Advertisement

மிட்டாய் புயலே-8

 

கதீஷ் சென்னை சென்றது வீட்டில் அனைவருக்கும் தெரியும். அனாலும் யாரும் ஏதும் சொல்லவில்லை. அதுதான், சாக்க்ஷிக்கு திருமணம் நடக்க போகிறதே. பின் சிறிது நாள் சென்றால் சரியவிடுவான் என அமைதியாகினர்.  

அவனின் போக்கிலேயே விடலாம், சிறிதுநாள் ஏதோ ‘அவளிற்கு வரன் அமையவில்லை என ஏதோ சோகத்தில் எனக்கு சாக்க்ஷியை கட்டி வைங்கன்னு கேட்டிருப்பான்’, சிறிதுநாள் சென்றாள் சரியாகி விடுவான். என அவனின் அக்காக்கள் எல்லாம் தன் தந்தையிடம் சொல்லிக் கொண்டிருந்தனர்.

ஆனால், ஜெகனிற்கு அவனின் இந்த அமைதிதான் கொன்றது.  

கதீஷ் சென்னை வந்து இரண்டு நாட்கள் சென்ற நிலையில், அவனின் நிலை புரியாத நண்பர்கள், அவனின் நடவடிக்கைகளை பார்த்து ‘என்ன பிரச்சனை, என்ன’ என கேட்க ஏதும் சொல்லவில்லை அவன்.

ஏதோ ஊர் சுற்றி பார்க்க வந்தவனாக மாறினான் கதீஷ், யாரோ ஒருவரை கூட கூட்டிக் கொண்டு ஓய்வில்லாமல் சுற்றினான். ஏன் செல்கிறோம், எங்கு செல்கிறோம் என தெரியாமலே, காலை எழுவது, அடுத்த அரை மணி நேரத்தில் கிளம்பி வெளியே செல்வது.

அதன்பின், ஏதோ பசித்த நேரத்தில் உணவு, இரவு பனிரெண்டு மணிக்குதான் வீட்டிற்கு வருவது என இந்த இரண்டு நாட்களாக, நாயாய் பேயாய் அலைந்துக் கொண்டிருந்தான். போனை சுவிட்ச் ஆப் செய்திருந்தான்.  

எங்கோ, எதையோ தொலைப்பதாக ஒரு எண்ணம் அவனிடம்.  தொலைத்தே ஆகவும் வேண்டும் என்ற நிலையிலிருப்பதாகதான் தோன்றியது அவனிற்கு. தொலைத்தும் விட்டதாக தனக்கு தானே எண்ணிக் கொண்டு, அதற்குமேல் முடியாமல் வியாழன் மதியமாக போனை ஆன் செய்தான்.

வீட்டிலிருந்து ஒருமுறை அழைத்திருந்தனர். மற்றது வேலை தொடர்பாக. ஆனால் இவன் மன விரும்பியது போல், சாக்க்ஷியின் அழைப்பு நிறைய இருந்தது. சொல்லபோனால், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை அழைப்பு வந்திருந்தது.

கூடவே அவளின் வாட்ஸ்அப் செய்தி வந்தது. ‘வந்து பார்த்து சென்ற மாப்பிள்ளையின் விவரம், போட்டோ, நிச்சைய தேதி’ என எல்லா விவரமும் வந்திருந்தது அதில். “சீக்கிரம் வந்து சேர்” என்ற செய்தி வேறு.

கதீஷ் இப்போது மோனோலிசா புன்னகையின் நிலையிலிருந்தான். சிரிக்கிறான, அழுகிறானா புரியவில்லை. இது நடக்கும் என தெரியும், ஆனால் அதை அவளிடமிருந்து செய்தியாக, வரும் போது. மனது ஒத்துக்கொள்ள மறுக்கிறது.

ஏதோ தோன்ற போன் செய்தான் சாக்க்ஷிக்கு, அவள் இன்று கல்லூரி செல்லாத காரணத்தால், போனை கையில் வைத்திருந்தாள், இவன் அழைக்கவும் ஒரே ரிங்கில் எடுத்துவிட்டாள்.

“ஹலோ” என சொன்னது மட்டும்தான் கதீஷ், மற்றெதெல்லாம் சாக்க்ஷியின் பேச்சுக்களாகி போனது. கதை கதையாக சொல்லிக் கொண்டிருந்தாள். இவனும், பொறுத்து பொறுத்து பார்த்தான், அவள் பேச்சை நிறுத்தும் வழியை காணும்.

மேலும் இவளின் பேச்சு, ‘ஏன், நீ எங்கு போன, எப்போ வருவ’ என அவனையும் கேள்வி கேட்க, ஒரு கட்டத்தில் அனைத்தையும் உளறி விடுவோமோ என பயந்தான்.

எனவே, “சாக்க்ஷி, உனக்கு மாப்பிள்ளையை பிடிச்சிருக்கா” என்றான். ஒரு யாசகனின் குரலில். எங்கே தன்னை அவள் கண்டு கொள்ளுவாலோ, என்ற பயமும். ‘அப்படியும் நடந்து விடாத’ என்ற நப்பாசையும் அவன் குரலில் போட்டி போட, தனக்கு சாதகமாக ஏதாவது சொல்வாளா எனதான் நினைத்து கேட்டான்.

ஒரு நிமிட அமைதி அவளிடம், ஏதும் சொல்லவில்லை அவள். பிறகுதான் “ஹ….. ஹா….. என்ன இப்படி கேட்கற கதீஷ், அடுத்த மாதம் நிச்சையம், எனக்கு பிடிக்காமா எப்படி எல்லாம் நடக்கும்” என்றாள் அவனையே கேள்வியாக.

“நேரா பதில் சொல்லு, உனக்கு பிடிச்சிருக்கா” என்றான். அவனின் குரல் மாறியிருந்தது. எதையோ தேடும் குரல் தெரிந்தது.

சாக்க்ஷியின் நிலையில், இந்த வார்த்தையை யாருமே இதுவரை அவள் வீட்டில் கேட்டகவில்லை. இது இப்படிதான் என புரியவைத்திருந்தனர். எனவே இப்படி ஒரு வார்த்தையை அவள் எதிர்பார்க்கவில்லை.

“உனக்கு என்ன பிரச்சினை பா, உன் பிரின்ட்டுக்கு கல்யாணம், ஆனால் நீ சந்தோஷமே படமாட்டேன்கிற” என்றாள், சலித்த குரலில்.

இனி என்ன சொல்லுவது, என்ன கேட்பது என தெரியவில்லை அவனிற்கு “சரி, சந்தோஷம், எனக்கு நிறைய வேலையிருக்கு, நானே கூப்பிடுகிறேன், பை, டேக் கேர்” என்றான். வைத்தும் விட்டான்.

இந்த பக்கம் சாக்க்ஷிக்கு என்ன சொல்லுவது என தெரியவில்லை. ஆனால் ஏனோ கண்ணில் நீர் நிறைந்தது. ஏன் எதற்கு என புரியவில்லை. தனது அலைபேசியையே பார்த்திருந்தாள்.

அதற்கடுத்தடுத்து வந்த நாட்களில் சாக்ஷிக்குதான் சங்கடமாக இருந்தது. என்ன என்றே தெரியவில்லை. திருமணம் என்ற சந்தோஷத்தை எல்லாம், கதீஷ் என்ற நட்பு பறித்துக் கொண்டது.

வீட்டில் நிச்சைய வேலைகள் நடக்க தொடங்கின. வீட்டில் ஆட்கள் சேர்ந்தனர். சொல்லும் வேலையெல்லாம் செய்தாள் சாக்க்ஷி. ஆனால், எதிலும் ஒன்ற முடியவில்லை..

கதீஷும் ஊரிலிருந்து வந்திருந்தான். தன் வேலையை பார்க்க தொடங்கினான்.. சாக்க்ஷியை பார்க்க செல்லவில்லை. ஒரு மெசேஜ் கூட செய்யவில்லை அவளிற்கு. அவளின் வீட்டை கடக்கும் போது மட்டும், அவளின் வண்டி இருக்கிறாதா என அவன் கண்கள்தான் தேடும்..

வீட்டில் எல்லோரும் தன்னை ஏதோ இகழ்ச்சியாக பார்ப்பது போல் தோன்றியது அவனிற்கு. தோற்றதாக உணர்ந்தான்.. எனவே, குடும்பத்திடமிருந்து தள்ளி இருக்க பழக்கி கொண்டான்.

வருவான், சாப்பிடுவான், உறங்க செல்லுவான்.. இப்போது அதிக நேரம் வீட்டு பின்புறமுள்ள, ஜகுவாருடன் கழித்தான்.. அவர்களைத்தான் தேடினான். இது பற்றி வீட்டிலும் யாரும் கண்டுகொள்ளவில்லை.

கதீஷ் வந்தது எதுவுமே இப்போது சாக்ஷிக்கு தெரியவில்லை. ஒருமாதம் சென்ற நிலையில். அடுத்த வாரம், நிச்சையம் என்ற நிலையில், மாப்பிள்ளை வீட்டிலிருந்து பெற்றோர் வந்திருந்தனர்.

பையன் தன் அத்தை பெண்ணை விரும்புவதாக கூறினார். அதனால், தங்கள் இளைய மகனுக்கு தங்கள் பெண்ணை தருமாறு வேண்டினர்.

ராஜன்க்கு ஓய்ந்தே போனது, ‘சரியென’ சொல்லியே இருப்பார். ஏதோ அந்த நேர நல்ல சிந்தனையில், தன் மனைவியை பார்க்க, மேகலைதான் ‘வேண்டாம்’ என்பதாக தலையசைத்தார்.

வீட்டில் ராஜனின் தம்பி வேறு இருந்தனர், ஒன்றுவிட்ட பங்காளிகள் என சில உறவுகள் இருக்கவும். அவர்களும் ஆளாளுக்கு ஒவ்வொன்று சொல்ல, வார்த்தைகள் சண்டைகளாக மாற தொடங்கின.

நான்கு நாட்களின் நிச்சையம் என்ற நிலையில் புடவை நகை, இதோ, இப்போதுதான் ‘வீட்டு வாசலில் பந்தல் போட்டுக் கொண்டிருந்தனர்’ என எல்லா ஏற்பாடுகளும் செய்த நிலையில் இப்படி ஒரு செய்தி எனும் போது அனைவரும் கொஞ்சம் பேசியேவிட்டனர்.

என்ன செய்வது என தெரியவில்லை. இப்போது மாப்பிள்ளை வீட்டு மனிதர்கள் சொல்லும் ஒரே வழி, தங்கள் இளைய மகனுக்கு தாருங்கள் என்கிறார்கள். அவர்களின் வாதம் நாங்கள் அப்படியே விட்டு செல்லவில்லை. அடுத்தபிள்ளைக்கு, கேட்கிறோம் என்பதாக இருந்தது.

இது சரி வருமென மேகலைக்கு தோன்றவில்லை. எனவே வேண்டாம் என தன் கணவரிடம் கண்களால், கெஞ்சிக் கொண்டிருந்தார்.  ராஜன் பேச்சை வளர்க்க விரும்பாதவராக, என்ன செய்வது என தெரியாமக் கையை பிசைந்து கொண்டு நின்றார்.

ராஜன் அவர்களிடம் “நாங்கள் பேசி தகவல் சொல்கிறோம்” என்றார். அவர்க்கு தன் மகளை நினைத்துதான் கவலை. எனவே என்ன சொல்வது என தெரியாமல். இப்போதைக்கு பேசி அனுப்பி வைத்தார்.

அவர்கள் சென்றவுடன், எங்கும் அமைதி. யார்க்கு என்ன பேசுவதென தெரியவில்லை. ராஜன் எதையும் வெளிகாட்டிக் கொள்ளவில்லை. ஆனால் உள்ளுக்குள் நொறுங்கிக் கொண்டிருந்தார். தன் மகளுக்கு நல்ல வாழக்கை அமையாதா எனதான், தேன்றியது.   

சாக்க்ஷி, கல்லூரி விட்டு வந்தவுடன் வீட்டின் அமைதி அவளை ஈர்க்க, தன் தந்தையிடமே “என்னப்பா, ஏன் ப்பா, உடம்பு முடியலையா” என்றாள் தயங்கி தயங்கி.

அவளின் சித்தப்பா, மட்டும் இருந்தார். மற்றவர்கள் அனைவரும் கிளம்பியிருந்த நிலையில். மேகலையையும் கண்ணில் காணவில்லை. சாக்க்ஷி இப்படி கேட்கவும். அவளின் சித்தப்பாவிற்கு ஏனோ குரல் ஓங்கி விட்டது.

அவர் “உன் நேரம் தான், எங்க அண்ணன, இப்படி படுத்துது“ என்றார். ராஜன் உடனே “டேய் விடுடா, அவ என்ன செய்வா” என சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆனால், அதெல்லாம் காதிலே வாங்கவில்லை, அவரின் தம்பி சாக்க்ஷியிடமே பாய்ந்தார். ‘உன்னால்தான், உன்னால்தான் எல்லாம்’ என ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார்.

இதை பார்த்துக் கொண்டிருந்த ராஜனுக்கு, தன் தம்பியை எவ்வளவு தடுத்தும் அவரை அடக்க முடியவில்லை. மேகலையும் சொல்லியும் கேட்கவில்லை. அந்த ஹாலே, அவரின் வார்த்தைகளால் உஷ்ணமாக இருந்தது.

சாக்க்ஷிக்கு இப்போதுதான், சற்று புரிவது போல் இருந்தது. ஆனால் தன் சித்தப்பா சொல்லுவது போல், ‘இதற்கெல்லாம் நீதான் காரணம்’ என சொல்லும் வார்த்தையைதான் தாங்க முடியவில்லை.

எனவே, கண்கலங்க நின்று கொண்டிருந்தாள். தன் அப்பா அருகில் சென்று அமர்ந்தாள். அவர்தான் “சித்தப்பா, வருத்ததுல கத்தராம்மா, நீ எதுவும் மனசில் வச்சிக்காதா” என சொல்லிக் கொண்டே தன் நெஞ்சை நீவிக் கொண்டார்.

அமைதியாக சாக்க்ஷி, தன் தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டாள். அவளின் சித்தப்பா, கத்தி தீர்த்து, கிளம்பிவிட்டார் தங்கள் வீட்டிற்கு. அக்ஷரா இன்னும் வரவில்லை. இன்று கல்லூரி முடித்துக் கொண்டு வருவதாகத்தான் இருந்தது.

அவளும் வந்து சேர்ந்தாள்.. இப்போது வீடே இன்னும் அமைதியானது.. மேகலைதான் நடந்ததை தனது இரு மகள்களிடமும் சொல்லிக் கொண்டிருந்தார்.    

‘இது சரியாகிவிடும்’ என சொல்லி தேற்ற யாருமில்லாமல், அந்த இரவு அனைவரும் ஹாலிலேயே தூங்கினர்… ஒருவருகொருவர் ஆறுதலாக இருந்தனர். அதுதான், அப்படி இருந்த அவர்களின் கடைசி இரவானது..

மறுநாள், ஏதோ கொஞ்சம் தெளிந்தது போல் காட்டிக் கொண்டனர் அனைவரும்.. கொஞ்சம் இயல்பு நிலை கொண்டது வீடு. சாக்க்ஷியின் மனம் இயல்பாய் தனது தோழனை தேடியது..

அவனிடம் தனது கவலை சொல்லி கதற வேண்டும் போல் இருந்தது.. சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளவும்  அவனைத்தான் முதலில் தேடினாள். இப்போதும், அப்படியே கவலை என்றதும், அவனை தவிர யார் நினைவும் வரவில்லை அவளிற்கு.  

எனவே அவனை நேரில் சந்திக்க எண்ணி, அவனின் வீட்டிற்கு சென்றாள்… அவளிற்கு நேரமே சரியில்லை போல, காலையிலேதான் சென்றாள்.. ஆனால் அங்கிருந்தது.. அவனின் அம்மாவும், அவனின் முதல் அக்கா பாக்யலட்சுமியும்தான்.

“வாம்மா” என பெரியவராக பூங்கொடி வரவேற்க, பாக்கியம்தான் கொஞ்சம் கூட தயங்காமல் “எதுக்கு இங்க வந்த” என்றாள்..

சாக்க்ஷிக்கு, எதுவுமே தெரியாது.. கதீஷின் வீட்டில், கதீஷ் சொல்லியது.. சண்டை போட்டது. அதானல், சென்னை சென்றது. இன்னும் வீட்டில் சரியாக பேசாமல் இருப்பது, அது எல்லாவற்றையும் விட ‘கதீஷின் சுந்தரி தான்தான்‘ என. எதுவும் தெரியாதே..

பாக்கியம் எப்போதும் மனதில் எதையும் வைக்க தெரியாதவர். தம்பி என வரும் போது கொஞ்சம் அதிகமாகவே பொங்கி விடுவார். எனவே தம்பியின் இந்த தவ கோலத்திற்கு, இவள்தான் காரணம், நன்றாக இருந்தவனை, மாப்பிள்ளை அமையவில்லை என சோகமாக பேசி வளைக்க நினைக்கிறாள்’ என தானாக ஏதோ நினைத்துக் கொண்டார். மேலும் செய்வதெல்லாம் செய்துவிட்டு. இப்போது இங்கு எதற்கு வந்திருக்கிறாள் என்று வேறு கோவம். அதானல் பிடித்துக் கொண்டார் சாக்க்ஷியை.

வார்த்தைகளில் கூட மென்மை இல்லை. எல்லாம் வசவு சொற்கள்தான். இதுவரை அவள் கேட்டே இராத வார்த்தைகள். ‘நீ எங்கள் குடுபத்திற்கு வேண்டாம், மயக்குகிறாய், நடிக்கிறாய், அவனை இனி பார்க்க வர கூடாது. ஒழுங்காக திருமணம் முடித்து செல்லும் வழியை பார்’ என எது எதற்கோ அறிவுரைகள் என்ற பெயரிலும் வசவுகள். ஒரு அரை மணி நேரம் ஆடி தீர்த்த பிறகே அமைதியானார் பாக்கியம். பூங்கொடியும் எதுவும் கேட்கவில்லை. நடுவில் வரவில்லை, தனக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்ற ரீதியில் சமையலைறையில் சென்று நின்று கொண்டார்.

அவருக்கும் கோவம்தான், இருவர் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பவர். தங்கள் கும்பங்களில் இது போல ‘காதல்’ என்ற வார்த்தைக்கு கூட சொல்லாதவர்கள்’ என புரிந்த பெரிய பிள்ளைகள். இப்படி, இந்த நேரத்தில் வந்து விரும்புகிறேன் திருமணத்திற்கு கேள் என்றால் எப்படி ஒப்புவது என அவரின் கோவத்தை அமைதியாக இருந்து காட்டினார் பூங்கொடி.       

கதீஷிர்காவது, எதற்காக சாக்க்ஷியின் தந்தை தன்னை ‘வர வேண்டாம்’ என்கிற காரணம் தெரிந்தது. ஆனால், இங்கு சாக்க்ஷிக்கு ஏதும் தெரியாமலே அர்ச்சனை, ஆராதனை என எல்லாம் நடந்தது..

எனவே மொத்தமாக பாக்கியம் திட்டி முடித்த பின்புதான், தன் தோழன் மனதில் தான் நேசமாக பதிந்து கிடக்கிறோம் என்பதே புரிந்த்தது அவளிற்கு.

உரியவன் சொன்னால்தானே இனிக்கும். இங்கு, அந்த நேசத்தை கூட அவளின் உயிர் வரை கசக்கும் வார்த்ததகளால் சொல்லிய பிறகு, எப்படி இனிக்கும்.

‘அய்யோ’ என மனது ஊமையாய் கதறியது. இங்கு அவனிடம் ஆறுதல் தேடி வந்தால். இங்கு வேறொரு பூதம் கிளம்புகிறதே என வெறித்து பார்த்து அமர்ந்திருந்தாள் அவனின் சுந்தரி.

பூங்கொடி காப்பியுடன் வந்தார். “இந்தா சாக்க்ஷி., என்ன விஷயமா வந்த” என்றார். எதுவமே தெரியாதவராக.. என்ன சொல்லுவாள் சாக்க்ஷி, வாழ்க்கை அவளிற்கு இப்போதுதான் மனிதர்களை புரிய வைக்க தொடங்குகிறது.

அதே வெறித்த பார்வை. சிறு வயதிலிருந்து, தான் நின்று விளையாடிய வீடா இது. அப்போதிருந்த அன்பான மனிதர்கள் எல்லாம் எங்கே என ஏதோ திருவிழாவில் தொலைந்த குழந்தை, தெரிந்தவர் முகம் தேடும் நிலையில் அமர்ந்திருந்தாள்.

திரும்பவும் அதே வார்த்தையை கேட்டார் பூங்கொடி.. இப்போதுதான் நினைவு வர பெற்றவள் “வறேம்மா” என சொல்லி சென்றுவிட்டாள். எந்த முக சுளிப்பும் காட்டாமல்.. ஏதோ தன் மேல்தான் அனைத்து தவறும் என அமைதியாக சென்றாள். ஆம் பார்பதற்கு அப்படிதானே தெரியும்.

பாக்யம்தான் தன் அம்மாவிடம் “பார்த்தியாம்மா, எப்படி வாயே திறக்காமா போறா, நேரா தம்பிக்கிட்டதான் சொல்லுவா” என ஜோசியம் வேறு சொல்லிக் கொண்டிருந்தார்.

பூங்கொடிக்கு, இவளின் இந்த அமைதி ஏதோ உருத்தியது. என்ன நடந்தது என கேட்டிருக்க வேண்டுமோ என இப்போது மனது அலைபாய்ந்தது. ஆனால் இந்த அரைமணி நேர நிகழ்வும், சாக்க்ஷியின் அமைதியும் இன்னும் என்ன செய்ய போகிறதென அப்போது அவர்களுக்கு தெரியவில்லை.

சாக்க்ஷி, வீட்டிற்கு வரும்போதே அமைதியாகதான் வந்தாள். அவளின் மனம் முழுவதும் சிந்தனையிலிருந்தது. தந்து அறை சென்று முடங்கிக் கொண்டாள். பாக்கியத்தின் வார்த்தைகள்தான் அவளை வதைத்துக் கொண்டிருந்தன.

அப்போதுதான், ராஜன் மில்லிற்கு சென்றுவிட்டு வந்தார். நேற்றிலிருந்து ஏதோ அவருக்கு, முடியவில்லை. இடது பக்கம் வலிப்பது போலே இருந்த்தது. இப்போது வெயிலில் சென்றுவிட்டு வரவும், அவரின் பெண் பற்றிய கவலையும் சேர்ந்து கொள்ள, அதற்கு மேல் ராஜனால் சமாளிக்க முடியவில்லை “அம்மா,” என வலியால் முனக தொடங்கினார்.

வண்டி சத்தம் கேட்டு, வெளியே வந்த மேகலைதான் தன் கணவர் ஏதோ போல் இருக்கிறார் என அருகில் சென்று என்ன என கேட்டக கேட்டக வலியால் துடிக்க தொடங்கினார் ராஜன்.

சாக்க்ஷிதான் காரெடுத்து மருத்துவமனை அழைத்து சென்றாள். மைல்டு அட்டாக்தான்  என்றனர் மருத்துவர்கள்.. அதன்பின் ஒரு வாரம் வரை, மருத்துவமனை வாசம்தான் ராஜனுக்கு. கொஞ்சம் கொஞ்சமாக தேறிக் கொண்டிருந்தார்.

இது எதுவும் தெரியாதா கதீஷ், மதியம் வீட்டிற்கு வந்தான். அவசரமாக டெல்லி கிளம்பி சென்றுவிட்டான். இதோ போன வாரம்தான் வந்தான். தனது தோழியின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என தெரிந்து அந்த மருத்தவமனையிலேயே நின்றான்.. ஆம் தோழிக்காகதான் நின்றான்… தனது அனைத்து விருப்பங்களையும் மறைத்துக் கொண்டு, தோழனாகவே நின்றான்.

என்ன செய்வது அவனிற்கு இவளின் திருமணம் நின்றது தெரியாது. மேலும் அவள் தன் வீட்டிற்கு வந்தது தெரியாது. தன் நேசம் தெரியும் என்பதும் தெரியாது.. எனவே பழையபடி தோழனாக அனைத்திற்கும் கூடவே நின்றான்.

ஆனால், ராஜன் கடைசி நேரத்தில் சாக்க்ஷியையும், ப்ரகதீஷையும் ஒன்றாக பார்த்த திருப்தியில் விடைபெற்றார் போல. இன்று பதினாறாம் நாள். கதீஷ் வாசலிலேயே அமர்ந்திருக்கிறான். தன்னவளை இன்றாவது பார்க்க முடியுமா? என அமர்ந்திருக்கிறான்..    

  

        

 

  

      

     

      

 

Advertisement