Advertisement

பௌர்ணமி வர்ணம் – 23

கிஷோர் வந்து இரண்டு நாட்கள் கடந்த நிலையில், ஈஷ்வரும் குடும்பம் நேற்றே அவர்களின் வீடு வந்தாகிவிட்டது. இன்று ஈஸ்வர் தனது ஜிம் வைக்கும் இடத்தை காண்பிக்க, கிஷோரை அழைத்து செல்ல இருக்கிறான். அதனை தீபியிடம் சொல்லிக் கொண்டிருந்தான்… “இன்னிக்கு கிஷோர திருவான்மியூர்… கூட்டி போறேன்” என்றான்.

இன்னும், தீபி, ஈஷ்வரின் தந்தை, பாட்டி என யாரையும் அழைத்து செல்லாத நிலையில்… இப்போது கிஷோர்தான் ஈஷ்வரின் கண்ணுக்கு தெரிந்தான் போல,

தீபி ஆரம்பித்தாள் “முதலில் பாட்டிய கூப்பிட்டு போய் காட்டுங்க, அவங்கதான் பயங்கர கோவத்தில் இருக்காங்க உங்க மேல… அத்த, மாமாட்ட கூட இன்னும் எதையும் சரியா சொல்லல, முதலில் அவங்க கிட்ட பேசாமல், இப்போ எதுக்கு உங்க மச்சானா கூப்பிட்டு போறீங்க” என காய்ந்தாள் ஈஸ்வரிடம்…

அதற்கெல்லாம் பயந்தவனா ஈஸ்வர்… புருவத்தை தூக்கி தீபியை ஒரு பார்வை பார்த்தவன்… “பார்க்கலாம்…” என்றான்.

தீபி அவனை தன்னால் முடிந்த மட்டும் முறைத்தபடி நின்றாள். அசராமல் அவளை கடந்து கீழே சென்றுவிட்டான். தீபியும் எப்போதும் போல் புலம்பியபடி ரேசொர்ட் சென்றாள்.

வினோ அழைத்தான் தீபிக்கு “எப்படி இருக்க… தீபி” என்றான்.

தீபி “என்னடா புதுசா கேட்கற, என்ன விஷயம் சொல்லு “ என்றாள்.

வினோ “இன்னிக்கு பேச்சிலர் பார்ட்டி மேடம்… உங்க பாஸ்ஸ அனுப்பி வைங்க…” என்றான்

தீபி “எங்கிட்ட எதுக்கு சொல்ற, அங்க பேச வேண்டியதுதானே….” என்றாள்.

வினோவுக்கு இவளின் நிலை தெரியாதே “அதெல்லாம் சொல்லியாச்சு, மாம்ஸ்தான்… என் ஏன்ஜல் கிட்ட பெர்மிஷன் கேட்டாதான் வருவேன்னு சொல்லிட்டார்…. அவ்வளோ மிரட்டி வைச்சிருக்க…. ம்…. பாவம்தான்” என்றான்.

வேண்டுமென்றே தீபி கேட்டாள் “என்னத்த…., மிரட்டினாங்க….

அப்படியே, கல்யாணம் செய்த உடன எல்லாத்தையும் மாத்திக்கிற மாதிரி எதுக்கு இந்த பார்ட்டி…

அப்பவும் இதே கதைதான் தொடர போது…. இதுல, நல்லவன் மாதிரி பர்மிஷன் வேற” என காய்ந்தாள்.

வினோ “தெரியுதுல்ல, விடுவியா…” என மேலும் தனது தோழியை வெறுப்பேற்ற…

தீபி “போடா, என்ன மோ செய்ங்க” என்றாள்.

வினோ “தேங்க்ஸ் தீபிம்மா… “ என்றான்.

தீபிக்கு சிரிப்புதான் வந்தது, அவளின் புவன் அவளை வம்பிழுக்க, தன்னிடம் கேட்டக சொல்லியிருக்கிறான்… வேண்டுமென்றே, என நினைத்துதான் சிரிப்பு. எனவே தீபி “எங்களுக்கு எப்போ டா பார்ட்டி” என்றாள்.

வினோ “ஹேய்… நானென்ன இன்னும் சின்ன பையனா… உங்க கூட சேர்ந்து சுத்த, நொவ் அம் கம்பிளிட்டு மேன்…. அதெல்லாம் கனிதான் இனி… பேசுங்க எல்லோரும்” என்றான் விட்டேற்றியாய்.

தீபி “அப்படியா… அவ்வளோ பெரிய ஆளா நீயி, நான் கனிகிட்ட பேசறேன்…

ஆமாம் நீ அந்த ம்ருனாளியை ரூட் போட்டியே அ…து.. தெரிய்யு…மா… நம்ம கனிக்கு…. ம்… பேசி…க்கிறேன்” என கடைசி வார்த்தையில் அழுத்தம் தர…

வினோ “ஹேய்… என்ன மாடுலேஷன் மாறுது… பார்த்தது, அவ சின்ன புள்ள மனச கெடுத்திடாத…. “ என்றான்.

தீபி “உன்னையே மேய்க்க தெரியனுமில்ல…. அதான் எனக்கு தெரிஞ்ச சின்ன சின்ன டிப்ஸ்… அவ்வளவுதான் “ என்றாள்.

வினோ சட்டென “என்ன வேணும் உனக்கு ட்ரிட் தானே.. ஏற்பாடு செய்யறேன்… போலாம், சரியா” என்றான் மீசையில் மண் ஒட்டாமல்.

தீபி “அவ்வளவுதான் டா, வேறு ஒண்ணுமே இல்ல, நான் மித்ராட்ட சீமாட்ட பேசறேன்… நீ நந்தன பலோ பண்ணிக்க” என்றாள்.

வினோ “தட்ஸ் குட்…. நெக்ஸ்ட் வீக்., கல்யாணம் முடிஞ்சி, நான் ஹனிமூன் போகும் முன்… இங்க சென்னையில, ஓகே வா” என்றான்.

“டீல் ஓகே…” என்றாள் தீபி.

வினோ “அப்போ, மாம்ஸ்…  இன்னிக்கு…” என்றான்.

தீபி “இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல… “ என்றாள்.

வினோ “சரி தீபி, நான் பார்த்துக்கிறேன், சும்மா உன்கிட்ட சொல்லாம்னுதான் கூப்பிட்டேன், வைக்கவா” என்றான்.

தீபிக்கு இந்த பேச்சு வார்த்தையில், தனது நிலையை மறந்து, கோவத்தை விட்டு இயல்பானாள்.

மாலை வீடு வர… இன்று ஈஸ்வர் இன்னும் வந்திருக்கவில்லை. எனவே இவள்தான் வர்ணாவை கவனிக்கும் படி ஆனது.

தீபி பாட்டியுடன் வர்ணாவின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்… ஹாலில் ஷோபாவின் கீழே… கலரிங் புக்கும்.. க்ரேயான்ஸ்சும் சிதறிக் கிடக்க…

வர்ணா தனது கலரிங் வேலையை முடித்து… பாட்டியின் மூக்கு கண்ணாடியை அணிந்து கொண்டு, எல்லோரிடமும் காட்டி சிரித்துக் கொண்டிருக்க..

ஈஸ்வர் அவசர அவசரமாக உள்ளே வந்தான்… யாரும் கவனிக்கும் முன், படி ஏறியபடியே “தீபா… மேல வா” என அழைத்தபடியே செல்ல,

அவனின் குரல் கேட்டவுடன் வர்ணா வாரி சுருட்டி எழுந்தாள்…  “ப்பா… என அவன் குரல் வந்த திசை நோக்கி ஓட..

ஈஸ்வர் அவளின் குரல் கேட்டு “வாடா கண்ணம்மா..” என மாடி ஏறியவன் கீழே இறங்கி வந்து அவளை தூக்கி சுற்றினான்.

பாட்டி “அதான்… அது அதுக்கு ஆள் வேணும் தீபி… காலையில் போனவன் இப்போதான் வரான்… உன்கிட்ட ஏதாவது சொன்னானா” என்றார் ஈஸ்வரை முறைத்தபடி.

தீபி ஏதும் பேசவில்லை உள்ளே சென்றுவிட்டாள். “பாட்டிக்கு கோவம் தன்னிடம் கூட பேரன் இதுவரை அந்த ஜிம் விஷயம் சொல்லவில்லை” என…

காலையிலேயே தீபி ஈஸ்வரிடம் சொன்னாள்.. பாட்டிகிட்ட பேசுங்க என அதையும் இவன் காதில் வாங்கவில்லை. எனவேதான் இந்த குத்தல் பாட்டியிடமிருந்து என அவனுக்கு புரிகிறது.

எனவே வர்ணாவுடன் வந்து பாட்டியிடம் அமர்ந்தவன் “கார்த்திம்மா… என்ன  சொல்லல… இப்போதானே ஆரம்பிக்கிறேன் அதான், விடுங்க இன்னும் ஒரு வாரத்தில் எக்குயிப்மென்ட் எல்லாம் வந்திடும்… அப்புறம் போலாம்… நீங்கதான் சீப் கெஸ்ட்… “ என்றான்.

பாட்டியின் முகம் தெளியவில்லை ஆனாலும் “ஏண்டா மதியம் சாப்பிட வரல, அப்படி என்ன வேலை… போனும் பன்னல”  என்றார் ஆற்றாமையாய், அவரின் நிமிர்வு பேரனின் விஷயத்தில் சற்று சாய்ந்தது.

ஈஸ்வர் இப்போதுதான் அவரின் மனம் புரிந்து “என்ன பாட்டி, ஒரு நாள்தானே வரல… இன்னிக்கு கிஷோர் கூட வெளிய போனேன், நானும் அவனும் சேர்ந்து சாப்பிட்டோம்… அதான்.

அவனுக்கு சில பாரின்.. எக்ப்மென்டெல்லாம் தெரியும் அதான் அவனோட ஒரு விசிட் போயிட்டு வந்தேன்… வேற பெருசா ஒன்னும் இல்லை” என பொறுமையாக விளக்கினான்.

வயதானவர்களுக்கு தோன்றும் இயல்பான பயம் தன் பேரன் தன்னிடம் பேசவில்லையே, தன்னை கண்டு கொள்ளவில்லையே என்ற ஒரு எண்ணம் இனி நாம் அவர்களுக்கு தேவையில்லை என தோன்றும் நேரம்… அதனை சரியாக புரிந்து பொறுமையாக ஈஸ்வர் விளக்க…

கார்த்தி பாட்டியும் “சரி சரி… எதுனாலும் தீபிக்கிட்ட சொல்லு இனி அது போதும் எனக்கு” என பெருமிதமாக விட்டு கொடுத்து சொல்ல…

ஈஷ்வரும் பாட்டியிடம் “இதான் என் பாட்டி” என செல்லம் கொஞ்ச,

வர்ணாவும் “நானு..” என தன் கன்னத்தை ஈஸ்வரிடம் காட்ட, இப்போது பாட்டியும் பேரனும் சேர்ந்து “ஆமாம் டா தங்கம்… நீதான் குட்” என சொல்ல, அப்படி ஒரு பெருமிதமாக தன் தந்தை தோள் சாய்ந்தாள் வர்ணா.

இப்போது ஈஸ்வர் பாட்டியிடம் “கொஞ்சம் வினோ வெளிய கூப்பிட்டான், ஆனா நான் என் பெண்டாட்டி சொன்னாதான் வருவேன்னு சொல்லிட்டேன்… அவ கிட்ட சொல்லாமா… எதுவுமே செய்யறதில்ல… நீ வேணா கேளேன்” என அவரை உசுப்பிவிட்டான்.

ஈஸ்வர் வந்துடன் உள்ளே சென்றுவிட்ட தீபிக்கு, கோவம் என நினைத்த பாட்டி “தீபி இங்க வா” என்றார். இவனின் உள் குத்து அறியாதவர்.

தீபி வர “என்ன மா, எங்கையோ வெளிய போகணும்மாம், உன்கிட்ட பசங்க கேட்டாங்களாம்.. போம்மா கிளம்ப சொல்லு” என்றார்.

தீபி “அது வந்து பாட்டி… எங்க போறாங்கன்னு தெரியுமா” என்றாள். ஈஸ்வரை பார்த்தபடி…

ஈஸ்வர் பொறுமையாக அவள் கண்களை உடுருவி பார்த்து அழுத்தமாக அமர்ந்திருந்தான் “சொல்லுடி பார்க்கலாம்” என்ற எண்ணத்தில்…

தீபிக்கு அவனின் பார்வை தடுமாற்றத்தை கொடுத்தது, கூடவே துள்ளலையும் தந்தது ‘ஏன் நான் சொல்ல கூடாது ‘ என அவனை மாட்டிவிடும் எண்ணமும் வர “அது பாட்டி, இவங்க பப்பு’ க்கு போறாங்க பாட்டி“ என்றாள். ஈஸ்வர்க்கு இவள் சொல்லுவாள் என்ற யோசனையை தராமல்… சொல்லியே இருந்தாள்.

ஈஸ்வர் அலறி அடித்து “அடி ஏய்…” என்றவன் தன்னிரு கைகளையும் தூக்கி இருந்தான் சரண்டர் எனும் விதமாக.. மொத்தமாக முறைத்த பார்வையா… லேசான சரண்டர் பார்வையா என தெரியாமல்…

அவனின் பாட்டிக்கு தனது பேரன் தங்க கட்டி எனவே அந்த இமேஜை கெடுத்துவிடாதே… என ஈஸ்வர் இறைஞ்சல் பார்வை பார்க்க… அமைதியானாள் தீபி.

இப்போது ஈஸ்வர் “தீபா… மணியாச்சு, மேல வரியா” என தன் பாட்டி எதிரிலேயே அவளை நகர்த்த… பாட்டியும் தீபியும் சிரித்தனர். வர்ணா என்னவென புரியாமல் அவளும் தன் தந்தை கால்களை கட்டி சிரிக்க…

தீபி “கிளம்புங்க… எனக்கு வேலையிருக்கு“ என்றவள் உள்ளே சென்றாள்.

ஈஸ்வரும் வர்ணாவுடம் மேலே சென்று கிளம்ப தொடங்கினான்… ரெடியாகி “தீபா..” என திருபவும் மேலிருந்தே ஒரு சத்தம்.

ஆனந்தி சிரித்தார்… பாட்டி “போம்மா, அவன் விட மாட்டான்.. போ என்னான்னு கேட்டு வா” என்றார் சிரித்தப்படியே…

ஒருவழியாக மேலே வரவைத்து விட்டான் தன்னவளை… உள்ளே வந்தவளிடம், அவளை பார்க்காமல் தனது மிலிட்டரி கட் முடியை, தனது நீண்ட விரல்களால் கோதியபடி, கண்ணாடியில் அழகு பார்த்தவாறு “கூப்பிட்டா வரமாட்ட… இனி வரல… தூக்கிட்டு வந்திடுவேன் பார்த்துக்க…” என்றான் அதட்டலாக.

தீபி ஏதும் பேசாமல் நிற்க. அருகில் வந்தவன் “என்னடி, எப்பவாவது ஒரு தரம் தானே… இப்போ முன்ன மாதிரி அடிக்கடி இல்லதானே… நீயே சொல்லு” என்றான்.

தீபி இப்போதும் அமைதியாக நிற்க, திரும்பவும் அவனே ”உன் பிரின்ட் பார்ட்டி டி, போகல உன் மானம்தான் போகும்… நல்லா இருக்காதுடா” என மிடுக்காக கெஞ்சிக் கொண்டிருந்தான் மில்டரி தன் மனைவியிடம்.

அதே அமைதி தீபியிடம், இன்னும் அருகில் வந்தவன் அவளின் கழுத்து வளைவில் விழுந்த முடிகளை நகர்த்தி நகர்த்தி அவளின் சங்கு கழுத்தை தன் முரட்டு விரல்களால் வருடியபடி… “என்ன டி…” என்றான் அதே மிடுக்கான கெஞ்சலில்…

தீபி போனால் போகுதுன்னு கரைய தொடங்கினாள் “அதிகமா போகாம பார்த்துக்கோங்க… எந்த டைம்மா இருந்தாலும் வீட்டுக்கு வந்திடனும்… ரேசொர்ட்டில் இருந்து ஸ்டீபன் வருவான்… அவன் கூட வந்திடுங்க… நீங்க டிரைவ் பண்ண வேண்டாம்” என்றாள்.

ஈஸ்வர் “ஏய்… நான் எப்போதும், எவ்வளவு அடித்தாலும் ஸ்டடி டி… “ என்றான்.

தீபி “நீங்கல்லாம் ஸ்டுடிதான், வீட்டுல இருக்கற நாங்கதான் ஸ்டடி இல்ல, நீங்க ட்ரிங் பண்ணா” என்றாள் முறைப்பாக.

ஈஸ்வர் அமைதியானான்… “சரி பாய்…. “ என்றவன் தனது மான்குட்டியிடம் திரும்பி… “வர்ணாம்மா, அம்மாட்ட, சாப்பிட்டு தூங்குங்க…” என்றபடி அவளுக்கு முத்தம் தந்து, தானும் பெற்று கிளம்பினான்.

ஏனோ சில இடங்களில் தீபி இப்படிதான்… அமைதியாக இருந்து விடுவாள். அவளின் அமைதி மட்டும் புவனை படுத்தும்… அதனை அவன் ஏற்பதே இல்லை.

                              ################

இந்த வாரம் இறக்கைகட்டி பறக்க, வினோவின் திருமண நாளும் வந்தது. நேற்று இரவு வரவேற்புக்கு சென்று வந்த தீபியிடம், அசதி வந்து ஒட்டிக் கொண்டது.

அதிகாலை முதல் ஈஸ்வர் அவளை உலுக்க உலுக்க கண்களை திறக்க முடியவில்லை அவளால், தீபிக்கும் இரண்டு மூன்று நாட்களாக குழப்பம்தான். எனவே முயன்று விழித்து, அமர்ந்தாள்.

ஈஸ்வர் “கிளம்பு டி, மணியாச்சு… அங்க நந்தன் வந்தாச்சாம்… போன் செய்துட்டான்… நீ கிளம்பு போலாம்…” என சலித்தபடி சொல்ல தொடங்கினான்.

தீபியும் புரிந்து குளித்து கிளம்ப, கீழே ஆனந்தி எழும் சத்தம் கேட்டது… அப்போதுதான் புடவை கட்ட தொடங்கியவள், ஈஸ்வரிடம் “புவன், அத்த கிட்ட சொல்லி… ஒரு காப்பி எடுத்து வாங்களேன்” என்றாள் அசதியான குரலில்.

அப்போதுதான் வர்ணாவை குளிக்க வைத்து கூட்டி வந்தவன்  “ஏன் என்னாச்சு, போகும் போது குடிச்சிட்டு போலாம்.” என்றான்.

தீபி “ப்ளீஸ் “ என்றாள்.

மறுபேச்சு பேசாமல் கீழே சென்று பத்து நிமிடம் காத்திருந்து காபியும், வர்ணாக்கு பாலுமாக எடுத்து மேலே வந்தான்.

அதற்குள் புடவை கட்டி முடித்து அப்படியே ஓய்ந்து போய் அமர்ந்திருந்தாள் தீபி. ஈஸ்வர்க்கு என்னவோ போல் இருந்தது “ஏன் என்ன செய்யுது… என்னாச்சு” என லேசாக பதற..

தீபி ஒரு அழகான புன்னகையுடன் “ஒண்ணுமில்ல… பாப்பாவ பாருங்க” என்றாள்.

ஈஸ்வர்க்கு அந்த புன்னகைக்கு அர்த்தம் புரிவதாக இருந்தது… நேரமாவதால் வர்ணாவை கவனிக்க தொடங்கினான்… அவளிற்கு பட்டு பாவாடை அணிவித்து கீழே அனுப்பினான்… அவளின் சிறிய முடியை… சிண்டு கட்டு விடுவார் ஆனந்தி, அதனால்.

ஈஸ்வர் தீபிக்கு நகை பாக்ஸ் எடுத்து தேவையானவற்றை எடுத்து கொடுத்துவிட்டு, கீழே சென்றான்.

வண்டியில் செல்ல செல்ல ஈஸ்வர்க்கு கேட்டக முடியாத சந்தோசம், அவளே சொல்லுவாள் என தெரிகிறது, அதனால் ஒரு அமைதி. ஆனால் கண்ணும் உதடும் அவன் வசம் இல்லை.

கண்களால் தீபியை பார்த்தபடியும்… உதடுகளில் புன்னகை நிறைத்தபடியும் வினோவின் திருமணத்திற்கு வந்து சேர்ந்தனர். ஈஸ்வர், வர்ணாவை கையில் வைத்தபடி ஓரிடத்தில் அமர்ந்து கொண்டான்.

தீபி அதன் பிறகு நார்மல் ஆகிவிட, ஈஸ்வர் மட்டும் அவளை கண்களால் தொடர்ந்து கொண்டிருந்தான்.

தீபி, மித்ரா, சீமா, நந்தன், பிரேமி என அனைவருடனும் கலந்து கொண்டாள். நீண்ட நாள் சென்று அவர்களின் சந்திப்பு. மிக உற்சாகமாக இருந்தனர் அனைவரும்.

வினோ, இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்கள் கனியின் கண்களை பார்ப்பதை விட, இவர்களின் சத்தில் அதிகம் அதிர்ந்தது.

வினோ கனியின் கழுத்தில் தாலி கட்டும் வரை, அங்கிருந்து வினோவையும் கனியையும் வாரிய நண்பர் படை, இப்போது ஈஸ்வர் நோக்கி சென்றது.

இப்போது ஈஸ்வர் அவர்களிடம் நல்ல முறையில் பேச, நண்பர்கள் படை அவனை வம்புக்கு இழுக்க தொடங்கியது. ஆனால் தீபி செய்த மாயமாய் எல்லாவற்றையும் சிரித்தபடி பதில் தந்தான் அவளின் புவன். அவனிற்கு இது சற்று கடினமாகத்தான் இருந்தது, ஆனாலும் சமாளித்தான்.

நந்தன் “ஈஸ்வர் உங்கள, அப்போ பார்த்தப்போ… பூச்சாண்டி மாதிரி தெரிஞ்ச்சிங்க… இப்போ அம்மாஞ்சி மாதிரி தெரியிறீங்க…” என்றான் வாய்விட்டே.

ஈஸ்வர் தீபியின் கையை சுரண்டி… “எவ்வளோ நல்லவன் நானு… கேட்டுக்க… உன் பிரிட்ன்ஸ் சொல்றாங்க… இனி அமைதியா இருக்க கூடாது” என்றான் மிரட்டுதலாக.

தீபி “அதானே, நீங்க எதிலையும் எக்ஸ்ட்ரீம்தான்… ஒன்னு அந்த கார்னர்…. இல்ல முடியாதுன்னு இந்த கார்னர்…. மிடில்லில் இல்லவே இல்ல” என்றாள் அவனை கண்களால் முறைத்தபடி, உதடுகளில் சிரித்தபடி.

 

 

    

     

    

    

Advertisement