Advertisement

பௌர்ணமி வர்ணம் – 16

மறுநாள் எல்லோர் முகத்திலும் ஒரு அயர்வு… தீபியின் அன்னை முகம் வெளுறி போய்… பயத்தின் சாயல் அப்பட்டமாக அவர் முகத்தில் தெரிந்தது. ஏதோ என அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தார் சுந்தரி அம்மா.

இப்போதுதான் தொடங்கிய தன் மகளின் வாழ்வில் திரும்பவும் பிரச்சனையா… வேண்டாம் என கடவுளிடம் வேண்டுதல் வைக்க சென்றுவிட்டார் பூஜை அறைக்கு அந்த அதிகாலையிலேயே.

எப்போதும் போல் ஜாக்கிங் முடித்துவந்த ஈஸ்வர்… கந்தன் கொடுத்த சத்துமாவு கஞ்சியை கையில் வைத்தபடி… கதிரேசனிடம் “என்ன மாமா… கமலநாதன் அங்கிள் இங்கதான் இருக்காரா…. இன்னிக்கே வர சொல்லுங்க பேசிடலாம்” என்றான்.

கதிரேசன் “இல்ல தம்பி… நேற்று இரவே நாமக்கல் போயாச்சு… விடுங்க தம்பி தருண் எல்லாம் ஒரு ஆளா… நமக்கு,

எல்லாம் நம்ம பசங்க தட்டி வைப்பாங்க தம்பி…

நீங்க எப்போதும் போல் இருங்க தம்பி…” என்றார் பொறுமையாக.

கதிரேசன் இன்று அந்த பாண்டிசேரி நிலத்தை ரிஜிஸ்ட்டர் பண்ண இருப்பதால், ஈஸ்வரிடம் “வாங்க தம்பி பாண்டிசேரி போய் வருவோம்..” என்றார். ஈஷ்வருக்கு அவரின் பதில் திருப்தி அளிக்கவில்லை போல.

ஈஸ்வர் “இல்ல மாமா… நான் இன்னிக்கு எங்க வீட்டுக்கு போறேன் தீபாவ கூட்டிக்கிட்டு, நீங்க இங்க பார்த்துக்குங்க” என்றவன் அவரின் பதிலை எதிபார்க்கவில்லை, மேலே சென்றுவிட்டான்.

அங்கே நின்றிருந்த சுந்தரியும் இதை கேட்டிருந்தார். அவருக்கு என்ன சொல்லுவது என தெரியவில்லை. எனவே கையை பிசைந்தபடி நின்றிருந்தார்.

நேரே மேலே சென்றவன் இன்னும் தீபி தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்தவன்… “தீபா..” என்றான். அவளும் முழுமையாக இல்லாமல் அரை குறையாக உறக்கத்தில் ஏதோ படுத்திருந்தாள், இவனின் ஒற்றை அழைப்பில் எழுந்து கொண்டாள்.

ஈஸ்வர் “கிளம்பு நாம, நம்ம வீட்டுக்கு போலாம்… சீக்கிரம் ரெடியாகு” என்றான்.

தீபி “ஏன்.. இப்போ என்ன அவசரம், நேத்துதான் அவ்வளோ பிரச்சனை நடந்திருக்கு… இப்போது எதுக்கு இவ்வளவு அவசரம்… ஈவ்னிங் போலாமே…” என்றாள்.

திரும்பவும் நினைவு வந்தவளாக “இன்னைக்கு, ஏதோ பயர் மீட்டீகிங்… ரெசார்ட்ல, ஹால் ரெடி செய்யணும்…” என இன்னும் ஏதேதோ அடுக்கி கொண்டே போனாள்.

ஈஸ்வர் “அங்கிருந்து போயிக்கலாம்… பழகிக்கோ தீபா” என்றான் அமர்த்தலாக.

தீபிக்கு பயம் வந்தது ஏதோ சரியில்லை என எனவே “என்னாச்சு..” என்றாள்.

ஈஸ்வர் “உனக்காகத்தான் இவ்வளோ நாள், நான் இங்க இருந்தேன்… இனி முடியாது. போலாம்… “ என்றான். சிறிது இடைவெளி விட்டு “கிளம்புறீயா” என்றான், கர்ண கொடூரமான குரலில்.

இதை கேட்ட தீபிக்கு என்னவோ போல் ஆனது. மறுக்க தோன்றவில்லை… முடியவும் முடியாது. நாளை போகலாம் என சொல்லத்தான் நினைத்தாள். இவன் இப்போதே இந்த ஷணமே என நிற்கவும்… ஏன் என புரியாமல், ஒன்றும் பேசாமல் கிளம்ப தொடங்கினாள்.

இருவரும் கிளம்பி கீழே வந்தனர்.. வர்ணா இப்போதுதான் எழுந்து கொண்டாள்.. எனவே பூஸ்ட் குடித்துக் கொண்டிருக்க… அவளை தூக்கிக் கொண்டான் ஈஸ்வர். தன்னிடமே அமரவைத்து பூஸ்ட் குடிக்க வைத்தான்.

வர்ணா அவனிடம் “பூவன் டாடா போதியா… நானு..” என்றாள் குடித்து முடித்து… ஈஸ்வர் மடியில் அமர்ந்தபடி..

ஈஷ்வரும் “ஆம்மாம் டா தங்கம் நம்ம எல்லாம் போலாம்… பாட்டி பாக்க போலாம், அங்க ஸ்ரீ அக்கா, சித் அண்ணா எல்லாம் இருப்பாங்க…” என கதை சொல்லி விளக்கினான். வர்ணாவும் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே அவன் தலை முடியை தன் கைகளால் இழுத்து விளையாடிக் கொண்டிருந்தாள்.

இந்த குழந்தை இவனிடம் இவ்வளவு ஒட்டிக் கொள்ளும் என நினைக்கவேயில்லை யாரும்… தனது மான் விழியால், துரு துருவென ஈஸ்வரையே பார்த்தபடி, அவனின் செல் போனை பறிக்க… நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள் வர்ணா.

காலை உணவு உண்டு கொண்டே “சுசிக்கா… வர்ணாவ ரெடி பண்ணுங்க” என்றாள் தீபி. வர்ணாவும் சமத்தாக கிளம்பி ஹாலில் அமர்ந்திருந்த  ஈஸ்வர் அருகில் வந்தாள் “டாடா… போலாமா.. பூவன்” என்றாள். எல்லோரும் அவர்களைதான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்கள் கிளம்புகிறார்கள் எனவும்தான் தன் மகளுக்கு திருமணம் ஆனதே நினைவு வந்தது சுந்தரிக்கு. எனவே அவர்களும் கூடவே கிளம்பினர், மணமக்களை இருப்பிடம் சேர்க்க.

இரண்டு கார்களில் கிளம்பினர் ஒரு காரில் நடேசனும் சுந்தரியும், மற்றொன்றில் ஈஸ்வர் குடும்பமும் கிளம்பியது ஈஷ்வரின் இல்லம் நோக்கி. இவர்கள் வருவதை முன்பே சொல்லிவிட்டார் கதிரேசன். அங்கே எல்லோரும் தயாராகவே இருந்தனர்.

வந்துவிட்டாள் தீபி ஈஷ்வரின் குடிலுக்கு. ராமின் திருமணத்தின் போதுதான் புதுப்பித்து கட்டப்பட்ட வீடு..

முன்புறம் இப்போதுதான் பார்க்கிறாள் தீபி அழகான வெள்ளையும் ப்ரௌன் நிறமும் கலந்த சதுர சதுர வடிவிலான கட்டங்களை கொண்ட வீடு.

நல்ல மாடனாக முன்புறம் இடம் விட்டு… புல்தரைக்கு நடுவே… போர்டிக்கோக்கு செல்லும் பாதை… அதையடுத்து பெரிய வராண்ட, அதன் பின் அலுவலக அறை, அதை தாண்டிதான் வீட்டு மனிதர்களுக்கான வரவேற்பறை…

அதனை சுற்றி கிட்சென்… டைன்னிங்… பூஜையறை பாட்டியின் அறை என மொத்தம் ஆறு அறைகள், கீழே… ஹாலின் வலதுபுறம் மேலே செல்லுவதற்காக ப்ரௌன் நிற… படிக்கட்டுகள், எல்லா இடங்களிலும் தேவையான இருக்கைகள், அலங்கார LED விளக்குகள் என அழகாக இருந்தது வீடு.

முன்பு வந்தபோது…. இதனையெல்லாம் ரசிக்க தோன்றவில்லை தீபிக்கு… இப்போதும் என்ன செய்வது என தெரியாமல் இதனை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். வேறு என்னதான் செய்வது… ஈஸ்வர் ஓடும் ஓட்டத்திற்கு ஈடு கொடுத்து வந்தாகிவிட்டது. இனி அவன் செய்வதை வேடிக்கைதான் பார்க்கவேண்டும் என்று தோன்ற தொடங்கியது அவளுள்.

எல்லோரும் பேசிக் கொண்டிருந்தனர். ஈஸ்வர் அவளின் லக்கேஜ்ஜுகளை மேலே எடுத்து செல்ல பணியாளர்களை பணித்துக் கொண்டிருந்தான்.  

தீபி அங்கு டைனிங் அறையில் அமர்ந்திருக்க… போன் வந்தது அவளிற்கு “ம்… தோ வரேன் “என்றவள் கிளம்ப தொடங்கினாள்.

அங்கேதான் ஆனந்தி கிட்செனில் ஏதோ செய்து கொண்டு பணியாளர்களை வேலைவாங்கியபடி நின்றிருந்தார், தீபி “அத்த… நான் கொஞ்சம் ரேசொர்ட் வரை போகணும், மதியம் வந்திடுவேன் அத்த” என்றாள்.

ஆனந்திக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை, தன்னை கேட்டு இந்த வீட்டில் என்ன நடக்குது என இருப்பவர்… சின்ன மருமகள் இப்படி சொல்லவும் யோசிக்காமல் “போயிட்டு வாம்மா” என்றார் புன்னகை முகமாகவே.  

ஹாலில் வந்து சொல்ல, சுந்தரியின் முகம் அதிர்ப்தியை காட்டியது, ஆண்கள் அனைவரும் தலையசைப்பை மட்டும் தர, தன் அம்மாவின் கோவத்தை கணக்கில் எடுக்காமல் கிளம்பினாள் தீபி.

வாசலில் ஈஸ்வரிடம் “வரிங்களா, நான் ரேசொர்ட்டுக்கு போகணும்” என்றாள் சாதாரணமாக.

அங்கே நின்றிருந்த ஈஸ்வர்க்கு சுறு சுறுவென ஏறியது, இப்போதான் வந்திருக்கா என நினைத்து முகத்தை காட்ட, அதை பார்த்தவள் “நான் காலையிலேயே சொன்னேன்ல்ல” என்றாள்.

ஈஷ்வர் அதே கடுகடுப்புடன் ”சரி சீக்கிரம் வரணும் இந்தா..” என வண்டி சாவி கொடுத்தவன் “நானும் இங்கு இல்லைனா நல்லா இருக்காது… பார்த்து போ” என்றவன் உள்ளே சென்றுவிட்டான்.

தீபி, சாவியை கொடுத்துவிட்டு, செல்லும் அவனையே பார்த்திருந்தாள்… ‘சிடுமூஞ்சி சிப்பாய்’ என அவள் உதடுகள் சத்தமில்லாமல் திட்டியது அவனை.      

பூரணியும் ராமும் இப்போதான் தன் வீட்டிலிருந்து வந்தனர். பூரணி,  தீபியை தேட ஆனந்தி “அவ ஹோட்டல் போயிருக்கா, வந்திடுறேன்னு சொல்லிட்டுதான் போனா” என சொன்னார். பூரணி இதை எதில் சேர்ப்பது என தெரியாமல் சென்றாள்.

ஆண்கள் அனைவரும் உணவை முடித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.  ஈஸ்வர் தீபிக்காக சாப்பிடாமல் காத்திருந்தான், மணி மதியம் மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது.

சித்தையும் தன்யாவையும் அழைத்து வர ராம் சென்றான். வர்ணா கார்த்தியாயினி பாட்டியுடன் உறங்கிக் கொண்டிருந்தாள். சுந்தரியும், ஆனந்தியும் இயல்பாய் உரையாட தொடங்கினர்.

வந்தாள் தீபி, பரபரப்பாகவே வந்தாள். ஈஸ்வர் அமைதியாக டைனிங்கில் சென்று தட்டு எடுத்து வைத்தான்… பூரணிக்கு ஆச்சிரியம்… அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

தீபி பூரணியை பார்த்து “எப்போ வந்தீங்க” என நின்று பேசிக் கொண்டிருந்தாள். ஆனந்தி “வாம்மா சாப்பிடு “ என சொல்லவும் ஒரு தலையசைப்புடன் சாப்பிடும் அறை நோக்கி நகர்ந்தாள்.

தீபி அப்படியே கைகழுவி அமர்ந்து கொண்டாள்… ஆனந்தி பரிமாறுகிறேன் என வந்தார். ஈஸ்வர் “நாங்க சாப்பிட்டுகிறோம்… நீங்க போங்கம்மா” என்றான் அடக்கப்பட்ட கோவத்துடன்.

தீபி தனக்காக இவன் இன்னும் சாப்பிடாமல் இருக்கிறானா என வியப்பாக நினைத்து அமர்ந்தாள். அவள் எப்போது அமர்வாள் என பார்த்த ஈஸ்வர் தீபியிடம் “அறிவேயில்லையா, அப்படி என்ன வேலை, எப்போதும் போல வரவேண்டியதுதான, ஏன் அந்த மேனேஜர் என்ன கிழிக்கிறான்…. இவ்வளோ.. வாங்கரான்ல்லா…” என சரவாரியாக தீபிக்கு நல்ல வார்த்தைகளால் ப்பரைடுதான்.

தீபியாள் உணவை உண்ணவே முடியவில்லை, அவனிடம் இவ்வளவு கடுமையை எதிர்பார்க்கவில்லை. இமைக்க முடியாத அளவுக்கு கண்ணில் நீர்… திரண்டு நிற்கிறது.

தீபி உணவுடன் சேர்த்து அழுகையையும் விழுங்கிக் கொண்டே “ஏன்… நான் பிசினஸ் பண்றேன்னு எல்லாம் தெரிஞ்சிதானே கல்யாணம் செய்துகிட்டீங்க, அப்புறம் என்ன, என்னை சாப்பிட விடுங்க” என்றாள் அவன் பாணியிலேயே வெடுக்கென.

ஈஸ்வர் “அப்போ மாதிரி எப்போதும், அப்படியே சண்டைக்கே நில்லு, எதுக்கு சொல்றாங்கன்னு புரிஞ்சிக்காத” என இன்னும் வார்த்தைகளை கடித்து துப்பி ஈஸ்வர் கோவபட.

தீபி வாய்க்குள்ளேயே “ஆமாம் நான் கோவபட்டத இவர் பார்த்தார்” என எண்ணிக் கொண்டே சாப்பிட தொடங்கினாள். இதையெல்லாம் தூரத்திலிருந்து பார்த்திருந்த… பூரணிக்கு, ஏதோ படம்பார்ப்பது போல் அவ்வளவு சுவாரசியமாக இருந்தது. ‘ஆனாலும் ஒரு மாதத்துக்குள்ள, இப்படி ஒரு நெருக்கமா’ என பொறாமைதான் வந்தது.

இவர்கள் இப்படி சண்டையுடன் சாப்பிட்டு ஹாலுக்கு வர, நடேசனும் சுந்தரியும் வீட்டிருக்கு கிளம்பினர். ஈஷ்வருக்கு மதியம் உறக்கமெல்லாம் வராது எனவே தன் தந்தையுடன் கடைக்கு கிளம்பிவிட்டான்.

தீபியிடம் சொல்லித்தான் சென்றான் நல்ல சத்தமாக எல்லோர் காதிலும் விழும்படி “தீபா, எட்டு மணிக்கு வந்திடுவேன்” என சொன்னான் வேண்டுமென்றே. எல்லோரும் சிரிக்கத்தான் செய்தனர்.

தீபிக்கு ‘ஏன் இவ்வளவு படுத்தாறாரு… ஐயோ இன்னும் என்ன என்ன இருக்கோ, எப்படி சொல்வது, எப்படி நெருங்குவது அவரை… நான் என்ன செய்வேன் என எப்போதும் போல் தனக்குள் புலம்ப தொடங்கினாள்.

ஆனந்தி “நீ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடும்மா, ஆறு மணிக்கு கீழே வா போதும், நாங்க வர்ணாவ பார்த்துக்கிறோம்” என அனுப்பி வைத்தார்.

இரவெல்லாம் உறக்கமில்லாமல் இருந்தவள், படுத்து அவனை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவள் அப்படியே உறங்கி போனாள். வெகு நேரம் கழித்து ஏழு மணிக்குதான் விழிப்பு வந்தது. அடித்து பிடித்து எழுந்து, முகம் கழுவி, கீழே வந்தாள். பாட்டியுடன் அமர்ந்து வர்ணாவும் ஏதோ விளையாடியபடி இருந்தாள்.

பாட்டி “வாம்மா… காபி குடிச்சியா” என கேட்டார். தீபி தலையை உருட்டினாள். ஆனந்தி தீபிக்கு பூ எடுத்து வந்தார் வைப்பதற்காக, ஆனால் இவளின் விரியவிட்டிருந்த கூந்தலை விட பூ அதிகமாக இருக்க எப்படி இந்த முடியில் பூ நிற்கும் என தீபியிடமே “இத வைச்சிக்கமா” என கொடுத்துவிட்டார்.

தீபி “இவ்வோ எதுக்கத்த“ என்றபடி, தன்னளவுக்கு கத்தரித்துக் கொண்டு மற்றதை ப்ரிஜில் வைத்தாள்.

சித்தும் தன்யாவும் ஹோம் வொர்க் முடித்து பூரணியுடன் வர தீபிக்கு பொழுது சென்றது.

அனைவரும் பேசி, பிள்ளைகளுடன் விளையாடியபடியே பொழுது கழிய. சரியாக எட்டு மணிகெல்லாம் வந்துவிட்டனர் ஈஸ்வரும் அவனின் தந்தையும்.

ராமலிங்கம் தீபிடம் “ஏன்ம்மா, ரேசொர்ட் போகல” என்றார். தன்மகன் ஏதேனும் சொல்லியிருப்பானோ என எண்ணி.

தீபி “இல்ல மாமா… காலையில்தான் அர்ஜென்ட் மீட்டிங், இப்போ பெருசா வேலையில்லை… அதான் “ என்றாள்.

“நீ எப்போதும் போல உன் வேலைய பாரும்மா, எதுக்கும் தயங்காத” என்றார் அக்கறையாக.

வீடு இன்னும் உற்சாகம் கொண்டது வர்ணாவை இயல்பாக அனைவரும் ஏற்றனர். தீபி இதெல்லாம் பார்த்தபடிதான் இருந்தாள். மனதில் தோன்றியது… இதில் எப்படி புவன் இவ்வளவு கோவமாக என தோன்றியது.

மணியாக இரவு உணவை முடித்தனர் அனைவரும். வர்ணா பாட்டியுடன் அவர் அறைக்கே செல்ல, தீபி அழைக்க முடியாமல்… அவர்களை பார்த்தபடியே நின்றிருந்தாள்.

இதுவரை தோன்றாத நினைவுகள் எல்லாம் வர தொடங்கின… தொண்டையடைக்க, தன் பெண்ணையே தன்னுடன் வைத்து கொள்ள முடியாதோ என தோன்ற “பாட்டி…” என அழைத்துவிட்டாள்.

ஆனால் அவளின் குரலுடன் ஈஷ்வரின் குரலும் “பாட்டி..” என அழைத்திருந்தது.  தீபிக்கு அப்பாடா என்றானது. ஈஸ்வர் “பாட்டி, எங்க கூட“ என சத்தமில்லாமல் சொன்னவன் வர்ணாவை தூக்கியபடி மாடியேறினான் யாரின் கண்களையும் உறுத்தாமல்.

தீபி அதை பார்த்தும் பார்க்காது போல் அவ்விடம் விட்டு நகர்ந்தாள். இவளும் ஆனந்தி பூரணியுடன் உண்டு முடித்தாள். பூரணியின் வீடு தங்கள் இல்லம் நோக்கி செல்ல, அவர்களை வழியனுப்பி, இவளும் வர்ணாக்கும் ஈஸ்வருக்கும் பால் எடுத்து மேலே செல்ல…

ஈஸ்வர் வர்ணாவை கட்டிலில் தூங்க வைத்து, கீழே பெட்ஷீட் விரித்து வைத்து… தானும் இலகு உடைக்கு மாறி, தீபி வரும் வழி பார்த்தபடி அமர்ந்திருந்தான் ஏதோ யோசனையில்.

உள்ளே வந்த தீபி இதனை பார்த்து அதிர்ந்து, தயங்கியபடியே உள்ளே வந்தாள். தன்போல் உள்ளே சென்றவள், உடை மாற்ற ரெஸ்ட் ரூம் சென்றாள், அவளையே பார்வையால் தொடந்தான் ஈஸ்வர். அவனின் முழு சிந்தனையும் இப்போது தீபியிடம்.

என் திருமணம் ஏதோ ஒரு வகையில் பொதுநலத்துடன் வேண்டும் எனதான், யாரோ ஒரு ராணுவ குடும்பத்தில் பெண் வேண்டும் என நினைத்தேன்.

ஆனால் அந்த உறுதி எல்லாம் தவிடு பொடியாக்கி, அன்று மாலில் உன்னை பார்த்த பொழுது… இவள்தான் உன் பெண் என தெரிந்த போது… எல்லாம் பறந்து போயிற்று, எல்லாமே பறந்து போயிற்று.

ஏன் டி நல்லாவே இருந்திருக்கலாம் கல்யாணம் பண்ணி, ஏன் இப்படி உன் முகமே தொலைத்து… ஒடுங்கி, யாரோ ஒருவரின் முகத்தை எப்போதும் பார்த்து.. நீ இல்லையே இது.

அந்த ஒருவார காலமும் அவன் முன் வந்து போனது…  துரு துரு விழிகளுடன், எப்போதும் பசங்களுடன் சுற்றியபடி, விறைப்பாக சல்யூட் வைக்கும்… தீபிதான்.

அந்த கண்களும் அந்த முகமும் அவ்வளவு பேசும்… நான் ஏதாவது சொல்லும் முன்… சண்டைக்கு நிற்கும் அவளின் குணமெல்லாம் காணாமல் போயி, தனக்குள் ஒடுங்கிக் கொண்டு.. எப்போதும் ஒரு யோசனையுடனேயே சுற்றும் இவளை எப்படி தேற்றுவது… என எண்ணியபடி அவளையே பார்த்திருந்தான்.

உடை மாற்றி வந்தவள், வந்து கட்டிலில் அமர்ந்து திரும்ப, இப்போதும் ஈஸ்வர் தன்னை பார்ப்பது புரிந்தும் திரும்பாமல் இருந்தவள்… அவனின் பார்வை வீச்சை பொருக்க முடியாமல், அவன் புறம் திரும்ப, அவள் எப்போது பார்ப்பாள் என பார்த்திருந்தவன் அவளிடம் “இங்கே வா” என்பதாக தன் வலதுகையை அசைத்தான்.

அவள் இறங்கி வருவதற்குள்… அவளையே பார்த்திருந்தான் ஈஸ்வர்… எங்கிருந்து தொடங்குவது, எப்படி அவளிடம் பேசுவது… என இன்னும் ஆழமாக அவளை பார்க்க, அவள் முகம் ஏதோ போல் இருப்பதாக ஈஸ்வர் உணர்ந்தான்.

ஈஸ்வர் “வா தீபா” என தன் அருகில் தட்டி இடம் காட்ட, அமைதியாகவே அமர்ந்தாள். அவனை பார்த்தபடி. இப்போது ஈஸ்வர்தான் அந்த பெட்ஷிட்டில் கொடு வரைந்து கொண்டிருந்தான்….

தீபி “என்ன தெரியுதா புவன்” என அவளே தொடங்கினாள்…

அதை எதிபார்க்கவில்லை அவன். ஒரு பெருமூச்சுடன் நிம்ர்ந்தான்… திரும்பவும் தீபி “ஏன், நான்… என்னை ஏன்… கல்யாணம், புரியல எனக்கு” என்றாள்.

ஈஸ்வர் இன்னும் வெறித்து பார்த்தான், புதிதாக இருந்தது அவனக்கு, இப்படி ஒரு கேள்வியை அவன் எதிபார்க்கவில்லை. தீபி திரும்பவும் “போனால் போகுதுன்னு, இரக்கம்… “ என தன் கைகளை வருடியபடி அவனிடம் கேட்க.

இந்த ஷணம் வரை அவளின் மனதில் இருந்த கேள்வி கேட்டுவிட்டாள். அதற்கான பதிலும் அவளிற்கு தெரியும்தான். ஆனாலும் அவன் வாய்மொழியாக அது வராது என எண்ணித்தான் கேட்டாள்.

ஆனால், ஈஸ்வர்க்கு அதை மறுக்க தோன்றவில்லை “முதலில் அப்படிதான் தீபா. எனக்கு பெண் பார்க்க சொன்னபோதே,  நான் அந்த மைன்ட் செட்லதான் இருந்தேன்… நீன்னு இல்ல” ஏனோ அதற்கு மேல பிடிக்கவில்லை தீபிக்கு

தீபி “பரவாயில்ல புவன், எனக்கு புரியும்…. எனிவே உண்மைய சொன்னதுக்கு தேங்க்ஸ் “ என்றாள்.

ஈஸ்வர் “அதென்ன பாதியில பேச்சை நிறுத்துவது. பேசிக்கிட்டு இருகேன்ல்ல” என்றான் சிடு சிடுப்பாக.

தீபி எழுந்து கொண்டாள், ஈஸ்வர் “உட்காருடி” என உறுமினான். கேட்டகவில்லை அவள்.

ஈஸ்வர் அமர்ந்த இடத்திலிருந்து அவளின் கையை சுண்டி இழுக்க, நிலைதடுமாறி அவன் மேலேயே… தொப்பென விழ, அழகாக தாங்கிக் கொண்டான் அமர்ந்தபடியே.

தீபி விழுந்த பதட்டத்தில் இருக்க, அவனிற்கு அதெல்லாம் தெரியவில்லை பழையபடி “கொஞ்சம் பொறுமையா சொல்றத கேளேன்… என்னால உனக்கு புரியவைக்க முடியல, எனக்கு தெரியல” என்றான்.

கண்களை மூடி திறந்தவன் திரும்பவும் “என்ன அலோ பண்ணேன் “ என்றான் அதிராமல் அவளை பார்வையால் சுட்டபடி. தீபி என்னவென கேட்க முடியவில்லை. ஐயோ எப்படி என கண்களை விரித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஈஷ்வரின் விழிகள் கெஞ்சவில்லை கொஞ்சவில்லை அவளிடம், அதிகாரமாக அத்துமீறியது. அவனின் முரட்டு இதழ்களும் அவன் வழியே அதிகாரமாக அவளின் எச்சில் அமிர்தம் பருக தொடங்கின.

தீபிக்கு சுதாரிப்பதற்கும், வேறு நினைவு எழுவதற்கும் கூட அவகாசம் இல்லாத படி… தனது தேடலை அவளிடம் தொடங்கினான். விளக்குகள் ஒளியில் தீபி தடுமாற, இப்போதும் சிப்பாய் “என்னடி… “ என நிமிர்ந்து சிடு சிடுத்தான்.

தீபி நிலா காட்டும் குழந்தையாய்… சுட்டு விரல் கொண்டு லைட் என சுட்டிக்காட்ட, பெண்மையின் கூச்சங்கள் தெரியாதவனுக்கு எரிச்சலாகத்தான் வந்தது.

“மச்..” என சலித்தபடி விளக்கணைத்து வந்தவன்… வேக வேகேமாக தொடங்கினான்… ஆனால் பெண்மையின் மென்மை… அவனை வசீகரிக்க, அவனின் தேடல் எல்லாம்… ரசனையானதாக ஆகியது. தேடலின் முடிவில்… நிறைவாய் அவள் நெஞ்சி சாய்ந்தவன்… கசிந்த குரலில் “சாரிடி சாரிடி” என இடைவிடாது புலம்ப தொடங்கினான்.   

       

 

    

   

 

       

    

 

         

 

Advertisement