Advertisement

மிட்டாய் புயலே-23

வரதனுக்கு யோசனைதான், ஆனால் இத்தனை நாட்களாக அருகிலிருந்து சாக்க்ஷியை கவனித்துக் கொண்டிருந்தவர்க்கு…. அவளின் நிலை புரியத்தான் செய்தது.

மேலும், தான் ஏதாவது சொல்ல சொல்ல, அது கதீஷ் வீட்டினரின் மேல் கோவம் கொள்ள செய்யும். அதானல் அமைதிகாட்டினார் வரதன்.

மேகநாதணும் ஏதும் சொல்லவில்லை “முதலில் அக்க்ஷராவின் திருமணம், இதில் உனது விஷயங்களை கொண்டு வர வேண்டாம். இத்தனை நாள், நம் வீட்டின் நல்லது கேட்டதுக்கு, அவர்களை அழைக்கும் பழக்கம் இல்லை. அதனால், அது அப்படியே இருக்கட்டும்” என்று விட்டார்.

கதீஷின் வீட்டில், பாக்கியத்தை தவிர வேறு யாரும் பெரிதாக எதிர்க்கவில்லை. ஜெகனுக்கு தன் மகன் தன் கையில் இல்லை என்பதே பெரிய அடியாக இருந்தது.

அன்று, ‘நான் சென்று பேசி வந்தேன்’ என அவன் சொன்ன போதே, ஒரு வளர்ந்த மகனின் தந்தையாக, தான் தோற்றே போனேன் என கலங்கினார்.

ஜெகனுக்கு, எப்படி தன் பையனை சுந்தரம் குறை சொல்லலாம் என்பதிலேயே நின்றவர்க்கு, மகனின் விருப்பம் புரியவில்லை. இப்போது அது கை மீறி நிற்கவும், கொஞ்சம்…. வருத்தம், ஏமாற்றம், தோல்வி, விலகல் என எல்லாம் அவரை வாட்டியது.

எப்படியேனும் கதீஷ், எனது சொல்லை மீரமாட்டான் என அவ்வளவு நம்பிக்கை அவற்கு. ஆனால் கதீஷின், இந்த செய்கையில், அவன் மேல், தான் வைத்த நம்பிக்கை எல்லாம் இறந்த காலமானது அவர்க்கு.

தனது திடமெல்லாம் குறைந்தது போல் ஆனார், இந்த ஒரு வாரத்தில். எப்போதும் கம்பீரமாக வளம் வருபவர், இப்போதெல்லாம் கண்ணில் ஏதோ ஒரு விரக்தியுடன் நடமாடினார்.

இதனை கதீஷும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். இப்படி அவர் உடைய கூடாது எனதான் இத்தனை நாள், அவன் பொறுமையாக இருந்தது.

ஆனால், தன்னை நம்பி, தனக்காக, தன் வீட்டினரிடம் பேசி, ஏதோ சொல்லுவார்களே…. ‘நீ சொன்னால் கண்ணை கட்டிக் கொண்டு கிணற்றி குதிப்பேன்’ என்பதை போல,

நான் இருக்கிறேன்… என்ற எண்ணத்தில், எதையும் பொருட்படுத்தாமல், எனக்காக காத்திருப்பவளை… எத்தனை நாள்…. காக்க வைப்பது, என்ற எண்ணத்தில்தான் அவன் சென்று பேசியது.

ஆனாலும் இப்படி தன் தந்தையின் முகத்தை பார்க்க முடியவில்லை அவனால். அவரிடம் பேச வேண்டும், மன்னிப்பு கேட்கவேண்டும் என அவனுள்ளே ஒரு எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது.

இன்றும் அப்படிதான், காலையில் அவர் பூஜை அறையில் இருந்தார். கதீஷ் பேசலாமா… என யோசித்துக் கொண்டே, மாடியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தான்.

எப்போதும் காலை வேளையில் சத்தமாக கந்தசஷ்டி கவசம் வீட்டில் ஒலித்துக் கொண்டிருக்கும்… இப்போதும் அதன் ஒலியில், தனக்கும் தந்தைக்கும் இருக்கும் தடைகள் எல்லாம் தவிடு பொடியாவது போல் ஒரு எண்ணம்…..

தயக்கங்களை உதறியவன்…. சிறிது நேரம் சோபாவில் அமர்ந்திருந்தான்…. பூங்கொடி வந்து காபி கொடுத்து சென்றார். காபியை வாங்காமல் அவரையே அவன், நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

பூங்கொடி “என்ன டா, அப்படி பாக்குற….” என்றார் கொஞ்சம் கோவமாக வந்தது வார்த்தை.

ஒன்றும் சொல்லாமல் காப்பியை வாங்கிக் கொண்டான்…. அவனின் அன்னை மனது கேளாமல் “உன் இஷ்டப்படி தானே எல்லாம் நடக்குது…. அப்புறம் என்ன” என்றார்.

அவனின் தந்தையும் நெற்றியில் திருநீறு அணிந்து… சந்தனம் வாசம் காற்றில் கலக்க…. பூஜை அறையிலிருந்து வெளியே வந்தார். தனது மனைவி நெற்றியில் திருநீறு வைத்தவர், இவன் இங்கிருப்பது தெரியாததால், பாதியை தன் மகன் நெற்றியிலும் வைத்தார்.

எப்போதும் ஜெகன் பூஜை, கோவில், வழிபாடுகளில் நம்பிக்கை கொண்டவர். எதற்காவும் அதனை விட்டு கொடுக்கமாட்டார். ஜெகன் பேப்பருடன் சோபாவில் அமர்ந்து கொண்டார்.

பூங்கொடி உள்ளே சென்றார், தன் கணவருக்கு கஞ்சி கொண்டு வர, தந்தையும் மகனும் ஏதும் பேசவில்லை…. ஏதோ ஒரு ஒதுக்கத்தில் அமர்ந்திருந்தனர்.

பூங்கொடி வந்ததும், மகனின் தயக்கமான முகம் தெரிய, “அதான் உன் விருப்படி நடக்குதுல்ல, கலகலன்னு இரு….. போ” என்றார்.

கதீஷ் “ப்பா…. “ என்றான் தயங்கியவனாக… பேப்பரை ஒதுக்கி அவனை பார்த்தார் ஜெகன்.

கதீஷுக்குதான் விக்கியது அந்த பார்வையில்…. “அது…. இன்னும்… உங்களுக்கு…. சாக்க்ஷிய பிடிக்கலையா………” என கேட்டேவிட்டான்.

சிறிது நேரம் ஏதும் பேசவில்லை அவர் “அன்னைக்கே சொல்லிட்டே, முதலிலேயே தடங்கல், அவங்க அப்பா…. வேண்டாம்னு…. நினைச்சிட்டாரு….

நாம போயி நின்னா…. நல்லாவா இருக்கும்………….. இது உனக்கு புரியாது………… இத பத்தி பேசி இனி பிரயோஜனம் இல்ல…. விடு நடக்க வேண்டியது பாரு….” என்றார் யோசித்தவாறே….

கதீஷ் “பா… அதெல்லாம் விடுங்க, இப்போ சாக்க்ஷிய பத்தி என்ன நினைக்கிறீங்க…..” என்றான்

“எனக்கு நம்ம சாக்க்ஷிய பிடிக்கும்….. நல்ல திறமையானவ………

சொல்ல போனா, உன்னவிட ஒருபடி மேலதான் நிப்பா,

யாரும் இல்லாமா….. தனியா… மில்ல பார்த்துக்கறாலே………..

புதுசா வேற ஏதோ செய்யறாளாம்…………

இப்போ வேற தங்கைக்கு கல்யாணம் பண்றாளாம்….. இருக்கட்டும், நம்ம வீட்டு மனிதர்களை கட்டி போட இப்படி கொஞ்சம், தைரியமான பொண்ணு வேணும்தான்…..” என்றார் புன்னகை முகமாக. பூங்கொடி அசந்து போய் நின்றிருந்தார்….    

தானே தொடர்ந்தார்…. “நேற்றுதான் ஜோசியரை பார்த்து வந்தேன்….. நாள் குறிச்சி வந்திருக்கேன்…. உங்க அம்மா கிட்ட கூட இன்னும் சொல்லல….” என்றவர் தன் மனைவியை ஓர பார்வை பார்த்தார்.

எதிர்த்து நிற்கும் ஆண்கள்…. சில இடங்களில் ஒடிந்து விடாமல் இருக்கவும் கற்கிறார்கள்…. இந்த அதிரடி மாற்றத்தை எதிர்பார்க்காதா, பூங்கொடிதான் அனைத்தையும் வேடிக்கை பார்த்து நின்றிருந்தார்.

ஜெகன் “நாளை மறுநாள், நாள் நல்லா இருக்காம்….. நாம பொண்ணு வீடு போயிட்டு வந்திருவோம்….” என்றார் தன் மனையாளை பார்த்த வண்ணம்.

“பொண்ணு மாப்பிள்ளைக்கு நான் போன் செய்து சொல்லிடுறேன்…. உன் தம்பிக்கு சொல்லிடலாம், என் அக்காக்கு சொல்லிடலாம்…. வேறு யாருக்கும் இப்போ வேணாம்…. சும்மா சிம்ப்ளா, செய்திடலாம்….

கல்யாணம் இன்னும் இரண்டு மாசம் போகட்டும்ன்னு சொல்லிட்டாரு… மேலும் இப்போதான் அவங்க வீட்டிலையும் ஒரு கல்யாணம் நடந்திருக்கு…. உடனே அவசரபடுத்த கூடாது….. பொறுமையா செய்துக்கலாம்” என்றார்.

அழகாக திட்டமிட்ட செயல் ஜெகனுடையது. எங்கும் எதிலும் நேர்த்தி, விரையங்கள் இல்லாமல் செய்யும் கலை…. என தன் மகன் தன்னிடம் பேசியவுடன்….

அவனின் குற்றங்கள் எல்லாம் மறந்தவராக…. தன் மகனிற்கு பார்த்து பார்த்து செய்யும் தந்தையாக, கொஞ்சம் உயர்ந்து நின்றார் ஜெகன்.

கதீஷுக்கு, இப்போதுதான் நிம்மதி “தாங்க்ஸ் ப்பா….. எ… எனக்கு மனசுல என்னமோ…. இப்போ நான் ப்ரீ…” என்றான் முகமெல்லாம் புன்னகையுடன்.

பூங்கொடிக்கு பாக்கியத்தை நினைத்தால்தான் பயம் மற்றபடி, நான் ஓகேதான் என்னும் விதமாக அமைதியாக நின்றார். தன் மகனின் சந்தோசம் பார்த்து.

ஜெகன் தனது போனை எடுத்து, கதீஷின் எதிரிலேயே ரங்கராஜன்னுக்கு அழைத்து பேச தொடங்கினார். கதீஷ் இப்போது அவரிடம், தான் மேலே செல்வதாக கண்காட்டி மேலே சென்றான்…. மந்திர புன்னகையுடன்…

தோழியையே மனைவியாக அடைவது எல்லாம்…. லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே கிடைக்கும். இதற்காக எத்தனை இடர்களையும் தாங்கலாம் என்றிருந்தது அவன் புன்னகை….

ஏதோ, இந்தா…. என முன்னமே தூக்கி கொடுத்திருந்தால் அதன் அருமை புரிவதற்குள்….. வாழ்க்கை தீர்ந்துவிடும்…. போராட்டமும், பொறுமையும் நேசத்த்திற்கு அழகுதான்.

தனக்கே லேட்டாக புரிந்த ஒரு செயல் உடனே நடக்கும் என எதிர் பார்க்கவும் இல்லை கதீஷ்…. எனவே இந்த வரத்தை கொண்டாட தொடங்கினான்.

எதற்கும் ஓடையதவன் முகத்தில் இருந்த, அந்த இரண்டுநாள் தாடியையும் எடுத்துக் கொண்டிருந்தான்….

அவன் மியூசிக் பிளேயரில்  “ழ்….. ழ்……… ஆ…. ஆ……… சுந்தரி நீயும் ………  சுந்தரி நானும்……….” என ஓடிக் கொண்டிருந்தது…..

உடனே சாக்க்ஷிக்கு அழைத்தான்…. அவனுக்கு வரம் கிடைத்து விஷயம் அவளிற்கு தெரியாதே…..

அவள், அவர்களின் குலதெய்வ கோவிலில் இருந்தாள். அவர்கள் நடைமுறையில் பொதுவாக கோவிலில் திருமணம் செய்வர். பெரிய மண்டபத்தில்… வரவேற்பு, மதிய விருந்து… அப்படிதான் நடைமுறை.

அதற்காக… கோவிலில் பதிவு செய்வதற்கான ரசீது வாங்க சென்றிருந்தாள். போனை காரிலேயே விட்டு சென்றாள். அதற்குடான நடைமுறைகளை முடித்து….. அமர்ந்து கொண்டாள்… கோவில் வாளாகத்தில்.

அவர்களின் குலதெய்வம் ஒரு அம்மன்……. மிகவும் சக்தி வாய்ந்தது…. காங்கேயம் நால் ரோட்லிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள, பரஞ்சேர் வழி…..

உக்ரமான கரியகாளி அம்மன்… அம்மனை பார்த்தாலே தைரியம் வரும் நம் மனதிற்கு. அப்படிதான் உணர்ந்தாள் சாக்க்ஷி, வந்த தடைகள் போதும், இனி தடைகள் வாராத… வழி வேண்டும் எனதான் வேண்டினாள் அவள்.

அந்த முகம் ஏதோ…கருணையுடன் தன்னை பார்ப்பதாக உணர்ந்தாள்… சிறிது நேரம் அமர்ந்திருந்தாள்…. பின்புதான் வெளியே வந்தாள். அங்கு முகப்பில்…. அந்த வெண்கல குதிரை…. எப்போதும் போல் அவளை ஈர்த்தது.

அதனை பார்த்தவாறே நின்றிருந்தாள்….. அங்கிருந்த கோவில் பணியாளர் வந்து அழைக்கவும்…. ஆபீஸ் அறைக்கு சென்றாள். ரசீதை பெற்றுக் கொண்டே வெளியே வந்தாள்.

காரில் செல்ல செல்ல அமைதி மட்டுமே…. ஏதோ அலைபுருதல் எல்லாம் அங்கேயே கோவிலில் விட்டு வந்தது போல் ஒரு அமைதி…. நல்ல மனநிலையில் இருந்தாள்.

கதீஷ், இவள் போனை எடுக்கவில்லை எனவும், குளித்து கிளம்பி வந்தான் கீழே…. அங்கு ஜெகன் இன்னும் போன் பேசிக் கொண்டிருந்தார். இவன் பூங்கொடியிடம் “அம்மா, சாப்பிடலாமா, பசிக்குது” என்றான்.

பூங்கொடி சந்தோஷமாக உணவு எடுத்து வைக்க சென்றார்… ஜெகன் பேசி முடித்து, இவனை பார்க்க “வாங்கப்பா, சாப்பிடலாம்” என இயல்பாய் அழைத்தான்.

கலையான முகம் அவருக்கு ஒரு நிம்மதியை தந்தது…. பேசாமல் எழுந்து சென்றார் அவனுடன் ஏதேதோ பேசிக் கொண்டே உண்டான் கதீஷ். புதிதாக கல்லூரி செல்லும் மாணவன் போல், என்னென்னமோ பேசினான். ‘ம்…’ கொட்டி வேடிக்கை மட்டும் பார்த்திருந்தனர் பெற்றோர்.

ஆண்கள் அதிகம் பேசினால் ரசிக்க முடியாது…. ஆனால் வெட்கத்தை மறைக்க…. இப்படி உளறும் போது அழகோ அழகு அவர்கள்….

அந்த நேரம் சரியாக பாக்கியம் வந்தார் தன் கணவருடன்…. பூங்கொடியும், ஜெகனும் “வாங்க மாப்பிள்ளை, வாம்மா” என்றனர்.

பூங்கொடி “சாப்பிடலாம்…. வாங்க” என்றார்.

பாக்கியத்தின் கணவர் “ஆச்சு மாமா…. இவள விட்டுட்டு போகத்தான் வந்தேன்…..” என்றவர்.

கதீஷை பார்த்து “மாப்பள….. என்ன ஜொலி ஜொலிக்கிற….. மாமா எல்லாம் சொன்னாரு…. அவ்வளவுதான் மாப்பிள….. இதுக்கு போயி…. தயங்கிக்கிட்டு” என்றார் அருகில் வந்து அவன் தோளை அழுத்திய வண்ணம்.

எழுந்து கை கழுவி வந்தவன் “தேங்க்ஸ் மாமா……….” என்றவன் என்ன பேசுவது என தெரியாமல் நின்றிருந்தான்.

அவனின் மாமா கண்ணால், பாக்கியத்தை காட்ட இப்போது கதீஷ் “என்ன க்கா, அப்படி முறைக்காத க்கா, பயமா இருக்கு” என்றான் சிரித்துக் கொண்டே….        

எப்போதும் பட படவென பொறியும் பாக்கியம் அமைதியாக நின்றார். கதீஷை இப்போது அவர் எதிர்பார்க்கவில்லை. தனது தந்தையிடம் சண்டையிட வந்திருந்தாரே தவிர, தம்பியை எதிர்பார்க்கவில்லை.   

ஏனோ தம்பி அப்படி கேட்கவும், தம்பியின் முகம் பார்த்த பாக்கியத்திற்கு அவ்வளவு குற்ற உணர்ச்சி…. கண்ணில் நீர வந்தது…..

இந்த ஆர்ப்பாட்டத்தை, இந்த கேலியை, இந்த சந்தோஷத்தை இத்தனை நாள், நான்தானோ அவனுக்கு தரவில்லை என தோன்றியது.

ஆனாலும் சட்டென தன் எண்ணம் தோற்றதும் நியாபகம் வர, என்ன செய்வதென்றே தெரியாமல் அங்குள்ள சேரில் அமர்ந்து கொண்டார். தலையில் கைவைத்து….

கதீஷ் பாக்கியத்தின் அருகே சென்று அவளின் கையை எடுத்து விட்டான். பாக்கியத்தின் கணவர் “சரி மாமா. நான் கிளம்பறேன், எனக்கு வேலையிருக்கு, நீங்களாச்சு…. என் பொண்டாட்டியாச்சு…. நான் பாஸ்பா” என கதீஷை பார்த்துக் கண்ணடித்துக் கிளம்பினார்.

கதீஷ் “என்ன பாக்கி, இன்னும் நீ எதையோ நினைச்சி குழப்பிக்கிற…… உன்னோட குட்டி சாக்க்ஷிய உனக்கு பிடிக்காதா” என்றான். குரலில் மென்னையும், ஆவலும் போட்டி போட்டது.

பாக்கியத்திற்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை…. தனது கைக்குள் வைத்து வளர்த்த குட்டி தம்பிக்கு…. இந்த அக்கா முக்கியமில்லையா…. என ஒரு பார்வை பார்த்தாள் அவனை….  

ஆனால், அதேசமயம், குட்டியாக இருந்தவன்…. இப்போது அண்ணார்ந்து பார்க்கும் உயரத்தில் இருந்து கொண்டு….. அவள்தான் வேண்டும் என பிடிவாதம் பிடித்து, தங்களுக்கு தெரியாமல், பெண் கேட்டு சென்றும் விட்டான்……. ஆம், என் தம்பி வளர்ந்தும் விட்டான். என அந்த கணத்தில்தான் புரிந்தது பாக்கியத்திற்கு.

கதீஷ் இப்போது அருகில் ஒரு சேர் எடுத்து போட்டு அமர்ந்து கொண்டான்… தனது அக்காவின் நீர் நிறைந்த பார்வையில் சற்று தடுமாறினான்.

“க்கா, உன் தம்பிக்கு பிடிச்ச பொண்ண கல்யாணம் செய்து வைக்க மாட்டியா” என்றான். அழகான வார்த்தைகள்…….. வாழ்க்கையை அழகாக்கும்…

பாக்கியம் இமை தட்டி, விழி நீரை கன்னத்தில் இறக்கினாள்….. என்ன யாசகம் இது…. யார் கேட்பது….. என் குட்டி தம்பியா கேட்பது…. அதுவும் என்னிடமா கேட்பது.

அவனால் செய்து கொள்ள முடியாத செயலா……… இல்லை அதட்டி சொன்னால்… எங்களால் தலையாட்ட மட்டும் தானே முடியும்….

இல்லை இவள்தான் வேண்டும் என ஒரு வேலை பட்டினி கிடந்தால்…. இந்நேரம் நடந்திருக்குமே எல்லாம்…..

ஆனால், இத்தனை காலம் வரை, யார் மனமும் நோகாமல், எந்த இடத்திலும் யாரையும் விட்டு தராமல்.. எல்லாவற்றையும் விட கொஞ்சம் கூட குரலை உயர்த்தமல்… ஒரு அமைதியான தவமல்லாவா இவனுடையது…. என எண்ணி எண்ணி கண்ணில் வழிந்தோடியது நீர்.

பாக்கியத்திற்கு எங்கே சாக்க்ஷி, கதீஷுக்கு பொருத்தமில்லையோ என ஒரு எண்ணம்…. சின்னதிலிருந்து பார்த்து வளர்ந்ததால்….. எப்போதும் அவனுடன் மல்லுக்கு நிற்கும் அதே சாக்க்ஷியாகதான் தெரிந்தாள் பாக்கியத்தின் கண்ணிற்கு.

மற்ற குடும்ப உறுப்பினர்களை விட பாக்கியம் சற்று வெளுத்த நிறம்தான். அழுததால் முகமே சிவப்பு நிறம் கொண்டது… அதை பார்த்த கதீஷுக்கு சங்கடம் கூடி போனது “ஏன் க்கா…” என்றான் ஏக்கமாக

பாக்கியம் அவன் கைகளை பிடித்துக் கொண்டார் “ உனக்கில்லாததா…. என் தம்பி கேட்டு, இல்லைன்னு சொல்ல எனக்கு மனசு வருமா டா….

என்னமோ தெரியல டா, ஊரே சொன்ன மாதிரி நடந்திடுச்சேன்னு ஒரு எண்ணம்….. அவ்வளவுதான், அதன் அ…. சாக்க்ஷி மேல ஒரு கோவம்…..

ஏதோ பேசிட்டேன்….. வேற மனசுல்ல….ஒன்னும் இல்ல… என் தம்பி நல்லா இருக்கணும் அத தவிர வேறு ஒன்னும் இல்ல…….. நான் வேண்ணா, அவ கிட்ட மன்னிப்பு கேட்கட்டா….. “ என்றார் பயந்தவராக.

கதீஷ் “ஐயோ…… அதெல்லாம் வேண்டாம் க்கா, சாக்க்ஷி அத பத்திக் கூட எதுவும் சொல்லல, நீ கவலை படாத………” என்றான் பொறுமையாக…. பாக்கியம் முகம் தெளியாததை கண்டு

“அவ்வளவுதான் மாமா, இப்படி எல்லாம் பேசினது தெரிஞ்ச்சது…. அப்படி ஒரு கல்யாணம் உனக்கு வேண்டவே வேண்டாம் மாப்பளன்னு சொல்லிடுவார்….

ஏதோ இப்போதான் எல்லாம் கூடி வந்திருக்கு….. அப்படியே விட்டுடுக்கா….. நீ என்னோட பெரிய அக்கா… நீ திட்டுக்கா, அவள….. நான் பார்த்துகிறேன்…. என்ன சொல்றான்னு” என்றான் அவளை சமாதானப் படுத்தும் விதமாக.

பாக்கியம் இப்போதுதான் லேசாக சிரித்தாள். அவளே கண்களை துடைத்துக் கொண்டு “அன்னிக்கு ஏதோ, வேற மூட்ல இருந்திருப்பா போல, அதான்…… என்ன சும்மா விட்டு போனா…….

இல்ல, நான் பேசின பேச்சுக்கு…. மத்த நாளா இருந்தா……. என்ன தொங்க விட்டு போயிருப்பா……..

சும்மா வீட்டுக்கு வரும் போதே ஆடுவா…….. இப்போ என் தம்பி பொண்டாட்டி வேற கேட்கவா வேணும்………

இனி நான்தான் பாவம்……..” என்றார். எப்போதும் போல் குரல் ஓங்கி ஒலித்தது. அதுவே சொன்னது பாக்கியம் ஒகே என.  

 

   

 

   

  

    

  

 

   

      

Advertisement