போர்மலிடிஸ்…. முடித்து லட்கேஜ் கலெக்ட் செய்து… கிட்ட தட்ட அரை மணி நேரமாக வெயிட் செய்கிறாள்….. ஆனால்…. தன்னை அழைத்து போக வருபவரை இன்னும் காணோம்…..
ஒரு எரிச்சல்… இதற்கு தான்…. இதற்கும் தான்… நான் வருவதில்லை….. எப்போதும் யாருடைய கையையாவது எதிர் பார்க்கும் படி இருக்கும்…… என் சுதந்திரத்தை முழுவதும் தின்றுவிடுவார்கள்…. இப்படி தான் அவளின் எண்ணம்…..
இந்த கோவம் எல்லாம் அவளின் அம்மா மீது தான்… ஆனால் இப்போது இதை யார் மீது காட்டுவது என தெரியாமல்…. தனக்குள் உள் ஒரு புலம்பல்….
இந்தியாவில்…. பாதி, கனடாவில் மீதி என வளர்ந்தவள்…. கனடாவின் சுதந்திரம் அவளின் ஒவ்வெரு செயலிலும் தெரியும்….. இந்தியாவின் கட்டுபாடுகள் அவளின் பழக்க வழக்கங்களில் தெரியும்…. எதையும் நேரே பேசுவாள்… ஒளிவு… மறைவு… தயக்கம்…. தெரியாது.
காயத்ரி 23 வயது…. திருமணத்திற்கு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்….. சுப்ரமணியன் கல்யாணி தம்பதியின் ஐந்தாவது மகள் காயத்ரி……
ஆம்…. அவர்களுக்கு 5 பெண் பிள்ளைகள்…. இவள் தான் கடைசி…. அதற்காக எல்லாம் அவர்கள்…. அஞ்சவில்லை…. பெரிய வசதி எல்லாம் அப்போது இல்லை….
ஆனால், தன்னை வளர்த்துக் கொண்டனர்…… சுப்ரமணியன்….. ஒரு டிக்ரி முடித்து ரேடியோ மெக்கானிக் முடித்திருந்தார்….. அது தான் அவரை கை தூக்கி விட்டது…..
திருவாரூர்…. அருகே அவரின் சொந்த ஊர்….. அவருடன் 3 அக்கா…. இவருடன் சேர்த்து 3 பசங்க….. பையன்களில் இவர் தான் மூத்தவர்…..
இவரை, 16 வயதில் கல்யாணி…. திருமணம் செய்து வந்தார்…. அடுத்தடுத்து பிள்ளைகள்…. தனது கொழுந்தனார்களின் திருமணம்…. என காலம் ஓடியது…
அப்போது தான் தனியார் ரேடியோ நிறுவனம் ஒன்றில் டெல்லியில் வேலை கிடைத்து சுப்ரமணியத்திற்கு……. அவர்கள் குடும்பம் மட்டும் அங்கு குடியேறியது….
அதன் பின் ஏற்றம் தான் அவர்களுக்கு…. கனடா வாய்ப்பு வந்தது… தனது முதல் மகள் மற்றும் இரண்டாவது மகளை கல்யாணியின் அம்மாவிடம் விட்டு விட்டு…. அடுத்த மூன்று மகள்களை மட்டும் கூட அழைத்து சென்றனர்… அப்போது காயத்ரி 5 மாத கை குழந்தை ..
சுப்பிரமணியம் கிரீன் கார்டு பெற்றார்….. குழந்தைகளின் படிப்பு செலவை அரசு ஏற்றது….. மருத்துவம் போன்ற அனைத்து செலவுகளும் அரசு பார்த்துக் கொள்ளும்.
ஒவ்வெரு பெண்ணுக்காக் திருமணம் முடித்தார்….. சென்னையில் ஒரு வீடு…. டெல்லி யில் ஒரு அப்பர்த்மென்ட் என வசதியான் வாழ்க்கை…. அத்தனைக்கும் பின்புறமாக…அதனை பாதுக்காக்க தெரிந்த….மனைவி கல்யாணி இருந்தாள்…..
இவர்கள் தனது பெற்றோர்…. அண்ணன் தம்பிகளை விட்டு செல்லும் போது… இவர்களின் சொந்தம் எல்லாம் சொல்லியது…. குடும்பத்தை பிரிக்கிறாள் என….
ஆனால், எதையும் காதில் வாங்காது…. தன் மக்களை தானே கரை சேர்க்க வேண்டும் அதற்க்கு இந்த சம்பாத்தியம் ஆகாது என்று…. முடிவெடுத்தது, தன் அண்ணன் மூலமாக….
அங்கே சொல்லி…… இங்கே சொல்லி….. என….. சுப்ரமணியத்தை முன்னே நிமிர வைத்து தான் பின்னே நின்றார்….. எத்தனை சோதனை …..
இப்போது, சுப்ரமணியன் 65 வயது ஆகிறது….. இன்னும் கனடாவிற்கும் இந்தியாவிற்கும் பறந்துக் கொண்டிருக்கிறார்….. இந்த காயத்ரியின் திருமணம் முடிந்து விட்டால்…. கொஞ்சம் அமைதியாக இருக்கலாம்…. என்ற எண்ணம்.
காயத்ரிக்கு முன்பாக அவளின் பெற்றோர் சென்னை வந்து விட்டனர்….. 15 நாட்கள் கழித்து இவள் வரவு……
தானே வந்துவிடுவதாக தான் சொன்னாள்…. ஆனால் கேட்க வில்லை அவளின் பெற்றோர்…. “நடு இரவு எப்படி தனியா வருவ…. இது என்ன கனடாவா….. உல்லாசத்தில் சொன்னாள்… வண்டி வந்துவிடும்…. நான் சொல்லி விடுகிறேன்…..” என்றார்…. கல்யாணி.
சுப்ரமணியன் தம்பதி எப்போது இந்தியா வந்தாலும் அவர்களை பிக் அப் ட்ராப் செய்ய… தேவையான இடங்களுக்கு கூட்டி செல்ல என 23 வருடங்களாக….. அவர்களின் நண்பரான குருமூர்த்திக்கு சொந்தமான உல்லாசம் ட்ரவல்ஸ் ஒன்று உண்டு…. அதை நம்பி தான் இவர்களின் இந்திய பயணங்கள் அமையும்….
வெளிநாட்டிலிருந்து வரும் நம் நாட்டவருக்கு தேவையான அனைத்து வண்டி, டிக்கெட் புக்கிங், தங்குவதற்கு அப்பர்த்மென்ட்…. இல்லை ஹோடேல்ஸ்…. என எல்லா தேவையான வசதிகளையும் ஏற்பாடு செய்து தருவது ….. இந்த உல்லாசம் ட்ரவல்ஸின் 30 வருட.. பிசினெஸ் இது….
கல்யாணியின் அண்ணி வகையில் தூரத்து சொந்தம்…… இவர்களின் ஏர்டிக்கெட் முதற்கொண்டு….. இந்தியாவின் தியேட்டர் டிக்கெட் வரை….. அனைத்தையும் செய்து கொடுப்பர்… வித் சர்வீஸ் சார்ஜ்……
ஒரு வழியாக் 3:15 பெர்யர் பலகையை பிடித்த படி….. ஒரு இளைஞன் நின்றிருந்தான்…. முதலில் காயத்ரி அதனை கவனிக்க வில்லை…. ஒரு 10 நிமிடம் கழித்தே எழுந்து வந்தாள்.
கைலாஷ்… தன்னை நோக்கி வருபவளை பார்த்தான்….. அளவான உயரத்தில்…. மூக்கும் முழியுமாக இருந்தாள்…. ஆனால் அவனை ஈர்த்தது அவளின் திரவிட நிறம்……
கருப்பும் இல்லை….. வெளுப்பும் இல்லை….. மாநிறம்…. அதை இன்னும் தூக்கி காட்டுவது போல் அவள் அணிந்திருந்த லைட் எல்லோ ஸ்லீவ்லெஸ் டாப்…. வெளுர் நீல ஜீன்….. வழுவழுப்பான தேகம்…. முதுகு வரை உள்ள . தனது க்ரே கலர் ஹேர்ரை முன்னாள் விட்டு…. லக்கேஜ் ட்ராலியை….. அவள் ஒரு வித எரிச்சலில் உருட்டிக் கொண்டு வருவதை பார்த்தவன்
இரண்டடி பின்னால் சென்றான்….. “இவளையா நாம் பிக்கப் செய்ய வந்திருக்கிறோம்……” என நினைத்து.
ஏனெனில் அவனிடம்…. அப்பா குருமுர்த்தி…. தவிர்க்க முடியாத நிலையில் தான் சொல்லுவார்…. அதுவும் வயதானவர்கள்…. சில பெர்கன்ட் லேடி இது போன்று….. முக்கியமானவர்களை தான் பொறுப்பாக அழைத்து செல்ல வேண்டி கைலாஷ்யிடம் சொல்லுவார்……
அதனால் ஒரு இளம் வயது பெண் என்னும் போது….. அப்பாடா…. என்று ஒரு ஜாலி மூட் வந்தது…..
அவனிடம் வந்த மது…. லேட் ஆனா எரிச்சலில்….. வாய் திறவாது…. அந்த போர்ட்டை காண்பித்து அது…. ‘நான் தான்…. ‘ என்னும் விதமாக….. தன் சுட்டு விரல் கொண்டு ஒரு கோவமும் அலட்சியமும் …. அந்த கண்ணில் ஒரு ஜோதி போல் மின்ன….. கண்ணும் அந்த சுட்டு விரலும்…. அவளின் நிலை பேச…..” என அவளை அப்படியே பார்த்து நின்றான்…..
அவள் தன்னை அவமதிகிறாள்….. என்று சரியாக கணித்தான் ….. ஆனால், “அவனிடம் உள்ள ஒரு ரசனையான மனம்….. அதிகாலை கனவு பலிக்கும் டா…… பாரேன் என்ன அழகா உன் மேல கோவ… படுறா…. பாரேன்….. என ரசிக்கவும் வைத்தது…… “
அவன் பார்வையை பார்த்த மது…. லக்கேஜ் இருந்த ட்ராலியை அவன் புறம் நகர்த்த….. அவன் அதை ஒரே கையால் ஒரு சுழற்று சுழற்றி…. கையில் வைத்திருந்த போர்டு டையும் அதில் வைத்து….. ஒரு லாவகத்துடன் இழுத்து செல்ல….
இது வேறா…. என நினைத்து அவன் பின்னாலேயே சென்றாள்…….
மதுவிற்கு வர வர ஒரே யோசனை…. “இவரை பார்த்தாள் டிரைவர் போல் தெரியவில்லையே….. காரில் எல்லோ போர்ட் வேறு இல்லை…..” என அவனை பார்த்து நிற்க.
காரின் அருகே வந்தவனும்… அவளை பார்த்துக் கொண்டே லக்கேஜ்யை எடுத்து வைக்க…….. மது அவன் பார்த்த பார்வையில்…… தனது ஷர்கை எடுத்து அணிந்தாள்…..
அதில் கவரப்பட்டவனாக….. முகத்தை திருப்பிக் கொண்டான்….. கைலாஷ்க்கு யோசனை… “இவளை….. கேஸ்…. கேஸ்…. யாரிவள்….. எனக்கு தெரிந்தவள் போலே உள்ளது…. ஆனால், அவளை பார்த்தாள்…… எனக்கு…..ம்கூம்…..” தெரியவில்லையே.
என பெரிய யோசனை அவனிடம்…. அப்பாக்கு போன் செய்து கேட்கலாமா….. என நினைக்க, அதற்கு ஏற்றார் போலே…. காயத்ரி….
“ஹலோ…… உங்களை யார் அனுப்பினார்….” என்றாள் கொஞ்சம் திணறி திணறி…..
இவளின் தமிழை பார்த்து கைலாஷ்…. உடனே தனது தந்தைக்கு அழைத்தான்…. அவளிடம் பேசவே இல்லை….
குருமுர்த்தி பாவம் அதிகாலை என்பதால் பொறுமையாக இரண்டாவது தரம் கூப்பிடும் போது தான் அட்டன் செய்தார்……
அப்பா என்று வந்துவிட்டால் பொறுமையாக தான் இருப்பான் கைலாஷ்…..”அப்பா…. சாரி, யாரு அந்த பொண்ணு….. அசோக் நகர் போகணும் தெரியும் ஆனால்…. என்னை யாரு என்னன்னு கேட்கரா…. ட்ராவல் வண்டி வரலேன்னு சந்தேக படுகிறாள் போல…. நீங்க பேசுங்க…. “ என அவளை சரியாக கணித்து தன் தந்தையிடம் பவ்வயமாக சொன்னவன்… அமைதியாக போனை அவளிடம் கொடுத்தான்…..
இவர் அவனிடம் விளக்குவதற்கு முன்பே காயத்ரி “ஹலோ…” என்றாள்.
குருமுர்த்தி…..” அம்மாடி…. காயத்ரி….. நான் குருமுர்த்தி அங்கிள் மா….. உல்லாசம் ட்ரவல்ஸ் மா….. “ என்று இடைவெளி விட….
“சாரி அங்கிள் …” என இவள் ஆரம்பிக்க…
அவர் “என் பையன் தான் ம்மா…. இன்னிக்கு உனக்கு வர வேண்டிய டிரைவர்….. அவனுக்கு குழந்தை பிறந்திருக்கு என சென்றுவிட்டான்….. அதனால் வண்டி மாறிவிட்டது…… கைலாஷ், வீட்டிலிருந்து வந்ததால், தன் வண்டியை எடுத்து வந்திருப்பான்…..” என்றார்
காயத்ரி “ம் …ஓகே …” என்றதும்.
கூடுதலாக ”நீ ரொம்ப நேரம் வெயிட் பண்ணியாம்மா….. அம்மாவும் அப்பாவும் திருவாரூரிளிர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள்……. நம்ம முருகு தான் வண்டி எடுத்து சென்றிருக்கிறான்….. 5 மணிக்கு வந்து விடுவார்கள்…. நீ பயப்படாம போம்மா….” என்றார். வாஞ்சையாக…. அந்த த்வனியே…. ஏதோ ஒரு 5 வயது சிறுமிடம் அவளின் பாசமான தந்தை கூறுவது போல் இருந்தது அதை மறுக்க வேண்டும் என்று தோன்றவில்லை…..
“சரி அங்கிள்…. தேங்க்ஸ் அங்கிள் இந்த நேரத்தில் இவ்வளவு பொறுமையா பதில் சொன்னதுக்கு…..” என அவள் தமிழிலேயே….. பகர்ந்தாள்….. பிள்ளை தமிழ் போலே இருந்தது…. கேட்பதற்கு….
இதை கேட்டு திரும்பி அவளை பார்க்க இப்போது அவள் இவனை பார்த்து முறைத்தபடி….. பிள்ளை குரல் மாறி….. “வைக்கட்டுமா அங்கிள்…..” என்று நார்மல் குரலுக்கு வந்தது….. .
குருமூர்த்தி “அது பரவா இல்லமா…..” என்றார். எத்தனை இது போல் பார்த்திருப்பார்…. இப்போது தான் உடல் நலம் தள்ளாமை காரணமாக… பிக்கப் செய்ய வருவதில்லை … முன்பெல்லாம் என்றால் அவரே கூட அழைத்து வந்து விடுவார்…..
இந்த குரல் பேதத்தை நன்கு உணர்ந்தவன்…. கண்டுகொள்ளாமல்… போனை வாங்கி சாட்ஸ் பாக்கெட்டில் போட்டவன்….. டிரைவர் சீட்க்கு சென்று வண்டி எடுத்தான்…..
அந்த நேரத்தில் ட்ராபிக் இல்லை அதனால் அடுத்த 10வது நிமிடத்தில் அசோக் நகரில்… அந்த அப்பர்த்மெண்டின் முன் வண்டியை நிறுத்தினான்…. லக்கேஜ் எடுத்து அவர்களின் வீடு முதல் மாடியில் இருந்தது….. அதனால் லிப்ட்டில் லக்கேஜ் ஏற்றி இவளை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே…. லிப்டின்…. பட்டனை ஆன் செய்ய…. இவளும் தன் போல் படிக்கட்டுகள் ஏறி சென்றுவிட்டாள்……
அவள் வரும் முன் வீட்டின் முன் லக்கேஜ் வைத்து… தானே காலிங் பெல் அடித்து…. அந்த கதவு திறப்பதற்குள் சென்றுவிட்டான்….. காயத்ரி வரவும் கதவு திறக்கவும்…. சரியாக இருந்தது……
அப்போது தான் அவனிற்கு தெரிந்தது இது கல்யாணி ஆன்ட்டி பெண்… என்று….. எப்படி தனக்கு தெரியாமல் பெண்…… அதுவும் கல்யாணம் ஆகாமல்…. என நல்ல யோசனை அவனுக்கு…
கைலாஷ் அப்படி தான்….. கண்ணை மூடிக் கொண்டெல்லாம் வாழ்வதில்லை….. அழகான பெண்களை ரசிப்பான்….. ஆனால் பேச்சு.. அது.. இது… என வளர்க்க தெரியாது…..
மதுவிற்கு என்னடா இவன்…. ஏதோ அப்பா பார்க்கும் பழைய படத்தில் வரும்….. “பீம்பாய்… பீம்பாய்… அந்த லாகற்குள் இருந்து 5 லட்சம் எடுத்து….” என்னும் போது வருமே ஒரு உருவம் அதை போல்….. கேள்வியே கேட்காமல் செய்கிறான்….. என நினைத்த படியே உள்ளே வந்து… தலையை பிடித்து அமர்ந்து விட்டாள்….