Advertisement

பௌர்ணமி வர்ணம் – 20

காலையில் சென்ற ஈஸ்வர் இரவு பதினொரு மணிக்குதான் வீடு வந்தான். எங்கு சென்றான் என தெரியவில்லை. கடைக்கும் செல்லவில்லை. யாரின் போனையும் அட்டென் செய்யவில்லை. வரும் போதே முகமும் மனமும் இறுகிக்கிடந்தது.

வந்தவன் நேரே கை கழுவி உண்ண தொடங்கினான். யாரும் அங்கு இல்லை. தீபி அவனிற்காக காத்திருக்கவில்லை, வர்ணாவுடன் படுத்துவிட்டாள். எப்போதும் அவனும் அவளும் சேர்ந்துதான் இமதியம் இரவு வீடு வருவது.

இன்றுதான் எங்கும் யாரும் செல்ல கூடாது என சொல்லி கிளம்பியிருந்தானே ஈஸ்வர். ஆதனால், தான் மட்டும் வந்து தனியே உண்டு கொண்டிருந்தான்.

ஈஸ்வரும் மேலே வந்து அறையின் விளக்கை உயிர்பிக்க, தீபியின் யோசனை முகம்தான் கண்ணில் பட்டது அவனுக்கு.

ஈஸ்வரை இது தாக்காமல் இல்லை. அவளை பார்த்தபடியே தன்போல் உடை மாற்றி, ரெஸ்ட் ரூம் சென்று வந்து அமர்ந்தவனை வெறித்துக் கொண்டே இருந்தாள் தீபி.

தீபி, யாருக்கோ போனில் மெசேஜ் செய்ய, அதை பார்த்திருந்தான் ஈஸ்வர். அவனின் இதழ்கடையில் சிரிப்பு, இறுக்கங்கள் தளர்ந்து… இலகுவானவன் “இன்னுமாடி என்ன பார்த்தா அப்படியிருக்கு, நேர பேசமாட்டாலாமா” என எண்ணியபடி.

அவளருகில் அமர்ந்தான், திரும்பி படுத்துக் கொண்டாள் தீபி. அவளின் தலையை மெல்ல எடுத்து தன் மடி மீது வைக்க. விருட்டென எழுந்தவள்… “என்ன நினைச்சிங்க… நான் எதுவுமே கேட்ட கூடாதா, போன் கூட அட்டென் செய்ய மாட்டீங்களா…” என ஆவேசமாக கேட்க.

ஈஸ்வரின் போன் அழைக்க தொடங்கியது. தீபி முனு முனுத்துக் கொண்டாள் “எடுங்க, கேட்க யாரும் இல்லைனு நினைச்சீங்களா… ரொம்பதான் படுத்துறீங்க… பேசுங்க..” என கூற.

சிரித்தபடியே அந்த வீடியோ காலை அட்டென் செய்தான் ஈஸ்வர். கிஷோர் “மாம்ஸ்… எப்படி இருக்கீங்க” என ஆர்பாட்டமாக ஆரம்பித்தான்.

ஈஸ்வர் அவனிடம் “குட்…. நீ என்ன பண்ற, எப்போ வர“ என கேட்டுக் கொண்டே.

தீபியிடம் திரும்பி “ப்பா… எவ்வளோ பெரிய ஆளு பயமா இருக்கே” என நக்கல் குரலில் சொல்லியவன் .

கிஷோரிடம் திரும்பி “என்ன உங்க அக்கா சப்போர்ட்டுக்கு கூப்பிட்டாளா, உடனே வந்துட்டீங்களா” என அவனையும் வாரா…

கிஷோர் சிரித்தபடி “பாவம் மாம்ஸ் அக்கா, அவகிட்ட சொல்லிட்டு செய்யலாம்ல… “ என்றவன் சிறிது இடைவெளி விட்டு, “அப்படி என்ன பண்ணீங்க மாம்ஸ்” என ஆராய்ச்சியாய் கேட்க…

ஈஸ்வர் “பார்டா…. சமார்த்தியத்த.. சரி அத விடு…. எப்போ வர…. என்னவோ டென் டேஸ்ல வந்துடுவேன்னு போன வாரம் சொன்ன… இன்னும் ஆள காணம்…” என பேச்சை மாற்றினான்.

கிஷோருக்கு இப்போது லீவ் எடுத்து கொள்ளும் சமயம்… இது கடைசி வருடம் என்பதால்… இரண்டு மாதம் முன்பு, பேப்பர் சமிட் செய்யவே சென்றிருந்தான். எனவே இனி நிரந்தரமாக இந்திய வந்துவிடும் எண்ணம்தான் கிஷோருக்கு.

கிஷோர் “நாளை மறுநாள் ப்ளைட் மாமா… வந்துடுவேன். அதுக்குள்ள… அந்த நாமக்கல் பிரச்சனைய முடிச்சிடுங்க“ என்றான்.

ஈஸ்வர் “எங்க இவதான் பயந்து நடுங்கறாலே…. விடு பார்க்கலாம். “ என்றான்.

கிஷோருக்கு புரிந்தது, தன் மாமன் எதையும் தன்னிடம் சொல்ல விருப்படவில்லை என. ஆனாலும் தீபியின் திருப்திகாகதான் இந்த போன்.

ஏனெனில், தன் தந்தையிடம் கூட ஈஸ்வர் உதவி கேட்டகவில்லை, ஏன் ஏதும் சொல்ல கூட இல்லை. கதிரேசன் உற்பட யாரையும் இதில் இழுக்கவில்லை ஈஸ்வர்.

கிஷோருக்கு தெரிந்த வரையில், இன்னும் கமலனாதனிடம் கூட நேர பேசவில்லை ஈஸ்வர். அப்படியிருக்க, தன்னிடம் எதுவும் சொல்லமாட்டார் என தெரிகிறது, ஆனாலும் தீபியின் பேச்ச்சை மீற முடியாது, அவளின் ஆறுதலுக்காகதான் இந்த போன். எனவே விளையாட்டாய் சென்றது பேச்சு.      

தீபிக்கு கோவம் “நாம் எதற்காக பேச சொன்னால் இவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்” என கிஷோரின் மேல் கோவம் வர… ஈஸ்வரிடமிருந்து போனை வாங்கியவள் “போனா வைடா… வெட்டி அரட்டை…” என்க…

ஈஷ்வருக்கு இவளின் கோவம் பார்த்து குஷியாகி, அவளிடமிருந்து போனை பிடுங்கியவன் “கிஷோர்,, உன் அந்த கேர்ள் பிரண்டு எப்படி இருக்கா, இந்தியா கூட்டி வரீயா…

அங்கு இருக்கிற பொண்ணுங்களையே பார்த்துக்கடா, இங்க இருக்கிற பொண்ணுங்க எல்லாம் சரியான சண்டைகாறாங்க டா,  ஏன் குளிக்கல, ஏன் போன எடுக்கல, ஏன் சொல்லல என சண்டை…

அவங்கன்ன அப்படியெல்லாம் இல்லைடா… செம ப்ரீடம், நம இன்டிபெண்டசிய மதிப்பாங்க… அனுப்ப பட்டவன் சொல்றேன்… அப்புறம் உன்பாடு…” என பாவமாக சொல்ல.

தீபிக்கு இதெல்லாம் ஈஸ்வர் தன்னை வெறுப்பேற்றவே சொல்லுகிறான் என தெரிந்தாலும், காலையிலிருந்து அவளின் பயமான மனநிலையும் சேர்ந்து கொள்ள, கண்ணில் நீர் வர துவங்கியது. அதனை ஈஸ்வரிடமிருந்து மறைக்க எழுந்து சென்றுவிட்டாள்.

கேட்டிருந்த கிஷோர் சிரித்தபடியே “அப்படியா…. ஆனா நான் அவளுக்கு டார்ச்சர்தானே மாம்ஸ்… நான் கேட்பேனே… இதையெல்லாம்…” என இலகுவாக சொல்ல…

ஈஸ்வர் “அப்படி ஒன்னு இருக்கோ… அத விடு, உங்க அக்காவ அதிகமா பேசிட்டமோ… மலையேரிட்டா… சரி நீ பாரு நான் அப்புறம் கூப்பிடுறேன்” என போனை வைத்தான் ஈஸ்வர். கிஷோருக்கு சற்று ஆச்சிரியம்தான், “பார்டா… நம்ம மாம்ஸ்சுக்கு பொறுப்ப” என எண்ணிக் கொண்டே போனை வைத்தான்.

தீபி பால்கனியில் நிற்க அங்கு சென்ற ஈஸ்வர் “என்ன தீபா… வா உள்ள” என அழைத்தான்.

அசையவில்லை அவள். ஒரு ஐந்து நிமிடம் பொறுத்து பார்த்தவன்… “வாடி என்னமோதான்” என அவள் கை பிடித்து இழுத்து வந்தான்.

எப்போதும் அவர்களுக்கென கீழே வைத்து உள்ள… சின்ன பெட்டை எடுத்து போட்டான்… அதனை அவளின் கையை பிடித்து கொண்டே செய்தான். பின் அதன் மேல், விரிப்பை விரிக்க… அவளின் கையை விட்டவன் அவளை முறைத்தபடியே செய்ய, சிரிப்பு வந்தது தீபிக்கு.

லேசாக சிரித்தவாறே அவனை பார்த்திருந்தாள்… ஈஸ்வர் “உன் புவன் கஷ்ட்ட படுறேன் பார்த்து சிரிக்கிற..” என கேலிக் குரலில் பேசியபடி பெட்டின் மேல் அமர்ந்து, அவளை அமரும்படி சைகை செய்ய…

தீபியும் அமர்ந்து கொண்டாள்…. ஈஸ்வர் “ம்… சொல்லு, என்ன தெரியனும் உனக்கு” என்றான் நல்லவனாக.

தீபி விடாது பிடித்துக் கொண்டாள் “காலையிலிருந்து எங்க போனீங்க.. ஏன் யார் போனையும் எடுக்கல” என மிதப்பாய் கேட்க.

ஈஸ்வர் தன் உடலை குறுக்கி கைகளை கட்டிக் கொண்டு “இன்னைக்கு ஒரு புது வொர்க்க்கு இடம் பார்த்து வந்திருக்கேனுங்கோ… பேசியே முடிச்சாச்சுங்கோ” என்றான்.

தீபி, அவனின் உடல் மொழியில் சிரித்தாலும், அவனின் கைகளை தட்டி விட்டவள், அவன் பதிலுக்கு கேள்வி கேட்க தொடங்கினாள் “என்ன… புது வேலை… காலையிலிருந்து நாங்க இங்க, எங்க போனீங்களோ, என்ன பண்ணீங்கலோன்னு உட்கார்ந்து இருக்கோம்… நீங்க என்னாடான்னா… உங்க வேலைய பார்த்துரீகிங்க” என பொரிய தொடங்கினாள்.

ஈஸ்வர் அப்பவும் அதே அசால்ட்டுடன்… “நாளைக்கு இந்நேரம்… எல்லா ப்ராப்ளமும் தீர்ந்திருக்கும்… அப்புறம் யாரும் வர்ணாவிடம் நெருங்க முடியாது…. நீ கூடத்தான்” என்றான் திமிராய்.

ஏனோ தீபிக்கு கோவம் வரவில்லை நிம்மதியாக இருந்தது “அப்படி என்னதான் செய்தீங்க…” என்றாள்.

ஈஸ்வர் “நான் ஜிம் வைக்கலான்னு இருக்கேன், அதுக்காக இன்னிக்கு திருவான்மீயுர்ல, இடம் பார்த்துட்டு வந்திருக்கேன்” என்றான்.

தீபி அவனின் புதிய முயற்சியெல்லாம் காதில் விழவில்லை போல “புவன் எனக்கு பொறுமையில்லை, முதலில் அங்கிள என்ன பண்ணீங்க ப்ளீஸ் “ என்றாள்.

ஈஸ்வர் தனது போனை எடுத்து காட்டினான்… அதில் கமலநாதனின் எண்ணிலிருந்து பதினைந்து அழைப்புகள். ஆனால் ஒன்றையும் எடுக்கவில்லை. எல்லாம் தீபிக்கு வந்த அழைப்புகள். இவன் தனக்கு கால் டைவர்ட் போட்டிருந்ததால், அவனிற்கு வந்தது.

தீபி அதனை பார்த்து “ஏன் எடுக்கல” என்றாள்.

ஈஸ்வர் “இப்போ அந்த கமலநாதன் இங்க வந்துகிட்டு இருக்கார்” என்றான்.

தீபி “ஐயோ… என்ன பண்ணீங்க, சொல்ல மாட்டீங்களா” என்றாள். வேதனையான குரலில்.

ஆனால் புவன் இப்போது இருக்கும் இலகுவான மனநிலையை பார்த்தால், பெரிதாக ஒன்றும் ஆகியிருக்காது என தோன்றியது தீபிக்கு.

ஆனால் காலையில் அவனின் செயல்களை பார்க்கும் போது ஏதோ… பூதாகரமாக தெரிந்த விஷயம், அவன் தன் அருகில்… தன் கேள்விக்கு கோவபடாமல் பதில் சொல்லும் போது… அவளின் மனம் கொஞ்சம் நிம்மதியை கொண்டது. என் புவன் பெரிதாக ஏதும் செய்யமாட்டான் என நம்பியது.

இது தீபியின் நேசம் கொண்ட மனதின் சாயல் போல, தனக்கு பிடித்தவர்கள் தவறே செய்தாலும் சிலசமயம் பெரிதாக தெரியாது போல…

ஈஸ்வர்க்கு அதற்கு மேல் அவளை சோதிக்கும் எண்ணமெல்லாம் இல்லை போல, விளையாட்டான குரலில் “ஒன்னும் இல்ல டா, அந்த தருண நம்ம கஸ்டடில வைச்சிருக்கு” என்றான் அதிராமல்.

தீபிக்கு அவனின் குரலும் அவனின் பாவமும் ஒன்றும் பெரிதாக இல்லை என்ற பிம்பத்தைதான் தந்தது தீபியிடம். லேசாக சிரிக்க கூட முடிந்தது அவளால் “அவன் ஏன்” என்றாள் பொறுமையான குரலில்.

ஈஸ்வர் இந்த அமைதியை எதிர்பார்க்கவில்லை அவளிடம், இந்த பதிலை காலையில் நான் சொல்லியிருந்தால், தீபியின் நிலை என்னவாக இருக்கும் என உணர்ந்தவனாக, சாவகாசமாக வந்து தனிமையில் அவளை சீண்டியபடி சொல்லவும்… அவளிற்கு அது தெரியவில்லை என உணர்ந்தான். ஆனால் அவனிற்கு நன்கு தெரியும் தான் செய்யும் செயலில் வீரியம்.

எனவே, மேற்கொண்டு எதையும் சொல்லவில்லை. “என்கிட்டே எதுவும் கேட்க கூடாது. அப்புறம் ஏதாவது சொல்லிட போறேன்…. “ என சுருதி ஏற்றினான்.

பின் தானே தணிந்து “போதுமா, வேற ஒன்னும் பண்ணல அவர” என சற்று நிறுத்தி அவளின் கைகளை பற்றி தனது கைகளுக்குள் கோர்த்துக் கொண்டு

“தோ இப்போ கிளம்பிட்டாராம்… வந்துட்டே இருக்காரு, நேரா இங்கதான்… வராரு,

காலையில பேசிக்கலாம், அனேகமா, உங்க அப்பாவோட அட்வகேட் வருவாரு, மற்றபடி யாரும் தேவையில்லை… நம்ம பேசிக்கலாம்” என்றான். எங்கோ பார்த்தபடி யோசனையுடன் சொல்லிக் கொண்டிருந்தான்.

தீபி அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள், ஏனோ அவளை பொறுத்தவரை இது பெரிதாக தெரியவில்லை… இப்போது புவனின் கதகதப்பான நேச வலை, கண்ணுக்கு தெரியாமல் அவளை காத்து தன்னருகே வைத்து கொண்டது.

தீபிக்கு வேறு கேட்கவோ பேசவோ தோன்றவில்லை, அவனருகில் அமைதியாக உறங்கி போனாள். ஆனால் ஈஸ்வர் அவளை தன் நெஞ்சி தாங்கியபடி விழித்தே இருந்தான்… இப்ப்போது தீபியின் நேசத்திற்கு அவனும் சத்தமில்லாமல் மண்டியிட்டிருந்தான்…. எனவே நாளைய பேச்சு வார்த்தையில், எங்கும் காயம் வந்துவிட கூடாதே என்பதே இவனின் இப்போதைய சிந்தனை…

நேற்று காலைதான், அவனிற்கு தோன்றியது தருண் பற்றி… இரவு, ஏழு மணிக்குத்தான் அந்த எண்ணம் நிலை பெற, அதனை திடமாக செய்தான் ஈஸ்வர்.

எங்கும் தட்ட முடியவில்லை கமலநாதனை. எல்லா இடத்திலும் ஆட்கள். எனவே ஈஷ்வருக்கு இரண்டு நாளாக என்ன செய்வது என்றே தெரியவில்லை.

கமலநாதனின் மற்ற இரண்டு பிள்ளைகளை நெருங்கவே முடியவில்லை. மேலும் அவர்களை நெருங்கினால், விஷயம் வெளியே வந்துவிடும் எனும் எண்ணம் ஈஸ்வர்கு.

இந்த விஷயம் வெளியே வந்தால்… எல்லோராலும் பேசப்படும், அது ஈஸ்வர்க்கு பிடிக்கவில்லை. மற்ற படி கோழிபண்ணை, கல்வி சாம்ராஜ்ஜியம் எதை தொட்டாலும் அதன் இழப்பு பணம் மட்டுமே, அது கமலநாதனை சாய்க்காது.

எனவே அவரை பழி தீர்க்க நினைக்கவில்லை, அவரை தன் வழிக்கு சேர்க்க நினைத்தான் அவ்வளவே.

எங்கெங்கோ சுற்றி தருண் என்ற இடத்தில் நின்றான் ஈஸ்வர். அவர்களின் பெற்றோர்க்கு ஒரே பிள்ளை, இவரை நம்பி வீண் போன குடும்பம். இப்போது இவர் மேல் கடுப்பில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என எல்லாம் அந்த ஆறு மணி நேரத்தில் விசாரித்து தெரிந்து கொண்டான் ஈஸ்வர்.

அதனால் தருணை தன் ஆட்கள் கொண்டு தூக்கிவிட்டான் ஈஸ்வர். ஈஸ்வர்கு கமலனாதனிடம் பேசும் எண்ணம் இல்லவே இல்லை. ஏனோ அவனிற்கு பிடிக்கவில்லை.

தான் அவரிடமிருந்து அவரின் பேத்தியை பிரிக்க நினைக்கவில்லை. அதனால்தான் அன்று கூட அவரின் எண்ணம் அறிந்து வர்ணாவை அவரின் கையில் கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டான்.

ஆக அவன் அவரை தள்ளி வைக்கவோ, உரிமை கொண்டாட கூடாது என நினைக்கவில்லை. ஆனால் ஏனோ கமலநாதன் தீபியிடம் தினமும் போனில் பேசுவது அவளை வார்த்தைகாளால் வதைப்பதும் ஒரு கணவனாக பொருக்க முடியவில்லை அவனால்.

மேலும் என்ன காரணத்திற்காக அவர் தங்களின் எல்லா வேலைகளையும் நிறுத்தி வைத்திருக்கிறார் என தெரியவில்லை. அவராக முன் வந்து பேசவும் விழையவில்லை… எனவே முடிவு வேண்டுமாக இருந்தது அவனிற்கு.

எப்படி யோசித்தும் இப்போதைக்கு இது முடிவதாகவோ, ஒரு தீர்வு வருவதாகவோ தெரியவில்லை… இன்னும் இரண்டு மாதத்தில் வர்ணாவை ஸ்கூலில் சேர்க்க வேண்டும்…. அப்போது நான் தடுமாற கூடாது என எண்ணினான்.

இப்போது எண்ணம் முழுவதும் வர்ணாவிடம், நல்ல தந்தையாக மகளை நினைத்ததும் முகம் அமைதியை கொண்டது. தீபியின் தலையை சற்று தனது கையிலிருந்து இடமாற்றி விட்டு, எழுந்து கட்டிலில் உறங்கும் வர்ணாவிடம் சென்றான்… அலைந்து, திரிந்து, கலைத்து நன்றாக அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள் அவனின் மான்குட்டி, அவளின் சற்றே வளர்ந்த முடிகள், அவளின் காது கன்னம் மறைத்து இருக்க, அதனை விளக்கியவன்.. நெற்றியில் முத்த்ம் வைத்து, அவளின் தூங்கும் அழகை ரசித்தபடி அமர்ந்திருந்தான்… “யார் சொல்லுவது எனக்கு, என் மான்குட்டி இல்லையென, எனக்கு என் மனதை சொல்லிய தேவதை இவள்… இவ்வளோ உயிப்புடனான வாழ்வை தந்தவள் இவள்… அவளை யாரும் எனக்கு தர முடியாது, என்னுடையவள்… “என்னோட பாப்பாதானேடா… நீயி” என தன்னிலை மறந்து பிதற்ற தொடங்கினான்… இரண்டு முறை… முன்று…

இப்போது அவன் தன்னை கீழே விடும் போதே, சற்று தூக்கம் கலைந்த தீபி, இப்போது சத்தம் வரவும்… கண் திறந்து பார்க்க… கட்டிலில் அமர்ந்து ஏதோ வர்ணாவிடம் பேசுவது போல் நிழலாட, மெல்ல சத்தமில்லாமல் எழுந்தாள் தீபி.

ஈஷ்வரின் அருகில் செல்ல, அமைதியாக வர்ணாவின் தலை கோதி அமர்ந்திருந்தந்தான் ஈஸ்வர். அவனின் தோள் தொட, கொஞ்சம் சுதாரித்தவன்…  தீபி புறம் திரும்பி “வா, டிஸ்டர்ப் பண்ணிட்டனா” என்றான்.

தீபிக்கு இவனின் நிலை தொண்டையடைக்க செய்ய “ஏன் புவன்… எப்படி இவ்வளோ அன்பு அவ மேல, புரியல புவன்…” என்றாள்.

ஈஸ்வர் “ஏன், என் ரத்தம் இல்லைன்னு கேட்குறியா…” என்றான்.

தீபிக்கு கண்கள் கரித்தது, ஆனாலும் அமைதியாக நின்றாள்… “பெருசா காரணமெல்லாம் இல்லை தீபி, இவ உன் பொண்ணு தானேடா….” என்றான் ஆழ்ந்த குரலில்.

ஒரு பேரு மூச்சு விட்டவாறே, நன்றாக சாய்ந்து கட்டிலில் அமர்ந்து தீபியை அருகில் அமர்த்திக் கொண்டான் “அன்னிக்கு உன்ன உங்க ரேசொர்ட்ல பார்த்துட்டு வந்து ‘வேண்டாம் நீ எனக்கு’ என்ற முடிவில்தான் இருந்தேன். அப்போ சுத்தமா உன்ன அடையாளம் தெரியல எனக்கு.

மறுநாள், வர்ணாவையும் உன்னையும் சேர்த்து பார்த்தேன்… அந்த மாலில், அப்போ வர்ணாவின் சாயல் எனக்கு உன்னதான் நியபாகபடுத்திச்சி.

உனக்கு இப்படி ஒரு குட்டி பொண்ணு இருக்கும்னு தோணவேயில்ல, ஆசையா வர்ணாவை பார்க்க தொடங்கினேன் அந்த நிமிடம்.

எனக்கே என் நிலை புதுசு, எனக்கு ஒரு பெண்ணின் நினைவு இருக்கும் என்பதே அத்தனை நாள் தெரியலை எனக்கு…

மேலும் இரண்டுநாள் சாப்பாட்டை கூட அட்ஜஸ் செய்துக்க முடியாத உனக்கா இப்படி ஒரு நிலைன்னு ஒரு இரக்கம்தான் உன் மேல…

ம்… முதல்ல இரக்கம்தான் உன் மேல, சோ உன்ன தனியா விட முடியும்ன்னு அந்த நொடில இருந்து தோணல…

நீ கூட கேட்டியே… இரக்கமான்னு, அப்பவும் உண்மையதான் சொன்னேன், ஆனா இப்போ அப்படி இல்லைதானே நான் சொல்லு…” என்றான் அவளிடம்.

மீண்டும் அவனே “இப்போ சொல்லு உன்னால வர்ணாவ பிடிச்சுதா… இல்ல வர்ணாவால உன்னை பிடிச்சுதா…” என எல்லாம் சொல்லிவிட்ட இலகுவில் கேட்டான் ஈஸ்வர்.

 

   

Advertisement