Advertisement

பௌர்ணமி வர்ணம் – 19

இந்த ஒரு மாதத்தில் ஈஸ்வர் தீபியிடம் நெருங்கியிருந்தான். முழுமையாக அவளை நேசிக்க தொடங்கினான். இப்போதெல்லாம் அவளிடம் எந்த தயக்கமும் இருப்பதல்லை அவனிற்கு.

இப்போதும் அதே சத்தமான பேச்சுதான் அவனிடம், ஆனால் தீபிக்கு அதெல்லாம் இப்போது பெரிதாக தெரிவதில்லை போல, பழகிக் கொண்டாளா, நேசம் பழக வைத்ததா தெரியவில்லை. தீபியும் இயல்பாக ஏற்க தொடங்கினாள்.

தனது சின்ன சின்ன விஷயங்கள் தொடங்கி அனைத்தையும் பேசினாள். அவனை அதிகமாக உணர தொடங்கினாள். ஆனால் வாரத்தில் ஒரு நாலாவது சண்டையில்லாமல் இருக்காது இருவர்க்கும்.

ஆனால் மாலை ஒன்றுமே நடாவாதது போல் பேச்சு இருவர்க்குள்ளும் சுழலும்… அதை நிரம்ப ரசிப்பான் ஈஸ்வர்…  மேண்டுமென்றே “ஏண்டி காலையில் நீதான் சொன்ன… என் கூட வரமாட்டேன் அங்கெல்லாம், எனக்கு அம்மா வீட்டுக்கு போகனும்ம்னு சொன்ன” என்றான்

தீபியும் “என்ன செய்ய நான் சாதாரண மனுஷன கட்டியிருந்தா பராவாயில்ல, சிப்பாயதானே கட்டியிருக்கேன், அதுக்கு நேரா போகத்தானே தெரியும். அதுக்கு மனுஷங்கள தெரியாதே” என சலித்தபடி சொல்லுவாள். ஆனாலும் ஏதோ பூரித்து போவான் ஈஸ்வர்…

வர்ணாவை தனக்கு முழுவதுமாக தந்ததாக உணர்ந்தான் ஈஸ்வர். வர்ணா குறித்த அனைத்து முடிவுகளும் அவனுடையதே. எனவே அவனிற்கு அந்த பதிவு சான்றிதழ்கள் தேவையாக இருக்கவில்லை போலும்… முன்பு அதற்காக முயன்றவன் இப்போது அமைதியாக இருந்தான். அப்படியே சென்ற நிலையில்.

வினோவின் திருமண விழா நெருங்கியது. அதற்னாக அழைப்பிதழ் தருவதற்காக வினோவின் குடும்பம்… தீபியின் வீடு வந்திருந்தது. காலையிலேயே தீபி பரபரவென இருந்தாள். நேற்றே ஈஸ்வரிடம் சொல்லியிருந்தால்தான். ஆனால் ஏனோ மறந்துவிட்டான் ஈஸ்வர்.

ஈஸ்வர் ஹாலில் அமர்ந்தபடி “என்ன தீபா இவ்வளோ பரபரப்பா இருக்க… என்ன நாமக்கலில் இருந்து போன் வந்ததா… சொல்லு என்னாச்சு” என கேட்க.

தீபி உற்பட அனைவரும் முறைக்க தொடங்கினர்… இவர்களின் முறைப்பை பார்த்த ஈஸ்வர் வேறு ஏதோ போல என நினைத்தான். வர்ணா குளித்து வந்தவள் ஈஸ்வரிடம் அமர, வர்ணாவின் காதில் “என்ன டா குட்டிம்மா, நாமா எங்கையாவது போறோமா” என ரகசிய குரலில் கேட்க.. அது தனது மான்விழி கொண்டு அவனை பார்த்து “இல்லை என்பதாக தனது உதடு பிதுக்க…” பாவமாக நடப்பவற்றை வேடிக்கை பார்த்திருந்தான் ஈஸ்வர்.

ஆனந்தி “போய் குளிச்சுட்டு வாடா… சொல்லனுமா” என்றார்.

ஈஸ்வர் “ஆமாம் என்னான்னு சொல்லுங்க, அப்புறம் குளிக்கலாம்” என்றான்.

தீபி பிடித்துக் கொண்டாள் “நேற்றிலிருந்து எத்தனை தரம் சொல்லுவது… நம்ம சொல்றத காதில் வாங்கறதே இல்லை… வினோ வீட்டிலிருந்து வராங்க, பத்திரிகை வைக்க.. போங்க கிளம்புங்க“ என முனு முனுக்க…

ஈஸ்வர் “அவன் கல்யாணத்துக்கு அவன் பத்திரிகை வைக்க வரான், அதுக்கு நான் ஏன் குளிக்கணும், ஏன் குளிக்கலைன்னா பத்திரிகை தர மாட்டாங்களா…” என்றான் இடக்காக.

வர்ணாவை பார்த்து “நீ சொல்லுடா குடுக்க மாட்டாங்களா” என்றான் அங்குமிங்கும் சுற்றிய தீபியை பார்த்தபடி, வர்ணாவிடம் கண் சிமிட்டியபடி வாயளந்து கொண்டிருந்தான்.

தீபி இப்போது கொதிநிலை… “என்னமோ பண்ணுங்க, எனக்கும் நேரம் வராமயா போய்டும்… பார்த்துக்கிறேன்.” என்றவள்.

பாட்டியிடம் திரும்பி “பாட்டி, உங்க பேரனுக்கு இதெல்லாம் சொல்லி குடுக்கலையா, நல்லா பேச மட்டும்தான் கத்து கொடுத்தீங்களா” என பாட்டியிடம் எகிறிக் கொண்டிருந்தாள்.

பாட்டி இதெல்லாம் ரசித்தபடி “அதென்னாமோ… போன மூணு மாசம் முன்ன வர நல்லாத்தான் இருந்தான். இப்போ அவன் புள்ள கூட சேர்ந்து கெட்டு போயிட்டான்….

ம்… என் பேரன் இப்படியெல்லாம் வாய் பேசவே மாட்டான். எல்லாம் இப்போதான்..” என அவர் தன் பங்கிற்கு குற்ற பத்திரிகை வாசித்தார்.

இப்படியே சென்று கொண்டிருக்க… வாசலில் கார் சத்தம் கேட்கவும், எழுந்து சத்தம் போடாமல் மேலே சென்றான் ஈஸ்வர். எல்லோரும் வந்தவர்களை வரவேற்று… குடிக்க பானங்கள் தந்து உபசரிப்பதற்குள், குளித்து நீட்டாக வந்துவிட்டான் ஈஸ்வர்.

இரண்டு நாட்கள் முன்பே வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்ற அன்பு கட்டளையுடன் பத்திரிகை வைத்து அழைத்தனர் வினோ வீட்டினர். தீபியின் முக பொலிவே சொன்னது அவளின் நிலையை. முன்போல் கலகலப்பாக இருந்தாள்.

ஈஸ்வர் உள்ளே சென்றான். தீபியிடம் “டிபன் ரெடியா தீபா…” என்றான். அமைதியான குரல் முன்போல் ஆர்பாட்டம் இல்லை.

தீபி “ம்… “ என தலையாட்டினால், இருவரும் வந்து அனைவரையும் உண்ண அழைத்தனர். வினோ இவர்களின் நெருக்கத்தை உணர தொடங்கினான்.

இந்த மாற்றம் இவ்வளவு விரைவில் எதிர்பார்க்கவில்லை வினோ. பின்னாடி தனியே தீபியிடம் “என்ன தீபி, அப்படியே விழுந்துட்ட போல…. உன் மாமா சொல்தான் மாந்திரீகமா… என்ன சொன்னாலும் கேட்கற…. அவர் வாய திறக்கும் முன்ன தலைய எல்லா திக்குளையும் உருட்டுற..” என வார..

தீபி முறைத்தவாரே “பாக்கறேன் டா, இன்னும் ஒரே மாசம்…. இந்த தருதல எந்த பக்கமா தலைய ஆட்டுரான்னு, பார்க்கறேன்… பார்க்கத்தானே போறேன்” என அவளும் அதிராமல் சமாளிக்க…

வினோ “நாங்கல்லாம் மாம்ஸ் மாதிரி ஸ்ட்ராங்… இப்போ உன்ன தானே சுத்த வைக்கிறாரு, அதே வர்க்கம்தான் நாங்களும்” என மிதப்பாகவே சொன்னான்.

தீபி “பார்ப்போம் பார்ப்போம்…” என சிரித்தவள். “உட்கார் சாப்பிடலாம்… பர்ச்சேஸ் முடிஞ்சிதா…” என வேறு பேச தொடங்கினாள். இதையெல்லாம் ஈஸ்வர் பார்த்திருந்தான்… மற்றபடி பெரியவர்களுடந்தான் அவனின் பேச்சு இருந்தது.

காலை உணவு உண்டுதான் கிளம்பினர்.

போகும் போது வினோ, ஈஸ்வரிடம் “தேங்க்ஸ் பாஸ்…” என்றான். ஏன் என்று ஈஷ்வரும் கேட்கவில்லை, வினோவும் சொல்லவில்லை.. இருவரின் கண்களும் தீபிவை மொய்க்க தொடங்கியது. ஒன்று நட்பாகவும், மற்றது நேசமாகவும்.

எல்லாரும் கிளம்பி சென்ற நிலையில் ராமலிங்கம் “ஈஸ்வர்…. உனக்கும் ராமுக்கும் தனியாக கடையின் பொறுப்புகளை பிரித்து எழுதலாம்னு இருக்கேன். ராம் பார்த்து கொள்வது அப்படியே அவனின் பொறுப்பில் விடுகிறேன்…

இதுவரை நான் பார்த்தது… இனி நீதான் ப்பா பார்க்கணும்… உனக்கும் இப்போ எல்லாம் புரிய ஆர்ம்பிசிட்டுதேப்பா… எனக்கு திருப்தியா இருக்கு..” என சொல்லிக் கொண்டே சென்றார்.

நடுவிலேயே குறுக்கிட்ட ஈஸ்வர், தன் பாட்டியை ஒருதரம் பார்த்துவிட்டு… “அப்பா, எல்லாம் நான் பார்த்துக்கிறேன், நீங்க ரெஸ்ட் எடுங்க… இப்போ எதுக்கு பிரிச்சு எழுதற வேலையெல்லாம், விடுங்க அதுபாட்டுக்கு இருக்கட்டும் எப்போதும் போல்..” என்றான்.  

ராமலிங்கம் “அதில்ல டா… “ என தொடங்க.

ஈஸ்வர் “அப்பா நான் பார்த்துக்கிறேன்…. நீங்க அத பேசாதீங்க“ என்றான் குரலில் கடுமை ஏறியது. இது காலையில் வாயாடிய ஈஸ்வரா என பார்த்திருந்தனர் அனைவரும்.

அப்படியே கிளம்பிவிட்டான் கூடவே ஓடினாள் தீபி. எதுவுமே பேசாமல் அவளை ரேசொர்ட்டில் இறக்கிவிட்டான். தானும் கடைக்கு சென்றான். தீபியின் நேசம், அவனை மாற்றுவதற்கு பதில்… அப்படியே ஏற்க தொடங்கியது.

மாலை ஈஷ்வரின் அட்வகேட் அழைத்தார் “ஈஷ்வர் நீங்க கமலநாதன் கிட்ட பேசுங்க… நாங்க பேசினோம், அவர் எதுக்கும் ஒத்துவர மாதிரி தெரியலை. நீங்க சுமூகமா பேசுங்க… ஈஸ்வர்.” என்றார்.

அவனின் அட்வகேட், கமலனாதனிடம் பேசி பார்த்துவிட்டனர் ஈஷ்வரின் சார்பாக. ஈஸ்வர் சொல்லியாயிற்று வர்ணாவின் பெயரில் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் தந்து விடுகிறோம், எங்களுக்கு அது தேவையில்லை என எழுதியும் தருகிறோம் என சொல்லியாயிற்று.

ஆனாலும் கமலநாதன்…. கொடுத்த சொத்துகளை வாங்கினால் தனது பெயர் பாதிக்கும் என யோசிக்க தொடங்கினார். மேலும் இப்போது தருணின் பெற்றோர் வேறு “உன்னால்தான் என் பையனின் வாழ்க்கை கெட்டுது” என கமலநாதனை கேள்வி கேட்க தொடங்கினர்.

இப்போது கமலநாதன் என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்க தொடங்கினார். அதனால்தான் அடிக்கடி… தீபிக்கு போன் செய்து குறை சொல்ல தொடங்கினார்.

மேலும் தருண் இப்போது முற்றிலும் வேறு மனநிலையில் இருந்தான். இதுவரை கமல்நாதனுக்காக வேலை செய்து தன் சுயத்தை இழந்து, ஏதோ தீபிக்காக காத்து இருந்தான்.

இப்போது தீபியும் இல்லை… அவனிற்கென ஒரு அடையாளமும் இல்லாமல் போக…. தன்னை கொஞ்ச கொஞ்சமாக வெறுக்க தொடங்கினான்.

தன் அம்மா அப்பாவிடம் சண்டை, அடிக்கடி கமலநாதனிடமும் சண்டை… மேலும் எனக்கு உடனே கல்யாணம் செய்து வைங்க என நச்சரிக்க தொடங்கினான் தருன்பாண்டி.

இப்போது இதுதான் கமலநாதனின் பெரும் குழப்பம்… தருணிற்கு தொழில் என எதுவும் இல்லாமல்… அவனிற்கு பெண் பார்க்க முடியவில்லை. அப்படியே கிடைத்தாலும் , தருணின் பெற்றோர்… தங்களுக்கு இணையான இடமாக வேண்டும் என பிடிவாதம் பிடித்தனர்.

இப்படியே கமலநாதனின் கணக்கு தீபி விஷயத்தில் தப்பாய் போக, இப்போது இவருக்கதான் எல்லா… பிரச்சினையும். எனவே தனக்கு இல்லா நிம்மதி தீபிக்கும் இருக்க கூடாது என எண்ணினார் போலும்.

அதனால் தான் அவர்களின் திருமண சான்றிதழை நிறுத்தி வைத்தார் அதன் மூலம் வர்ணாவை, ஈஸ்வர் தத்தெடுக்கும் உரிமையையும் நிறுத்தி வைத்திருக்கிறார் இந்த இரண்டு மாதமாக..

அதனால் அட்வகேட் சொன்னதிலிருந்து ஈஸ்வர்க்கு யோசனைதான்… என்ன செய்வதென்னே தெரியவில்லை. அவரிடம், தான் சென்று பேசுவதற்கு விருப்பமில்லை ஈஸ்வர்க்கு. ஆனால் இதை தீர்த்தாக வேண்டும் என சிந்தனை அவனுள்.

அடுத்த இரண்டு நாட்கள் வேலையே ஓடவில்லை அவனிற்கு. அன்று இரவு தீபி கூட… கட்டிலில் அமர்ந்து, விட்டத்தை வெறித்திருந்த அவனிடம் “ஏன் புவன் என்னாச்சு…. ஏன், மாமா அன்னிக்கு சொன்னதிலிருந்து ஒரு மாதிரியா இருக்கீங்க..” என அவன் தலை கோதி ஆறுதலை கேட்க…

ஈஸ்வர்க்கு உதடு விரிந்தது, என்னுடை வாட்டம் அவளிற்கு தெரிகிறது. என எண்ணியே அந்த புன்னகை. வாஞ்சையாக “அதெல்லாம் இல்ல டா, இது வேற, ம்.. சொல்லு, என்ன, இன்னிக்கு உங்க ரேசொர்ட் புகழ்…” என எடுத்து கொடுத்தான்.    

தீபியின் உதடுகள் நிற்காமல் விவரிக்க தொடங்க… அலுத்தவனாக தன்னருகில் அமர்ந்திருந்த அவளை இழுத்து தன்மேல் சாய்க்க… இன்னும் திறந்த வாய் மூடாமல் தீபியும் எல்லாம் ஒப்புவிக்க, காண்டானவன்… “நிறுத்துடி…” என்றான்.

“கப் பென வாய்மூடி தீபி முறைப்பாய் அவனை அன்னார்ந்து பார்க்க…” மாலையில் தீட்டிய காஜல்… அவளின் விழி வழியே வழிய அத்துடன் சேர்ந்து அவளின் கோவமும் வழிய… மென்மையாய் அவளின் கண்களில் முத்தமிட தொடங்கினான். கண் மூக்கு கன்னம் என ஊர்ந்தவன்… இதழை நெருங்கியது முதல் தீவிரமாகவே அவளை பற்றிக்கொண்டான்.

#########################

அந்த வாரம் சென்று தீபிக்கு கமலநாதனிடமிருந்து போன் காலை வேளையிலேயே வந்தது இன்னும் அவள் வீட்டிலிருந்து கிளம்ப கூட இல்லை. எடுத்த உடன் “என்னம்மா, பண்றான் உன் புது புருஷன்…. ச்ச, அவன் வேலைய காட்டிட்டான்ல்ல… எப்படி எங்கிட்ட இருந்து என் பேத்திய வாங்குறீங்கன்னு பார்க்கிறேன்.” என்றார்.

தீபிக்கு இந்த வார்த்தைகள் அவளை நோகடிக்க, அவரே தொடர்ந்தார் “என்னை பொறுமையாக இருக்க விடல நீங்க, இனி நடக்க போற எல்லாத்துக்கும் உன் புருஷன்தான் பொறுப்பு…” என ஆவேசமாகவே பேசினார்.

தீபி ஒடுங்கி நின்றாள் அந்த வார்த்தையை கேட்டு… அந்த வழியே வந்த ஈஸ்வர் அவளை உலுக்க… திடுக்கிட்டு மீண்டவள்… ஒ வென பெரிதாக குரலெடுத்து கத்தினாள்… “என்னாச்சுங்க என்ன பண்ணீங்க… ஏதாவது கமலநாதன செய்துடீங்களா.. “ என அவனை உலுக்க..

ஈஸ்வர் அலட்சியத்துடன் “என்ன சொன்னார்… அத மட்டும் சொல்லு” என என்றான்.

அவனின் அலட்சியத்தில் தீபிக்கு அடி வயிறு கலங்கியது. ஆக புவன் ஏதோ செய்திருக்கிறான் என தோன்ற தனது எனர்ஜியெல்லாம் வடிய “என்ன செய்தீங்க” என்றாள்.

ஈஸ்வர் “சொல்லு என்ன சொன்னார் அவர். என்கிட்டே நேரில் பேச முடியாதவர் உன்னை கூப்பிட்டு மிரட்டுகிறாரா” என இவளிடம் எகிறி குதித்தான்.

தீபிக்கு இதை உடனே சித்தப்பாவிடம் சொல்ல வேண்டும் என தோன்ற… கதிரேசனுக்கு அழைக்க தொடங்கினாள். அந்த போனை பிடுங்கி கட்டிலில் எறிந்தவன்…. “கொஞ்ச நேரம் அமைதியா இரு” என அவளை அமர வைத்தான்.

கோவம்தான் வந்தது தீபிக்கு. “அந்த மனித அப்படி கத்தும் அளவுக்கு இவர் என்ன செய்தார்” என தெரியலையே, மேலும் வேறு ஏதேனும் விபரீதமாக நடந்து விடுமோ என்ற அச்சமும் எழ…

தீபியின் நிலை அச்சம் அச்சம் மட்டுமே அவளின் விழிகளில். அப்படியே அம்ர்ந்தபடி இருந்தாள்.

ஈஸ்வர்க்கு இதை பார்க்க முடியவில்லைதான் ஆனால் தான் செய்ததை அவளிடம் சொல்லவும் மனம் வரவில்லை. அவளின் போனை எடுத்து, தனக்கு கால் டைவேர்ட் போட்டுக் கொண்டு, அவளிடம் “இன்னிக்கு வெளியே எங்கயும் போகாதே” என்றவன். கிளம்பி கீழே சென்றுவிட்டான்.

அவனின் பின்னாடியே கீழிறங்கி சென்றாள் தீபி. அங்கு அப்போதுதான் ராமலிங்கம் காபி குடித்துக் கொண்டிருக்கவும் “மாமா, எனக்கு இப்போ நாமக்கலில் இருந்து போன் வந்தது… இப்போ அவங்க மிரட்டுறாங்க மாமா, இவர் ஏதோ செய்துட்டார்ன்னு சொல்றாங்க மாமா… இனி நடக்குறதுக்கு இவர்தான் பொறுப்புன்னு சொல்றாங்க… எனக்கு எதுவுமே புரியல“ என சொல்லியபடியே அங்கிருந்த சோபாவில் அமரந்தாள்.

இதையெல்லாம் கேட்பதற்கு அங்கு ஈஸ்வர் நின்றிருந்தால் தானே, அவனோ சென்றுவிட்டான். தீபி இப்போதுதான் முழுவதுமாக சொன்னாள் ராமலிங்கத்திடம். தன்னை தினந்தோறும் கமலநாதன் அழைத்து பேசுவதும், வர்ணாவை கேட்பதும் சொன்னாள்..

கேட்டிருந்த அனைவருக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பாட்டிக்கு, மனதே விட்டு போனது. அன்று நடேசன் சொன்ன போது கூட… அப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள் என ஏதோ ஒரு மூலையில் எண்ணியிருந்தார்.

ஆனால் இப்படி தன் நிலையிழந்து, ஒரு பெண்ணின் வாழ்வில் குழப்பம் செய்வார் என சற்றும் எதிர்பார்க்கவில்லை அவர். என்ன ஒரு குரூர மனம், எப்படியேனும் நடத்திக் கொள்ளலாம் எனும் மனம்.

வர்ணாவின் பெயரில் இருக்கும் சொத்துகள் யாவையும் கூட கொடுத்து விடவேண்டும். தீபியை மீறிய உரிமை எப்படி கமலநாதனுக்கு வரும். என உள்ளே கனன்று கொண்டிருந்தார்.

எனவே கமலநாதனுக்கு, தன் பேரன் என்ன தொந்தரவு செய்தாலும் தகும் என அவரின் மனம் நினைக்க தொடங்கியது.    

இப்படி அனைவரும் தங்கள் யோசனையில் இருந்தனர். ராமலிங்கம் ஈஸ்வரை போனில் அழைக்க.. எடுத்தவன் “இன்னும் ஒன்னவர்ல வரேன்ப்பா” என்றவன் வைத்து விட்டான்.

அதற்குள் தீபி தன் சித்தப்பாவிடம் அனைத்தையும் சொன்னாள்… இப்படியே நடேசன் வரை விஷயம் சென்றது. ஆனாலும் என்ன நடந்தது என இதுவரை இவர்களுக்கு தெரியவில்லை.

 

 

  

Advertisement