Advertisement

பௌர்ணமி வர்ணம் – 12

கிஷோர் சிற்றுண்டியுடன் மேலே வந்தான். நந்தன் முகம் மட்டும்… வாடியிருக்க… மற்றவர்கள் கலகலப்பாக இருந்ததை கண்டு கொண்டான்.

கிஷோர் காலிப்ளார்… பக்கோடவுடன்  வர… வர்ணா…. “என்னக்கு … என்னக்கு…” என கை நீட்ட… பின்னாடி காபி எடுத்து வந்த…. சுசியின் தட்டில் கை பட்டு சுட்டு விட்டது. வர்ணா சத்தமில்லாமல் அழுக தொடங்க…. சுசி பதறிவிட்டாள்.

எல்லோரும் என்ன என பார்க்க… வர்ணா கிஷோரிடம் “உ… சுட்டு” என மொழிந்து அவனை கட்டிக் கொள்ள… அவனும் வெளியே தூக்கி சென்று தண்ணீர் பைபிள் கை காண்பித்து… ஊதிவிட… பின்னாடிதான் தீபி எழுந்து சென்றாள்.

இதையெல்லாம் வேடிக்கை பார்த்திருந்தான் ஈஸ்வர். ஆக எல்லாம் கிஷோர்தான் என எண்ண தோன்றியது ஈஷ்வருக்கு. இதை அப்படியே விட கூடாது என நினைத்தான்.

ஈஸ்வர் “கண்ணம்மா…. வாடா…” என கிஷோரிடமிருந்து வர்ணாவை வாங்கினான். கிஷோருக்கு கோவம்தான் வந்தது. ஆனால் இதை எதிபார்த்தான் தான் கிஷோர் அப்போதே. எனவே அமைதியானான்.

வர்ணாவும் இன்னும் சிணுங்கிக் கொண்டே “உ…வா… அங்க சுட்டு” என ஈஸ்வரிடமும் சிணுங்க, தோளில் சாய்த்து “ஒண்ணுமில்ல டா, “ என ஈஷ்வரும் முதுகை நீவிவிட… கிஷோர் கொஞ்சம் பாவமாகவும்… கொஞ்சம் திருப்தியாகவும் பார்த்திருந்தான் இவர்கள் இருவரையும்.

கிஷோரின் பின்புறம் நின்றிருந்த தீபிக்கு, அப்படியே வர்ணாவை ஈஸ்வரிடமிருந்து வாங்கி கிஷோரிடம் கொடுக்க வேண்டும் போல் வெறியே வந்தது. ‘எப்படிதான் யாரை பற்றியும் யோசிக்காமல் இப்படி இருக்கிறானோ…’ என தோன்றியது.

அப்படியே ஒவ்வருவரும் தங்கள் வேலையை பார்க்க தொடங்கினர். சுந்தரி ”லட்சுமி..” என தீபியை அழைத்து ‘முகம் கழுவி… புடவை கட்டு’ என்றார் இவளும் சரி சரி என தலையாட்டி சென்றாள்.

தீபி ரூமிற்குள் சென்றவள்தான் வரவே இல்லை. ஈஸ்வருக்கும் தீபியின் அறையையே பயன்படுத்திக் கொள்ளட்டும் என நினைத்து பார்த்திருக்க… தீபி வெளியே வருவதையே காணம்.

சுந்தரி “ஏய்… என்னடி… சீக்கிரம் வா” என தட்ட ‘ம்..ம்’ என்ற சத்தம் மட்டுமே வந்தது. இன்னும் அரைமணி நேரம் கழித்தும் வரவில்லை.

அதற்குள்… கிஷோர் “வாங்க மாமா… அப்படி சொல்லலாம்ல்ல..” என்றான் முகத்தை பார்த்து தயக்கமாய். கிண்டல் இல்லை இதில்.

ஈஸ்வர்  யோசிக்காமல் “கண்டிப்பா…  நீதான் சொல்லணும்” என்றான் முகத்தில் புன்னகை இருந்தது. இப்போதும் வர்ணா.. ஈஷ்வரின் கையிலிருந்த படியே தன் மாமா, ஈஸ்வரை மாமா என சொல்லுவதை பார்த்து… “பூ…வன் ம்மா..மா “ என்றாளே பார்க்கலாம் ஈஷ்வரின் முகம் அஷ்ட்டகோனலானது.

அதனை பார்த்து கிஷோர் பெருங்குரலெடுத்து சிரிக்க… ஏதோ தான் சரியாக செய்ததால் மாமா சிரிக்கிறான் என நினைத்து வர்ணா திரும்பவும் ‘பூவன் மாமா…’ என்றாள் ஈஸ்வரை பார்த்து…. இன்னும் சிரித்தான் கிஷோர். ஏனோ அதிசியமாக கோவம் வராமல் கிஷோரையே பார்த்திருந்தான் ஈஸ்வர்.

கிஷோர் சிரித்தபடியே “வாங்க மாமா… என் ரூம் யூஸ் செய்துக்கங்க… அவ இப்போதிக்கு வராமாதிரி தெரியல…. வாங்க “ என அழைத்து சென்றான்.

இப்போதுதான் கோவம் வந்தது அவனிற்கு ’எப்படிதான் இப்படி இருக்காளோ இவ’ என ஈஸ்வர் நினைத்திருந்தான்.

நேரம் செல்ல… இரவு மணி பத்தை நெருங்கியது. ஒருவித அமைதி வந்தது வீட்டில்… முதலிரவு, தீபியை மனதில் கொண்டு இங்கேயே நடக்கட்டும் என ஈஸ்வர் வீட்டினர் சொல்லி சென்றனர்.

தீபியின் நட்புகள் அவளை லேசாக ஒப்பனை செய்து, புடவை கட்ட வைத்து… ஏதேதோ பேசி சரி செய்யத்தான் நினைத்தனர். ஆனால் அது முடியவில்லை அவர்களால். ஆனாலும் காட்டிக் கொள்ளாமல் சிரித்தபடியே நழுவினார் அங்கிருந்து.

அனைவரும் விடை பெற்று கிளம்பினர்.. வீடே இறுக்க நிலைக்கு வந்தது. சீமா… வர்ணாவை தூக்கிக் கொண்டு “நம்ம டாடா… போலாம் டா” என பேசிய படியே கிளம்ப நினைக்க…

தீபி “ப்ளீஸ்… அவள எங்கிட்ட கொடுங்க டி” என்றாள் சற்று சத்தமாக.

மித்ராவும் சீமாவும் எவ்வளவு சொல்லியும் கேட்டகவில்லை தீபி பிடிவாதமாக நின்றாள். ஈஸ்வர் அமைதியாகத்தான் இருக்க முடிந்தது அவனால் யாரையும் அதட்ட முடியவில்லை.

தன் வீடாக இருந்தால் ஏதேனும் சொல்லி இருப்பானோ என்னவோ… இப்போது எது பேசுவது என தெரியாமல் வேடிக்கை மட்டும் பார்த்து நின்றிருந்தான்.

ஒருவாறு வர்ணாவை விட்டு கிஷோர் உற்பட அனைவரும் வினோ வீட்டிற்கு கிளம்பினர். நடேசன் மாலையே திருச்சி கிளம்பிவிட்டார். கதிரேசன் உண்டு முடித்து ரேசொர்ட் கிளம்பிவிட்டார்.

சுந்தரி தீபியிடம் “மாப்பிள்ளைக்கு பால் வேணுமான்னு கேட்டு எடுத்து போ..” என்றவர் தன்னறையில் சென்றுவிட்டார்.

ஈஸ்வர் கிஷோரின் அறையிலேயே இருந்தான்… டிவி தன் வேலையை செய்ய… இவன் அதனை வெறித்துக் கொண்டிருந்தான்.

வர்ணா…. மேலே வந்தாள் “பூவன்… பால் தரவா…. அம்மா கேட்டா…” இதுதான் அவனின் மான்குட்டி சொல்ல வந்த வார்த்தை. ஆனால் கண்களை உருட்டி, கைகளை பால் குடிப்பது போல் செய்கை செய்து, என்னென்னமோ சொல்லி கடைசியாக அவளின்… ‘வேன்னு ம்மா…’ என்ற வார்த்தை மட்டுமே புரிந்தது அவனிற்கு.

என்னனென்னமோ யோசித்து கொண்டிருந்தவனது சிந்தனை முழுவதும் குழந்தையின் மழலையில் லயிக்க…. வாரி எடுத்து கொண்டு கீழே வந்தான்…

அங்கு கிட்செனில் தீபி மட்டும் நின்றிருக்க…. பின்னிலிருந்து “என்ன தீபா சொன்ன… இவகிட்ட” என மிக சாதரணமாக கேட்க….

தீபியும் எதுவுமே நடவாதது போல் “உங்களுக்கு பால் வேணுமா… கேட்க சொன்னேன்” என்றாள். அவனை திரும்பியே பாராது.

ஈஸ்வர் “ம்… பூஸ்ட் … மாதிரி ஏதாவது கலந்து கொடு…” என்றான்

வர்ணா…”ம்மா… எனக்கு பூத்…” என தானும் சேர்ந்து குரல் கொடுத்தது.

வர்ணா கேட்ட உடன்… தீபி பூஸ்ட் ஊற்றிய சிப்பரை கொடுக்க… அதை வாங்கி கொண்டு…. ஹால் சோபாவில் அமர்ந்து கொண்டு…. குடிக்க தொடங்கினாள் சமத்தாக.

அவர்களின் கிட்சென் சற்று ஒரு ஸ்டேப் ஏறி செல்வது போல் இருக்கும்… எனவே ஏறி உள்ளே சென்றான்… நல்ல பெரிய கிட்சென்…. தீபி அடுப்பிடம் நின்றிருந்தாள்… அவளை பார்த்தவாறே சற்று தள்ளி தூரமாக மேடையின் மீது ஏறி அமர்ந்து கொண்டான் ஈஸ்வர்.

அவனின் பார்வையில் எப்போதடா பால் பொங்கும் என ஆகிவிட்டது தீபிக்கு. ஈஷ்வரும் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் அவளை பார்வையால் வருட தொடங்கினான்.

அழகான ஆரஞ்சு வர்ண… சாப்ட் சில்க் சாரீ…. அவளின் நிறத்தை எடுக்காட்டி, கற்கண்டு உடலை தழுவி இருந்தது. எப்போதும் போல்… அவளின் கேசத்தை… கேட்ச் கிளிப்… இறுக்கி நிற்க…. அவளின் மூக்கின் நுனி கோவமும்… தான் பார்ப்பதால் அவள் படும் அவஸ்த்தையையும்… ஒரு வசீகர புன்னகையுடன் பார்த்திருந்தான் ஈஸ்வர்.  

தட்டு தடுமாறி பூஸ்ட் கலந்து அவனிடம் கொடுத்தவள்… அங்கிருந்து நகர… பிடித்துக் கொண்டான் அவளின் கையை. தீபி நடுங்கித்தான் போனாள். ஆம் அவன் பிடியிலிருந்த கைகள் நடுங்க தொடங்கியது.

இப்போது அவளை முன்பக்கம் பார்க்க வசதியாக லேசாக சுண்டி இழுக்க… வெளிப்படையாக அவனின் பிடியில் கை நடுங்கியது. அதை பார்த்து கையை விட்டான் ஈஸ்வர்.

சற்று பயந்து போனான் “உட்கார் தீபா…” என மேடையிலிருந்து இறங்கி சொன்னான்.

தீபி “நான் மேல போறேன்….” என்றவள் ஓடிவிட்டால்.

ஈஷ்வருக்கு ஒன்றுமே புரியவில்லை… பூஸ்ட் குடித்த கப்பை… அங்கேயே வைத்துவிட்டு வந்தான். ஹாலில் இன்னமும் குடித்து கொண்டிருந்தாள் வர்ணா.

ஈஸ்வர் “கண்ணம்மா…. முடிஞ்சிதா….டா” என கேட்க.

வர்ணா “போம்ம் மா…” என்றாள். அவனும் வாங்கி வைத்துவிட்டு. அவளை தூக்கி கொண்டு மேலே சென்றான்.

தீபியின் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான். தீபி உடை மாற்றி… ஒரு தொள தொள நைட் டிரஸ்ஸுக்கு மாறியிருந்தாள். ஈஷ்வருக்கு ‘என்ன பண்ணிடுவாங்களாம் இவள…’ “ம்…” என பெருமூச்சு விட்டு…

வர்ணாவை கட்டிலில் இறக்கி விட்டு…. தானும் அமர்ந்தான். பர பரவென வர்ணாவை தூக்கி கொண்டு ரெஸ்ட் ரூம் சென்றாள் தீபி. வர்ணாவிற்கு ப்ரெஷ் செய்து விட்டு… இன்னும் சிலதெல்லாம் முடித்து… தூக்கி வந்தாள்.

அவளிற்கும் ஒரு தொள தொள நைட் டிரஸ் மாற்றி விட்டாள். அந்த… அறையில் ஈஸ்வர் இருப்பதாக கூட… நினைக்கவில்லை தீபி… “படுடா அம்மு…” என சொல்ல…

வர்ணா “ம்மா…. கத… கத… பிஸ்..ம்மா…” என சினுங்க தொடங்கினாள்.

தீபி சிரித்துக் கொண்டே “நாளைக்கு…. நாளைக்குதான்… இன்னிக்கு அம்மாக்கு நீ காலையில முத்தவே தரல…. அதனால நோ கத…. நோ கத…” என சொல்ல

வர்ணா அழகாக சிணுங்கினாள் “ம்மா… மா… பிஸ் ம்மா…” என சொல்லியபடியே தன் அன்னையின் கன்னத்தில் மாறி மாறி முத்தம் வைக்க…

இதையெல்லாம் கேட்டபடியே அமர்ந்திருந்தான் ஈஸ்வர்… இன்னும் லைட் அனைக்கவில்லை. இங்கே படுப்பதா… இல்லையா… தீபி ஏதும் சொல்லவில்லை எனவே இங்கேதான் சயனம் என எண்ணியவன்.

தன்புறம் இருந்த சுவிட்ச்சை ஆப் செய்தான். வர்ணா… இன்னும் கதை கேட்டுக் கொண்டிருக்க… மெல்ல ஆரம்பித்தாள் தீபி “கண்ணனனுக்கு நாவல் பழம்னா…. ரொம்ப பிடிக்குமா….” என ஆரம்பித்து.. அந்த கண்ணனின் விளையாட்டை…. ரசனையாக சொல்ல தொடங்கினாள் தீபி.

வர்ணாவும் கூடவே… “ம்… “ கொட்டி கேட்டுக் கொண்டிருந்தாள்…. கூடவே சிரிப்பு வேறு, கதை நீண்டு கொண்டே செல்ல…. வர்ணா தூங்கியும்விட்டாள்… கூடவே ஈஷ்வரும்.

மெதுவாக எழுந்த தீபி, வெளியே பால்கனிக்கு வந்தாள்.. கண்ணுக்கு தெரியாத தூரத்து கடலின் சத்தம் அவளை வரவேற்றது. இப்போதுதான் பின்னிரவில் தோன்றும் நிலவு…. மிகவும் பிரகாசமாக தெரிய… தீபியின் விழி நீர் நிற்காமல் வழிய தொடங்கியது.

எத்தனை காரணங்கள் எனக்கு…. யார்க்கும் வர கூடாத காரணங்கள். ஒருவனை உணரும் முன்பே தொலைத்தேன்…. ஆனால் இப்போது எங்கோ தொலைந்தவன் வந்து இரக்கம் காட்டி நிற்கிறான்… இது நிரந்தரமாகுமா… நிலைக்குமா…. கடவுளே!’ என ஆழ் மனதிலிருந்த குரல் சத்தம் செய்ய வாய்மூடி அழ தொடங்கினாள் தீபி.

வேறெதுவும் தோன்றவில்லை…. நிலைக்குமா…. நடக்குமா… என்ற எண்ணமேதான் அவளுள். என்ன முயன்றும் அவளால் தன் அழுகையை நிறுத்த முடியவில்லை.

ஈஸ்வர்க்கு இது எதுவுமே தெரியாது அப்போதே உறங்கியவன்தான் சரியாக காலை நான்கு மணிக்குதான் எழுந்தான். நேற்றைய அலைச்சல் எல்லாம் சேர்த்து அடித்து போட்டது போல் நல்ல உறக்கம் அவனிற்கு.

பால்கனியில் தீபி, அங்கிருந்த ஜூலோவிலேயே கால் கைகளை குறுக்கி உறங்கிவிட்டாள்… உள்ளே வரவில்லை. ஈஸ்வரும் அதனை கவனிக்கவில்லை எப்போதும் போல்… காலை கடன்களை முடித்து…. கடமை தவறா வீரனாக ஜாக்கீங் சென்றுவிட்டான்.

ஏனோ இன்று சீக்கிரமே வந்துவிட்டான் ஐந்து கிலோமீட்டருடன். கீழே அப்போதுதான் கந்தன் எழுந்திருந்தார்… “அண்ணா… ஒரு க்ரீன் டீ கிடைக்குமா” என்றான்.

கந்தன் “தோ தம்பி….” என்றார்.

வேர்வை வழிய அங்கேயே… முன்னிருந்த தோட்டத்தில்…. சற்று நடக்க… இருள் கூட அகலாத விடியல்…. பொறுமையாக இரண்டு தரம் சுற்றி வந்தவன் ஏதோ தோன்ற மேலே பார்க்க…. தீபி… தெரிந்தாள் அந்த ஜூலோவில்…

ஈஸ்வர்க்கு… ஏதோ அனாதரவாக… கைகால்களை குறுக்கி… கழுத்தை வளைத்து தூங்குவதை பார்க்க பார்க்க…. ‘இதைத்தானே பார்க்க கூடாது என மணந்து கொண்டேன்…’ என நினைத்தவன் உள்ளே சென்றான் அவசரமாக.

கந்தன் “மாப்பள தம்பி… டீ” என்றழைக்க. அதையும் ஒரு கையில் வாங்கிக் கொண்டவன்… நான்கு நான்கு படிகளாக மேலே ஏறினான் இரண்டே ஜம்பில்.

ரூமின் கதவை திறந்து… பால்கனி கதவையும் திறந்து பார்க்க…. ஒரு கோவம்… ஒரு திமிர்… ஒரு வருத்தம் கூடவே குதுகலம் என கலவையான மனநிலையில் அவளை கைகளில் ஏந்த..  

நல்ல தூக்கத்தில் இருந்தாள் போல தீபி…. விடியலில் தானே உறங்க தொடங்கினாள் ஈஸ்வர் தூக்கியது தெரியவில்லை போல… அவனும் அலுங்காமல்… குலுங்காமல்… தன் நெஞ்சோடு சேர்த்து… லேசாக சாய்த்தவண்ணம்… தூக்கி இருந்தான், இப்போது தன் டி-ஷர்ட்டின் மீது படிந்த அவளின் பிங்க் விரல் நுனி… அவனை எங்கோ இழுத்தது….

அவளை கீழே விட மனமற்றவனாக அழகாக பொறுமையாக கட்டிலில் விட… இன்னும் சுருண்டு படுத்துக் கொண்டாள் தீபி…. அவளிற்கு போர்வையை எடுத்து போர்த்திவிட்டு…. நகர்ந்தான் ஈஸ்வர் ஒரு பெரு மூச்சுடன்.

ஏதேதோ எண்ணத்துடன்…. வர்ணாவின் அருகில் அமர்ந்து, கையில் கிரீன் டீயுடன்… தீபியின் மேல் பார்வையை எடுக்காது அவளையும் சேர்த்து பருக தொடங்கினான்.  

அவளை முதலில் பார்த்த போது இருந்த அதே முகம்.. என்ன அப்போது அந்த விழியில் அத்தனை குறும்பும் துடிப்பும் மின்னும்… ஸ்கௌட் ட்ரெஸ்ஸில் தோள்வரை மட்டுமே உள்ள பின்னலில்… முன்புறம் கட் செய்து அவளின் இடது கண்களை மட்டும் லேசாக மறைக்கும் கற்றை முடியை எப்போதும் காதின் ஓரம் ஒதுக்கும் அவளின் பிங் நிற விரல் நுனி… இப்போதும் அதேதான்…

அப்போதே எனக்கு தெரியவில்லையே….. இப்படி இவள் நிர்கதியாய் நிற்பாள் என, தெரிந்திருந்தால்…. சாதரணமாக கடந்திருக்க மாட்டேனே இவளை…

எப்படி துள்ளலாக என்னிடம் வம்புக்கு நிற்பாள்…. ‘நான் வின் செய்ய கூடாது என என் சாக்ஸை ஒழித்து வைத்தவள்தானே… இவள்…’ என அன்று நடந்தது இன்று கண்முன் தோன்றியது ஈஸ்வர்க்கு.

அந்த NCC ப்ரைடில்…. மாநில அளவிலான ப்ரைடு அது. தமிழ்நாட்டில் தேர்வாகியிருந்த ஐந்து பள்ளிகளுக்குள் நடக்கும்… போட்டி. அங்கிருந்த ஒரு வாரமும் எப்போது பார்த்தாலும் முறைத்துக் கொண்டே இருப்பான் ஈஸ்வர்.

அதில் தீபியின் பள்ளிதான் மிகவும் செழிப்பானனது. மேலும் அவர்கள் தங்களை ஏதோபோல்… பார்ப்பது ஈஷ்வருக்கு பிடிக்காது. எனவே நன்றாக முறைப்பான். பேசவந்தால் தள்ளி செல்லுவான்… சட்டென யாரிடமும் ஓட்டமாட்டன். இப்படிதான் சென்றது அவர்களின் சந்திப்பு. இதுவே தீபியிடம் ஒரு வெறுப்பை உண்டாக்கி இருந்தது.

அதனாலே தீபிக்கு பிடிக்காது ஈஸ்வரை. மேலும் தங்கள் பள்ளியை விட அவர்களின் பள்ளி சிறப்பாக செய்வது… இன்னும் பிடிக்காது அவளிற்கு.

எதற்கெடுத்தாலும் ஈஸ்வருடன்தான் போட்டி வரும் தீபிக்கு… ப்ராக்டீஸ் தவிர மற்ற நேரங்களில் வாலிபால் விளையாடுவார்கள். அப்போது தீபியின் பள்ளிதான் சிறப்பாக செய்யும்.

ஆனால் எப்போதும் போல ஈஸ்வரனின் பன்ச்தான் சிறப்பாக அமையும் எனவே… அதற்கும் அவனைத்தான் முறைப்பாள்… அவனும் இன்னும் குஷியாகி… அதிக எனர்ஜியுடன் விளையாடுவான்… இப்படியான ஒருவார பழக்கம்தான் இவர்களுக்குள்….     

 

ஈஸ்வரனின் ஸ்கூல் ப்ரைடுதான் வின் செய்யும் என எல்லா பள்ளிகளும் பேசிக் கொண்ட நிலையில். இவன், ஈஸ்வர்தான் ட்ரில் எடுப்பான்…. அவனின் குரல் வளம் அப்படி…. அன்று மெயின் ட்ரில்.

அதற்கு முதல் நாள் இரவு…. இவர்கள் தங்கியிருக்கும் பகுதிக்கு வந்த தீபி அவனின் சாக்ஸ்சை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டாள். தங்களின் பள்ளி சீனியர்ஸ்தான் வெற்றி ஏற வேண்டும் என்ற எண்ணத்தில், அவனின் உடைகளை கலைத்துவிட்டு… சாக்ஸை எடுத்து சென்றுவிட்டாள்.

NCC யில்…. எல்லாவற்றிக்கும் மதிப்பெண் உண்டு அவர்களின் சீருடை… கத்தியை சுழற்றும் விதம்…. சல்யூட் வைக்கும் விதம், நல்ல ஐயன் செய்த யூனிப்பாம் என எல்லாவற்றிக்கும் மார்க்கு உண்டு…. மற்ற எதையும் தன்னால் நிறுத்த முடியாது என தெரிந்த தீபி… அவனின் யூனிப்பாமில் கை வைத்தாள்.

அன்று இரவு…. NCC மாஸ்டரிடம் நல்ல திட்டு ஈஷ்வருக்கு…. கண், காது குளிர…. கேட்டு, பார்த்துக் கொண்டிருந்தாள் தீபி. ‘அப்பாடா’ எங்க சீனியர்ஸ்தான் முதலில் வருவார்கள் என கனவு வேறு அவளுக்கு.

ஈஸ்வர் கவர்மென்ட் ஸ்கூல் என்பதால்… முக்கிய ப்ரைடுக்கு மட்டும் தனியாக உடையை எடுத்து வருவர். அதில் இன்னொன்று என்ற பேச்சுக்கே இடமில்லை… எனவே என்ன செய்வது என புரியாது நின்றான் ஈஸ்வர்.

ஆனால், இதனை அறிந்த தீபியின் ஸ்கூல் சீனியர்ஸ்…. தங்களிடம் எக்ஸ்ட்ரா இருந்த சாக்ஸை கொடுத்து உதவி… தங்களிடமிருந்த ஐயன் பாக்ஸ் கொண்டு மீண்டும் அவனின் உடையை ஐயன் செய்து.. அவனை முன்னைவிட பளபளப்பாக்கினர்… அந்த வருடம் ஈஷ்வரின் பள்ளிதான்  பரிசும் பெற்றனர். தீபி சோர்ந்தே போனாள்….

 

  

       

 

 

 

  

 

 

 

  

Advertisement