இந்த குட்டி பூவை உரிமை கொண்டாட மட்டும் இயல்பாய் வந்தது அவனிடம்.

ஆனால் அவனுக்கு புரியவில்லை…. இந்த வர்ணா என்ற மஞ்சள் மேகத்தின் பிடி….. ஏழு ஊர்… ஏழு ஆறு தாண்டி உள்ள அவளின் தாத்தாவின் கையில் உள்ளது என.

இது ஏதும் தெரியாமல்…. அந்த ஆறடி ஜீவன் இந்த ஒன்றரை அடி உயரமுள்ள… குட்டியை அழகாக டேபிள் மேல் அமர வைத்தவன்…. தன்னிடமிருந்த சாக்லெட்டில் இருந்து ஒன்றை எடுத்து…. அவளிடம் நீட்டினான்.

அழகாக வாங்கி உண்ண தொடங்கிய வர்ணா… போக போக… அதில் கரைய தொடங்கினாள்…. அவளின் ஜொள்ளும் சாக்லெட்டும் சரி பாதி கலந்து விரல் வழி வழிந்து…. கை முட்டியில் ஒழுக….

இப்போது புவனன் கேட்டான் “எனக்கில்லையா…. டா.” என அவள் உண்ணும் அழகை பார்த்து இவன் கேட்க….

“ம்கூம், சாக்கி சாப்பிட்டா…. பூச்சி கக்கிகும்….” என்றாள். தன்னிரு கண்களை உருட்டி அவனை பார்த்து முகத்தை உர் என வைத்து குழந்தை சொல்ல… ‘அங்கு அவன் க்காலி…’

சிரிக்கவே இல்லை அவன், தொலைந்து கொண்டிருந்தான்…. மீண்டும் அப்படி ஒரு பாவனையை எதிர்பார்த்து, கேட்டான் “கொஞ்சமா… ப்ளீஸ்..” என கெஞ்சினான்.

தனது இரண்டு கைகளிலும் சாக்லெட்… என்ன செய்வது என பார்த்த… அந்த வாண்டு…. சிறிதாக தன் கைகளில் இருந்த சாக்லெட்டை அவனின் வாயில் துறுத்தியது….

அந்த மாலே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க…. இது ஏதும் அவர்கள் இருவரின் கண்ணில் படவில்லை…. அவரவர் உலகம் அவரவர்களுக்கு…. இப்படியே ஒரு அரை மணி நேரம் சென்றுதான்…. தரையிறங்கினான் புவனன்.  .

அப்போதுதான் அவனிற்கு நினைவே வந்தது தன்னுடன் வந்த நண்பர்கள் பற்றி….. இவனுடன் வந்த நண்பர்கள், இவன் அவர்களிடம் பேசுவதை பார்த்து…. எதிரில் உள்ள காபி ஷாப்பில் அமர்ந்திருந்தனர்.

இப்போது புவனன் அவர்களுக்கு போன் செய்து “டேய் எங்க இருக்கீங்க…. நீங்க கிளம்புங்க நான் வர லேட் ஆகும் “ என்றான் அசால்ட்டாக.

அவர்களும் ‘இதுக்குத்தான் கல்யாணம் ஆகதவன் கூட சேர கூடாது’ என தங்களுக்குள்ளாகவே புலம்பிய படி கிளம்பினர்.  

   

 

   

 

    

   

 

     

 

     

             

Advertisement