Advertisement

ஹரே கிருஷ்ணா….

பௌர்ணமி வர்ணம்…

எங்கும் அழகே…. வண்ணங்களை ஒளியாய் பாய்ச்சும் விளக்குகள் ஒரு அழகு, பல கலவையான நறுமணம் ஒரு அழகு. தெளிவில்லா வெளிச்சம் ஒரு அழகு.

இது ஒரு மாய உலகம்…. யாரையும் வசியம் செய்யும் போதை     உலகம்… இங்கு எல்லாம் சாத்தியமே…. எதுவும் சுகமே… எல்லைகள் இல்லா இந்த இயந்திர உலகத்தில்…

இருளும் மிரளும் அந்த இசை கேட்டு…. ஆனால், அதேற்கெல்லாம் அசராமல்…. தத்தமது இணையுடன்… அழகாக வளைந்து, நெளிந்து, குதித்து என பலவாறு அந்த இசைக்கேற்ப ரிதமாக ஆடிக்  கொண்டிருந்தனர் அனைவரும் அந்த பப்பில்….

இப்படி ஒரு உயர்ரக… ஹோட்டலே கலை கட்டிக் கொண்டிருந்தது…. வார இறுதியின் இரவு என்பது கொண்டாடுவதற்கே என்ற கோட்பாடுகள் மிகுந்த பெங்களூரு சிட்டி அது.

நேரம் செல்ல செல்ல வேகம் கூடிக் கொண்டே போனது அந்த   இசையில். மணியும் இரவு 12:30யை நெருங்கவும்….

தனதருகே எங்கோ வெறித்து பார்த்து அமர்ந்திருந்த…. தீபியை அழைத்தான் வினோ “தீபி…. போலாம் வா” என்றான்.

“ம்…” என பெருமூச்சு விட்டு எழுந்தாள்…. எழுந்தவளின் கண்ணில் பட்டான் அவன்…. நீண்ட நெடிய உருவமாக… அமர்ந்திருந்தான். கையில் ஒரே லார்ஜ் கோப்பை மட்டுமிருக்க…. கண்ணில் ரசனையே இல்லாமல், ஒரு வெற்று பார்வையுடன் அனைத்தையும் பாரபட்சமே இல்லாமல் வருடிய படி அமர்ந்திருந்தான்.

பார்த்தவளுக்கு அப்படியே ஒரு நொடி…. எங்கோ சென்றது மனம்…   அருகே நின்றிருந்த வினோவின் முழங்கையை தன்னோடு இருக்க பற்றிக் கொண்டாள்.

வினோ அவளின் தடுமாற்றம் பார்த்து என்ன ஆச்சு என அவள் முகம் பார்க்க…. அவளின் முகம் எதையோ, யாரையோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்தது.

வினோ “வாட் ஹப்பேன்… தீபி” என்றான்.

இவள் காதிலே விழவேயில்லை அது. அதே பார்வை. அவளால் மீட்க முடியா பார்வையால் பார்த்திருந்தாள் யாரையோ…

தீபி ‘அவனா, இருக்காதே…. அப்பவே ரொம்ப நல்லவனாச்சே, ம்…. அவன்…. இங்கெல்லாம் வர மாட்டானே..‘ என பலத்த யோசனையுடன்… இன்னும் ஒரு முறை அவனை பார்வையால் தேட தொடங்கினாள்.

பக்கத்தில் அமர்ந்திருந்த இவர்களின் நட்புகள் எல்லாம் ஏதேதோ பேசியபடி கிளம்ப தொடங்கினர்…. கடைசியாக இருந்த ப்ரேமி மட்டும் எதையோ அவ்வபோது வந்து, போன ஒளியில் தேடிக் கொண்டிருக்க…. வந்து போன ஒளியில்.. கிடைத்தது இப்போது,  அவளின் கைக்குட்டை. அதையெடுத்து கொண்டு அவளும் கிளம்பியிருந்தால்.                                                                                                                                  

தீபியின் அகலாத பார்வையை உணர்ந்த வினோவும், அந்த ஒலி சென்ற திசையை கவனிக்க…. யாரோ ஒருவரின் முகத்தில் வெட்டி சென்றது அந்த ஒலி… இப்போது பொத்தென மீண்டும் இருக்கையில் அமர்ந்தாள் தீபி….

ஓட்ட வெட்டிய மில்ட்ரி கட் ஹர், நல்ல வழு வழுப்பான இறுகிய தாடை… அதிக போதையான பார்வை… ஒரு கருப்பு நிற காலர் வைத்த, கப்பா டி-ஷர்ட் சகிதம் அமர்ந்திருந்தவனை அந்த மின்னல் ஒலியிலும் பார்த்து, அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது அவளால்…  

வினோவிற்கு அப்படி யாரும் தெரியவில்லை போல… திரும்பவும் தீபியிடம் “யார டா…. பார்க்கற… யாரு…” என கேள்வி கேட்க…

வினோவின் அந்த வார்த்தையில் ஒரு நெருடல் வந்தது தீபியிடம்…. ‘எதற்கு நான் பார்க்கிறேன்.. அவன் யார் எனக்கு, நான் யார் அவனை பற்றி நினைக்க’ என தோன்றியது. ஆனால் ஏதோ ஒரு உணர்வு…. பள்ளம் பாய்ந்த நதியாய்…. அவனை நோக்கி பாய்ந்தது அவளின் எண்ணம். இப்படி அவள் சிந்தனையில் இருக்க…  

மீண்டும் வினோ அதே கேள்வியை கேட்டான். பதில் வரவில்லை தீபியிடமிருந்து. திரும்பி அவளை பார்த்த வினோவிற்கு கோவம் வர, அவளின் தோளை உலுக்கினான் “வா போலாம் எல்லாம் கிளம்பியாச்சு…” என அவளை கைபிடித்து இழுத்து சென்றான் வெளியே….

அந்த இழுப்பில் இப்போதுதான் உணர்வு வந்தது தீபிக்கு, சற்று தன்னை அந்த நிகழ்வில் இருந்து தன்னை மீட்டுக் கொண்டாள்.

வினோவிடம், தீபி “வினோ…. நம்ம எதிரி டா…. அதான்…. அவன் பேரு…. ம்…. அதான் டா….” என யோசிக்க தொடங்கினாள். அதே இடத்தில், நின்றது நின்ற படி சின்னதாக தன் தலையில் தட்டிக் கொண்டு…. தன் உதட்டை அழுந்த மூடியபடி யோசிக்க தொடங்கினாள்…

“ம் கூம்…” சிக்கவில்லை அவன் பெயர்.  வினோவிற்கு வேறு….டென்ஷன் ஏறியது…. ‘யாரடா சொல்றா இவ…. அர்த்த ராத்திரி… ஒரு மணிக்கு… எந்த எதிரியை எனக்கு தெரியும்’ என நினைத்தபடி அவளை தன் பலம் கொண்ட மட்டும் இழுத்து சென்றான் வெளியே.

ஒருவழியாக வெளியே வந்து இவர்கள், அங்கே நிற்கும் மற்றவர்களுடன் சேர்ந்து நின்றனர். அங்குள்ள பணியாளர் ஒருவர்  பார்க்கிங்கில் இருந்த அந்த பென்ஸ் வண்டியை எடுத்து வந்து, இவர்கள் எதிரில் நிறுத்தி, அதன் சாவியை தரவும்…

ப்ரேமி, அதனை வாங்கிக் கொண்டு, அந்த பணியாளருக்கு ஒரு இரனுறு ரூபாய் கொடுத்து அனுப்பினாள்.

ப்ரேமியின் கைகளில் அந்த வண்டி  மிதமான வேகத்தில் செல்ல தொடங்கியது. இந்த நடு இரவில்… இவர்களின் வண்டி போல் சில பல பெரிய வண்டிகள் தாறுமாறாக பறந்து கொண்டிருந்தது அந்த பெங்களூர் சாலையில்.

பப்பில் இருந்த போது, இருந்த கலகலப்பு இப்போது குறைந்ததாக தோன்றியது அனைவருக்கும்… எனவே, மித்ரா “என்னாச்சு தீபி, ஏன் டிஸ்டப்டா இருக்க… ஏன்… தருன் ஏதாவது பிரச்சன பன்றானா…. எதா இருந்தாலும் சொல்லு டா” என்றாள்.

நிறைய பேசியிருந்தனர்… காலையில் இருந்து. ஆனால் எல்லாம் விளையாட்டாய், வினோவை வம்பிழுத்தபடியேதான் இருந்தது. இப்போதுதான் இன்னும் கொஞ்ச நேரத்தில் அவரவர் இடங்களுக்கு செல்ல போகிறோம் என்றதும், ஒரு அக்கறை, தவிப்பு என எல்லாம் இயல்பாய் அவர்களுக்குள் எழுந்தது.

எனவே, மித்ராவின் அந்த கேள்வியே அனைவரையும் அமைதியாக செய்தது. தீபி “அதெல்லாம் இல்ல, அவன் ஒரு ஆளு…. போயும் போயும்  அவன நினைச்சி நான் பயப்பட…. இல்லடி இது வேற…. “ என்றவள் அமைதியானாவள் தனதருகே இருந்த சீமாவின் தோளில் சாய்ந்து கொண்டாள். ‘அவன் பெயர் என்ன’ எனும் விதமாக யோசித்து.

இப்போது எல்லோர் முகத்திலும் அனிச்சையாய் ஒரு அமைதி வந்து போனது. தீபி இப்படிதான் எதையும் பெரிதாக நினைத்து அலட்டிக் கொள்ள மாட்டாள்.

ஆனால் தோழிகளுக்குதான் ஒரு பயம். தனியாக நிற்கிறாளே…. ஏதேனும்…. பிரச்சனை வருமோ…. என. நாமெல்லாம் குடும்பமாக இருக்க இவள் மட்டும் தனியாக தவிப்பதாகதான் தோன்றும் அனைவருக்கும். இதை பற்றி அவளிடம் பேசவே முடியாது யாரும்…   

பேசினால்… ‘முடியாது’ என சண்டை போடவும் மாட்டாள்… ‘நான் அப்படிதான்’ என ஒதுங்கி போகவும் மாட்டாள்… ஒரு மாதிரி நம்மிடமே பேசி, அந்த பழைய ரணங்களை நம் காது குளிர கேட்க செய்து…. இனி இவளிடம் நாம் அந்த கேள்வியையே கேட்க கூடாது எனும் நிலைக்கு செய்து விடுவாள்….  

அவளுடைய எல்லா வழிகளும் குடும்ப வாழ்க்கை எனும் போது அடைக்கப்பட்ட கதவுகளே… ஆனால், தொழிலில் அவள்… நிமிர்ந்தே நின்றாள்.

அவள் ரேசார்ட் ஆரம்பித்த இந்த இரண்டு வருடத்தில்…. அவள் செய்யும் புது முயற்சியால்… அவளின் தொழில் வளர்ந்து கொண்டே செல்கிறது. இதை நினைத்து அவரின் தந்தைக்கு பெருமை தாங்க முடிவதில்லை.

யாரிடம் என்றாலும் தன் மகளின் புகழ் பாட தொடங்குகிறார் அந்த மத்திய மந்திரி என கிசு கிசு வரை… சென்றது… அவரின் பெருமை.      

அவரின் பெருமைக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை எனும் விதமாகத்தான் அவள் எப்போதும் இருப்பாள். அப்படி ஒரு கோவம் தன் தந்தை மேல்… தீபலக்ஷ்மிக்கு.

இப்போது வினோதான் திரும்பவும் தீபியிடம் “யாரு தீபி அது” என கேள்வி எழுப்பினான்.

தீபி “தெரியலையா உனக்கு அவன… அதான் புவன் டா…” என்றாள். அவன் பெயரை கண்டுகொண்ட புன்னகையில்

வினோ “யாரு…..” என்றான் தனது நெற்றியை தேய்த்தபடி…

மற்ற எல்லோரும் தங்களுக்குள் ஒருவாறு பார்த்துக் கொள்ள தீபி “நம்ம எதிரிப்பா” என்றாள் குரலில் ஒரு அதிர்வு…. ஏதோ புரியாத பாவம்…

யாரும் ஏதும் சொல்லவில்லை. அடையாளம் தெரியவில்லை என நினைத்து தீபி தானாக “நம்மள மதிக்காமா….  இருப்பானே… நம்ம ஏதோ பாவம் பண்ணினவங்க மாதிரி, நம்ம கிட்ட இருந்து ஒதுங்கியே இருப்பானே… நம்ம கிட்ட பேச கூட மாட்டானே…  எப்போதும் நம்மை முறைச்சிக்கிட்டே இருப்பானே…” என அடுக்கிக் கொண்டே போனாள்… அந்த கடைசி தொடரை மட்டும் நிராசையாய் சொல்லியபடி….

எல்லோரும் அவளை ஒரு மாதிரி பார்க்க.. ‘ஐயோ… ஏன்… இவ்வளோ பேசறேன் நான்…. என்ன ஆகிற்று எனக்கு…. யாரிவன்… அவன் யாரோ, நான் யாரோ…. தீபி… எல்லோரும் உன்னை பார்க்கறாங்க’ என தனக்குள்ளே தன்னை தேடிக் கொண்டிருந்தாள்.

திரும்பவும் மீண்டு, பேச்சை மாற்றும் விதமாக… சீமாவின் தோளில் இருந்து எழுந்தவள் “அடுத்த வீக்… அம்மாகிட்ட போறேன்…. பாப்பாவையும் பார்த்து ரொம்ப நாளாச்சு” என தன்போல் ஏதோ யோசனையுடன்.

சீமா “பாப்பாவ கூட வைச்சிக்கலாம்ல…. பாவம் டி அது, நீ இருந்தும் இல்லாமா இருக்கறது தண்டனை டா… வர்ணாக்கு… எதுக்கு, அதுக்கு இந்த பாடோ” என்றாள் எல்லோரிடமும் புலம்புவது போல் அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

எப்போதும் சீமா அப்படித்தான்…. குழந்தை என்றாள் உருகுவாள்…. திருமணமாகி இரண்டு வருடமாகிறது இன்னும் குழந்தையில்லை அவளிற்கு.

பதிலில்லை தீபியிடம். ஏனோ… இந்த கேள்விக்கு மட்டும் அவளிடம் பதில் வராது. தெரியும் அவர்களுக்கும் ஆனாலும் சீமா மட்டும் ஒவ்வரு தரமும் ஓயாமல் அவளிடம் கேட்பாள். தீபியும் வாயே திறக்க மாட்டாள். இது எப்போதும் இவர்களிடம் நடப்பது எனவே எல்லோரும் வேடிக்கை மட்டும் பார்த்தனர்.

இப்படி இவர்கள்… நண்பர்களாக… வெளியே வருவது அடிக்கடி நிகழ்வதுதான். இவர்கள் எல்லாம் பாமிலி பிரிண்ட்ஸ்…. மேலும் ஒரு அழகான நட்பு இவர்களுடையது. ஒன்றாக படித்தவர்கள்… ஒரே வயதினர் முன்பின் இடைவெளியில் நண்பர்களாக சேர்ந்து கொண்டவர்கள்.

இதில்… வினோத்தும், தீபலக்ஷ்மியும்…. ஒரே வகுப்பில் படித்து…. ஒன்றுபோல் வளர்ந்த… திக் பிரிண்ட்ஸ்…. அதிக உரிமைகள்… அதிக அட்டகாசம் செய்யும் சேட்டைகாரர்கள். ஆனால் இதெல்லாம் தங்களின் கல்லூரி காலத்துடன் முடிந்தது அவர்களுக்கு….

சொல்ல போனால், தீபலக்ஷ்மியின், திருமணத்துடன் முடிந்தது. இவர்கள் கேங்கில் மொத்தம் ஐந்து பேர்… தீபி, வினோ, நந்தன், மித்ரா, சீமா இவர்கள்தான். இதில் நந்தனின் வைப்தான் ப்ரேமி… இவர்களின் புது தோழி….

இப்போதெல்லாம் நந்தன் நிரப்ப முடியாத இடத்தை அழகாக தோழமையுடன் ப்ரேமி நிரப்புகிறாள். நந்தன் ஒரு பிசினஸ் ட்ரிப்பாக, இட்டாலி சென்றிருக்கிறான். எனவே ப்ரேமி வந்திருந்தாள்.

இரண்டு மூன்று மாதத்திற்கு ஒரு முறை இவர்களின் சந்திப்பு நிகழும்…. எங்கு எல்லோருக்கும் தோதுபடுமோ… அங்கு வந்து சேர்வர் மற்றவர்கள். இயல்பாய் நிகழும் இவர்களின் சந்திப்பு….

எல்லாம் திருமணமாகி…. வெல் செட்டுல்டு….. வினோவிற்கும் இப்போதுதான் திருமணம் நிச்சையம் முடிந்திருந்தது. எனவே    அதற்கான ஸ்பெஷல் மீடிங்தான் இது.

இவர்களின் பழக்கப்பட்ட இடம் பங்களூரு, கம்போர்ட் பிளேஸ். நந்தன் அங்குதான் வசிக்கிறான். தீபியும், வினோவும் இப்போது சென்னை. மித்ராவும் சீமாவும் ஹைட்ராபாத்.

இவர்களின் உலகத்தில்…. எப்போதும் பார்ட்டி, பயணம், வக்கேஷன் என அழகான உலகம். இவர்களின் எந்த கவலை கோடுகளும் அவர்களின் முகத்தில் தெரியாது. தெரியவும் கூடாது. அப்படி ஒரு பின்புலம் இவர்களது.

ஆம், தீபலட்சுமி… ஒரு MPயின் மகள்… வினோ தயாரிப்பாளரின் மகன்.  நந்தனுக்கு சொந்தமாக ஒரு குளிர்பான நிறுவனம் உள்ளது, அவனும் ஒரு அரசியல் பின்புலம் உள்ளவன். மித்ரா தெலுங்கு பின்னணி பாடகர் ஒருவரின் மகள்…. சீமா நகை கடை உரிமையாளரின் மகள். இப்படிபட்ட அவர்களிடம் பொதுவானது தந்தைகள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் நட்பு… தமிழும், படித்த பள்ளி…

இப்போதெல்லாம் இவர்களின் நட்பில் சந்தோசம் குறைந்து கவலையும் ஏக்கமும் அதிகமாக எழ தொடங்கியிருந்தது. எல்லோருக்கும் வயது 25 லிருந்து 27ற்குள் இருக்கும்…. வாழ்க்கையின் மத்தியில் நின்று கொண்டிருக்கின்றனர்.

இளமையின் சலசலப்புகள் கொஞ்ச கொஞ்சமாக ஓய்ந்து…. சின்ன, சின்ன பொறுப்புக்கள், குட்டி குட்டி கடமைகள் என வாழ்க்கை பயணம், அவர்களை தனது கைகளுக்குள் அள்ள தொடங்கியிருக்கிறது.

எல்லோரும் ஒரு வழியாக நந்தனின் வீட்டை அடையவும்… வினோ மட்டும் தனியறையில் புகுந்து கொண்டான்… எல்லோரும் கோரசாக “ஹேய்ய்ய்…. புது மாப்பிள்ள…. வேலைய பார்க்க போறான்….” என்றனர்.

வினோ “ஆமாம், அவ தூங்கியிருப்பா….. ம்…. இப்போ எல்லாம் நந்தன் அடிக்கடி தப்பிச்சு என்னை மாட்டி விடுறான் உங்க கிட்ட……  கத பேசாம தூங்குங்க, மதியம் கிளம்பனும்“ என்றான் போனை பார்த்தபடி…

மித்ரா “போடா போடா…. வேலைய பாரு….. இங்க பேச்ச குறைச்சிட்டு… அங்க போய் எங்க அருமை பெருமையெல்லாம் சொல்லு..” என்றாள்.

வினோ “நமக்கேதுடி…. அதெல்லாம், இருந்தா… சொல்லாம்” என்றான் நக்கலாக. சொல்லியபடியே உள்ளேயும் சென்றுவிட்டான்.

ப்ரேமி, தங்களின்… நட்புகள், மற்றும் அவர்களின் கணவர்கள் மட்டும் உள்ள ‘ஸ்மைலி’ குரூப்புக்கு ‘ரீச்சுடு’ என ஒரு மேசேஜ் தட்டி விட்டு,  தாங்கள் வந்துவிட்ட விஷயத்தை தெரிவித்தாள்.

மித்ரா, வினோவின் பதிலில் சின்னதாக சிரித்தவாறே உள்ளே சென்றாள்… அங்கே நால்வர் குழு அப்படியே, அங்கொன்றும் இங்கொன்றுமாக, கிடைத்த இடங்களில் உருள தொடங்கினர்.

மித்ராதான்…. “இந்தா…” என சீமாவை எழுப்பி ஒரு நைட் டிரஸ்சை கொடுத்து அனுப்பினாள்…. ரெஸ்ட் ரூமினுள். இப்படி ஒவ்வெருத்தரையும்… திட்டி, கெஞ்சி, மிரட்டி என பல வகைகளின்… டிரஸ் மாற்ற செய்தாள், பிறகுதான் உறங்க விட்டாள்.  

தீபி மட்டும் அந்த ப்ரஞ்சு விண்டோ அருகில் உள்ள…. ஒற்றை சோபாவில் அமர்ந்து கொண்டு… வெளியே தெரியும் இருள் படர்ந்த தோட்டத்தில் எதையோ தேட தொடங்கினாள்…    

   

  

 

 

  

Advertisement