Advertisement

பூக்கள்-12

அன்று ஆபீஸ் சென்ற அகல்யாவிற்கு….. ஏக வரவேற்பு….. இவளின் ஜூனியர் எல்லாம் சேர்ந்து கொண்டு…. அவளின் முகத்தை உத்து உத்து பார்த்து….. செம கமென்ட்…… ஒரு ஐந்து பேர்…..

அகல்யாவின் சீனியர் எல்லாம்….. நின்று வேடிக்கை பார்த்தனர்….. எங்களை எப்படி படுத்தின….. இப்போ பதில் சொல்லு என்னும் விதமாக……

அவளின் டீம் லீட் வேறு…. ஒரு கேர்ள்…. இன்னும் திருமணம் ஆகவில்லை….. உள்ளே வரும்போதே….. ஒரு உஷ்ண பார்வை….. இவளை பார்த்து விட்டு போக….. சுற்றி இருந்த அனைவருக்கும் சிரிப்பு…. அகல்யாவின் ஆபீஸ் இப்படி….. மழையும் வெயிலும் கலந்து கட்ட…..

இங்கு கைலாஷின் ஆபீஸ்ல்….. உதட்டோரம் புன்னகையில்….. கலையான முகத்துடன் வந்த  கைலாஷை பார்த்த சம்பத்துக்கு….. அப்பாடா…. இன்னிக்கு, கொஞ்சம் நல்ல மூட் போல….. என நினைத்து சிரித்தபடியே “குட் மோர்னிங் பாஸ்…..” என்றான்.

கைலாஷ் முன்பு போல்….. அமைதியாக வேலை தொடங்க….. அங்கிருந்த அனைவருக்கும் அந்து உற்சாகம் தொற்றியது…..

இந்த கொஞ்ச நாட்களாக தான் கைலாஷ் அனைவரையும்…. பிழிந்து எடுப்பது….. அதிலும் அந்த மார்கெடிங் செஷன் மக்கள் தான் அதிகமாக அவனிடம் மாட்டினர்……

அங்கங்கு கமிஷன் பேசிஸ்சில்….. ஹோட்டல், டாக்ஸி, ரூம், கைடு…. என ஏற்பாடும் செய்து தர வேண்டும்….. வெளியூர், வெளிநாடு என எல்லா இடத்திலும் ஆள் பலம்…..வேண்டும்.

கூடவே அங்கு தங்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு எந்த விதமான….. அசம்பாவிதமும் நடக்காமல் பார்க்க வேண்டும்….. சில சமயம்…… செல்லும் இடங்கள் ஆபத்தானது என தெரிந்தாலும்…… ‘நம் மக்கள் இவ்வளவு தூரம் வந்துட்டோம் இதை பார்க்கலைனா எப்படி’ என கைய்டையும் சேர்த்து இழுத்து செல்வது

என நிறைய விஷயங்களில் ரிஸ்க் எடுப்பவன் தான் கைலாஷ்….. இந்த மாதிரி சமயங்களில் தனது போன் கால் மூலமாக கூட அனைத்து பிரச்சினைகளையும் சமாளிப்பவன் தான்…..

ஆனால், ஒரு பெண்ணின் விஷயத்தில்…… ஏமாற்றப்பட்டோம் என உணர்ந்தான்….. அதனால் தான்….. ‘நாம் நம்பிக்கை இழக்கும் சமயம் தான் கோவம் வரும்…..’ அதே தான் கைலாஷிற்கு நடந்தது….. என்ன கோவம் ஆபீஸ்ஸில் காண்பித்தான் அவ்வளவு தான்

இதோ.. இப்போது சற்று தெளிவான கைலாஷை பார்க்கவும் அனைவரும்.. ஒரு பெருமுச்சு விட்டனர்…… இனிமேலாவது….. பாஸ் இப்படியே இருக்க வேண்டுமென…..   .

இப்படியே அன்றைய நாள் அகல்யாவிற்கு கல கலப்பாக, கைலாஷிற்கு உற்சாகமாக செல்ல….. மாலை அகல்யா மிகவும் உற் சாக மனநிலையில் சரியாக 6:15க்கு வந்தாள் வீட்டிற்கு…….. பார்த்தால், தனக்கு முன் தன் கணவன்….. வீட்டில்…..

‘என்னடா…. இது  இந்த நேரத்திதில் வீட்டில் இருக்க மாட்டானே…. என உள்ளுக்குள் ஒரு எண்ணம்….’ ஒரு குஷி வர….. ‘அப்படி போடு….. போடு….. அசத்தி போடு கண்ணாலே…… ‘ என பாடிக் கொண்டே மேலே ஏற….. பார்த்துக் கொண்டிருந்த கைலாஷிற்கு….. உதட்ரோர புன்னகை…..

கைலாஷ் மதியம் வரவில்லை….. காரணம் இன்று அவன்….. இரவு கொச்சின் செல்கிறான்….. அதனால் வேலையெல்லாம் முடித்து, கிளம்புவதற்காக சீக்கிரம் வந்தான்…..  

மேலே சென்று….. அவள்…. கண்ணாடியை பார்க்க….. அங்கு  தன் ஸ்லிப்…. இல்லை…. அவளிற்கு பார்த்தவுடன், பார்த்துட்டான்…. பார்த்துட்டான்….. என்னோட ஸ்லிப்பை பாத்துட்டான்…… என குதியாட்டம் போட்டது மனது…..

அதே…. எண்ணத்துடன் ப்ரஷ்ஷாகி…. ஒரு சாதரான சுடியுடன்…. தன் அம்மாவிடம் போன் பேசிக் கொண்டே கீழ் இறங்கி வந்தாள்….

ஹாலில் கைலாஷ் அமர்ந்திருப்பதை பார்த்து…. நேரே…. கிட்சென் சென்றவள்….. நாகுவிடம் ரகசிய குரலில்….. “அவர் டீ குடிச்சாரா……” என கேட்டாள்.

அவரும்…. “தம்பி எல்லாம் சாப்டாச்சும்மா….. உனக்கு என்ன வேணும்….” என்றார் சிரிப்புடன்.  

“டீ… தாங்கண்ணா….. “ என்றாள்

அவர்…. “இரும்மா…. வட போடுடிருக்கேன்… இரண்டு சாப்பிட்டு…. அப்புறமா டீ…..” என்றார்.

“சரிண்ணா….” என்றவள்…. டைனிங்க டேபிள்லில் அமர்ந்து…. இன்னும் போனில்… தன் அம்மாவுடன்…. ஆபீஸ்ல் நடந்த கலாட்டாக்கள்….. என்ன டிரஸ் போட்டு சென்றாள்…. என்ன வேண்டும் தனக்கு… என இப்படியே பேச்சு நீண்டது…                           

இவள் கீழே வரும்போது…. அவனும் போன் பேசிக் கொண்டிருந்தான்….. ஆனால், சத்தமே இல்லாமல்…..

இவள் தன் அம்மாவிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டே பேசுவதை பார்த்தவன்…. அமைதியான குரலில் பேசி வைத்துவிட….. அவளின் பேச்சு இன்னும் நீண்டது…..

ஒரு செரில் அமர்ந்து…. இன்னொரு செரில் கால் நீட்டி… ஆட்டிக் கொண்டே….. அவள் அந்த காலை ஆட்டும் போதெல்லாம்…. அந்த மெல்லிய கொலுசு சத்தம் கேட்க….. இவளோ.. ஒரு நீரோடை போல் சலசலவென பேசிக் கொண்டிருக்க…..

இவன் காதுகளுக்கு….. புதிய இசை….. அவளின் முகம் தெரியவில்லை….. அந்த கால்கள் மட்டும் தெரிந்தது அவனிற்கு….

சந்தன நிறத்தில்…. டார்க் பிரவுன் நிற நெய்ல் பாலிஷ் வைத்த நீண்ட.. நீண்ட… விரல்களில், நடு விரலில்…. ரெட் நிற கல் வைத்த….. மெட்டி அவளின் பாததிற்கே அழகு சேர்க்க….

அதை பார்த்தவன் இன்னும் தொலைந்து போனான்.. அவள் பாதத்தில் மட்டும்….. அவனது கவனம் அங்கு இங்கு நகரவே இல்லை……

அப்போது,அவனின் அப்பா…. குருமூர்த்தி உள்ளே வந்தார்…. அதை கூட கவனிக்கவில்லை…. அவன், அவற்கு இந்த ரகசியம் தெரியாதே….. “என்னப்பா…. எப்போ கிளம்பனும்…. எப்போ வருவ….. “என கேட்க…

“என்னப்பா…. “ என சிரித்தமுகமாகவே திரும்பினான் கைலாஷ்.

மனதில் நிம்மதியாக உணர்ந்தவர்….. “இல்லப்பா…. எப்போ கிளம்பனும்னு கேட்டேன்…” என்றவர்….. ஹால் சோபாவில் அமர….

இப்போது தான் அகல்யா போனை கீழே வைத்திருக்க….. குருமூர்த்தி குரல் கேட்டு அங்கு வந்தாள்…. வந்தவள் தன் மாமனார்க்கு… வேண்டியது செய்ய செய்ய….. இவன் பார்த்துக் கொண்டே இருந்தான்….

கொஞ்சம் ஓரமாய்  பொறாமை வந்ததோ….

அவள் அந்த பக்கம் சென்றுடன்….. “ஏன் ப்பா….. கார் டிரைவிங் தெரியுமா ப்பா அவளுக்கு…… “ என்றான் சற்று மெதுவான குரலில்…

அவனை சிரிப்புடன் பார்த்தவர்….. “உன் பொண்டாட்டிய பத்தி எங்கிட்ட கேட்குற….” என்றவர்.

பேசிக் கொண்டிருக்கும் போதே….. “ஏம்மா அகல்யா உன் புருஷன் என்னமோ கேட்கிறான்….” என்றார் கண்ணில் சிரிப்புடன் வார்த்தையில் கேலி மட்டும் இருந்தது…

அகல்யாவிற்கு சற்று தர்ம சங்கடம்….. கைலாஷ் தன் தந்தை எதிரில் எதுவும் சொல்லாமால்….. “உனக்கு….. டிரைவிங் தெரியுமா……” என்றான்.

கைலாஷ் அவன் பங்கை சரியாக செய்துவிட்டான்….. ஆம், தன் தந்தையின் முன்  கட கடவென எப்படி இவனால் பேச முடிகிறாது…… என அகல்யா தீ பார்வை பார்த்து நிற்க…..

நான் எத்தன நாள் இவன் முகம் பார்த்திருப்பேன்….. ஒரு முறை கூட நிமிர்ந்து பார்க்காதவன்….. ஏதோ இண்டர்வியு…. செய்வது போல….. இப்போது கேட்கவும்  அப்படியொரு கோவம் வந்தது…… அவளிற்கு

முகமெல்லாம் சிவந்து விட்டது….. அவளை பார்த்த குருமூர்த்தி…… எழுந்து சென்று விட்டார்…. தன் அறைக்கு…..

அவளின் முகம் பார்க்க…. அவள் படியேறி சென்றுவிட்டாள்….. அந்த நேரம் அவளின் போன் அலறியது…. நேரம் காலம் தெரியாமல்…..

அவள் கீழிறங்கி வந்து அதை எடுக்க…… எடுத்தவள் “ஹலோ பெரிம்மா….” என்க…..

கைலாஷ்….. அவளை தன்னால் முடிந்த மட்டும்….. அவளை பார்த்து முறைக்க….. ஆனால் அதில் பாதிக்க படாதவள் போல்….. பேசிக் கொண்டே  மேலே சென்றவிட்டாள்…..

ஒரு ஐந்து நிமிடம் கழித்து தன்னை….. சமன்படுத்திக் கொண்டே மேலே சென்றான்….. இன்னும் அவளின் பேச்சு ஓயவில்லை…..

பார்த்தவனுக்கு பொறுக்கவில்லை….. இப்போது ‘அவளிடம் போனை வை…. என சைகை செய்ய….’ அவள் என்ன என பார்க்க….. அவளின் போனை பிடுங்கி ஆப் செய்து…. கட்டிலில் தூக்கி போட்டான்…..

அகல்யாவிற்கு…. உள்ளுக்குள் சற்று பயம் தான் இவனின் அதிரடிகள் பார்த்து….. ஆனால், அவனின் எதிரில் எதுவும்  காட்டாமல்….. கேள்வியாக அவனை பார்த்து நின்றாள்.

கைலாஷ் இப்போது அமைதியாக….. அவளை பார்த்து…. “நாளையில் இருந்து…. டிரைவிங் கிளாஸ் போ…. நான் ஏற்பாடு செய்யறேன்….. அப்பாவின் கால் டாக்ஸி ஆபீஸ் டெய்லி போய் பாத்துக்கோ…..” என்றவன் தன் முன் நெற்றியில்….. தன் விரலால் தேய்த்துக் கொண்டே….. அவளை பார்த்து யோசனையாக ”இவங்ககிட்ட போன் பேசற வேலை இனி இருக்க கூடாது…. பாத்துக்கோ….” என்றான் கட்டளையாக.

தொடர்ந்து “என்ன வேலை பார்க்கிற…” என்றான். ஏதோ ஸ்கூல் ஸ்டுடன்ட் என நினைத்தான் போல….

இவள் கடுப்புடன் ஒரு IT கம்பெனி பெயர் சொல்லவும்….

“சரி…… இப்போ…. ம்ம்…. அத நாளைக்கே…. ரிசைன் பண்ணிடு….. ஒன் மன்த் தானே நோட்டிஸ் பிரியடு….. என்ன ப்ரோசுயுஜர்னு சொல்லு பண்ணிக்கலாம்…..” என்றான்.

கேட்ட அகல்யா…. “எதற்கு ரிசைன் பண்ணனும்….. அதெல்லாம் பண்ண முடியாது…… நான் கல்யாணம் செய்யும் போதே….. வேலைக்கு போவேன்னு தான் சொன்னேன்……. சரின்னு மாமா சொல்லியாச்சு…..

இப்போ திடிர்ன்னு என்னால வேலையை விட முடியாது…… அத்தோட வைஷ்ணவி இப்போதான் கடைசி வருடம்….. நான் தான் அம்மாக்கு பணம் குடுக்கணும்….. நான் வேலையை விட்டுட்டு என்ன செய்ய…..” என இவள் தவிப்புடன் காரணம் அடுக்க…..

கைலாஷ்…… ஹோம் வொர்க் செய்யாத குழந்தை….. சொல்லும் காரணத்தை போல்….. இவள் சொல்லவும்….. அதை ஒரு ரசனையாக பார்த்திருந்தவன்…….

ஆனால் இவள், அம்மாவிற்கு பணம் தரனும் என்ற சொல் வர….. இவளை ஆழ்ந்து பார்த்தான்…… “ஏன் என்னை பார்த்தா….. பாதியில் போகிறவன் போல் இருக்கா…….” என்றான் ஓர் கனமான குரலில்.

இப்போது நிமிர்ந்தாள் அகல்யா…. “உங்களை பற்றி எனக்கு தெரியாது….. ஆனால், நான் என் அம்மாவிற்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறேன்….. கொடுத்த போது…… உங்ககளை எனக்கு தெரியாது…… இப்பவும் கூட தான்…..” என்றாள் அவன் கண்ணை பார்த்து….

உள்ளுக்குள் மெச்சிக் கொண்டான் தன் மனையாளை….. அதுவும் அந்த கண்கள்…. அவள் வாயை விட அதிகம் பேசியது…… எவ்வளவு தைரியம்… என்னிடமே என்னை பற்றி சொல்கிறாள்….                  

“ம்ம்….. என்ன செய்யலாம்…. அகல்….” என அவள் கிட்டே வர….

“போய்டுங்க….. என் கிட்ட வராதீங்க….. ப்ளீஸ்….. என்னை பேச வைக்காதீங்க….. நான் உங்க விளையாட்டு பொம்மை கிடையாது….. ஓகே நீங்க சொன்னதெல்லாம் செய்யறத்துக்கு…..” என இவள் கத்திக் கொண்டிருக்க….

கைலாஷ் அதனை பார்த்தவன்…. “தெரியும்ம்மா…. நான் பண்றது தப்பு தான்…. ப்ளீஸ்…. எனக்கு ஒரு ஸ்பேஸ் தரக் கூடாதா…..” என இவளிற்கு தன் நிலை புரியும் என நினைத்து….. இவன் வேண்டிக் கொண்டிருக்க….

அந்த சுவடுக் கூட அறியாதவள்….. இவன் ஏமாற்றம் தெரியாதவள்…. ஒரு தவறு செய்தாள்…… “ஏன்…. இன்னும் முன்னாள் காதலியை மறக்க முடியவில்லையா….” என்றாள்.      

இப்போது கைலாஷிற்கு அப்படி ஒரு கோவம்….. வரும் போது போன் பேசிக் கொண்டிருந்தது…. அவன் செய்த தப்பை எல்லாம் ஒன்று ஒன்றுகாக…. இவள் சொல்ல சொல்ல…. இவனுள் ஒரு குற்ற உணர்ச்சி வந்தது….

அதில் என்ன செய்கிறோம் என உணராதவன்….. ஒரு அரை வைத்தான் அவளை….. அதன் பின்னும் அவன் கோவம் குறையவில்லை….

என்ன செய்வது என தெரியவில்லை….. இங்கும்.. அங்கும்.. நடந்தான்….. தன் மனைவியிடமிருந்து இந்த வார்த்தை வந்தால்… அவளின் மன நிலை என்னவாக இருக்கும்….

எங்கோ ஒரு இன்செக்குர் பீலிங்….. வந்திருக்கிறது….. அதை தான் நான் அவளிற்கு கொடுத்தேனா…. நான் அதை மட்டும் தான் கொடுத்திருக்கிறேனா……     

தன்னுடைய உடைகளை ட்ராவெல் பாகில் அடைத்தவன்… “காலையில்…. 7 மணிக்கு….. டிரைவிங் ஸ்கூல்லிருந்து வருவாங்க….. கிளம்பிடு…..” என்றான் வார்த்தையில் கூட ஒட்டாமல்…. சொல்லி விட்டு கிளம்பிவிட்டான்.                   

இப்போது கைலாஷ் இப்படி சொல்லவும்…… அகல்யாவிற்கு அப்படி ஒரு நிம்மதி….. என்ன வேண்டுமாலும் நடந்திருக்கட்டும்….. இந்த ஷணம் உண்மை… என தோன்ற….

அவன் பின்னால் கீழ் இறங்கி வந்தாள்…. முகமெல்லாம் கூட துடைக்கவில்லை….. அப்படியே அழுது…… சிவந்து…. வீங்கிய கன்னத்துடன் வெளியே இறங்கி வந்தாள்.      

அவன் தன் அப்பாவின் அறைக்கு செல்வதை பார்த்தவள்….. அவசரமாக, ஹாலில் இருந்து “நாகுண்ணா….. “ என குரல் கொடுத்தவள்…..

அவன் தன்  குரலை கேட்டிருப்பான் என நினைத்தவள்…. அவசரமாக் சென்று சமையலறை சிங்கிள் முகம் கழுவியவள்……

“டிபன் எடுத்து வைங்கண்ணா…. சீக்கிரம்….” என்றவள்

தன் மாமனார் அறைக்கு சென்றவள்…. “வாங்க மாமா சாப்பிடலாம்….” என்றவள்… “நிங்களும் வாங்க….” என்றாள்.

குருமூர்த்தி…. ஆச்சிரியமாக பார்க்க…. இவள் சென்றுவிட்டாள்…. ஆனாலும் எதுவும் கண்ண்டுகொல்லாமல் சென்று அமர்ந்தார்…..

அவள் பரிமாற…. அப்போது தான் பார்த்தார்…. அவளின் கன்னத்து வீக்கத்தை….. அப்போதே கைலாஷிடம்… “என்னடா…. பண்ணி வெச்சிருக்க…. எதுக்கு டா அடிச்சிருக்க….. அவளை….” என கேட்டு எழுந்துகொள்ள….

அய்யோ என நொந்துகொண்டான் கைலாஷ்….. அகல்யா “விடுங்க மாமா…. அதெல்லாம் ஒண்ணுமில்ல….” என்றாள்.

கைலாஷ் அவ்வளோ நல்லவளா… நீ… என பார்த்திருந்தான்….. ஒரு வழியாக….. இந்த ஆர்ப்பாட்டமெல்லாம் முடிந்து கிளம்பி சென்றான் கொச்சின்னுக்கு.         

ப்ளைட்டில் ஏறி அமர்ந்துடன்…. ஏதேதோ எண்ணம் என்னவென்று புரியவில்லை…. ஆனால் மனம் நிறைந்து இருந்தது….. அவள் முகமே கண்ணில் வந்து வந்து போனது….  அவனின் ஹெட் செட்டில்…..

“இன்னும் என்னை வெகு தூரம் கூட்டி செல்லடி….

பண்ணிசையில் பாடங்கள் மாற்றி  சொல்லடி….

கன்னி உந்தன் மன கூண்டில் என்னை தள்ளடி….

கண்ணசைத்து அங்கேயே வைத்துக்கொள்ளடி…..

உந்தன் செல்ல மொழியினிலே…

உள்ளம் கொல்லையடிப்பதும் ஏன்….

துள்ளி.. துள்ளி.. வரும் நடையில்….

மனம் மெல்ல துடிப்பதும் ஏன்….

உன்னை காண வேண்டும்… கூட வேண்டும்…

வாராயோ…. வாராயோ…..

கண்ணாம்மா….. காதலென்னும் கவிதை சொல்லடி…..”      

  

                 

            

       

Advertisement