Advertisement

மிட்டாய் புயலே-2

காங்கேயத்திற்கும் ஈரோடிற்கும் மத்தியில் அமைந்துள்ள, அழகான பரிகார ஸ்தலம்  அது. காவேரி பாய்ந்து செல்வதால், பசுமையாக காட்சி தரும் ஊரும் கூட, கொடுமுடி என்னும் டவுன்ஷிப்.

ஜெகன்நாதன் பூங்கொடி தம்பதியின் கடைசி மகன் தான், பிரகதீஸ்வரன். சில பல வேண்டுதளுக்கு பிறகு பிறந்தவன். அவர்கள் வம்சா வழியின் ஒரே ஆண் வாரிசு. இவனிற்கு முன், இரு பெண்பிள்ளைகள்.  முறையே எட்டு, பத்து வயது பெரியவர்கள்.

அதானல், சிறு வயதிலிருந்து பிரகதீஷுக்கு எல்லோரிடத்திலும் செல்லம் அதிகம். அவனை கண்டிக்கும் ஒரே நபர், அவனின் தாய் மாமா ரங்கராஜன் தான். அதுவும் சிறு வயதில் தான்.

அவன் வளர்ந்த பின், அவனிடம் அவன் குறைகளை நேரே சொல்லும் ஒரே ஜீவன், சாக்ஷி தான். அதனாலேயே அவளை எப்போதும் தன் அருகிலேயே வைத்திருப்பான்.

சுந்தர்ராஜன் மணிமேகலை, தம்பதியின் முதல் மகள்தான் சாக்ஷி.  அடுத்தவள் அக்ஷரா, இப்போது தான், கல்லூரி இரண்டாம் வருடம் படிக்கிறாள் அக்ஷரா. ஒரு மகளிர் கல்லூரியில்தான், அதுவும், ஹாஸ்ட்டலில் தங்கி படிக்கிறாள்.

சிறு வயது முதலே சாக்ஷி தான், கொஞ்சம் வாய். அவளின் கால் தரையிலே நடக்காது, பறக்கும், அப்படி ஒரு ஓட்டம். எப்போதும், தெருவில் தான் விளையாட்டு.

ப்ரகதீஷின் வீடும், இவர்கள் வீடும் பக்கம், பக்கம், அதாவது சாக்ஷியின் வீட்டிலிருந்து நான்காவது வீடுதான் பிரகதீஷினுடையது. எனவே, குழந்தைகள் இருவரும் ஒன்றாக தெருவில் விளையாட தொடங்கினர்.

ஒரு நாள் இருவரும் விளையாடிக் கொண்டிருக்க, அவன் வீட்டு காம்பண்டு கேட்டின் மேல் குதிரை ஒன்று கால் வைத்து, பிரகதீஷை பார்த்து கனைத்துக் கொண்டிருந்தது.

அதை பார்த்த சாக்ஷி “கதீஸ் ……ஈ ஈ…..” என ஒரே கத்தல், இவன் என்னவென திரும்பி பார்க்க அங்கு நின்றிருந்தது, அவன் அப்பா, வளர்க்கும் ‘ஜாகுவார்’ தான். இப்போது இவளை பார்த்தும் கனைத்துக் கொண்டிருந்தது.

ப்ரதிஷிற்கு வாய்கொள்ளா சிரிப்பு, இப்போதுதான் விளையாட தொடங்கி இருக்கிறார்கள், அந்த சிறு வயதிலும் சாக்ஷியின் மிரட்டல் தான் நிறைய இருந்தது.

எப்போதும் “கதீஸ், இது வேணா, இதுதான் விளையாடுவோம்” என அந்த இரண்டு நாளிலேயே அவனை படுத்தி வைத்தவள், இப்போது எதற்கோ பயம் கொண்டு தன்னிடம் ஒழிகிறாள். எனவும், ஒரு குஷி வந்தது அவனுள்.

“ஹே ஜகு, போ டா, பாப்பா பயப்படறால, போடா” என, இவன் சத்தமிட. அந்த ஐந்தறிவு ஜீவனுக்கு என்ன புரிந்ததோ, தனது காலை, கீழே வைத்து மீண்டும் ஒரு முறை அவனை பார்த்து கனைத்து, தனது நீண்ட கால்கள் கொண்டு சத்தத்துடன் ‘டக்.. சிக், டக்… சிக்,’ என நடந்து அந்த புறம் சென்றது.    

இப்படி, அவன் ஜகுவை அந்த புறமாக நகர்த்திவிட்டு, தனது விளையாட்டு தோழியை பெருமிதமாக பார்க்க, சாக்ஷியோ கண்ணில் பயத்துடன் தான், கதீஷை பார்த்திருந்தாள்.

‘தன்னை காத்தவன்’ என்ற எண்ணம் எழ இயல்பாய் இத்தனை நேரம் மரியாதை இல்லாமல், ‘கதீஸ்’ என்றழைத்த சாக்ஷி இப்போது “தாங்க்ஸ் ண்ணா” என்றாள்.

அந்த ஏழு வயதில், அவனிற்கு என்ன புரிந்ததோ “நோ” என்றான் பிரகதீஷ். எதற்கு என தெரியாமல், இன்னும் பயந்து போய் அவனையே தனது மணி விழியாள் பார்க்க.

அவள் அருகில் வந்து “கதிஷுன்னு சொல்லு, அதான் சூப்பர் ரா இருக்கு” என்றான். மறுக்காமல் ஏற்றவளும் அப்படியே செய்தாள். மேலும் “நீ இனி பாப்பா சொல்லாத” என்றாள் கட்டளையாக. பிரகதீஷால் தலையை உருட்ட மட்டுமே முடிந்தது. அப்படி ஒரு மிரட்டல் தோணி அவளிடம்.

சிறு வயதில் ஒரு சின்ன நிகழ்வு, அது அவள் மனதில் ஆழமாக பதிந்தது. எனவே தன் கதீஷிற்கு எல்லாம் தெரியும், என்ற எண்ணம் வந்தது.

அதன் பின்தான், பிரகதீஷ் எது சொன்னாலும் செய்தாள். இந்த ஆர்பாட்டம் முடிந்து, அவளை தனது வீட்டிற்கு அழைத்து சென்றான் பிரகதீஷ்.

ப்ரதீஷின் வீடு ஒரு மினி ஜூ போல் இந்தது. தரை மட்டத்திலிருந்து நான்கு அடி உயர்ந்து இருந்தது. படியேறி மேலே சென்றால், அழகான கீத்து கொட்டகை போட்டு முன்புறம் சரிவாக இருக்க, சிமென்ட் தரையுடன் கூடிய  நீண்ட வராண்டா, அதையடுத்து பெரிய பட்டாசாலை (ஹால்) அந்த பட்டாசாலையின் பக்கவாட்டில் இரண்டு, இரண்டு அறைகள், தனியாக சமையலறை, வாசலிற்கு நேரே அதை ஒட்டி ஒரு பூஜை அறை. அதை ஒட்டி மாடிக்கு செல்லும் வழி, அங்கு இரண்டு அறைகள் மட்டுமே. என பெரிதாக இருந்தது வீடு.

பின்புறம் தான் முதலில் கூட்டி சென்றான் பிரகதீஷ், அழகான கொட்டகைகள் அங்கு. ஒரு புறம் குதிரைகள், மறுபுறம் காங்கேய காளைகள். இப்படி நிறைய, ஜீவன்கள் அங்கிருந்தன.

அதை தவிர ஒரு வளர்ப்பு பிராணி உண்டு அதை சத்தியமாக உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது.

குடு குடுவென அதுகளிடம் ஓடினான் ப்ரகதீஷ். தன்னை வந்து அழைத்த ப்ளக்கும் டார்க் பிரவுன் நிறமும் கலந்த அந்த அரேபியன் குதிரையை, அதாவது நம் கற்பனைக்கு டார்க் பான்ட்டாசி பிஸ்கட் கலர்.

அதன் கால் சைசில் இருந்த அவன், அதன் கழுத்து பகுதியில் கை வைத்து தடவ, அது வாஞ்சையாய் கீழ் குனிந்தது. ‘புஸ் புஸ்’ என அவன் தலையில் மூச்சு விட, அதில் அவனின் தலை முடி கலைந்தது.         

“உன்ன, அப்பா கட்டலையா, எங்கடா வெளியே வர“ என அதனிடம் தன் போல் பேசிக் கொண்டிருந்தான். பார்த்த சாக்ஷிக்கு தான் பயமாக இருந்தது சாக்ஷியின் “வா கதீஸ், பயமா இருக்கு” என்ற சத்தத்தில் திரும்பி பார்த்தான்.

இப்போது பிரகதீஸ் “வா சாக்கி, ஒன்னும் பண்ணாது வா” என்றான். இப்படிதான், “சாக்கி, மாரியாத்தா” என அவளின் இயல் பெயரை தவிர மற்றெதெல்லாம்தான் கூப்பிடுவான் அவன்.

இப்போது தான் இவர்கள் சத்தம் கேட்டு சமையலறையிலிருந்து வெளியே வந்தார் பூங்கொடி.        

பிரகதீஷிற்கு 7 வயது. சாக்ஷிக்கு, நான்கு வயது தான் ஆரம்பம்…. இப்படி இருக்கும் போது, அவன், அந்த ஜகுவின் கால் சைசில் இருந்து கொண்டு, பெரிய மனிதன் போல், தனது தோழியை ‘வா’ வென அழைக்கவும், ஏதோ எல்லாம் தெரிந்தவன் போல் ‘ஒன்னும் செய்யாது’ என்பதுமாக பேசுவதும், இதை கேட்டுக் கொண்டே, சிரித்தபடி வந்தார் பூங்கொடி.    

தன் அம்மாவை பார்த்த பிரகதீஷ், “பாரும்மா, பயப்படுறா… வர சொல்லும்மா” என தன் அம்மாவையும் துனைக்கழைத்தான் பெரிய மனிதன்.

அதன் பின், அவர்தான் கூட்டி சென்று அந்த ஜகுக்கு, சாக்ஷியை அறிமுகம் செய்து வைத்தார். அதுவும் தனது தோழனின், தோழியை “புஸ் புஸ்” என மூச்சு விட்டு, அவளின் சிகை கலைத்து விளையாடி, தோழியாக ஏற்றது.

அடுத்து, காளைகள் இருக்கும் பக்கம் சென்றனர். அங்கு, அடர் சாம்பல் நிற,  வீராசாமி காளையானது, அவளின் கையை, தன் நாவால் தடவும் போது, வீறிட்டு அழவும் செய்தாள் சாக்ஷி.    

ப்ரகதீஷின் அம்மா தான் “இன்னிக்கு இது போதும், நீ தினமும் வீட்டிற்கு வா, உன் கூட எல்லோரும் ப்ரிண்ட்ஸ் ஆகிடுவாங்க” என் சொல்லி அவளை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து.

இருவருக்கும் பிஸ்கட் கொடுத்து, சாக்ஷியை, தன் வீட்டில் வேலை செய்யும் சென்பகத்தை அழைத்து, அவர்கள் வீட்டில் விட்டு வர செய்தார்.

இப்படி அவனின் ஒவ்வெரு தோழர்களையும் தனக்கும் தோழர்களாக சிநேகம் செய்து கொண்டாள்.

‘கதீஸ், கதீஸ்’ என அழைத்துக் கொண்டு அவனையே சுற்றி வந்து, அவன் சொல்லும் வேலையெல்லாம் செய்துகொண்டு அவளும் அந்த வீட்டில் ஒரு பிள்ளை, எனவே வலம் வர தொடங்கினாள்.

ஒரே தெருக்களில் இருந்தாலும், எப்போதும் இருவர் வீட்டு பெண்மணிகள் கூட பேசிக் கொள்ளாத, நிலையில் இவர்களின் நட்பு, அந்த வீட்டு பெண்களை இணைத்தது என்றே சொல்லலாம்.

ஆனால், வெளியே காட்டிக் கொள்ளவில்லை, ஏனோ ஒரு உறுத்தல், இரு வீட்டு பெரியவர்களும் பேசாத போது, மருமகள்கள் மட்டும் அதாவது, ப்ரகதீஷின் அம்மா, சாக்ஷியின் அம்மாக்கள் மட்டும், அவ்வபோது கோவிலில் பார்த்தால் பேசிக்கொள்வது என்ற நிலை வந்தது.

அடுத்தது வந்த நாட்களில் இவர்களின் நட்பு தொடர்ந்தது. மேலும் அவளின் உடன் பிறப்பும் இவளுடன் விளையாடும் நிலைக்கு வளர்ந்து விடவும், இவள் பிரகதீஷ் வீட்டிற்கு செல்வது குறைந்தது.

ஆனாலும், ஒரு நாளைக்கு, ஒரு முறையேனும் அவன் வீட்டிற்கு சென்றுவிடுவாள், இல்லையேல், அவன் இங்கு வந்து பார்த்து விடுவான். இவர்கள் நட்புக்கு இரு வீட்டு பெரியவர்களும் எந்த வித எதிர்ப்பும் சொல்லவில்லை.

ஆனால், குட்டி தேவதை அக்ஷராவிற்குதான், பிரகதீஷை கண்டால் பயம், அவன் இவர்கள் வீட்டிற்கு வந்தாலே, பயந்து வெளியேவே வரமாட்டாள். சின்னதிலிருந்து இப்போது வரை.    

ப்ரகதீஷிற்கு பத்து வயது ஆகும் போது, அவனிற்கு நிறைய நண்பர்கள் கிடைக்கவும், சாக்ஷியையும் அழைத்துக் கொண்டு,  பள்ளி முடித்து வந்தால், சைக்கிள் எடுத்து விளையாட சென்றுவிடுவார்கள்.

இப்படி எல்லா இடங்களிலும், சாக்ஷி தான் அவனின் தோழியாகினாள். சாக்ஷிக்கும் எங்கும், எதற்கும் கதீஷ் இன்றி ஒரு வேலையும் ஆகாது.

அவனின் பதினைந்தாவது வயதில், அவன் குதிரையேற்றம் பழகிய போது, இவள் அவனையே வெறித்து பார்ப்பதை பார்த்து. ஜெகன், ப்ரகதீஷின் தந்தைதான், அவளுக்கும் கற்று தந்தார்.

குதிரை என்பது அவர்களின் பரம்பரை சொத்து போல், ப்ரகதீஷின் தாத்தா காலத்தில், வெள்ளையர்களின் குதிரைகளுடன் போட்டியிடும், அளவிற்கு இவர்களின் குதிரைகளும் இருந்தது.

ஜெகன், திருமணத்திற்கு முன் வரை, வருடம்தோறும், ஊட்டியில் நடை பெரும் குதிரை ரேஸ்க்கு, தன் குதிரைகளையும் தயார் செய்து, பரிசு பெற்று வந்தவர் தான்.

அதன் பின், ரேஸ், அது, இதெல்லாம் கூடாது எனும் குடும்ப கட்டமைப்புக்கு மாறிவிட்டார் தான். ஆனாலும், தன் மகனிற்கு அதனை கடத்தியும் விட்டார். ‘இனி நீ பார்த்து செய்‘ எனும் விதமாக அவனின் சிறு வயதில் எல்லாம் சொல்லிக் கொடுத்துவிட்டு, இப்போது ஒதுங்கிக் கொண்டார்.

ஆனால், இப்போது வரை, காளைகளை ஜல்லிக்கட்டிற்கு அனுப்புவதை மட்டும் நிறுத்தவில்லை. அத்தோடு மட்டுமில்லாமல், காளைகளை விற்பனையும் செய்கிறார் ஜெகன்.          

பைக் ஒட்டவும் அப்படித்தான். அழகாக, பிரகதீஷே அதனை ஓட்ட கற்று தந்தான். அதற்கு அவளின் உயரம், துணையாக நின்றது. அந்த பனைமரத்திற்கு, அதாவது பிரகதீஷிற்கு, மூன்று இஞ்சு, மட்டுமே குறைவு அவள். எனவே, அவனை போல் இந்த வீர விளையாட்டை படிப்பது அவளிற்கு சுலமாகனதாக இருந்தது.

இப்படி ஓவ்வெரு நிலையாக, இருவரும் சேர்ந்தே இருந்தனர், ப்ரகதீஷின் கல்லூரி காலத்தில் இருவரின் பிரிவு நேர்ந்தது. ஆம், அவளின் தோழன், படிப்பிற்காக கோவை சென்றான். அவ்வளவு தான். வார, வாரம் வரவும் செய்வான்.

அப்போது, அவன் கல்லூரி இரண்டாம் வருடம், அவள் குழப்பங்கள் நிறைந்த கடைசி வருட பள்ளி படிப்பு, அவன் வந்தால், படிப்பை துறந்து அவனுடன் மொட்டை மாடியில் தான் இருப்பாள்.

ஒரு காரபொறி பாக்கெட்டுடன், அவனின், கல்லூரி நாட்களின் கலாட்டக்களை பேசவே நேரம் போதாது அவர்களுக்கு. அவர்களின், ஜகுவை கைகளில் பிடித்துக் கொண்டே எவ்வளவு தூரம் நடப்பார்களோ தெரியாது. பாதி இருட்டில் தான் வீடு வருவர்.

அவனை தொடர்ந்து சாக்ஷியும், கல்லூரிக்கு கோவை செல்வேன் என அடம், ஆனால் யாரும் ஒத்துக் கொள்ளவில்லை. அதனால், உள்ளூரில் உள்ள, ப்ரகதீஷின் தந்தையினுடைய, கல்லூரியிலேயே சேர்த்து விட்டார், சாக்ஷியின் தந்தை.   

அவர்கள் வளர, வளர நட்புதான் வளர்ந்தது. எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் நட்பு எண்ணும் வட்டம் தாண்டி, ஒரு செய்கையை இருவரும் செய்யவில்லை.

தேவையில்லாத அசட்டு தனங்கள் அவர்களிடம் இல்லவே இல்லை. சூரியனை சுற்றும் கோளாக, அவனை சுற்றி, அவளிடத்தில் நின்றாலேயன்றி, அவனை ஈர்க்கவில்லை.

ஆனாலும், இந்த பிரிவு. கொஞ்சம் விலகல் தான், ஆனால் நட்பு இறுகியது.

சுற்றியும், சொந்தம், பந்தம், ஊர், இப்படி சமுதாயத்தில், வேறு விதமான பேச்சுகளும் எழ தான் செய்தது. இவர்கள்தான், காதில் வாங்குவதில்லை.

ஒவ்வொரு வருடமும், அவன் பிறந்த நாளின் போது, இருவரும் ஒரே மாதிரி ஷர்ட் அணிந்து போட்டோ எடுப்பது அவர்களின் வழக்கம். அப்படி தாங்கள் எடுத்த ஒரு போட்டோ, இருவர் வீட்டிலும் ப்ரேம் செய்து மாட்டப்பட்டுள்ளது.

அதில் அவள் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது, சேர்ந்து எடுத்தது, ஒரு புளூ ஜீன், அழகான மெரூன் வண்ணன் புல் ஹன்ட்டு ஷர்ட்டை முழங்கை வரை மடித்து விட்டு, தனது அளவான முடியை இரட்டை சடையையாக போட்டு கொண்டு, மாடி படியில், இவன் மேல் படியிலும், அவள் கீழ் படியிலும் அமர்ந்து, அவளின் தோளின் மேல், இவன் கை வைத்த வண்ணம், இருவர் முகமும் புன்னகையில் மிளிர ஒரு நிறைவான புகைப்படமாக இருக்கும்.          

இப்படி, நகரும் நொடிகள் தோறும், இருவருக்கும் தித்திப்பு மட்டுமே இருந்தது. அதில் சண்டை, கோவம், போட்டி என எல்லாம் இருந்தாலும், அது அவர்களின் நட்புக்கு பெருமையே சேர்த்தது.  

இப்படியேதான் அவர்களின் நாட்கள் சென்றது. PG முடிக்கும் வரை அவளின் எந்த பழக்க வழக்கங்களிலும் மாற்றம் இல்லை.

ஆனால் UGயில் தேவையே இல்லாதா, சில நட்புகள் வந்தது. மேலும் அந்த நட்பு ‘பிரகதீஷ்’ என்னும் பெயர் சொல்லித்தான் வந்தது. அதனால் இவள் முழுதாக நம்பினாள். அதன் விளைவுதான், இந்த பத்து நாள் சண்டை.

ஆனால், இது எதுவுமே பிரகதீஷிற்கு இன்னும் தெரியவில்லை.   

 

             

Advertisement