Advertisement

பௌர்ணமி வர்ணம் – 10

ஒருவழியாக நடேசன், கமலநாதனின் சொந்தங்களை எல்லாம் வழியனுப்பி வந்தார். தருணின் பெற்றோர் வருவது பற்றி கமலநாதன் அவரிடம் கூட சொல்லவில்லை. எனவே தருணின் பெற்றோர்களிடம் எந்த நம்பிக்கையையும் கொடுக்காமல் பேசினார் நடேசன்.

எல்லோரும் உண்டு முடித்து பேசுவதற்காக…. தோட்டத்தை அடுத்து வீட்டின் முன் வராண்டாவில் அமர்ந்தனர். வழுவழுப்பான சிமெண்டு தரை…. கடைந்தெடுத்த நல்ல மர நாற்காலிகளும்…. திவான்களும் அந்த இடத்திற்கே ஒரு கிளாசி லுக் தர….

எங்கே யார் தொடங்குவது என பெரியவர்கள் எல்லோர் முகத்திலும் அமைதி…. இரவு மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. நடேசனை முன்னின்று பேசவேண்டி இருப்பதால்… நேரம் காலம் பார்க்க முடியவில்லை. நாளை காலை அவர் திருச்சி கிளம்புகிறார் எனவே இன்றுல்லாம் பேசி முடிவு செய்து விடலாம் என நினைத்தார் கதிரேசன்.

ஆனால் எதிர்பாரா விதமாக அந்த தருணின் குடும்பம் வரவும் நேரம் கடக்க தொடங்கிவிட்டது. வர்ணா தன் மாமன் கிஷோரின் மேல் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள்… அவன் ஹாலில் உள்ள சோபாவில், தனது கால்களை டீபாய் மேல் வைத்தபடி அவளை தன் நெஞ்சில் சாய்த்த வண்ணம்… பெரியவர்களின் பேச்சை கேட்பதற்கு வாகாக அமர்ந்திருந்தான்.

ஈஸ்வரனும் பாட்டியும் மட்டும்தான் தனி சோபாவில் அமர்ந்திருந்தனர். நடேசனே தொடங்கினார்.., “என்ன சொல்ல…. இன்னும் என் பொண்ணு விஷயம் மட்டும் தாங்க்கா…. நெருடிக்கிட்டு இருக்கு…. ஏனோ அப்போ ஓடின ஓட்டத்துல…. எதையும் கவனிக்கல…. எப்படியோ தொடங்கி எப்படியோ முடிஞ்சிடுச்சி….. “ என்றவர் தடுமாற தொடங்கினார்.

ஏனோ தான் அமைச்சர் என்ற எண்ணம் எல்லாம் எங்கோ சென்றது. அவரின் உதவியாளர் மட்டும்தான் உடனிருந்தார்… மற்ற கட்சி ஆட்கள், செக்யூரிட்டி என யாரும் இல்லைதா நிலையில் தன் மகளின் தந்தையாக இப்போதுதான் உணர தொடங்கினார் நடேசன்.

இவ்வளவு நேரமும் ஒரு மிடுக்குடன்… அதிகார தோரணையில் இருந்த அந்த வெள்ளை வேட்டி மனிதரின் தடுமாற்றம் அங்கிருந்த அனைவரையும் ஏதோ செய்ய பாட்டிதான் “விடுப்பா தம்பி…. ஆக வேண்டியது சொல்லு “ என்றார்.

கதிரேசனும் “ண்ணா …. சொல்லு” என்று இயல்புக்கு திருப்பினார்.

நடேசன் “என் நண்பன் தான்பா…. எல்லாம் அவன் பார்த்து செய்வான் என அவன் மேல் நம்பிக்கை… பொண்ண குடுக்க சம்மதிச்சேன்… ஆனா அந்த பையன் ஜாதகத்தில் ஏதோ ஆயுசு கம்மின்னு இருந்திருக்கு…. நம்மகிட்ட சொல்லலப்பா…. மறைச்சிட்டான்…. எல்ல்லாம் முடிஞ்சிதான் உண்மை தெரிந்தது.

ஆனா, இப்பவும் போன் செய்து தருண்னுக்கு பொண்ண குடுன்னு சொல்றான்…  இல்லை என் பேத்திய எனக்கு கொடுத்திடுன்னு சொல்றான். எங்க கட்சில அவன்தான் இப்போ எல்லாம்….

அவன், வேறு யாருக்காவது தீபியை கல்யாணம் செய்தால்… நிம்மதியா விடுவானா தெரியலை…. இல்லை நீங்க கல்யாணம் முடிந்து கிஷோருடன் லண்டன் போங்க… இல்லேன்னா… “ என நடேசன் சொல்லிக் கொண்டிருக்க…

விருட்டென எழுந்துவிட்டான் ஈஸ்வர்… “நான் என்ன செய்யனும்னு…. நாங்க பார்த்துக்கிறோம்… நாளைக்கு அப்பாக்கிட்ட வந்து பேசுங்க மத்தத அப்புறம் பேசிக்கலாம்…” என்றான் நடேசனிடம்.

பாட்டியை பார்த்து “கிளம்பிங்க பாட்டி…. மணியாச்சு…” என்றவன் யாரின் பதிலையும் எதிர்பாராது… கத்தி பேசிய குரலுக்கும்…. செய்யும்  மரியாதைக்கும் சம்மந்தம் இல்லாமல் பெரியவர்களை பார்த்து கையெடுத்து வணங்கி… “போயிட்டு வரேங்க… “ என்றவன்… நடக்க தொடங்கிவிட்டான்.

ஹாலில்… அமர்ந்திருந்த கிஷோரின் மடியிலிருந்த வர்ணாவின் தலையை வருடியவன்… அங்கே ஓரமாக நின்றிருந்த தீபியை பார்க்க, அவள் நிமிரவேயில்லை. கிளம்பிவிட்டான் தன் பாட்டியுடன் ஈஸ்வர்.   

மறுநாள்…. காலையிலேயே தீபியின் வீட்டினர் வந்துவிட்டனர். ராமலிங்கத்திடம் பேசுவதற்கு. பாட்டி அப்போதுதான் சொல்லிக் கொண்டிருந்தார் அங்கு நடந்தவைகளை…. இரவு நேரம் கடந்து வந்தததால் யாரிடமும் பேச முடியவில்லை. எனவே இப்போதுதான் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஈஷ்வரும் உள்ளேதான் அமர்ந்திருந்தான்…. கையில் காப்பியுடன், தன் பாட்டி சொல்லுவதை கேட்டு தன அன்னை முகம் மாறுவதையும் அவரின் முனுமுனுப்பையும் ரசித்துக் கொண்டிருந்தான்.

இப்போது நடேசனும் சுந்தரியும்…. கதிரேசனும் கிஷோரும் வந்து நிற்கவும்…. பாட்டி அப்போதுதான் விளக்கி முடிக்கவும் சரியாக இருந்தது.

காலை நேரம் மந்திரி வீடு வந்ததும்… முதலில் ஒன்றும் புரியவில்லை ராமலிங்கத்திற்கு. வரவேற்று அமரவைத்தனர் அவர்களை.  

ஈஸ்வர் அலட்டிக் கொள்ளவில்லை அங்கேயே அமர்ந்திருந்தான்… “வாங்க..” என ஒத்த வார்த்தை சொல்லிவிட்டு.

ராமலிங்கத்திடம், நடேசனே எல்லாவற்றையும் விளக்கினார்… எல்லாவற்றையும்… கிட்ட தட்ட ஒரு அமைதியான பேச்சு. ராமலிங்கத்திற்கு இப்போதுதான் புரிந்தது தன் அம்மா ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டினார் இந்த செயலில் என…

ராமலிங்கம் ‘முழுதாக ஒரு நட்பிடம் ஏமாந்துவிட்டார்’ எனதான் தோன்றியது நடேசனின் பேச்சை கேட்க்கும் போது. ஆனால் இது நட்பும் அல்லதான் எனவும் தோன்றியது.

ராமலிங்கத்திற்கு…. நடேசனின் பேச்சு போதுமானதாக இருந்தது. அந்த திருமணத்தை நடத்துவதற்கு.  எனவே உடனே ஜோசியர் அழைக்கப்பட்டார்…

நாளை மறுநாள் திருமணம்…. என எல்லோராலும் முடிவு செய்யப்பட்டது.

மறுநாள் காலை…

புவனின் வீடு ஒரு பரப்பரப்புடனே இருந்த்து. பூரணி நேரமே வீடு வந்திருந்தாள்… மாமியாரும் மருமகளும் மட்டும் எதிலும் ஒட்டாமல் எல்லா வேலையையும் செய்துக் கொண்டிருந்தனர். ஈஸ்வரின் நிச்சைய ஏற்பாட்டை கவனித்துக் கொண்டிருந்தார்.

இன்று நிச்சையம் நாளை திருமணம் திருகழுகுன்றத்தில் என நேற்று இரவு பேசிமுடிவு செய்யபட்டது. தீபியின் தந்தை… ‘பெரிதாக யாரையும் கூப்பிட வேண்டாம்… சத்தமில்லாமல் திருமணத்தை செய்திடுவோம்…. ஒரு வாரம் கழித்து வரவேற்பு செய்து கொள்ளலாம்’ என்றார்.

ஈஸ்வர் அதற்கும் எகிறினான்….”அதென்ன ஒழித்து மறைத்து திருமணம்…. என் நண்பர்கள்…. எங்க சொந்தம் எல்லாம் வருவாங்க…. நீங்க அவர்களையும் கூப்பிடுங்க என்ன செய்வாங்கன்னு பார்க்கலாம்“ என்றான் நேற்றே.

அதிர்ந்து பேசாத ராமலிங்கம் என்ன சொல்வது என தெரியாமல் நின்றார். பாட்டிதான் “விடு டா…. நம்ம சொந்தம் எல்லாம் வருவாங்க…. அவங்க முறைக்கு ஒரு வாரம் கழித்து வரவேற்பு வைச்சிக்கட்டும்” என்றார். அப்போதும் ஏதோ… போனால் போகிறது எனத்தான் விட்டு சென்றான் ஈஸ்வர்.

ஆனால், தீபியிடம் இப்போதும் ஒருவார்த்தை சம்மதமா? என கேட்டகவில்லை யாரும்.. வர்ணாவை மட்டும் மனதில் கொண்டு இந்த திருமணம் என கதிரேசன்தான் சொன்னார் அவளிடம்.

அப்போதும் கூட அதே அமைதியான முகம்தான்… உள்ளுக்குள்தான் எல்லா ஏக்கமும் போல…

கிஷோர்தான் அவளிடம் பேசுவதற்காக நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். ஏனோ… தீபி அதற்கு இடமே தரவில்லை.

இப்போது வரை அவளிடம் பேசி அவளின் விருப்பத்தையோ…. எண்ணத்தையோ அறிய முற்படவில்லை. தீபியும் பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை…. எதிர்க்கவில்லை…

இது என்னை பாதிக்கவில்லை என்பதாக அவளும் தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்… காலையிலிருந்து ரேசொர்ட் செல்வது மதியம் வந்தவள் உணவு முடித்து திரும்பியும் அங்கேயே சென்றுவிட்டாள்..

கிஷோர் அந்த விழாவிலேயே…. வினோவிடம் சொல்லிவிட்டான்… புவனனை காட்டி ‘இவர்தான் நாங்கள் தீபிக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை’ என.

வினோவிற்கு கூட சற்று வருத்தம்தான்….’ஏன் கிஷோர் இவ்வளவு அவசரம்….’ என்றான் புவனனின் செய்கையை பார்த்து.

கிஷோர், வினோவிடம் “தெரியல…. வினோ… எங்கள மீறி எல்லாம் அவர் விருப்படிதான் நடக்குது…. ஏன்னு தெரியல… எங்களுக்கு கொஞ்சம் தூரத்து சொந்தம்…. சித்தப்பாதான்…. இவங்கள காட்டினார்…” என முழுநீள விளக்கம் கொடுத்தான் கிஷோர்.

அன்று இரவே…. சீமா… மித்ரா… ப்ரேமி… என வரியசையாக தீபியை அழைக்க தொடங்கினர். அழைத்தவர்கள் எல்லாம் குதுகலத்துடன் பேச… தீபி மட்டும்…’ஆமாம் என்ன இப்போ’ என பேசினாள் அனைவரிடமும்.

தீபியின் வீடும் பரபரபப்புடன் இருந்தது. ஆனால் எல்லோர் முகத்திலும் ஒரு படபடப்பும் கூடவே இருந்தது. கமலநாதனுக்கு இது தெரியாமல் இருக்க வேண்டும்மே எனதான்.

இன்று மாலை ஈஸ்வரின் வீட்டிலிருந்து பாட்டியும், பேரனும் தவிர மற்ற எல்லோரும் வந்தனர்…. நிச்சைய புடவை கொடுத்து… ஒரு மாங்காமாலை… தீபியின் கழுத்தில் போட்டாள் பூரணி.

இப்போதும் தீபி ஒரு அனார்கலி சுடியிலேயே நிற்க… ஒன்றும் சொல்ல முடியவில்லை யாராலும். சுந்தரியம்மா எவ்வளவு சொல்லியும் அசையவில்லை அவள்.

வர்ணாவிற்கு புதிதாக இருந்தது…. இதெல்லாம்… தன் அம்மாவுக்கு வந்தவர்கள் பொட்டு வைப்பது… தீபி அனைவர் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதும்….

தன் அன்னை அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்திருப்பது என எல்லாம் புதிதாக இருக்க… கிஷோரிடம் அமர்ந்து வேடிக்கை பார்க்க தொடங்கினாள் தன் மணி விழியை அகல விரித்து.  

யாரும் யாருடனும் பேச முடியாமல்…. நடந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில்… நடக்கும்போது ஒரு அமைதி பரவுமே அப்படியான அமைதியது….

இரவு உணவு முடித்துதான் ஈஷ்வரின் வீட்டினர் கிம்பினர்.

ஒரு பத்து மணிபோல தீபியின் நண்பன்… நந்தன் போன் செய்தான் “தீபி… எப்படி டா இருக்க…. நாங்க எல்லாம் வினோ வீட்டுக்கு வந்தாச்ச்சு….” என்றான்.

தீபி யாரையும் அழைக்கவில்லை… எல்லாம் கிஷோர் வேலை என தெரிந்தது.. ‘ம்…’ என அமைதியாக இருந்தாள்.

நந்தன் “தீபி… எல்லாம் உன் நல்லதுக்குதான் டா… உனக்கு ஒகே தானேடா….” என ஆரம்பித்தான். தீபியின் ஆழ் மனதில் இருந்தது எல்லாம்…. கண்களின் வழியே வெளிவர தொடங்கியது.

என்ன சொல்ல முடியும் நண்பனிடம்…. “தூக்கம் வருது நந்து… நாம காலையில் பார்க்கலாம்… ப்ளீஸ்” என்றாள் இறைஞ்சுதளான குரலில்.

அதன்பின் தூக்கம் எல்லாம் வரவேயில்லை தீபிக்கு.

ஈஸ்வர் அன்று கடைக்கு வந்துவிட்டான். தந்தையும் அண்ணனும் நிச்சையத்திர்காக சென்றிருப்பதால்… இவன் கடைக்கு சென்றான். தனது நண்பர்களுக்கு போனில் அழைத்து விவரம் சொல்லிக் கொண்டிருந்தான். அதற்கே ஈஷ்வருக்கு நேரம் போதவில்லை.

இரவு வீடு வந்தவனுக்கு…. பாட்டிதான் ஹாலிலேயே காத்திருந்தார். ப்ரஷ்ஷாகி வந்தவன் உண்ண கூட செல்லாமல்… பாட்டியின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான்.

எப்போதும் போல்… வாஞ்சையாய் பேரனின் தலை கோதினார்… கூடவே “பொண்ணுகிட்ட பேசுனியா ஈஷ்வர்” என்றார்.

ஈஷ்வர் “என்ன பாட்டி பேசறது….. நடந்தத பத்தி பேசறதா… இல்லை நடக்க போறதா பத்தி பேசறதா… பயமா இருக்கு பாட்டி…. அவள பார்க்கவே… ரொம்ப குழம்பி இருக்கா… “ என்றவன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பின் பாட்டி மடியிலிருந்து எழுந்து அமர்ந்து கொண்டான்.

பின் “நல்லா பார்த்துக்கணும்… கேள்வியே கேட்காம நம்பி வரா பாட்டி… “ என்றான் ஒரு பெருமூச்சுடன். பாட்டி இப்போது அவனை பார்த்த படியே இருந்தார். அனைவரும் உள்ளே வரும் சத்தம் கேட்டு இருவரும் இயல்பிற்கு வந்தனர்.  

இரவு ஒவ்வெருவர்க்கும் ஒவ்வெரு மனநிலை…. அனைத்தையும் தனக்குள் ஒழித்து வைத்துக் கொண்டு…. நல்ல புத்தம் புதிய விடியலை தந்தது ஈஸ்வர்க்கு.

காலை ஆறுமணிக்கு திருகழுகுன்றத்தில் தீபலட்சுமி புவனேஷ்வரின் திருமணம் இனிதே நடந்தது.

திருமணம் முடிந்த அடுத்த நொடி… கிஷோர் கையிலிருந்து வர்ணாவை வாங்கிக் கொண்டான் புவனன். ப்ரோகிதர் கூட “குங்கமம் வைங்கோண்ணா” என இரண்டு தரம் அழுத்தி சொன்ன பின்தான்… அவரையே பார்த்தான் ‘என்ன’ என்பதாய் ஈஸ்வர்.

ஒருவழியாக அவர் சொன்னது புரிந்ததும் வர்ணாவின் பிஞ்சு விரல்களையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு…. தீபியின் நெற்றியில் அழகான திலமிட்டான் ஈஸ்வர்.

ஈஷ்வரின் சொந்தங்கள் அனைவரும் இதை ரசிக்கவில்லை என திரும்பிக் கொண்டாலும்…. தீபியின் சொந்தங்களுக்கும், நட்புகளுக்கும் அப்படி ஒரு நிம்மதி. எனவே அதனை பார்த்தும் பாராமல் அவர்களும் திரும்பிக் கொண்டனர்.

ஆரஞ்சும் பச்சையுமான கட்டம் போட்ட பட்டு பாவாடை அணிந்து…. ஈஷ்வரின் தோளில் சாய்ந்து கொண்டு ‘இது என்ன…. எப்படி’ என ஏதோ கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தாள் வர்ணா.

இப்போது ஈஸ்வரிடம் தானே வந்து அறிமுகமாகி கொண்டது தீபியின் நண்பர்கள் படை. மணமக்களுடன் சேர்ந்து அந்த கோவிலை வலம் வர தொடங்கினர்.

நந்தனும் ப்ரேமியும்தான் கபுல்ஸ்…. மற்றவர்கள் எல்லாம் சிங்குலாகதான் வந்திருந்தனர். யாருக்கு என்ன பேசுவது என தெரியவில்லை… ஏனோ ஈஸ்வரின் முகம்…. சாந்தமாகத்தான் இருந்தது ஆனால் ‘நான் எல்லோருக்கும் இலகியவன் இல்லை’ என்பதை சொல்லும் விதமாகத்தான் இருந்தது.

வர்ணாவிடம் மட்டுமே… லேசாக உதடுகள் வளைந்தன… மற்ற படி கம்பீரமாக…. ஏதோ சுரங்கத்தில் இருக்கும் தங்கத்தின் நிறத்தில்… பட்டு வேட்டி சட்டையில் மலர்மாலை அணிந்து.. தோளில் வர்ணாவை சுமந்து கொண்டு நடக்கும் போது… சற்று யோசிக்கவே வைத்தான் அனைவரையும் ‘ஏன்… தீபியை திருமணம் செய்துக் கொண்டான் இவன்’ என.     

எல்லோரும் ஈஷ்வரின் வீட்டிற்கு சென்றனர். ஆனந்தி இப்போதும் தூக்கி வைத்த முகத்துடனேயே ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தார் பெண் மாப்பிள்ளையை.

தீபி ஈஷ்வரின் கையால் தாலி வாங்க குனிந்தவள்தான் இன்னும் நிமிரவேயில்லை. புவனனும் வர்ணாவை கீழே இறக்கவேயில்லை.

மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுப்பது… வந்தவர்களை கவனிப்பது என தன்போல் வேலைகள் சென்றாலும் யாரும் மணமக்களிடம் நெருங்கவில்லை.

காலை உணவு ஈஷ்வர் வீட்டில் என்பதால்… இருவரும் சேர்ந்து உணவருந்தினர். அப்போது கூட தீபியை அவன் கண்டுகொள்ளவில்லை. வர்ணாவிற்கு உணவு ஊட்டிவிட்டான் தானும் உண்டு முடித்து எழுந்து கொண்டான்.

அருகில் பரிமாறிக் கொண்டிருந்த பூரணிதான் இதனை கவனித்தாள்.. “இருங்க தம்பி…” என சொல்ல சொல்ல அவன் வர்ணாவை கைபிடித்து அழைத்து சென்றுவிட்டான்.

பூரணி தீபியையே குறு குறுவென பார்க்க…. நிமிர முடியவில்லை தீபியால், பொறுமையாக எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டே எழுந்தாள் தீபி.

எங்கு அமர்வது என தெரியவில்லை. தானே தன் நண்பர்களுடன் சென்று அமர்ந்து கொண்டாள் ஹாலில். வர்ணாவை கிஷோர் கேட்டும் கொடுக்கவில்லை ஈஸ்வர்…

இப்போது நண்பர்கள் உணவு உண்ண சென்றர் இவள் இப்போது தனியாக அமர்ந்திருந்தாள். இப்படி வீட்டையே ஒரு சுற்று சுற்றினாள். ஒரு வழியாக பாட்டி கண்ணில் பட்டாள் தீபி…

பாட்டி தீபியிடம் “மேலே போம்மா… இது உன் வீடு யாரையும் எதிர்பார்க்காதே… மேலே போம்மா…. ஈஸ்வர் அறை ரெண்டாவதா இருக்கும் பார்… நீ போ நான்… ஈஷ்வரை அனுப்பி வைக்கிறேன்” என்றார்.

 

  

Advertisement