Advertisement

பௌர்ணமி வர்ணம் – 15

இரவு மணி பனிரெண்டுக்கு மேல் இருக்கும்… நடேசன், அவர்களின் பாதுக்காப்பு வாகனம் முன்னே செல்ல, மணமக்கள் கிளம்புவதாக ஏற்பாடு. எனவே அனைவரும் அந்த ஹோட்டலின் வெளியே மணமக்களை வழியனுப்ப வந்தனர்… அவர்களின் நண்பர் படைகள்தான்.

ஈஸ்வர் அந்த செக்யூரிட்டி வண்டியை பார்த்தவன் “இது எதுக்கு மாமா” என்றான் நடேசனிடம்.

அவர்தான் “என் திருப்திக்குத்தான் மாப்பிள்ளை…” என சொல்லி சமாதானம் செய்து அனுப்பினார் ஈஸ்வரை. தன் எஜமானர்களை தாங்கியபடி மெல்ல நகர தொடங்கியது வண்டி…

வரவேற்பு முடிந்து எல்லோரும் விடை கொடுக்க முன்புறம் வண்ண பூக்கள் ஒட்டிய அழகான வெள்ளை நிற பென்ஸ்…  பட்டு வேட்டியை மடித்து கட்டி, ஒரு கர்வமாகவே அந்த ட்ரைவீங் சீட்டில் அமர்ந்தான் ஈஷ்வர்.

அவனருகில், வர்ணாவை தூக்கியபடி இவனை கவனித்தபடியே நண்பர்களின் கிண்டலில் சிவந்த தன் முகத்தை மறைக்க முயன்றபடி தீபி அமர்ந்திருந்தாள். தீபிக்கு அவனிடம் மனம் ஒன்ற மறுத்தாலும், இந்த தோழர்களின் பேச்சில் அவளை அறியாமல் மனம் ஒன்றதான் செய்தது.

புவன் என்னை இரக்கபட்டுதான் திருமணம் செய்து கொண்டான் எனக்கே தெரிகிறது ஆனாலும், இப்போது நண்பர்களின் பேச்சில், ஏனோ மனம் கோபம் கொள்ள மறுக்கிறது…

ஏதையோ அவனிடம் எதிர்பார்க்க தொடங்கிவிட்டேனா…. பேருக்கு கூட என்னை திரும்பி பார்க்க மறுப்பவனிடம் நான் எதிர்பார்க்க தொடங்கிவிட்டேனா… அப்போ ‘அவனுடன் வாழ்ந்த வாழ்க்கை பொய்யா’ என அந்த மங்கை மனம் தடம்புரள தொடங்கியது.

ஏனோ ஈஷ்வருக்கு வேகம் என்பது, இந்த டிரைவிங் விஷயத்தில் பிடிக்காது போலிருக்கு…. இன்றும் அப்படியே பொறுமையாக வண்டி ஊர்ந்தது… ஆனால் இப்போது அவனின் மனம் முழுவதும் வர்ணாவுடன் சேர்ந்து தீபியும் இருந்தாள்.

அவளின் ஓய்ந்த முகம் தெரியும், சில சமயம் தனக்குள்ளே ஒதுங்கிக் கொள்ளும் முகம் தெரியும்… அவளின் கோப முகமும் தெரியும், அவளின்  பொறமை முகமும் சிறு வயதில் பார்த்திருக்கிறேன், அவளின் தாய்மை முகம் கூட அன்று பார்த்தேன்… இந்த சந்தோஷ முகம்… எவ்வளவு மென்னமயாய் பேசியது அவளின் அதரங்கள்…. எத்தனை தன்மையான சப்த்தம்… ஆக அவள்… இப்படியும் இருப்பாள்… மென்மையாய்… இயல்பான நிகழ்வுகளை எதிர்கொள்வாள்… என பல யோசனை அவனிடம்…

‘எது எதுவோ காரணம்’ என சொல்லி தீபியை மணந்து கொண்டவனது மனம்… இப்போதுதான், இந்த இரவில்தான் உண்மையை அவன் தலையிலடித்து  அவனிற்கே புரிய வைத்தது… ‘ஆக தீபாவை எனக்கு பிடிக்கும்’ என்ற உண்மைதான் அது.

அதுவே ஈஷ்வர் மனதை நிறைக்க, சின்ன புன்னகையுடன் அங்கேயே அந்த ஹாலிலேயே… அவள் அருகில் நின்று அவளை கண்களாலேயே, பாதி விழுங்கி இருந்தான்… இப்போது தனிமையில், அருகில் வேறு இருக்கவும்… மனம் எடா கூடமாக யோசிக்க தொடங்கியது ஈஸ்வர்க்கு.

ஆனால் “ம்மா…” என்ற வர்ணாவின் சத்தம் அவனை தரையிறக்க…. தனக்குள்ளேயே ‘அடங்கு டா நான் மூன்று வயது பொண்ணுக்கு அப்பா… கண்ட்ரோல் கண்ட்ரோல்’ என தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான்.  

கொஞ்சமாக திரும்பி தீபியின் முகம் பார்க்க… அவளின் முகம் அமைதியாக இருந்தது… அதில் நிம்மதியானவன் “இப்போவாது . வர்ணாக்கு சொல்லிக் கொடேன் தீபா” என்றான் தன்மையாகவே.

தீபி திரும்பவுமா என பார்த்திருந்தாள்… ஏனோ அவளின் மனம் அறிய ஆவல் கொண்டது ஈஷ்வரின் உள்ளம்… அதனால்தான் திரும்பவும் இந்த பேச்சு அவனிடம் ”ஒரு தடவ சொல்லு”  என்றான் தன் போல் வண்டி ஓட்டியபடி.

தீபிக்கு என்ன செய்வது என தெரியவில்லை… வர்ணாவை மடியிலிருத்திதான் இருந்தாள்… நான் எப்படி எனும் தயக்கம் வந்தது. இவ்வளவு நேரமிருந்த… அந்த இலகு தன்மை மாறியது அவளிடம், உடல் மொழியும் மாறியது.

சட்டென அவளின் சிரித்தமுகம் மாற கண்ட ஈஸ்வர் ‘தேவையில்லாமல் ஏதோ சொல்லிட்டோம் போல’ என எண்ணிக் கொண்டான். இவர்களின் எண்ணம் முழுவது இதில் உழன்று கொண்டிருக்க….

அந்த வெறிச்சோடிய மெயின் ரோட்டில் எங்கிருந்தோ ஒரு திருப்பத்திலிருந்து வந்த கார்… ராங் வேயில்… இவர்களை நோக்கி வேகமாக வந்தது

அந்த வண்டியின் முகப்பு ஒளி கண்ணை கூச… திடுக்கிட்டாள் தீபி, அதற்குள் ஈஸ்வர்…. தனது வண்டியை ரிவர்ஸ்… மூடில் போட்டு ஹாரன் அடித்தபடி வெகு வேகமாக பின்னால் எடுத்தான் வண்டியை…

கூடவே “தீபி பாப்பாவ புடி… உன் பக்கம் திருப்பி கட்டிபுடி… “ என்றவன்… தொடர்ந்து ஹாரன் ஒலிக்க விட்ட படி… வண்டியை ரிவேர்ஸ் எடுத்துக் கொண்டிருந்தான்.

அந்த வண்டியின் உள்ளே இருப்பது.. யாரென தெரியவில்லை… வண்டி வேறு தாறுமாறாக வந்து கொண்டிருக்கிறது…. எங்கும் திரும்புவதற்கு கூட இடமில்லை…. இந்தப்புறம் டிவைடர், மற்றபடி சாலையில் ஓர கடைகள் ஒரு புறம் என… சாலை நீண்டு சென்றது…

இவர்களின் முன்னாள் சென்ற… அந்த பாதுக்காப்பு வாகனம் தான் இவர்கள் வண்டியின் சத்தம் கேட்டு… திருப்பிக் கொண்டு வந்தனர்… இப்போதுதான் அவர்களிருக்கும் நிலைமை புரிந்தது.

அந்த அகால வேளையில் பெரிதான போக்குவரத்து இல்லை என்றாலும்… ஒன்றிரண்டு வண்டிகளும் இந்த ஹாரன் ஒலியில்… பீதியாகி அங்கேயே தங்கள் வாகனங்களை நிறுத்த தொடங்கினர்.

ஈஷ்வரின் வண்டியின், முன்புறம் வந்த வண்டி நல்ல ஸ்பீட்… அந்த வண்டியை நிறுத்தினால் அன்றி வேறு வழியே இல்லை. எனவே… இவர்களின் பாதுகாப்பு வாகனம் லேசாக அந்த எதிர்வந்த வாகனத்தை தங்கள் வாகனத்தால் தட்டினர்…

ம்கூம் அசரவில்லை அந்த வண்டி… அதற்குள் இருந்தவன் நிதானத்தில் இல்லை போல, இவர்களை திரும்பி பார்த்தவன் மேலும் வேகம் கூட்ட நினைத்து வேகமெடுக்க.

இப்போது பாதுகாப்பு வாகனம் இன்னொருமுறை பலமாக தள்ளியது அந்த வண்டியை…. இப்போது… கொஞ்சம் சுதாரித்த ஈஷ்வரும், தன் வண்டியை நிறுத்தி… முன்புறம் அந்த வண்டியை… முகப்பில் வேண்டுமென்ற இடிக்க… இப்போதுதான் அந்த வண்டி ஆப் ஆனது.

ஈஸ்வர் முழு கோவத்தில் இருந்தான்… இறங்கி சென்று யாரென பார்க்கும் ஆவல். அதனை அடக்கி உள்ளே இருந்தவளின் நிலை அறிந்து திரும்பினான் அவள்புறம்.

ஆனால் பாவம் தீபி, கதி கலங்கி அமர்ந்திருந்தாள். வர்ணாவை இறுக்கி பிடித்தபடி… பின்புறமாக சீட்டில் சாய்ந்து கண்களை அகல விரித்து… சீட் பெல்ட் அணிந்து அந்த சீட்டுடனேயே ஒன்றி போய் அமர்ந்திருந்தாள்.    

இப்போது பாதுகாப்பாக வந்த வண்டி… ஈஷ்வரின் வண்டியை நிற்க விடாது ‘கிளம்புங்க கிளம்புங்க’ என செய்கை செய்ய… ஈஷ்வரின் கார் திரும்பவும்… ரிவர்ஸ் எடுத்து நேராக… வீடு நோக்கி… பாய்ந்தது. வீடு வரும் வரை எங்கும் திரும்பவில்லை ஈஷ்வர்.

இவர்கள் வருவதற்குள்… வீடு பரபரப்பானது… அங்கிருந்த பாதுகாவலர்கள்… கேட்டை திறந்து வைத்து காத்திருந்தனர்… வண்டி நேரே வேகமாக உள்ளே செல்ல… போர்ட்டிகோவில்… கீச்சிட்டு நின்றது அவர்களின் உயிர் காத்த பென்ஸ்…

அதே பரப்புடன் இறங்கினான் ஈஸ்வர்… சீட் பெல்ட்டை விடுவித்து, தன் மனைவி மகளை… அப்படியே… இரு கைகளிலும் ஏந்தியபடி… பெரிய பெரிய எட்டுக்களாக வைத்து மாடி நோக்கி விரைந்தான் அவர்களின் சிப்பாய்.

அவளை கீழே இறக்கி… ஒருமுறை தன்னோடு இறுக்கி அனைத்துக் கொண்டான்… அவனை அறியாமலே அவன் கைகளின் நடுக்கத்தை உணர்ந்தால் தீபி, அவளின் முதுகில்… அவர்கள் இருவருக்கும் நடுவில் வர்ணா.

முதல் முதலாக அவனின் தொடுகையை உணரும் தீபி… அவனின் நேசத்தையும் சேர்த்தே உணர்ந்தாள்… எண்ணி பதினைந்தே நாளில் எங்களிடம் இவ்வளவு நேசமா

அவன் வாய் மொழியாக சொல்லியிருந்தாள் கூட இவ்வளவு நம்பிக்கை வந்திருக்காது. ஆனால் அவன் கையனைப்பு உணர்த்திய கதகதப்பில்… இரக்கம் என்பதையும் தாண்டிய ஏதோ ஒன்றை அவளால் உள்வாங்க முடிந்தது.   

அந்த நொடி பொழுதில் சுதாரித்த ஈஸ்வர் தானே அவர்களை விடுவித்தான்.. அங்கே கட்டிலில் அமரவைத்தவன்.. திரும்பி கீழே செல்ல போக… தீபி “புவன்..” என அவனின் கை பிடித்திருந்தாள்…

எது கொடுத்த தைரியத்தில், அவன் கைகளை பிடித்தாலோ, அதே நிலையிலேயே…”உங்களுக்கு ஒன்னும் இல்லையே” என சடனாக வினவினாள்.

இப்போது கட்டிலில் இறங்கி நின்ற வர்ணாவும் தன் அம்மா அழைப்பதை பார்த்து “ப்பூவன்..” என்றாள் கண்ணை சுருக்கி…

தீபியின் கைகளில் இன்னும் படபடப்பு அடங்கவில்லை… அதை உணர்ந்தவன்… அவளின் அருகில் அமர…. இயல்பாக அவன் தோள் சாய்ந்தாள் தீபி, விக்கி விக்கி ஒரே அழுகை… தீரவேயில்லை… அவளிற்கு.

எல்லோரும் எதிர்பார்ப்பது போல் தீபியும் கணவனிடம் எதிர்பார்த்தது பாதுகாப்பும், நேசமும்தான் அதை அவன் கொடுப்பான் என்று தெளிந்த பின்… மங்கையவள் மனம் அவனிற்காக உருகவே செய்தது.

ஆனால் ஈஸ்வர்க்குதான் மனமெல்லாம் அங்கேதான் இருந்தது. தான் அங்கு சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணமே பிரதானமாக இருக்க சட்டென கோவம், வார்த்தையில் வேகமுமாக “ஏன்டி இப்படி அழற… நான் வேற அங்க போகணும்… விடு என்னை” என்றான் மில்டரி.

தீபிக்கு அதெல்லாம் உரைக்கவில்லை… தன்போல் அவன் மேல் சாய்ந்து ஒரே அழுகை… வர்ணாவும் அவளை போலவே… அவனிடம் சாய வரவும் விருட்டென எழுந்தான் ஈஸ்வர் “வர்ணாம்மா… வாங்க வாங்க…” என தூக்கியபடியே கீழே சென்றான். இவளை கண்டுகொள்ளவில்லை… காரணமாக செய்யவில்லை… அவனிற்கு தெரியவில்லை… இப்போது அவளை தேற்ற வேண்டும் என…

இது போன்ற சமயங்களில் அவன் நிற்பதில்லை தானே மில்டரியில், அதனால்… அவளின் நிலை அவனிற்கு தெரியவில்லை. அவளை விட்டு வந்துவிட்டான் கீழே…

ஈஸ்வர் “சுசிக்கா… இந்தாங்க வர்ணாவை பாருங்க, மேல தீபாக்கு குடிக்க ஏதாவது கொடுங்க, நான் வரேன் “ என்றவன் அவர்களிடம் வர்ணாவை கொடுத்தவன் கிளம்பிவிட்டான் அதே காரெடுத்து.

கதிரேசன் இவர்களின் நிலையறிய போன் செய்தால் ஈஸ்வர், தீபி என இருவரும் எடுக்கவில்லை… இவர்கள் இருவரின் போனும் காரில்தான் இருந்தது. ஈஸ்வர் வந்த அவசரத்தில் எதையும் எடுக்கவில்லை.

பிறகு கந்தனுக்கு அழைத்து விவரம் கேட்டார் கதிரேசன். இவர்கள் வந்து சேர்ந்தனர் என்ற உடன்தான் பெரியவர்களுக்கு நிம்மதியானது.

அதன்பின்தான் நடேசனும் சுந்தரியும் கிளம்பினர். நேரே வீட்டிற்கு வந்தால், ஈஸ்வரை காணம்… இவர்கள் வரவும் இவன் ஆக்சிடென்ட் நடந்த இடத்திற்கு சென்றிருந்தான். சுந்தரிதான் தீபி அறை நோக்கி சென்றார்.

புயல் வேகத்தில் அங்கு சென்றவன்… காரிலிருந்து இறங்கி… நேரே கூட்டத்தை விளக்கி உள்ளே சென்றான். காரில் சாய்ந்து தன் நிலை மறந்து கீழே அமர்ந்திருந்தான் தருண்.

கதிரேசன் போலீஸ் செக்யூரிட்டி என எல்லோரும் நின்று ஏதோ பேசிக் கொண்டிருக்க… வந்த வேகத்தில் தன் முழங்காளால் தருணின் நெற்றியில் ஒரே எத்து.. “டங்கென..” சத்தத்துடன் “ஆ…” என்ற தருணின் அலறல் சத்தமும் கேட்டது.    

அனைவரும் திரும்பி பார்க்க, கதிரேசன் “விடுங்க தம்பி… அவன் நிலையில் இல்லை” என்றார் பதறாமல். இப்போது தருண் நிமிர்ந்து பார்த்து “யார்… “ என பார்க்க.

தருணிற்கு அந்த போதையிலும் ஈஸ்வரை தெரிந்தது, உளற தொடங்கினான்… “என்னடா, பொண்ணு கிடச்ச சந்தோஷமா… அன்னிக்கு பம்மிக்கிட்டு நின்ன..” என்றான்.

இப்போது தன் காலால் அவன் நெஞ்சை மிதிக்க சென்றான் ஈஸ்வர், கதிரேசன் “விடுங்க தம்பி… காலையில பாத்துக்கலாம்” என ஈஷ்வரின் கை பிடித்து தடுத்தார். ஆனாலும் ஒரு அழுத்தம் தருணின் காலில் கொடுத்தே விட்டான் ஈஸ்வர்.

கதிரேசன்  திரும்பவும் “வாங்க வாங்க காலையில் பார்த்துக்கலாம்…” என்றார் ஈஸ்வரிடம்.

செக்யூரிட்டியிடம் திரும்பி “அவனை வீட்டில் விடுங்கப்பா” என்றவர். போலீஸ்சிடம் திரும்பி “விடுங்க எல்லாம் பேசிக்கலாம்… இவன் தெரிஞ்ச பையன்தான், ஏதோ தண்ணில, விடுங்க.. பசங்க வீட்டில் விட்டுடுவாங்க” என்றார் தன்மையாய்.

மந்திரியின் தம்பி இவ்வாறு சொல்லவும், என்ன செய்வது என தெரியாத போலீஸ் கூட்டத்தை கலைத்து சென்றது. கதிரேசன் ஈஸ்வருடன் வீடு வந்தார்.       

தீபி அழுது ஓய்ந்து… நகை புடவையெல்லாம் கணக்க தொடங்க… ஒரு வழியாக எழுந்து சென்று… உடை மாற்றி… மேக்கப் கலைந்து… ஒரு பனியன் க்ளோத் பேன்ட், டி-ஷர்ட்டுடன் அமர்ந்திருந்தாள் கட்டிலில் அங்கு நடந்தவற்றையே நினைத்துக் கொண்டு.

ஒன்றரை மணி நேரம் ஆனது… இன்னும் ஈஸ்வர் வரவில்லை. இவளும் எத எதை யோசித்து தன் மனதை தானே புண்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

வர்ணாவை இப்போதுதான் உறங்க வைத்து, சுசி மேலே… பூஸ்ட் எடுத்துக் கொண்டே வந்தாள்.. தீபியின் அறை கதவை தட்டி பூஸ்ட்டை கொடுத்து சென்றார்.

தீபிக்கு ஈஸ்வரை தவிர வேறு நினைவு இல்லை… அவனை அழைக்கலாமா… வேண்டாமா என எண்ணம்… ஆனால் போனும் கையில் இல்லை.

எனவே எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தாள். அறையை திறந்து கொண்டு ஈஸ்வர் வந்தான். தீபி ‘ப்பா…நூறாயிசு நினைச்ச உடனே வந்துட்டான்’ என எண்ணியபடி அவனையே பார்த்திருந்தாள்.

மாப்பிள்ளை கலை சற்றும் முகத்தில் இல்லாமல்… அதே சமயம் எந்த பாவமும் முகத்தில் காட்டாமல்… வெள்ளை சட்டையை… முழங்கைக்கு மேல் ஏற்றி விட்டபடி வந்து அமர்ந்தான் அங்கிருந்த சோபாவில்.

பின்னாடியே கதவு தட்டி சுசி… பால் கொண்டு வந்து தந்தார். அதை வாங்கிக் கொண்டே கதவை தாளிட்டவள், “புவன் ப்ரெஷ் ஆகி வாங்க..” என இயல்பாக சொல்ல.

ஏதேதோ சிந்தனையில் இருந்தவனது மனம்… அவளின் இந்த மாற்றங்களை உணராமல் “என்ன இப்போ தீடிர் அக்கறை, நான் பார்த்துக்கிறேன்… ப்ளீஸ் லீவ் மீ” என்றான். எங்கோ பார்த்தபடி சிந்தனையாக.    

தீபியும் விடாது “யாருங்க அது… நீங்க பார்த்தீங்களா புவன்” என்றாள். அந்த காரில் யார் தங்களை விரட்டி வந்தது என தெரிந்து கொள்ளும் எண்ணத்தில்…

ஈஸ்வர் “எல்லாம் அந்த தருண்தான்… எப்படியோ பேசறான்… அவன அங்கேயே… வைச்சி சாத்தியிருக்கணும்… வரட்டும் நாளைக்கு இருக்கு அவனுக்கு“ என்றான் கருவியவனாக… வேறு எதுவும் தோன்றவில்லை அவனிற்கு.

தீபி “விடுங்க… அப்பா பார்த்துப்பார்…” என்றாள் இயல்பாக.

ஈஸ்வர் “ஏன் நான் பார்க்க மாட்டேனா… உங்க அப்பா என்ன பார்த்தார் இதுவரை… நான் பார்த்துக்கிறேன்.” என அவளிடம் காய்ந்தான். ஒருபக்கம் தீபிக்கு குளிர்ந்தாலும், மறுபக்கம் அவனின் கோவம் பயத்தை கொடுத்தது.

இந்த இரவு இருவர்க்கும் உறங்கா இரவாக அமைந்தது. கீழே  ஒவ்வருவருக்கும் வேறு வேறு மனநிலை… யாருக்கும் உறக்கம் என்பதேயில்லை அதற்குள் விடிந்து விட்டது.  

 

 

      

Advertisement