Advertisement

பௌர்ணமி வர்ணம்…

மதியம் பனிரெண்டு மணி போல்…. அனைவரும் கிளம்பினர்… சீமாவையும், மித்ரவையும்… ஏற்போர்ட்டில் இறக்கி விட்டு, வினோவும் தீபியும் கிளம்பினர், காரிலேயே சென்னைக்கு..

வினோவிற்கு தன் தோழி தனிமையில் இருப்பது குறித்து யோசனைதான். இந்த மீடிங்கில் அனைவரும் அவளிடம் பேசி… அவளை அடுத்த திருமணத்திற்கு யோசிக்க செய்ய வேண்டும் எனதான் எண்ணம் எல்லோருக்கும்.

ஆனால், அதற்கான வாய்பை அவள் கொடுக்கவே இல்லை. எனவே இந்த நேரத்தில் கேட்க வேண்டும் என வினோ எண்ணிக் கொண்டே வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தான்.

எங்கே ஏதாவது சொன்னால்… அவளின் வாழ்வில் தான் தலையிடுவதாக எண்ணம் வருமோ என்ற கவலை வேறு அவனிற்கு.  ஆனால் அதற்காக அவளை அப்படியே அவள் போக்கில் விடும் எண்ணமும் இல்லை அனைவருக்கும்….

எனவே தீபியிடம் பேசி அவளை அடுத்த திருமணத்திற்கு…. சம்மதம் சொல்ல வைக்க வேண்டிய பொறுப்பு இப்போது வினோவிடம்….

எப்படி அவளிடம், பேச்சை ஆரமிப்பது என யோசனையுடனே வந்தவனை தீபியின் குரலே கலைத்தது “என்ன வினோ…. பயங்கர திங்கிங்…. என்ன சொல்றா…. கனி” என்றாள். அவன் திருமணம் செய்ய போகும் பெண்ணின் பெயர் கனிமொழி.

வினோவிற்கு இருந்த சிந்தனை எல்லாம் காணமல் போக, அழகாக சிரித்தான்… அவனின் சிரிப்பை பார்த்து “ப்பா…. இவ்வளோ அழகா…. எங்க வினோ…. எங்கட வைச்சிருந்த இவ்வளோ அழக..” என்றாள் வேண்டுமென்றே.     

இப்போது அவள் நல்ல மனநிலையில் இருப்பாள் என எண்ணி லேசாக தொடங்கினான் வினோ “தீபி… அப்பா என்ன சொல்றாரு…. பேசுறியா அவர்கிட்ட….” என்றான்.

நன்றாக சீட்டில் சாய்ந்து ஒரு பெருமூச்சு விட்டவள் “என்ன ப்பா, நீ பேசனும்னா பேசு, எதுக்கு அவர இழுக்கற” என்றாள். அவனின் எண்ணம் புரிந்தவளாக.

தீபிக்கும் தெரியும்…. இவர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள், என்ன பேச நினைக்கிறார்கள் என எல்லாம் தெரியும். ஆனால், அவர்களின் எண்ணமான, மறுமணம் குறித்து மட்டும் பேச்சு எழா வண்ணம் அனைவரையும் தள்ளியே வைத்திருக்கிறாள் தீபி. இப்போது வினோ கேட்கவும், அதற்கு தயாராவது போல், சொல்லு என்றாள்.   

வினோ “கொஞ்சம் யோசி டாம்மா, உன்ன பத்தி…. என்ன பண்ண போற ப்யுட்சர்ல, இதுக்கு மட்டும் ஒரு பதில் சொல்லு…. போதும்” என்றான் இறைஞ்சுதலாக.

மீண்டும் ஒரு வேகம் எங்கே இவள் அப்படியே இருந்து விடுவாளோ என கோவம் “இப்படியே எப்போதும் இருக்க முடியாது டி…. புரியுதா உனக்கு….” என்றான் இப்போது வார்த்தைகளை கடித்து துப்பினான் அவனின் நண்பன்.

தீபிக்கு இவர்களின் அக்கறை புரிகிறதுதான் ஆனால், இயல்பாய் மற்றொருமுறை…. இன்னொருவரை ஏற்க மறுக்கிறது அவளின் மனம். தன்னால் இன்னொருவரை உணர முடியும் என தோன்றவில்லை அவளிற்கு…

பெரிதாக ஒருதரம் மூச்சை இழுத்து விட்டுக் கொண்டாள், கார் செல்லும் பாதையையே வெறித்தவாறே சொன்னாள் “முழுதாக நான் வாழ்ந்துட்டேன் டா…. கொஞ்சமாதான்…. ஆனா வாழ்ந்தாச்சு… எனக்கு அம்புட்டுதான்… கொடுத்தார் மேலே இருக்கறவர்…. அதுக்காக நான் கவலையெல்லாம் படல, சந்தோஷமா இருக்கேன்…. “ என்றாள் அதே யோசனையுடன்…

திரும்பவும்  அவளே வேகமாக “ஏன்? எனகென்ன குறைச்சல்…. நான் சந்தோஷமா இருக்கேன்….. சந்தோஷமாதான் இருக்கேன்…. சந்தோஷமாதானே இருக்கேன்” என்றாள் படி படியாக குரல் தேய…. என்னவென கண்டுகொள்ள முடியாத பாவம் அவள் குரலில்.

வினோவிற்கு திக்கென்றது…. இது போன்ற குரல் அவளிடம், அவன் இதுவரை கேட்டதே இல்லை….  சற்று முன்பு வரை கூட, நான் சந்தோசமாத்தான் இருக்கேன் எனக்கென்ன குறைச்சல் என்றவள்…. இப்படி கேட்கவும் வினோவிற்கு…. பயம் வந்தது…

முன்று வருடத்திற்கு முன்னர் அவள் இழந்த இழப்பில் இருந்து கூட யாரும் அவளை மீடவில்லை…. தானே தன்னை சரி செய்துக் கொண்டாள். யாரின் பரிதாப பார்வைக்கு கூட அவள் ஆளாகவில்லை. அவளின் இயல்பு இதுதான் எனத்தானே நாங்கள் நினைத்தோம்….

அப்படி இல்லையோ… நாங்கள் சரியாக அவளை கவனிக்கவில்லையோ… பதறி துடித்தது தூய்மையான தோழனின் மனம்.

அவளை ஒரு முறை பார்த்தான். கலங்காத கண்கள், ஆனால் அதில் கொஞ்சமே கொஞ்சம் ஏக்கம் தெரிகிறதோ….  

அதை பார்த்த வினோவின் மனம் தெளிவாக தொடங்கியது, இன்னும் இன்னும் அவனின் எண்ணம் இறுகியது அவனுள்… இப்போது அழுத்தமாக கேட்டான் அவளிடம் “எமோஷன்ஸ் வேண்டாம் தீபி… சொல்லு, வர்ணாக்கு என்ன பதில் வைச்சிருக்க….. “ என்றான்

தீபி “என்ன டா இப்படி கேட்கற… அவளுக்கென்ன டா, என் மாமனார் பேரே போதும் அவளுக்கு, போததற்கு என் அப்பா வேறு இருக்காரு… ம்… நான்தான்… அம்மாவா… நான்தான் ஒன்னும் செய்யல….

அப்பாவா…. அவனும் ஒன்னும் செய்யல…. போய்ட்டாண்டா… நிம்மதியா போய்ட்டான்….

எதுக்கு வந்தான், என்ன வாழ்ந்தான்…. எதுவுமே தெரியலைடா… ஒண்ணுமே சொல்லா பா….” என்றாள் தன்னை கட்டுபடுத்திய குரலில். ஆனால் முகமெல்லாம் சிவந்து புசு புசுவென இருந்தது.

கற்பனைகெட்டா சோகமது… சொல்ல முடியாத கவலையது… சில நேரம் இறைவன் துரும்பில் கூட இருப்பதில்லை என தோன்றும் தருணம் அது.   

ஒரு தூய்மையான தோழனிடம் மட்டும் பகிர கூடியதை… இத்தனை நாள் பேசாதவள் இன்று பேசினாள்…. “தெ…. தெரியலை டா….  வர்ணாவ பார்க்கவே பயமா இருக்குடா….” என்றாள் உதடுகள் நடுங்க…. கண்ணில் ஈரம் இல்லை…. வண்டியை ஓரமாக நிறுத்தினான் வினோ…

எதையும் உணரவில்லை அவள்… இறுகிய முகமாக, வெறித்த பார்வையாக, தனது உணர்வுகளை வெளியே காட்டக்கூடாது என அழுத்தமாக அமர்ந்த வண்ணம் தனது இயலாமையை சொல்லிக் கொண்டிருந்தாள் “என்கிட்ட அப்பா எங்கன்னு கேட்டுடுவாளோன்னு பயமா இருக்கு. எப்படி பதில் சொல்றது அவளுக்கு….

நானே இன்னும் அழுது முடிக்கலை டா, அதுக்குள்ள அவளுக்கு எப்படி சொல்றது…. நல்ல வேலை இன்னும் பேச்சு வரலை….” என்றாள் தப்பித்தவள் போல்…

வினோ “அதுக்கு தானே தீபி….” என ஏதோ சொல்ல வந்தவன் அமைதியானான், எப்படி அவளிடம் சொல்லுவது “அப்பா ஒருத்தர சொன்னாங்களாம்….. நீ… இப்போ” என சொல்லிக் கொண்டே வந்தவனை, ‘நிறுத்து’ எனும் விதமாக கைகாட்டி நிறுத்தியவள். காரிலிருந்து இறங்கினாள்

சிறிது நேரம் அவளை ஆசுவாசமாக விட்டவன். “வா…” என சற்று தூரம் நடக்க வைத்து அவளை கொஞ்சம் அமைதியாக வைத்தான்.

இப்படிதான் தீபி, நினைத்து நினைத்து வருந்துவாள்…. ஆனால் நேற்று போல் சந்தோஷமாகவும் இருப்பாள். சில சமயம் அவளின் உறுதி யாரையும் அசைக்கும். அப்படிதான் உறுதியாக இருந்து பெற்றுக் கொண்டாள் வர்ணமாலினியை. அவளின் தடுமாற்றம், அவளின் மகள் சின்ன வர்ணாதான்.

வினோ மெதுவாக சொன்னான்… “நீண்ட தூரம்டா…. எப்படி தனிய பொண்ணோட போவ…. இதில் உன்னை நினைப்பதை விட, வர்ணாவ…. அதிகமா நினைக்கிறோம், அதான் இன்னொரு கல்யாணம் செய்துக்கன்னு சொல்றோம்….

சொல்றது ஈசி எனக்கும் தெரியும்….. ஆனா… வேற வழி தெரியலைடா…” என்றான் சங்கடமாக புரியவைக்கும் எண்ணத்துடன்.

தீபி “எங்கப்பா… இதையேதான் சத்தமா…. சொன்னாரு, நீ அமைதியா சொல்ற…. பேசாம கடவுள் எனக்கு வாய் என்ற ஒன்றை கொடுத்திருக்கவே வேண்டாம்…. எனக்கும் சேர்த்துதான் நீங்க பேசுரீங்களே” என்றாள் நக்கலாக.

வினோ சிரித்தான்… அவளின் தாடையை பற்றி, முகத்தை இப்படியும் அப்படியுமாக திருப்பி பார்த்தான் “இப்படியெல்லாம் எங்களுக்கு பேசவே தெரியாது…. நீதான் பேசற, பார்த்துக்கோ..” என்றான்.

கவலையாக தொடங்கிய பேச்சு… சின்ன நக்கலிலும், நையாண்டியிலும் முடிந்தது… நட்பு இப்படிதான்.. எதையும் எளிதில் கடக்கும்…

கடந்த ஆறு மாதமாக அவளிடம் இந்த பேச்சு வார்த்தை சென்று கொண்டிருக்கிறது… அதானல்…. இப்படி பாதியில்தான் நிறைய நாள் முடிந்திருக்கிறது. இது அவர்களுக்கு புதிதல்ல… ஒரே நாளில் எதுவும் மாறாதுதானே….

இருவரும் காரிலேரினர்…, சென்னை நோக்கி பறந்தது கார். அதன்பின் வினோ ஏதும் பேசவில்லை. அமைதியாகவும் இல்லை. எப்போதும் போல விளையாட்டாக பேசி சென்னை அழைத்து வந்தான் அவளை.

நேரே அவள் வீட்டில் இறக்கி விட்டான். “உள்ள வந்துட்டு                                                                                                                                                                                                                                                                         போ… வினோ” என அழைத்தவளிடம் ….

“இல்லப்பா, மை ஹனி வெயிட்டிங் போர் மீ… சாரி சாரி, சார்… ரொம்ப பிஸி” என சொல்லியபடியே கிளம்பிவிட்டான்.

சிரித்தபடியே உள்ளே வந்தாள் தீபி. இவளிற்காகவே காத்திருந்தார்… கதிரேசன். அவளின் சித்தப்பா. ‘இரவு உணவுக்கு வந்து விடுவேன்’ என கிளம்பும் போதே சொல்லியிருந்தாள் தீபி.

அவளை பார்த்தவுடன், ஏதும் சொல்லவில்லை அவர். தனதறைக்கு சென்று கிளம்பி வெளியே வந்தார். அங்கு சமையல் வேலை செய்யும் கந்தனை அழைத்தார் “கந்தா..” என்றார்.

வந்தவனிடம் “குடிலுக்கு(ரேசொர்ட்) போய்ட்டு வரேன்…. சாப்பாடு எடுத்து வைச்சிட்டு நீ படு, பிள்ளைக்கு என்ன வேண்டும் கேட்டு கொடு” என்றவர் கிளம்பிவிட்டார். தீபி காதிலும் விழுமாறு சத்தமாக சொல்லி கிளம்பிவிட்டார்.  

திருமணம் செய்து கொள்ளவில்லை அவர். தன் அண்ணனுடன், அவரின் வலது கையாக இருந்தவர்தான். எப்போ இவள், வர்ணாவை விட்டு தனியாக வந்தாளோ, அப்போத்திலிருந்து… எல்லாம் விட்டு இவரும் வந்தார் அவளுடன்.

இவள் சார்பாக ரேசொர்ட்டை பார்த்துக் கொள்பவர். கணக்கு வழக்குளில் தலையிடமாட்டார். எப்போதும் ஒரு மேற்பார்வையாளராக இருப்பார். என்ன நடக்கிறது, வேலை செய்பவரின் விவரம். ரிஸப்ஷ்னிஸ்டின் விவரம். எத்தனை துணிகள் சலவைக்கு வந்தது. எத்தனை ரூம் வாக்கேன்ட் இருக்கு… எந்த ஸ்டாப் இன்று விடுமுறை. இன்று பார்ட்டியில் vj யார். என சகலமும் அவர் அறிவார்.  

தீபி ஒரு குளியல் ஒட்டு வெளியே வந்தாள். சப்பாத்தியும், கிரேவியும் மணந்தது டைனீங்கில்… “அண்ணா… சாப்பிடலாமா” என கேட்டுக் கொண்டே அமர்ந்தாள் தீபி.

கந்தன் “வா கண்ணு….” என்றவர் அவளுக்கு பரிமாறிக் கொண்டே… “உன் தோழி புள்ளைங்க எல்லாம் எப்படி இருக்காங்க…” என்றார்.

தீபி “எல்லோரும் நல்லா இருக்காங்கண்ணா…. எங்க சுசிய காணும்” என்றாள்.

“அது படுக்க போச்சுங்க…. மணி எட்டானாலே அப்படிதாங்க…. அதால, முடியாதுங்க” என்றார்.

“சும்மாதான் கேட்டேன், நான் நாளைக்கு பாத்துக்கிறேன். மாத்திரையெல்லாம் சாப்பிடுராங்களா” என்றாள் அக்கறையாக.

“எல்லாம் சாப்பிடுதுங்க, என்னமோ அந்த புள்ளைக்கு அப்படிதாங்க… நீங்க சாப்பிடுங்க அம்மணி “ என்றார் வாஞ்சையாக.

கந்தனும் சுசியும் அண்ணன் தங்கை, இங்கு வேலை செய்பவர்கள். சுசிக்கு பெரிதாக வேலை செய்ய முடியாது. ரொம்ப நேரம் அடுப்படியில் நிற்க முடியாது. பெரிதாக ஏற்றி இறக்க முடியாது. சுத்து வேலை எல்லாம் செய்வார். அவருக்கு உடல் நலம் சரியில்லை.. எனவே சென்னையில் மருத்துவம் பார்த்தது கொண்டு, இங்கேயே வேலை செய்கின்றனர்.

தீபி உணவு முடித்து, வீட்டின் முன்புறம் உள்ள நடைபாதையில் நடக்க தொடங்கினாள்… வினோ கேட்டதே மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்தாள்….

நான் தனியாக இருப்பதால்தான் எல்லோரும் இப்படி கேட்கிறார்கள்…. நான்  வர்ணாவை அழைத்து வர வேண்டும்…. என்னுடன் வைத்துக்கொள்ள வேண்டும்…. இனி நான் அவளை கவனிக்க வேண்டும்’ என எண்ணிக் கொண்டிருந்தாள்.

$$$$$$$$$$$$      $$$$$$$$$$$$$$  $$$$$$$$$$$$$$$$$$$   $$$$$$$$$$$$$$$

நேற்று இரவு…

ஐவர் குழு கிளம்பும் போதே… கோளோசிங் டைம் நெருங்கி விடவே… அதன் பிறகும் அசராமல்… இருந்த இடத்திலிருந்து நகராமல் அமர்ந்திருந்தனர்…. அவர்கள்.

அந்த ப்பின் இசையின் சத்தம் ஓய்ந்த பின் தங்களுக்குள் ஏதோ பேச தொடங்கினர்… தீபியால், புவன் என அடையாளப்படுத்தப்பட்ட…. அந்த நால்வர் படை….    

பப்பை மூடும்போது அங்குள்ள பணியாளார்கள், மற்றும் பௌன்சர்கள் வந்து “சார்….” என நிற்கவும் கண்டுகொள்ளவில்லை… அவர்கள்.

அதன் பிறகும் ஒரு மணிநேரம் சென்றுதான் கிளம்பினர் அந்த புவன் குரூப்….

‘ஏதோ நாளையிலிருந்து உலகமே சுற்றாது….’ என்று சொன்னதை போல் ஒரே பேச்சும், புலம்பலுமாக அந்த நால்வர் கொண்ட குழு ஒரு வழியாக, அங்கேயே தாங்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றனர்.

எட்டாவது மாடியை, படியேறியே கடந்தனர் அந்த புவன் குரூப். மிதமான வேகத்தில்… ஏதேதோ இன்னும் மிச்சமுள்ள பேச்சுகளை பேசிய படியே ரூம்மை அடைந்தனர்.

இருவர் ஒரு அறையிலும்… மற்ற இருவர் ஒரு அறையிலும் என தங்கியிருந்தனர்…..

மறுநாள் காலை நான்கு மணிகெல்லாம் அனைவரும் எழுந்துவிட்டனர். ஒருவர் மாற்றி ஒருவராக தயாராகி….. ஜாக்கிங் கிளம்பினர்… அந்த ஹோட்டலின் பணியாளர்கள் அவர்களை ‘ஆ…’ என வாய் திறந்து பார்த்திருந்தார்….

ஒரு ரெண்டு மணி நேரம் முன்புதான் போனா போகுதுன்னு… ரூமுக்கு போனாங்க…. இப்போ என்னடான்னா…. ‘நாங்க எங்க ட்ரிங் பண்ணினோம்’ என்பது போல் அனைவரும் மிலிட்டரி ஷூவுடன் அந்த மெயின் கேட் தாண்டி வெளியே போகவும் எல்லோருக்கும்… பார்த்தும் பார்க்காது வேலைகளை கவனித்தனர்.

புவனேஷ்வரன் உற்பட அனைவரும் மில்டரியில் பிரிண்ட்ஸ். குறுகிய கால பணி முடிந்து…. ஒரு மாதம் ஊர் சுற்றினார். நாளை முதல் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும்…. பிறகுதான், அடுத்து….. கடைசியாக இந்த கொண்டாட்டம் அவர்களிடம். ஆனாலும் என்ன செய்தாலும் இந்த அதிகாலை எழுந்து, தலை தெறிக்க ஓடும் பழக்கம் மட்டும் விடவில்லை அவர்களை.

கிட்ட தட்ட பத்து வருடங்கள் மிலிட்டரியில் இருந்து… தன் கனவை நிறைவேற்றிக் கொண்டவன் புவனன். எனவே, அப்படி வந்த பழக்கம்தான்…. அதிகாலை எழுவது…. எவ்வளவு சரக்கடித்தாலும் வாயே திறக்காமல் நிற்பது, எங்கு சென்றாலும் நேரத்திற்கு சரியாக செல்வது… என பல மிலிட்டிரி  குணங்கள் அவனிடம் உண்டு…

நண்பர்கள் நால்வரும், விடிவதற்கு முன்பாக பத்து கிலோமீட்டர் சுற்றிவிட்டு வந்தனர். அந்த ஹோட்டலே இவர்களின் வியர்வை வாசம் வீசியது. அப்படி, எல்லோரும் அந்த பனியிலும், வியர்வையில் குளித்திருந்தனர் வரும்போது.

இன்னும் அரை மணி நேரத்தில் அனைவரும் குளித்து, அழகான ஜீன் டி-ஷர்ட்டில் வெளியே வந்தனர்…. சத்தமே இல்லாமல். அந்த ரூமை வெக்கேட் செய்து கிளம்பினர். நேரே எல்லோரும் ஏர்போர்ட் சென்றனர். ஆளாளுக்கும் தங்களின் வீடு நோக்கிய பயணம் தொடர்ந்தது.

புவன்…. சென்னை வந்திறங்கினான்.   

 

      

 

 

 

 

 

                                      

    

Advertisement