Advertisement

பௌர்ணமி வர்ணம் – 13

வர்ணாவின் “ம்மா…மா” என்ற தேடலான வார்த்தையிதான் தன்னிலை மீண்டான் ஈஸ்வர். பிறந்ததிலிருந்து வர்ணாவை தான்தான் கவனிப்பவன் போல… அவளின் தேவைகளை சத்தமே இல்லாமல் கவனித்தான்…

தூக்கிக் கொண்டு கீழே சென்று…. அவளுக்கு பால் கொடுத்து விளையாட செய்தான்… அவளும் ஈஸ்வரிடம் தன் கேள்விகளை கேட்டபடி.. சமத்தகாவே இருந்தாள்.

கிஷோர் வந்தான் அப்போதுதான்… அவனை பார்த்து தாவி சென்றாள் வர்ணா… ஈஷ்வருக்கு முகம் சுருங்கினாலும், நேற்றுபோல்… வர்ணாவை அவனிடமிருந்து பிடுங்கவில்லை… அவர்களை பார்த்தவாறே நின்றிருந்தான்.

 

எல்லோரும் வந்திடவே… வர்ணாவை விட்டு மேலே சென்றான். தீபி இன்னும் தூங்கிக் கொண்டிருக்க… தன் வேலைகளை செய்ய தொடங்கினான்… குளித்து முடித்து கிளம்பி நிர்க்கவும்தான் … தீபி லேசாக கண்விழித்தாள்…

ஈஸ்வர் “குட் மோர்னிங்“ என்றான். அவளும் லேசான தலையசைப்புடன் எழுந்து ரெஸ்ட்ரூம் சென்றாள். அதுவரை அங்கேயே அமர்ந்திருந்தான். அவள், குளித்து ஒரு டாப்புடன் வர… கதவை திருக்கும் சத்தம் கேட்டதும்…

திரும்பி பார்த்தவன்… அவள் அரைகுறையான உடையில்… நிற்பதை பார்த்து ரூமிலிருந்து வெளியே சென்றுவிட்டான். தீபியும் ரெடியாகி கீழே வந்தாள்.

ஈஸ்வர் கந்தனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான் “மதியம் மட்டும் ஏதாவது அசைவம் செய்துடுங்க டெய்லி…. எப்போதும் egg ப்ரிஜ்ல வைங்கண்ணா… போதும்…” என்றான் உண்டு கொண்டே…

தீபி ‘சரியான சாப்பாட்டு ராமன்’ என எண்ணியபடி தானும் சென்று… உண்ண தொடங்கினாள். என்னமோ நைட் அவள்… பால்கனியில் உறங்கியது அவனை என்னமோ செய்தது… எனவே அவளிடம் பேசலாம் எனத்தான் அறையில் காத்திருந்தான். அவள் அரைகுறையாய் வரவும் எழுந்து வந்துவிட்டான். இப்போது என்ன கேட்பது… எனவே அவளை கண்ணெடுக்காமல் பார்த்தாரே உண்டு முடித்து அமர்ந்திருந்தான்.

தீபியும் வேண்டுமென்றே அவனை கண்டுகொள்ளாமல் உண்டு எழுந்தாள். நேரே பூஜை அறை சென்றவள்…. சிறிது நேரம் சென்றுதான் வெளியே வந்தாள். நெற்றியில் திருநீறுடன்…

இதை பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வர் “வர்ணாம்மா…. இங்க வாடா….” என அழைத்தான். ஆனால் வர்ணாதான் இங்கு இல்லையே…. என தீபி பார்த்திருக்க….

முன்பக்கமிருந்த வராண்டாவில் சுசியுடன் இருந்தாள் போல வர்ணா….. தன் சின்ன பாதம் வைத்து… துள்ளி வந்தாள் ஈஸ்வரிடம்.

அவளை தூக்கிக் கொண்டவன் பூஜை அறை சென்று…. குங்குமம் எடுத்து வந்தான்…. அங்கே ஹாலில் அமர்ந்திருந்த கதிரேசனிடம் தீபி ஏதோ பேசிக் கொண்டிருக்க….

யார் இருக்கிறார்கள் என பார்க்காமல் “தீபா…. இங்க பார்“ என்றான்… அவள் அனிச்சையாய் நிமிரவும், அவளின் உச்சி வகிட்டில் குங்குமம் வைத்தான்…. “எப்போதும் மறக்காம வச்சிக்கணும்….” என்றான் புன்னகையுடன்.   

கதிரேசன் அமர்ந்திருந்தவர் எழுந்து நின்றுவிட்டார். அவரை பார்த்தவன் “நீங்க இருங்க மாமா…” என்றவன் தானும் அமர்ந்து கொண்டான். தீபிக்கு அதற்கு மேல் பேச்சு இயல்பாய் வரவில்லை.

கதிரேசனிடம் “சரி சித்தப்பா…. நான் கிளம்பறேன்…” என்றவள் கிளம்பி காரெடுக்க செல்ல… அவளிற்கு முன்பாக சென்றவன் “குடு நான் டிராப்… செய்யறேன்“ என்றான் வர்ணாவை தூக்கியபடியே சாவிக்காக கை நீட்டிய படி.

வராவும் “ம்மா… நானும் நானும் வதன்” என சொல்லிக் கொண்டிருந்தாள்.

இப்போது தீபியின் எரிச்சல்… முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. ஈஷ்வரும் அதனை உணர்ந்து “என்ன செய்வது… இனி இப்படித்தான்“ என்றான் அலட்சியமாக.

அடக்க முடியாத கோவம் சுழல தொடங்கியது அவளுள்…. சாவியை கொடுத்தாள் அவனிடம்… வெளியே நின்று சண்டையிடுவது பிடிக்கவில்லை அவளிற்கு… அவனும் காரெடுக்க… அமர்ந்து கொண்டாள்.

பின்புறம் வர்ணா இருக்க…. தீபி முன்புறம் அமர்ந்தாள்… சிரிது தூரம் சென்றதும் காரில் அமைதி சூழ்ந்திருக்க பொறுமையான குரலில் ஈஸ்வர் தீபியிடம்  “வர்ணாக்கு… நான் யாருன்னு சொல்லிக் கொடு” என்றான் அவளை ஆழ்ந்து பார்த்து. இது கட்டளையா… வேண்டுகோளா என அவளால் கண்டுகொள்ள முடியாத ஒரு குரல்.

தீபிக்கு என்ன செல்கிறான் என புரியவே சற்று நேரம் ஆனது… ‘எப்படி சொல்வேன் நான்…. ம்கூம் முடியாது என்னால், இரக்கம் காட்டிதானே திருமணம் செய்து கொண்டான்…. நான்… ஆனால், சொல்லத்தானே வேண்டும்…’ என அவளின் மனமே இருபுறமும் யோசிக்க… சலிப்பானது இவளிற்கு… என்னை விடவே மாட்டானா!…. இவனுக்கு இதே வேல எப்போதும். என அமர்ந்திருந்தாள்.

திரும்பவும் ஈஸ்வர் “ஒரு தடவ சொல்லேன்..” என்றான் அவளின் சிந்தனை பிடிக்காதவனாக.  

தீபி “ஏன்… நான், நீங்க சொல்லுங்க…. அவ கேட்ப்பா…” என்றாள் மென்று விழுங்கி வார்த்தைகளை துப்பிவிட்டு கண் மூடி சாய்ந்து அமர்ந்து கொண்டாள் இறுக்கமாக.

ஈஷ்வருக்கு சற்று கணம் கூடி போனது மனதில்… ‘நான் எத பார்க்க கூடாதுன்னு நினைக்கிறானோ…. அதேதான் என் கண்ணில் படுகிறது’ என அவளின் ஓய்ந்த தோற்றம் நினைத்து இவன் ஸ்ட்யரிங்கில் லேசாக குத்த…. அது ஹாரன் பகுதியில் பட்டு… ஒலி எழுப்பியது.

இதில் கலைந்த தீபி அவனை லேசாக முறைக்க… அவளின் ரேசொர்ட் வந்திருந்தது. இறங்கி, உள்ளே சென்றாள்…. ஈஸ்வர் காரெடுத்து வர்ணாவுடன் தனது வீட்டிற்கு வந்துவிட்டான்.

எல்லோரும் அவனை பார்த்தனர் ’ஏன் தீபி வரலை நீங்க இருவர் மட்டும் ஏன் வந்தீங்க…’ என்பதை போல் பார்க்க… கண்டுகொள்ளவில்லை அவன்.

அவனின் அப்பா “ஏன்…. மறுமகள கூட்டி வரல” என்றார். “இல்ல… சாயந்திரம் வருவா” என்றான்.

வர்ணாவை, பாட்டியிடம்… பொறுமையாக அறிமுகம் செய்து வைத்தான்…. கொஞ்ச கொஞ்சமாக தன் அன்னையிடமும் வர்ணாவை பேச வைத்தான் முதலில் கோவம்தான் வந்தது ஆனந்திக்கு… பிறகு எப்போதும் போல் தானே சமாதானமும் ஆக்கிக்கொண்டார். எல்லா அம்மாக்களையும் போல்…

எனவே அவரும் பேச தொடங்கினார்…. என்ன பிடிக்கும், என்ன சாப்பிடுவா…. என எல்லாம் குழந்தையிடம் கேட்டுக் கொண்டிருந்தார். வர்ணாவுக்கும் “பாட்டி என சொல்லி கொடுத்தான் “ ஈஸ்வர்.

இப்படியாக நேரம் சென்றது வர்ணாவுடன்…  ராமலிங்கமும் அங்குதான் இருந்தார் கடைக்கு செல்லவில்லை… “எப்போடா…. கடை பக்கம் வர போற” என்றார்.

ஈஸ்வர் “நாளைக்குப்பா…” என்றான்.

மதியமாக, ஆனந்தி “சாப்பிடுடா…” என்றார்.

ஈஸ்வர் “வர்ணாக்கு கொடும்மா…. நான் அங்க செய்ய சொன்னேன்… அங்க சாப்பிடுறேன்… நைட் இங்க” என்றான் கண்சிமிட்டி அன்னையை சமாதனம் செய்யும் விதமாக.

இந்த இலகுவெல்லாம் சாதரணாமாக வராது ஈஸ்வரிடம்… இப்போதுதான் முதலில் பார்க்கிறார் ஆனந்தி. எனவே அவனின் மலர்ந்த முகமே போதும் என நினைத்து அவன் சொன்னபடியே செய்தார் அவர்.

வர்ணா உண்டவுடன் கிளம்பினர் இருவரும்… நேராக ரேசொர்ட் சென்றனர் அவளின் அறைக்கே. வர்ணாவை அவளின் டேபிள் மேல் அமரவைக்க…. எல்லாவற்றையும் கலைக்க தொடங்கினாள் குழந்தை.

நல்ல மூடில் வந்த ஈஸ்வர், வர்ணாவின் செய்கையை பார்த்தவாறே தீபியின் பக்கவாட்டில் குனிந்து வர்ணாவிற்கு தெரியாத குரலில் “ஒரு தடவ சொல்லி கொடேன் அவளுக்கு ப்ளீஸ்..” என்றான் இறைஞ்சுதலாக…

தீபி நிமிர்ந்து பார்க்க, வெகு அருகினில் அவனின் முகம்… எப்போதும் இருக்கும் ஒதுக்கம் மாறி… இளகி…. ப்ளசெண்டாக இருந்தது… மேலும் அவனின் குரலில் ‘செய்யேன்’ என்ற த்வனி வேறு, அவளை என்னமோ செய்ய…. இயல்பாய் உடல் விரைத்தது தீபிக்கு “முடியாது…என்னால முடியாது… நீதான எல்லாம் செய்த… இதையும் செய்துக்க” என்றாள் விட்டேற்றியாக.

எப்போதும் போல் ஆனது ஈஷ்வரின் முகம் எதுவும் காட்டிக் கொள்ளாமல் “போலாமா” என்றான்.

தீபியும் கிளம்ப “அப்பாட்ட வாடா கண்ணம்மா” என வர்ணாவை தூக்கிக் கொண்டான். குழந்தைக்கு புரியவில்லை ஏதும். தீபி என்னமோ செய்துக்க… என முன்னே நடந்தாள்.

அதே மனநிலையில்தான் வீடு வந்தனர் மூவரும். வரும் போதே காரில் வர்ணா உறங்கிவிட… தூக்கி கொள்ள முனைந்த தீபியை “நான் தூக்கி வரேன் நீ போ” என்றுவிட்டான் ஈஸ்வர். முன்னே சென்றுவிட்டாள், காரை நிறுத்திவிட்டு வர்ணாவை தூக்கிக் கொண்டே உள்ளே வந்தான் ஈஸ்வர்….

உள்ளே வர வர சத்தம் பெரிதாக கேட்ட தொடங்கியது. யாராக இருக்கும் என எண்ணியவாறே உள்ளே சென்றான் ஈஸ்வர்… அங்கு தீபியிடம் தருண் “வாங்க வாங்க… உங்களுக்காகத்தான் எல்லோரும் காத்து இருக்கிறோம்…” என்றான் நக்கலாக குரலை உயர்த்தி.

தீபியும் எப்போதும் போல ”வாங்க எப்படி இருக்கீங்க” என்றாள்.

தருணும் அவனின் அம்மா… மட்டும் வந்திருந்தனர். தருண்தான் வெடித்துக் கொண்டிருந்தான் “முடியாதுண்ணா… அப்போதே சொல்லியிருக்க வேண்டியதுதானே…. எல்லோரும் சேர்ந்து என்னை ஏமாத்திட்டீங்க… “ என ஏதோ சொல்லிக் கொண்டிருக்க…

அப்போதுதான் உள்ளே வந்த… ஈஸ்வரை பார்த்தவன், இன்னும் கோவமாக அவனை நோக்கி சென்றான். இதனை பார்த்த தீபி “தருண்….” என்றாள் சத்தமாக. அவன் நிற்கவும்

தீபி “என்ன பண்றீங்க… நீங்க கிளம்புங்க அப்புறம் பேசலாம்” என்றாள் எல்லா எரிச்சலும் சேர்ந்து கொண்டது அவளிடம்.

தருண் “ஏன் பயமா… “ என்றான் விடாதவனாக. இதையெல்லாம் பார்த்துக் கொண்டே… ஒன்றுமே சொல்லாமல் கையில் வர்ணாவுடன் வந்த ஈஸ்வர் தருணை கண்டு கொள்ளாமல் நேராக சுந்தரியின் அறையில் சென்று வர்ணாவை கட்டிலில் கிடத்தி தலையணை வைத்துவிட்டே ஹாலுக்கு வந்தான் ஈஸ்வர்.

அதற்குள் கதிரேசன் தருணை தனியே அழைத்து சென்றார். கூடவே கிஷோர் சென்றான் ஏதோ பேசி அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் போது… ஏதோ சத்தம் போட்டுக் கொண்டே போனான்.

ஈஸ்வர் “யார் அது” என்றான் பொதுவாக..

தீபி ஏதும் சொல்லாமல்… மேலே சென்றாள். சுந்தரி “சாப்பிடுங்க தம்பி மத்தத அப்புறம் பேசலாம்..” என்றார். பேச்சை மாற்றும் விதமாக.

கூடவே “லட்சுமி… வா சாப்பிட்டு போ நீயும்” என்றார்.  

இதற்குமேல என்ன கேட்பது என தெரியாமல் உண்ண உட்கார்ந்தான்… எல்லோரும் சாப்பிட்டனர். தீபி மேலே சென்றுவிட்டாள். கிஷோர் நாளை விடியற்காலை லண்டன் செல்வதால்…. “மாம்ஸ்… ஷாப்பிங் போகணும் வரீங்களா…” என்றான். ஈஸ்வருடன் தனியே பேச வேண்டும் போல் இருந்தது அதனால்.

ஈஷ்வரும் உற்று பார்த்தான் கிஷோரை “போலாம்..” என்றான். எனவே இருவரும் கிளம்பினர் அப்போதே. காரோட்டும் போதே கிஷோர் ஈஸ்வர் பார்ப்பதும் திரும்புவதுமாக இருந்தான்.

கிஷோர் “எப்போதும் தீபி கூடத்தான் வருவேன்… இப்போதான் உங்க கூட….” என்றான். ஒன்றும் சொல்லவில்லை ஈஸ்வர் லேசாக சிரித்தான். வேறு எப்படி பேசுவது ஆரம்பிப்பது என தெரியவில்லை.

மெல்லிய குரலில் தருண் பற்றி சொன்னான் கிஷோர். ஆனால் தருணை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை போல ஈஸ்வர் ‘அப்படியா’ என கேட்டு அமைதியாகிவிட்டான்.

அதன்பின் கிஷோர் இலகுவானான்… அந்த மூன்று மணி நேரத்தில் ஈஷ்வரின் தாசனாகியிருந்தான் கிஷோர். ஏனோ முன்பே கிஷோருக்கு ஈஸ்வரின் மேல் ஒரு நம்பிக்கை… அவன் வர்ணாவை பார்த்த பார்வையிலேயே… அதன் பிறகு… தீபியை முன்பே தெரியும் எனும் போது இன்னும்…. நம்பினான் தன் மாமனை. எனவே ஈஸ்வர் பேசாவிட்டாலும் அவனின் வேவ் லென்த் தெரிந்து தானே பேசினான் கிஷோர்.  

இவர்கள் வீடு வரவே மாலை ஏழு மணியாகியது. வந்தவுடனே ரூமிற்கு சென்றவன் “தீபா… கிளம்பு வீட்டுக்கு போயிட்டு வரலாம்” என்றான்.

தீபாவும், தன் அன்னையிடம் சொல்லி வர்ணாவை கிளப்ப செய்து தானும் கிளம்பினாள். கீழே ஈஸ்வர் இருக்க… இறங்கி வந்தவளை பார்த்தவன் கொலவெரியானான்.

இப்போது இவன் எழுந்து மேலே சென்றுவிட்டான்… தீபி பெ பெ வென விழித்தாள். சுந்தரி “போடி… போய் புடவைய கட்டு…” என முனகிக் கொண்டே திட்ட….

தீபி பொத்தென அமர்ந்து விட்டாள். சிறிது நேரம் சென்றுதான் மேலே சென்றாள்…. தன் அறைக்கு சென்று தயாராக தொடங்கினாள்… அழகான ஜூட் சில்க்… ப்ளூ வித் க்ரே காமிநேஷனில் கட்டி… தன் நெற்றியில் குங்குமம் இருக்கிறதான்னு பார்த்து வந்தாள்.

அதுவரை ஈஸ்வர்… அந்த மாடியிலேயே உள்ள… பொதுவான பால்கனி… முன்புறம் வாசலை பார்த்தவாறே அமைந்திருக்கும்… அதில்தான் நின்றிருந்தான். எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டு.

இவள் வந்து நின்றாள்… ஈஸ்வரும் தெரியாதவன் போல் நடந்து கொண்டிருந்தான்.. தீபியும் என்ன என்னமோ செய்து பார்த்தாள்… ம்கூம் பார்க்கவில்லை. ‘என்ன செய்வது ரொம்ப படுத்தறான்’ என நினைத்தவள்… “புவன்…” என்றாள்.

வேண்டுமென்றே திரும்பவில்லை ஈஸ்வர்… மீண்டும் ஒரு முறை அழைத்தாள் “புவன்” என்றாள் அழுத்தி.

கொஞ்சம் உச்சிதான் குளிர்ந்தது ஈஷ்வருக்கு மெதுவாக திரும்பினான். ஆனாலும் முகத்தில் எதுவும் காட்டாமல்… அவளை கீழிருந்து மேலாக ஒரு பார்வை பார்த்தான்… “இனி எப்போதும் சொல்ல மாட்டேன்… புடவை கட்டு… நெற்றில போட்டு வைன்னு… இனி நீதான் பார்த்தக்கணும்“ என்றான் அமைதியான குரலில்.

சின்ன நடுக்கம் வந்தது… தீபியினுள். மெல்ல அவளின் தோள்களின் இருபுறமும்.. அவளின் பட்டு கேசத்தை எடுத்து போட்டு அழகு பார்த்தவன் “குட்…” என்றவன் அவளின் தோள்களை தன்னுடன் சேர்த்தணைக்க… தீபி அப்படியே நின்றாள்.

ஈஸ்வர்…லேசாக சிரித்தவாறே… அவனும் நின்ற இடத்திலிருந்தே இன்னும் ஒருமுறை சேர்த்தணைக்க… இப்போதும் ஒன்றாமல் விறைப்பாக நின்றாள். இப்போது ஈஸ்வர் தன் கைகளில் அழுத்தம் கொடுத்து இழுக்க… கால் தடுமாறி அவன் நெஞ்சில் அவளின் தோள் இடிக்க…

தீபி ஏதோ முனு முனுத்தாள்… ஈஸ்வர் அவளையே விழி எடுக்காமல் பார்க்க… சத்தமே இல்லை அவனிடம் என்றது நிமிர்ந்து பார்த்தாள் தீபி.. அதை பார்த்து ஈஸ்வர் “என்ன சொன்ன…” என்றான் அவளை அனனைத்து பிடித்தவாறே

தீபி “ஒண்ணுமில்ல…” என்றாள் அவனிடமிருந்து திமிறி விலகியபடி… ஈஸ்வர் குனிந்து அவளின் முகம் பார்த்து “என்ன சொன்ன…” என்றான்

தீபி… “ம்… சிப்பாய்க்கு…. கொழுப்பு ஜாஸ்தின்னு சொன்னேன்” என்றாள்.

ஈஸ்வர் “சிப்பாய்… ஏய்… என் க்ரேடு என்னான்னு தெரியுமா… உனக்கு என்னமோ…” என்றவன் திரும்பவும் “ஆமாம்டி… சிப்பாய்தான்… சிப்பாயேதான்…” என்றான் அவளின் மூக்கில் நுனியில் விரலை வைத்து ரசனையாய்.

தீபி “போலாம்… அம்மு தூங்கிடுவா…” என்றாள் அவசரமாக.

ஒருவாறு சமாளித்து மனதே இல்லாமல் கிளம்பினான் ஈஸ்வர்… காரில் செல்ல செல்ல… இருவருக்கும் சேர்த்து பேசினாள் வர்ணா…   

அங்கு ஈஷ்வரின் வீட்டில் எல்லோரும் இவர்களைத்தான் எதிர்பார்த்து காத்திருந்தனர்… சித்தும் தன்யாவும் கூட அங்கிருந்தனர். பூரணி குறு குருவென பார்த்திருந்தாள் தீபியை.

பாட்டிக்கு மிகவும் சந்தோஷம்… நிறைவான புன்னகையுடன்… பார்த்திருந்தார். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பேச்சு தொடங்கியது. பூரணி குழந்தைகளுக்கு ஊட்ட தொடங்கினாள்…

பெரியவர்கள் உணவு உன்ன தொடங்கினர்… கூடவே தீபியை, ஆனந்தி பரிமாற அழைத்தார். நேரம் சென்றது…. உணவு உண்டு முடித்து தூங்கும் குழந்தைகளை தூக்கியபடி… ராமும், ஈஷ்வரும் தத்தமது இடங்களுக்கு நகர… பார்த்திருந்த பெரியவர்களுக்குத்தான்…. என்னவோ போல் இருந்தது.       

பாட்டிதான் “வாருவாங்க…. எல்லாம் சரியாகட்டும்…. எங்க போய்ட போறாங்க பசங்க….” என தன் மகனையும் மருமகளையும் தேற்றினார்.

லேட் நைட்…. வர்ணாவை மடியில் வைத்துக் கொண்டே…. முன்புறம் அமர்ந்திருந்தாள் தீபி… ஈஸ்வர் வீட்டின் சுழல், தீபயை ஈர்க்க தொடங்கியது. எல்லோரும் சாதரனாமாக பார்ப்பதுபோல் உணர்ந்தாள்.

முன்பு போல்… யாரும் தன்னை பாவமாக பார்ப்பது போல்… தோன்றவில்லை. அதுவே அவளை இயல்பாக இருக்க வைத்திருந்தது. எனவே காரில்…. அமைதியாக வீடு வந்தனர்.

 

 

 

     

  

 

   

 

Advertisement