Advertisement

பௌர்ணமி வர்ணம் – 17

காலையில் எப்போதும் சூரியனுக்கு முன் எழுபவன் இன்றும் அதே போல தன் வேலைகளை பார்க்க தொடங்கிவிட்டான். ஆனால் அங்கும் இங்கும் நடந்தபடி அவளை பார்வையால் வருடியபடிதான் தன் வேலையை செய்து கொண்டிருந்தான்.

ஏனோ மனமெல்லாம் அவளிடமே மண்டியிட்டு இருந்தது. சின்னதாக அவனுள் நிம்மதி பரவியது. இனி நான் அவளை நெருங்கலாம்… தடையேதும் இல்லை என உள்ளம் கூத்தாட… சின்ன சிரிப்பும் பூரிப்புமாக   அவளை அலுங்காமல் தூக்கி கட்டிலில் வர்ணாவிடம் கிடத்திதான் ஜாக்கிங் சென்றான்.

தூக்கியத்தில் தீபிக்கு ஏதோ உணர்வு வர அவளும் விழித்துக் கொண்டாள். அவன் கிளம்பியவுடன் தானும் கிளம்பிவிட்டாள். டைன்னிங்க டேபிள் மீது சின்னதாக ஒரு ஸ்லிப் “அவசரமாக நான் ரேசொர்ட் செல்கிறேன் அத்த” என  எழுதி வைத்துவிட்டு, வர்ணாவை பாட்டியின் அறையில் விட்டு எதுவும் குடிக்காமல் கூட சென்றுவிட்டாள்.

ஏனோ தீபியாள் தன்னை மன்னிக்கவே முடியவில்லை, அவனிற்கு நானும் இணங்கினேனே என தன் மேலே அவளிற்கு கோவம், அதில் யார் முகத்திலும் விழிக்க முடியவில்லை ஏதோ இது மிக பெரிய தவறாக உணர்ந்தால்.

ஈஸ்வர் அதற்கு முற்றிலும் வேறு மனநிலையில் இருந்தான். எப்போதும் பத்து கிலோமீட்டர் ஓடுபவன் இன்று இரண்டு மையில் அதிகமாகவே சென்று வந்தான்.

புதிதாக உணர தொடங்கினான்… இதோ அவளிடம் நான் நெருங்கிவிட்டேன், இடைவெளியே இல்லை எங்களுக்குள்… இனி அவளை இயல்பாய் அணுக வேண்டும் என நிறைய நினைத்தபடியே, முகம் பளபளக்க சிரித்தபடியே வந்தான் வீட்டிற்கு.

ஆனந்தி அவனிற்கு குடிக்க கொடுத்து “ஏம்ப்பா, பாவம் தனிய போயிருக்கு புள்ள நீ கொண்டு போய் விட்டு வந்திருக்கலாம்” என குறைபட

ஈஸ்வர் திரு திருவென விழித்தான் “யாரும்மா தீபாவா, எங்க” என்றான்.

ஆனந்தி “உனக்கும் தெரியாதா, ஏதோ அவசர வேலைன்னு எழுதி வைச்சிட்டு ஹோட்டலுக்கு போயிருக்காப்பா” என்றார்.

ராமலிங்கமும் “ஆமாம் இவனை எதிர்பார்த்தா அதெல்லாம் நடக்குமா, இவனுக்கு உலகமே இடிஞ்சி விழுந்தாலும், எல்லாத்தையும் தட்டி விட்டுட்டு, எழுந்து ஓடியே தீருவான்… இவன் கிட்ட போய் கேட்குற” என்றார் கிண்டலாக. ஆனந்தியும் சிரித்தபடியே நகர்ந்தார்.

ஆனால், ஈஷ்வருக்கு முகம் வீழ்ந்தே போனது… நான் ஏதும் தவறாக நடந்து கொண்டேனா… என எண்ண தொடங்கினான். இப்போதுதான் உள்ளிருந்து ஒரு குரல் “அப்பா புரிஞ்சிடுச்சா, அவ ஏற்கனவே குழந்தையை கையில் வைத்து பலதையும் யோசிக்கும் ஒரு குழப்பவாதி… அவளிடம் போய் எல்லா வேலையும் முடிச்சிட்டு… நான் ஏதாவது தப்பா செய்தேனான்னு கேட்கற பத்தியா..” என நீண்ட விளக்கம் தர… மண்டை காய்ந்தது ஈஷ்வருக்கு.

ஆக நான் அவளை யோசிக்கவில்லையோ என எங்கிருந்தோ ஒரு நினைவு வர முதல் முறை தெளிந்தான் ஈஸ்வர். என்ன செய்வது என புரியவில்லை… தலை சாய்த்து விட்டத்தை வெறித்தான்.

ராமலிங்கம் “ஈஸ்வர் அந்த வேளசேரியில்  ஏதோ லீசு பத்திரத்துல ஏதோ வில்லங்கம்னு வக்கீல் போன் செய்தார்ப்பா… என்னான்னு போய் பாருடா, நான் சங்க கூட்டத்துக்கு போகணும்…” என்றவர் சொல்லிக் கொண்டே கிளம்பிக் கொண்டிருந்தார்.

ஈஸ்வர் அவரின் வார்த்தைகளை காதில் வாங்கியதாக தெரியவில்லை. எனவே அவனின் தந்தை “டேய்…. என்னடா, காதில் ஏதாவது விழுந்துதா… போ வேளசேரி கிளம்பு” என்றார்.  .

ஈஸ்வருக்கு அதன்பின் நிற்பதற்கு நேரமில்லை, வேளையில் கவனம் வைக்க தொடங்கினான். வர்ணாவும் இப்போது அழ தொடங்கினாள், அவளின் கண்ணில் தீபி அல்லது ஈஸ்வர் யாரேனும் ஒருவர், அவளின் கண் பார்வையிலேயே இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றாள் இப்படிதான். மற்றபடி வர்ணா சமத்துதான். எனவே தீபிக்கு போன் சென்றது பாட்டியிடமிருந்து.

எனவே தீபி வீட்டிற்கு வந்தாள்… எங்கே ஈஸ்வர் வந்து விடுவானோ என பதை பதைப்பாகவே உணர்ந்தாள்.. உண்டு முடித்து வர்ணாவை ரெட்டியாக்கி அழைத்துக் கொண்டு மீண்டும் ரேசொர்ட் சென்றாள்…

அவள் பயந்தது போல், ஈஸ்வர் வந்தான்… அவள் அந்தபக்கம் செல்லவும் இவன் வந்தான். உணவு முடித்து, இவன் கிளம்பி கடைக்கு சென்றான்.

இப்படியே இந்த பத்து நாட்களாக இரவில் மட்டும் ஒரே அறையில் இருந்தனர். முன்னர் நூல் அளவு இருந்த இடைவெளி… இப்போது சேலையளவு ஆனது.

ஆம் ஈஸ்வரை பேச கூட.. அனுமதிக்கவில்லை தீபி. இவன் வரும் முன்பே உறங்கிவிடுவது. அல்லது, வர்ணாவை துணைக்கு வைத்துக் கொண்டு பாட்டியுடன் கதையளப்பது, பின் அங்கேயே வர்ணா உறங்க, தானும் அவளை காரணம் சொல்லி உறங்கினாள்… இப்படி, பல வகையில் தீபி விலகினால்.

ஈஸ்வர்க்கு இந்த ஒதுக்கத்தை கொஞ்சமும் எதிர்பார்க்கதவனால், எப்படி எடுப்பது என தெரியவில்லை. இப்போது ஏனோ கத்தி சத்தம் போடா தோன்றவில்லை. அவளை பார்வையால் மட்டுமே தொடர்ந்தான். அவளிடம் பேச நினைக்கரான்தான் ஆனால், ஏன் பார்க்க கூட இல்லை அவள்.

மன்னிப்பு கேட்டுவிடலாமா என கூட எண்ணினான், ஆனால் அதை அவனின் மனம் ஒத்துக் கொள்ளவில்லை. என்ன யோசித்தும் இதை எப்படி சரி செய்வது என தெரியவில்லை சிப்பாய்க்கு.

சத்தம் போட்டு பேசபவன் இப்போது மௌனத்தை பழக தொடங்கினான்,  தன் அதிகாரத்தால் அவளை நெருங்கியவனை, இப்போது அலட்சியமாக தள்ளி வைத்தாள்… தீபி. அதையும் ஏதோ வரமாக ஏற்க தொடங்கினான்.

எப்போதும் போல வர்ணாவுடன் நேரம் செலவு செய்தான். ஆனால் முன்போல் குழந்தையை அவளை சீண்ட நினைக்கவில்லை. தீபி வந்தவுடன்.. “அம்மாட்ட போடா..” என தானே அனுப்பி வைத்தான். இப்படியேதான் நாட்கள் கடந்தது.

###############

தீபியும் எப்போதும் போல் பாட்டியிடம் வர்ணாவை விட்டு, ரேசொர்ட்க்கு கிளம்பினாள். அன்று தீபிக்கு கமலநாதனிடமிருந்து போன் “என்னம்மா எப்படி இருக்க, என் பேத்தி எப்படி இருக்கா” என்றார் ஆசுவாசமாக.

தீபி “சொல்லுங்க அங்கிள்… எல்லோரும் எப்படி இருக்காங்க” என்றாள்.

கமலநாதன் “ம்… எல்லோரும் நல்லா இருக்காங்க, என்னம்மா எப்படி போகுது புது வாழ்க்கை” என்றார்.

தீபி எதையும் அவர் போல் குதர்க்கமாக எடுக்காமல் “ம்… ஓகே அங்கிள், நார்மலா போகுது, என்ன விஷயம் அங்கிள்” என அவளே கேட்க.

இதற்காகவே காத்திருந்த கமலநாதன் “என்ன சொல்றது, உனக்கே தெரியும் என் பேத்தி, அங்க இப்போ தனியாயிட்ட  அவள நான் தானேம்மா பார்க்கணும், சொல்லு எப்போ இங்க கூட்டி வர, இல்ல நான் அங்க வந்து கூப்பிட்டு போகவா உனக்கு அவளை பார்க்க சிரமமா இருக்குமில்ல. அதான்” என்றார்.

தீபிக்கு கண்கள் உடைப்பெடுக்க “என்ன சொல்றீங்க நீங்க, அப்பாகிட்ட பேசுங்க” என சிறுபிள்ளையாய் திக்கி திக்கி பேச.

இப்போது கமலநாதன்… முற்றிலும் வேறு குரலில் சொன்னார் “நான் ஏனம்மா இப்போ அவர்கிட்ட பேசணும், உனக்கும் எனக்கும்தானே இப்போ வேலை, பாவம் அவர் ஏன் நடுவுல” என்றார் அமைதியாக.

கூடவே “உங்க பதிவு திருமண செர்ட்டிப்பிக்கெட் வந்திடுச்சா” என்றார்.

தீபிக்கு அதையெல்லாம் யோசிக்க முடியவில்லை வர்ணாவின் நிலையிலேயே நிற்க, அமைதியாக நின்றாள்.

அவரே தொடர்ந்தார் “வராதும்மா, நான்தான் கொஞ்சாமா நிறுத்தி வைக்க சொல்லியிருக்கேன், சரி அதைவிடு, எப்போ வந்து என் பேத்திய கூட்டி போக, சொல்லும்மா” என்றார்.

மேலும் அவரே தொடர்ந்தார் “என் பேத்திக்கு…. நிறைய சொத்தும்மா, நாங்க என்ன என்னமோ நினைச்சோம், சரி விடு, நீ நல்லாயிரும்மா,

அவளுக்கு ஏம்மா… இன்னொருத்தர, உறவு சொல்லி கூப்பிடும் நிலை… அது நல்லாயிருக்காதுதானே…

நீ சந்தோஷமா இரும்மா, நாங்க ராணி மாதிரி பார்த்துக்கிறோம் எங்க பேத்திய… நீ சந்தோஷமா இரும்மா… யோசிச்சு சொல்லு.. எப்போ வரதுன்னு, நான் வைக்கட்டுமா” என்றார்.

தீபி விக்கித்து நின்றாள். ஐயோ! இது எப்படி முடியும்… நான் எப்படி வர்ணாவை… என்னால் முடியாது நான்… இல்ல, வர்ணா என்கிட்டதான் இருக்கணும்… என அவளின் முதல் அதிர்ச்சி தீரவே இல்லை.

யாரிடம் பேசுவது எப்படி கேட்பது, என புரியவே பத்து நிமிடம் ஆனது. எங்கே செல்வது என தெரியாதாவள். அனிச்சை செயலாய்… தன் கணவனை அழைத்தாள்.

ஈஷ்வரும் அந்த வேளசேரி கடை விஷயமாக, அட்வகேட்டுடன் மீடிங்கில் இருக்க… இவளிடமிருந்து போன்… அவள் அழைத்ததும் பதறாமல்… அதனை பார்த்தபடியே அழுத்தமாக, போனை சைலெண்டில் போட்டான் ஈஸ்வர்.     

இரண்டுதரம் அழைத்தாள் அதற்குமேல், கூப்பிடவில்லை அவளும் விட்டுவிட்டாள். போன் உடனே கதிரேசனுக்கு சென்றது.

கதிரேசன் “ஆமாம் லட்சுமி, அத அவங்கதான் நிறுத்தி வைச்சிருக்காங்க, இது மாப்பிளைக்கு தெரியும்…. ஆனால் வந்து விடும்….. நீ கவலை படதா…

அது தெரிஞ்சிதான் உன்கிட்ட பயம் காட்ட உன்னை கூப்பிட்டுருக்காங்க அவங்க. நீ கவலை படாதம்மா, நீ மாப்பிள்ளைகிட்ட சொன்னிய… பேசு” என்றவர் தைரியம் சொல்லி வைத்து விட்டார்.

இப்போது தீபிக்கு ஆசுவாச பெருமூச்சு வந்தது. ஆனாலும் புவன் தெரிந்து என்னிடம் சொல்லவில்லை. ஏன், ஏன் கிட்ட சொல்லல, எல்லாம் திமிர். எல்லாம் எனக்கு தெரியும்ன்னு திமிர். என உதடுகள் முணுமுணுத்தாலும் மன என்னாமோ “அவன் பார்த்துப்பான்” என  மலையாக, நம்ப தொடங்கியது.

அதன்பிறகு ஒரு மணி நேரம் கழித்து ஈஸ்வர், தீபியை அழைக்க தீபி “என்னங்க…” என்றாள். இப்போதும் அவள் குரல், ஏதோ, அந்த அதிர்வை காட்டியதோ.

ஈஸ்வர்க்கு இப்போதுதான் ஏதோ என தோன்ற “என்ன தீபா, ஏன் என்னமோ போல இருக்கு குரல்” என்றான் முன் போல் சத்தம் போடாமல்… உரிமை காட்டாமல், அமர்த்தலான அக்கறையாக வந்தது அவனின் குரல்.

சற்றும் தீபிக்கு இவனின் குரலில் மாற்றம் எல்லாம் புரியவில்லை “இல்லங்க, அங்க நாமக்கல்ல இருந்து போன், அவர் ஏதோ சொல்றாரு, வர்ணாவ.. அவர் கிட்ட” என சொல்ல முடியாமல் சின்ன தடுமாற்றம்.

எப்படி சொல்வது இவனிடம்… இவனுக்கு வர்ணாவை பிடித்திருக்கிறதுதான். ஆனாலும், எப்படி கேட்பது… என்ன சொல்லுவது “அவர்களின் பேத்தியை அவர்கள் கேட்டகிறார்கள் என எப்படி சொல்லுவது, அவன் ஏதும் நினைத்துக்கொள்ள மாட்டானா” என தொண்டையிலிருந்து வார்த்தைகள் வரவில்லை அவளிற்கு

“ஈஸ்வர் “என்ன சொன்னாங்க” என்றான்.

தீபி “வர்ணாவை… பாப்பாவை… கேட்க்குறாங்க…” என்றாள் வரிந்து கட்டுபடுத்திய குரலில்.

ஈஸ்வர் “ம்… நீ என்ன சொன்ன..” என்றான் உறுமலாக வந்தது வார்த்தை.

தீபி “நான் என்ன சொல்ல, நம்ம மேரேஜ் செர்டிபிக்கேட் இன்னும் வரலையா, “ என்றவள் சிறு இடைவெளி விட்டு “அவர்தான் நிறுத்தி வைச்சிருக்காராம்” என்றாள் சற்று கோவமாக தான் கேட்டாள்.

ஈஸ்வர் லேசாக சிரித்துக் கொண்டான், பரவாயில்லையே யாரோ சொல்லியாவது இவளுக்கு நம்ம கலயாணத்து மேல அக்கரையிருக்கே என நினைத்தவன். அதை சொல்லாமல் விழுங்கிக் கொண்டான்.

ஈஸ்வர் “நீ என்ன சொன்ன” என்றான் வேண்டுமென்றே.

தீபி “அப்பாட்ட பேசுங்கன்னு சொன்னேன்” என்றான்.

ஈஸ்வர் “அறிவேயில்லையா உனக்கு” என அவனை மீறியும் ப்பரைடு நடந்தது தீபிக்கு. “ஏன் அப்படி சொன்ன, என் கிட்டதானே பேச சொல்லணும், உனக்கு கல்யாணம் ஆகிடுச்சி தெரியுமில்ல” என.

தீபிக்கு கோவம் வர “ப்ளீஸ் புவன்… நீங்க ரொம்ப புத்திசாலிதான், எனக்கு அதுதான் தெரியும்மே… உங்ககிட்ட வந்து சொன்னேன் பாருங்க, என்னை சொல்லனும், நான் வைக்கிறேன்” என சொல்லியவள் வைத்தேவிட்டாள்.

ஈஸ்வர் “ஐயோ ஈஸ்வர் உனக்கு வாயே அடங்காதா” என எண்ணியபடியே நகர்ந்தான். ஆனால் மனதில் வலி கூடிக் கொண்டே சென்றது. இன்னும் பேசவே மாட்டேங்கிறா… என யோசித்தபடியே இருந்தான்.

திரும்பவும் போன் செய்தான் அவளிற்கு “என்ன “ என்றாள் எரிச்சலான குரலில்

ஈஸ்வர் “இனி அவர் போன் பண்ணினால், பயப்படாத, இன்னும் இரண்டு நாள்ல, நம்ம செர்ட்டிபிக்கேட் வந்திடும், அடுத்த நாள் வர்ணா என் பொண்ணாயிடுவா, இப்போவே அப்படிதான். நம்ம பொண்ணு அவ, புரியுதா, யாராலையும் ஒன்னும் பண்ண முடியாது.

நீதானே அவளுக்கு அம்மா, உன்ன மீறி என்ன நடக்கும், அதனால நல்ல தைரியமா பேசு” என்றான்.

தீபிக்கு இப்போது யானை பலம் வந்தது. கண்கள் கரிக்க “தேங்க்ஸ்“ என்றாள்.

ஈஸ்வர் அதை எதிர்பார்க்கதவனாக. “அவங்க முடிஞ்சி போனவங்க உன் லைப்பில்… புரியுதா…” என்றான்.

தீபி அமைதியாக இருந்தாள்.

ஈஸ்வர் “புரியுதா” என்றான்.

தீபி “ம்” என்க.

“சரி புவன்னு… சொல்லேன்.. அப்படியே முத்து உதிர்ந்திடும்” என்றான்.

தீபி சிரித்தாள். அதன் மெல்லிய ஒலி அவனை வந்து எட்டியதோ… சின்ன பெருமூச்சு வந்தது இவனிடம்.

ஈஸ்வர் “ப்ளீஸ், கொஞ்சம் பேசவாது… செய்யலாம்ல” என்றான்.

தீபி “நீங்க என்னை போனா போகுதுன்னு கல்யாணம் செய்துக்கலன்னு சொல்லுங்க… பேசறேன்” என்றாள்.

ஈஸ்வர் “உனக்கு அது தெரியாதா” என்றான். பின் சட்டென “இல்ல இல்ல எப்படி சொல்றது… நான் அப்படியெல்லாம் நினைக்கல” என ஏதோ சொல்ல.

தீபி “வேற எப்படி … யோசிங்க, வெங்கி வேற வைடிங், வேலையிருக்கு, வைக்கிறேன்” என்றாள். வைத்தும்விட்டாள்.

ஈஸ்வர்க்கு கொஞ்சமாக, தான் அமர்ந்திருந்த சேரில் ஆசுவாசமாக சாய்ந்து அமர்ந்திருந்தான். “நார்மலாதான் அவ இருக்க நான்தான் “ என தனக்குள்ளேயே புலம்பினான்.   

அன்று இரவு… தனது அறையின் பால்கனி…. மில்டரி சரக்கும் சைட்டிஷ்ஷுமாக அமர்ந்திருந்தான். காலையின் சந்தோஷத்தை கொண்டாட. வர்ணாவை தூக்கியபடி தீபி அறையினுள் வர… அறையெங்கும், சரக்கின் நெடி…

தீபி பொங்கிவிட்டால்… வர்ணாவை கட்டிலில் கிடத்தி, பால்கனி கதவை சாற்ற போக, அவன் காலால் அதனை தடுத்தபடி அமர்ந்திருந்தான். தீபி “போச்சு, காலையில் நல்லாதானே இருந்தான். இப்போ என்ன இப்படி. இன்னைக்கு ஏதோ சரியில்லை” என உள்ளுக்குள் அதிர, அலுங்காமல் பின்வாங்கினாள்.

விடவில்லை ஈஸ்வர்… அவள் திரும்பும் சமயம் அவளின் சுடியை பிடிக்க, அவளின் இடையும் இப்போது அவன் கைகளில்… தீபி “விடுங்க புவன், டைம்மாச்சு காலையில் சீக்கிரம் போகணும்… “ என சொல்ல.

ஈஸ்வர் “பா… என்ன சிணுங்கள் டா இது” என உள்ளுக்குள் முனகியவன்  “போலாம்..” என்றான் நல்ல திடமான குரலில்.

தீபிக்கு அந்த குரலை கேட்டதும் “என்ன இவ்வளோ திடமா பேசுறான்… இன்னும் ஆரம்பிக்கவேயில்லையா” என எண்ணியபடி அவனின் பக்கம் திரும்பி நிற்க.

அவளின் முகத்தை பார்த்தவன். “கொஞ்ச நேரம் உட்கார்… ப்ளீஸ் “ என்றான்.

தீபியால் மறுக்க முடியவில்லை… அவன் எதிரில் அமர்ந்தாள். ஆனால் ஈஸ்வரால் பேச முடியவில்லை என்ன பேசுவது என தெரியவில்லை. முன்பாவது சீண்டுவதற்காக அவளிடம் நிறைய வாயாடுபவன்… இப்போது அவளை தனக்குள் அனுமதிக்க தொடங்கியிருந்தான்.

மெல்ல அவனின் விழிகள் அவளின் வரிவடிவை வருட… தீபி தடுமாறினாள். இப்போது இன்னும் அவளை விழியால் விழுங்க… தீபி “எ.. என்ன” என்க.

ஒன்றுமில்லை எனும் விதமாக தலையை உருட்டினான். ஆனால் எண்ணம் எல்லாம் இந்த பத்து நாளாக அவளை தொடர்ந்ததில்… அவளின் ஒவ்வென்றும் நினைவு வந்தது.

காலையிலிருந்து ஓடுகிறாள்… வீட்டிலும் எல்லோரிடமும் ஒட்டிக் கொண்டாள், ஆனால் என்னால் அவர்கள் வீட்டில் ஓர் பத்துநாள் கூட இருக்க முடியவில்லை.

சின்ன முக சுளிப்பு கூட இல்லாமல் எப்படி.. இதில் நானும் வேறு என் பங்கிற்கு படுத்துகிறேனோ…

இப்போதான் வர்ணாவுடன் இருந்து மேலே வருகிறாள். ஆனால் இன்னமும் அந்த முகத்தில் சிறு வாட்டம் கூட இல்லாமல் எப்போதும் எப்படி… என எண்ணியபடியே அவளின் கன்னங்களை தீண்ட துடித்த தனது கைகளை அமைதியாக அடக்கியபடி…

“தீபா… நான் ரொம்ப கஷ்ட படுத்தரனா” என்றான் ஆழ்ந்த குரலில்.

தீபிக்கு கண்ணில் நீர் சேர அமைதியாக இருந்தாள். “அப்படிதானே, இனி அப்படி நாடக்காது… “ என்றவன்.

பின்பு “நான் டெய்லி ஒரு அரைமணி நேரம் நைட் உன் கிட்ட பேசுவேன்… நீ கேட்கணும்…” என்றான்.

தீபிக்கு இப்பவும் அதிரடிதான் என நினைத்தாள். இவனின் இந்த அதிரடி அமைதியும். அவனின் குரலும் எதையும் மறுக்க வைக்கவில்லை. தலையை உருட்டினாள்.

ஈஸ்வர் மென்மையாக அவள் கன்னகதுப்புகளை… தனது பெருவிரலால் வருடியவன்… “தேங்க்ஸ் “ என்றான்.

பின்பு “போ தூங்கு… குட் நைட்” என்றான். தீபி குழம்பியபடியே உள்ளே சென்றாள்.  

  

 

  

 

   

Advertisement