Advertisement

மிட்டாய் புயலே-22

சாக்க்ஷி வீட்டிலிருந்து கதீஷ், தன் வீட்டிற்கு வரும் போது, மணி இரவு பனிரெண்டை நெருங்கியிருந்தது. ‘இதெல்லாம் இப்போது பழக்கம்’ எனதான் பூங்கொடி ஏதும் கண்டுக் கொள்ளாமல் இருந்தார்.

ஆனால், இன்று ஏதோ உறுத்த, கதீஷுக்காக காத்திருந்தார். கண்ணில் ஒலியுடன், முகம் பிரகாசமாக உள்ளே வந்த கதீஷை காண, ஏனோ ஏக்கமாக இருந்தது பூங்கொடிக்கு.

ஒரு சில நாட்களில் ‘ஏன்ம்மா, இன்னும் தூங்கலையா’ என கேட்க்கும் , தன் மகனின் குரலுக்காக ஏங்கினார். எனவே பூங்கொடி “ஏண்டா இவ்வளோ லேட்” என்றார் மகனிடம் பேசும் ஆர்வத்தில்.

அப்படியே முகம் ஒரு ஒதுக்கத்தை காட்டியது, கதீஷ் “ஏன், இப்போ என்ன, தீடிர் அக்கறை” என்றான் குரலில் ஒரு காரத்துடன்.

பூங்கொடி அதிசையமாக பார்த்திருந்தார்… இவனின் செயல்களை. கதீஷ்,  நேரே சென்று உணவு மேசையில் அமர்ந்து, தானே எடுத்து போட்டு சாப்பிட்டு கொண்டிருந்தான்.

அவன் அருகில் இன்னொரு சேரில் அமர்ந்து கொண்டு, “என்னடா, ஜெயம் க்கா வீட்டுக்கு போனியாம், சொல்லிட்டு இருந்தா” என்றார். ஆராயும் கேள்விதான்.

ஏதும் பதிலில்லை அவனிடம். பின்பும் தானே தொடர்ந்து “என்னடா….. ஏதாவது சொல்லுடா” என்றார். பூங்கொடிக்கு இப்போதெல்லாம், மகனை நினைத்து பயம் வந்தது.

கதீஷோ எதுவும் சொல்லாமல் உணவிலேயே கவனமாக இருந்தான். உண்டு முடித்தவன் எழுந்து சென்றும் விட்டான் தனது அறைக்கு. பூங்கொடிக்கு… அவனின் புறக்கணிப்பு ஏதோ செய்ய தொடங்கியது.

அதன் தாக்கம் மறுநாள் இரவு தெரிந்தது கதீஷுக்கு. இவன் வரும் நேரம் எப்போதும், இரவு பதினொன்றுதான். அந்த நேரத்தில், அக்காக்கள் மாமாக்கள் அனனைவரும் ஹாலில் ஆஜர்…. இவனிற்குகாக காத்திருந்தனர்.

உள்ளே வந்த கதீஷுக்கு பார்த்தவுடன், சந்தோசம் வரவில்லை. ‘இன்று ஒரு முடிவு…. கண்டிப்பாக வேண்டும்’ என நினைத்த படி, “வாங்க மாம்ஸ்” என்றவன் சிரித்துக் கொண்டே அமர்ந்தான்… அவர்களுடன்.

அக்காக்கள் பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை. பூங்கொடி “சாப்பிடு டா” என்றார். “கொஞ்ச நேரம் ஆகட்டும்மா” என்றவன்.

மாமாக்கள் புறம் திரும்பி “நீங்க இரண்டு பேரும் சாப்பிட்டீங்களா மாம்ஸ்” என்றான்.   

“ஆச்சு மாப்பிள்ளை” என்றார் ஜெயத்தின் கணவர்.  

ஜெகன் உள்ளே அமர்ந்திருந்தார், வெளியே வரவில்லை. யார் எப்படி தொடங்குவது ஏன் தெரியாமல், ஒருவர் முகத்தை, ஒருவர் பாத்துக் கொண்டிருந்தனர்.

கதீஷுக்கு இதனை பார்க்க சிரிப்பாக வந்தது “நீங்க இருங்க, நான் பிரஷ்ஷாகி வரேன்” என சொல்லி, மேலே தனது அறைக்கு சென்றுவிட்டான்.

இங்கு… அவன் சென்ற உடன், பாக்கியத்தின் வீட்டுகாரர்தான் “அவன ஏன், படுத்துறீங்க, கூப்பிட்டு பேச அவன் என்ன சின்ன பையனா…..

இவ்வளவு பொறுமையா இருக்கான், தெரிஞ்ச பொண்ணு, எல்லாம் ஒரே ஆளுங்கதான், பேசாம கல்யாணத்தை செய்து வைப்பீங்களா…” என ஆரம்பிக்க..

பாக்கியம் பொங்கிவிட்டார் “அதெப்படி, பழச மறக்கறது…” என தொடங்கி, எல்லாவற்றையும் ஒரு தரம் சொல்லி தனக்கு தானே நினைவு படுத்திக் கொண்டார்.

பாக்கியத்தின் கணவர் சரியாக கேட்டார் “இத்தனை வருடம் ஏதும் சொல்லாதவர், அன்று மட்டும் ஏன் அப்படி சொல்ல வேண்டும், அப்போ உன் தம்பி கண்ணில் ஏதோ பார்த்திருப்பார்… அதான், அப்போவே இங்க வராதேன்னு சொல்லியிருக்கார், பெண்ணை பெத்தவன் வேற எப்படி டி…. சொல்லுவான்” என்றார் காரமாக…

உள்ளே ஜெகனுக்கும் இது கேட்டது. இப்போது அவருக்கு வேறொரு பக்கம் கண் திறந்தது. அமைதியாக அமர்ந்திருந்தார்.

இப்போது கதீஷ் மாடியிலிருந்து இறங்கி வந்தான். நேரே உணவு மேசை சென்று அமர்ந்து கொண்டான். உண்டு முடித்து, சாவகாசமாக வந்தான்.

பார்த்துக் கொண்டிருந்த பாக்கியத்திற்கு, கோவம் வந்தது, தன் கணவர் வேறு, வந்ததிலிருந்து தன் தம்பிக்கு சப்போர்ட் செய்வதும் சேர்ந்து கொள்ள “என்னடா, இப்படி மதிக்காமையே இருக்க, உனக்காகத்தான் இங்க வந்திருக்கோம், நீ என்னமோ, வர, போற, சாபிடுற” என எப்போதும் போல் கத்த தொடங்கினார் பாக்கியம்.

பொறுமையாக கேட்டுக் கொண்டே வந்து, தன் மாமன் அருகில் அமர்ந்தவன் “வேறு என்ன செய்யனும்” என்றான் அமர்த்தலாக.

அந்த பார்வையும், வார்த்தையும் ஏதோ செய்தது பாக்கியத்தை, ஜெயம் வேறு அவரின் கையை பிடித்து அமைதி என்னும் விதமாக அழுத்த, சற்று பெருமூச்சு விட்டார் பாக்கியம்.

ஆனால் அடங்கவில்லை, தன் கணவரை பார்த்து “என்னமோ நடக்குது, இவன் ஏதோ அமைதியா இருக்கான்னு, நாம நினைச்சா…… செய்யறது ஒன்னும் சரியில்ல, உங்க மாப்பிள்ளை கிட்ட சொல்லுங்க, நாங்க பாக்குற பொண்ண தான் கட்டிக்கணும்னு…” என்றார் தணியாத கோவத்தில்  

கதீஷ் ஏற்கனவே ஒரு முடிவோடு இருப்பதால், இப்போது எல்லா கோவமும் பாக்கியத்தின் மேல் திரும்பியதோ “மாமா, உங்க பொண்டாட்டி, சாக்க்ஷிய என்ன சொல்லியிருக்கா தெரியுமா” என அலுங்காமல் குண்டை தூக்கி போட்டான், தன் அக்காவை பார்த்த வண்ணம், அதில், அந்த பார்வையில் சத்தியமாக மிரட்டல்தான் இருந்தது..   

அவரும் “இவ எப்போ மாப்பிள்ளை… பேசுனா” என்றார்.

பதறி போயினர் பூங்கொடியும், பாக்கியமும் கையை பிசைந்து கொண்டு நின்றிருக்க, கதீஷ் அப்போதும் இவர்களை காப்பாற்றுபவனாக ஏதும் சொல்லாமல்… “ஆனா, சாக்க்ஷி ஒரு வார்த்த்தை தப்பா சொல்லலை மாமா, அக்காவ பத்தி… அவள எதுக்கு பிடிக்கலைன்னு கேளுங்க மாமா, அத மட்டும் சொல்லட்டும்………. பார்க்கலாம்” என்றான் அந்த பார்வையை மாற்றவில்லை அவன்.

கதீஷின் அந்த பார்வை, எதையோ உணர்த்தியது பாக்கியத்திடம்… ‘சொல்லிவிடுவாயா, பிடிக்கவில்லை’ என ஏளனமாக பார்த்ததோ,

‘எங்கே சொல்லு பார்க்கலாம்’ என சபதம் போட்டதோ…. என்னவோ ஆனால், அதன் பிறகு வாயே திறக்கவில்லை பாக்கியம்.

அனைவரிடமும் அமைதி. யாரும் எதுவும் பேசவில்லை. அவனே  தொடர்ந்தான் “ம்ச்சு… விடுங்க மாமா, எனக்கு திருப்பி, திருப்பி ஒரே விஷயத்தை பேசவே பிடிக்கலை, கல்யாணம்ன்னு ஒன்னு நடந்தா அவ கூடத்தான்….”

பூங்கோடியையும், பாக்கியத்தையும் மாறி மாறி பார்த்தவன் “அவ தங்கை அக்க்ஷராவிற்கு கல்யாணம் அடுத்த மாதம், அது முடிஞ்ச உடனே பொண்ணு கேட்க போகணும் நம்ம…” என்றவன், தனது நெற்றியை தடவிய படி யோசிக்க தொடங்கினான்.

“ஏண்டா, என்னாச்சு, சாக்க்ஷிக்கு முதலில் பார்க்காமா…. தங்கச்சிக்கு செய்யறாங்க” என ஜெயம் கேட்க

“நீங்கதான் யாரும், நான் முக்கியமில்லைன்னு இருக்கீங்களே, அதான் சாக்க்ஷிக்கு முன்னாடி, அவ தங்கை கல்யாணம்…..

ஆனா, எனக்கு அவ ரொம்ப முக்கியமாச்சே….

நான்தான் பேசிட்டு வந்திருக்கேன், இன்னும் கொஞ்ச நாள் டைம் கொடுங்கன்னு, கேட்டு வந்திருக்கேன்” என்றான் அசால்ட்டாக

கேட்டிருந்த அனைவருக்கும், தங்கள் பையனை, நாம் மதிக்காமல் இருந்ததன் விளைவு, அவன் வாய் மொழியாக சொல்லும் இந்த சொல்லில் புரிந்தது..  தங்களை கேட்க்காமல் கிட்ட தட்ட பெண் கேட்டு வந்திருப்பது புரிந்தது.

அவனே தொடந்தான் “உங்க தம்பி உங்களுக்கு வேணுன்னா…. வாங்க, இல்ல நான் பார்த்துக்கிறேன்…” என்றான் ஒரு பெரு மூச்சுடன்.

அதன்பின் சிறிது நேரம் அமைதி அனைவரிடமும் ஜெயத்தின் கணவர் “என்ன மாப்பிள்ளை, இப்படி எல்லாம் பேசிக்கிட்டு” என சமாதானப் படுத்த தொடங்கினார்.

கதீஷ் கண்மூடி சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டான். அவனிற்கு சாக்க்ஷியை தவிர கண்ணில் வேறு பிம்பம் வரவில்லை. இவர்களின் அழுத்தம் கூட கூட எங்காவது அவளை சொல்லாமல், கொள்ளாமல்  மணந்து கொள்வேனோ என பயம் வந்தது அவனுள்.

கதீஷுக்கு, இதற்கு மேல் என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை எனவே “விடுங்க மாமா,…. என் பிரச்சைனயில் உங்களை சங்கட படுத்தறேன்…. இங்கேயே நைட் தங்கிட்டு நாளைக்கு கிளம்புங்க மாமா, இப்போ எங்கயும் கிளம்ப வேண்டாம்” என்றவன் யாரையும் திரும்பி பாராமல் மேலே சென்றுவிட்டான்.

அதன்பின் கீழே சலசலப்பு கேட்டுக் கொண்டே இருந்தது. ஆம், பாக்கியத்தின் கணவர், தன் மனைவியை பிடித்துக் கொண்டார். நீ எப்படி அந்த பெண்ணை பேசலாம் என தொடங்கிய…. பேச்சு, அவனின் விருப்பம்தான் முக்கியம், அதன் பிறகுதான் கௌரவம்…. என முடித்தார்.

அவங்க பங்காளி…. ம்…. யாரது, ரத்தினசாமி அண்ணன்கிட்ட சொல்லி பேச சொல்லுங்க. மாப்பிள்ளை மனசு கோணாம, அக்காவா…. பார்த்து நடந்துக்கிற வழிய பாருங்க….” என எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரே போடாக போட்டார்.  

ஜெயமும் அவர் கணவரும் அதை ஆமோதிப்பதாக இருந்தனர். ஆனால், பாக்கியத்திற்கு இதில் உடன்பாடில்லை, பூங்கொடியை பார்த்து முறைத்தார்.

பூங்கொடிக்கு எது நடந்தாலும் சம்மதம் யாரேனும், ஏதேனும் ஒரு முடிவு செய்தால் போதும் என நின்றிருந்தார். தன் பெரிய பெண்ணின் பக்கம் திரும்பவில்லை.

கதீஷ் மொட்டமாடிக்கு போய்விட்டான். அகால நேரத்தில் உறக்கமில்லாமல், நடந்து கொண்டே இருந்தான்.

மனம் அலைபாய, காலும் நிற்காமல் நடந்து கொண்டே இருந்தது. எவ்வளவு நேரம் என தெரியவில்லை.

அழகான விடியல்…. தெளிந்த வானம் போல் இருந்தது மனம் கதீஷுக்கு. அக்காக்கள் மட்டும் இருக்க, மாமன்கள் யாரையும் காணம், கீழே வந்த கதீஷ், கண்ணால் எல்லாவற்றையும் பார்வையிட்டு விட்டு, யாரிடமும் எதுவும் கேட்காமல், உண்டு கிளம்பிவிட்டான்.

சாக்க்ஷிக்கும்… அங்கு வேலை தீரவில்லை, தன்னால் எந்த தடங்களும் இல்லாமல், தன் தங்கை திருமணம் என்றதும்…. கால் தரையில் இல்லை அவளிற்கு.

கதீஷ், நேசம்… எல்லாம் பின்னுக்கு சென்றது. தனது சித்தப்பாவை பிடித்துக் கொண்டாள். ‘என்ன செய்வது, எப்படி’ என அவர் சொல்ல சொல்ல வேலைகள் எல்லாம் தொடங்கின.

மேலும், நான்கே வாரம், ஒரே மாதம் என்பதாலும், தங்கள் வீட்டில் நடக்கும் முதல் திருமண நிகழ்வு என்பதாலும், ராஜன் சற்று பெரிதாகவே செய்தார்.

அண்ணன் இல்லாத குறை தெரிய கூடாது என நினைத்தார். இப்போது சாக்க்ஷியும் பொருளாதார நிலை நன்கு இருப்பதால், அது சுலபமாகவும் இருந்தது.

சாக்க்ஷி இப்போது அவரை புரிந்து கொண்டாளா, இல்லை அவர் சாக்க்ஷியை புரிந்து கொண்டாளா என தெரியவில்லை. ஆனால், எந்த இடத்திலும், மோதல்கள் இல்லாமல்… ஒத்து சென்றனர் இவரும். அதுவே வீட்டினருக்கு, நிம்மதியானது.

பத்திரிகைகள் வந்தன, குலதெய்வ கோவில் சென்று முதல் பூஜை செய்து விட்டு. அழைப்புகள் தொடங்கின. மற்ற வேலைகள் எல்லாமும் சேர்ந்து தொடங்கின.

அக்க்ஷரா… எந்த இடத்திலும் எந்த எதிர்ப்பும் இல்லாமல், தங்கள் வீட்டு மனிதர்களுடன் ஒன்றினாள். முதலில் சாக்க்ஷியை குறித்து சங்கடப்பட்டாலும். அவளிர்காகதான் இந்த ஏற்பாடு என தன்னை தேற்றிக் கொண்டாள்.

ஆனால், அது அத்தனை சுலபமாக நடக்கும், என்று இப்போது அக்க்ஷராவிற்கு தோன்றவில்லை. திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருந்த நிலையில், அக்க்ஷ்ரா “அக்கா, அழைப்பெல்லாம் முடிஞ்சுதா“ என்றாள்.

அப்போதுதான் சாக்க்ஷியும், ராஜனும் மண்டப அலங்காரம் பார்த்து விட்டு வந்திருந்தனர். எனவே இவள் இப்படி கேட்கவும், அவளை ஆழமாக பார்க்க தொடங்கினாள் சாக்க்ஷி ‘இப்போ எதுக்கு இந்த பேச்சு’ எனும் விதமாக.

ஆனால் விடுவதாக இல்லை அக்க்ஷரா “சொல்லுக்கா…” என்றாள் பிடிவாதமாக.  சாக்க்ஷியாள் நான்றாக முறைக்க மட்டுமே முடிந்தது. ஆனால் பதில் சொல்ல முடியவில்லை.

திரும்பவும் அவளே “சொல்லுக்கா, மாமா வீட்டுக்கு கொடுத்துட்டியா..” என்றாள். தயக்கங்கள் இல்லாமல்.

ராஜனுக்கு இப்போதான் நியாபகம் வந்தது போல் “ஆங்….. மறந்தே போனோமே சாக்க்ஷி, கதீஷுக்கு போன் பண்ணு , எப்போ வரலாம்ன்னு கேளு, ஒரு எட்டு போயிட்டு வந்திடுவோம்” என்றார்.

சாக்க்ஷி எதையோ வெறித்து பார்த்தது அமர்ந்திருந்தாள். யார் முகத்தையும் பார்க்கவில்லை. எதுவும் பேசவும் இல்லை. அக்க்ஷரா அவளை தொட்டு உலுக்கினாள். அப்போதுதான் நினைவு வந்தவள்.

அக்க்ஷராவின் பார்வையை உணர்ந்தவள்… தன் சித்தப்பாவிடம் தெளிவாக பேச தொடங்கினாள் சாக்க்ஷி “வேண்டாம் சித்தப்பா, இது வேற விஷயம், அவர்கள் எனக்காக வரவேண்டும். இப்போ போய் நாம கூப்பிட்டா, எனக்குதான் சங்கடம், இது கதீஷுக்கும் புரியும். அவரும் இதை எதிர்பார்க்கமாட்டார்….

அதனால, இத விடுங்க சித்தப்பா, வேற வேலைய பார்க்கலாம்..” என்றாள் ஏதோ யோசித்தவளாக.

மேகலை உள்ளிருந்து காபியுடன் வந்து, இருவருக்கும் கொடுத்தவாறே “அது எப்படி தம்பி, நீங்களே சொல்லுங்க, நாளைக்கு பெண்ணை கொடுக்க போறோம், இவ கூப்பிட மாட்டேன்னு சொல்றா, இதெல்லாம் சரி வருமா….” என்றார் கவலையாக.

ஆனால் சாக்க்ஷிக்கு உள்ளுக்குள், தகித்துக் கொண்டிருந்தது…. என்னதான் கதீஷ்தான் வாழ்க்கை என்ற போதிலும், பாக்கியத்தின் வார்த்தைகள் கேள்வியே கேட்க்காமல் தன்னை வார்த்தைகளால் தாக்கியதை இன்னும் அவளால் மறக்க முடிக்கவில்லை.

மேலும், ஜெகன்…. வீட்டிற்கே வந்து, தன் வாயாலேயே, கதீஷை காயப்படுத்த வைத்தது என எல்லாம் சேர்ந்து கொண்டது அவளிடம்.

எனவே இப்பொது சென்று பத்திரிகை வைத்து அழைத்து வந்தால் தங்களுக்குதான் அது அவமானம் என நினைத்தாள் சாக்க்ஷி.

தப்பே செய்யாதவர்களின் அமைதி, எப்போதும் ஆபத்தானதுதான்.

அது சாக்க்ஷியின் விஷயத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. பாக்கியம், அப்போது சாக்க்ஷி, ஏதும் பேசாமல் சென்றதும்…. ‘ஏதோ தவறு செய்திருக்கிறாள், அதனால்தான் அமைதியாக செல்கிறாள்’ என நினைத்திருந்தார். ஆனால் சாக்க்ஷியின் கோவம் என்றம் பார்த்து வெடித்தது.

மேகலையின் வார்த்தையில் உண்மை இருப்பதாகவே ராஜனுக்கு பட்டது. எனவே அவரும், “என்ன சாக்க்ஷி, சின்ன பிள்ளை விளையாட்டா…. அப்படியெல்லாம் விட முடியாது, நீ வர வேண்டாம், நாங்க போயிட்டு வரோம்” என்றார்.

தன்னுனர்விலிருந்து மீட்டுக் கொண்ட சாக்க்ஷி “என் மேல நம்பிக்கையில்ல, அப்படி ஏதாவது நடந்துது…. நான் கல்யாணத்துக்கு வர மாட்டேன்” என்றாள் வெறித்த பார்வையோடு… பழைய சாக்க்ஷியாக.

என்னதான், தான் வாழ போகும் வீடு என்றாலும், சில அடிப்படை உணர்வுகளை விட்டு கொடுக்க முடியவில்லை அவளால். மேலும் ஏன் விட்டுத்தர வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

இதென்ன புது விதமாக… என ராஜன் பார்த்திருந்தார். பொதுவாக பெண்கள், புகுந்த வீட்டை தாங்கித்தான் பார்த்திருக்கிறார்.

ஏன், ‘நிச்சையம்’ என்ற ஒன்று ஆனவுடன், பெண்கள் மனதால் அங்கு உறவாட தொடங்கி விடுவார்கள். அப்படியிருக்க, இவள் என்னவென்றாள், புதிதாக சொல்லுகிறாளே என தோன்றியது அவருக்கு.

அவர் தன் சகதர்மிணியை பார்வையால் வினவ…. விடையொன்றும் கிடைக்கவில்லை ராஜனுக்கு.

இப்போது அக்க்ஷரா தன் அக்காவை பார்க்க………. எங்கோ வெறித்து பார்த்து, ஏதோ சிந்தனையில் இருந்த போதும், கலையான கம்பீரமாக தெரிந்தாள் சாக்க்ஷி, அவளின் கண்களுக்கு. சுயமரியாதை எப்போதும் அழகுதான்.   

  

 

 

 

 

  

    

 

 

           

 

Advertisement