Advertisement

மிட்டாய் புயலே-26

சின்ன கர்வமும், பெரிய வெட்கமுமாக காலையில் சீக்கிரமே எழுந்து, குளித்து கீழே வந்தாள் சாக்க்ஷி. இப்படியெல்லாம் அவள் சீக்கிரத்தில் எழுந்தது இல்லை முன்பு….

மில்லை பார்க்க தொடங்கியது முதல் இந்த பழக்கம். எனவே இவ்வளவு சீக்கிரம் சாக்க்ஷியை பார்க்கவும் பூங்கொடி….. “வாடா ம்மா…” என ஆச்ரியமாக அழைத்தார்.

அவரின் ஆராயும் பார்வையை கண்டு, தலை குனிந்தவாறே…. சமையலறை செல்ல முயன்றாள்… அப்போதுதான் ஜெயம் எழுந்து வந்தார். அவளை ஹாலில் பார்த்ததும், நேற்று இரவு சாக்க்ஷி செய்தது நினைவு வர, முகத்தில் கேலி இழையுடன் அவளை வேண்டுமென்றே ஒரு சுற்று சுற்றி வந்தார்.

சாக்க்ஷிக்கு ஜெயத்தின் செய்கையில் முகத்தில் கலவரம் தோன்றியது. முகம் வேர்த்தது… புது பெண்ணாய் முகம் ஜொலித்தது… ஜெயத்தின் கேலி, ராகிங் எல்லாம் புரிகிறது… ஆனால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை அவளால்.

ஜெயம் இன்னும் அவளை பார்ப்பதை நிறுத்தவில்லை… சாக்க்ஷியே “என்னக்கா…” என்றாள் ராகம் இழுத்து

ஜெயம் “நேத்து ராத்திரி, ஒரு ராட்சஸி சிரிச்சிக்கிட்டே, எங்க எல்லாரையும் பயபடுத்திட்டு மேல போனாலா… இப்போ யாரோ தேவதையாட்டம் ஒரு பொண்ணு வந்திருக்கா… அத்தோட அவ முகத்துல வெட்கம் வேற… அதான், யாருன்னு பார்க்கிறேன்….” என்றார் கிண்டலாக.. கூடவே அவள் காதில் வேறு… ஏதோ ரகசியம் சொல்ல….    

“ஐய்யோ… ஒரு சின்ன புள்ளைகிட்ட என்ன கேட்குறீங்க…. சீ..” என காதை மூடிக் கொண்டாள் சாக்க்ஷி.

இதெல்லாம் கண்டும் காணாமல்… பூங்கொடி நகர்ந்து விட, ஜெயம் “ஏண்டி, இப்படி கத்தற… ராட்சஸி” என்றார். இப்படியே பேசி ஒரு வழியாக பூங்கொடி காப்பி கொடுக்குவரை அங்கிருந்த உணவு மேசை மேல் சாக்க்ஷி அமர்ந்திருக்க…. ஜெயம் அவளை வம்பு செய்துக் கொண்டிருந்தார்.

அதன் பின் ஒவ்வெருவராக எழுந்து வந்தனர்… ஜெயத்தின் கணவர், பாக்கியத்தின் கணவர் பிள்ளைகள் என எல்லோரும் ஒருபாடு சாக்க்ஷியின் அரட்டையில் இணைந்து கொள்ள, வாக்கிங் முடித்து வந்த ஜெகனும் நீண்ட நாள் சென்று வீட்டில் வரும் சிரிப்பலையில் இனைந்து கொண்டார்.

மணி அப்போதுதான் ஆறரை…. எல்லோரும் காபி குடித்து…. பிள்ளைகள் எல்லாம் எழுந்து சென்றுவிட, பாக்கியத்தின் கணவர் பேப்பருடன் ஐக்கியமாகிவிட, ஜெயத்தின் கணவர் குளிக்க சென்றிருந்தார்….

சபை கலைந்தவுடன், சாக்க்ஷி அப்போதுதான் பூங்கொடியிடம் “அத்த பசிக்குது“ என்றாள்.

திரு திருவென விழித்தவாறே அவள் சொல்லவும் ஜெயம் திரும்பவும் காதில் “என்னடி செமையா உழைச்சிருக்க போலவே….” என்றார்.

இவள் அலட்டிக் கொள்ளாமல் “என்ன செய்ய… உன் தம்பி….” என ராகம் இழுக்க.

ஜெயம் “சத்தம் போடாதடி…” என அவளின் வாய் மூடினார்.

பூங்கொடி “பொங்கல்தான் ரெடியா இருக்கு, உனக்குத்தான் பொங்கல் ஆகாதே, இரு ரெண்டு தோசை ஊத்தி தரேன்..” என மாவெடுத்து வந்து… தோசை வார்க்க தொடங்கினார்.

அந்த நேரம் வரை உறங்கிய கதீஷ்…. சற்று விழித்தான். கொஞ்ச நேரம் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான்…. இவளும் காபியுடன் வாருவாள் என இவன் காத்திருந்தான்.

அந்த சீனே இல்லை இப்போது… என ஒரு வழியாக புரிந்து, எழுந்து பல்துளக்கி… கீழே இறங்கி வந்தான்.

கதீஷ் ஒரு ஷார்ட்ஸ் ட்-ஷ்ர்டில் இறங்கி வந்து கொண்டிருந்தான் அனைத்தையும் நோட்டமிட்டபடி… அக்காக்கள் கண்ணில் தென்படவேயில்லை எனவும்… கிட்சேன் சென்று தானே “அம்மா…” என அழைத்து காபி கேட்கலாம் என நினைத்தான்…

ஆனால், அவன் பார்த்தது அப்படியொரு நிகழ்வு வாயே வரவில்லை அவனுக்கு…. அப்படியே நின்றிருந்தாதான் ஒரு இரண்டு நிமிடம்..

அங்கு சாக்க்ஷி கிட்சென் மேடையில் அமர்ந்திருக்க… பூங்கொடி, தோசை ஊற்றிக் கொண்டிருக்க…. ஜெயம் “ஒன்னு போட்டுக்கடி… “ என அவளை கெஞ்சிக் கொண்டிருக்க….

பாக்கியம் “விடு அவள, அப்புறமா… கதீஷோட வேற சாப்பிடன்னும்….” என ஏதோ சொல்லிக் கொண்டிருக்க

கதீஷ் ‘அடிபாவி… இது எப்போலேருந்து’ எனும் விதமாக பார்த்தபடியே நின்றிருந்தான் ஒரு இரண்டு நிமிடம்.

சாக்க்ஷிக்கு ஏதோ தோன்ற அவள் நிமிர்ந்து பார்க்க… கதீஷ் கையை கட்டிக் கொண்டு நின்றிருந்தான் அவளை முறைத்த வண்ணம்…

சாக்க்ஷி அவனை பார்த்துவிட்டு மேடையிலிருந்து குதித்து இறங்கி “வாங்க கதீ…. இருங்க காபி தரவா…. இல்ல சாப்பிடுரீங்களா….” என்றாள் ஒரு குற்ற குறு குறுப்பில்…             

கேட்டிருந்த அனைவருக்கும் ‘வாங்க வா…., இது எப்போதிலிருந்து…’ என பார்த்திருக்க….  

சாக்க்ஷி “அத்த எனக்கு போதும்…. அத்த… கதீக்கு காப்பி போடுங்க…” என்றவள் அவனிடம் திரும்பி “இருங்க…. கதீ” என்றாள்

இன்னும் முறைத்தபடியே நின்றிருந்தான் அவன். அவனின் முறைப்புக்கு சாக்க்ஷிக்கு காரணம் தெரியவில்லை…. அவள் பாவமாக “என்னங்க….” என்றாள்.

ஒன்றும் சொல்லாமல் டைனீங் ரூம் சென்று, ஒரு சேரில் அமர்ந்து கொண்டான்…. புது மாப்பிள்ளைக்கு கோவம்….

பூங்கொடி கதீஷிடம் காபி கொண்டு வந்து கொடுத்தார்… இவனுக்கு இன்னும் ஏறியது…. ‘ஏன் அவ வரமாட்டாலாம்மா’ எனதான்.

கிட்சென்னுள்ளே குசு குசுவென ஒரே பேச்சு சத்தம்.. இவனும் அதை உற்று கேட்க….

பாக்கியம் “எப்பெலேருந்து டி…. என் தம்பிக்கு இவ்வளவு மரியாதை…” என்றார் அவளிடம்..

ஜெயம் உடனே “ராத்திரி தம்பி… ஏதாவது … மந்தி…” என ஏதோ சொல்ல வர, சாக்க்ஷி அவரின் வாயை மூடிக் கொண்டே..

“அன்னிக்கு, நம் பெட்ரோல் பங்க் ஒபென்னிங் அன்னிக்கு…. நான் சாப்பிட போனேனேனா..”  என இவள் கதை சொல்ல ஆரம்பிக்க..

கதீஷ் காபி கப்புடன் வந்து கிட்சென் வாயிலில் நின்று கொண்டான்….  கூடவே “அதுக்கு முன்னாடி … உன் கைய…….. பிடிச்சென்ல்ல, அதையும் சொல்லு” என்றான் காரமாக…

அவனே தொடர்ந்து “அன்னிக்கு… காலையில் போன்ல…. அதையும் மறக்காம சொல்லு” என்றான்.

சாக்க்ஷி, என்ன நினைத்தாலோ சிரித்தவாறே இன்னும் ஒருபடி மேலே போய்  “அன்னிக்கு கார்ல… நடந்தது கதீ…” என்றாள் அவனிடம்

கதீஷ் காபியை ஒரு மிடறு பருகியவாறே “ம்… அதையும், அப்புறம் நேத்து…. அத விட்டுட்ட….“ என்றான்

இப்போது பார்த்திருந்த அக்கா தங்கை இருவரும் விழித்தனர்…

சாக்க்ஷி விடாமல் “நேத்து நீங்க ஏதும் பேசவேயில்லையே கதீ……” என்றாளே பார்க்கலாம். கதீஷ்க்கு குடித்த காபி… மூக்கில் ஏறியது… “அடிங்க…” என்று அவளை துரத்த தொடங்கினான்… இவள் பின் பக்கம் ஓட… அவனும் விரட்டினான்.

பாவமாக இங்கு ஜெயமும் பாக்கியமும் அவர்களையே பார்த்திருந்தனர்… இவங்க ‘ஏதாவது நம்ம கிட்ட சொன்னாங்களா…. இல்லையா!…‘ என சிரித்தவாறே நின்றிருந்தனர்.

ஓடியவள்… புடவை தடுக்குது என இழுத்து சொருக.. அந்த நேரத்தில் அவளை பிடித்துக் கொண்டான் கதீஷ்… பின்னிலிருந்து அவளை முரட்டுத்தனமாக அணைத்தவன்

அவள் இழுத்து சொருகியிருந்த புடவையை இறக்கிவிட்டான் “ஏதோ கொத்து வேலைக்கு போறவமாறி… “ என சொல்லியபடியே அவளின் வெற்றிடையை வருட… சாக்க்ஷி அவன் கையை தட்டிவிட… முயல அதையெல்லாம் கண்டு கொள்ளாமல்…  

கதீஷ் “ஏண்டி… காலையில, நீ காபி கொண்டு வருவேன்னு… நான் மேல வெயிட் பண்ணா…. நீ இங்க ஜாலியா…. கொட்டிக்கிட்டு இருக்க…” என்றான்.

சாக்க்ஷி “எனக்கெப்படி தெரியும்… நீங்க வெயிட் பண்ணுவீங்கன்னு..” என்றாள்.

அவளின் இதழ் நோக்கி ரசனையாக பார்த்தவன்… “காலையிலேயே… நல்லா…. புல் கட்டு கட்டிட்டியா டி.. அது மட்டும் எப்படி தெரிஞ்ச்சது.” என்றவன் அவள் இதழ்களை வன்மையாக இழுத்து…. முத்தமிட்டான்…

நீண்ட நேரம் சென்று தானாகவே அவளை விடுவித்தவன் “ப்பா… செம காரம் டி…” என்றான் சத்தமில்லாமல்…

சாக்க்ஷி “போங்க, காபில… சர்க்கரையே இல்ல… கதீ..” என்றாள் கண்ணடித்தபடி… அவள்.

கதீஷ், இவளின் பதிலில்… சிரித்தவாறே அவளை இன்னும் இடையோடு இறுக்கிக் கொள்ள…. பாக்கியத்தின் குரல் கேட்டது “கதீஷ்…. சாக்க்ஷி வீட்டிலிருந்து வந்திருக்காங்க” என்றார்.     

இவனும் “இதோ வரேன் க்கா” என்றான் சத்தமாக.

பின் கதீஷ் “என்னடி எல்லோர்கிட்டயும் பேசிட்ட போல, பாக்கி அக்கா கூட உன் கிட்ட பேசிட்டு இருந்தாங்க” என்றான்.

சாக்க்ஷி அலட்டிக் கொள்ளாமல் சொன்னாள் “அது எங்க அப்பா சொன்ன சீக்ரெட்…. எனக்கு இப்போதான் புரிஞ்சது… அதான்” என்றாள்.

கதீஷ் “தேங்க்ஸ் சாக்க்ஷி” என்றான். அவனின் கைகள் இன்னும் இறுக்கியது அவளை தன்னுள். எல்லாம் மாற… இன்னும் நாளாகும் என நினைத்திருந்தவனின் முன்… இப்படி ஒரு மாற்றம்.

அதை எதிர்பார்க்காதவன்… அவளின் பதிலில் இன்னும் உருகினான். அப்போது ஒரு எண்ணம் வந்தது ‘அப்பா இருந்திருந்தால்….’ என்ற எண்ணமே எழாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என எண்ணிக் கொண்டான்.      

சொல்லில் அல்லாது செயலில் செய்து காட்ட எண்ணி… இன்னொரு முறை அவளிடம் “தேங்க்ஸ்…” என சொல்லி நெற்றியில் தன் இதழ் ஒற்றி போனாபோகுதுன்னு அவளை விட்டு மேலே சென்றான் கதீஷ்.

ஒரு வழியாக கதீஷும் குளித்து கிளம்பவும்…. இங்கே காலை உணவை முடித்து, அங்கே மதிய விருந்துக்கு சென்றனர்.

அன்று மதியமே அக்க்ஷரா கிளம்புவதால்… அக்க்ஷராவின் மாமியார் வீடும் தங்கள் மருமகளையும் மகனையும் வழியனுப்ப வந்திருந்ததால்…. சாக்க்ஷி வீடு, ஏக… கலகலப்புடன் இருந்தது

மதியம் உண்டு முடிந்து. பேசுவதற்கு கூட நேரம் இருக்கவில்லை அவர்களுக்கு. கண்ணில் நீர் வழிய கிளம்பினாள் அக்க்ஷரா… அவளிற்கு எல்லோரும் ஒரே இடத்தில் இருக்க…. தான்மட்டும் தனியே செல்வது அப்படியொரு அழுகையை கொடுத்தது.

சாக்க்ஷியும் கதீஷும் கிளம்பினர், கோவையில் அவர்களை ஏர்போர்ட்டில் விடுவதற்கு… வழி முழுவதும் சாக்க்ஷியும், அக்க்ஷராவின் கணவரும் மாறி மாறி பேச்சுக் கொடுத்து அவளை கொஞ்சம் இயல்பு நிலைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இன்னும் இரண்டு மாதத்தில்…. கீர்த்தி, அவர்களின் சித்தப்பா பெண் திருமணத்திற்கு வர வேண்டுமென கூறியே தேற்றி அக்க்ஷராவை வழியனுப்பி வைத்தனர்.

கதீஷ் சாக்க்ஷியுடன் மருதமலை சென்றான்…. வீடு திரும்பவே இரவானது அவர்களுக்கு…. கொஞ்ச கொஞ்சமாக இருவரும் இயல்பு நிலைக்கு வந்தனர்.

பக்கத்தில்தான் அம்மா வீடு, அவர்களை பார்த்துக் கொள்ள, வசந்திக்கா…. கூடவே வேலு என பாதுகாப்பான சூழல்… அவ்வபோது சித்தப்பா வந்து போக தொடங்கினார்… எனவே சாக்க்ஷிக்கு கவலையோ, உறுத்தலோ ஏதுமில்லை…. அதுவே இன்னும் கதீஷுடன் அவளை ஒன்ற செய்தது.

ஒரு அமைதியான வாழ்க்கை முறை…. ஆற அமர ஒவ்வென்றாக ரசிக்க கற்றுக் கொண்டனர் இருவரும்…. முறையாக விருந்துக்கு சென்றனர்… சொந்தங்களை அனுசரித்தனர்.

எல்லோருக்கும் வாய்பதில்லை இப்படியொரு அமைப்பு… எனவே கதீஷும் சாக்க்ஷியும் அதன் அருமை புரிந்து பற்றிக் கொண்டனர்.

சாக்க்ஷியின் தொழிலில் இப்போது செந்திலையும் வொர்கிங் பார்ட்னெர்ராக சேர்த்திருந்தாள் சாக்க்ஷி…. தான் ஆரம்பித்த தொழிலில்.

மில்லை அப்படியே அப்பாவின்… நினைவாக பார்க்க தொடங்கினாள் அதில் மாற்றம் செய்யவில்லை.

வேலுவை இப்போது மில்லின்…பொறுப்பாளர் என்ற நிலைக்கு  பழக்கியிருந்தாள்… சாக்க்ஷி.

வேலுக்கு வாய் எவ்வளவு நிறையவோ…. அவ்வளவு கெட்டி, காசு விஷயத்தில்…. கை சுத்தம்… எனவே மிகவும் நன்றாக பார்த்துக் கொண்டாள் அவனை.   

நாட்கள் ரம்மியமாக சென்றது. வீடு மில்லு என சாக்க்ஷி இருக்க பழகினாள். அவ்வபோது ஏதாவது சில…. பிரச்சனைகள் தலை தூக்கும்… தொழிலில்.

சாக்க்ஷியே அதனை தீர்க்க முயற்சி செய்வாள்தான். ஆனால் எப்படியோ கதீஷின் காதிற்கு விஷயம் சென்றுவிடும்…

‘தள்ளியிரு’ என சொன்னபோதே…. கூடவே நின்றவன். இப்போது சொல்லவா வேண்டும், அவளை முறைத்துக் கொண்டே வழி சொல்வான், அல்லது தீர்த்து வைப்பான்.   

வீட்டிற்கு வந்ததும் சாக்க்ஷி பிடித்துகொள்வால் கதீஷை… “என் வேளையில் தலையிடாதே….” என.. ஆனா, எது சொன்னாலும் கதீஷ் கேட்பதேயில்லை…

இப்போது அவன் “நான் இருக்கும் போது, நீயேன் கஷ்ட்டபடற“ என்பான் ஆளுமையான குரலில், ஒரே பதிலாக.

இப்படி, பெரிதான சங்கடங்களில் இருந்தும்… சின்ன சின்ன காய்ச்சலில் இருந்தும் கூட… அவளை தனக்குள் ஒழித்துக்கொள்ள தொடங்கினான்… கதீஷ்.

15 வருடங்களுக்கு பிறகு,

வீடே சின்னதாக ஒரு விழாக் கோலம் பூண்டிருந்தது…  அழகான அலங்கரிக்கப்பட்ட… மர தொட்டில் நடுவில் இருக்க… இந்த வீட்டை அழகு செய்யவே நான் பிறந்தேன் என்பதை போல…

கைகால்களை அசைத்துக் கொண்டு… தன் அண்ணன் எங்கு சென்றாலும்… அவனை தனது மணி விழியால் தொடர்ந்தபடி… “ங்கா…” என செல்லமாக சிணுங்கிக்கொண்டே… படுத்திருந்தாள், கதீஷ் சாக்க்ஷியின் தவ புதல்வி….

இந்த தேன்சிட்டுக்கு, அவள் அன்னையை அடையாளம் தெரிகிறதோ இல்லையோ… தன் அண்ணனை நன்றாக அடையாளம் தெரியும்…

பிறந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில்… அவளின் பெயர் சூட்டும் வைபத்திற்குதான்… இப்போது வீடு ரெடியாகிக் கொண்டிருந்தது…

அவர்களின் முதல் மகன் ப்ரனேஷ்…  6ம் வகுப்பில் இருக்க… இரண்டாவது வேணுமா… வேண்டாமா என குழப்பத்தில் நாட்கள் செல்ல… ஒரு வழியாக, சாக்க்ஷி பிடிவாதம் பிடித்து பெற்றுக் கொண்டாள்… இவளை…

சாக்க்ஷி “ப்ரனேஷ்… இங்க வா..” என அழைக்க…

அவன் “அம்மா பாப்பா… தனியா இருக்காம்மா… என்னவேன்னும் உனக்கு” என்றான்.

சாக்க்ஷி “போன் அடிக்குது பார் மேல… எடுத்து வாடா தங்கம் …” என கெஞ்ச… ம்கூம் நகரவில்லை அவள் மகன், தன் தங்கையிடமிருந்து…

பதில் மட்டும் வந்தது சன்ன குரலில்… “ம்மா… அவ என் கைய பிடிச்சிருக்காம்மா…” என்று கர்ம ஸ்ரத்தையாய் சொன்னான் மகன்.

சாக்க்ஷி சிரித்தவாறே… ஏதோ முனகிக் கொண்டே மேலே ஏற தொடங்க… எங்கிருந்தோ வந்தான் கதீஷ்… “இருடி… நான் எடுத்து தரேன்..” என்றவாறே இரண்டு இரண்டு படிகளாக மேலே சென்றவன்… போனுடன் கீழே வந்தான்.

அவளிடம் கொடுத்து விட்டு… திரும்பவும், தான்… விட்டு வந்த வேலையை பார்க்க சென்றுவிட்டான் கதீஷ்…. எப்போதும் போல பாக்கியமும், ஜெயமும் ‘ஆவென’ வாய் திறந்து பார்த்திருந்தனர் இவர்களை.

பாக்கியத்தின் பெரிய பையனுக்கு திருமணம் முடிந்து… அவர்களுக்கும் ஒரு மகன் இரண்டு வயதில் இருந்தான். அவனை சற்று நேரம் வைத்திருக்க சொல்லி… அவனின் மனைவி… இவ்வளவு நேரம் கேட்டுக் கொண்டிருக்க… அந்த இளம் கணவனோ… போனில் பிஸியாக இருந்தான்… ‘முடியாது’ என வாயால் சொல்லியபடி…

இப்போது இந்த செய்கையை பார்த்த அவனின் மனைவி “எப்படி சித்தப்பா… இப்படி…. எப்போதும், இங்க ஒரு கண்ண வைச்சிருப்பீங்களா…. சித்தி, ஏதும் கேட்காமேலே செய்றீங்க…. கிரேட் சித்தப்பா நீங்க…” என தன் கணவனை முறைத்துக் கொண்டே கதீஷை பாராட்டினாள்… அந்த பெண்…

அவள் வாய் திறந்து சொல்லிவிட்டால்… அவ்வளவுதான். மற்றவர்கள் எல்லாம் கண்டும் காணாது இவர்களின் செய்கையை பார்த்துக் கொண்டு அமைதியாகினர்.

விழா இனிதாக சென்றது. அனைவரும் வந்திருந்தனர்…. அக்கா தங்கைகளின் பிள்ளைகள் எல்லாம் வளர்ந்திருக்க…. இப்போது பெயர் சூட்டிக் கொள்ளும் தேன்சிட்டு…. எல்லோரையும் ஈர்த்துக் கொண்டிருந்தது.

குலதெய்வத்தின் பெயர் முதலில் வைக்கப்பட்டு… இரண்டாவதாக “தர்ஷினி” என அழைக்கப்பட்டாள்…

எல்லோரிடமும் சிரித்தபடியே சென்று… யாரிடமும் அழுகாமல்… எல்லோர் கவனத்தையும் தன் பக்கம் இழுத்து…. ஒரு இரண்டு மணி நேரமாக…. எல்லோர் முகத்திலும்… மகிழ்ச்சி அலையை தந்தவள்… லேசாக சிணுங்க தொடங்கினாள்…

இப்போதுதான் சாக்க்ஷி கைகளுக்கே வருகிறாள்… தர்ஷினி… அன்னை முகம் கண்ட தர்ஷி…. இவள்தான் நமக்கு அமுது தருவாள் என அழகாக, “ங்கா…. ங்கா…” என செல்லம் கொஞ்சி கைகால்களை அசைத்து… அழுக… மேலே செல்வதற்குள்… தாய்மை நனைய தொடங்கியது சாக்க்ஷிக்கு.

அவசரமாக அவளால் மாடியேற முடியவில்லை. எனவே, சாக்க்ஷி “அக்கா… “ என பக்கத்திலிருந்த பாக்கியத்தை அழைக்க… கதீஷ் வந்து விட்டான் அவளருகில்.

தன் மகளை புதையலாய் கையிலேந்தி… அதற்கும் மேல்… வரமாக வந்தவளை, கைதாங்கி மெல்ல மாடிக்கு அழைத்து சென்றான்.

சாக்க்ஷி பரபரவென மகளின் பசியை கவனிக்க… கதீஷ் கதவு ஜன்னலெல்லாம் சாற்றி… ACயை ஆன் செய்துவிட்டு கிளம்பினான்.

போகும்போது கதவை திறந்தபடியே “நான் போயி, அக்காங்க யாரையாவது அனுப்புறேன்…. ம்… நீ பொறுமையா வா, புடவை வெயிட்டா இருந்த வேற மாத்திட்டு வா… அவள கீழ எடுத்து வராத… அக்காவ கூட வைச்சுட்டு நீ வா” என எல்லாம் அவனாக யோசித்து…. அதையும் சொல்லிவிட்டு

இப்போது தன் மனையாளை பார்த்து “சரியா…” என்றான்

சாக்க்ஷிக்கு எப்போதும் போல் முறைக்க தொடங்கினாள்… அதெல்லாம் கண்டு கொள்ளாமல் கதீஷ் திரும்பவும் “சரியா டி” என்றான்.

சாக்க்ஷி “நான் என்ன சொல்லனும் நீங்களே சொல்லிடுங்க…” என்றாள் உறங்கிய தன் மகளுக்கு வாய் துடைத்தபடியே… காரமாக.

ஜெயம் சரியாக அங்கு வர “தோ… அக்கா வந்தாச்சு… நீ போய் புடவைய மாத்து” என்றான்,

சாக்க்ஷி “நீங்க கிளம்புங்க…. நான் பாத்துக்கிறேன்” என்றாள் கோவமாக.

ஒருவழியாக அங்கிருந்து அகன்றான் கதீஷ். ஜெயம் வந்தவுடன்..அவருடன் பேசியபடியே தன் கணவன் சொன்னது போல் புடைவை மாற்றி… ஜெயத்திடம் “இங்கிருங்கண்ணி…. அம்மா சாப்பிட்ட உடனே இங்க அனுப்பறேன்… நீங்க வந்திடுங்க” என சொல்லித்தான் கீழே சென்றாள் சாக்க்ஷி.

நேரம் இப்படியே கடந்தது… இரவு உணவு முடிந்து… அக்காக்கள் முதற்கொண்டு அனைவரும் கிளம்பினர்.

மேகலை, பெண் மாப்பிள்ளையை… குழந்தைகளுடன் நிற்க வைத்து சுற்றி போட்டுவிட்டுதான் அவரும் கிளம்பினார்.

ஜெகனும், கதீஷும் வந்தவர்கள் பற்றி ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்…. குழந்தைகள் இருவரும் மேலே உறங்கிக் கொண்டிருந்தனர்.

சாக்க்ஷியால் அலைந்ததில் நிற்க முடியவில்லை… அதனால் அமர்ந்து கொண்டு, கிட்செனிள் பால் ஆற்றிக் கொண்டிருந்த பூங்கொடியுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.

ஜெகன் பேச்சை முடித்துக் கொண்டு படுக்க சென்றுவிட… கதீஷ் ஹாலில்லிருந்தே “சாக்க்ஷி ..” என அழைக்க…

சாக்க்ஷி “வரேங்க…” என்றாள் கதீஷ் காதில் விழவில்லை.. அவன் உள்ளே எழுந்து வர, சோர்ந்த தோற்றத்தில் அமர்ந்திருந்தாள் சாக்க்ஷி… கையில் பிளாஸ்க்குடன்.

பூங்கொடி “போய் படுங்க…  மணியாச்சு” என்று சொல்லி சென்றுவிட்டார் படுக்க.

அவர் அந்த பக்கம் சென்றதும் சாக்க்ஷியை, தன்னிரு கைகளில் ஏந்திக்கொண்டான் அவள் கணவன்…  சாக்க்ஷிக்கு அப்படியொரு நிறைவு… எப்போதும் போல் தன் கண்பார்த்து… உபாயம் செய்யும் கணவன் எத்தனை பேருக்கு கிடைக்கும் என எண்ணிக் கொண்டிருந்தாள்.

ஒரு கையில் பிளாஸ்க்குடன், மற்றொரு கையில் அவன் கழுத்தை இறுக்கி கொண்டு… “டேய்… நீ அரக்கனா… அடிமையாடா…” என்றாள் கன்னங்கள் மின்ன…

கதீஷ் லேசாக சிரித்தான் “நீயே சொல்லேன்…” என அவளை தங்களது ரூமில் இறக்கிவிட்டான். விடை தெரியவில்லை இன்னும் அவளிற்கு…. திருமணம் ஆனா நாள் தொட்டு, அவளுள் எழும் கேள்வியிது…

எல்லா முடிவுகளையும் அவனே எடுப்பான். அவளை மட்டுமே கருத்தில் கொண்டு எல்லாம் செய்வான். அதை அவனே நினைத்தாலும் மாற்றிக் கொள்ளமுடியவில்லை கதீஷால்.

சாக்க்ஷி அவனையே விழியெடுக்காமல் பார்த்திருக்க… கதீஷ் “என்னடி “ என்றான். அவளின் அருகே கட்டிலில் அமர்ந்தவாறே.

கதீஷ் பொறுமையாக “என்னடி… சத்தமே இல்ல…. ரொம்ப யோசிக்காதா…. அதான் நான் இருக்கேன்ல…. உங்களுக்கும் சேர்த்து யோசிக்க…” என்றான்.

சாக்க்ஷிக்கு “அதானே….  எங்கள வளரவே விடாதீங்க” என்றாள்.

கதீஷ் “வளரவே வேண்டாம்…. அதே குட்டி சாக்க்ஷியாவே இரு…. “ என கொஞ்சிக் கொண்டே அவளின் மடி மீது தலை சாய்த்து உறங்க தொடங்கினான். தன் போல் சாக்க்ஷியின் விரல்கள்… அவன் தலை கோத தொடங்கியது…. பேச்சுகளை விட புரிதல் அதிகம் இவர்களிடம்.

எந்த உறவிலும் நட்பு எனும் அடித்தளம் இருந்தால்… அது ஜெயிக்கதானே செய்யும்…. அதே ரசனையான நட்பு, நேசத்திற்கு அடிகோலும் போது…. வாழ்ந்தே தீர்த்திட வேண்டும் அந்த வாழ்வை…

‘அதை தவமாக, அதை வரமாக, அதை சொர்கமாக’ என எல்லாமாக கொண்டாடிக் கொண்டிருந்தனர் சாக்க்ஷியும் கதீஷும்.  

##சுபம்##

   

 

 

  

   

 

   

 

 .  

Advertisement