பூக்கள்-13
“கரு கரு கண்களால் கயல்விழி கொல்கிறாள்……
வலித்தாலும் ஏதோ சுகம்…..
குழி விழும் கன்னத்தில்… குடி இரு என்கிறாய்…..
விலையில்லா…. ஆயுள் வரம்….
ஓ….. நிலா தூங்கும் நேரத்தில்…. காண காணும் நேரத்தில்….
அவள் தானே வந்தாள்….. அணைக்காமல் சென்றாள்…..
ஓ….. இமை இரண்டும் மூடாது…. உறக்கங்கள் வாரது….
அதை காதல் என்றாள்…. அவள் தானே தந்தாள்…..
நடந்தாலும் முன்னே கடந்தாலும் பின்னே…..
மனம் எங்கும் அவள் நியாபகம்…..
மழை வர போகுதே…..துளிகளும் துருதே …..
நனையாமல் என்ன செய்வேன்……”
கல்யாணி இப்போதெல்லாம்…. இரண்டு நாளிற்கு ஒரு தரம் போன் செய்ய மறப்பதில்லை அகல்யாவிற்கு…… அவளிற்கும் இது…. ஆச்சிரியமான விஷயம்….. தான் ஆனால் யோசிக்கவில்லை…..
சுப்ரமணித்திற்கும், காயத்ரிக்கும் இது அறவே பிடித்தம் இல்லை தான்…. ஆனால், சொல்லி கேட்பவர் இல்லையே கல்யாணி….. ஏதோ தன் ஆதங்கத்தை தீர்த்துக் கொள்ளவார் போலும்….
இப்போது அதே தான் நடந்தது…… ‘எப்போ விருந்துக்கு வரே…’ என கேட்டு கேட்டு…. அவளிற்கு போன் செய்தார்…. அப்போது தான் கைலாஷ் அந்த வார்த்தையை சொன்னது….
இவரும் போன் செய்யும் போதெல்லாம் ‘நீ பாவம் தனியா என்ன பண்ணுவ….. கைலாஷ் உன்ன நல்ல பார்த்துக்கிறாரா….’ என இது போன்ற வார்த்தைகளை திரும்ப திரும்ப பல மாடுலேஷனில் கேட்க தான் செய்கிறார் கல்யாணி
அகல்யாவும் ‘வரேன் பெரிம்மா…. அவர்கிட்ட கேட்டு சொல்றேன்….’ என பலவிதமான சமாளிப்புக்கு நடுவில்….. தன் விஷயத்தையும் துளியும் கசிய விட வில்லை அகல்யா…..
ஒரு தரம் தன் அம்மாவிடம் கேட்டும் விட்டாள்….. ஆனால் அவரும் கைலாஷ் சொன்னதையே திரும்ப சொல்ல….. இப்போது சண்டையின்…. போது கைலாஷும் அதையே சொல்ல….
என்னவோ… என்னவோ… என தன் பெரியம்மாவை கைலாஷிற்கு பிடிப்பதில்… என்னவோ என்னவோ… எண்ணம் தீவிரமானது…. அதே யோசனையுடன் வாங்கிய அடி கூட மறந்து போனது……
ஏதோ உண்டேன் என பெயர் செய்து…. உண்டு வந்தவள் தான், தன் மாமனார் அறை சென்று பார்த்து விடு…. மேலே வந்துவிட்டாள்…
வந்தவளுக்கு, அவன் இன்று தன் அருகில் இல்லை என்ற எண்ணமே…. ஏதோ போல் இருந்தது….. எப்போதும் தான் உறங்கிய உடன் தான் வருவான் என தெரியும்…..
சில நேரங்களில் விழித்தே கண் மூடி படுத்திருப்பாள்….. அதனால் அவன் நடமாட்டம் அவளால் உணர முடியும்…. எப்போதும் இவள் ஒரு பக்கம் அவன் ஒரு பக்கம் தான் படுப்பது….. ஏனோ.. எங்கும்… அவன் பார்வை கூட அவளை உரிமையாய் தீண்டவில்லை…. அவனின் சலனமில்லா மனது…. அவளை ஒரு வகையில் ஈர்க்க தான் செய்தது….
இப்போது… அவன் படுக்கும்….. அதே இடத்தில் அவனை போல்….. இரண்டு கைகளையும்…. மேலே தூக்கி, நிமிர்ந்து படுத்துக் கொண்டாள்…..
அவன் இடத்தில்…. அவனை போல் சயனம்…. அவனை சார்ந்து…. அவன் சார்பாக யோசிக்க சொன்னதோ…. அவளை
அவனின் கடந்த கால வாழ்க்கை குறித்து தான் பேசியது தவறு என தான் தோன்றியது…….. ஆனாலும், ஏதோ ஒரு வகையில்…. அவன் மனதிலிருப்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என தான் தோன்றியது…..
பெண்களின் எண்ணம் எப்போது.. எதிலும்.. ஆழம் தான் செல்லும்…. அவ்வகையே அகல்யா….அவன் தன்னை பார்க்க வேண்டும்.. பேச வேண்டும்.. என நினைக்கவில்லை…. அவன் மனதிலிருப்பது வெளியே வரவேண்டும் என தான் நினைத்தாள்…
அந்த வகையில்….. அகல்யாவிற்கு நிம்மதியே…. ஏதோ அவன் தன் முகம் பார்த்த நிம்மதி…. அவளிற்கு…
கொச்சினில் இறங்கிய கைலாஷ் நேராக, தங்களின் ரெகுலர் ஹோட்டலுக்கு சென்று விட்டான்… கொஞ்சம் ரெப்ரெஷ் ஆனா பிறகு… தன் தந்தைக்கு போன் செய்ய…..
அவர், அவன் மேல் உள்ள கோவத்தில் எடுக்கவே இல்லை…… ஒன்று இரண்டு முன்று என கால் சென்றது தான் மிச்சம்…… இவனும் வாட்ஸ் அப்பில்….. “அப்பா…. ப்ளீஸ்….” என அனுப்ப….. ப்ளூ டிக் மட்டும் வந்தது…..
பொறுக்க முடியாமல்….. நாகுவிற்கு அழைத்தான்… நடு இரவு என கூட பாராமல்…. என்ன செய்வது…. தன் மனையாளின் நம்பர் தெரியாது….
நாகு “என்ன தம்பி….” என கேட்க….
சற்று சங்கடமாக கூட இருந்தது…. ‘என் மனைவி நம்பர் தெரியாது கொடுங்க என கேட்க…..’ ஆனால் இதையெல்லாம் பார்த்தால்…. இப்போது வேலையாகாது என நினைத்தவன்…..
“ண்ணா…. அகல்யா நம்பர் இருக்காண்ணா….” என தயங்கி… தயங்கி… கேட்க….
“இருங்க தம்பி…” என சொல்லி தனது சிறிய நோட்டில் இருந்து அகல்யாவின் நம்பர் எடுத்து…. சொல்ல… சொல்ல…. இவன் குறித்துக் கொண்டு…. “சாரி ண்ணா….” என லேசாக வழிந்தவாறே போனை கட் செய்தான்…
முகமெல்லாம் வியர்த்துவிட்டது…. ஏதோ திருட்டு தனம் செய்வது போலே…. சிரித்துக் கொண்டான்….. தன் நிலையை நினைத்து….
இப்போது அவளின் எண்ணுக்கு அழைக்க….. அது என்கேஜிடு டோன் வந்து செகண்ட் காலில் போக…..
இப்போதும் சிரிப்பு….. எப்படி தான்… இப்படி அர்த்த ராத்திரியில் கூட பேச முடிகிறதோ….. அதுவும் ஒரு அடி வேறு வாங்கி இருக்கிறாள்…. என கொஞ்சம் வலியுடன் நினைத்தான்.
என்ன தான்.. அவள் பேசி இருந்தாலும் அவளை அடித்திருக்க கூடாது….. அப்படியே அந்த முகம்…. சிவந்து போய்…. சிரிதாகிவிட்டது…
‘ப்பா அந்த கண்ணு மட்டும்…. அப்படி ஒரு பார்வை…. ‘ஏன் என்னை அடிச்ச.. என்பது போல்…. ‘என்பதை ரசனையாக தன்னுள் அசை போட்டுக் கொண்டிருந்தான் கைலாஷ்….
ஆனாலும், கொஞ்சம் அதிகமாக் தான் பேசிட்டா….
எப்படி இப்படி கேட்க முடிகிறது…. என ஒரே யோசனை….. அதை நினைக்க நினைக்க…. அவள் கேட்டது சரிதானோ….. என ஒரு எண்ணமும் வர…. அதெப்படி எல்லாம் தெரிந்தும்…. அப்படி கேட்கலாம்…. என
அந்த ரூம்மையே அளந்தான்….. நடக்கும் போதே…. அவளின் எண்ணிற்கு அழைக்க….. இப்போது ரிங் சென்றது….. அவள் எடுத்து….. “ஹலோ…..” என்க….
இவன்…. “அகல்யா……” என்றான். ஒரு இறங்காத குரலில்…..
அதை கேட்ட உடன் இவளிற்கு கோவம் தான் வந்தது…. ஆனாலும் காட்டாமல்…. “யார்….” என்றாள் இவளும்….
“நா… நான்… கைலாஷ்….அகல்…..” என்றான் சிரிதாகிவிட்ட குரலில்.
“ம்ம்….. எப்போ ரீச் ஆனிங்க” என்றாள்
“இப்போதான்…..”
அவளை இயல்பாக்க…. “அப்பா என்ன தூங்கிட்டாரா….. பார்த்துட்டு வரியா…” என்க…
“ஏன்…. என்னாச்சி….” என்றாள் பதட்டமாக.
“ஹே…. ஒண்ணுமில்ல… என் கால்ஸ்சை அட்டென் பண்ணல, அதான்….” என்றான் எப்படி அவளிடம் சொல்வது உன்னை அடித்ததால் என்னிடம் இன்னும் பேசவில்லை அவர் என…..
“ஒ…. தூங்கி இருப்பாங்க….” என்றாள்
“இல்ல நீ… கீழ போய் பாரு..” என்றான். சொன்ன சொல் மீறாமல் கீழே போய் அவரின் அறையில் பார்க்க….
அவர் படுத்திருப்பது போல் தான் தெரிந்தது…. உடனே இவள் “தூங்கறாங்க…” என ஹஸ்கி வாய்சில் சொல்ல….
அதற்குள் இவளின் பேச்சு தெரிந்து எழுந்த குருமூர்த்தி… “அகல்யா… என்னம்மா…” என குரல் கொடுக்க…
கைலாஷிடம் “இருங்க…..” என கூறி
“இந்தாங்க மாமா…. அவர் உங்க கிட்ட பேசனும்மா….” என்று போனை அவர் புறம் நீட்ட….
லேசான சிரிப்புடன் போனை வாங்கியவர்….” ஏம்ம்ப்பா….. அவளை கூப்பிடாட்டி என்ன…..” என இயல்பாக கேட்க..
கைலாஷ் “சாரி ப்பா…. ஏதோ, தெரியாம…. இனி அப்படி நடக்காது… ப்பா…. சுயூர்ப்பா…. “ என, தவறு செய்த பிள்ளையாகவே கேட்க….
என்ன சொல்லுவார் அந்த இரவில்…. தன் பையனை நினைத்து பெருமை தான் கொண்டார்….. “சரி ப்பா….. சரிப்பா….. நாளைக்கு மீட்டிங் நல்லபடியா முடிச்சுட்டு வா….. தூங்குங்க இரண்டு பேரும்….. அப்புறம் காலையில் பேசலாம்…..” என்றவர்….. “இரு மருமக பொண்ணு கிட்ட கொடுக்கிறேன்….” என்றவர்
“இந்தம்மா….. பேசிட்டு சீக்கிரம் தூங்குங்க….” என செல்ல அறிவுரை சொல்லியே போனை கொடுத்தார்
வாங்கிக் கொண்டு பேசியபடியே மேலே சென்றவள்…. “சரிங்க….. பாய்…. குட் நைட்….” என்க
அவன் அமைதியாக இருக்க….. அவள் அந்த புறம்… நகரும் வரை அமைதியாக இருந்தவன்…… பின்பு “தேங்க்ஸ்…. அகல்….” என்றான் ஒரு அழ்ந்த குரலில்….
“எதுக்கு தேங்க்ஸ்….”
“அதெல்லாம் கேட்க கூடாது….. ஏன்னா…. எப்படி சொல்லறது… ம்ம்… என்னால் எக்ஸ்ப்ளேன் எல்லாம் பண்ண முடியலை….. அது அப்படி தான்…” என்றான் ஒரு தயங்கிய குரலில்…..
“இதெல்லாம் தெரியாது… ஆன அடிக்க மட்டும் முடியும்…..” என்க
இப்போது இவன் “நீ பேசினது தப்பு தானே….” என அன்பாகவே சிரித்துக் கொண்டே கேட்க…..
“நீங்க தான் அப்படி பேச வைச்சிங்க…… அதற்கு நான் பொறுப்பு கிடையாது….” என்றாள் அவளும் ஒரு சின்ன கோப குரலில்…..
“ஷப்ப்பா….. என்னம்மா பேசற…… கண்டிப்பா நீ வேலையை விட்டுட்டு…. அப்பா ஆபீஸ் போற….” என்றான் காரியத்தில் கண்ணாக…..
“அப்பா….. உங்களுக்கு…. லவர் ரோல்லே செட்டாகல….. நீங்க பெர்பக்ட் ஹஸ்பன்ட் ரோல்லுக்கு தான் சரி….”. என சிரித்துக் கொண்டே கூற…..
இவளிடமிருந்து இப்படி ஒரு வார்த்தையை அவன் எதிர்பார்க்க வில்லை…. ஏதோ காலகாலமாக வாழ்ந்தவன் போல் அடிக்க மட்டுமே செய்தவனால்….. பெர்பெக்ட் கணவன் என்ற வார்த்தையை கேட்கவும் பெரிய தடுமாற்றம் அவனுள் “ஆர் யு மிஸ் ஹிம்…..” என ஒரு தடுமாற்ற குரலில் கேட்க…..
“தெரியல ங்க….. ஆனா, கொண்டு வந்துடுவேன்….. ஆம் ஸ்ட்ரோங் தட் ஒன்…” என குரலில் திடம் கூட்டி சொல்ல…..
கைலாஷ் அமைதியாக…. “ம்ம்…நான்…. நா…. வீட்ல… இன்னிக்கி தான் அதிகமா பேசி இருக்கேன்…. இப்போவும் கூட….” என சிறிது நேரம் அமைதியாக இருந்தவன்… நானும்… அப்பாவும்… பேசுவோம் ஆபீஸ் பத்தி மட்டும் தான்…..
இன்னிக்கி உன் கூடதான்…. ரொம்ப நேரம் பேசி இருக்கேன்…. இது உனக்கு புரியுமா… தெரியலை…… ஆனா…. அம்மாவின் முகம் கூட நினைவில் இல்ல… ம்ம்…. அப்போதிலிருந்து பேச்சும் குறைந்து விட்டது….. எப்பவும் நான் தனி தான்….. என்.. என்னால சீக்கிரமா நெருங்க முடியல…. என்ன சொல்ல….. அப்படியே போகுது லைப்…. “ என ஒட்டாத குரலில் சொல்லியவன்….. “இப்போவும்…. உண்மையை சொல்லவா…..“ என்றான்.
இவளே அவசரமாக “ஏன்….னா… இன்னும் நான் உங்க மனசுல இறங்கல….. அதானே….. “ என்றாள் மெல்லிய குரலில்…..
அந்த பக்கம் அமைதி….இவள் தன் எல்லா குறைகளையும் பொறுத்து போகிறாள் என நினைத்து…. சந்தோஷப் படுவதா….. இல்லை அப்படி ஒரு நிலையில் அவளை நான் வைத்திருக்கிறேன் என தன்னை நினைத்து வருத்தப்படுவதா….. என அமைதி….
திரும்பவும் அவளே ஏக்க குரலில் “தெரியும்….. இந்த கண் என்னை பார்க்கல…. நான் பீல் பண்ணேன்…. “ என இடைவெளி விட்டவள்…
“ஆனா அப்படியே எல்லாம் விட மாட்டேன்……” என்றாள் பிடிவாத குரலில்…..
ஒரு இரண்டு நிமிடம் ஆனது அதனை, அவன் உள் வாங்க….. “விட்டுடாத……. டி…. “ என கர கரத்த குரலில் சொல்லியவன் தான் பேச நினைக்கவில்லை…..
அமைதி அமைதி…. நடு கடல் போல் அமைதி…. ஒரு பயம்…. கட்டாயமா…. நேசமா…. புரியவில்லை கைலாஷிற்கு…. ஆனால் ஒரு மனம் வேண்டுமென கேட்க… நான் ஆசைப்பட்டது இதுவாக தான் இருக்குமோ..
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்…. என்னை கண்மூடி நேசிக்கும் அவளிற்கு தான் தருவது….. வெறும் வெறுமை மட்டுமே…..
இப்படி அல்ல நான்….. என யோசிக்க தொடங்க….
அங்கு அகல்யாவிற்கு கண்ணில் ஆனந்த கண்ணீர் வந்தது….. “ம்ம்….” என்றாள்.
அந்த “ம்….” என்பதில் தெளிந்தவன்….
கொஞ்சம் உற்சாகம் ஆனான் கைலாஷ்….. கேள்வி கேட்காத அன்பு அவனுள் ஒரு உற்சாகத்தை தந்தது…. “ம்…. அப்படியா….. என்னை அவ்வளவு பிடிக்குமா…. ப்ரொபோஸ் மீ…..” என்றான்.
இவன் தன்னை மீட்டுக்க் கொண்டு….. அவளை சீண்ட….. அகல்யா…. அமைதியானாள்….. அவளிற்கு கைலாஷ் பேசாத வரை தெரியவில்லை…. ஆனால்…
இப்போது தன்னை அடித்தது…. தன்னை கட்டளையுடன் டிரைவிங் போக சொன்னது…. இதோ இப்போது, தன்னிடம் உருகும் குரலில்…… அப்படியே விட்டுடாத….. என கேட்டது….. இப்போது அதெல்லாம் விட ப்ரொபோஸ் செய்ய சொல்வது எல்லாம் சேர்த்து…. அவளை நிலை குழைய வைத்திருந்தது…
அதனால்…. இவள், அழுது கொண்டே “ம்கூம்…. “ என வார்த்தை வராமல் இழுக்க……
கைலாஷ்…. அவளின் நிலை உணர்ந்து….. “அகல்….. ஏய்….” என்றான் உருகும் குரலில்…..
அவளிற்கு அதிர்ச்சி….. அவள் அமைதியாக இருக்க….
“கண்ணம்மா….. வீடியோ கால் பண்ணறேன்….. எடுடா…” என்க….
இப்படியெல்லாம் பேச தெரியுமா…. இவனிற்கு என… இவள்…. “ம்.. கூம்…. நான் அழுத்துட்டு இருக்கேன்…. காலையில் பேசறேன்…..” என்க
இவன் “நான் பார்த்து சொல்றேன்…. நீ அழகா இருக்கியா… இல்லையானு…” என வம்பு செய்ய…..
“அந்த சான்ஸ் எல்லாம் இப்போ உங்க கையில இல்ல….. இப்போ நான் எப்படி இருந்தாலும்…. அழகா இருக்கேன்னு தான் சொல்லியாகனும்….” என சிரித்தபடியே சொல்ல…
“ம்…. ஹ… ஹா…. அப்படியா….” என்று சிரித்தவன்…..
“இன்னும் தூங்கல…..” என்று கைலாஷ் கேட்க…
“இல்லயே….” என்றவள்…. “சரி நான் வைக்கவா….. நாளைக்கு ஆபீஸ் இருக்கு….. லேட் ஆகும்…..” என்றாள் சிறிதாகி விட்ட குரலில்…
இப்போது தான் நிமிர்ந்தான்….. “லேட் ஆகுதா….. ரொம்ப பேசிட்டேனோ…..” என்றான் சிரித்தவாறே…..
“இப்போதான் பேசவே செய்றீங்க….. ன்னு நான் நினைச்சேன்….” என்றாள்…
ஒரு வழியாக போனை வைத்து இருவரும் படுத்த போது விடிந்து….. விட்டது……
“மழை வர போகுதே…..துளிகளும் துருதே …..
நனையாமல் என்ன செய்வேன்……
மலர்வனம் மூடுதே… மதுரமும் ஊருதே….
தொலையாமல் எங்கே செல்வேன்…..
ஓஹோ….. முகில் போன்ற மென்பஞ்சால்….
மிதக்கின்ற என நெஞ்சை….
எதை செய்து மீட்ப்பேன்….
எவர் சொல்லி கேட்பேன்….
ஒ…. கடல் போன்ற கண்ணாலே
எனை வாரிச் சென்றாலே….
இழந்தேனே…. இன்று….
இருந்தாலும் நன்று…..”