Advertisement

ஆனால், இப்போது சாக்க்ஷியிடம் எந்த குழப்பமும் இல்லை. சிறிவளான சாக்க்ஷி இப்போது இன்னும் அழுத்தமாக அழைத்தாள் பூங்கொடியை “அத்த…. எங்க ஜகு…. வீரா எல்லாம்” என்றாள் சிரிப்புடன்.

அப்போதுதான் காப்பி கொடுத்து முடித்து உள்ளே வந்த ஜெயம் இதனை பார்த்துக் கொண்டே நின்றார். தன் அன்னை என்ன செய்ய போகிறார் என பார்ப்பதற்காக.

பின்புறம் முகம் கழுவி வந்த பாக்கியமும், என்ன என பார்த்தார்… அவருக்கு இங்கே நடந்தது எதுவும் தெரியாது… ஜெயம் நிற்பதால் நின்றார்.

பூங்கொடி சாக்க்ஷியின் அருகே வந்து “சாக்க்ஷி….” என சொல்லி கன்னம் வருடி நின்றார். அவருக்கு பேசவே வரவில்லை. சின்ன பெண்ணிடம் தோற்று விட்டோமே…. அவள் எவ்வளவு இயல்பாய் அத்தை என்கிறாள் என நினைத்த வண்ணமே, அவளின் நெற்றியில் இதழ் பதித்தார் அவர்    

‘ஏன், எதற்கு’ என அங்கிருந்த நான்கு பேர்க்கும் தெரிந்தது.. அந்த ஒரு நிமிடத்தில் கரைந்தது அவர்களின், குற்ற உணர்ச்சி…. அதனை உணர்ந்த சாக்க்ஷி

இன்னும் ஒரு முறை அழுத்தி அழைத்தாள் “அத்த…. எங்க..” என திரும்பவும் சொல்ல தொடங்க….

ஜெயம் இப்போது சிரித்துக் கொண்டே “போதும் ம்மா…. எத்தனை தரம் கேட்ப…. உன் பிரிண்ட்ஸ் எல்லாம் பண்ணை வீட்டில் இருக்கு…. வேற எங்கயும் போகல….. “ என சொல்லி அருகில் வந்து தலை கோதினார்.

பாக்கியத்திற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை…. அங்கேயே நின்றிருந்தார்.

பார்த்திருந்த சாக்க்ஷி “பாக்கி க்கா…. வந்த புள்ளைக்கு இன்னும் காப்பி கூட கொடுக்கல…. என்னன்னு கேளுங்க க்கா…” என்றாள். அவரையும் தங்களுடன் சேர்க்கும் வண்ணம், இதை புரிந்த அனைவரும்… பாக்கியத்தை பார்த்து சிரித்தனர்.

இது போதுமே அனைவருக்கும்…. உடனே பாக்கியம் தானே சென்று காப்பி கலந்து எடுத்து வந்தார்.   

அப்போது அங்கு வந்த, உறவு பெண்மணி “வந்த அன்னிக்கே…. தம்பி பொண்டாட்டிக்கு சேவகமா…. போக போக தானே தெரியும் எல்லாம்…” என நொடித்துக் கொண்டே சொல்ல….

பூங்கொடி “கண்ணு பட்டுடும் டி…. தள்ளியே நில்லுங்க…” என சொல்லி வெளியே சென்றார். மற்ற மூவரும் ஒரு நமுட்டு சிரிப்புடன், தள்ளி நின்றனர்.   

இப்படியே பேசியவண்ணம் நேரம் சென்றது. உறவுகள் அனைவரும் இரவு உணவு முடித்து ஒவ்வெருவராக கிளம்பிக் கொண்டிருந்தனர்.

சாக்க்ஷியின் வீட்டு உறவுகளும் கிளம்பிக் கொண்டிருந்தனர். மேகலை, சாக்க்ஷியின் கண்களை உற்று பார்த்து “சந்தோஷமா இருடாம்மா..” என்றார். அப்படியே கட்டிக் கொண்டாள் அவரை.

ஒரு ஐந்து நிமிடம் சென்று அவரை தன்னிடமிருந்து பிரித்தவள் “ம்மா…. நான் சந்தோஷமாதான் இருக்கேன்…. நீ சாப்பிட்டு தூங்கு, நாங்க காலையில் வரோம்” என்றாள். குழந்தையிடம் சொல்லுவது போல்.

தலையாட்டிய படியே, சாக்க்ஷியிடம் விடை பெற்று கிளம்பினார் மேகலை. வரதன், நாதன் அவர்கள் குடும்பம் என எல்லோரும் கிளம்பினர். அக்க்ஷராவின் கணவரும், அவர்களுடன் கிளம்பினார்.

சாந்தாவும், அக்க்ஷராவும் மற்ற எல்லாம் முடித்து வருவதால், அங்கேயே இருந்தனர்.

சாக்க்ஷிக்கு லேசான ஒப்பனை செய்து கொண்டிருந்தாள் அக்க்ஷரா. இன்றுதான் சாக்க்ஷி இருபுறமும் தோள்களில் வழியும் மல்லிகையுடன், ஒரு மைசூர் க்ரேப் சாரியில்… பதட்டங்கள் ஏதும் இல்லாமல் அழகாக நின்றிருந்தாள்.

உள்ளே வந்த பூங்கொடி “சாமிக்கு கும்பிட்டு மேலே போடாம்மா” என சொல்லி சாந்தாவை அழைத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டார்.

ஜெயம் கையில் ப்ளஸ்க்குடன் வந்து “இந்தா பிடி” என சொல்லி, சாக்க்ஷியின் கையில் கொடுத்து கண்ணடித்தார். சாக்க்ஷிக்கு சிரிப்புதான் வந்தது. தானும், அவனும் பேசிய பல விஷயங்களில், இதுவும் ஒன்று என எண்ணினாள்.

‘பிரஸ்ட் நைட், பால் சொம்பு, பூ…’ என சொல்லி, இந்த நிகழ்வை எப்படியெல்லாம் கிண்டல் செய்வான் கதீஷ்…. என நினைத்து பார்க்க… கொஞ்சம் அதிகமாகவே முகம் ஒளிர்ந்தது சாக்க்ஷிக்கு. இன்று பார்க்கணும் எப்படி ரியாக்ட் பன்றானுன்னு.. என அதுவும் அவள் மனதில் ஓட…. அப்படியே சிரித்தபடி நின்றிருந்தாள் சாக்க்ஷி.

இவளின் நிலை பார்த்த ஜெயம் ஏன் சிரிக்கிறா என தெரியாமல்… தானே சொன்னார் “இது காபி சாக்க்ஷி…. பால் மேலே வெள்ளி சொம்பில் வைச்சாச்சு… சுடும்ல்ல அதான் கையில் கொடுக்கல, இது நீங்க…” என என்ன சொல்ல வந்தாரோ….

சாக்க்ஷி “ஹ ஹா ஹா……” என பெரிதாக சிரித்தாள். ஜெயமும் அக்க்ஷராவும் என்னவென தெரியாமல் நின்றிருந்தனர் அவளை பார்த்த வண்ணம்.

அங்கு ஹாலில் அமர்ந்திருந்த… பாக்கியம், சாந்தா, பூங்கொடி எல்லோரும்  ‘இன்னும் போகலையா’ என உள்ளே வந்து நின்றனர் அவள் சிரிப்பு சத்தத்தில்.

இப்போது நான்றாக பேசி பழகிய நிலையில் பாக்கியம் “இந்த நேரத்தில் பொண்ணு வெட்கப்பட்டு பார்த்திருக்கேன், ஏன் பயந்து போய் நின்ன பெண்ணை கூட பார்த்திருக்கேன்… ஆனா, இப்படி சிரிச்ச பெண்ணை இப்போதான் பார்க்கிறேன், ம்….. என் தம்பி பாடு பாவம்தான் போல” என்றார் அவளை நெட்டி முறித்தவாறே…

அக்க்ஷரா சற்று பயந்து போய் நின்றிருந்தாள் இவளின் செய்கையில்… சாந்தாதான் “என்ன சாக்க்ஷி இப்படி, இந்த நேரத்தில் விளையாட்டு…” என கடிய தொடங்கினார்.

பூங்கொடி “விடுங்க அண்ணி அவளை, அவ… இருக்கிற இடம் இப்படிதான் இருக்கும்… இப்போதான் எங்க வீட்டுக்கு கலை வந்திருக்கு… நீங்க வேற ஏதாவது சொல்லிக்கிட்டு… நீ கிளம்பு சாக்க்ஷி “ என சொல்லி அனுப்பினார் அவர். ஜெயம் பாவமாக… செல்லும் அவளையே பார்த்திருந்தார்.

அதே சிரித்த முகத்துடன் மேலே சென்றாள் சாக்க்ஷி. கதீஷ் இவளை எதிர் பார்த்து, டிவி முன் அமர்ந்திருந்தான். இவள் கையில் அந்த ப்ளஸ்கை பார்த்தவன், அவளின் சிரித்த முகம் பார்த்து, ஏதோ புரிந்தவனாக லேசாக சிரித்தான்.

அதை பார்த்த சாக்க்ஷியும், உதடு கடித்து லேசாக சிரிக்க…  இப்போது கதீஷுக்கு, அவளை தவிர எல்லாம் மறந்து போனது.

கதீஷ் “இங்க வா” என, இரு விரல் கொண்டு அவளை அழைத்து  அருகமர்த்திக் கொண்டான்.

கேள்வியே கேட்காமல், அவள் தோள் மேல் கை போட்டு… லேசாக அவன் உரச….. சாக்க்ஷிக்கு, இத்தனை நேரம் இல்லாதா வெட்கம் வந்து ஒட்டிக் கொண்டது. அமைதியாக அமர்ந்து கொண்டாள். ஏதும் பேசவில்லை இருவரும்…

இன்னும் அவர்கள் பேசுவதற்கு விஷயங்கள் இல்லை… இந்த உலகில். அப்படி ஒரு நட்பு அவர்களுடையது. இப்போது எல்லாம் மாறி… தலை கீழாக மாறி நிற்கிறது.

கதீஷின் மனம்… அவளின் ஒவ்வெரு செயலிலும் தொலைந்து தொலைந்து…. இன்று அவளுள் முழுதாக தொலைய காத்திருந்தது.

முழுதாக தனக்கே தனக்கென அவள்…. நேசனாக இப்போது அவளை பார்வையாள் விழுங்க தொடங்கினான்…. முதலில் அவன் கண்ணில் பட்டது…. அவளின் இன்றைய மல்லிகைதான்.

அந்த மல்லிகை வழிந்த தோளில் தானும் சாய்ந்து கொண்டான். கைகள் இடம்மாறியது….

சாக்க்ஷியின் கன்னம் தீண்டிய கதீஷின் விரல்கள்…. பன்னீர் சாரலாய் தொடங்கியது தனது தேடலை… சாக்க்ஷி அதில் நனைய தொடங்கினாள்.

சிறிதுநேரத்தில் ஊசி துரலாய் மாறியது, கதீஷ் அவளை கைகளில் அள்ளிக் கொண்டு விளக்கணைத்து “சாக்க்ஷி நான்… உ…” என ஏதோ கேட்க வர, சாக்க்ஷியிடமிருந்து  “ம்….” என்ற வெட்கம் பதிலாக வந்தது… இப்போது கதீஷ் பெரும்மழையாய்…. அடை மழையாய்…. குளிர் மழையாய்… தானும் குளிர்ந்து…. அவளையும் குளிர்விக்க செய்தான்.

அந்த மழையில், தொலைந்தது அவளின் காயங்கள், கரைகள், உறுத்தல்கள்…. எல்லாம். தாம்பத்யம் என்பது உடல் தேவை அல்ல, மனதின் தேவை…. சில பல காயங்களுக்கு, கரைகளுக்கு, சோகங்களுக்கு, தோல்விகளுக்கு, இப்படி நிறைய நேரத்தில்…. வார்த்தைகளால் அல்லாது… கணவனாக மனைவியாக பேசிக் கொள்ளும் அற்புத பாஷை இது.   

  

  

      

 

Advertisement