Advertisement

பூக்கள்-17

அந்த வார இறுதியில்…. வர்ஷிணியின் நிச்சையம்…. அதை முன்னிட்டு கைலாஷின் இரு அத்தைகளும் வந்திருந்தனர்….. அகல்யாவிற்கு நேரம் போதவில்லை…..

வீடு.. ஆபீஸ்.. பங்க்ஷன் வேலை.. என அந்த வாரம் முழுவதும் அவளை தங்கள் வசம் வைத்துக் கொண்டது…. குருமூர்த்தி என்ன ஆனாலும் சரி ஆபீஸ் வந்தே ஆகவேண்டும் என இருந்தார்….

குருமூர்த்தி அதிலெல்லாம்…. சலுகை தரவில்லை….. ஆபீஸ் நடவடிக்கைகள் அனைத்தையும்….. அவள் கவனத்திக்கு கொண்டு போக வைத்தார்…..

வேலை விஷயமாக எங்கு சென்றாலும்…. தனது மருமகள் என….. கூடவே கூட்டி சென்றார்… நிறைய தடைகள்….. எதற்கு இவர்க்கு இந்த வேலை என… பலர் விமர்சனம் செய்தனர்……

‘மகன் இருக்கையில்….. இப்படி மருமகளை எதற்கு அழைத்து வருகிறீர்கள்’ என…. அவரிடமே கேட்டனர்….. அசையவில்லை அவர்…..  

இன்னும்…. இவர்கள் போன்றவர்களை எப்படி சாமளிப்பது என்பதையும் சேர்த்து கற்று தந்தார்….. அகல்யாவிற்கு.

தெளிவான வழிகாட்டுதல்….. முறையான பயிற்சி….. என அகல்யா ஒவ்வெரு படியாக…. அவரின் துணையுடன்…. அலுவலக நடவடிக்கையை புரிந்து கொள்ள தொடங்கினால்….    

முன்பு கைலாஷ் பிக்அப் செய்யும் ஒரு சில…. வாடிக்கையாளர்களை அகல்யா பார்க்க வேண்டி வந்தது….

இப்படி நிறைய…. கைலாஷ் இதிலெல்லாம் தலையிட வில்லை…. ஆனால், அவளின் ஒவ்வெரு செயலிற்கும் யோசனை சொன்னான்….

அவள் கேண்டின் ஏற்பாடு செய்யலாம் என்றால்…. அதன் நன்மை தீமை சொன்னான்…. யார் மூலம் செய்யலாம் எனவும் சொன்னான்… அவ்வளவே மற்றபடி…. அவளை வேடிக்கை பார்த்தான்….. அவ்வளவே….    

******* ******** ********* **********    

இன்று வர்ஷிணியின் நிச்சைய விழா,. காலையிலேயே, அங்கு அவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டாள் அகல்யா….

குருமூர்த்தி மதியம் தான் வந்தார், ஏற்பாடுகளை கவனிக்க சென்றுவிட்டார்

கைலாஷும் வேலையெல்லாம் முடித்து, மாலை நேரத்திற்கு தான் வந்தான்…

வந்தவன் விழிகள் அவளை ரகசியாமாக தேடியது…. சுற்றியும் பார்த்தான் யாரை கேட்பது….. ம்…. என யோசனையுடன் அமர்ந்திருந்தான்..

காலையில் ஜாகிங் முடித்து வரும் போதே, இவள் அங்கு இல்லை…. நேற்று இரவே சொல்லி இருந்தாள் தான்….. ‘நான் வர்ஷினி வீட்டிற்கு செல்ல வேண்டும்’ என….    

அவன் அமைதியை பார்த்த.. அவனின் பெரியம்மா… அவனை அழைத்து… “வர்ஷிணியின் அறையில்… அவளிற்கு அலங்காரம் செய்து கொண்டிருக்கிறாள்… போ..போய் பார்….” என்றார் அதட்டலாக

“ச்சே…. என் முகம் எல்லாத்தையும் காட்டி கொடுக்குதுடா.. சாமி…” என நினைத்து…அங்கு செல்ல…

அகல்யா… அங்கு கீழே அமர்ந்து… வர்ஷிணிக்கு… புடவை மடிப்பு சரி செய்து கொண்டிருந்தாள்….  இவன், கதவை லேசாக தட்டி… திறக்க…

அகல்யா புதுபொலிவுடன் ஆகாய வண்ண பட்டுடுத்தி… மையிட்ட விழியில் தன்னை நிமிர்ந்தது பார்த்தது தான்…. கைலாஷ் அப்படி ஒரு பரவச நிலை….

கைலாஷிற்கு…. இப்போது தான் தோன்றியது…. ‘எத்தனை… எத்தனை.. நிகழ்வுகளை இழந்து விட்டேன் நான்….’ என தான் தோன்றியது….  

அகல்யா அவனை பார்த்ததும் “எப்போ வந்தீங்க…. காபி குடிச்சிங்களா…. இருங்க…. ஒரு 2 நிமிடம் நான் வரேன்….” என தானே கேள்வி கேட்டு…. அவளே பதில் சொல்லி….                

என்னமோ அவனை பார்த்தே பத்து நாள் ஆனவள் போல்…. பேசி வைக்க… கேட்டு கொண்டிருந்த வர்ஷணி  “அண்ணி… இது… எங்க அண்ணன் பிறந்ததிலிருந்து வந்து செல்லும் வீடு…. எங்க அம்மா… எங்களை கவனிப்பதை விட… அவனை நல்லா பாத்துப்பாங்க….” என சொல்ல….

‘அய்யோ….’ என நாக்கை கடித்து… தன் தலையில் தட்டி…. நிமிர்ந்தாள்…

கைலாஷ் வாஞ்சையாக பார்த்திருந்தான்…. ‘என் அம்மா, இருந்திருந்தால்…. இப்படி தான் கேட்டிருப்பார்களோ….’ என நினைத்து,          

வர்ஷிணி தான் கைலாஷ் முன் ‘சொடகிட்டு அழைத்து… “போதும் போதும்… இங்கெல்லாம் ரொமேன்ஸ் பண்ணக் கூடாது….” என கேலி செய்தாள்….

கைலாஷ் எதுவுமே பேசாமல்…. அமைதியாக அவளை தன் பார்வையால் வருடிச் சென்றான்….   

விழா ஆரம்பித்தது முதல் அமைதியாக நடந்தது….. மற்றவர் கவனத்தை தன் மேல் ஈர்க்காமல்…. அகல்யா அனைத்து வேலைகளையும் செய்தாள்…. வர்ஷிணியின் அண்ணி மாசமாக இருப்பதால்…. அகல்யா தான் அனைத்து வேலைகளும் செய்யும் நிலை….. அது அவளிற்கு இனிதாகவே இருந்தது…   

இனிதாக விழா நிறைவடைந்தது…. வைஷ்ணவியை…. விழாவில் பார்த்துவிட்டு….  

மாப்பிளை வீட்டில்…. விசாரித்தனர்…. ‘யார் பெண்’ என….. அகல்யாவின் தங்கை, எனவும்… இன்னும் பிடித்தது அவர்களுக்கு….

வர்ஷிணியின் புகுந்த வீட்டில்…. அவர்களின் சொந்தத்தில்…. அவளை பெண் கேட்டனர்…..

வைஷ்ணவி தான் 2 வருடம் வேலை முடித்து தான் திருமணம் என உறுதியாக இருந்தாள்…. எதற்கும் அசையவில்லை….. யாருக்கும் தான்…

வைஷ்ணவிக்கு பெங்களூர்ரில் வேலையும் கிடைத்து விட்டது….. அவள் இப்போது, அங்கு தான் இருக்கிறாள்…..

எனவே குருமூர்த்தி….. இப்போது தன் மருமகளிடம் தன் எண்ணத்தை கூறி….. அகல்யாவின் பேரில் ஒரு வீடு வாங்கி…. விசாலாட்சியை…. சொற்ப வாடகைக்கு குடி வைத்தனர்….     

இருவரும்… இப்போது அடிக்கடி பீச் சென்றனர்… கைலாஷிற்கு தன் மனைவி தன்னிடம் நெருங்க வேண்டும் என்ற எண்ணம்… இருக்கும் தான்  ஆனால் அதை அவன் கண்ணில் கூட காட்டுவதில்லை……..

இப்போது அகல்யாவும் அவனை தேட தொடங்கி இருந்தாள்…. இன்ன மாதிரி என அவளுக்கு வெளிபடுத்த தெரியாமல்…. எதற்கெடுத்தாலும்… கைலாஷிடம் சண்டை இட்டுக் கொண்டிருந்தாள்….  

ஆம்.. இப்போது இருவரும் அறையில் நண்பர்கள் என்ற நிலை….. சில சமயம் பாட்டு…. ப்ளுடூத்தில் ஒலிக்க…. இவர்கள் சண்டைகள் நீளும்….

ஆம் அகல்யா…. இப்போது கைலாஷ் என்றாவது ஆபீஸ் அழைத்து செல்ல முடியவில்லை என்றால்…. இரவு வந்ததும்…. ஒரு சில நாள் கேள்வி கேட்பாள்…. சண்டை போடுவாள்….

கொஞ்சம் முன்னேற்றம் என கைலாஷ் மகிழ்வான்…. அப்படி தான் வர்ஷினி திருமணத்திற்கு…. புடவை எடுக்க செல்லும் போது…. அகல்யா, கைலாஷை எதிர்பார்க்க….

கைலாஷ் ஒரு வேலையில் லாக்காகி…. அந்த நிகழ்வை மறந்தே போனான்…. அகல்யா,. கைலாஷின் பெரியப்பா வீட்டினருடன் கடையில் இவனிற்காக காத்திருக்க….

தன் திருமணத்தின் போதும் வரவில்லை…. இப்போதாவது என… அவள் ஆசையாக எதிர் பார்க்க…. எங்கே, கைலாஷ் அங்கு…. செம பிஸி…. போன் செய்ய… செய்ய…. அவன் எடுக்கவில்லை….

ஒரு கட்டத்தில் ஓய்ந்து போய்…. இவள் அனைவரின் முன்பும் தன் முகத்தில் எதுவும் காட்டாமல்… ஏதோ ஒரு புடவையை எடுத்து வந்தாள்….

கைலாஷ் மாலை தனது வேலை முடிந்து  போனை பார்க்க….. ‘அய்யோ’ என்றானது அவனிற்கு…..

7 மணிக்கு போன் செய்தான் கைலாஷ், அகல்யாவிற்கு…. ‘ஹ…ஹா…’ வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு…. வெளியே உள்ளார்…. என ஆட்டோமேடிக் வாய்ஸ்…… வந்தது….

திரும்பவும் நாகு அண்ணாக்கு போன் செய்து….. அகல்யா பற்றி கேட்டு…. விசாரித்து…. அவளை பேச வைக்கும் முயர்சி எல்லாம்…. வீண்….

பின்பு, தானே கடைக்கு சென்று….. ஒரு பட்டு புடவை வாங்கியே வீடு வந்தான்….. ஆனால், அகல்யாவை காணவில்லை அவன் ரூமில்….

நொந்தே போனான் கைலாஷ்…அன்று தனது வாழ்நாளில் இதுவரை படாத… அவஸ்தை…. அவளை காணாமல் தவித்து தான் போனான்….

இவன் உறங்கிய பிறகு என நினைத்து…. 12:30 தான் ரூமின் உள் வந்தாள்…. அகல்யா…. என்ன தான் அமைதியாக வந்தாலும்… கைலாஷ் கண்டு கொண்டான்… அவள் வந்த உடன், எழுந்து அமர்ந்து….

“எங்க, இவ்வளவு நேரம் காணம்….” என சலித்தபடியே கேட்க….  

அப்போது அகல்யா பொங்கியே விட்டாள்….. “என்ன எதிர்பார்த்தேன்… புடவை எடுக்க கூட வர மாட்டிங்களா…..” என நல்ல மனைவியாக கேட்க….

கைலாஷிற்கு கோபமே வரவில்லை….. அப்படியொரு புன்னகை…. அவன் முகத்தில்….. முக்தி நிலை…. .

இவனிடம் பதில் வராமல் திரும்பி அவனை பார்க்க…. ரசனையாக அவளையே…. பார்த்துக் கொண்டிருந்த அவன் முகம், பார்த்து…..

இன்னும் கடுப்பாகி அகல்யா…. இழுத்து போர்த்தி படுத்துவிட்டாள்….  வெடித்து சிரித்தான் கைலாஷ்….

அவளிற்கும் உள்ளுக்குள் சிரிப்பு தான்…. ‘ம்..கூம்….’ நிமிர்ந்து கூட பார்க்கவில்லை அவள்….. மனம் நிம்மதியாக உறங்கியேவிட்டாள்…         

காலை… கைலாஷ் ஜாகிங் முடித்து, அமர்ந்திருந்தான்…. இன்னும் கீரின் டீ வந்தபாடில்லை…. ‘என்ன….’ என இவன் எரிச்சலாக… “அகல்….” என சத்தமிட….

அவள் கிட்சென்னில் இருந்து…. “உள்ளே வாங்க….” என குரல் வந்தது…. என்னவென இவன் சென்று பார்க்க….

அகல்ய பரபரப்பாக வேலை செய்துக் கொண்டிருந்தாள்…. அங்கு யாரும் இல்லை…. “எங்க நாகுண்ணா…..” என்க.

“இன்னிக்கு லீவ் அவங்க….. நைட் தான் வருவாங்க….. அந்த கேட்டலேலில்  இருக்க வெண்ணீற ப்ளூ கப்ல உற்றி….” என இவள் ஏதோ ஒரு முறைப்புடனேயே சொல்ல

அதற்குள் கைலாஷ், சமையல் மேடையில் ஏறி அமர்ந்து அவளை பார்க்க… அவள் எதையோ தாளித்துக் கொண்டிருந்தாள்…. கவனிக்கவில்லை…

அதனை முடித்து…. கிரீன் டீ பாக் ஒன்று எடுத்து போட்டு தானே வெந்நீர் உற்றி… அவனிடம் நீட்டினால், அவன் முகம் பார்க்காமல்….

கைலாஷிற்கு…. என்னவோ போலே ஆனது… அவன் அதை வாங்காமல், அவளையே பார்க்க…..

இன்னும் வாங்காததால்… இவள் நிமிர்ந்து பார்க்க…. கைலாஷ் விடாமல் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்….      

“என்ன இன்னும் கோவம் போகலையா….” என்றான்…

பதிலில்லை அவளிடமிருந்து… அவனருகில் அந்த கப்பை வைத்தவள், “மாமா வாக்கிங் முடிச்சி வந்துடுவாங்க…. எனக்கு வேலையிருக்கு… கிளம்புங்க முதல்ல…. அப்புறம் பேசலாம்….” என்றால் கறாராக…

அதற்கு தாகுந்தார் போல் அவளின் போன் அடித்தது….. அவளின் அம்மா தான்… “அகல்யா… இன்னக்கி உங்க பெரியம்மா…. ஏதோ பேசனும்மா…. வரேன் சொன்னாங்க… நீ வந்துடுமா…” என்றார்.

“ம்…. சரிம்மா..” என இவள் போனை வைக்க…

கைலாஷ் அப்படியே இருந்தான்… “என்னங்க…. என்ன…” என இவள் சிரித்தபடி கேட்ட….

‘ஒன்றுமில்லை…’ என இவன் தலையாட்ட….. “அப்புறமென்ன…. கிளம்புங்க..” என சொல்லிக் கொண்டிருக்க…

குருமூர்த்தி…. “அகல்யா காப்பி ம்மா….” என டின்னிங் டேபிலில் அமர்ந்தார்…

இவள் “இதோ மாமா…” என காப்பி கலந்து எடுத்து செல்லும் நேரம், அவள் கையை பிடித்துக் கொண்டான்….

என்னவென கைலாஷ் முகத்தை பார்க்க…. “தன்  கன்னம் தொட்டு காட்டியவன்… கிஸ் பண்ணிட்டு போ…” என்றான்.

“ஜி… விடுங்க ஜி…. மாமா… இங்க தான் இருக்கார்…” என கூறியவள் நகர போக…. கையை விடவே இல்லை அவன்…

இவள் இப்படி சொன்னுடன்… அவள் கையை  சுண்டி இழுத்தான்…. கையில் காப்பி வேறு வைத்திருந்தாள்…. அது அவள் புடவையில் சிந்தி…. அவன் இழுத்த வேகத்தில் அவன் மேலும் சிந்தி…..          

அதெல்லாம் பொருட்படுத்தாது….. அவள் கன்னத்தில் முத்தம் வைத்தே… ‘ஷ்..’ என சத்தம் செய்த… உதட்டிலும் பட்டும் படாமல் ஒரு முத்தம் வைத்தே அவளை விட்டான்…

இப்போது…. அவளை திமிராக பார்த்துக் கொண்டே தனது கிரீன் டீயை…. குடிக்க தொடங்கினான்….

அகல்யாவால் அவனை நிமிர்ந்து பார்க்க கூட முடியவில்லை… அமைதியாக, இன்னொரு காப்பி கலக்கி கொண்டிருந்தாள்…

அதனை வாங்கிக் கொண்டு தனது தந்தையிடம் சென்றான் கைலாஷ்…. இவள் அந்த இடத்தை கிளீன் செய்து விட்டு…. தனது வேலையை தொடங்கினாள்.

அகல்யா தனது மாமனாரிடம் சொல்லிக் கொண்டு…. தன் அம்மாவீட்டிற்கு சென்றால்….

அங்கு ஏற்கனவே, கல்யாணியும், சுப்ரமணியம்…. ஷண்முகமும்  வந்திருந்தனர்… இவளை பார்த்ததும்… சுப்ரமணியமே பேசினார்…”வாம்மா …” என்றவர்..

சிறிது நேரம் கழித்து…. அந்த பழைய வீட்டை இடித்தது பற்றி கூறினார்…. பின்னர் தாங்கள், அதாவது….. இவளின் சித்தப்பாவும், அவரும் சேர்ந்து…. அந்த இடத்தை விற்க போவது பற்றியும் கூறினார்…

முன்பு போல் இல்லாமல்…. இப்போது எல்லாம்  பொதுவில் சொல்லப்பட்டது…. அகல்யாவிற்கும் விசாலாட்சிக்கும் இதுவே போதுமானதாக இருந்தது….

விசாலாட்சிக்கு என்ன வேண்டும், தனக்கு பிறகு தன் பெண்களுக்கு… பிறந்த வீட்டின் ஆதரவு வேண்டும் என தான் நினைத்தார்…. எனவே எதையும் எதிர்க்கவில்லை…..

எல்லோரும் உண்டு முடித்து கிளம்பினர்…. அகல்யாவும் கிளம்பி வீடு வர மாலையானது…..

*************** ************** ***************

இப்படி அப்படி என 2 மாதம் முடிந்த நிலையில்….. அகல்யா இப்போது தனியே ஆபீஸ்சை கவனிக்க பழகி இருந்தாள்…. கைலாஷ் ஒரு மாதமாக…. ஆஸ்திரேலியா செறுவிட்டான்….

அகல்யாவை…. தனது அலுவலகம் அனுப்பி விட்டு….. குருமூர்த்தி கைலாஷ் அலுவலகம் சென்றார்….

அகல்யாவின் அணுகு முறையில்…. இப்போது சின்ன சின்ன மாற்றம்…. கேண்டின் வந்தது…. இது வரை…. வண்டி சர்வீஸ்க்கு…. அந்தந்த டிரைவர்களின் பொறுப்பு என இருந்தது….

இப்போது…. ஒரு தனி டிலர்க்கு வழங்கப்பட்டது…. இப்படி சின்ன சின்ன செயகளால், அகல்யா தனது செயலை அங்கு தொடங்கினால்….

குருமூர்த்தி இப்போதெல்லாம், வாரம் இருமுறை வந்து கணக்கு பார்ப்பது மட்டுமே… தனது, மருமகளை அலுவலகம் அனுப்பிவிட்டு…. இவர் ஆன்மீக சுற்றுலா, கிளப்… மீட்டிங் என ஒய்வு கொண்டார்…

தனது செயலை…. மாமனார்  கண்காணிக்கிறார் என்ற எண்ணமே அகல்யாவை செம்மை படுத்தியது…. எனவே புது பொலிவுடன் அவளின் பயணம் தொடந்தது….              

அகல்யா இப்போது தான்… உணர தொடங்கினால் அவனின் பிரிவை….. இந்த ஒரு மாதமாக…. வீடு… வேலை….. ஓடியே போனது… அவன் வரும் நாளை விரல் விட்டு எண்ணாதா குறை தான் அப்படி எதிர்பார்த்தாள்……

எங்கு சுற்றினாலும் அவனின் தாக்கமே அதிகம் தெரிந்தது….கைலாஷ்…. பற்றிய எண்ணம் அவளுள் நிரம்பி வழிந்தது…..

கைலாஷ் இப்போது…. தன் கவனத்தை முழு நேரமும்…. வந்த வேலையை செய்வதிலேயே செலவழித்தான்………

அவன் போன் செய்தாலும்… “ம்… என்ன ஆபீஸ் போறியா… அப்பா…. சாப்பிட்டாரா..” என நார்மலான கேள்விகள் மட்டுமே…..  இன்றும் அழைத்திருந்தான்…. ‘என்ன.. ஏது..’ என பேசி வைத்து விட்டான்…

இவளும் எதுவும் கேட்க்காமல் வைத்துவிட்டாள்…. கைலாஷிற்கு வந்த  வேலை முடியவும் தான் ‘அப்பாடா’ என்றானது…..

அவளுடைய நினைவு வந்தது….. விடியோ கால் செய்தான்…..  அவள் ஆபீஸ்ல் பிஸி…. டைம்மிங் டிபரென்ட்… தெரியாமல் செய்துவிட்டான் அப்புறம் தான் உணர்ந்தான்…..

பார்த்தவளும் திரும்ப கூப்பிடவில்லை….. இரவு தான் தோன்றியது …. ஆனால்…. இப்போது அவன் கிளம்பி இருப்பான் என அமைதியானாள்….

தூக்கம் வராமல் தங்களது கல்யாண போடோஸ் பார்த்துக் கொண்டிருந்தாள்….. மிகவும் டிஸ்டர்ப்டாக… இருந்தால்…. தன் வாட்சப் ஸ்டேட்ஸ் போட்டோ மாற்றினாள்…..

தான்… முதலிரவில் அவனின் போடோ உடன் எடுத்துக் கொண்ட…. செல்பியை வைத்தாள்…. அதனை தொடர்ந்து வந்தது அவனின் நினைவுகள்….

எப்போது தூங்கினாள் தெரியாது….  காலையில் எழும் போதே ஒரு உற்சாகம் அவளை தொற்றிக் கொண்டது….. இன்று வந்து விடுவான் அவன்….. என நினைத்து நினைத்து…. எல்லா வேலையும் செய்தாள்..   

கைலாஷ் அன்று மாலை வீடு வந்தான்….. அவனிற்காக வீட்டில் இருந்தாள்…. அகல்யா… அவன் அன்று வாங்கி வந்த புடவையில்… நின்றிருந்தால்….

வந்தவனின் கண்கள் முதலில் அவளை தான் தேடியது… இதை அங்கு நின்றே கவனித்த அகல்யா…. கண்ணில்  நீர் வந்தது… என்னவன்… என அவனையே பார்த்து நின்றாள்….

நாகுண்ணா வந்து “வாப்பா….” என்றவர் குடிக்க பழச்சாறு கொடுத்து சென்றார்….

அப்படியே அவளையே பார்த்தபடி…. ரிலாக்சாக சோபாவில் அமர்ந்தான்……

இவளின் முகம் அவனை பார்த்ததும் அப்படி மலர்ந்தது…..கன்னமெல்லாம் சிவந்தது….. இது புதிய அகல்யா அவனிற்கு…. இந்த செம்மையை…. முன்பு ஒரு முறை மட்டுமே பார்த்த நியாபகம்…. மனதில் நிறைவு பிறந்தது….

‘என் பழைய அகல்…’ என உணர்ந்தான்….. அவன் வந்து, இன்னும் அருகில் கூட வரவில்லை அவள்…. அவளை கண்ணால் அழைத்து…. சோபாவில் அமர்த்தினான்…

அவள் கையுடன் தன் கையை பிணைத்துக் கொண்டான்….. அப்படியே சாய்ந்து கண் மூடி அமர்ந்திருந்தான்….. மனதிற்குள் ‘தாங்க்ஸ் காட்….’ என்றான்….. மனதிற்குள் அகல்யாவிற்கும் அதே நிலை தான்……

இப்போது தான் கொஞ்சமாக உணர்த்தி இருந்தான் கைலாஷ்…. தனது பிரிவால், எப்படி அவளை நெருங்கினாலும், விலகும் அவளை…. பிரிந்தே கண்டு கொண்டான்…..     

குருமூர்த்தி வரும் அரவம் தெரிந்தது… கையை விட மனமில்லை…. அவளை பார்த்தவாறே எழும் போது….. குருமூர்த்தி வந்தார்…. அவரை பார்த்து பேசி, மேலே சென்றான்……

ரெப்ரெஷ்ஷாகி ஒரு ஷார்ட்ஸ் டி.ஷிர்டில் இறங்கி வந்தான்….. வாயில் வேறு விசில் சத்தம்…. அகல்யா, எல்லாவற்றையும் டைன்னிங் டேபிள் மேல் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்…. அத்தோடு கூட அவனையும் பார்த்துக் கொண்டிருந்தாள்

அவன் நல்ல கலர்…. இப்போது அது இன்னும் அதிகாமாகி இருப்பது போல் அவளிற்கு தோன்றியது…. இன்னும் இளமையாக தெரிந்தான்…. அவளை வேறு இப்போது பார்த்து கண் சிமிட்ட….

அவள் வேறு புறம் திரும்பிக் கொண்டாள்………..

குருமூர்த்தியும் வந்தார்….. இருவரும் சேர்ந்து உணவு உண்டு…. பேசிக்கொண்டிருந்தனர்….. குருமூர்த்தி படுக்க செல்ல….

“அகல்….” என இவளை அழைத்தே மேலே சென்றான்….. கைலாஷ்.

அகல்யா உண்டு….நாகு அண்ணாக்கு உதவி….. என மேலே வர லேட் ஆக….. உறங்கியே விட்டான் கைலாஷ்….

உள்ளே வந்தவள் அவன் உறங்குவதால் அவன் முகம் பார்த்து நின்றால் சிறிது நேரம்…. அங்குள்ள சோபாவில் கால் நீட்டி அமர்ந்து….. தலை சாய்க்க அப்படி ஒரு நிம்மதி தன் மணாளனை பார்த்ததும்…. தன்னை அவன் தேடுகிறான்…. என்ற இனிமையிலே… அப்படியே கண் அசர…..

அப்படியே அவளை…. தன்னிரு கைகளில்…. தூக்கினான்…..  தெரிந்தும் கண் திறக்கவில்லை அவள்…… காது மடல் வரை சிவந்தது….  கட்டிலில் அவளை கிடத்தியதும்…. திரும்பி கண் மூடிக் கொண்டாள்…..

அவள் இடையில் கை கொடுத்து திருப்பியவன்.. அவள் மேல் படர்ந்து…  ‘அகல்….’ என உயிர் தீண்டும் குரலில்….. அழைப்பு ……. அதில் விழி மலர்ந்தால்…. எப்போதும் போல் அந்த கண்களில் வீழ்ந்தான்….

“நான் ரொம்ப பொறுமையா இருந்திட்டேன் டா…. ஐ நீட் யு…. கண்ணாம்மா…” என வார்த்தை திக்கியது….      

அவன் உதட்டின் மேல் விரல் வைத்து…. ‘ஷ்…’ என்றவள்…. அவன் நெற்றியில் முத்தம் வைத்தாள்….  

அதன் பின் அவர்களுக்கு நேரம் போதவில்லை.. இனிதாக அனைத்தையும் சொல்லி தந்தான்…. எங்கும் தளராமல் அவனுடன்…. அமைதியாக பொருந்தி…. தன் நேசம் கொண்டு இணங்கி… கரை சேர்ந்தாள்….     

அன்று முழுவதும் அவர்கள் வேறு உலகில் இருந்தனர்….. என்னவோ பேச்சுகள் நீண்டது….. திரும்பவுமான தேடல் தொடர்ந்தது…. ஒரு நிமிடம் கூட விலகாத நிலை….

அப்போது தான் குளிக்க சென்றாள்…. இவனின் கைபேசியை பார்த்துக் கொண்டிருந்தான் கைலாஷ்….. அப்போது அவளின் டிபி… போட்டோ பற்றி கேட்க….. அதன் பின்னணி பற்றி கூறினால்….

“ப்பா…. இப்படியெல்லாம் உன்ன படுத்தினேனா…..” என விளையாட்டாய் கேட்டு  அதற்கும் இப்போது ஈடு செய்தான்….. திரும்பவும் பிரஷ்ஷாகி வந்தவர்கள்…. அழகான உடையில் வித விதமான செல்பி….

நிறைவான தாம்பத்தியம் அவர்களை இன்னும் இன்னும் அழகாக காட்டியது…..          

5 வருடம் கழித்து

ஹோசஸ்பிட்டலில்….. குருமூர்த்தி அகல்யாவை….. கெஞ்சிக்  கொண்டிருந்தார்…. “என்னாம்மா…. இப்படி பண்ற…. அவன் வந்துடுவாம்மா…. நீ போம்மா…..உள்ள…” என

அந்த ரூமின் வெளியே விசாலாட்சி தனது 3 வயது பேரனை வைத்து சமாளித்துக் கொண்டிருந்தார்….. கைலாஷ் அகல்யாவின் சீமந்த புத்திரன் தான் அவன்…. சாத்விக்…..

பெயருக்கு எதிர்பதம் அவன்…. தன் அம்மாவிற்கு மட்டுமே பயம்…. மற்றபடி அனைவரிடமும் செல்லம்…

அங்கு தனது மாமனாரிடம்… “இப்போ வந்துடுவார் மாமா…. “ என கூறிக் கொண்டிருந்தாள்…. அப்படி ஒரு இடுப்பு வலி, அதனை பொறுத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்…

நர்ஸ் வந்து…. “எல்லா நகையும் கலட்டி கொடுத்துடுங்க…. மணியாச்சு…. உங்களுக்கு ஊசி போட்டாச்சு…. சீக்கிரம்….” என  அதட்ட…

அசரவில்லை அவள்….. கைலாஷ் அவசர அவசரமாக ஹோஸ்பிடல் வந்தவன், வண்டியை டிரைவரிடம் கொடுத்து விட்டு…. அந்த எமர்ஜன்சி வார்டு நோக்கி வந்து கொண்டிருந்தான்….

அப்போது…. அங்கு ரௌண்ட்ஸ் வந்த டாக்டர் விஜயலஷ்மி…. “ஏன் கைலாஷ் இவ்வளோ நேரம்…. பாரு உன் வைப் எல்லோரையும் பயமுருத்திக்கிட்டு இருக்கா…” என சற்று கேலியாகவே கூரி சென்றார்…

அவன் அந்த வார்டு அருகில் வந்ததும்…. அந்த ரூமை எட்டி பார்க்க…. ‘அகல்யா அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தாள்…..’ அவள் முகமெங்கும் வலியின் சாயல்…..

அவளின் வளையல் கழட்ட வராமல்…. அந்த நர்ஸ்… போராடிக் கொண்டிருந்தாள்…..

என்ன செய்வது என்றே தெரியவில்லை…. குருமூர்த்தி தான்…. “சோப் போட்டு கையாட்டுங்க…” என்றார்.   

7வது மாதம் வளைகாப்பின் போது போட்ட வளையல்… இப்போது அவளின் கைகளை இறுக்கி பிடித்து இருந்தது….

கைலாஷை பார்த்த உடன்…. அவள் முகம் அந்த வலியிலும் மலர்ந்தது…. அவளருகில் வந்தவன்….. அந்த நர்ஸ் படும் பாட்டை பார்த்து…

“அகல்…. என்ன… இப்படி தான்…. இந்த நேரத்தில் நடப்பதா…. குழந்தைக்கு எதுவும் ஆயிடாது…..” என்று கோவமாக கூறியவன்…

அதற்கு மாறாக…. “அவள் கை பற்றி…. மென்மையாக…. மிக மென்மையாக அந்த வளையலை கழட்ட தொடங்கினான்….. அந்த வளையலும் அவன் சொல் பேச்சு கேட்டு அவளின் கையிலிருந்து நழுவி வந்தது…..”

பார்த்திருந்த நர்ஸ்…. சற்று சிரித்தாவாறே…. ஏற்பாடுகளை கவனிக்க சென்றார்…..

திட்டும் அவனையே பார்த்திருந்தாள் அகல்யா…. அவனே தொடர்ந்து…”ரொம்ப படுத்தற டி….” என்றான்.. செல்லமாக….

கண்ணில் நீரே வந்துவிட்டது அவளிற்கு…. அத்தோடு அவனை பார்க்க… “சரி….. பத்திரமா… குழந்தையோடு வா…..” என தனது மனையாளின் முகம் பார்த்து சமாதானம் செய்து…                          

நெற்றியில் முத்தம் வைத்தவன் அவள் முகம் பார்க்க…. ஒரு சிரிப்பு மட்டுமே…. .அதில் அவளின் நேசம் மட்டுமே தெரிந்தது……

ஒருவாறு சமாதானம் செய்து அனுப்பி வைத்தான்… லேபௌர் வார்டுக்கு…. அடுத்த கொஞ்ச நேரத்தில் ஒரு நர்ஸ் வந்து “உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு” என சொல்லி சென்றார்…  

அந்த இடத்தில், தன் மகனுடன் சேர்ந்து… சின்னதாக ஒரு குத்து டான்ஸ்… ஆடினான் கைலாஷ்…   

இப்போது தான் கொஞ்சமாக தன்னை வெளிபடுத்த தொடங்கி இருந்தான் கைலாஷ்…. அது தான் இப்படி….

அகல்யாவின் சீண்டல்களை எல்லாம் கைலாஷ் இப்போது…. நிறையவே ரசித்தான்…. அவளிடம் தான், தோற்பதையே விரும்பினான்     அகல்யாவின் கைலாஷ் ….

புரிதல் உள்ள இடத்தில் யார் தோற்றாலும் நிறைவே…..

 

“புள்ளி சேர்ந்து.. புள்ளி சேர்ந்து.. ஓவியம்……….

உள்ளம் சேர்ந்து.. உள்ளம் சேர்ந்து.. காவியம்…..

கோடு கூட ஓவியத்தின் பாகமே……

ஊடல் கூட…. காதலென்று ஆகுமே…..

ஒரு வானம் வரைய… நீல வண்ணம்…..

நம் காதல் வரைய… என்ன வண்ணம்…..

என் வெட்கத்தின் நிறம் தொட்டு….

விரலென்னும் கோல் கொண்டு… நம் காதல் வரைவோமே வா…. அ….

பூ… வாசம்…. புறப்படும் பெண்ணே….. நான் பூ வரைந்தால்…

தீ….. வந்து விரல் சுடும் கண்ணே…. நான் தீ வரைந்தால்……”

               

$$$சுபம்$$$

 

 

           

  

  

   .

       

Advertisement