Advertisement

பௌர்ணமி வர்ணம் – 24

நீண்ட நாள் கழித்து நட்புகளுடனான சந்திப்பு… தீபியின் நிலை சரியாக வேண்டும் என்று உண்மையான அக்கறைக் கொண்ட நட்புகள், நிறைந்த மனநிலை, மகிழ்ச்சியான சூழல் எல்லாம் சேர நேரம் போவதே தெரியவில்லை அவர்களுக்கு.

சாப்பிட்டு வந்த பின், மணமக்களும் அவர்களின் பேச்சில் கலந்து கொள்ள, கேலிக்கும், சிரிப்புக்கும் பஞ்சமில்லாமல் இருந்தது.

விருந்து, அரட்டை எல்லாம் முடிந்து… மண்டபத்திலிருந்து தீபியை இழுத்து பிரித்துதான் வீட்டிற்கு அழைத்து வரவேண்டி இருந்தது ஈஸ்வர்க்கு.

இரவு வரை… தீபி எதையும் சொல்லுவதாக இல்லை, ஈஷ்வரும் கேட்பதாகவும் இல்லை… ஈஸ்வர்க்கு பொறுமை சிறிது சிறிதாக நகர்ந்து கொண்டிருந்தது.

இரவும் அனைவரும் உணவு மேசையில் இருக்க… வர்ணா, ஏனோ மதியம் தூங்காததால்… சற்று நை… நை என நச்ச… ஈஸ்வருக்கும் இருக்கும் மனநிலையில், எதுவும் சொல்லாமல்… வர்ணாவை சமாதானமும் செய்யாமல் அமர்ந்து உண்ண தொடங்கினான்.

தீபி டேபிள்லில் வர்ணாவை அமரவைத்து உணவை, ஊட்ட… வர்ணா எல்லாவற்றையும் தட்டி விட்டு ரகளை.. தூக்கம் தெரியாமல்.  

தீபி வர்ணாவை மிரட்ட தொடங்கினாள். அவளாலும் முடியவில்லை, தலை சுற்றுவது போல் இருந்தது… ஏதோ சங்கடம்…. பாட்டியும் ஆனந்தியும்… என்னமோ சரியில்லை என உணர தொடங்கினர்.

ஆனந்தி “தீபி.. நீ சாப்பிடு நான் ஊட்டறேன் வர்ணாக்கு“ என கிண்ணத்தை வாங்க… வர்ணா இன்னும் பெருங்குரலெடுத்து அழுகை… ஆனந்தியிடம் செல்லமாட்டேன் என.

வீடே சற்று நேரத்தில் போர்களமானது…. ஆனந்தி என்ன சமாதானம் செய்தும், வர்ணா தேம்புவதை நிறுத்தவில்லை. சாப்பாடும் உள்ளே செல்லவில்லை.

ஹாலில் அமர்ந்து இதையெல்லாம் ராமலிங்கம் பார்த்தபடி இருந்தார். கார்த்திக்கா பாட்டியும் பொறுமையாக தன் பேரனை பார்த்தபடியிருந்தார். ஆனால் வர்ணாவின் அழுகை நின்றபாடில்லை

பாட்டி பார்த்தார்… “ஈஸ்வர் சாப்பிட்டியா” என்றார்.

ஈஸ்வர் “ம்..” என சொல்லி கை கழுவி வர.

மூன்று பேரையும் நிற்க வைத்து திருஷ்ட்டி கழித்தார். பின் “தீபி நீ மேல போ… அப்புறம் வந்து சாப்பிடு” என்றார்.

ஈஸ்வரிடம் “போடா… குழந்தையை சற்று காற்றாடா தூக்கி நட..” என்றார்.

ஆனந்தி “சாப்பிடல…” என்றார்

பாட்டி “இன்னிக்கு ஒரு நாள்தானே, பாதி தூக்கத்துல பால் குடிக்க வைக்கலாம்” என்றார்.

அதன்பின் சத்தமில்லை தீபி மேலே சென்று இலகு உடைக்கு மாறி…. சற்று அமர்ந்தாள். ஈஸ்வர் அமைதியாக போர்டிகோவில், வர்ணாவை தோளில் போட்டு நடக்க… அடுத்த பத்து நிமிடத்தில் வர்ணாவும் உறங்கிவிட்டாள்.

வர்ணாவை தூக்கிக் கொண்டு ஈஸ்வர் மேலே செல்ல… ஆனந்தி “இந்தா பா… தீபிக்கு டிபன்” என ஒரு தட்டத்தை அவன் கையில் கொடுத்துதான் அனுப்பினார்.

தீபி பால்கனியில் உள்ள சின்ன சோபாவில் அமர்ந்திருந்தாள்… ஈஸ்வர் தட்டை டேபிளில் வைத்துவிட்டு… வர்ணாவை படுக்கையில் விட்டு வந்தான், தீபியிடம்.

ஈஷ்வரின் பார்வை அவளை இப்போது வாஞ்சையாய் தீண்டியது. அவளின் ஓய்ந்த அழகு அவனை ஈர்க்க…. அவளருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

தீபி அவனின் தோளில் சாய… அமைதியாக அவளின் பின்புரம் கை போட்டு, வசதியாக தன் தோளில் சாய்ந்து கொண்டான்.

நேரம் சின்னதாக கடக்க.. நினைவு வந்தவனாக. உணவை எடுத்து வந்து கொடுத்தான், அமைதியாக உண்டால் தீபி, எழுந்து சென்று, தட்டை கீழே வைத்து, கைகழுவி மேலே வந்து, அமர்ந்தாள். அதுவரையில் பேச்சு இல்லை இருவரிடமும்.

ஈஸ்வர் இன்னும் பால்கனியில் அமர்ந்திருக்க… தீபி அவனிடம் சென்று அமர, ஈஸ்வர் “என்னடி ஒன்னும் சொல்ல மாட்டேங்கிறே…” என்றான் எங்கோ பார்த்தபடி. அவளிடம் கோவப்பட முடியவில்லை. ஆனாலும் கேட்காமலும் இருக்க முடியவில்லை.

தீபி சங்கடமாக… “செக் பண்ணிட்டு சொல்றேனே…” என்றாள். அடுத்த நிமிடம், எப்படி என்ன என தெரியாமல் அவளை தன் மேல் அமர்த்தியிருந்தான் ஈஸ்வர்.    

தீபி “மெதுவா புவன்” என சிணுங்க… தீபியின் முகம் அந்த இருட்டிலும் ஒளிந்தது… அதை மறைக்க அவனின் தோளில் சாய்ந்து தன் முகத்தை மறைத்துக் கொள்ள.

ஈஸ்வர்க்கு என்ன சொல்வது, என்ன கேட்பது என தெரியவில்லை ஒருமாதிரி மூச்சு முட்டியது. தீபியின் பிங் விரல்களை தன் கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டான். பேச்சு தேவையாக இருக்கவில்லை போலும்.

ஈஸ்வர் சற்று நேரம் கழித்து அவளின் நெற்றியில் முத்தம் வைத்தவனாக “தேங்க்ஸ்..” என்றான்.

தீபி அவசரமாக அவனிடமிருந்து தன் விரல்களை உருவி அவனின் உதடுகளை மூடியபடி… “நான்தான் தேங்க்ஸ் சொல்லணும்..” என்றாள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்து.

ஈஸ்வர் அவளின் நெற்றியில் முட்டி வாஞ்சயாய் அவளை பார்க்க… தீபிக்கு கண்கள் உடைபெடுக்க தொடங்கியது, அவனின் நேசத்தில். தான் வர்ணாவை, யாரும் உடன் இல்லாமல் சுமந்தது முற்பிறவியோ…. என கலங்க…

அவளின் நிலை அவனிற்கு சிறிது சிறிதாகத்தான் புரிய தொடங்கியது போல… ஈஸ்வர் “என்ன பழைய நினைவா” என்றான் மெல்லிய குரலில். கோவம் எல்லாம் இல்லை வெறுமையான குரல்.

தீபியின் விழிகள் அதிர்ச்சியை காட்ட, தன்மேல் இருந்தவளை இன்னும் இறுக்கி கொண்டவன்… ஏதோ தனக்குள் புதைத்து கொள்பவன் போல.. “அப்போ உனக்கு யாருமே இல்லைன்னு நினைக்கலாம், ஆனா இப்போ உனக்காக நாங்க மூணு பேர் இருக்கோம்… நீ எதுவா இருந்தாலும் என்கிட்டே சொல்லு…” என்றான்.

தீபி அவனை கண்ணிமைக்காமல் பார்க்க, ஈஸ்வர் “ம்…” என்றான் புருவம் உயர்த்தி.

தீபி தயங்கியவளாக… “எனக்கு… என்…” என அவள் தயங்க…

ஈஸ்வர் “ம்… கேளு பரவாயில்லை” என்றான் முகத்தில் மாற்றமில்லாமல்.

தீபி “என்னை எப்படி புவன், உங்களுக்கு பிடிச்சுது… எ..எதுவும் சங்கடமாக இல்லையா” என கேட்டேவிட்டாள்.

ஈஸ்வர் “ம்… எப்படி சொல்றது… “ என்றவன்.

அவளின் முகத்தை ஆழ்ந்து பார்த்து “அமைதியா கேட்கணும், மனசுல எதுவும் நினைக்க கூடாது.” என்றான்.

தீபி தயக்கம் பாதி ஆர்வம் மீதியாக தலையை உருட்டினாள்.

ஈஸ்வர் “நான் கல்யாணம் என்பதை… இப்படி காதல், பாசம், நேசம் என உணர்வா பார்க்கல டா… அதனால எனக்கு எதுவுமே பெருசா தெரியலை…

ஆனா உன்னுடன் வர்ணாவை…” என்றவன் அவளை தன்னுடன் இன்னும் சேர்த்து கொண்டு மீண்டும் தொடர்ந்தான்.

“நீ, தனியாக நிற்பதை பார்த்ததும்… தெரியல, ஏதோ செய்ததது…

நீ, என்னை தெரியுதான்னு கேட்டதும்… சுத்தம் எல்லாம் ப்ளங்…

அந்த நிலை… உன் சிரித்த முகம்தான். ஆனா, கண்கள் மட்டும் சின்னதா கலங்கியிருந்ததா….

ஆனாலும், அன்று காலையில் பார்த்த நேர்த்தியான முதலாளியின் முகம்…   

எனக்கு பாட்டி சொன்ன பொண்னும் நீதான்னு, என எல்லாம் சேர்ந்து…   

ஏன் கூடாது… என தோணிச்சு… “ என்றான் அவளின் தலையை வருடியபடி

தீபி அமைதியாகவே இருந்தாள் ஏதும் பேசவில்லை, ஈஸ்வரே தொடர்ந்தான் “எல்லா திருமணமும் காதலில் தொடங்குவது இல்லதானே ம்மா.. ஆனா இப்போ… ” என்றவன் அவளின் நெற்றியில் முத்தம் வைத்து காதலாக அவளை பார்க்க…..

தீபி அழகாக புன்னகைத்தாள்… நீண்ட பெருமூச்சு எழுந்தது அவளிடம், இதை கவனித்த ஈஸ்வர், பழைய நிலைக்கு திரும்பி “சும்மா பீல் பண்ணாத, இதுதான் கரெக்ட்… இப்படிதான் கொஞ்ச கொஞ்சமா பிடிப்பு வரணும்…. எல்லாம் ஒரே நாளில் வந்திடுமா” என்றான்.

தீபி அவனை அவனுள் அமர்ந்தபடியே அணைக்க… இப்போது ஈஸ்வர்   “அவ்வளவுதானா… இன்னும் இரண்டு புள்ளைய குடுத்துட்டு சொல்லியிருக்கணும்… சீக்கிரம் சொல்லிட்டியேடா ஈஸ்வர்” என் தனக்குள் சிரியாமல் பஐவது போல் பேச…

தீபிக்கு, தான் காதில் கேட்பது உண்மையா என திடுக்கிட்டு, ஈஸ்வரை  முறைத்தாள்.

ஈஸ்வர் லேசாக சிரிக்க… அவன், தான் கேட்டதைத்தான் சொன்னான் என இன்னும் தீபி முறைக்க.. இப்போது அவளை பார்த்து கண்ணடித்து சிரித்தான் அவளின் புவன்.

இப்போதும் அவளின் கண்கள் உடைப்பெடுக்க…. ஈஸ்வர் “என்னடி… படுத்தற” என வேண்டுமென்றே அவளை காய…

தீபி கண்களில் கண்ணீருடன் சிரித்தாள்… அவளின் கன்னம் விரிந்ததில், அவளின் கண்ணீர் கன்னம் தொட… தன் விரல் கொண்டு துடைத்தவன் “இன்னும் என்ன… எல்லாம் சரியாகிடுச்ச்சி… “ என்றவன் அவளின் குனிந்த முகத்தை தன்னை நோக்கி மேலே நிமிர்த்தி…

“இந்த வாரத்தில் வர்ணாவை லீகலா.. நாம… நான் த்ததெடுத்திடலாம்… நோ வோர்ரீஸ்….” என்றான்.

தீபி இன்னும் அவனையே விழி எடுக்காமல் பார்க்க… ஈஸ்வர்க்கு வெட்கம் வந்தது… இவ்வளவு நேரமிருந்த மிடுக்கு, கர்வம், திமிர் எல்லாம் எல்லாம் காணமல் போனது அவள் பார்வையில்…

வெட்கத்துடன் “என்னடி …” என்றான் சிரித்தபடி. தீபி அவனின் வெட்க சிரிப்பை பார்த்தபடியே இருந்தாள்… பேசவேயில்லை..

தன் ஷார்ப்பானா மீசையால் அவளின் உதடுகள் தீண்டி… மெல்ல மெல்ல அவளிடம் தன் வெட்கத்தை துடைத்துக் கொண்டான். நீண்ட மெல்லிய நேசமான தீண்டலில்..  அவனின் வெட்கத்தை எல்லாம் அவளிடம் கொட்டினான்.

இருவரும் தன் வசம் இழக்கும் நேரத்தில்… தங்களை மீட்டுக் கொண்டு… ஈஸ்வர் தீபியை மையலாய் பார்த்து சிரிக்க.. தீபியின் கன்னங்கள் சிவந்தது.

ஈஸ்வர் “இப்போ யார் கிட்டயும் சொல்ல வேண்டாம், வர்ணாக்கு நான் அப்பாவாக்கிட்டுதான் இவனுக்கு“ என தீபியின் வயிற்றில் தன் கரம் வைத்து சொன்னான்.

தீபியும் “இன்னும் டைம் இருக்கு… ஜஸ்ட் இப்போதான் ஒன் வீக் ஆகுது… இன்னும் பத்து நாள் சென்றுதான் டாக்டர் கிட்ட போகணும்… ஒன்னும் பிரச்சனையில்லை… நீங்க ப்ரீயா இருங்க” என்றாள் கண் சிமிட்டி.  

இப்படியே பேசி பேசி தங்களது களைப்பு போனபின்தான் உறங்கவே சென்றனர் இருவரும்.

இரண்டு நாட்கள் கழித்து… ஈஸ்வர் சீக்கிரமாக ரெடியாகி ஹால் ஷோபாவில் அமர்ந்திருந்தான். இன்றுதான் ஈஸ்வர் ஆவலுடன் எதிர்பார்த்த நாள்.

கொஞ்சம் டென்ஷனாக இருப்பானோ என தீபி அவனை பார்த்து பார்த்து வேலை செய்ய… ஈஸ்வர் கூலாக அமர்ந்திருந்தான். வீட்டில் நெய் மணத்துடன் விருந்துக்கான வேலைகள் சென்று கொண்டிருந்தது.

தீபியின் அன்னையும் சித்தப்பாவும் வந்தனர். ஈஷ்வரும் ராமலிங்கமும் வரவேற்றனர் “வாங்க சம்பந்தி…” என ராமலிங்கம் பேசிக் கொண்டிருந்தார். ஆனந்தியும் பாட்டியும் வந்து பேசிக் கொண்டிருந்தனர்.

ஆனந்தி “வாங்க சித்தப்பா, வாம்மா…” என்றவள் உள்ளே சென்று டேபிள் ரெடி செய்ய சென்றாள்.

எல்லாம் முடிந்து தீபி அனைவரையும் உள்ளே உண்ண அழைக்க… ஈஸ்வர் வரவில்லை… சுந்தரி ”மாப்பிள்ளைய கூப்பிடு “ என்க.

ஆனந்தி “ஏனம்மா… ஈஸ்வர் வரலையா” என்றனர் ஒரே நேரத்தில்.

தீபி “இல்லத்த… அவர் கிஷோர் வந்ததும் வருவார்” என்றாள்.

எனவே பெரியவர்கள் மட்டும் உண்டனர்.

ராம் பூரணி.. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வந்தனர். கிஷோரும் வந்து சேர…. இவர்கள் ஐவரும் பேசியபடியே உண்டனர்.

ஈஸ்வர், தீபி கிஷோர், ராம் என நால்வர் மட்டும் ரிஜிஸ்டர் ஆபீஸ் கிளம்பினர். ஈஸ்வர் “வர்ணாம்மா” என அழைக்க…

தீபியும் ராமும் “அவ எதுக்கு” என்றனர் ஒரு சேர.

ஈஸ்வர் அவர்களிடம் “ஏன்… வரட்டுமே” என்றான்.

ராம் “விடு ஈஸ்வர் அவள…. ஏன் குழந்தைய அலைய வைக்கிற… நாம போனா.. வர லேட் ஆகும்…. வர்ணா அவசியமும் இல்லை….” என்றான்.

ஈஷ்வரின் முகம் தந்தையாக சோர்ந்து போக, பொறுக்க முடியாத தீபி அவனின் கை சுரண்டி “அதான் பையன் வரான்ல்ல… சும்மா டென்ஷன் பண்ணாதீங்க” என்றாள், அவன் போல் மிரட்டலாக.

ஈஸ்வர் “நண்டு சிண்டுக்கெல்லாம் கொடுக்கு முளைக்குதடா….” என அவளுக்கு மட்டும் கேட்க்கும் குரலில் சொல்ல..

தீபி முறைத்தாள். ஈஸ்வர் “ஆனா, என் பொண்ணு வரலையே… போங்கடி” என சொல்லி முன்னே போய் வண்டி எடுக்க செல்ல.

தீபி அவனுடனேயே நடந்தபடி “அதான் உங்களுக்குன்னே வர போறா.. இப்போ அவ தூங்கட்டும்… இப்போதான் கொஞ்சம் அவளுக்கு உடம்பு பராவயில்ல” என சமாதனம் செய்ய..

ஈஸ்வர் வேண்டுமென்றே “ஈ..” என இளித்து வைத்தான்.

காரில் ஏறி அனைவரும் கிளம்ப… பூரணி வர்ணாவை தூக்கியபடி போர்ட்டிக்கோவில் வந்து டாட்டா சொல்ல… பார்த்துவிட்டாள் வர்ணா… “ப்பா, ம்மா, மாமா..” என சத்தம் கார் செல்ல செல்ல…

ஈஸ்வர் வண்டியை நிறுத்தி இறங்கி வந்து.. அவளை வாங்கி தீபியிடம் கொடுத்துதான் வண்டி எடுத்தான்… வர்ணாவும் ஆசையாக தன் தந்தைக்கு முத்தம் வைத்து முன்னே தன் அம்மாவுடன் அமர்ந்து கொண்டு.. “ப்பா.. டாட்டா.. போறோம்” என ஏதோ கேட்டபடி வந்தாள்.

இப்போ அமர்ந்தலாக தீபியை பார்த்தபடி வர்ணாக்கு பதில் சொல்லிக் கொண்டு வந்தான் அவளின் புவன். ராம் இதனை பார்த்து சிரித்துக் கொண்டான். ஏதும் சொல்லவில்லை.

கிஷோருக்கு… ஈஸ்வர் தீபியின் செயல்கள் எல்லாம் ஆனந்தமே, அதிசயமே… வாயே திறக்க முடியவில்லை அவனால். அவன் கண்களில் ஈஸ்வரை தவிர வேறு பிம்பம் அவன் கண்ணில் விழவில்லை.

ஏதோ ஒரு வாழ்க்கை எனதான் நினைத்தான் கிஷோர். என்னதான் சமுதாயம்… விழிப்புணர்வு என வந்தாலும் தீபி போன்றோர்கள் வாழ்வில்.. இனிமை வராது என எண்ணியிருந்தான் கிஷோர்.

அவனிற்கு தவறான எண்ணங்கள் இல்லை ஆனால், எனக்கு… நான்… இப்படி ஒரு பெண்ணை மணப்பேனா… என எண்ணம்தான். அவன் சிந்தனை.

ஈஸ்வர் வர்ணாவை பார்த்துகொள்வான் என்ற எண்ணம்தான் கிஷோரின்…. முதல் நல்லெண்ணம் ஈஸ்வர் குறித்து. ஆனால் இப்படி தாங்குவான் என அவன் எதிர்பார்க்கவில்லை.

பெண்களிடம் எதிர்பார்க்கலாம்… இப்படிப்பட்ட குணத்தை. மேலும் பெண்களின் இயல்பே அதுதான் தாய்மை.

ஆனால் ஆண்களுக்கு…. அவர்களின் இயல்பே பொசஸிவ்… டாமினேஷன்.. இப்படிதான் அவர்களின் இயல்பே… இதில் எப்படி ஈஸ்வர்… முற்றிலும் வேறாய்.. என அசந்துதான் பார்த்தான் கிஷோர்.

அனால் கிஷோருக்கு பிடிபடாத ஒன்று… வளர்ப்பு…     

கிஷோரை ஈஸ்வர் இருமுறை அழைத்துதான் தரையிறக்க வேண்டி இருந்தது… எனவே சிரித்தபடியே உள்ளே சென்றனர் அனைவரும்.

அங்கு அவர்களின் வக்கீல்கள் எல்லாம் தயாராக வைத்து இருக்கவும். வேலை சற்று சீக்கிரமே முடிந்தது.   

வெளியே வந்த ஈஷ்வரின் முகம் கலையாக இருந்தது. கிஷோர் அவர்களின் அருகில் வந்து, “மாம்ஸ் ஒரு செல்பி..” என்றான்.

ஈஸ்வர் அமைதியாக ஆர்பாட்டமில்லாம அந்த நொடியை ரசிக்கும் மனநிலையோடு “கண்டிப்பா” என்றான்.

ஈஸ்வர் வர்ணாவை தூக்கியபடி இருக்க… தீபியை கண்ணால் அழைத்தான் தன் அருகில், அவளின் தோள் மேல் கை வைத்து நின்றான், ராம், கிஷோர் என அந்த போன் ஒரு தன்மையான… நிகழ்வை தனக்குள் சேமித்தது.  

எப்போதும் போல் ஈஸ்வர் தீபி வர்ணாவை அழைத்தபடி காளிகாம்பாள் கோவில் சென்று வீடு வந்தான்.

வீட்டில் அமைதியாக விருந்து நடந்தது… கதிரேசனும், ராமலிங்கமும் மதியம் விருந்து நேரத்திற்கு சரியாக வந்தனர். முறையான விசாரிப்புடன் உணவு நடந்தது.

பூரணி தீபியை கவனிக்க தொடங்கினாள். ஏதோ பூரணியால் உணர முடிந்தது, தீபியிடம் “நாள் தள்ளி போயிருக்கா” என கேட்டாள்.

தீபி திரு திருவென விழித்து “இன்னும் நான் பார்க்கலைக்கா..” என்றாள் யோசனையாக…

பூரணி ஒன்றும் சொல்லவில்லை… அத்தோடு வேலையும் அவர்களை இழுக்க தீபி பூரணியிடம் தனியாக நின்று பேசவில்லை.

அதன்பின் பிள்ளைகள் வந்தனர் பள்ளி விட்டு… எனவே அர்களின் சத்தமும் சேர்ந்துகொள்ள… வீடு கலைகட்டியது. எல்லோரும் இரவு உணவு முடிந்துதான் அவரவர் இல்லங்களுக்கு சென்றனர்.

இப்படியே ஒருவாரம் சென்றது. தீபிக்கு இப்போதெல்லாம் தலை சுற்றல்தான் அதிகமாக இருந்தது. சமாளிக்க முடிவதில்லை சில நேரம். எப்போதும் போல் ஈஸ்வர்தான் ரேசொர்ட் கொண்டு விட்டு கூட்டி வருகிறான் என்றாலும்… அதிகமான அசதி வந்தது தீபியிடம்.

இன்று அப்படிதான் தீபி…  தீபியை, இறக்கிவிட்டு வண்டியை நிறுத்தி உள்ளே வருவதற்குள் தீபிக்கு தலை கிறு கிறுக்க… போர்ட்டிகோவில் உள்ள சுவற்றில் சாய்ந்து நின்றாள்.

உள்ளே, ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்த ஆனந்தி.. பார்த்துவிட்டு தீபியின் அருகே வந்து அவளை கைபிடித்து அழைத்து சென்றார். ஷோபாவில் அமரவைத்து… “வசந்தி தண்ணி கொண்டு வா” என வேலை செய்பவரை பணித்து விட்டு தானும் அமர்ந்து கொண்டார்.

தண்ணீர் குடித்து அமர்ந்தாள் தீபி, ஆனந்தி “என்ன தீபி ஏதாவது விசேஷமா…” என்றார் சிரித்தபடியே.

தீபி மெதுவாக தலையசைத்தாள். பாட்டி அப்போதுதான் உறங்கி எழுந்து வந்தார். பாட்டிக்கும் விஷயம் சொல்லப்பட… எல்லோர் முகத்திலும் சந்தோஷம்தான்.

ஈஸ்வர் உள்ளே வந்தான்… பாட்டி “இன்னைக்கே… ஈவ்நீங்.. ஹோஸ்பிட்டல் போயிட்டு வந்திடுடா..” என்றாள் தழுதழுத்த குரலில்.

ஈஸ்வர் பாட்டியை கட்டிக் கொண்டு “கண்டிப்பா…” என்றான். கூடவே “வர்ணா.. தூங்குறாளா… பாட்டி “ என்றான்.

பாட்டி “ஆமாம் டா… நீங்க போங்க சாப்பிடுங்க… தீபி சாப்பிட்டு நீ ரெஸ்ட் எடு” என அனுப்பி வைத்தார்.

இருவரும் உணவு உண்ண சென்றனர்.

 

 

 

    

Advertisement