Advertisement

பௌர்ணமி வர்ணம் – 18

இப்படியே ஒரு வாரம்… கடந்தது. இரவு தீபியும் ஈஷ்வரின் வரவை எதிர்பாக்க தொடங்கினாள். ஈஷ்வரும் அதற்கு தக்க பல கதைகள் வைத்திருந்தான்.

இப்போது அந்த பெரிய ஷெல்பில் இருந்த ஒவ்வரு புகைபடத்திற்கும் ஒரு விளக்கம் வைத்திருந்தான். அங்கு அந்த செர்டிபிகேட் இருக்கும் ப்பயிலை காட்டி தீபி ஏதோ கேட்க…

அப்போதுதான் இவர்களின் சந்திப்பும் நினைவு வந்தது இருவருக்கும். தீபி இப்போது அவனை “என்னை உனக்கு முன்பு தெரியும் தானே” என்ற பார்வை பார்க்க… அழகாக பதிலே சொல்லாமல் வேறு பேசினான் ஈஸ்வர்.

ஈஸ்வர் “அப்பொல்லாம்.. நீ சின்ன பெண்ணா வர்ணா மாதிரி, இங்கயும் அங்கயும் ஓடிக்கிட்டு, யார் கூட சண்டை போடலான்ற மாதிரி ஒரு பார்வை.. அப்படிதான் உன்னை எனக்கு தெரியும் அன்னிக்கு கூட நீயும் வினோவும்…

ஏதோ சாப்பாடு சரியில்லைன்னு அந்த ஸ்கூல் சமையல் செய்றவங்ககிட்ட ஒரே சத்தம்…  வந்த இடத்தில் ப்ரைடு பண்ணோமா இருந்தோமான்னு இல்லாமா… எப்போதும் சத்தம்தான் நீ.

அன்னிக்கும் பாவமா உன் கூட நிறைய பிரிண்டுஸ், நீ மட்டும் கத்திகிட்டு இருந்த, உன்ன எல்லோரும் சேர்ந்து ஏதோ பெரிய வீரங்களைய புடிக்கிற மாதிரி பிடிச்சிருந்தாங்க, இத்துன்னுண்டு புள்ளைய எல்லோருமா  பிடிச்சிருந்தாங்க…. எனக்கு அப்போ செம கோவம் ஓங்கி ஒரே அப்பு விட்டு, “போடி போயி சாப்பிடு“ அப்படின்னு சொல்லனும்ன்னு அப்படி ஒரு எண்ணம்.

ஆனால் நீ எல்லோரையும் பார்த்துட்டு பார்த்துட்டு, நம்மள பார்க்குராங்கலான்னு பார்த்துட்டு அந்த சமையல்காரர்கிட்ட சண்டை. எவ்வளோ தைரியம், இத்துனுன்டு இருந்துகிட்டு அவ்வளோ பெரிய ஆளுக்கிட்ட சண்டை.

ப்பா, அன்னிக்கு போன சமையல்காரன் தான், எங்க இருக்காருன்னானே தெரியல, அதுக்கப்புறம் அந்த ஸ்கூல்லோட மாஸ்டர்தான் சமைக்க வேண்டியதா போச்சு… வினோ பாவம்… உன்ன வைச்சிகிட்டு ரொம்ப கஷ்ட்டபட்டான் அந்த கேம்ப்ல… “ என இப்போது நடந்து போல் பொறுமையான குரலில்… அவளை முடிந்த வரை தன் வார்த்தைகளால் கிண்டல் செய்து சிரிக்காமல் சொல்லிக் கொண்டிருந்தான் ஈஸ்வர்.

தீபிக்கு இப்போது இதை கேட்கும் போது வெட்கமாக ஆனது. நானா அப்படி எல்லாம் செய்தேன்… என தன் லீலைகளையே ஈஸ்வர் சொல்ல கேட்கும் போது சிரிப்பாக வந்தது. அவனை நிமிர்ந்து பார்க்கவேயில்லை.

மேலும் எவ்வளவு வருடங்கள் ஆகிறது இன்னும் மறக்கவில்லையா அதை… அப்போதெல்லாம் முறைச்சுக்கிட்டே இருப்பான். அவனால் கவனிக்க பட்டிருக்கிரேன் நான் என புது சந்தோஷம் முளை விட தொடங்கியது அவளுள்.

இப்படியே தினம் பேசினான் ஈஸ்வர். அதிகமாக பேசவில்லை… சின்ன சின்ன நினைவுகள், அதில் அவள் இல்லாமல் இருப்பதில்லை. ஆனால் அது பெரிதாக அவளை மட்டுமே முதன்மைபடுத்தவும் இல்லை.  

கமலநாதன் தொடந்து தீபியிடம் பேச தொடங்கினார்.  தினம் தினம் ஒரு குத்தல்… உனது புது வாழ்க்கை, நீ உன் பெண்ணை தனியே விட்டு விட்டாய் என இதையே வேறு வேறு வார்த்தைகளால் சொன்னார்.

தீபி என்ன முயன்றும் அவரிடம் கடுமையாக பேச முடியவில்லை. அவர் பேசி முடித்த சில நிமிடங்கள் அவளின் மனம் வருந்த தொடங்கிவிடும். ஆனால் இந்த செய்தியை யாரிடமும் சொல்லவில்லை அவள்.

இன்று வர்ணா நேரத்திலேயே எழுந்து கொண்டாள்… ஈஷ்வரும் அப்போதுதான் ஜாக்கிங் முடித்து வந்தவன் கையில் கஞ்சி டம்பளருடன்  அமர்ந்தான்.

வர்ணா “பூவன்… நீ நிறைய பூஸ்ட் குடிச்சியா… இப்படி ஹைட்டா இக்க” என கேட்ட படியே பூஸ்ட்டை, தீபியிடம் குடித்தபடி… ஈஸ்வரிடம் கேட்டுக் கொண்டிருந்தாள் மான்குட்டி.

தீபி சிரித்தபடியே அமர்ந்திருந்தாள்… ஈஸ்வர் “அய்ய… பூஸ்ட்டெல்லாம் யார் குடிப்பா… எனக்கு எங்க பாட்டி, சத்துமாவு கஞ்சிதான் கொடுப்பாங்க… நான் குட்டா குடிச்சிடுவேன்.. நீதான் பேட் பாப்பா… பூஸ்ட் குடிக்கிற, குட் பாப்பா எல்லாம் கஞ்சிதான் குடிப்பாங்க” என அவளை வம்பிழுத்தான்.

கார்த்தி பாட்டி பூஜை முடித்து வந்து வர்ணாவிற்கு திருநீறு வைத்தவர் அமர்ந்தபடியே “ஆமாம் நீயும் கஞ்சி குடி, பூவன் மாறி பெருசா ஆகிடுவ” என்றார்.

வர்ணா வாயில் வைத்திருந்த பூஸ்ட் கப்பை எடுத்து விட்டு அவன் குடித்துக் கொண்டிருந்த கஞ்சியை பார்த்து “எங்க நானு, டேஸ்த் பண்ணி பார்க்கன்..” என அவனிடம் ஓட…

தீபி சிரித்தபடியே உள்ளே சென்றாள். ஈஷ்வரும் வர்ணாக்கு தானே தன் கஞ்சியை கொடுக்க, முழுவதும் குடித்துவிட்டாள் வர்ணா.

தலை கொள்ள முடியுடன் “ம்மா… நான் ஸ்டாங்… ஆகிட்டேன்” என நிற்காமல் குதித்தாள்.

அவளை அலேக்காக தன் தலைக்கு மேல் தூக்கி கொண்டான் ஈஸ்வர்… “நான்தான் ஸ்ட்ரோங் “ என அவன் சொல்ல… வர்ணா “உன்ன வித நான்தா பெருசு…” என சொல்ல, உடனே அவளை கீழே இறக்கிவிட்டான்… “இப்போ நீ பாப்பா” என சொல்ல.

அவன் அப்படி சொல்லவும் அவன் முழங்காலில் தன் பிஞ்சி விரல்களை மடக்கி, சித்தார் செய்வது போல்… “சிங்கம்… லிட்டில் சிங்கம்…” என சொல்லியபடியே அவனை குத்த…

ஈஷ்வரும் “பாட்டி இவ என்ன அடிக்கிறா” என தன் பாட்டியிடம் சொல்லி, பாட்டியிடம் அமர்ந்து கொள்ள,

வர்ணா “பாட்டி, நான் லிட்டில் சிங்கம்….பூவன, விடு பாட்டி” என சொல்ல… விளையாட்டு தொடர்ந்தது.  

தீபி இதையெல்லாம் காதில் வாங்கியபடியே தனது காலை பானத்தை பருகிக் கொண்டிருந்தாள். உள்ளுக்குள் கொஞ்சம் நெருடல்… வர்ணாக்கு அவனை அப்பான்னு சொல்லி கொடுக்கவில்லையே…

கூடவே இந்த ஒரு வாரமாக கமலநாதன் சொல்லும் நீ என் பேத்தியை விட்டுட்ட, அவ ஏன் யாரையோ அப்பா கூப்பிடனும் எனும் வார்த்தைகளும் சேர்ந்து கொள்ள… இன்னும் நெருட தொடங்கியது.

திருமணம் செய்யும் முன்பே… பாபாக்காக எனதானே தன்னை திருமணமே செய்து கொண்டான். இப்போதா எல்லாம் அவனிற்கு அவள்தான். எவ்வளோ அக்கறை, எவ்வளவு ஆசை என ஈஸ்வரை பார்த்தபடியே இருந்தாள்.

நிறைய எனக்காகவும் வர்ணாக்காவும் மாத்திக்கிறான். நேற்று இரவும் அமைதியாகத்தானே பேசினான் ரொம்ப கஷ்ட்டபடுறான்… அவனை கட்டுபடுத்திக் கொண்டுதான் என்னிடம் பேசுகிறான். இது அவன் இயல்பே இல்லை… ஏதோ மாதிரிதான் இருக்கு…

ஆனால் என்னாலும் அவனின் சத்தத்தை தாங்க முடியலையே… பரவாயில்ல கொஞ்சம் பழக்கட்டும்…. பார்க்கலாம் எப்படி கண்டினியூ பண்றான்னு பார்க்கலாம் என தீபி சிந்தனையில் இருக்க.

இப்போது வர்ணா “ம்மா… நான் பூவன் கூட டாடா போறேன்” என மலர் செண்டாய் வந்து அவள் மேல் மோதிய வண்ணம் சொன்னாள்.

தீபி ஈஸ்வரை “அப்படியா”“ என நிமிர்ந்து பார்க்க… ஏனோ அந்த பார்வை அவனை ஈர்க்க.. அவளின் கையிலிருந்த கப்பை வாங்கி, அந்த காபியை ஒரு சிப் செய்தவன் “ம்….” என கண்களை மூடி திறந்தவன் அவளை ரசனையாக பார்த்து… “நீயும் வாயேன்… காளிகாம்பாள் கோவிலுக்கு போயிட்டு வரலாம்” என்றான் திண்ணமாக.

தீபிக்கு புரிகிறது அவனின் நிலை…. தன்னுடன் நேரம் செலவழிக்க விழைகிறான் என தெரிகிறது… மறுக்க முடியவில்லை… “ம்… சரி“ என்றாள்.

வர்ணா முழங்கால் வரையான நீல நிற பிராக், ஈஸ்வரும் அதே ப்ளூ ஷர்ட்டில் அவளை தூக்கியபடி இறங்கி வந்தான்… சற்று நேரம் கழித்து மஞ்சளும் க்ரே நிறமும் கலந்த போச்சம்பள்ளி பட்டில் வர ஈஸ்வர் இரண்டு நிமிடம் கண்ணெடுக்காமல் பார்க்கத்தான் செய்தான். அதில் தீபி சற்று தடுமாறியே நின்றாள்.

மூவரும் அந்த காலை நேரத்தில் கிளம்பினர்.ட்ராபிக் அவ்வளாவாக இல்லாத நேரம் எனவே விரைவாகவே வந்து சேர்ந்தனர்.. கடைவீதியில் உள்ள, பரபரப்பான சாலையில்… நான் இங்குதான் இருப்பேன் என அமர்ந்த  காளியவள்.

அமைதியை எதிபார்க்க கூடாது. கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டம்.. வெளியே எல்லாம் ஆட்டோ பஸ் மாடு மனிதர்கள் என சத்தம்தான்.  

கருவறையை நெருங்கி உள்ளே செல்லும் போது… அப்படி ஒரு பரவசம் ஈஸ்வர் முகத்தில்… அந்த இடமே தாழம்பூ குங்கும வாசம்…. கூடவே காளியின் அருளும் வெட்பமாக… அது ஒரு தெய்வீக சூழல்.

அங்க போயி காளியின் முன்பு நின்றால் “இது வரை எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என வேண்டுதலுடன் செல்வோம்… ஆனால் அங்கு சென்று அவளின் முகம் பார்க்க… அதில் தெரியும் ‘நீ என்ன கேட்பது நான் கொடுப்பேன் உனக்கு எல்லாம்’ ” என சொல்லும்படி ஒரு ஆளுமையான சாந்த ரூபம்…

அதனால்தானோ என்னனோவோ மராட்டிய மன்னன் சிவாஜி இந்த தளத்திற்கு வந்து போன பின்னால்தான் சத்ரபதி சிவாஜி என முடி சூட்டிக் கொண்டாராம். பாரதியின் யாதுமாகி நின்றாய் காளியும் இவளேதான்.

இப்படி நிறைய கதைகள் சொன்னான் தீபிக்கு, ஈஸ்வர்… வர்ணாவை கையில் தூக்கியபடி, அந்த சன்னதியை பனிரெண்டுமுறை வளம் வந்தான். தீபிக்கு புதிதாக இருந்தது அவனின் செயல்கள்.. அவனை பார்த்தபடியே…  அவனுடன் கதைகளை கேட்டபடி வலம்வந்தாள்.

அமைதியாக வீடு வந்தனர். தீபி எல்லோருக்கும் பிரசாதம் கொடுத்துவிட்டு மேலே சென்றாள் வர்ணாவை தூக்கியபடி. ஆனந்தி “அப்படியே சாப்பிட்டு போடம்மா..” என சொல்ல

தீபி “வரேன் அத்த.. பத்து நிமிஷம்” என சொல்லியபடியே மேலே சென்றாள். வர்ணாக்கு நார்மேல் டிரஸ் அணிவித்து தான் அதே சாரியை சரி செய்து கதவை திறக்க, ஈஸ்வர் தட்டவும் சரியாக இருந்தது.

ஒரு சுமூகமான சிரிப்பு இருவரிடமும் வர்ணா ஈஸ்வரை பார்த்து தூக்கு எனும் விதமாக “பூவன் தூக்கி.. “ என கையை தூக்க… இத்தனை நேரம் இருந்த யோசனை தீபியிடம் வெளிப்பட்டது.

தீபி “அப்பா சொல்லுடா” என வேகமாக ஆரம்பித்தவள்… முடிக்கும் போது மெதுவாக முடித்தாள்.

ஈஸ்வர் வர்ணாவை தூக்கியபடி இவளை விழி எடுக்காமல் பார்த்தவன்… அவளை இடையோடு வளைத்தவன் தன் பாதத்தால் அவள் பாத விரல்களை முட்ட, அவன் என்ன செய்தான்… நான் என்ன செய்கிறேன் என தெரியாமல்… அவன் பாதத்தில் தன் மலர் பாதம் வைக்க, ஒரு கையில் வர்ணாவுடன் இவளை பாதத்தில் வைத்தபடி அறையின் உள்ளே வந்தான் ஈஸ்வர்.

தீபிக்கு இவனை பார்க்கவே முடியவில்லை… வெட்கம் வந்தது… ஈஸ்வர்,  பற்றியிருந்த அவளின் இடுப்பை அழுத்த, தன்போல் நிமிர்ந்தாள் தீபி.   

ஈஸ்வர் “நா… நானா தேங்க்ஸ் தீபா..” என்றான் குரல் கர கரத்த இல்லை கண்ணா என தெரியாமல்.

தீபி வர்ணாவை கண்காட்ட, ஈஸ்வர் போனை நொண்டிக் கொண்டிருந்த வர்ணாவின் உச்சியில் முத்தம் வைத்தான்.

வர்ணா “ப்பூ..” என ஆரம்பிக்க, தீபி இன்னும் அழுத்தமாக “அம்மு அப்பா சொல்லுங்க “ என சொல்லிதர. ஈஷ்வரின் பிடி தீபியிடம் இறுகிக் கொண்டே சென்றது.

வர்ணாவும் தனது தேன் குரலால் “அப்பா… இரக்கி விடுப்பா” என சாதரணாமாக சொல்ல ஈஸ்வருக்குதான் சித்தம் பூரித்தது. மீண்டும் ஒரு முறை உச்சி முத்தம் வைத்தான். தன் தோளில் சாய்த்துக் கொண்டான். தீபி விலகி நின்று இதனை பார்க்க…

வர்ணாவை இரக்கி விட்டவன் தீபியை அப்படியே சேர்த்தனைத்தான். தீபிதான் திக்குமுக்காடிப்போனாள். வர்ணா கீழே சென்றாள் போனுடன்.

அனைத்தபடியே… அவளை நெஞ்சி சாய்த்தபடி “நம்பிக்கை வந்திடுச்சா “ என்றான்.

தீபி “நம்பிக்கை இல்லாமல்தான் கல்யாண செய்துகிட்டேனா… இது ஏதோ… எப்படி சொல்றது தெரியலையே… ஏதோ சின்ன தயக்கம்… அவ்வளவுதான்” என்றவள் அவன் முகத்தை ஏதோ போல் பார்க்க.

ஈஸ்வர் புரிந்தவனாக “என்ன “ என புருவம் உயர்த்தி கேட்க..

தீபி அவனை விட்டு தள்ளி சென்றபடி “அடு… இரண்டாவது குழந்தை பிறந்த ப்.. பிறகு, நீங்க வர்ணாவ ஒ..” என முடிக்காமல் நிறுத்தினாள்.

ஈஸ்வர் அமைதியாக “உன் மனசுல எப்படி தோனுது” என்றான் வெறுமையான குரலில்.

அந்த குரலே தீபியை ஏதோ செய்ய “இல்ல புவன்… அப்படி இல்ல “ என அவனின் அருகில் வர.

ஈஸ்வர் திரும்பி நின்றபடி “இதுக்கு நீ பேசாமையே இருந்திருக்கலாம்” என்றவன் வெளியே செல்ல போக தீபி அவன் கையை பிடித்தாள்.

ஈஸ்வர் “விடுடி… என்ன டி செய்ய… என்ன செய்யனும்.. விடு” என திமிர.

தீபி “அப்படியில்ல புவன் கொஞ்சம் ப்ளீஸ் “ என கெஞ்ச தொடங்கினாள். ஈஸ்வர் இன்னும் விலக… தீபி “உங்க வாயால ஒரு தரம் சொல்லுங்க… உங்களை எனக்கு தெரியும், புரியும்… அதெல்லாம் சரிதான்..

ஆனா, நீங்களா என்கிட்ட ஏதாவது கேட்டீங்களா, சொன்னீங்களா… என்னை பத்தி நினைக்கவே மாட்டீங்களா… நான் எதை நம்புவது, யாரை நம்புவது.

கல்யாணத்துக்கு கூட நீங்க என்னிடம் சம்மதம் கேட்கவில்லை, எனக்கும் ஏதோ குருட்டு நம்பிக்கை. ஆனா இப்போ இவ வர்ணா… ஏதாவது நீங்க சொல்ல மாட்டீங்களா, எப்படி சொல்றது..

எனக்கு தெரியுது, ஆனா ஏனோ உங்ககிட்ட எதிர்பார்க்கிறேன்..” என எல்லா குழப்பத்தையும் அவன் தலையில் போட்டு உருட்டினாள்.

ஈஸ்வர்க்கு இந்த வழிமுறைகள் எல்லாம் புரியவில்லை. கணக்கு தெரியாத, lkg குழந்தையிடம் ல்லாகிர்தம், அல்ஜிப்ர என சொல்லுவது போல், இவனும் குழம்பி நின்றான்.

ஈஸ்வர் “எல்லாத்துக்கும் எப்படி எக்ஸ்ப்ளைன் செய்யறது. இது என்ன புரிதலா, இல்ல வாய்பாடா.. சொல்லி சொல்லி வாழ்க்கை கணக்கை போட. எனக்கு அது தெரியாது, வராது, செய்யவும் மாட்டேன்.

உனக்கு என்ன தோனுது மனசுல… அப்படிதான் நான். வர்ணாக்கு நான்தான் அப்பா, பத்து புள்ள பொறந்தாலும் சரி… புரியுதா” என்றான்.

தீபி சிரித்தபடியே கண்ணில் நீருடன் அவன் அருகில் வந்து அவனை அப்படியே நின்றிருந்த படியே சேர்த்தணைக்க, முடியவில்லை அவளால், அவனும் தொங்க விட்டிருந்த கையை எடுக்காமல், மரமென நின்று கொண்டிருந்தான்.

இளகவில்லை ஈஸ்வர் தீபியும் கண்ணால் இரைஞ்ச… அப்படியே நின்றிருந்தான்…

ஈஸ்வர் “நான் எப்போதும் ஒரே மாதிரிதான்… சும்மா சும்மா என்னால பதில் பேச முடியாது. புரியுதா” என மீண்டும் அதே வெறுமையான குரலில் சொல்ல.

தீபி சிரித்தபடியே “ஆமாம் நீங்க எப்போதும், எல்லார் கிட்டயும் ஒரே மாதிரிதான் சரியா, ஏதோ தெரியாம சொல்லிட்டேன் “ என அவனின் வாட்டம் பொறுக்காமல் தீபி சமாதானம் செய்ய…

சற்று நேரம் தன் கோவத்தை குறைக்காமல் நின்றிருந்தான். ஆனாலும், ரொம்ப நேரம் முடியவில்லை. இன்னும் அவள் தன்னை அனைத்த்திருப்பதை உணர்ந்து.. லேசாக அவளின் உதட்டில் பட்டும் படாமல் முத்தம் வைத்து திரும்பி சென்றான்.  

விடு விடுவென சென்றவன் நின்றான். ஏதோ தோன்ற அவளை பின்னிலிருந்து அனைத்துக் கொண்டான்… அவளின் புவன்… எல்லோரும் எல்லாம் சொல்வதில்லைதானே.

எங்கோ காற்றில் கலந்து தீபியின் காதில் அந்த பாடல் விழுந்தது..

“கிடைச்சத இழக்கிறதும்…

இழந்தது கிடைக்கிறதும்….

அதுக்கு பழகுறதும் நியாயம் தானடி

குடுத்தத எடுக்குறதும்…..

வேறவோன்னு குடுக்கிறதும்

நடந்தத மறக்குறதும்… வழக்கம் தானடி…

கண்ணான கண்ணே நீ கலங்காதடி

என உயிரோட ஆதாரம் நீ தானடி..

கண்ணான கண்ணே நீ கலங்காதடி

யார் போனா என்ன… நான் இருப்பேனடி…

 

ஏ விரல் இடுக்குல ஒன் விரல் கிடக்கணும்…

நசுங்குற அளவுக்கு இறுக்கினான் பிடிக்கணும்…

நான் கண்ணா தொரக்கையில் ஒன் முகம் தெரியனும்…

உசிருள்ள வரைக்குமே உனக்கென்ன பிடிக்கணும்…

கடலலை போலவே ஒன் கால தொட்டு உரசி..

கடலுள்ள போகவே நானில்லடி…

கடல் மண்ண போலவே காலோட ஒட்டி…

கர தாண்டும் வர நான் இருப்பேனடி…

கண்ணான கண்ணே நீ கலங்காதடி

என உயிரோட ஆதாரம் நீ தானடி..

கண்ணான கண்ணே நீ கலங்காதடி

யார் போனா என்ன… நான் இருப்பேனடி…

 

 

 

 

Advertisement