Advertisement

பௌர்ணமி வர்ணம் – 25

வீடே சந்தோஷ கோலம் கொண்டது… மறுநாள் ஈஸ்வர் தீபியை அழைத்துக் கொண்டு செக்கப் சென்று வந்தான்.

சுந்தரியும் கதிரேசனும் வந்து பார்த்து சென்றனர்… சுந்தரிதான் “நாங்க கொஞ்ச நாள் கூட்டி போயிட்டு கொண்டுவந்து விடுறோம் சம்பந்தி…” என்றார்.

ஆனந்திதான்… “நீங்க ஐந்தாம் மாசம் வேண்ணா கூட்டி போங்க… நான், முதல் ஐந்து மாசம் பார்த்துக்கிறேன் எங்க பேரன… அப்புறம் உங்க கிட்டதான்…” என்றார் தன்மையாகவே.

அவருக்கு தன் பெரிய பேரன்களுக்கு, தான் எதுவும் செய்யவில்லை என்ற எண்ணம் அதனால்… இப்படி ஒரு பதில் அவரிடம்… யாரும் எதுவும் சொல்லவில்லை. சுந்தரி “அதுக்கென்னங்க… இருக்கட்டும்… “ என்றுவிட்டார்.  

அடுத்த நான்கு நாட்கள் சென்று மித்ராவும்… சீமாவும், நந்தனும் வந்தனர்…. பிரேமி இப்போது கன்சீவாக இருக்கிறாள். எனவே வர முடியவில்லை அவளால்.

வந்தவுடம் மித்ராவும், சீமாவும்…. தீபியை கட்டிக் கொண்டு சின்னதாக கண் கலங்க… தீபிக்கும் கண்கள் உடைபெடுக்க தொடங்கியது.

சத்தமே இல்லாமல் தேம்பல் சத்தம் மட்டும் கேட்டது அவர்களிடம். ஈஸ்வர் “தீபா… என்ன இது… வந்தவங்கள அழ வைச்சிக்கிட்டு… மேலே போயி ரெப்ரெஷ் ஆகிட்டு வாங்க…” என தன் மனைவியிடம் ஆரம்பித்து… எல்லோருக்குமாக ஒரு சத்தம் போட்டான்.

பாட்டிதான் “என்ன சந்தோஷமான நேரத்துல கண் கலங்கிகிட்டு… வாங்க எல்லோரும் சாப்பிடலாம்…” என சமாதனம் செய்தார். தீபி “வரேன் பாட்டி” என பதில் சொன்னாள்.

மேலே சென்று சற்று நேரம் ஆசுவாசம் ஆனா பிறகே சீமாவும் மித்ராவும் வந்தனர் தீபியுடன்… வினோவும் வந்து சேர்ந்தான் கனியுடன். பின் அந்த இடம் எப்போதும் போல கலகலப்பானது.

வினோ வந்து சிரித்தபடி சீண்டி கொண்டிருந்தான் தீபியை “எனக்கு ஆப்பு வைக்க நினைச்சிய தீபி… இப்போ பார்… இன்னும் இரண்டு வருஷத்துக்கு நீ நகர முடியாது…” என்று தனியாக அவளிடம் மட்டும் சொல்லி சிரிக்க..

தீபி “ஹலோ உனக்கும் இன்னும் ரொம்ப நாள் இல்லைடா தம்பி, அப்போ பார்த்துக்கிறேன்….. அதுக்கும் சேர்த்து மொத்தமா வசூல் பண்ணிக்கிறேன்… எங்க போயிட போற… இதே சென்னைதானே… அத்தோட உனக்கும் அப்போ இருக்குடா” என்றாள் கிண்டலாக.

வினோ, ஈஸ்வரையும் அழைத்து “உங்க பெட்டெர் ஹாப்க்கு… வெளியே போனமாம்… ட்ரீட் கேட்கறா…” என மாட்டி வைக்க.

கனி “அண்ணா எதாவது சொல்ல போறாரு பாவம் தீபி” என்றாள்.

ஈஸ்வர் தீபியை கோவமே இல்லாமல் “அப்படியா” எனும் விதமாக மட்டும் பார்க்க…

வினோ, அதற்கு “என்ன பார்வைய்யா… உன் பார்வை…தெய்வீக பார்வை… பார்த்து… பொண்டாட்டி எங்கையாவது பயப்பட போறா” என சொல்லி நக்கலாக கேட்க…

ஈஸ்வர் “போடா…போடா… புது மாப்பிள்ளைக்கு இங்க என்ன வேலை… நேரங்கலாத்துல… கிளம்புடா…. எப்போ ஹனிமூன் போறீங்க” என்றான் சிரித்தபடியே.

வினோ “எங்க போக விடுறீங்க… அளாளுக்கும்…. ஷிப்ட் போட்டு பிசியாகி… எங்களை தானே… ஊர் ஊரா சுத்த விடுறீங்க…” என நந்தனையும் ஈஸ்வரையும் பார்த்தபடி சொன்னான்.

போன வாரம்தான் நந்தன் வீட்டிற்கு சென்று வந்தனர் இந்த படை. அதனால் ஒரு ஆதங்கம் வினோவிற்கு… புது மாப்பிள்ளை நானா… இவங்கலான்னு தெரியல எனும் புலம்பல்.

நந்தன் “நமகெல்லாம் ஹனிமூன் எதுக்குடா… அதெல்லாம் பொண்ணு  யாருனே தெரியாதவனுக்கு தான் தேவை…. உனக்கு எதுக்கு அதெல்லாம்… சீக்கிரம் சீக்கிரம்… அடுத்த மாதம் உங்க வீட்டுக்குத்தான் நம்ம கேங் வருது…. ரெடியா பண்ணிடுவீல்ல” என்றான் சந்தேகமாக தங்களுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

ஈஸ்வர் லேசாக சிரித்தபடி நகரந்தான்… வினோ “டேய்… அடங்குடா, ஏண்டா ஏன்” என அதிர்ந்தான். இப்படியே அன்று முழுவதும் இருந்து மறுநாள்தான் கிளம்பியது அந்த படை…   

அப்படியே ஈஷ்வரின் ஜிம் வேலைகளும் முடிந்து நாளை ஒப்னின் என்னும் நிலை. அவன் வாழ்வில் முக்கிய பங்கு கொண்ட பாட்டியும் பேத்தியும்தான் சீப் கெஸ்ட்…

தீபி இப்போது ஐந்தாம் மாதம்… எனவே இந்த ஜிம் விஷயத்தை அமைதியாக செய்தனர்.  

அதிகாலையிலேயே.. கிளம்பினர் அனைவரும்… வர்ணாவும் கார்த்தி பாட்டியும் இன்று ஒரே நிறத்தில் உடுத்தி இருந்தனர். அழகான கிளிபச்சை வண்ண பட்டு இருவருக்கும்….

கதிரேசன், நடேசன் சுந்தரியும்… கிஷோர் என தீபியின் வீட்டிலிருந்து இவர்கள்… ஈஷ்வரின் வீட்டிலிருந்து ராம் பூரணி உற்பட ஈஷ்வரின் குடும்பம் அவ்வளவுதான்….

தீபி கூட “ஏங்க… அப்பாட்ட சொல்லி யாரையாவது கூப்பிடலாம்ல்ல” என்றாள்.

ஈஸ்வர் “ஏன்… இப்போ என் பாட்டி ஓபன் செய்தா என்ன…” என்றான் காரமாக.

தீபி “இல்லை… கொஞ்சம் எல்லோரிடமும் சீக்கிரம் ரீச்சாகும்… அதான் சொன்னேன்” என்றாள்.

ஈஸ்வர் “எல்லாம் நான் பார்த்துகிறேன்” என்றவன் அவளை அனைத்திருந்தான். அவன் பையன் வயிற்றில் தாங்கியபடி… பூரிப்பான முகத்துடன்… அழகான பிங்க் நிற சாப்ட் பட்டு கட்டி… தனக்கும் அந்த புடைவை நிறத்துக்கும் வித்யாசம் இல்லாமல் நின்றாள் தீபி.

தீபி “என்ன இது… டைம் இல்ல… சீக்கிரம் நாமதான் முதலில் போகணும்… எங்க வீட்டிலிருந்து வந்திடுவாங்க…” என்றாள் பதட்டமாக.

ஈஸ்வர் “சரி டி” என்றவன் அவளின் முடிகளை எடுத்து முன்பக்கம் விட்டு… நகைகளை பின்பக்கம் சரி செய்து… அவளின் உச்சியில் முத்தம் வைத்து… பொறுமையாக அவளை கீழே அழைத்து சென்றான்.

வீட்டில் அனைவும் கிளம்பி திருவான்மியூர் வந்து சேர்ந்தனர். அந்த பச்சை புடைவைகாரிகளை வைத்தே ரிப்பன் கட் செய்துவிட்டான் ஈஸ்வர் எளிமையாக.

ஆனால் நன்றாக விளம்பர படுத்தியிருந்தான்…. காலேஜ்… ஆபிஸ் என எல்லா இடங்களிலும் நோட்டீஸ், பேனர் வைத்திருந்தான். மேலும் மெயின் என்பதால்… நல்ல ரீச்சு ஆனது.

ஈஸ்வர் இப்போது சற்று பிஸியானான். கடை, ஜிம்… கூடவே வர்ணாவை கவனிப்பதுமாக. அவளை அருகில் உள்ள ப்ளே ஸ்கூல் சேர்த்திருந்தான்.

காலையில் ஜாக்கிங் சென்று வந்தவன்… உடனே, சத்துமாவு கஞ்சி குடித்து ஜிமிற்கு சென்று விடுவான்… பிறகு மதியம் பனிரெண்டறை மணிபோல்தான் வர்ணாவை அழைத்து வீடு வருவான்.

காலை உணவு ஈஸ்வர்க்கு… ஏதாவது ஒரு ஜூஸ் மட்டுமே. வர்ணாவுடந்தான்  மதிய உணவு அவனிற்கு. தீபியும் அந்த நேரத்திற்கு வந்துவிட வேண்டுமென கட்டளைதான். மதியம் வீடு கலகலப்பாகும். அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணுவார்கள்.

மாலை கடைக்கு சென்று விடுவான் ஈஸ்வர். தன் தந்தைக்கு ஒய்வு கொடுக்கும் விதமாக…. அப்போது கிஷோர் பார்த்துக் கொள்வான் ஜிம்மை.

மாலை தீபி ரேசொர்ட் செல்வதில்லை… கதிரேன்தான் பார்த்துக் கொள்வார்.  வர்ணாவுடன் மாலை நடை பயிற்சி தீபிக்கு. எனவே தீபி வர்ணாவுடன் அதிக நேரம் செலவழித்தாள்.

ஒரு பிஸியான சூழல் எப்போதும் தீபிக்கு, பழசை யோசிக்கவோ, மருகவோ நேரமில்லா சூழல்… எனவே நிறைவாக உணர தொடங்கினாள்.

ஒன்றரை வருடம் கழித்து…

எல்லோரும் ஈஷ்வரின் குலதெய்வ கோவிலுக்கு வந்திருந்தனர்… அழகான வேட்டி சட்டையில் ஈஷ்வரும்… மயில் வர்ண பட்டில் தீபியும் தன் மக்களை கையில் வைத்து நின்றிருந்தனர்.

வர்ணாக்கும், அவளின் தம்பி ஹர்ஷாக்கும் இன்று மொட்டை போட்டு காது குத்துகின்றனர்.

குழந்தைகளின் அன்னை தந்தையை விட கிஷோர்தான் பயங்கர டென்ஷனா இருந்தான்….

கிஷோரின் மடியில் அமரவைத்தே இருவருக்கும் கதற கதற மொட்டை அடித்தனர்… அதுவும் தன் மருமகனுக்கு அடிக்கும் போது… குழந்தையின்  கண்ணில் வந்த கண்ணீரை விட கிஷோர் கண்ணில் வந்த கண்ணீரே அதிகம்…

கிஷோர் “மாம்ஸ்…. இன்னும் எவ்வளவு நேரம்… பையன் கத்தி கத்தியே… சோர்ந்துட்டான்… சீக்கிரம் முடிக்க சொல்லுங்க” என்றான் ஈஸ்வரிடம்.

ஈஸ்வர் “இருடா… அரகுறையாவா பண்ண முடியும்… தோ முடிஞ்சிடும்…” என்றான் சிரித்தபடி.

அது முடிந்து இப்போதுதான் குளித்து வர சென்றான் கிஷோர். அப்பாடா என கிஷோர் குளித்து வந்து அமர…. திரும்பவும் அவர்களின் உறவுகள் “எங்க மாமா… எங்க கிஷோர்” என தேட தொடங்கியது.

ஈஸ்வர் கிஷோரின் அருகில் வந்து “வா மாப்பிள்ளை… அதுக்குள்ள… ரெஸ்ட்டா…. காது குத்தனும்… வாங்க சார்” என இழுத்துதான் சென்றான்.

கிஷோரின் மடியில் அமரவைத்து… குழந்தைக்கு மாலையெல்லாம் போட்டு… கையில் மிட்டாய் தந்து… அந்த ஆசாரி எடுத்த ஊசியை பார்த்ததும் முதலில் கத்தியது கிஷோர்தான்… “மாம்ஸ்.. என்ன இவ்வளோ பெரிய ஊசியா… ஐயோ… ஏதாவது எக்யுப்மெட் வச்சி குத்திக்கலாமே… ப்ளீஸ் மாம்ஸ்… வனி பாவம் மாம்ஸ்” என்றான்.

குடும்பமே அவனை பார்த்து சிரித்தது… தீபி வர்ணாவை பிடித்தபடி “டேய் சும்மா இருடா…. அவளே சிரிச்சிக்கிட்டு இருக்கா… புவன் அவன் கண்ணை மூடுங்க… நீங்க குத்துங்க சார்” என அனைவரையும் விரட்டினாள்.

அப்படிதான் நடக்கவும் செய்தது. கிஷோரின் கண்கள் மூடிதான் பிள்ளைகளுக்கு காது குத்தப்பட்டது. குழந்தைகளை சமாளிப்பதை விட கிஷோரை சமாளிப்பதுதான் பெரிதாக இருந்தது.

கோவில் சென்று வந்து ஒருவாரம் வரை… தன் அம்மாவை விட்டு இறங்கவில்லை ஹர்ஷா… அவளின் இடுப்பிலேயே இருந்தான் விளையாட கூட இல்ல வர்ணாவுடன்.

ஈஸ்வர் இன்றுதான் அவசர வேலையெல்லாம் முடிந்து சற்று ப்ரீயாக இருந்தான், எனவே “தீபா… பையன வச்சிக்கிட்டே சுத்தர… இறக்கி விடு அவன” என்றான் ஹாலில் அமர்ந்த படி.

தீபி “அவன் இறங்க மாட்டேங்கிறான்… நீங்க வந்து வாங்கிட்டு போங்க… “ என உணவு மேசையின் அருகில் நின்றபடி… பையனுக்கு இரவு உணவுக்கு ரசம் சாதம் பிசைந்த படி சொன்னாள்.

ஈஸ்வர் முறைத்தது இங்கு வரை அனல் அடித்தது தீபிக்கு… அப்படியே வந்து அவளிடம் மகனை வாங்கியவன், அவளின் வெற்று இடையில் வலிக்க கிள்ளி விட்டே சென்றான். “ஆ..” என அலறினாள் தீபி.

ஈஸ்வர் “என்னாச்சு “ என்றான் சத்தமாக, லேசாக சிரித்தபடி… இப்போது தீபியின் பார்வையில் அனல் அடித்தது.      

தீபி “சிப்பாய்க்கு… திமிர்… கூடி போச்சு” என முனு முனுக்க…

ஈஸ்வர் “அப்படியா” என அவளின் காதின் அருகில் வந்து கேட்க… ‘இவன் இன்னும் போகலையா’ என பார்த்தாள் தீபி.

இப்படி சின்ன சின்ன சீண்டல்களை ஈஸ்வர் விடவேயில்லை… எப்போதும் அவளை காய்ந்தபடியேனும்… கண்ணுக்குள் வைத்திருந்தான்.

ஈஷ்வரின் வீடு இப்போது குழந்தைகளின் அழுகையும் சிரிப்புமாக நிறைந்தது. கூடவே தீபா புவனின் நேசத்தாலும் வண்ணம் சேர்ந்தது.

அடுத்த ஆறு ஆண்டுகள் சென்று…….

இவர்களின் நண்பர்கள் படை  மீண்டும் சந்திக்க திட்டம் போட்டது… இந்த நீண்ட ஆண்டுகளில் ஏதேனும் விழா.. விருந்து என சந்தித்துக் கொண்டதே தவிர, நட்பாக எங்கும் செல்லவில்லை….

எனவே ஆறு ஆண்டுகள் சென்று மீண்டும் நண்பர்கள் படை தங்களுக்கான நேரம் தேடி சென்றது.

இதோ இன்று காலை… எட்டு மணி… தீபியின் நபர்கள் படை இன்று குருவாயூர் முடித்து குமரகம்… நோக்கி கிளம்பினர்.

வினோ கனி, தீபி. சீமா, மித்ரா, நந்தன், ப்ரேமி என பாமிலி ட்ரிப்பும் அல்லாது பிரிண்ட்ஸ் ட்ரிப்பும் அல்லாது அமைந்தது இது.

பிரேமிக்கும் நந்தனுக்கும் ஹர்ஷா போல பாய் பேபி தான். எனவே அதன் பின் நந்தனுக்கு மீண்டும் ஒரு பையன் பிறந்தான். இப்போது… இருவரையும் ப்ரேமியின் பெற்றோரிடம் விட்டு விட்டு இவர்கள் ட்ரிபிற்கு வந்திருந்தனர்.

வினோவிற்கு முதலில் ஒரு பையன்தான்… இரண்டாவதிற்குதான் ட்ரை செய்து கொண்டிருக்கிறான்…. அவனையும் தங்கள் பெற்றோரிடம் விட்டுதான் வந்திருந்தனர் வினோ கனி தம்பதி.

முதலில் குருவாயூர் சென்றனர்… சீமாவின் ஆசைக்காக அனைவரும்… பின்புதான் குமரகம்.

சுற்றிலும் தண்ணீர்.. அதனை சூழ்ந்த தென்னை மரங்கள்… மிதமான வெயில்… எல்லா தொல்லைபேசிகளுக்கும் லீவ் கொடுத்தாகி விட்டது… கூடவே பேசி சிரிக்க நீண்ட தூரம் கொண்ட நட்பு… அந்த வாரம் முழுவதும் சொர்க்கம்தான் இவர்களுக்கு.

ஈஸ்வர் வரவில்லை என்றுவிட்டான். தீபியிடம் “உனக்கான ஸ்பேஸ் டா இது… நீ போயிட்டு வா” என்றுவிட்டான். எனவே பிள்ளைகளை அவன் பார்த்துக் கொண்டான்.

நண்பர்கள் வந்து சேரவே மாலையாகிவிட்டது. அனைவர் முகத்திலும் லேசான வயது ஏறியதன் சாயல்… மற்றபடி அதே துள்ளல், அதே சிரிப்பு, அதே அக்கறை என நட்புக்கே உரிய எல்லாம் இருந்தது.

தீபி இலகுவான காட்டன் ஜீன்… மற்றும் ஷாட் குர்த்தி… அத போல் அனைவரும் இலகுவான உடை. தலையில் தூக்கி போட்ட கூலர்ஸ்.. அவ்வளவுதான்.

மறுநாள் காலை உணவு முடித்து அந்த ஹோட்டலில் அமர்ந்தனர் அனைவரும்.. போட்டிங் போகலாமே என நினைத்து நந்தன் கேட்க, வினோ “என்ன இப்போவா… வெயிலா இருக்கே… அப்புறம் ட்ரை பண்ணலாமே..” என தன் மனைவியை பார்த்தபடி கூற.

மித்ரா “ஆமா டா இது வெயிலா தெரியுதா மெட்ராஸ் காரனுக்கு… நீ வந்த நோக்கமே வேறதானேடா… பாரேன் பகல் பனிரெண்டு மணிக்கு குளுருதுன்னு சொல்லுவான்….” என்றாள் நக்கலாக.

எல்லோரும் “அப்படியா டா…” என கேட்டு நக்கல் செய்ய..

நந்தன்தான் “வினோ… நீ இங்க ஷாப்பிங் போடா…” என்றான் கண்ணடித்து.

எல்லா பெண்களும் “ஓ………ஓஓ…” என ஆர்பாட்டமாக சொல்லி, நந்தன் போலவே கண்ணடிக்க…

கனிக்குதான்… பாவம் நிற்க முடியவில்லை… கூச்சமும் வந்து ஒட்டிக் கொள்ள…”இல்ல, இல்ல… எதுவும் வேண்டாம், நாம இவங்க கூட போட்டிங் போலாமே” என்றாள் அவசரமாக தன் கணவனை பார்த்து.

வினோ “ன்னா… எல்லோரும் சேர்ந்து எங்களை விரட்டுறீங்க” என்றான்.

கனியிடம் திரும்பிய வினோ “நீ ஏன் பீல் பண்ற… அதுங்களை எல்லாம் கணக்கிலே எடுக்காத…” என்றான் காலரை தூக்கி விட்டபடி.

அதற்குள் நந்தன் போட் ஏற்பாடு செய்து வந்தான்… இப்போது நந்தன் “சாரி கப்ல்ஸ்… உங்களுக்கு தனி போட்…” என்றவன் வினோவிடம் கண்ணடித்து மற்றவர்களுடன் நடந்தான்.

மற்றவர்கள்… இவர்களை பார்த்து “மூங்கில் தோட்டம்… மூலிகை வாசம்… நிரஞ்ச மௌனம்… நீ பாடும் நேரம்..” என கோரஸ் போட்டனர்.

கனி இன்னும் இன்னும் தன் தலையை வினோவின் நெஞ்சிள் புதைத்துக் கொண்டாள். வினோ “என் சத்ருல்லாம் … ரொம்ப நல்லவங்க பேபி” என்றான் வாயெல்லாம் பல்லாக.

மித்ரா “டேய்… அது சத்ரு இல்ல டா மித்ரு… என்ஜாய் என்ஜாய்” என்றபடி தங்கள் படகு நோக்கி சென்றாள்.

த்ரீ ஹௌவர் போட்டிங்கை வினோ சீக்கிரமே முடித்து தன் அறைக்கு சென்றுவிட்டான். இந்த படை… மெதுவாக இன்னும் அரை மணிநேரம் சேர்த்து சுற்றி விட்டு அதற்கு அமௌன்ட்டும் கட்டிவிட்டுத்தான் வந்தனர் ஹோட்டலுக்கு.

மதிய உணவுக்கு கூட வரவில்லை அந்த  செகண்ட் ஹனிமூன் கபுள்… இவர்களும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.        

மறுநாள்… அங்குள்ள பறவைகளை பார்க்க சென்றனர். பின் வந்து மசாஜ், தெரப்பி என நேரம் சென்றது அடுத்த நாள் ரெஸ்ட்…

தீபிக்குதான் தன் புவனின் நினைவு வந்தது. யாரையாவது அழைக்கும் போது… முதலில் அவர்களின் பெயருக்கு பதில் “புவன்….” எனதான் வந்தது.

அதற்கும் அந்த படை “அத்தான்… என்னத்தான்… அவர் என்னைத்தான்… எப்படி சொல்வேனடி….” என கோரஸ் போட்டது…  

தீபி கை வலிக்கும் மட்டும் எல்லோரையும் அடித்தாள்… எங்கே வலித்தது அவர்களுக்கு…

இப்படி, அடித்து பிடித்து பழைய நண்பர்களாக வாய் சண்டை, கை சண்டை என அந்த ட்ரிப் முழுமையானது அவர்களுக்கு சந்தோஷம்தான்.  

அதற்கு அடுத்த நாள் போட் ஹவுஸ் என நேரம்… என கலைகட்டியது, இப்படியே இவர்களின் இந்த வாரம் முடிந்து… வினோ கனி தீபி என நால்வரும் சென்னை நோக்கி செல்ல… மற்றவர்கள் தத்தமது இடம் நோக்கி கிளம்பினர்.

ஏர்போர்ட்டி பிக்கப் செய்ய வந்திருந்தான் ஈஸ்வர்…  அழகான போர்மல் உடையில்… இன்னும் மிடுக்கு குறையாதா கிளீன் ஷேவ்… அதே அசால்ட்டான பார்வை… என்ன இரண்டு கைகளிலும் தன் மக்களை பிடித்தபடி… தன் மனைவியை தேடிய விழிகளாக நின்றிருந்தான்.

ஹார்ஷா தன் அம்மாவை பாரத்துடன் “ம்மா…” என தேனாய் உருகி… தன் அன்னைக்கு முத்தம் வைக்கிறேன் என தீபியை கடித்து வைத்து சின்னதாக முத்தமும் தந்து ஆர்ப்பாட்டம் செய்தான் ஆறு வயது ஹர்ஷா.

புவனனுக்கு ‘நீ குழந்தை செய்துட்ட நான் செய்ய முடியாமல் வேடிக்கை பார்த்து நிற்கிறேன்’ என இவர்கள் இருவரையும் கண்ணால் விழுங்கியபடி நின்றிருந்தான்.

வர்ணா எப்போதும் போல் அப்பா செல்லம்தான். தன் அப்பாவின் கைபிடித்து நின்றிருந்தாள். இப்போது சற்று பெரிய பெண்ணாக… அதே ஒல்லியான தேகத்துடன்…

தன் அம்மா அழத்த உடன்தான் அருகில் சென்றாள்… கோவம் அவளிற்கு தன் அம்மா தங்களை விட்டு விட்டு… ட்ரிப் போனது. அதனால்தான் இப்படி.

வினோவும் கனியும் விடை பெற்று கிளம்ப, ஈஸ்வர்ருடன் வர்ணாவும் தீபியும் கிளபினர். ஈஸ்வர் இப்போதுதான் கேட்டான் “என்னடி செம…. அழகாய்ட்ட இந்த ஒரு வாரத்தில்” என்றான் சீண்டும் எண்ணத்துடன்.

தீபி மௌனமாகவே தனக்குள் சிரித்தபடி ஹர்ஷாவிடம் பேசியபடி வந்தாள்.

ஆனால் இது ஹர்ஷாவின் காதில் விழுமென நினைக்கவில்லை…. அதை காதில் வாங்கிய மகன்…“ப்பா… ம்மா.. எப்போதும் பியுட்டிதான்… மை எஞ்சல்..” என திரும்பவும் முத்தம் வைக்க தொடங்கினான்.

ஈஸ்வர் “ஆரம்பிச்சுட்டான்… என்னை வெறுப்பேத்த” என முனகினான்.

அதற்குள் வர்ணா… “டேய் அப்ப நானு ..” என தன் அன்னைக்கு போட்டியாக கேட்டாள் வர்ணா…

ஹர்ஷா… “நீ குட்டி ஏஞ்சல் க்கா… மாம் பிக் ஏஞ்சல்க்கா” என்றான்.

இப்போது வர்ணா முன்னிலிருந்து வந்து தன் அன்னையுடன் ஓட்டினாள்.

புவனனும் தீபாவும் ரகசியமாக தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.

                        $$சுபம்$$

 

 

‘   

 

 

Advertisement