Advertisement

பௌர்ணமி வர்ணம் – 4

தருண் எழுந்து சென்ற பிறகும் அதன் தாக்கம் குறையவில்லை…. தீபிக்கு. ஏதோ… ஒரு கோவம் கனன்று கொண்டிருந்தது. இன்னும் நன்றாக அடித்து மூக்கை பேத்திருக்க வேண்டும்  

பெரியப்பாவிடம் சொல்லுவானாம்… அதற்காகவே இன்னும் ஒன்று போட்டிருக்கலாம் என எண்ணியபடியே அமர்ந்திருந்தாள்.

தருண் கன்னம் வீங்க வெளியே செல்லவும்…. அப்போதுதான் தீபியை பார்க்க வந்த  சூப்பர்வய்சர் வெங்கடேசன்… கண்ணில் தருணின் காயம் தப்பவில்லை. முகத்தல் லேசாக சிரிப்பு வந்தது.

அப்படியொரு நிம்மதி வெங்கடேசனுக்கு…. ஒருநாள் இப்படி தீபியிடம் வாங்குவான் என தெரியும்…. அதை எதிர்பார்த்தும் இருந்தான். இன்று அது நடக்கவும்… தருணை கண்டும் கானாதவாறே தீபியின் அறைக்கு சென்றான்.

இயல்பாய் இன்றைய வேலைகள் பற்றி சொல்லியவன்… அவளின் உடைந்த லேப்டாப் பார்த்து….. “அவன அடிக்க ஏன் மேம் நம்ம பொருள…. உடைக்கிறீங்க….” என்று சொல்லியபடியே…. அந்த லாப்டாப்பை ஆராய்ந்தான்…. அது நன்றாகத்தான் இருந்தது… ஒன்றும் ஆகவில்லை. ஆன் செய்தும் பார்த்து… வைத்து வந்தான்.

கூடவே கதிரேசனுக்கு போன் செய்தும் சொல்லிவிட்டான் வெங்கடேசன் இங்கு நடந்த நிகழ்வுகளை. கதிரேசனுக்கு சற்று நிம்மதியாக கூட இருந்தது.

ஏனோ அவருக்கு தீபியின் மாமனார் கமலநாதனை பிடிக்காது. இன்று வரை, தன் அண்ணன் பெண்ணின் திருமண குறித்து சந்தேகமே கதிரேசனுக்கு

எனவே எத்தனை முறை ஜாடை மாடையாக சொல்லியிருக்கிறார்… ‘தருண்… வேண்டாம் இங்கு’ என. ஆனால் எல்லாவற்றையும்.. ஒரு சிரிப்பு சிரித்து ‘நான் உங்க அண்ணன்கிட்ட சொல்லிட்டேன்’ என்பார் கமலநாதன். ஆக இப்போது இதற்கு தீர்வு வந்துவிடும் என எண்ணியிருந்தார் கதிரேசன்.

தீபி அமர்ந்திருக்க பிடிக்காமல் எழுந்து வெளியே வந்தாள்…. வீக் டேஸ் என்பதால் ஒரு சில பாரினர்ஸ் தவிர பெரிதாக யாருமில்லை அந்த ப்ரைவேட் கடற்கரையில்….

சிறிது வெயில் ஏறியிருந்த போதும் கடற்காற்று குளிர்ச்சியாய் அவளை ஈர்க்க…. தனது செல்போனில்… வெங்கடேசனை அழைத்தாள்…

“வெங்கி சார்…. வர்கீஸ் இருந்தா.. போட்டோடு இங்க வர சொல்லுங்களேன்….” என்றாள்.

அடுத்த அரைமணி நேரத்தில்…. அங்கு வர்கீஸ் வந்திருந்தான். சில சமயம் சுற்றி பார்ப்பதற்கென குறிப்பட்ட நபர்களுக்கு மட்டும் போட் ஆரேஞ் செய்வார்கள்… ஹோட்டலின் சார்பாக…. இது அங்குள்ள சில ஹோட்டல் சேர்ந்து வாடகைக்கு வைத்திருக்கும் நபர்தான் வர்கீஸ்… இன்னும் சிலநபர்கள்.

முன்பெல்லாம் இது ஒரு ஆப்பராக செய்து கொண்டிருந்தனர்…. சிலபல நடவடிக்கைகளுக்கு பிறகு… அதை தவிர்த்து விட்டனர். எனவே போட்டிங் என்பது ஒன் ரிஸ்க்கில் செய்கின்றனர்..

போட் வரவும் ஏறினாள் தீபி… போன் பேசிக் கொண்டே வெங்கடேசனும் ஏற… தீபி “என்ன மேலிடத்தில சொல்லிட்டிங்களா” என்றாள் சற்று கிண்டலாக.

வெங்கடேசன் “என்ன செய்ய…. என் வேலை… அதைதானே செய்யறேன்…. நீங்க போங்க…” என்றான்.

அலைகள் இன்று சீறிதான் வந்தது. வர்கீஸ் “உட்காருங்க…. க்கா, அப்டிக்கா போய் நின்னுக்கலாம்” என்றான். சற்று தூரம் செல்லும் வரை அலைகள் இருக்கும் கொஞ்சம் கடலின் உள்ளே சென்றால் அலை சற்று இல்லாதிருக்கும் அப்போது நிற்கலாம்…  

தீபிக்கு இப்படிதான் எல்லோரும் என்னை பாதுக்காக்கிறார்கள், என்னை சுற்றி என்ன நடக்கிறது… எப்போதும் ஏதோ ஒரு வகையில் நான் கண்கானிக்கபடுகிறேன்… ஏதோ ஒன்று எண்ணை சுற்றி நடந்து கொண்டே இருக்கிறது. ஐயோ! என கண்களை மூடிக் கொண்டாள்.

அதற்குள் வர்கீஸ்…. “க்கா…. “ என்றான்

அந்த உச்சி வெயில் சுருக்கென சுட்டது அவளை…. கண் திறந்தாள்…. எங்கிலும் வெள்ளையும் நீலமும் மட்டுமான நிறம் தான்… வேறு வண்ணங்களே இல்லை.

இப்படிதான் நானும் வர்ணாவும் தனியே நிற்கிறோமோ…. அன்று வினோ சொன்னதெல்லாம் நினைவு வந்தது அவளிற்கு. ரொம்ப தூரம்தான்…. ஆனா இன்னொரு முறை யாரை நம்புவது… அதற்கு இந்த தனிமையே நல்லது அல்லாவா….

என ஏதேதோ எண்ணம்…. எப்போதும் சந்தோஷமாகத்தான் இருக்கிறாள். அவள் விருப்படி நடக்கிறதுதான். ஆனால், அவளின் எல்லா செயல்களிலும் ஏதோ ஒரு வெறுமை அவளை அறியாமலே வந்து விடுகிறது.

இந்த வெறுமைதான் அவளை பல சமயங்கள் துரத்துகின்றன…. ‘போகணும்… வர்ணாவ கூட்டி வரணும்…. நான் தனியா இல்ல….’ என தன்னுள் சொல்லிக் கொண்டாள்…. தீபி   

சற்று நேரம் சென்று தீபி “வெங்கி சார்” என கத்தினாள்….

வெங்கி “என்னங்க மேம்…” என்றார். ஒரு முப்பது பிளஸ் வயதிருக்கும். இந்த ரெசார்ட் ஆரம்பத்த இந்த ஐந்து வருடங்களாக இங்குதான் இருக்கிறார். சிலசமயம் செப்…. சிலசமயம் பௌன்சர், சில சமயம் டிரைவர்…. சிலசமயம் ரூம்பாய்… சிலசமயம் சூப்பர்வைசர்… இப்படி பல அவதாரம் எடுப்பார்.

தீபி “போலாம்…. சார்” என்றாள்.

வெங்கி “ஆமாம் மொட்ட வெயிலில் வந்தால் இப்படிதான் தலை வலிக்கும்…. “ என தனக்குள்ளேயே முனகியவர் “வர்கீஸ்…. திருப்புப்பா… போலாம்” என்றார்.  

                        %%%%%%%%%%%%%%

தனது பாட்டியுடன் ராம் வீட்டிற்கு வந்திருந்தான் புவனன். மதியம் மணி மூன்று இருக்கும். தன்யா மட்டும் பள்ளியிலிருந்து வந்திருந்தாள்… இப்போதுதான் ப்ரீ கேஜி செல்கிறாள்.

எனவே அவளிற்கு மதியமே முடிந்து விடும், அவளை அழைத்துக் கொண்டு மதிய உணவுக்கு வீட்டிற்கு வருவான் ராம். அப்படிதான் இன்றும் வந்து உணவு முடித்து மதியம் சிறு உறக்கத்தில் இருக்க… இவர்கள் வந்திருந்தனர்.

பூரணி, புவனனை பார்த்ததும் சிரித்த முகமாகவே வரவேற்றாள் “வாங்க பாட்டி, வாங்க… கொழுந்தனாரே… எப்படி இருக்கீங்க… ஒரு வழியா… வன வாசம் முடிச்சி வந்திட்டிங்க போலவே…” என்றாள் கேலியான குரலில்.

புவனன் “ஆமாம்… இங்க ராஜ்ஜியம் இருக்குன்னாங்க.. அதான்..

எங்க… என் அண்ணன்… அப்பப்ப, எங்க அண்ணன்னா அவன கண்ணுல காட்ட கூடாதா…” என்றான் அவனும் சிரித்தவாறே. தன் அம்மாவின் புலம்பல் நினைவு வந்தது.

பூரணியும் கொஞ்சம் கூட அசராது “இருங்க இன்னும் பத்து நிமிஷம் அவரே எழுந்திடுவார்… உங்களுக்கு என்ன செய்ய… தன்யாக்கு பாஸ்டா செய்ய போறேன் உங்களுக்கும் செய்யவா… சாப்பிடுவீங்களா… பிடிக்குமா..” என்றாள்.

புவனனுக்கு சற்று பொறாமை கூட வந்தது பூரணியின் இந்த பதிலில். கனிந்த முகமாக “ஏதோ ஒன்னு கொடுங்க அண்ணி” என்றான். அவனின் அண்ணி என்ற அழைப்பில் ஒரு முறை புவனனை திரும்பி பார்த்தே உள்ளே சென்றாள் பூரணி.

பூரணி தன் மாமியாருடன் ஒன்ற மாட்டாளே தவிர…. நல்ல குணம். எல்லோரிடமும் நன்றாக பழகுவாள். எந்த உரிமையையும், உறவையும்  விட்டு கொடுக்க மாட்டாள்.

தானே தன் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே… அவளை தனியாக வரவைத்தது. என்ன! அவள் குடும்பம் என்பது அவள் கணவன், குழந்தைகளுடன் நின்றது.

ஆனந்திதான் ‘என் பையனை தனியாக அனுப்பமாட்டேன்’ என ரகளை…. ஆனால் ராமலிங்கம்தான் நிதர்சனம் விளக்கி தன் மனைவிக்கு புரிய வைத்தார். வேறு வழியும் இருக்கவில்லை… பக்கத்து தெருவிலேயே தனியாக ஒரு அப்பார்மென்ட் வாங்கி குடி வைத்தனர்.

ராமலிங்கத்தின் தொழில்…. பல்பொருள் அங்காடி…. திருமணம் ஆகும் முன்பே… அரசு வேலை வேண்டாம், சொந்தமாக தொழில் செய்வேன் என சென்னை வந்தவர்தான் அவர்.

இந்த முப்பது வருடங்களில்… அவரின் பல்பொருள் அங்காடி…. சென்னையின் எல்லா இடத்திலும் நிறைந்து இருந்தது. தமது அத்தனை சொந்தங்களையும்… இதில் இழுத்துக் கொண்டார். சொந்தம் கெட்டு விடாத அளவு…. கணக்கு வழக்குகளை பிரித்து… பொறுப்பை கொடுத்தார் ராமலிங்கம்.

பொறுப்புகள், பெயர் எல்லாம் இவருடையது…. ‘ராம் ஸ்டோர்ஸ்’. ஆனால், எல்லாம் ஏஜன்சி முறையில் அவர்களின் சொந்தகளே. அந்நிய ஆட்கள் யாரும் இதில் வருவதில்லை. கிட்டத்தட்ட ஒரு ராஜாங்கம் போல செய்து கொண்டிருந்தார்.         

இப்போது அதில் ராம்… தன் தந்தை போல் மேற்பார்வை பார்க்க தொடங்கி இருக்கிறான். கூடவே, தனியாக சில கிளைகள் இவன் பொறுப்பில் கொடுத்திருந்தார் அவனின் தந்தை. எனவே ராம் சற்று பிஸி எப்போதும்.

பூரணி, பாட்டிக்கு காபி எடுத்து வந்து தந்தாள். புவன் தன்யாவிடம் “என்னடா தங்கம் படிக்கிற…” என்க. இத்தனை நாளில்…. எப்போதோ பார்த்த தன் சித்தப்பாவை அதற்கு அடையாளம் தெரியவில்லை.

அந்த சிட்டுக்கு, இவனை மறந்தே போனது…. ஏதோ புதிய அங்கிள் என நினைத்து அவன் அருகில் அழைத்தும் வராமல் தள்ளியே நின்று கொண்டிருந்தது.

புவன் ஏதோ சாக்லேட்டோ.. பிஸ்கேட்டோ.. அது… இது… என வாங்கி வந்திருந்தால் ஒரு வேலை அருகில் வந்திருப்பால் தன்யா. அவனிற்கும் தன் அண்ணன் மகள் பள்ளி செல்லும் அளவு வளர்ந்திருப்பாள் என நினைவு வரவில்லை. வெறும் கையுடன் வந்துவிட்டான்.

மீண்டும் ஒருமுறை புவனன் “இங்க வாடா ஸ்ரீ…. “ என சொல்லிய படியே, அருகில் சென்று அவளை தூக்க. அவனின் வாட்ட சாட்டமான உருவம் பார்த்து அந்த பார்பி டால் “ப்பா…………” என அழ.

கையில் வைத்திருந்த புவனனும் அவளை சமாதானம் செய்கிறேன் என அவளை…. அவனின் உயரத்திற்கு மேல் தூக்கி போட்டு பிடிக்க…. அந்த பார்பி இன்னும் சத்தமெடுத்து “அப்பா………” என அலறினாள்.

இதில் புவணன் பயந்தானா… இல்லை குழந்தை பயந்ததா…. என தெரியவில்லை. உறங்கிக் கொண்டிருந்த ராம் அடித்து பிடித்து எழுந்து வந்தான்.

பூரணியும் ஏதோ பிள்ளை கீழே விழுந்து விட்டது என ஓடி வர. அவள் அழுகையை பார்த்த புவனன்…. குழந்தையை இன்னும் தன் நெஞ்சுடன் இறுக்கி கொள்ள…. தன்யா இன்னும் பயந்து போனாள்…

ராம் தன் தம்பியை வெட்டவா குத்தவா என பார்த்திருக்க….”விடு டா அவள…” என்றான் கொஞ்சம் ஆசுவாசம் ஆனவனாக.

பூரணிக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. ஆனாலும் மறைத்துக் கொண்டு…. தன்யாவை… அவனிடமிருந்து பூப்போல் வாங்கினாள்… தன்னுடன் சேர்த்து அனைத்துக் கொண்டாள்.

தன்யாவை, பூரணி சமாதனம் செய்ய செய்ய…. “யாரும் இல்ல டா உன் சித்தப்பா” என எவ்வளவு சொன்னலும்…. அந்த சிட்டு இவனை பார்ப்பது… அழுவது… என இன்னும் தேம்பிக் கொண்டிருந்தாள்.

ராம் “வா டா…. ஈஸ்வர்…” என்றவன்… உள்ளே சென்று ப்ரஷ்ஷாகி வந்தான். சோபாவில் அமர்ந்தபடியே… “ஈவ்னிங்க வரலாம்ன்னு நினைச்சோம்… “ என்றவன் பேச தொடங்கினான்

கொஞ்ச நேரம் சென்று…. சித்தார்த் வந்தான் பள்ளி முடிந்து. அவன் வந்தவுடன் புவனனை பார்த்ததும் “ஹேய்…. சித்தப்பா…” என கத்திக் கொண்டே வந்து புவனன் மேல் ஒரே தவளாக தாவி ஏறவும்…

அவனை அசால்ட்டாக பிடித்த புவனன், அவனையும் தூக்கி சுற்றி…. அசால்ட்டாக தனக்கு மேல் தூக்கி போட்டு பிடித்து… என முரட்டுத்தனமாக விளையாடி…. அடுத்த அரை மணி நேரத்தில் அந்த ஹாலையே இருவரும் சேர்ந்து…. திருப்பி போட்டிருந்தனர்.

பூரணி “சித்…. போ… டிரஸ் மாத்து…. பாக் க… ஓரமா வை….” என என்ன என்னமோ சொல்லிக் கொண்டிருந்தாள். எதற்கும் அவனிடமிருந்து பதிலோ, ஏன்… காதில் வாங்கியதற்கான அறிகுறி கூட வரவில்லை….

இவர்களின் இந்த ரகளையை எல்லாம் சற்றே தள்ளி… பாட்டியின் மடியில் அமர்ந்தவாறு…. தன்யா பார்த்துக் கொண்டிருந்தாள். இடையில் சிரிப்பு வேறு வந்தது அந்த சிட்டுக்கு. ஆனால் அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்தது.

இப்போது… பூரணி, கையில் பாஸ்தாவுடன் வரவும்தான், கொஞ்சம் மலையிரங்கினான் சித்…. ஒரு வழியாக புவனன்… கழுத்தின் மீதிருந்து கீழே இறங்கி வந்தான் சித்…. எட்டு வயது பெரிய மனிதன். செகண்ட் ஸ்டாண்டடு படிக்கிறான்.

இவனாலே அக்கம் பக்கத்து வீடுகளில் பகை வந்தது பூரணிக்கு…. சோபாவிலிருந்து குதிப்பான்…. கபோர்ட் மேலிருந்து குதிப்பாம்…. கீழே அங்குள்ள பார்க்குக்கு சென்றாலும்….

எல்லோரும் ஊஞ்சலில் ஆடினால்…. இவன் அந்த ஊஞ்சல் கட்டியுள்ள கம்பியை பிடித்துதான் தொங்குவான்… இவன் தொங்கும் தொங்கலில்…. அது பிய்த்துக் கொண்டு போய் விழும்.  எப்போதும் அவனிற்கு ஸ்பைடர் மேன்தான் உற்ற நண்பன். எங்கும் அவன் சித்தப்பா போல் முரடன்தான் அவன்.

இப்போது புவனன்… தனது டி- ஷர்ட்டை தட்டிக் கொண்டே எழுந்து வந்தான். பூரணி அவனிற்கு வேறு ராமின் உடைகள் தந்து அனுப்பினாள்.  அனைவரும் ப்ருட் காஸ்டர்டும்… பாஸ்தாவும் உண்டு முடித்தனர்.

இப்போதுதான் ராம் “அடுத்து என்ன பண்ண போற…. நாளையிலிருந்து கடைக்கு வந்திடு” என்றான். இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த கார்த்திகாபாட்டி கண்ணால் ராமிடம் ஜாடை காட்ட… பூரணிக்கு கோவம் வந்தது.

பூரணி “என்ன பாட்டி, எங்க கொழுந்தனுக்கு என்ன குறைச்சல்…. அவருக்கு நாங்க நல்ல பொண்ண பாக்கிறோம்…. நீங்க இருங்க… அவசர படாதீங்க” என கத்தரித்து பேசினாள்.

ராம், பாட்டியின் முகத்தை பாவமாக பார்த்தபடி அமர்ந்திருந்தான்… அவன் மனைவி சொல் தட்டாதவன்.

ராம்க்கு இதில் பெரிதாக விருப்பம் இல்லை என்றாலும், அந்த பெண்ணை நினைத்து சற்று இறக்கம் கூட வந்தது அவனுக்கு. அதனால் சில சமயம் தன் மனைவி இல்லாதா போது பாட்டியுடன் சேர்ந்து பேசுவான்….

மற்ற படி ராம்…. பூரணியின் அடிமை…. இது ஏதோ யாருக்கும் தெரியாமல் அவன் பாதுகாக்கும் ரகசியம் அல்ல…. ‘மனைவி சொல்லலே மாந்த்ரீகம்’ என்பான். அதற்காக அலட்டிக்கொள்ள மாட்டான் அவன்.

கார்த்திகா பாட்டி “என்னடா ஈஸ்வர்…. உனக்கு நான் எப்போதும் நல்லது தானே டா செஞ்சிருக்கேன்” என்றார் சம்மந்தமே இல்லாமல்.

புவனன் பாட்டி சொல் தட்டாதவன்…. “கூல் பாட்டி…. என்ன சொல்லு…. “ என்றான் எல்லோரையும் ஒரு தரம் பார்த்தவாறே.

     

   

 

 

Advertisement