பூக்கள்-16

அகல்யாவின் தாய் மற்றும் தங்கையை…. பக்கத்தில் ஒரு அப்பார்ட்மென்ட் பார்த்து குடியமர்த்துவதாக…. அப்போதே குருமூர்த்தி கூறி இருந்தார்….

எனவே அதற்காக ஒரு அப்பார்மேட்ன்டை…. இப்போது தான் அகல்யாவும் கைலாஷும் சென்று பார்த்து வந்தனர்….. அகல்யாவிற்கு, மிகவும் பிடித்திருந்தது…..

கைலாஷ் தான்…. “அதனை விலைக்கே வாங்கி விடலாம்ப்பா…. லீசுக்குனா…..  எனக்கென்னமோ வேண்டாம் என்று தோன்றுது…. ரொம்ப காஸ்ட்லிப்பா….” என்று தன் அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான்

அகல்யா நடுவில் வந்து “வேண்டாம் மாமா…. லீசுக்குனா பாருங்க… இல்லைனா வேண்டாம்…. இப்போயெல்லாம், அம்மாகிட்ட பணம் இல்லை…. இப்போ வாங்க முடியாது…. வைஷ்ணவி கல்யாணம் வேறு இருக்கு…” என தன் அம்மாவின் நிலை குறித்து சொல்ல….

“குருமூர்த்தி யோசிக்கலாம்மா….” என்றுவிட்டார். அவர்க்கு தன் மருமகள் பேரில் ஒரு சொத்து வாங்கி…. அதனை அவர்கள் அம்மாவிற்கு வாடகைக்கு போல் விட்டு விடலாம்…. என்ற எண்ணம்…

அகல்யா இப்படி சொல்லவும்…. தனது மருமகளுக்கு இப்போது சொன்னாள் புரியாது என அமைதியானார்….    

கைலாஷின் தங்கை…. வர்ஷிணியின் பெண் பார்க்கும் வைபவம் இனிதாக நிறைவடைந்தது…. 10 நாட்களில் நிச்சையமும்….. 2 மாதம் சென்று திருமணத் தேதியும் குறிக்கப்பட்டது…..

நிச்சையத்தை சிறப்பாக செய்ய நினைத்தனர்….. அதனால் அனைவரையும் அழைக்கும் பொறுப்பு…. கைலாஷ் அகல்யாவின் வேலையானது… அதில் பிஸியாகினர் இருவரும்….

அன்று சுப்பிரமணியம் கல்யாணியின் வீட்டிக்கு செல்வதாக இருந்தது…. கைலாஷ் வரமாட்டான் என நினைக்க…. கைலாஷ் அமைதியாக கிளம்ப…. கேட்டேவிட்டாள் அவள் “என்ன…. அதிசியமா எங்க பெரியம்மா வீட்டிற்கு எல்லாம் வரீங்க….” என்க….

“இது எங்க வீட்டு விசேஷம்….. இதில் நான் என்பதை விட…. என் குடும்பம் முக்கியம்….” என கறாராக சொன்னான் கைலாஷ்….

அவனிற்கு இப்போது…. அகல்யா தன்னை அருகில் விடுவதில்லை என்ற கடுப்பு…. அவ்வப்போது இப்படி தான் தாக்கிவிடுவான்.

அகல்யாவிடம் என்னதான்…. நன்றாக நடந்து கொண்டாலும் சில சமயம் அவளின் கண்  பார்த்து….. கணவன் என்ற எண்ணம் எழும்போதெல்லாம்…. தவித்து தான் போவான்….

இப்போது இருவரும் கிட்ட தட்ட கணவன் மனைவி என்ற நிலை…. அப்படிதான் இருந்தனர்…. அகல்யாவிற்கு…. என்ன.. என்ன.. என்ற எண்ணம்…. அவன் அருகில் வந்தால் மட்டும் அவளால், இயல்பாக அவனிற்கு இணங்க முடியவில்லை….

என்ன விளக்கம் கைலாஷ் சொன்னாலும்…. மனம் மட்டும்…. ஓரிடத்திலேயே சுற்றியது….. எப்படி… எப்படி அவனால் மறக்க முடிந்தது என…. அதனால்…. அவனின் அடுத்த கட்ட விருப்பத்தை…. அவளால் ஏற்க முடியவில்லை         

இப்போதும் அகல்யா…. அவனிடம் எதுவும் கேட்பதில்லை…. ஆனால் யாரை கேட்பது என்றும் தெரியவில்லை…. தன் மாமனாரை தான் கேட்க வேண்டும்…. ஆனால், எப்படி தன்னால் கேட்க முடியும் என அமைதி…..                

கைலாஷிக்கு… என்ன செய்வது என்று தெரியவில்லை அன்று, நீயே கண்டுபிடி என சொல்லியாகவிட்டது…. மேலும் இது தானே சொல்ல கூடிய விளக்கமாக அவனுக்கு தோன்றவில்லை….. அதனால், தன்னிலை விளக்கம் மட்டுமே என்னால் தர முடியும்…. என்று அமைதியாகிவிட்டான்….

இன்றும் இப்போது அவளின் பெரியம்மா வீட்டிற்கு செல்வதற்காக…. அழகாக…. மெஜந்தா கலர்…. பிரிண்டடு சில்க் சாரியில் ஜொலித்தவலை, தன்னால் நெருங்க முடியாத…. ஆற்றாமையை தான்…..

கைலாஷ் வார்த்தையால்…. அப்படி சொல்லி வெளியே சென்று விட்டான்…… அவளின் வாடிய முகம் பார்க்க முடியாதவனாக……

செல்லும் அவனையே வெகு நேரம் பார்த்திருந்தாள்…. அகல்யா.

இது அவர்களுக்குள் இப்போது அடிக்கடி நடக்கிறது…. தன்னையும் மீறி கைலாஷ் சில சமயம் அவளை காயப்படுத்தி விடுகிறான்….

இதை அவனும் உணர்கிறான் தான்…. அதன் பின் வரும் குற்ற உணர்ச்சி என… கைலாஷ் தன்னுள் போராடிக் கொண்டிருந்தான்…

தயாராகி கீழே வந்தவள்…..  கைலாஷிடம் “போலாமாங்க….” என கேட்க….  

அவள் முகம் பார்க்காமல் எழுந்து கிளம்பினான் கைலாஷ்….. இருவரும் வருவது பற்றி ஏற்கனவே…. சொல்லி இருந்தனர்….. அதனால் 7 மணி போல்….. அவர்கள் வீட்டிக்கு சென்றனர்.

முறையாக சுப்ரமணிமும் கல்யாணியும் வந்து வரவேற்று ஹாலில் அமர வைத்து சென்றனர்…..

காயத்ரி இப்போது தான் உள்ளிருந்த வந்தாள்…… இவர்களை பார்த்து “ஹாய் கைலாஷ்….. அகல்யா… வாங்க வாங்க…..  “என இயல்பாக வரவேற்று அமர்ந்தாள்.

“கைலாஷ் எப்படி இருக்கீங்க….” என போர்மளாக கேட்டு அகல்யாவை திகைக்க வைக்க…..

அகல்யா இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள் பேசவே இல்லை….. அப்போது அதை கவனித்த காயத்ரி….. ”ஏன் அகல்யா பேச மாட்டியா…. என் கூட…. “ என அவள் கை பிடித்து கேட்க

“நீங்க எங்க கல்யானத்திற்கு வரவே இல்லை….. உங்க மேல கோவமா… இருக்கேன்….” என்றாள்.

கைலாஷிற்கு இதனை பார்த்து…. பாவமாக இருந்தது…. இந்த நேரடி கேள்வியை…. அவன் சற்றும் எதிர் பார்க்கவில்லை…..

“விடு அகல்….. அவங்களுக்கு ஏதாவது வேலை இருக்கும்…. நம்ம வந்த வேலையை பார்….” என்றவன் எழுந்து சுப்ரமணியத்திடம் முறையாக அழைப்பு விடுக்க…..

பின்னர், இரவு விருந்து நடந்தது…. கல்யாணி உற்று உற்று அக்ல்யாவையும் கைலாஷையும் பார்க்க…. அவர்கள் எப்போதும் போல் …. தங்கள் வேலையை பார்த்திருந்தனர்…..

அதனை வைத்து எதுவும் கல்யாணியால் கண்டுபிடிக்க முடியவில்லை….. காயத்ரி தான் தன் அன்னையை… கண்களால் மிரட்டிக் கொண்டிருந்தாள்.

கைலாஷ் அமைதியாக இதனை பார்த்திருந்தான்…. அகல்யாவிற்கு இது எதுவும் தெரியவில்லை….    

காயத்ரிக்கு இப்போதும் கைலாஷை நினைத்து பார்க்க கூட இல்லை….. கைலாஷை அகல்யாவுடன் பார்த்ததும்…. முதலில் நினைத்தது…. இப்படி ஒரு பாந்தமான வாழ்வை தன்னால் வாழ முடியுமா….. என்ற எண்ணம் தான் வந்தது….

பார்த்து பார்த்து தன் கணவனை கவனிப்பது….. தன்னை ஏதோ ஒரு வகையில்…. கல்யாணி ஆராய்ச்சி பார்வை பார்க்கிறார் என தெரிந்து… கண்டு கொள்ளாமல் உண்பது….

தனது பெரியப்பாவின் அறிவுரையை பொறுமையாக கேட்பது…. என அகல்யாவின் நடவடிக்கைகளை பார்த்த காயத்ரி…. தனது அக்காக்களை நினைத்து கொண்டாள்…

கூடவே…. தனக்கு ஏன் இவ்வாறெல்லாம் எண்ணம் வரவில்லை எனவும் தோன்ற….. அக்ல்யாவிடம் கேட்டாள்… “நீ வேலையை ரீசைன் பண்ணிடியா….” என ஆராய்ச்சியாக கேட்க…

“ஆமாம் காயத்ரி….. எங்க ஆபீஸ் போறேன்…” என்றாள்.

காயத்த்ரி ஆச்சிரியமாக பார்க்க…. “ஏன்…” என்பது போல் கண்ணால் அகல்யா  கேட்க…. காயத்ரி சற்று நேரம் சென்று… “எப்படி மேனேஜ் செய்ற…. நீ டையடாகாவே தெரியல…” என அவள் கன்னத்தை தொட்டு சொல்ல….

சுப்ரமணியத்திடம் பேசியபடி இருந்த கைலாஷ்… அதனை அமைதியாக   பார்த்துக் கொண்டிருந்தான்…. அகல்யா “என் மாமா புல் சப்போர்ட் செய்வாங்க….” என தன் குடும்ப பெருமை சொல்ல….

ஏற்கனவே சொந்தம் என்றால் அதிசயமாக பார்க்கும் காயத்ரி….. இப்போது அதிர்ந்தே போனால்….. தன் கணவன் பெயரை சொன்னாள் சரி…. ஆனால் இவள் தன் மாமனார் பெயர் சொல்லவும் தான் இந்த அதிசியம்.

கல்யாணி நொடித்துக் கொண்டார்……. கூடவே “எங்களுக்கு கொடுத்து வைக்கல….” வேறு என்ன சொல்லி இருப்பாரோ… காயத்ரியின் எச்சரிக்கை பார்வையில் தான்…. பேச்சை நிறுத்தினார்  

கைலாஷ் இந்த நேரத்தில்….. இப்படி ஒரு வார்த்தையை எதிர்பார்க்கவில்லை…. அகல்யாவை பார்க்க…..  

சட்டென கைலாஷை திரும்பி பார்த்தாள் அகல்யா…. அவன் கண்முடித் திறந்தான் அவ்வளவே….. அகல்யாவின் முளை இப்போது சுறு சுறுப்பாக வேலை செய்தது…..

இந்த பார்வையை சற்றும் எதிபார்க்கவில்லை கைலாஷ்….. அவனிற்கு தேவை தன் பழைய அகல்…. அதற்கு… ஏதோ, ஒரு வகையில் தீர்வு….

தான் பழைய நினைவில் இல்லை.. என்று அவளிற்கு புரியவைக்கும்  தீர்வு….. இப்போது அதற்கான வாய்ப்பு வரவும்…. உடனே தலை தானாக அசைந்ததோ…. தலை அசைந்த பிறகும் அவளையே பார்க்க…..

அவள் காயத்ரியை தான் புதிதாக பார்த்துக் கொண்டிருந்தாள்… ஏதோ தெரிய வேண்டி இருந்தது… அவளிற்கு….

அவளின் பார்வையின் தீவிரம் கைலாஷிற்கு புரிந்தது…. இனிமேல் இங்கிருந்தால்…. ஏதாவது நடக்கும் என தெரிந்தவன்….. “அகல் டைம் ஆச்சு கிளம்பலாம்…..” என்றான்.

அங்கு இருந்த யாரை பற்றியும் கவலை படாமல்….. கைலாஷின் அருகில் வந்தாள் அகல்யா…. “நான் காயத்ரிக்கிட்ட கொஞ்சம் பேசிட்டு வரேன்….” என அவன்  காதுக்கு மட்டும் கேட்குமாறு சொல்ல…

கைலாஷுக்கு டெஷன் ஆகியது…. “சரி நீ இருந்து…. கதா காலக்ஷேபம் கேட்டு வா….. நான் போறேன்….” என்றான் தலையை கோதிக் கொண்டே…      

“ஆமாம்… அப்படி தான் கேட்பேன்…. நீங்க சொல்லல நான் எங்கு கேட்க…. கேட்டுட்டு வந்து உங்களுக்கு…. வில்லுப்பாட்டு பாடிக் காட்றேன்….” என இவளும் படு நக்கலாக சொல்ல….

பார்த்திருந்த அனைவருக்கும்…. ஏதோ தீவிரமாக பேசுவது போல் திரும்பி நின்றதால்…. இவர்களின் முகபாவம் தெரியவில்லை…. அவரவர் தங்கள் வேலையை பார்க்க…. சற்று சங்கடமான சூழல் அங்கு…

“ஏய்…. என்னடி உன் பிரச்சனை….. என்ன நடந்ததுன்னு தானே…தெரியனும் உனக்கு, நானே சொல்றேன்…. கிளம்பு முதல்ல….” என அங்கேயே பல்லை கடிக்க….

“அது அந்த பயம் வேணும்….” என சிரித்த படியே சொல்லி திரும்பினாள்… அவர்கள் அனைவரும் இவளையே பார்க்க…. ஈஈஈ என சிரித்து….. சாமாளித்து….     

இவர்கள் புறம் திரும்பி…. “மாமாக்கு டேப்லேட்ஸ் வாங்கணும் அதான் சொல்லிகிட்டிருந்தேன்….” என விளக்கம் வேறு      

இருவரும் அனைவரிடமும் விடை பெற்று கிளம்பினர்…. தனியே அக்ல்யாவிடம் காயத்ரி… “உன் கல்யாணத்தப்ப நான் நார்த் இந்தியா டூர் போய்ட்டேன் ….. அதான் வரல…. நான் நெக்ஸ்ட் வீக் கிளம்பறேன்….. அங்க போய்… கால் பண்றேன் அகல்யா…. டேக் கேர்…..” என்று நல்ல முறையில் பேசியே சென்றால்….

காயத்ரியின் கனவு வேறு….. கொள்கை வேறு….. அவளின் நெடுநாள் கனவை தேடி…. அவள் கிளம்பிவிட்டாள்….. எல்லோராலும் ஒரே மாதிரி வாழ்வை வாழ முடியாது….

காயத்ரி…. நெஞ்ச்சுரமுள்ள பெண்…. அவளிற்கு கட்டுப்பட பிடிப்பதில்லை….. அவள் இன்னும் சில நாட்களில் கனடாவின்…. அரசு அலுவலகத்தில்…. அவளின் கௌரவம் தேடி… செல்கிறாள்… பாய் பாய்….. காயத்ரி…..

அகல்யா, கட்டுபடுவது தான் சுதந்திரம் என நினைப்பவள்…..

அகல்யாவும் கைலாஷும் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்….. அகல்யா இப்போது மிகவும் தெளிவாக இருந்தாள்….. “என்ன அகல்…. ஒரு மாதிரியா இருக்க…” என்க…

கைலாஷை அமைதியாக நிமிர்ந்து வெறுமையாக பார்த்தாள்…. அது அவனை தாக்கியது…..  ஓரமாக வண்டியை நிறுத்தினான்….. அவளை பார்த்து திரும்பி அமர்ந்தான்…..

அகல்யா இப்போது.. கார் கதவை திறந்து கொண்டு…. வெளியே சென்றால்…. காரின் மேல் சாய்ந்து நின்று திரும்பவும் வேடிக்கை…. ஏதோ சிறு பெண் போல்…. பிடிவாதம்…

பிடிவாதம்… நம்மை நேசிக்க கூடியவர்களிடம் மட்டுமே காட்டமுடியும்…..

கைலாஷிற்கு மண்டை காய்ந்தது…. “ஏய்…என்னடி….” என கைலாஷ் கேட்க….. தன் போனில்…. காயத்ரி நம்பர் கையில் வைத்து அவள்  பார்த்துக் கொண்டிருக்க….. பல்லை கடித்தான் கைலாஷ்… ஒன்றும் செய்ய முடியவில்லை…

அவனே சொன்னான்…. “ எனக்கு இப்போது தான் இதெல்லாம் தெரியும் கொஞ்ச நாளா தான்….” என சிறு இடைவெளி விட்டவன்

“எனக்கு அவங்களை தான் பிடிச்சிருந்தது…. என் அப்பாவும்….ம்ம்…  இது தெரியாமல் எனக்கு அவங்களை தான் பார்த்தார்கள்…. நான் சந்தோஷமாக… பெண் பார்க்க போனேன்…. “என நடந்தது அத்தனையும் கூறினான்.

மேலும் அப்போது தான் ஊருக்கு சென்றது…. அங்கு வைஷ்ணவி தன்னிடம் கேட்டது.. என அனைத்தும் சொன்னான்…

அப்புறம் தான் தெரிந்தது….. எனக்கு உன்னை தான்…. என் அப்பா முதலில் பார்த்தார்….  என்று… நீ ஏதோ.. வேலை விஷயமாக சிங்கப்பூர் போறேன் சொன்னதாலா…..

அந்த பேச்சை விட்டுட்டு…. எனக்கும் அவங்களுக்கும் பார்த்தார்கள்…… அப்புறம்….. அவங்க என்னை பிடிக்கலன்னு சொல்ல….. இதற்கு காரணம் எல்லாம் அவங்க அம்மா தான்னு என பிறகு தான் தெரிந்தது….. என எல்லாம் சொன்னான்..

இவளின் முகம் பார்க்காமல்…..ஓர் அமைதியான் குரல்…. எந்த இடத்திலும்… எந்த அழுத்தமும் கூட்டாமல்… ஒரே சீரான ஓசையில்…. அவனின் விளக்கம் இருந்தது…..

இவள் காரின்  டோரை திறந்து அமர்ந்து இருந்தாள்…. அவன் வெளியே நின்று காரின் மேல் சாய்ந்து பேசிக் கொண்டிருந்தான்…. இப்போது தான் அவள் புறம் திரும்பி பார்த்தான்….. அவள் தன் கைகளை பார்த்துக் கொண்டிருந்தாள் நிமிரவில்லை……     

பிறகு ஒரு பெருமுச்சு விட்டவன்…. “ஏன் நான், இல்லாதா ஒன்ன நினைச்சி சங்கட படனும்…. நான் ஏன் இவ்வளவு ரூடா இருக்கேன்னு…. எனக்குள்ளே ஒரு எண்ணம்…. சாரி அகல் உன்ன ரொம்ப ஹர்ட் பண்ணி இருக்கேன்… சாரி அகல் ….“ என்றவன் ஒரு ஷண நேரம் அமைதி….

இப்போது அவனை பார்த்த அகல்யாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை….

இல்லைனும் சொல்ல முடியலை.. ஆமாம்ன்னும்  சொல்ல முடியவில்லை.. அவள் பேச நினைத்தாலும் அவளிடமிருந்து வார்த்தை வரவில்லை……

அவனே தொடர்ந்தான் “என்ன விட்டுட்டு போனவ எவ்வளவு நல்லவளா வேணா இருக்கலாம்….

ஆனா நான் மட்டுமே வேன்னும்னு இங்கு இருக்கர நீ …. ம்ம்… எப்படி சொல்ல என்னவிட உயர்ந்தவ இல்லையா….

இத நான் இழக்க கூடாதுன்னு தோணிச்சு….. உன்ன இனிமேல் கலங்க விட கூடாது…. அப்படின்னு நினைச்சேன்….” என்று ஒரு அழ்ந்த குரல் அவனிடமிருந்து…..

அவளின் தாடை பிடித்து நிமிர்த்தி… அவளின் கலங்கிய கண்களை பார்த்து….. “ம்…அப்புறம் தான் உன்ன கவனிச்சேன்…. கொஞ்ச கொஞ்சமா.. ஏன்… எதுக்குன்னே… தெரியாமா..  உன் மேல் ஒரு கவனம் வந்தது…. நீ வீட்டில் எங்கு இருந்தாலும் உன்ன உணர ஆரம்ச்சேன்…..

நீ அன்னிக்கு சொன்ன பத்தியா….. அப்படியே விட்டுட மாட்டேன் உங்களைனு….. அப்ப… அந்த செகன்ட் அந்த ஆளுமை….

அப்ப… வந்தது நீ எனக்கானவன்….. அப்படின்னு…..      

அப்புறம்….. நீ ஈசியா எனக்குள்ள வந்துட்ட….. உன்னோட எதிர்பார்ப்பில்லா அன்பு……. ம்….. ரொம்ப ப்ரிஷியஸ் நீ….. ஒவ்வொரு அசைவிலும்… நீ என்ன….. ம்…

உன் நேசம் தெரியும் கண்கள்… இருக்கே…. ம்……” என அவள் கண்களை வருடினான்…… விழி மூடியவளின் கண்களில் இருந்து இரண்டு உப்பு முத்துகள் வெளியேறியது….             

அப்படியே கைகள் மேலேறி அவளின் புருவம் வருடி…. பிறை நெற்றி தீண்டி…. காது மடல் வழியாக…. அவளின்  மல்லிகை பூவை ஆசையாக…. தீண்ட…. அவள் காலுன்றி நின்றாள்…. “இப்போ சொல்லு ஏன் அன்னிக்கு அப்படி கேட்ட…..” என காதலாக கேட்டான்.

அகல்யா…. ஓ…. “எப்படி  அதற்குள் மறக்க முடிந்தது…..’ என கேட்டதை தான் சொல்கிறான் என தெரிந்து…….  

“எனக்கு இப்போதானே தெரியுது உங்களுக்கு ‘என்னை பிடிக்கும்னு…..’ அப்போ தெரியாதே…….” என இழுக்க…

கைலாஷி சிரித்தவாறே. “இப்போ கிளியர்ர….” என்க

“ம்….ம்…… ஓகே….” என்கவும் கைலாஷின் போன் ஒலித்தது…. கைலாஷ் அவளையே பார்த்து போன் எடுக்க…..

அகல்யா…. தடுமாறி தான் போனாள்…. இன்னும் அவனின் நேசத்தை உணர முடியவில்லை….

முன்பு…. கணவன் என்ற சொல்லிலேயே வந்த நேசம்….. அவனின் புறக்கணிப்பில் காயம் பட…..

இப்போது அவனின் வாய்மொழி வந்த….. நேசமோ… அவளிற்கு மருந்தாக இருந்தது….

ஆனால் இப்போது இருக்கும் அகல்யா அனைத்தையும் கண்ணில் பார்த்தவள்….. அதனால்… எதிர்பார்த்தாள்….. என் கணவன்…. என்னவனாக மட்டுமே வேண்டும் என எதிர்பார்த்தாள்….                 

இது உணர்வு சார்ந்தது…. மெல்லிய… மிக மெல்லிய ஓசோன் படலம் போல்…. உணர மட்டுமே முடியும்…. அவன் என்னவன்….. என

யார் சொன்னாலும்…. ஏன் அவனே கூட சொன்னாலும்…. நம்ப முடியுமே தவிர உணர முடியாது…..

சிலர் சீக்கிரமே உணர்வர்….. சிலர் திருமணம் முடிந்து குழந்தை பிறந்து…. என வாழ்க்கையின் போக்கில் உணர்வர்…..

அப்படி தான் அகல்யாவிற்கு இந்த விளக்கங்கள் அவனை நம்பினாலே தவிர….. உணர முயல்கிறாள்…….          

இப்போது போனில் குருமூர்த்தி தான்…. அவர்கள் இன்னும் வராததால்.. எடுத்தவன் “ஹம்… ப்பா… தோ வந்துட்டோம்…….” என்றவன்

அக்ல்யாவிடம் “கிளம்பலாமா………” என்றான்.

இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்..

கைலாஷ் அகல்யாவிடம் நெருங்க முயலவில்லை…. அது இயல்பாய் நடக்கும் என எண்ணி அமைதிகாத்தான்….

மறுநாளிலிருந்து…. அகல்யாவை தானே ஆபீஸ் கூட்டி சென்றான் கைலாஷ்.

போக.. வர.. என அவளுடன் நிறைய நேரம் செலவழித்தான்….

அம்மா வீட்டிற்கு அவளுடன் சென்றான்…. அடிக்கடி பார்க்கும் தன் அக்கா வீட்டுகாரிடம் முறைக்க முடியவில்லை வைஷ்ணவியால், பார்த்தால்… சிரிக்க பழகி இருந்தாள்.