Advertisement

பௌர்ணமி வர்ணம் – 22

வர்ணாவை தூக்கி இருந்தவன் தீபியை திரும்பியும் பாராது… கீழே சென்றுவிட்டான். இவளும் பின்னாடியே சென்றாள். ஈஸ்வர் வர்ணா இருவரும் உண்டு முடித்து ஹாலில் அமர்ந்திருந்தனர்.

ஈஷ்வரின் மடியில் வர்ணா படுத்திருக்க, அவளின் தலையை வருடியபடி கதை சொல்லிக் கொண்டிருந்தான் ஈஸ்வர். அப்படியே உறங்கியும் போனாள் வர்ணா.

தீபியும் பாத்திரங்களை எடுத்து சிங்கிள் போட்டு, ஒதுங்க வைத்து வந்து அமரவும், பெரியவர்கள் எல்லோரும் எழுந்து வரவும் சரியாக இருந்தது. அதன்பின் காபி, சிற்றுண்டி என நேரம் சென்றது.

ஈஸ்வர் அப்போதே தன் அப்பாவிடமும் தன் மாமனாரிடமும்… ஒரு சேர “நான் ஜிம் வைக்கலான்னு இருக்கேன், நேத்துதான் திருவான்மியூரில் இடம் பார்த்து, அட்வான்ஸ் கொடுத்து வந்திருக்கேன்… “ என்றான் தகவலாக.

இப்போதுதான் எல்லோருக்குமே விஷயம் தெரிந்தது, ஏன் ராமலிங்கத்திற்கே இப்போதுதான் இந்த ஏற்பாடே தெரிந்தது. ஆனாலும் “சம்பந்தி எதிரில் எதுவும் கேட்க வேண்டாம்” என அமைதியாக இருந்தார்.

பாட்டிதான் “ஏண்டா, இப்போ சொல்ற… அவசரமே இல்ல, நேர ஒபனிங்க்கு சொல்லு போதும்…” என பேரனை கடிய தொடங்கினார்.

ஈஸ்வர் “இல்ல பாட்டி, நடுவில் இந்த தருண் விஷயம் வாந்ததால, கொஞ்சம் மறந்துட்டேன்…. அவ்வளவுதான்…. இல்லைன்னா சொல்லமா எப்படி” என்றான் சமாதனாமாக.

நடேசன் பொறுப்பாக எல்லாம் கேட்டுக் கொண்டார் ஈஸ்வரிடம் எந்த விதமாக யோசனையும் சொல்லவில்லை அமைதியாக பேசிக் கொண்டிருந்தனர்.

ஈஷ்வரின் தந்தை ஏதும் பேசவில்லை தன் மகனிடம் அமைதியாகவே இருந்தார், அவர் தன் அன்னை கார்த்தி பாட்டியை முறைத்தபடி இருந்தார்.

சிறிது நேரத்தில் தீபியின் பெற்றோர் கிளம்பினர்…. வர்ணாவை இப்போது பாட்டியின் அறையில் விட்டு வந்தான் ஈஸ்வர். ராமலிங்கம் “ஏண்டா, இருக்கற வேலையையே பார்க்க முடியல… ஏண்டா புதுசா இதெல்லாம் இழுத்துக்கிற…. “ என எரிச்சலாக தொடங்க…

ஈஸ்வர் “அதெல்லாம் பாத்தா முடியுமா… எல்லாம் பார்த்துக்கலாம்… நீங்க அலட்டிக்காதீங்க” என்றான்.

சொன்னவன் நிற்கவில்லை, நேரே மேலே சென்றான், பத்து நிமிடத்தில் தயாராகி வந்தவன், கிளம்பி எங்கோ வெளியே சென்றுவிட்டான்.

தீபி அங்கேதான் தனது அத்தையுடன் உள்ளே பேசிக் கொண்டிருந்தாள்… யாரிடமும் எதுவும் சொல்லவில்லை ஈஸ்வர் கிளம்பிவிட்டான்.

தீபி அதன்பின் தனது நட்புகளின் நினைவு வர… எல்லோருக்கும் அழைத்தாள், ஆனால், அந்த மாலை வேளையில் அனைவரும் பிஸியாக இருக்க… இரவு ஒன்பது மணிக்கு கான்காலில் பேசலாம் என பேசி உடனே வைத்தனர் அனைவரும்.

அதனாலேயே அந்த மாலை அவளுக்கு நகரவில்லை… மேலே சென்று பால்கனியில் அமர்ந்து ஏதோ சிந்தனை… இந்த மூன்று மாத மாற்றத்தை மனதில் எண்ணியபடி அமர்ந்திருந்தாள். நேரம் போனது எப்படியோ ஆனால் என்ன தவிர்த்து அவளின் நேரத்தை அவளின் புவனே எடுத்துக் கொண்டான்..

வர்ணாவின் சத்தம் கீழே கேட்டுதான் இறங்கி வந்தாள்… அதன்பின் விளையாட்டும் சிரிப்போமாக பொழுது சென்றது.

நேரம் ஆக ஆக தீபிக்கு அமர முடியவில்லை தூக்கம் கண்ணை சுழற்றியது… ஆனந்தி இதனை பார்த்தவர்.. ”நீ போய் படு தீபி, வர்ணா இங்க இருக்கட்டும், ஈஸ்வருடன் வரட்டும்” என சொல்லி உணவு கொடுத்து… அவளை மேலே அனுப்பி வைத்தார். .

தீபியும் படுத்தவுடன் உறங்கியும்விட்டாள்… போன் கீழே இருந்தது. அவளின் தோழிகள் அழைக்க தொடங்கினர். ஆனந்திதான் எடுத்து பேசி வைத்தார். வர்ணா அங்கேயே உறங்க தொடங்கினாள்.

ஈஸ்வர் எப்போது வந்தான்… என ஒன்றும் தெரியாது தீபிக்கு.. நல்ல உறக்கம். ஈஸ்வர் வந்து உணவு முடித்து, மேலே வரவே மணியாகிவிட்டது.

தீபி இப்படி மலர்ந்த முகமாய்… நல்ல உறக்கத்தில், எப்போதும் போல் கீழே படுத்திருந்தாள்… பார்த்தவனுக்கு அப்படியே உறைந்து நின்றது நிமிடங்கள்…

இப்பொது தீபி, எங்கோ கனவில் மிதந்தாள்… அமைதியான ஜில்லென காற்று தன் மேனியை தொட… கூடவே இதமான வருடல்… சின்ன சின்ன ஊசி குத்தலாக தன் கன்னத்தை தீண்டும்…. தீண்டும்… அங்கே அவளின் கனவு தொலைந்து… நடுவில் நிற்க…. அவளின் மூளை இப்போதுதான் விழிப்பு நிலைக்கு வர…. கண்களை திற என்க… இப்போது அந்த கண்களின் மேல்… சின்ன ஈர முத்தம்… ஏனோ கண்ணை திறக்க மனமில்லாமல்… தன் உதடுகளை வளைத்து இன்னும் அழுத்தமாக கண்களை மூடிக் கொள்ள… இப்போது அதை உணர்ந்த… அந்த ஈர உதடுகள் இன்னும் அவளின் கண்களை  தன் முத்தத்தால் நனைக்க… அதில் நனைந்த கண்கள்… தனது கருவிழிகளை அசைக்க… “தீபா…” என மொத்தத்தையும் எழுப்பும் அழைப்பு…

அதை உள்வாங்கி சிலிர்த்தது அவள் தேகம்… ஆனாலும் பெரிய காதலையும், சின்ன ஊடலையும், கண்ணை திறக்காமல் தன் உதட்டசைவில் காட்ட, அதில் கட்டுண்ட அவளின் புவன் “இங்க பாருடி “ என இப்போதும் உறும….

தீபி சிரித்தபடியே கண் திறந்தாள்… “தள்ளி போடா…” என்றாள்…

ஈஸ்வர் சிரித்தபடியே… அவளின் மேல் மொத்தமாக அழுத்த… அதன்பின் காற்றுக்கும் அனுமதியில்லை அங்கு… பேசவே விடாத நேசமாய் அவளை தன் கட்டுக்குள் எடுத்துக் கொண்டான் ஈஸ்வர். ஊடலாய் கூடலை தொடர்ந்தான் அவளின் புவன்.

@@@@@@@@@@@@@@

மறுநாள் காலை  ஈஸ்வர் “தீபா, மணியாச்சு… சீக்கிரம் சீக்கிரம் கிளம்பு” என அவளை உலுக்கிக் கொண்டிருந்தான்.

தீபி “புவன் ப்ளீஸ்… மணி இப்போத்தானே பவ் திரட்டி… இன்னும் கொஞ்ச நேர…ம்” என சொல்லியபடியே திரும்பவும் உறங்க…

ஜாகீங் முடித்தது வந்தவன், இன்றுதான் அவர்களின் திருமணம் பதிவு நடைபெறுவதால், அவளை நேரம் காலம் தெரியாமல் விரட்டிக் கொண்டிருந்தான்.

ஏனோ தீபி அசைவதாக இல்லை… அதனால் அவளை எழுப்ப அவளின் ரஜாய் உள்… நுழைந்து கொண்டான் தெரிந்தே…

அதன்பின் இருவரும் எழவே மணி ஏழானது.. மிகவும் சந்தோஷ தருணம் அவனிற்கு… திக்கு முக்காடி கொண்டிருந்தான் நேற்று மாலையே எல்லா வேலைகளையும் செய்துவிட்டிருந்தான்.

எனவே இன்று அவர்கள் பத்து மணிக்கு ரெஜிஸ்டர் செய்ய போக வேண்டும் எனவே அதற்காகத்தான் இப்போது அவளை எழுப்பினான். அதுவும் தோல்வியில் முடிய, தானும் சேர்ந்து வீழ்ந்து போனான்.

வர்ணா நேற்று பாட்டியுடனேயே உறங்கிவிட, இப்போதுதான் மேலே வந்து, கதவை தட்ட தொடங்க, அடித்து பிடித்து எழுந்தான் ஈஸ்வர்… தீபியும்தான்

.தீபி நேரே குளியலைறை செல்ல… ஈஸ்வர் அரக்க பறக்க.. தன்னை நிலைபடுத்தி கதவை திறந்தான்.

இப்படியாக மூவரும் கிளம்பி கீழே வர… ஈஸ்வர் அட்வகேட்டிற்கு போன் செய்து மற்ற ஏற்பாடுகளை கேட்ட படியே கிளம்பினான். தீபியும் உண்டு முடித்து தயாராக நின்றாள்..

ராமலிங்கம் ஆனந்தி வர்ணா என அனைவரும் கிளம்பினர். வர்ணாவை அம்மா வீட்டில் விட்டு விட்டு, கதிரேசனுடன் கிளம்பினர் மற்றவர்கள்.

ரெஜிஸ்டேஷன் முடிந்து மற்றவர்கள் தீபியின் வீட்டிற்கு வந்தனர். ஈஷ்வரும் தீபியும் காளிகாம்பாள் கோவிலுக்கு சென்றனர். தரிசனம் முடித்து தீபி வீட்டிற்கு வந்தனர். அங்கேதான் விருந்து இன்று. எனவே பாட்டி, ராம், பூரணி, பிள்ளைகள் என அனைவரும் வந்திருந்தனர்.   

வீடு விழாகோலம் கொண்டது. மிதமான கலவரத்தில் தீபி, இங்கும் அங்கும் அலைந்தபடி… இருக்க. ஈஸ்வர் வெளியே ஒன்றும் காட்டிக் கொள்ள முடியாத சந்தோஷத்தில் எல்லோரிடமும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். ஆனால் கண்கள் மட்டும் அவன் பேச்சை கேட்கவில்லை… தீபியின் பின்னே சென்றது.

இன்று இரவு கிஷோர் வருகிறான். எனவே, கிஷோரை பிக்கப் செய்யவென   ஈஷ்வரின் குடும்பம் இங்கேயே தங்க…. மற்ற அனைவரும் விருந்து முடித்து கிளம்பினர்.

அதன்பின்னும் தீபியும் ஈஸ்வரும் பேசிக்கொள்ளவில்லை… ஏனோ அதற்கு அவசியம் இல்ல போலும். தீபி ஒரு வாரமாக ரேசொர்ட் செல்லாதவள் இன்று சென்றாள்.

ஈஸ்வர் வர்ணாவை எடுத்துக் கொண்டு மேலே சென்றான் உறங்க வைக்க… அவனும் சேர்ந்து உறங்கிபோனான்.  

மாலை ஈஸ்வர் தனது திருவான்மியூர்… இடம் பார்க்க சென்றான். தேவையான ஏற்பாடுகளை கவனித்து வரவே இரவானது. தீபி முன்பே வந்துவிட்டாள். கதிரேசனுடன் அந்த பாண்டிசேரி நிலம் குறித்து பேச்சு சென்று கொண்டிருந்தது அவர்களிடம்.

திருச்சியை தலைமியிடமாக கொண்ட நண்பர்கள் சேர்ந்து செய்யும் ஒரு புது பில்டர்ஸ்ஸிடம் கொடுப்பதாக பேச்சு சென்று கொண்டிருந்தது.

ஈஸ்வர் அப்போதுதான் உள்ளே வந்தான்.. எங்கிருந்தோ வர்ணா வந்து “பா..” என அவன் கால்களை கட்டிக் கொண்டாள். இவ்வளவு நேரமாக வந்து அமர்ந்திருந்த தீபியை கண்டுகொள்ளவில்லை அவள்.

ஆனால் இப்போதுதான் உள்ளே வந்த ஈஸ்வரை பார்த்தவுடன் கைகளை தூக்கியபடி வரும் தனது மகளை ஆசையாக பார்த்தாள் தீபி, செல்ல கோவத்துடன்.

ஈஸ்வர் அதனை கவனித்தான், தீபியின் எதிரே புருவத்தை உயர்த்தியபடி, அமர்ந்து, வர்ணாவிடம் “என்ன செய்த, என்ன சாப்பிட்ட, ஈவ்னிங் ஜாக்கிங் போனீயா” என ஓவ்வொன்றாக கேட்க…

வர்ணாவும் “சுசி க்கா கூட விளையாடினேன், இப்போதான் கொய்யா பழம் சாப்பிட்டேன், ஐயோ ஜாக்கிங் போலப்பா… சாரி” என தலையை சரித்தபடி அவனிடம் சொல்ல.

ஈஸ்வர் “சரி இப்போ போலாம்” என்றவன் உடனே எழுந்து வர்ணாவை தூக்கியபடி மேலே சென்றான். பத்து நிமிடத்தில் இருவரும் ஜாக்கிங் சூட், ஸ்போர்ட் ஷூ சகிதம் இறங்கி வந்தனர்…

பார்த்திருந்த சுந்தரி கூட “இப்போதானே மாப்பிள்ளை வந்தீங்க… இருங்க ஏதாவது சாப்பிட்டு போங்க…” என ஈஸ்வரை நிறுத்த..

எங்கே அவன் நின்றான். தீபியிடம் சிறு தலையசைப்புடன் “இல்ல அத்த… வந்துதான்… இனி” என்றவன்… தன் மகளுடன் அந்த தோட்டத்தை வலம்வர தொடங்கினான்.

அவளின் பிஞ்சு பாதங்கள் நடக்கும் வேகத்தில், இவன் ஊர்ந்தான்… ஆனாலும், பத்து ரவுண்டு அந்த தோட்டத்தை சுற்றிய பிறகே… தன் மகளுடன் உள்ளே வந்தான் ஈஸ்வர்.

இது அவனின் கட்டளை வர்ணாவிற்கு… காலையும் மாலையும் அவளை ஜாக்கிங் என்ற பெயரில் வளைத்துக் கொண்டிருந்தான். தீபியும் ஆனந்தியும் அவனை அவ்வபோது கடிய தொடங்கினர்… “இப்போவே இதெல்லாம் வேணுமா, பாவம் குழந்தை டா” என ஆனந்தி சொல்லுவதுண்டு.

ஆனால் கார்த்தி பாட்டி எதுவுமே சொல்லாமல் தன் பேரனுடன் சேர்ந்து வர்ணாவிடம் “வாடா தங்கம் நாம ஜாக்கிங் போலாம்” என தானும் சிலசமயம் நடக்க தொடங்குவார்.

எனவே “இதெல்லாம் பழக்கம்தான்” என தீபி இருந்தாலும் கதிரேசன் தீபியிடம் “ஏன்ம்மா, இப்போதானே வந்தாரு தம்பி, நீ இருக்க சொல்லலாமுல்ல

இன்னிக்கு ஒரு நாள் போகலைன்னா, என்ன ஆகிட போது…. பாரு குழந்தைக்கு மூச்சு வாங்குது… போம்மா, போயி ஏதாவது குடிக்க கொடு “ என்றார் ஆற்றாமையாக.

தீபி அசித்திரையாக “அதெல்லாம் சொன்னா கேட்கமாட்டார் சித்தப்பா” என்றாள். சொல்லியவள் எழுந்து உள்ளே சென்றாள்.

வர்ணா வேர்க்க விறுவிறுக்க வந்து அமர்ந்ததை பார்த்தது… சுந்தரிக்கும் கதிரேசனுக்கும் வருத்தமாக இருந்தது. ஆனால் வர்ணா… சிறிது நேரம் அமர்ந்தவள், அதன்பிறகு இயல்பாக விளையாட சென்றுவிட்டாள். அதனால் யாரும் ஏதும் சொல்லவில்லை அமைதியாக பார்த்திருந்தனர் அவ்வளவே.

ஈஸ்வர் வர்ணாவிற்கு தண்ணீர் கொடுத்து, கந்தனை அழைத்து ஜூஸ் கொடுக்க செய்து… எல்லா பணிவிடையும் செய்தான். தீபி ஆளையே காணம். அதுவும் அவர்கள் கண்களில் படாமல் இல்லை.  

இரவு உணவு முடித்து ஈஸ்வர் மேலே செல்ல, தீபி வர்ணாவை அழைத்தாள். ஆனால், வர்ணா “ம்மா, பாட்டி கத சொல்லவேயில்ல… டுடே சொல்ற ன்னு சொன்னா ங்க” என கண் விரித்து சொன்னாள்.

சுந்தரியும் “விடேன் லக்ஷ்மி, அதான் கிஷோர கூப்பிட போவீங்களே, என் கூட படுத்துக்கட்டும்” என்றார்.

தீபி மேலே சென்றாள். ஏனோ தீபி வெட்கம் சூழ, புது பெண்ணாய் மேலே சென்றாள். என்ன செய்தும் அவளின் வெட்க சிவப்பை மறைக்க முடியவில்லை அவளால். ஈஸ்வரும் அவளின் தடுமாற்றத்தை, ரசித்தபடியே அவளை பின்னிலிருந்து அனைத்துக் கொண்டான்.

மிக நீண்ட இரவு தீபிக்கும் புவனனுக்கும்… இன்றைய நிகழ்வில் இருவர் மனதும் நிறைந்து இருக்க… அதனை மௌனமாகவே கொண்டாடினர் இருவரும்.

இருவரும் அதிகாலை இரண்டு மணிக்கு ஏர்போர்ட் கிளம்ப, காரில் நிரம்ப அமைதி. இரண்டு காபிகளுடன் ஏர்போர்ட் உள்ளே அமர்ந்தனர் இருவரும். அந்த அதிகாலையும் இங்கு பரபரப்பாக இருக்க, வேடிக்கை பார்த்தபடி… ஏதோ பேச்சு சென்று கொண்டிருந்தது அவர்களிடம்.

கிஷோர் வந்திறங்கும் விமானத்திர்கான அறிவிப்பு வந்து, ஒரு இருபது நிமிடம் சென்று வந்தான் கிஷோர்… சற்று இளைத்து, பயண களைப்பை துமந்தபடி அவன் கண்கள் இவர்களை தேட தொடங்க…

அவன் பின்னே தீபி “பே..” வென… சின்னதாக கத்தி… அவனை தன்புறம் திருப்ப, ஆச்சிரியமாக விழித்தபடி தீபியை கட்டிக் கொண்டான் கிஷோர்.

இவர்களின் பின்னால் இந்த நிமிடங்களை கைகட்டி ரசித்தபடி நின்றிருந்தான் ஈஸ்வர். அதனை பார்த்த கிஷோர் “மாம்ஸ்..” என்றபடி அவனையும் தழுவ… ஈஸ்வரும் பதில் தந்து அவனை தழுவி விடுவித்தான்.

தீபி “ஏதாவது சாப்பிடுறீயா டா, பயங்கர ஸ்லிம்மா இருக்க… டையட்டா…” என்றாள்.

அவனின் பதில் தேவையாக இருக்கவில்லை தீபிக்கு “வர்ணாக்கு அந்த அந்த பிரண்ட் டாய் வாங்கி வந்தியா” என்றாள். இன்னும் ஏதோ பேசிய படியே இருந்தாள்.

பின் லக்கேஜ் கலெக்ட் செய்து வெளிவந்தனர். ஈஸ்வர் காரெடுத்து வர செல்ல, தீபியயைதான் பார்த்திருந்தான் கிஷோர். அவனால் தன் அக்காவின் ஆர்பாட்டங்களை இயல்பாக நினைக்க முடியவில்லை.

அவளையே உத்து உத்து பார்த்தான் ஏதும் சொல்லவில்லை, ஆராய்ந்தானா, ஆச்சிரியபட்டானா தெரியவில்லை ஆனால் அவளை ரசித்தான்.

இருவரும் காரில் அமர… முன்னாள் அமர்ந்த தீபி “ஏங்க உங்க மச்சான் என்னை முறைச்சி முறைச்சி பார்க்கறாங்க” என தன் கணவனிடம் கண்சிமிட்டி சொல்ல, அதனையும் அமைதியாக பார்த்திருந்தான் கிஷோர்.

ஈஸ்வர் அமைதியாக திரும்பி கிஷோரை பார்த்து புருவம் உயர்த்தினான், கிஷோர் அதற்கு மெச்சுதலான பார்வையை பதிலாய் தந்து வார்த்தைகள்  ஏதும் சொல்லாமல் பார்க்க… தீபி இப்போது இவர்களின் பரிபாஷை பார்த்து, “என்ன..” என தன் கணவனை கேட்க…

ஈஸ்வர் அமைதியான குரலில் “இரு இப்போதானே வந்திருக்கான், இன்னும் கொஞ்ச நேரத்தில் போர்ம்க்கு வந்திடுவான்… நீ அதிகமா பேசாத டி…” என்றான், திட்டினானா, கோவபட்டானா, செல்லம் கொஞ்ச்சினா என தெரியாத குரல்.

கிஷோர் இதனையும் சிரித்தபடியே பார்த்திருந்தான்… வீடு வந்தனர். பெரியவர்கள் ஆவலுடன் அமர்ந்திருந்தனர் இவர்களை எதிர்பார்த்து.

 

Advertisement