Advertisement

மிட்டாய் புயலே-19

நட்பு என்ற வட்டத்திலேயே சுற்றி வந்தவன். அதை தாண்டும் போதும்,  எப்படி தன் நேசத்தை சொல்லுவது என தெரியாமல்தான், கையை முறுக்குவதும், அவளிடம் மரியாதை எதிர்பார்ப்பது என விளையாடியவன்.

இப்போது எவ்வகையில் அவளை கையாள்வது, என தெரியாமல் விழி பிதுங்கி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

என்னதான் அவளுக்கு என்னனை தெரியும் என கதீஷ் பெருமை பீற்றிக் கொண்டாலும், அவளின் வாய்மொழி வழியாக கேட்கம் போது கிடைக்கும் நிறைவு என்பது தனிதானே.

மனம் உணருகிரதுதான் அவளை ஆனால், மனதின் மூலையில் ஒரு எண்ணம், அவள் என்ன நினைப்பாள், என்னை பற்றி, தோழனாக அவளின் மனதில் நின்றவன்தான்.

ஆனால் இப்போது, அதையும் கடந்து, அவளிடம் மட்டுமே உரிமை கொண்டவனாக அவளின் மனம் எப்படியெல்லாம் என்னை ஏற்கிறது, என ஒரு குறு குறுப்பு அவன் மனதில்.

கேட்டல் சுகம் தானே, அதுவும் தன் காதலியிடம், அவள் வாய்மொழியாக, தன்னை பற்றி கூறும் ஒவ்வரு வார்த்தையும் பொக்கிஷம் அல்லாவா, காதலனுக்கு.

அதே நிலையில்தான் இப்போது கதீஷ் அமர்ந்திருந்தான். எனவே முகத்தில் அத்தனை எதிர்பார்ப்பு..

பக்தனுக்கு என்ன என்றாலும் முதலில் பதறும் கடவுளாக சாக்க்ஷியே கேட்டாள் அவனிடம் “என்ன கதீஷ், என்னாச்சு, பொண்ணு பார்த்து இருக்காங்களா” என்றாள் அவனின் தயக்கத்தை அறிந்து.

அவளிற்கு அதுதான் தோன்றியது ஏதோ வீட்டில் பிரச்சனை, அதைதான் பேச போகிறான் என நினைத்தாள், மேலும் அது தன்னை சுற்றியதாக இருக்கும் என்ற எண்ணம்தான் அவளிற்கு.

கதிஷுக்கு ‘பெண் பார்த்தல்’ பற்றி, அவள் கேட்டது உண்மைதான். ஆனால், அவனுக்கு அது ஒரு காரணமே தவிர, அது மட்டும்தான் காரணம் அல்ல. இப்போது இவளிடம் பேசுவதற்கு.

எனவே “இல்லடி “ என்றவன் அவள் புறம் திரும்பி அமர்ந்து தன் கைகளை நீட்ட, சாக்க்ஷி இப்போது தன் கைகளை தரவேயில்லை.

ஏனென்றே தெரியவில்லை, அவனை நம்பவில்லையா, இல்லை பயமா என எதுவும் தெரியவில்லை, ஆனால், சாக்க்ஷி அவனிடம் தன் கைகளை தரவில்லை.   

ஆனால், அவனையே கேள்வி கேட்டாள் “ பின்ன என்ன” என்றாள் ஒரு விசாரணையான பார்வை பார்த்துக் கொண்டு, சந்தேகமாக கேட்டாள்.

கதீஷும் “என்னடி……….” என்றான். அவனும் இப்போது திமிராக, மேலும் அவளின் கையை வலு கட்டாயமாக பற்றிக் கொண்டான். இப்போது தடுமாற்றம் எல்லாம் காணமல் போனது..

சாக்க்ஷி எதுவும் சொல்லாது, திரும்பவும் அவனிடம் “என்ன, வீட்ல, பொண்ணு பார்த்திருக்காங்களா” என்றாள் பற்களை கடித்துக் கொண்டு.

“ஆமாம் டி” என்றான். கண் மூடி சீட்டில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

கதீஷ் ஒரு வழியாக சாக்க்ஷியிடம் “நாம கல்யாணம் பண்ணிக்கலாமா” என்றான். கண் திறக்கவில்லை. அவள் மறுப்பாள், அதனை தான், பார்க்க கூடாது என கண் திறவாமல் இருந்தான்.

‘திக் என்று இருந்தது சாக்க்ஷிக்கு’ ஆனாலும் எதுவும் காட்டிக் கொள்ளாமல் சாக்க்ஷி “என்ன தீடிர்ன்னு, இப்படி எல்லாம் கேட்கற, அதான் பொண்ணு பார்த்திருக்காங்களே” என்றாள் சாதாரண குரலில்.

கதீஷ் மனதுக்குள் ‘கொஞ்சமாவது அலட்டிக்கரளா பாரு, யாருக்கோ பொண்ணு பார்த்தாங்கலான்னு அமைதியா இருக்கா’ என நினைத்துக் கொண்டான்.

எனவே கடுப்பாக “அது என் பிரச்சினை, நீ சொல்லு நாம எப்போ கல்யாணம் செய்துக்கலாம்” என்றான் விடாது.

சாக்க்ஷி இப்போது கொஞ்சமாக உருக தொடங்கினாள், லேசான தடுமாற்றம் வந்தது குரலில் “வேணாம் கதீஷ், நான் உனக்கு வேண்டாம் டா, என்னால நீ நிறைய அவமானபடுவ,

உன்னை உங்க வீட்டு ஆளுங்களே மதிக்க மாட்டாங்க, நான் வேணாம் கதீஷ் உனக்கு.

என் மேல இரக்கபடு, ஆனால் காதல் வேண்டாம் கதீஷ்.” என்றாள்

‘என்ன என்ன நினைத்து வந்தேன். ஆனால் இவள்…’ என கோவம் வந்தது. இப்போது முழுதாக மீண்டிருந்தான் கதீஷ் “ம்கூம்……. பார்க்கலாம், யார்… என்னை, என்ன சொல்றாங்கன்னு

நீ சொல்லு எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்.” என்றான் திரும்பவும்.

“என்… எனக்கு.. நிறைய வேலையிருக்கு, நான் இதிலிருந்து வெளிவர முடியாது கதீஷ். இப்போதான்….நான், பிசினஸ்ஸ ஸ்டார்ட் பண்ணியிருக்கேன்.. அதுக்குள்ள…” என்றாள் தடுமாற்றமாக.

“அப்போ பிசினஸ் பண்றவங்க எல்லாம் கல்யாணம் பண்ணிக்கறது இல்லையா” என்றான்.

சாக்க்ஷி “அது எனக்கு தெரியாது.” என்றாள்

தொடந்து அவளே “இப்போதான் நான் ஒன்னு செய்ய தொடங்கியிருக்கேன், அது இப்போதான் மார்கெட்ல நல்லா போகுது, இப்போ நான் அடுத்த கட்டத்துக்கு அதை நகர்த்தனும்.

சோ, என்ன செய்யறது, எப்படி செய்யறதுன்னு அதில்தான் என் கவனம் இருக்கு. அதனால எனக்கு இது சரியா வருமா தெரியல” என்றாள் ஏதோ பள்ளி படிக்கும் குழந்தையாக.

இப்போது கதீஷ் அவளை சந்தேகமாக பார்த்து “நீ பிசினஸ்க்கு பின்னாடி மறைச்சுக்காத சாக்க்ஷி, நான் கேட்டது கல்யாணம் எப்போ செய்துக்கலாம், அதுக்கு மட்டும் ஆன்ஸ்சர் சொல்லு” என்றான் குரலில் ஸ்ருதி கூடி தெரிந்ததோ.

சாக்க்ஷி இப்போது முற்றிலும் அமைதியாக இருந்தாள். வாய் திறக்கவில்லை. சின்ன அலைபுருதல், அவனிடமிருந்து தன் கையை உருவிக் கொண்டாள்.

‘இவன் என்னை புரிந்து கொள்ள மாட்டானா‘ என்ற எதிர்பார்ப்புடன் அவனையே பார்த்திருந்தாள்.

அந்த பார்வையில் தன்னை கொஞ்சம் மீட்டவன், பொறுமையாக பேசினான்  “தொழில்னா அப்படிதான் அடுத்த அடுத்து போய்கிட்டே இருக்கும். அது பின்னாடி நாம் போனா, நம்ம லைப்ப, எப்ப பார்க்குறது.

கொஞ்சம் உன்னையும் கவனி, நான் ஹெல்ப் பண்றேன். செந்திலண்ணா இருக்கார், அதெல்லாம் பெரிய விஷயமே இல்லை, பார்த்துக்கலாம்” என்றான் சிறு பிள்ளைக்கு சொல்வது போல்.

இப்போது வேறு சொன்னாள் சாக்க்ஷி “இ….. இல்ல கதீ…, அப்…. அப்பா முதல்லையே வேண்டாம்ன்னு சொன்னாரு, அவர மீறி, நா… நான் எப்படி கதீஷ். அது தப்பில்லையா, நான் அவர ஏமாத்தர மாதிரி ஆகாத” என சொல்ல சொல்ல ஒரே அழுகை.

இத்தனை நேரம் அழுகாதவள் அப்படி தேம்பி தேம்பி ஒரே அழுகை. உண்மையாக இதுதான் அவள் மனதை முழுதாக உறுத்திய விஷயம்…. அதை அவனிடம் சொல்லும் தைரியம் இல்லைதான்.

ஆனால் அதை அவன் மீறுவான, இல்லை நான்தான் மீறி செல்வேனா, எனவே, அவன் எனக்கு வேண்டாம் என அவளின் மனதில் ஒரு மூலையில் இருந்த எண்ணம் இப்போது அழுகையினுடே உடைத்துக் கொண்டு வந்தது.

கைக் கட்டிக் கொண்டு பார்த்திருந்தான் கதீஷ், அவளின் அழுகையை, இதை எதிர்பார்த்தான் அவன். இந்த ஒரு விஷயமே அவனையும், இத்தனை நாள் பொறுமையாக வைத்திருந்தது எனலாம்.

எத்தனை நாள் இதை நினைத்து மறுகினாளோ, யாரிடமும் அவ்வளவாக பேசமாட்டாள், உரிமையாக எதுவும் பகிரமாட்டாள், நானும் அவளிடம் பேசுவதில்லை. அப்படியிருக்கையில், இந்த ஒன்றுதான் அவளை இத்தனை நாள் கட்டி போட்டிருக்குமென அவனக்கு புரிகிறது.

எனவே, அவளை தேற்றவில்லை, இன்னும் அவளை காயப்படுத்துவது போல் “சரி, நானே வேறு மாப்பிள்ளை பார்க்கிறேன் கட்டிக்க, இப்படியே இருந்தா மட்டும் சந்தோஷப் படுவாரா” என்றான். படு அமைதியான குரலில்.

சாக்க்ஷி “அய்யோ வேண்டாம் கதீஷ்….. படுத்தாத…, என்னை விட்டுடு ப்ளீஸ்…..” என்றாள் கண்களை துடைத்துக் கொண்டு.

திரும்பவும் அவளே, ஒரு பெருமூச்சு விட்டு “இது சரியா வராது, எங்க அப்பா முதலிலேயே சொல்லிட்டு போயிட்டார், அப்புறம் உங்க அப்பா, உங்க குடும்பம், எங்க சித்தப்பா..

இப்படி எவ்வளோ பேர் இருக்காங்க, எனக்கு இவங்க எல்லாம் வேணும், நான் யாரையும் சங்கடப்படுத்த விரும்பல கதீஷ்” என ஆரம்ப இடத்திலேயே வந்து நின்றாள்.

பட படவென பேசினான் கதீஷ் “எல்லாம் அப்படியேதான் இருக்கும் சாக்க்ஷி, எனக்கு அது முக்கியமில்லை. சொல்லு எப்போ என்னை கல்யாணம் செய்துப்ப, அத மட்டும் சொல்லு.” என்றான் பிடிவாதமாக.

சாக்க்ஷி இப்போது அவனின் வேக குரலில் அயர்ந்து போனாள், “பொறுமையா பேசு கதீஷ்” என்றாள்.

“ம்……. என்னடி பொறுமை, எவ்வளோடி பொறுமை… என்ன, என்னமோ கேட்கனும்னு வந்தேன், கடங்காரி படுத்தறடி..” என தன் கை மடக்கி எதிரில் உள்ள சீட்டின் மேல் குத்தினான்.

திரும்பவும் சீட்டில் சாய்ந்து கொண்டு “நான் எல்லாத்தையும் மாத்துறேன்னு சொல்ல, அதுவா மாறும்னு சொல்றேன். ஆனா, இப்போ நீ, சம்மதம்ன்னு மட்டும் சொல்லு“ என, விரல் நகம் கூட அவள் மீது படாத ஆளுமையாக கேட்டான் கதீஷ்.

இதுநாள் வரை சாக்க்ஷி கொண்ட விரதமெல்லாம் மெல்ல மெல்ல கரைய தொடங்கியது அவனின் பேச்சில், ‘என்னதான் இருக்கிறது… என்னிடம், ஆசையாக ஒரு பார்வை கூட இதுவரை காதலாக நான் பார்த்ததில்லையே…..

ஆனால், இப்படி முழுதாக என்னை ஏற்று, நான் எது செய்தாலும், அதில் துணை நின்று… முக்கியமாக இன்னும் பார்வையில் கூட கண்ணியமான என் தோழனை, நேசனாவும் பார்க்கத்தான் நினைக்கிறேன், ஆனால் ஏதோ இன்னும்” என அவள் சிந்தனை ஓட….

“இன்னும் என்னடி…………….” என சொல்லியவன் அவள் எதிர்பாரா நேரத்தில் அவள் தோள் மேல் கை போட்டு இழுத்துக் கொண்டான்.

அவளும் ஏதும் சொல்லாமல், அவனிடம் இசைய, அவள் முகத்தை நிமிர்த்தி “ஏதாவது சொல்லமாட்டியா, நான் கேட்டதுக்கு….” என அவன் சொல்லிக் கொண்டிருக்க, அவள் விழி, நீர் திரையால் மறைந்து, இமைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தது.

இதுநாள் வரை அவளிடம் கண்டிராத பார்வை, கதீஷ் அதில் ஒரு நிமிடம் மூழ்கிதான் போனான், கேட்பதை விட, விழி அதிகம் பேசுமோ, அதுவும் தனக்குரியவர்களிடம் எதுவும் பேசுமோ…..

யாசிப்பும் நேசமும் கலந்த சரிவிகித பார்வையது… கதீஷ் அன்று சொல்லியது போல், பார்த்துவிட்டான் அவனுக்கான நேசத்தை அவளின் கண்களில்….

இப்போது கதீஷ் தன்னையறியாமல் சொன்னான் “இன்னும் கொஞ்ச நாள், நீ ஆச பட்டபடி, எல்லோர் சம்மதத்துடனும் நடக்கும், நம்ம கல்யாணம்..ம்..” என்றான்.

வரும்போது இருந்த வேகம், கோவம், ஏக்கம், தடுமாற்றம், நிறாசை எல்லாம் அவளின் பார்வை வீச்சில் கரைய, ஒரு புதிதான உணர்வு வர அவளின் நெற்றியில் லேசாக இதழ் ஒற்றி எடுத்தான்… அவளை லேசாக நெஞ்சோடு அணைக்க இருவர்க்கும் நடுங்கியது உடல்..

“நீ என் சுந்தர ராட்சஸி…..” என செல்லம் கொஞ்சிக் கொண்டான். பின்பும், அவன் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். அதெல்லாம் சாக்க்ஷியின் காதில் அரை குறையாகத்தான் விழுந்தது. ‘நீ எது சொன்னாலும் சரி’ என்னும் மனநிலையில் இருந்தாள் போல… அவ்வபோது ‘ம்…’ என்ற சத்தம் மட்டும் அவளிடமிருந்து வந்தது.

பின் தானாக அவனின் குரல், கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து ஓய்ந்தது. அவளை தோளில் சாய்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான்.

அவளை பற்றி எல்லாம் தெரியும் என்றவனுக்கு, ‘ஒன்றுமே தெரியாது’ என எண்ணம் வந்தது சிரித்தபடி அவளை தோள் சாய்த்து அமர்ந்திருந்தான்.

எவ்வளவு நேரம் சென்றதோ, “மே… ம்மே….” என ஆட்டு குட்டிகளின் சத்தம் கேட்கவும்… ஒரு வழியாக பூலோகம் வந்தனர் இருவரும்.

ஏதோ ஆட்டு மந்தை ஒன்று, அவர்களின் வண்டியை கடந்து சென்றது. எனவே இறங்க முடியவில்லை அவர்களால், அமைதியாக பார்த்திருந்தனர் அதனை.  

பின் மனமேயில்லலாமல் விலகினர், இப்போதுதான் பசி தெரிய, கதீஷ் “பசிக்குதுடி” என்றான். தானே உணவு கவர் எடுக்கவும், சாக்க்ஷியின் போன் ஒலிக்கவும், சரியாகவும் இருந்தது.

மேகலைதான் லையனில், சாக்க்ஷி ‘இன்னும் காணம் என தேடுவார்’ என நினைத்து போனை எடுத்து நல்ல மன நிலையில் குதுகலமாக “ஹலோ “ என்றாள்.

“சாக்க்ஷி சீக்கிரம் வீட்டுக்கு வாம்மா, சித்தப்பா, சித்தி வந்திருக்காங்க, என்னமோ சொல்றாங்க” என்றார் குரலில் பதட்டம்.

“வரேன் ம்மா, இதோ வரேன்” என இவளும் பதறியவளாக சொன்னாள்.

பின் அவளே “என்னம்மா, சண்டையா” என்றாள்.

“அதெல்லாம் இல்லடி, நீ வா” என்றார்.

கதீஷ் உணவுகளை எடுத்து வைத்திருந்தான். ஆனால் சாக்க்ஷி பதட்டமாக இருக்கவும், தானே பிரித்து அவளிற்கு ஒரு வாய் ஊட்ட “எனக்கு வேண்டாம் கதீஷ், போலாமா, நான் வண்டி எடுக்கிறேன், நீ சாப்பிடு” என இறங்க தொடங்க.

கதீஷ் “இருடி………….என்னாச்சு” என்றான், அவள் கை பற்றி, சவகாசமாக.

சாக்க்ஷி “சித்தப்பா வந்திருக்காராம், என்னன்னு தெரியல” என கொஞ்சம் பதட்டத்துடன் சொன்னாள்.  

“பராவயில்லையே, நான் வந்த உடனே, உங்க சித்தப்பாவும் வந்த்ட்டாரா, குட், இனி எங்க அப்பாவதான் சரி பண்ணனும், சீக்கிரம் செய்திடலாம்” என்றான் உற்சாக குரலில்.

சாக்க்ஷி “எங்க சித்தப்பா, எப்போ வந்தாலும் பிரச்சனைதான், நீ எப்படி, நீயும் கிட்ட தட்ட அப்படிதான்” என்றாள் சிரித்தவாறே.

“திமிரு டி உனக்கு, என்ன பார்த்தா அப்படியா தெரியுது, போனா போகுது உனக்கு வாழ்க்கை கொடுக்கலாம்ன்னு வந்தா….

நல்லது நினைச்ச.. என்னை சொல்லணும்” என்றான் ஆற்றாமையாக.

அப்படியே பேசிக் கொண்டே, அவளிற்கு சாம்பார் சாதம் ஊட்ட தொடங்கினான், சாக்க்ஷி, “குடு நானே சாப்பிட்டுகிறேன்” என்றவள் வாங்க கை நீட்ட,

“விடுடி” என்றவன் தானே ஊட்டினான்.

சாக்க்ஷி விடாது “யாரு வாழ்க்கை கொடுக்கறா….” என்றாள் அவனை தலை சாய்த்து பார்த்து,

கதீஷ் லேசாக சிரித்தான். ஒன்றும் சொல்லவில்லை. சாக்க்ஷி “மணியாச்சு நீங்க, சீக்கிரம் சாப்பிடுங்க” என்றாள்.

அழுத்தமாக அவளை பார்த்தான், ஏதோ சொல்ல வேண்டும் போல இருந்தது. ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. சாக்க்ஷிக்கு அவனின் பார்வையின் பொருள் புரிய, அவனிடம் “ஷ்” என்றாள் கண் சிமிட்டி. அவனும் சிரித்துக் கொண்டே “ம்கூம்” என்றான். புருவம் உயர்த்தி.  

அடுத்த பத்து நிமிடத்தில், உண்டு முடித்து, கதீஷின் கைகளில் வேண்டி பறந்தது. அவளை மில்லில் விட்டு, தன் புல்லட் எடுத்து அவன் கிளம்ப, வேலு வண்டி எடுக்க, கிளம்பினாள் சாக்க்ஷி.

 

  

 

  

 

 

  

   

Advertisement