Advertisement

பௌர்ணமி வர்ணம் – 5

கார்த்திகா பாட்டி ஆரம்பித்தார் “அவங்க என் பொறந்த வீட்டு சொந்தம்…. எனக்கு தம்பி முறை வேணும்… இப்போதான் ஆறு மாசம் முன்னாடி ஒரு கல்யாணத்தில் பார்த்தேன்…. கதிரேசனனை. அவங்கதான் அந்த பொண்ணோட சித்தப்பா…. அவங்க அண்ணன் பொண்ணுதான்…..” என்றவர் சற்று நேரம் பேசாமல் இருந்தார்…. எப்படி விளக்குவது தன் பேரனிடம்  என யோசனை.

பூரணிக்கு அவரின் அந்த மௌனமே போதுமானதாக இருந்தது. “சொல்லுங்க பாட்டி ஏன் நிறுத்திட்டீங்க…” என்றாள் கிண்டலாக.

பின் தானே “உங்களுக்கே… சொல்ல கூட சங்கடமா இருக்கிற ஒரு விஷயத்தை…. எப்படி பாட்டி நம்ம வீட்டுக்கு கூட்டி வர நினைக்கிறீங்க….” என்றாள்.

கார்த்திகா பாட்டி அவளை ஆழமாக பார்த்தார், ஏதும் பேசவில்லை. அதற்குள் புவனன் “ஏன் பாட்டி யோசிக்கிறீங்க…. உங்க பேரன் உங்க பேச்சைத்தான் கேட்ப்பான்னு சொல்லுங்க” என்றான். தன் அண்ணியை பார்த்தபடி.

அங்கே ஒரு வீம்புக்கான விவாதம் உருவானது, இப்போது கார்த்திகா பாட்டி “அவ சொல்றது சரிதான் ஈஸ்வர்…. இது நான் சொல்லி, நீ செய்ததா இருக்க கூடாது… அங்க கல்யாண மண்டபத்துக்கு வந்திருந்தா… அவங்க சித்தப்பாவ… பிக்கப் செய்ய….“ என்றவர் திரும்பவும் அமைதியானார்

‘இது பழைய வைரம்…. பார்க்க வேண்டுமானால்…. மங்கி தெரியலாம் ஆனால் அவ்வளவு உறுதியானது, எனவே வைரத்தின் மதிப்பு தெரிந்தவர்களிடம் சேர வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது ஏதும் பேசவில்லை.

தனது மூக்கு கண்ணாடி டப்பாவை திறந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து கொடுத்தார் புவனனிடம் “இதுதான் அவர்களின் ரெசார்ட்…. இது அவங்க சித்தப்பா கார்ட்… நான் கதிரேசன்கிட்ட சொல்றேன்… நீ எப்போ போறேன்னு சொல்லு…” என்றார்

தொடர்ந்து “போய் பாரு…. அவளுக்கு தெரிய வேண்டாம்… உனக்கு பிடிச்சிருக்கா சொல்லு… மேற் கொண்டு மத்தத நாங்க பேசிக்கிறோம்” என்றவர்

பிறகு இப்போதான் யோசனை வந்தவராக “அவளுக்கு வர்ணான்னு இரண்டு வயதில் ஒரு பொண்ணு இருக்கு…” என்றார் அசால்ட்டாக. கேட்டிருந்த ஈஸ்வருக்கு என்ன சொல்லுவது எப்படி இதை எடுப்பது என தெரியவில்லை… அந்த கடைசி வாக்கியத்தை மட்டும் மென்று ஜீரணம் செய்து கொண்டிருந்தான்

ஆனாலும் மனதில் ஒரு நம்பிக்கை ஒரு வேலை ‘அவள் கணவன் மில்டரியில் இருந்து இருப்பாராக இருக்கும் அதான் எனக்கு பார்த்திருக்கிறார் பாட்டி’ என மனதில் நினைத்துக் கொண்டான். அதை வாய்விட்டு கேட்கவில்லை… தன்னை பற்றி தன் பாட்டிக்கு முழுமையாக தெரியும் என நினைத்தான்.

இப்படியே இரண்டு நாள் சென்ற நிலையில்… ஈஸ்வருக்கு இப்போது வரை யோசனைதான், போகலாமா… வேண்டாமா… அப்பா அம்மா எதுவும் சொல்லவில்லையே, மேலும் யாருக்கும் இதில் விருப்பம் வேறு இல்லை… பாட்டிதான் என அன்றிலிருந்து முழுவதும் சிந்தனைதான்.

ஏனோ இந்த இரவு வரை… தெரியாத ஒரு பெண்ணை பற்றி மிகவும் யோசித்தான், அதுவும் ஒரு குழந்தையின் அன்னை எனதான் யோசித்தான்  புவனன்.

ஒரு வழியாக… இந்த விடியல் எப்போதும் போல் ஒரு விடையை சொன்னது போல, மனதில் எந்த குழப்பமும் இல்லாமல் தெளிவாக இருந்தது புவனனுக்கு.

எப்போதும் போல் நான்கு மணிக்கு எழுந்து…. உடற்பயிற்சி முடித்தவன். குளித்து முடித்து சோபாவில் அமர்ந்திருந்தான். அவனின் தந்தை “என்ன டா, கடைக்கு போலாமா…. அன்னிக்கே நீ வருவேன்னு… ராம் சொன்னான்” என்றார்.

புவனன் “ம்… வரேன் பா…. ஒரு வேலை இருக்கு முடிச்சிட்டு வரேன்” என்றான்.

“இங்க என்ன டா வேலை…. அதான் ஒரு மாசம் சுத்தியாச்சுல்ல… கொஞ்சம் வந்தா…. எனக்கு நிம்மதியாக இருக்கும், பாவம் ராம் தனியா பார்க்கிறான் டா…” என்றார்

அந்த நேரம் வந்த ஆனந்தி “என்னங்க… விடுங்க அவன, ஒரு வாரம் கொஞ்சம் ப்ரீயா இருந்திட்டு வருவான்… இப்போதான் வந்திருக்கான்… அதுக்குள்ளே கடைக்கு வா… லோடு பார்க்க போன்னு” என்றார் கையில் வைத்திருந்த கஞ்சியை புவனனிடம் கொடுத்தபடி.

ஆனந்தியே தொடர்ந்து “சீக்கிரம் பொண்ணு பாருங்க…. கல்யாணத்தை முடிச்சிடலாம்… இப்பவே வயசு மீறி போச்சு…. “ என சொல்லிக் கொண்டே அப்போதுதான் பூஜை அறையிலிருந்து வந்த மாமியாரை ஒரு பார்வை பார்த்தவாறே சொன்னார் ஆனந்தி.

கார்த்திகா பாட்டி சோபாவில் அமர்ந்தவாறே, தனது மூக்கு கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டவர், புவனை நோக்கி “ஈஸ்வர்… அன்னைக்கு  நான் குடுத்த கார்ட்ட வைச்சிருக்கியா, இன்னிக்கு நீ ப்ரீயா இருந்தா… போய் பார்த்துட்டு வந்திடு… அந்த பொண்ண.

நான் கதிரேசனுக்கு போன் பண்றேன்” என்றார். அதிராமல் ஒரு குண்டை தூக்கி போட்டார் பாட்டி.

ஆனந்தி ஒன்றுமே சொல்ல முடியாமல் தன் கணவனையே வெறித்து பார்த்திருந்தார். ஏனெனில், முன்பே தன் மாமியார் தங்களிடம் சொல்லியிருந்தார். இந்த வரன் குறித்து.

வீட்டில் யாவருக்கும் இதில் விருப்பம் இல்லை என்றாலும், அவரின் பேச்சையும் தட்ட முடியவில்லை…. மேலும் பாட்டியின் பேச்சை… பேரன் கண் மூடி ஏற்பான் என தெரியும் அனைவருக்கும்… எனவே எல்லோரும் அமைதியாக எதிர்த்தனர் இதனை.

இப்போது புவனனுக்கு வேறு வழி இருக்கவில்லை ‘சரி ‘ என்பதாக தலையாட்டினான். அவனின் உருட்டலை பார்த்து “உனக்கு பிடிச்சா மட்டும் சொல்லு….” என்றார் குரலில் அத்தனை அழுத்தம் பாட்டியிடம்.

காலை பதினொரு மணிக்கு கிளம்பினான் அந்த ரேசார்ட்டுக்கு … வழியெங்கும் மீண்டும் அதே சிந்தனை பூதம், அவனை தொற்ற… அவனின் மனம் ட்ரபிக்கில் சிக்கிய காராய் ஊர்ந்தது.

ஒருவழியாக வந்து சேர்ந்தான்… அங்கு, மிக பிரம்மாண்டமாக சர விளக்குகள் ஒளிர அந்த பின்காலை பொழுதே…. அந்த வரவேற்பறையை கவனிக்க வைத்தது, அவனை.

அங்கே இருந்த வரவேற்பு பெண்ணிடம் கதிரேசனை பார்க்க வேண்டும் என சொல்லி அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான் புவனன்.

அங்கு… இருந்த ஒவ்வென்றாக இவன் வேடிக்கை பார்க்க தொடங்க… ஒரு பெண் புடவை அணிந்து கையில் பயில் வைத்துக் கொண்டே அவன் அருகே வந்தார்

ஆங்கிலத்தில் பேசியிருந்தால் கூட இவன் அப்படி நினைத்திருக்க மாட்டான், அழகான தமிழில் “நீங்க ஈஸ்வர் தானே…. வாங்க“ என்றாள். மூச்சடைத்தது இவனுக்கு… ஏதேதோ எண்ணம் எழ… ஐயோ! என நொந்து போனான் அவன்.

நன்றாக இருந்தார் அந்த பெண்… புடவை கட்டி, லேசான மேக்கப், மிகவும் மிடுக்கான நடையுடன் முன்னே செல்ல… புவனனுக்கு யோசனை ‘இரண்டு வயது பெண்ணுக்கு அம்மா என்றால் இப்படிதான் இருப்பார்ளோ‘ என.

எனவே முகம் வாட… அந்த ஐந்து நிமிடத்தில்…. ஒரு முடிவுக்கு வந்திருந்தான் அவன். அந்த பெண்ணும் ஒரு அறையை காட்டி “உள்ள இருக்கிறார்” என சொல்லி தானும் உள்ளே நுழைந்தார்.

கதிரேசன் அந்த நாற்காலியில் அமர்ந்தவாறே… முகத்தில் எந்த உணர்வையும் காட்டாது “வாங்க தம்பி “ என்றார். கூடவே வந்த பெண்ணிடம் “கல்யாணி…. தம்பிக்கு சூப் ஒன்னு எடுத்து வர சொல்லு” என்றார்.

அந்த பெண்ணும் “ஓகே சர்…” என்றுவிட்டு ஏதோ ஒரு இடத்தில் கையெழுத்து வாங்கவும்தான் போன உயிர் திரும்ப வந்தது புவனணிற்கு. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் போய்ன்ற மாதிரி… என்ன என்னவோ நினைத்து அந்த இரண்டு மூன்று வினாடியில் ஏதேதோ முடிவும் எடுத்துவிட்டான் புவனன்.

ஒரு வழியாக பெருமூச்சு விட்டு அமர்ந்திருந்தான். அந்த பெண் சென்றதும்.. கதிரேசன் “பாட்டி என்ன சொன்னாங்க தம்பி “ என்றார்.

புவனன் சிரித்தான் “ம்கூம் ஏதும் சொல்லல அங்கிள்… நீங்கதான் சொல்லணும் “ என்றான் நேரடியாக. கதிரேசனுக்கு இந்த வார்த்தை மிகவும் பிடித்திருந்தது. எதுவுமே சொல்லாமல்… சிறிது நேரம் அந்த ரூமையே அளந்தார் கதிரேசன்.

முதல் மாடியில் இருந்தது அந்த அறை. இப்போது கதிரேசன் அங்கிருந்த பிரெஞ்ச் விண்டோவின் ஸ்க்ரீனை நன்றாக இழுத்து விட்டார். அங்கு தெரிந்தது ஸ்விமிங் பூல்…. அதை யாரோ ஒரு பணியாளர் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு ஒரு பெண்… அவளும் இன்னொரு நெட் வைத்து அங்கிருந்த டஸ்ட்டை அந்த நெட் ஸ்டிக் வைத்து எடுத்துக் கொண்டிருந்தாள்.

கதிரேசன் “அந்த பொண்ணுதான் தம்பி எங்க லட்சுமி…” என்றார். புவனின் பார்வை இப்போதும் அல்ட்சியமாகதான் நோக்கியது அந்த உருவத்தை  அளவான உயரம், என்ன ஒரு ஐம்பத்தைந்து கிலோ இருப்பா… என அவனின் கண்களே அவளின் எடையை சொன்னது.. மில்டரி பார்வை.

அடர்த்தியான சுருட்டை முடி அவளின் முதுகு வரை புரள… கையில் ஸ்டிக்குடன் ஒரு வேலையை மும்முரமாக செய்வதால் அவளின் உதடுகளை மூடி அந்த வேளையில் கவனமாக இருந்தாள். கண்களை அவனால் பார்க்க முடியவில்லை… கீழ் கொண்டு அவளின் பார்வை இருந்ததால்.

உடை பெரிதாக ஒன்றுமில்லை… ஒரு ஜீன்… அன்று பார்த்து… ஒரு கருப்பும் வெள்ளையும் கலந்த ஷிப்பான் லாங் டாப் அணிந்திருந்தாள். இப்போதும் ‘இரண்டு வயது பெண்ணின் அம்மா’ என அழுத்தி சொல்லிக் கொண்டான் அவன்.

கதவை தட்டும் சத்தம் கேட்டது. ஓர் பணியாளர் வந்து சூப் வைத்து சென்றார். கதிரேசன் “சாப்பிடுங்க தம்பி…” என்றார். இவனின் முகமும் உணர்வுகளை காட்டாதிருக்கவும், கதிரேசனால் ஏதும் கண்டுகொள்ள முடியவில்லை.

இருவரும் அமைதியாக அருந்தினர்… கதிரேசன் தான் “வர வெள்ளி கிழம எங்க வர்ணா பிறந்தநாள்… வீட்டுலதான் கேக் கட் பண்றோம்… உங்களுக்கு பிடித்திருந்துன்னா… வாங்க …. மேற் கொண்டு பேசலாம்” என்றார்.   

புவனன் “அங்கிள்…. இவங்க கணவர்தான் மில்டரில இருந்தாரா..” என்றான். சிறிது நேரம் ஏதும் புரியவில்லை கதிரேசனுக்கு. “ஏன் தம்பி அப்படியெல்லாம் இல்லையே” என்றார்.

தொடர்ந்து அவனே “அவங்க அப்பா, தம்பி…. யாரவது..” என்றான்.

“இல்லப்பா… அப்படி யாரும் இல்லை…. அவங்க அப்பா… என் அண்ணன்… MP. உங்களுக்கு பாட்டி சொல்லல” என்றார். புவனன் என்ன சொல்லுவது என தெரியாமல் அமர்ந்திருந்தான்.

இருவர்க்கும் குழப்பம் குழப்பம் குழப்பம்தான்… ஒரு தெளிவில்லாத சந்திப்பு… புவனனுக்கு. பாட்டி ஏன் இப்படி சொன்னார்கள்.

நான் ஏன் இவளை கல்யாணம் செய்யணும்…. அவங்க அப்பாதான் MP ஆச்சே…. பெரும் பார்ட்டி…. பெரிய ரெசார்ட்… எத்தனை சொத்துகள் இருக்கோ, என்ன… அடிமையா… யாரையாவது தேடறாங்களா…. பாட்டி!!!!     

என அங்கேயே அவனிற்கு தன்னம்பிக்கை ஸ்ருதி ஏற தொடங்கியது. ஆனாலும் நிதானமாகவே அவரிடம் விடை பெற்றான். கீழே வந்தான் பார்க்கிங்கில் இருந்த காரை எடுத்து வெளிவரவும்…. அவள், உள்ளே போகவும் சரியாக இருந்தது.

நேரே வீட்டிற்கு வந்த்வனது முகம் கடுகடுவென இருந்தது. ஆனந்திக்கு அப்படி ஒரு சந்தோசம்…. தன் மகனின் முகத்தை பார்த்து. ‘அஹா…. அங்க ஏதோ பிரச்சனை…. இனி பாட்டி பக்கம் எட்டி கூட பார்க்க மாட்டான்…. நாம பொண்ணு பார்க்கலாம்’ என உள்ளுக்குள் சந்தோஷித்தபடி வெளியே ஒன்றும் காட்டிக் கொள்ளாமல் உள்ளே சென்றார்.

கார்த்திகா பாட்டிதான் கேட்பதா, வேண்டாமா என திண்டாடிக் கொண்டிருந்தார். அவனே சொல்லட்டும்… சென்று வந்தவனுக்குதானே தெரியும் என அமர்ந்திருந்தார்.

புவனன் ஏதாவது கேட்கராங்களா பாரு… என அவன் பாட்டியை நினைத்து பொருமிக் கொண்டிருந்தான். புவனன் “அம்மா பசிக்குது…. சாப்பாடு எடுத்து வைம்மா” என்றான்.

மேலே சென்று உடை மாற்றி வந்தவன் உணவு உண்ண சென்றான். அப்போதுதான் அங்கு வந்த பாட்டி அருகில் அமர்ந்து அவன் தலையை கோதிய படியே “என்னப்பா…. பிடிக்கலையா விடு…. அவளுக்கு கொடுத்து வைச்சது அவ்வளவுதான்” என்றார் இப்போதும் தன் பேரனை கம்பல் செய்யவில்லை, தாங்கியே பேசினார்.

பாட்டிக்கு, ஒரு பெண்ணை, அவனிர்காகவே… கேள்வியே கேட்காமல் பிடிக்க வேண்டும். அவளின் பழைய நிலை சொல்லி ஒரு இறக்கம் வந்து அதன் பிறகு திருமணம் என்பது…. மற்றவர்க்கு எப்படியோ தன் பேரனின் குணத்திற்கு அழகல்ல எனதான் நினைத்தார். அதனால்தான் ஏதும் சொல்லாமல் அவனை அனுப்பி வைத்தார்.  

இங்கே யார் தோற்றார், எது தோற்றது என தெரியவில்லை. ஆனால் ஆனந்திக்கு பரம சந்தோசம். முகம் ஒளிர தொடங்கியது. புவனன் இப்போது பாட்டியின் முகத்தை பார்த்தான்… அதில் சிறிது ஏமாற்றம் தெரிந்தது.

அதை பார்த்ததும் தான், கேட்க நினைத்ததை கேட்க மறந்தான் புவனன். அமைதியாக சென்று டிவி பார்க்க தொடங்கினான்.

ஆனந்தி “அத்த… சொல்லுங்க…. நம்ம பொன்னுசாமி அண்ணன் பொண்ண பார்க்கலாமா…. பொண்ணு நல்ல சிவப்பா அழகா இருப்பா அத்த….  எங்க தம்பி பொண்டாட்டி சொந்தத்தில் கூட ஒரு பொண்ணு சொன்னா…. நீங்க சொல்லுங்க அத்த யார பார்க்கலாம்ன்னு, நான் ஜாதகம் வாங்கி தரேன்” என்றார் பவ்யமாக.

கார்த்திகா பாட்டி ஒன்றும் சொல்லாமல் அமைதியாகவே உண்ண தொடங்கினார். இதெல்லாம் புவனன் காதில் விழத்தான் செய்தது. அங்கிருந்தே கத்தினான் “ம்மா…. அமைதியா இருப்பியா… இல்ல நான் எங்கயாவது போகவா” என்றான்.

புவனனுக்கு மனதே இல்லை. தன் பாட்டி எப்படியும் என் விருப்படிதான் செய்திருப்பார் என நம்பினேன். இப்படி ஒரு செயலை அவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை அவன்.

அங்கிருக்க பிடிக்கதவனாக மேலேறி சென்றான் தனதரைக்கு. சிறிது நேரம் படுத்திருந்தான் உள்ளுக்குள் பாட்டியின் செய்கையே ஓடிக் கொண்டிருந்தது. கூடவே என்னேன்றே தெரியாத ஒரு பெண்ணின் நினைவும் ஓடிக் கொண்டிருந்தது.

தலை நிறைய குழப்பம் அவனுக்கு. அழகாக உழுது வைத்திருந்த அந்த மில்டரிகாரனின் மனதில், பாட்டி ‘ஒரு குழந்தையின் தாய்’ என ஒரு பெண்ணின் முகத்தை பதியன் போட்டார். அது அவனின் அடியாழம் வரை சென்று கொண்டிருந்தது… சத்தமில்லாமல்.

போனில் தனது நண்பனுக்கு அழைத்தான். “வெளியே எங்காவது போலாம் டா….. வரியா” என்றான். மாலை இவன் வெளியே கிளம்பவும். பாட்டிக்கு கதிரேசனிடமிருந்து போன் வந்தது.

இருவரும் என்ன பேசுவது என தெரியாமல் பேசிக் கொண்டிருந்தனர். இறுதியாக கதிரேசன் “நீங்க தம்பிக்கிட்ட எல்லாம் சொல்லி அனுப்பியிருக்கலாம்” என்றார் மனது கேட்காமல். எதுவுமே பேசமுடியவில்லை கார்த்தியாயினி பாட்டியால்.  

 

   

 

 

Advertisement